அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 15, 2012

தி.மு.க.,வின் தலைவராக நான் ரெடி- இது அழகிரியின் அட்டாக்.....


சென்னை வந்த மத்திய அமைச்சர் அழகிரியை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது சங்கரன்கோவில்  இடைத்தேர்தலில் தி.மு.க. பணி தொடங்கி விட்டதா? என்று கேட்டபோது முதலில் தேதியை அறிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.

அ.தி.மு.க. தரப்பில் 26 அமைச்சர்களும் களம் இறக்கி விட்டுள்ளனர். தி.மு.க.வில் மந்தநிலை உள்ளதே என்ற கேள்விக்கு, திமுக மந்த நிலையில் இல்லை. வருகிற  17-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்  நடக்கிறது. வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாங்கள் தீவிரமாக பிரசாரம் செய்வோம் என்றார் அழகிரி.

அடுத்து முக்கியக் கேள்வியைக் கேட்டனர் செய்தியாளர்கள். திமுகவில் தலைவர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா என்று அவர்கள் கேட்டபோது, கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றார் அழகிரி சிரித்தபடி.

அடுத்ததாக இன்னொரு முக்கியக் கேள்வி கேட்கப்பட்டது. திமுக,  தேமுதிக இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டு வருகிறதே, அவர்களுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று கேட்டனர். ஆனால் அதற்கு பதிலே தராமல் போய் விட்டார் அழகிரி.


ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

என்னை பேச வைத்துவிடாதீர்கள்- ஜெயலலிதாவை மிரட்டும் விஜயகாந்த்.........




விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:


இடைத்தேர்தலுக்கு 26 மந்திரிகள் உள்பட 34 பேர் கொண்ட குழு அதிமுக அமைத்திருக்கிறது. ஆனால், தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 26 மந்திரி உள்பட 34 பேர் கொண்ட குழுவை அனுப்பினீர்களா? எங்க மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். சங்கரன் கோவிலில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை கொடுக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லாமல் இதையெல்லாம் எப்படி பயன்படுத்த முடியும். இதனால் மக்கள் அதிருப்திபயாக உள்ளனர். நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவை பொது மக்களுக்கு சேருவதை நான் தடுக்க மாட்டேன்.


சங்கரன் கோயில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால், வேட்பாளரை அறிவித்துவிட்டு குழுக்களை அமைத்து ஓட்டுக்ககு இலவசங்களை கொடுத்து வருகிறார்கள். இது உங்களுக்கு (அதிமுக) இடைத்தேர்தலில் தோல்வி பயம் உள்ளது என்பதை இப்போது தெரிந்துவிட்டது. என் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதற்கும் நான் பயப்பட போவதில்லை. என்னை பொய் வழக்குப் போட்டு மிரட்டிப் பார்க்காதீர்கள். இன்னும் நிறைய பேசுவேன். வேறு மாதிரி பேசுவேன்.

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம். எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை. சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர்.   இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர். மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். தற்போது நிலவும் மின் வெட்டால் இப்பகுதியில் நெசவு தொழில் முற்றிலும் நசுங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த தேர்தலில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறிய தி.மு.க. தற்போது 6 ஆயிரம் ஓட்டுகள் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. இதே நிலைமைதான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார். டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்று கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


சனி, பிப்ரவரி 11, 2012

சசிகலாவுடன் மோதியதால் கைது செய்யப்பட்ட செங்கோட்டையன் உதவியாளர்....



 சென்னை : குடித்து விட்டு வீட்டு உரிமையாளரிடம் தகராறு செய்த அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் அப்பு தெருவில் தேஜூ அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கோவர்த்தனன். இவரது மனைவி சசிகலா. இந்த அபார்ட்மென்ட்டில் சசிகலாவுக்கு சொந்தமாக இன்னொரு வீடும் உள்ளது. இந்த வீட்டில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் பிரிவு உதவியாளர் ஆறுமுகம்(38), வாடகைக்கு வசித்து வந்தார்.

ஆறுமுகத்தின் வீட்டுக்கு அடிக்கடி இரவு நேரத்தில் சிலர் வந்து சென்றனர். பலர் குடித்து விட்டும் வந்தனர். கார்களை தங்கள் விருப்பம்போல நிறுத்தி விட்டுச் சென்றனர். இதுகுறித்து அபார்ட்மென்ட்டில் வசித்தவர்கள் சசிகலாவிடம் புகார் செய்தனர். இதனால், கடந்த 4 மாதத்துக்கு முன் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம் சசிகலா கூறினார். ஆனால் அவர் காலி செய்யவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம், சசிகலா கூறியுள்ளார். அதனால், இரவு அவர் குடித்து விட்டு தனது கார் டிரைவர் ராஜசேகருடன் அங்கு வந்துள்ளார். சசிகலாவின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார். பின் வீட்டில் இருந்த டீப் பாயை உடைத்துள்ளார். அதோடு 'நான் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர். என்னிடமே உன் வித்தையை காட்டுகிறாயா' என்று சத்தம்போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து நேற்று மயிலாப்பூர் போலீசில் சசிகலா புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவிசேகரன், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோரை நேற்று கைது செய்தார். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 452, 506(2) மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் அவர்கள் இருவரும் சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் சிக்னல்

அமைச்சரின் உதவியாளர் மீது புகார் என்றதும், போலீஸ் அதிகாரிகள் இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பெண்ணை மிரட்டியது குறித்து தெரிந்ததும், உடனடியாக கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

டிஸ்கி-1: சசிகலா என்றதும் எதையோ நினைத்து வேகமாக படிக்க வந்த உங்களுக்கு நன்றி.

டிஸ்கி-2;இந்த சம்பவத்தோடு தொடர்புடைய சசிகலா படம் கிடைக்காததால் முன்னாள் உடன் பிறவா சகோதரியின் படத்தை போட்டு சமாளித்துள்ளேன்.


டிஸ்கி-3: சீரியாசாவே எத்தனை பதிவுதான் போடறது?

டிஸ்கி-4:  டிஸ்கி பதிவை விட பெருசா போயிடுச்சே...




புதன், பிப்ரவரி 08, 2012

வாச்சாத்தி - கிடைத்தது முழுமையான நீதியா????


காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள். அந்த கூற்றை உண்மையாக்கியது போல் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  கொடுமைகளுக்கு, கடும் போராட்டங்களுக்கு பிறகு , 19  ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதென்ன வாச்சாத்தி வழக்கு, ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்....

ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான ஒரு குக்கிராமம்தான் வாச்சாத்தி. இது தர்மபுரி மாவட்டத்தில் அரூருக்கு அருகில் இருக்கிறது. . கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.


இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில்  சந்தன மரங்கள் ஏராளமாக இருந்த காலம் அது.  இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, சந்தன மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர்.

அங்கு சில பாலியல் ரீதியான தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வர… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். ‘சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல்  கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். போலீஸார், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தனர். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.





இந்த சம்பவம் தமிழக மலைவாழ் மக்கல் நல சங்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த அ(கே)வலத்தை கண்ட தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நீதி கிடைக்க அந்த சங்கம் போராட்டத்தில் இறங்கியது.  இவர்களோடு கம்யூனிஸ்ட்டும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தது.  வழக்கும் போடப்பட்டது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக,  இன்றைக்கு அந்த மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க(?????) தீர்ப்பை பெற்றுத்தந்துள்ளது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் MLA அண்ணாமலை மற்றும் அதற்காக பாடுபட்ட நெஞ்சுரம் மிகுந்த அனைத்து மக்களையும் நான் உளமார பாராட்டுகிறேன். இதுபோன்று ஏழைகளுக்காக, அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் நல்லோர்தான் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்தது முழுமையான நீதி தானா? குற்றவாளிகள் 
அனைவரும் தண்டிக்கப்பட்டு விட்டார்களா??? சிந்திக்க வேண்டிய கேள்வி 
தோழர்களே,நண்பர்களே, சகோதரர்களே.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர் அளவில் மனசாட்சியோடு தீர்பளித்துவிட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இது ஒரு முழுமையான தீர்ப்பாக எனக்கு படவில்லை, ஒரு சின்ன நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.
என்ன நெருடல் அது?????
இந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கும் பொழுதே இறந்து போனவர்கள் 54 பேர். அவர்கள் எந்த தண்டனையும் அனுபவிக்க வில்லையே???? அவர்களும் தவறு செய்தவர்கள் தானே???? அவர்களை நம்மால் தண்டிக்க முடியவில்லையே???? மரணம் அடைந்தது தான் தண்டனையா???? அப்படி என்றால் அனைவரும் தானே மரணம் அடையப் போகிறோம்... அவ்வளவு ஏன் இந்த வழக்கில் பாதிக்கப் பட்டவர்களும் ஒரு நாள் மரணிக்கத் தானே போகிறார்கள். எனவே குற்றவாளிகள் மரணம் அடைந்து விட்டால், அவர்கள் செய்த தீங்குகள் அநீதிகள் இல்லையென்று ஆகி விடுமா????
நிச்சயமாக மரணம் அடைந்தவர்களை எழுப்பி தண்டனை கொடுக்க முடியாது. வேறு என்னதான் தீர்வு????? இங்குதான் இறப்பிற்கு பின் ஒரு வாழ்க்கை என்ற தத்துவம் வருகிறது...... சொர்க்கம், நரகம் என்ற கான்செப்ட் வருகிறது.
இறந்தவர்களை ஒருநாள் கடவுள் மீண்டும் எழுப்புவார். அவர்களின் நன்மை, தீமை குறித்து விசாரிக்கப்பட்டு அதற்க்கு தகுந்தாற்போல் சொர்க்கமோ நரகமோ செல்வார் என்ற சித்தாந்தம் வருகிறது.
அருமைத் தோழர் அண்ணாமலை, பாபு மற்றும் இதற்காக பாடுபட்ட தோழர்கள் இதை நம்புவார்களோ மாட்டார்களோ. பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கான உண்மையான நீதி மறுமை நாளில்தான் கிடைக்கும். செய்த பாவத்திற்கு எந்த தண்டனையும் அனுபவிக்காமல் சென்றுவிட்ட அந்த 54 பெரும் இறுதித் தீர்ப்பு நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.

உலக மக்கள் அனைவர் முன்னிலயிலும் நடக்கும் அந்த நீதி விசாரணையின் போது தவறிழைத்தவர்கள் தலைகுனிந்தும், வாச்சாத்தி மக்கள் தலை நிமிர்ந்தும் சந்தோசமாக நடக்கும் அந்த கணம் நிச்சயம் வந்தே தீரும். அன்றுதான் அவர்கள் நீதிக்கான தேடல் முற்றுப்பெறும்.

குறிப்பு: நீண்ட நாட்களாக ட்ராஃப்டில் இருந்த பதிவு இது...  நேரமின்மை காரணமாக அப்போது வெளியிட முடியவில்லை.


திங்கள், ஜனவரி 09, 2012

பயோ-டேட்டா..... அமெரிக்கா



பெயர் : அமெரிக்கா

மறைமுகப் பெயர் : உலக வல்லாதிக்க அரசு

தொழில் : ஆயுத விற்பனை மற்றும் பெட்ரோலிய கொள்ளை

உப தொழில் : ஊரை அடிச்சு உலையில் போடுவது

நெருங்கிய நண்பர்கள் : இஸ்ரேல் மற்றும் பிரிட்டன்

பிற நண்பர்கள் : ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா,இந்தியா மற்றும் பாகிஸ்தான்

கொள்கை : முதலாளித்துவம்

முகம் : இரட்டை முகம்

குணம் : நயவஞ்சகம்

பலம் : அதி நவீன ஆயுதங்கள்

அசுர பலம் : வான் வழித் தாக்குதல்

பலவீனம் : தரைப்படையில் பலஹீனர்கள். நிலம்  வழித் தாக்குததில் பேரிழப்பை சந்திப்பது

வீழ்த்தியது : கம்யூனிசம்(ரஷ்யாவில் இருந்து)

வீழ்த்த நினைப்பது : இஸ்லாம் மற்றும் கம்யுனிசம்(சீனா)

வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)

அமெரிக்கர்கள் : வாழப்பிறந்தவர்கள்

மற்றவர்கள் : சாகப் பிறந்தவர்கள் அல்லது எக்கேடு கெட்டா எனக்கென்ன?

தீவிரவாதிகள் : தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும் அனைவரும்

தீவிரவாதத்திற்கு எதிரான போர் : கொள்ளை அடிக்க வசதியாக ஏற்படுத்திகொண்டது

சமீபத்தில் கொள்ளை அடித்த இடம்  : ஈராக்

தற்போது கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கும் இடம் : லிபியா

சமீபத்திய சந்தோசம் : ஒசாமா பின் லாடனை கொன்றது

நீண்டகால சந்தோசம் : உலகம் இவனை நல்லவன் என்று இன்னும் நம்புவது

அதிபர் : போர் செய்ய மற்றும் கொள்ளை அடிக்க திட்டம் போடுபவர்

மறந்தது : எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மையை

மறக்காதது : ஏதாவது ஒரு சப்ப காரணத்தை சொல்லி போர் செய்வதை

உலகம் : தனது அடாவடிகளை வேடிக்கை பார்க்கும் உருண்டை

சமீபத்திய எரிச்சல் : தலிபான்


நீண்டகால எரிச்சல்  :  ஈரான்  மற்றும் சீனா

ஒரே சாதனை : இன்னும் வல்லரசாக இருப்பது


சனி, ஜனவரி 07, 2012

ஜெயலலிதா படத்தை கொளுத்திய அ.தி.மு.க.,வினர்.... ஆப்பு ரெடி.....


இன்று காலை வெளிவந்த நக்கீரனில் தேவையில்லாமல் வியாபார நோக்குடன் எழுதப்பட்ட ஒரு செய்தி அ.தி.மு.க.,வினரை ஏகத்துக்கு உசுப்பெற்றி விட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும்  நக்கீரன் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு மொத்த இதழ்களையும் அ.தி.மு.க., தொண்டர்களே வாங்கிவிட்டனர். சில இடங்களில் எடுத்துக்கொண்டனர். அதை வாங்கி இலவசமாக வினியோகமாவது செய்தார்களா என்றால் அதுதான் இல்லை. அனைத்து இதழ்களையும் நெருப்புக்கு இரையாக்கி விட்டனர்.



ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல எரிக்கும் அவசரத்தில் அதில் ஜெயலலிதா படம் இருந்ததை கவனிக்கவில்லை போலும்...அந்தப்படத்தையும் சேர்த்தே எரித்திருக்கிறார்கள் ஹி...ஹி...
தன் படத்தை காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்திய அத்தனை பேருக்கும் ஜெயலலிதாவால் ஆப்பு இருக்குடியோ.....
(ஏதோ நம்மால் முடிந்தது)

பி.கு:  இந்த திடீர் தட்டுப்பாட்டை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்த கோபால், ஒரு ரகசிய இடத்தில் மீண்டும் ஒரு லட்சம் பிரதிகளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக  உளவுத்துறை ரிப்போர்ட் சொல்கிறது. அப்படி அச்சடிக்கப்படும் பிரதிகள் ஹெலிகாப்டரின் மூலம் அந்தந்த பகுதி ஏஜெண்டிடம் கொடுக்கப்படும் என்று கோபால் தெரிவித்துள்ளார்.


சனி, டிசம்பர் 31, 2011

ஈழப் பதிவர்கள் vs இஸ்லாமியர்கள்= தீர்வுதான் என்ன?


குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.////

இன்று காலை நண்பர் சந்ரு எழுதிய பதிவின் ஒரு வரிதான் இது.....

நண்பரே....சமீபத்தில் நண்பர் கந்தசாமி என்பவர் எழுதிய ஒரு பதிவில் அபுசனா என்ற இஸ்லாமிய நண்பர் அசிங்கமாக பின்னூட்டமிட்டிருந்தார் என்று ஒரு தனிப்பதிவே போட்டிருந்தார். அந்த பதிவில் இன்று உங்களால் குற்றம் சாட்டப்படும்/ குழு மனப்பான்மை உடைய இஸ்லாமிய பதிவர்கள் அத்தனை பேரும் அபுசனாவை கண்டித்துத்தான் பின்னூட்டமிட்டுருந்தார்கள். யாரும் அபுசனாவின் செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. பின்னர், அபுசனாவே அங்கு வந்து நான் அப்படி பின்னூட்டமிட்டிருந்தது தவறுதான் என்று மன்னிப்புக்கேட்டபின் கந்தசாமி அந்த பதிவையே நீக்கிவிட்டார். தேவை ஏற்பட்டால் அவரிடமே சென்று கேட்டுக்கொள்ளுங்கள். யாருக்கும் பல்லாக்கு தூக்க வேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இஸ்லாமிய பதிவர்களுக்கில்லை என்பதற்கு அந்த பதிவே சாட்சி.

நான் உங்களிடம் வருகிறேன்.....
வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்து விட்டால்,  அதை தனி மனித தவறாகவே பார்க்கும் சிலர் இஸ்லாமியர்கள் தவறு செய்தால் மட்டும் அதை மதக்கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். அந்தப்பார்வையே முதலில் தவறு....

நீங்கள் எழுதிய விபச்சாரம் சம்பந்தப்பட்ட பதிவால்தான் இத்தனை எதிர்விளைவுகளும்....
வீடு புகுந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்திருந்தால் அது ஒரு சாராரின் தவறு...ஆனால், விரும்பியே போகிறார்கள் என்றால் தவறு இரு சாரார் மீது தான்.இதற்கு ஏன் மதச்சாயம்? ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறை கூறுவதென்பது தவறுதானே....

இஸ்லாமியர்களை பற்றி துவேஷத்துடன் இன்று சிலர் எழுதிவருவதால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் இஸ்லாமிய துவேஷம் மிக்கவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்?
இன்று இந்தியாவில்  லஞ்சம் ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளில் அதிகமானோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே....அதற்காக பெரும்பானமை சமூகத்தை திருடர்கள் சமூகம் என்றா ஒட்டுமொத்தமாக குறை சொல்லிட முடியும்?

அனைத்து சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிலர் அயோக்கியர்களாக இருப்பதுண்டு. அந்த குறிப்பிட்ட சிலர் மூலமாக மதத்தை பார்க்காதீர்கள் என்று சொல்கிறேன்.
விபச்சாரம் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. வறுமையில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள். வளமாக இருப்பவர்கள் அங்கு போகிறார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.

உங்கள் பார்வையில் படுமாறு ஒரு சில இஸ்லாமியர்கள் போயிருக்கலாம்....ஆனால், உங்கள் பார்வையில் படாமல் வளமாக இருக்கிற எத்தனையோ ஈழத்தமிழர்களும் போயிருக்கலாமே? அதற்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்ல முடியுமா? அல்லது சில ஈழத்தமிழ் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அனைத்து ஈழப்பெண்களும் விபச்சாரிகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்லிவிடுவீர்களா?

வறுமையும் ஏழ்மையும் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு. அதற்கான தீர்வு விபச்சாரம் அல்லவே....விபச்சாரம் செய்யும் பெண்களை அழைத்து அவர்களிடம் பேசி, வேறு ஏதாவது மாற்றுத்தொழிலை முன் வையுங்கள். தனி மனித தவறுகளுக்கு எந்த ஒரு மதத்தையும் முன்வைத்து விவாதிக்காதீர்கள்.

ஒரு சிலரின் தவறுகளுக்காக, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவு எழுதுவதை நிறுத்துங்கள். இப்போது நான் கூட இந்தப்பதிவிற்க்கு, ஒரு சில ஈழப்பெண்கள் விபச்சாரம் செய்தார்கள் என்பதற்காக விபச்சாரிகளாக மாறிவரும் ஈழப்பெண்கள்  என்றும்,  ஒழுக்க கெட்ட ஈழத்தமிழ் பெண்கள் என்றும் தலைப்பிட்டு ஹிட்ஸ் வாங்கியிருக்க முடியும். அப்படி செய்வதென்பது ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே இழுக்கு. ஒரு சிலர் செய்தது ஒரு சிலரோடு போகட்டும். அதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சேர்க்க உங்களைப்போல் எனக்கு மனம் வரவில்லை.





சனி, நவம்பர் 19, 2011

கழுதைக்கு வாக்கபட்டாலாவது உதையோட போகும்... நாம வாக்கபட்ருக்கது.....





                                                            
                                                                                                                 
ஏன் தமிழக மக்களே இப்படி செய்தீர்கள்? சென்ற தேர்தலில் நான் அ.தி.மு.க விற்கு வோட்டு போடவில்லை. நீங்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததால் தான் செல்வியின் ஆட்சி வந்தது. வாக்களித்த நீங்கள் கடிபடுவது நியாயமானது? தேவை இல்லாமல் அவரை ஆதரிக்காத நான் ஏன் கடிபடவேண்டும்?

என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க இந்த அம்மா? கஜானவில காசு இல்லாட்டி, வரி போட்றதும், விலைவாசியை ஏத்துறதும்  தான் வழியா?  இத செய்றதுக்கு நீங்களும், படிச்ச அந்த பொடலங்கா IPS  ஆபிசர்களும் எதுக்கு? படிக்காத பாமரன்  கூட இந்த பட்ஜெட்டை போடுவாங்களே?  ஏன் நானே போடுவேனே? ஆட்சி செய்ய தெரியாட்டி ஊர பாத்திக்கிட்டு போங்கம்மா.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.


பொருள் ஈட்டுதல் என்பதில் தான் உங்கள் திறமை இருக்கு. அதில காட்டுங்க உங்க வேகத்த. வருமானத்திற்கு வழியா இல்லை?  நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எல்லா அரசு சார்ந்த திட்டங்களிலும்  10 %கமிசன் அடிச்சுகிட்டு  இருக்காங்கல்ல எல்லா MLA, மந்திரி , மாவட்டம், வட்டம்  மற்றும் அல்லக்கைகள்.  அது உங்களுக்கு தெரியாதா?  அவங்ககிட்ட போய் நிதிநிலை ரொம்ப கேவலமா இருக்கு , இந்த 5  வருஷம் மட்டும் ஊழல் பண்ணாதீங்கன்னு   சொல்லி,  அத நிறுத்த சொல்லுங்க, மொத்த செலவில 10 % சேமிக்கலாம், அதன் மூலம் பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை காலத்துக்கும் கட்டுக்குள்ள வச்சிருக்கலாம். தமிழகத்தில 40 % அளவுக்கு மின் திருட்டு அல்லது மின் இழப்பு மூலம் மின்சாரம் வீணாகிறது . மின் வாரிய ஊழியர்களையும் காவல் துறையையும் லஞ்சம் வாங்காம மனசாட்சியோட இந்த விசயத்தில வேலை செய்ய சொல்லுங்க. மின்சார கட்டணத்த அடுத்த 50 வருசத்துக்கு ஏத்தவேண்டியது இல்ல.

எனக்கே இத்தனை வழிகள் தோன்றும் பொழுது உங்களுக்கு தோன்றாமல் இருக்காது. ஆனா உங்களுக்கு உங்க கட்சிக்காரன் கொள்ள அடிக்கிறது நிற்கக் கூடாது, தனியார் பால் அதிபர்கள் கொடுக்கும் கோடிகள் உங்களுக்கு வேணும். ஆனால் அரசும் நடக்கணும்னா பக்கத்து மாநிலங்களுக்கு போய் கொள்ளை அடிச்சாத்தான் முடியும். அத வேணும்னாலும் செய்யுங்கள். எங்களை கொள்ளை அடிக்கிரத  மட்டும் விட்டுடுங்க.

அது சரி, இப்பவும்  இலவச திட்டங்கள் தொடருமா? இல்ல அதுக்கும் ஆப்பா? அப்படி தொடர்ந்தால், தயவு செய்து ஒரு பிஞ்ச செருப்பையும் இலவசமா குடுங்க. உங்கள்கிட்ட ஆட்சியை தந்ததுக்காக எங்கள நாங்களே செருப்பால அடிச்சிகிறோம். அத தவிர இந்த ஏழைகளால என்னதான் பண்ண முடியும்?

டிஸ்கி : கலைஞர் ஆட்சில இருக்கும் பொது கவுன்ட் டவுன் வச்ச அந்த புண்ணியவான்களே. இந்த ஆட்சிக்கும் ஏதாவது பண்ணுவீங்களா?  கவுன்ட் டவுன்லாம் வேணாம், நாலரை வருஷம் கொறஞ்சு வர்றதுக்குள்ள தமிழ் நாட்ல யாருமே இருக்க மாட்டாங்க, சுடுகாடுதான் இருக்கும். உடனே நடக்கிறமாதிரி ஏதாவது யோசிங்க.


புதன், ஜூன் 01, 2011

சேலம் மற்றும் மன்னார்குடியை ஆந்திராவிற்கு தாரைவார்த்த தமிழக அரசு



                                                                                                                                

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் செய்த அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று "கழக அரசு பதவி ஏற்ற உடன் வழிப்பறி திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டதாக கேள்வி பட்டேன்" என்பதுதான். இந்த பேட்டி எப்படி இருந்தது என்றால் என்னமோ கலைஞர் தான் கொள்ளையர்களை கொள்ளை அடிக்க சொன்னது போலவும், அவரின் ஆட்சி முடிந்த உடன் இனி நமக்கு சப்போர்ட் யாரும் இல்லை என்று கொள்ளையர்கள் ஓடி விட்டது போலும் இருந்தது.

உண்மையா இது? என்று பார்த்தால் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய கொள்ளை சம்பவங்கள் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் நடந்துள்ளன. சமீபத்திய 3  நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.

சம்பவம் 1 : தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க MLA வாக இருக்கும் பழ.கருப்பையா அவர்களின் மனைவி இடமே சங்கிலி பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

சம்பவம் 2 : நேற்றைய முன் தினம் சேலத்தில் 150  பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் 3 : நேற்றைய தினம் மன்னார்குடியில்(சின்னம்மாவின் ஊர் என்பதை இங்கு நினைவில் வைக்க வேண்டும்) 500  சவரன் தங்க நகைகள் அடகுக் கடையில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.




                                                            

கலைஞர் ஆட்சியிலாவது 10 பவுன் 20 பவுன் என்று கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது என்னடா என்றால் 100 பவுன் 500 பவுன் என்று பல்க்காக ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் சொன்னது போல் வழிப்பறி செய்யும் குட்டி திருடர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி அங்கிருந்து ப்ரொபசனல் திருடர்கள் இங்கு வந்து விட்டார்களா? அல்லது சேலத்தையும் மன்னார்குடியையும் ஆந்திராவிற்கு தமிழக அரசு தாரை வார்த்து விட்டதா?




மக்கள் எதிர்பார்ப்பது உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே, பேட்டிகளை அல்ல. சென்ற ஆட்சியில் நிறைய பேட்டிகள், பேச்சுகள் மற்றும் கவிதைகளை கேட்டு விட்டோம்.


வெள்ளி, மே 27, 2011

செல்வி ஜெயலலிதாவிற்கு ஒரு ஷொட்டு.... ஒரு குட்டு...


ஷொட்டு - சட்ட மேல்சபை

                                                                        
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் இனி தமிழகத்தில் மேல்சபை வராது என்று அறிவித்து உள்ளார். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவாகவே இந்த முடிவு தெரிகிறது. எதுக்கு சட்ட மேல்சபை? அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று பார்த்தால், ஒன்றும் இல்லை. தமிழக சட்டசபையில் பேசமுடியாத எந்த விஷயத்தை மேல் சபையில் பேசிவிடப் போகிறார்கள்?

யாருக்கேனும் பதவி கொடுக்காவிட்டால் அல்லது கொடுக்க முடியாவிட்டால் அவர்களுக்கு தன் இதயத்தில் இடம் உண்டு என்று கூறுவார் கலைஞர். இதயத்தில் கொடுத்த இடத்தால் சமாதானம் ஆகாதவர்களுக்கு பதவி கொடுக்கவே சட்ட மேல்சபை பயன்படும். மற்றபடி அதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

இப்பொழுது இருக்கும் ஒவ்வொரு MLA க்களுக்கும் மாத சம்பளமாக ருபாய்      45 ,000 , படி, பாதுகாப்பு செலவு மற்றும் இத்யாதி இத்யாதி என்று ஒரு மாதத்திற்கும் ஆகும் செலவே லட்சத்தை தொடும். அப்படி இருந்தும் அவர்களில் பாதி பேர் சட்டசபையில் பேசுவதே இல்லை, பேசாட்டியும் பரவாயில்லை பாதி பேர் தூங்கிர்றாங்க. இந்த நிலையில் சட்ட மேல் சபையை கொண்டு வந்து அவர்களுக்கும் தெண்டமாக செலவு செய்ய வேண்டுமா? தேவையே இல்லை. உள்ளவங்க சட்டசபையில் கிழித்தால் போதும், புதுசா யாரும் வந்து ஒன்னும் செய்யவேண்டியது இல்லை.

முதல்வரே, ரொம்ப நல்ல காரியம் செஞ்சு இருக்கீங்க.உங்களின் இந்த நல்ல முடிவை கை தட்டி ஆராவரித்து வரவேற்கிறோம்.

குட்டு - சமச்சீர் கல்வி

                                                           
முதல்வரே.. என்ன முதல்வரே இப்படி பண்ணிட்டீங்க. கிராமப்புற மாணவர்களுக்கும் நகரத்து மாணவர்களுக்கும் கல்வித் தரத்தில் பெரிய வித்தியாசங்கள் உள்ளன என்பது காலம் காலமாக தமிழகத்தில் இருந்து வரும் பிரச்சனை.  அந்த பிரச்சனையை தீர்க்க சமச்சீர் கல்வி தான் ஒரே வழி என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை களைவதற்கான முதல் படி சமச்சீர் கல்வி அல்லவா? முதல் முயற்சியே தடை படலாமா? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது நாடறிந்த முதுமொழி ஆயிற்றே.

ஆகவே முதல்வரே...  பாட திட்டங்களில் குளறுபடிகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே அறிவு சார்ந்த நடவடிக்கையாக எனக்கு படுகிறது. கலைஞர் தன்னை பற்றி பாடத்திட்டங்களில் சேர்த்து இருந்தால் அந்த பாடத்தை தடை செய்து விடுங்கள், இதில் நாட்டு மக்களாகிய எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே போல் நீங்களும் வரும் ஆண்டுகளில் உங்கள் பற்றிய பாடங்களை சேர்த்து விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம்.

தன்னுடைய ஆட்சியின் பொது தன்னைப்பற்றியே பெருமையாக மாணவர்கள் படிக்கும் பாடங்களில் சேர்ப்பது என்பது கொஞ்ச நஞ்சம் ஈனம் மானம்  உள்ள மக்கள்கூட செய்ய முடியாத செயல். எப்படிதான் தமிழக அரசியல் வாதிகள் செய்கிறார்களோ???? பொது மேடையிலும், சினிமா நிகழ்சிகளிலும் பெருமை பேசிக் கொள்கிறீர்களே அது போதாதா? மாணவர்கள் மடியிலும் வந்து கை வைக்க வேண்டுமா?? வெட்கக்கேடு.

தயவு செய்து சமச்சீர் கல்வி முறையில் உள்ள குறைகளை களைந்து அதை தொடர்வதற்கான முயற்சிகளை எடுங்கள். அதை விடுத்து அந்த திட்டத்தையே நிறுத்துவது என்பது கிராமப் புற தற்போதைய மாணவர்களுக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் செய்யும் துரோகமே ஆகும். கிராமப் புற ஏழைகளின் வயித்தில் அடித்த எந்த ஆட்சியாளரும்  நீண்ட நாட்கள் சந்தோசமாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.


சொல்வது எங்கள் தலையாய கடமை... முடிவு உங்களிடம்.


சனி, மே 21, 2011

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஆனந்த விகடன்




 வழக்கமான ஆர்வத்துடன் இந்த வார ஆனந்த விகடனை வாங்கி பார்வையை செலுத்தினேன். தலையங்கத்தில், நடந்து முடிந்த தேர்தலில் ஏன் கலைஞர் தோற்றார்  என்பதற்க்கான நியாயமான காரணங்களை பட்டியலிட்டும் , அதே நேரம் ஜெயலலிதாவின் கடந்த கால தவறுகளையும் சுட்டி காட்டி, இவை இரண்டும் போல் இல்லாமல் நல்லாட்சி தாருங்கள் என்று இருந்தது.  தலையங்கம் மிகவும் அற்புதமாக நடுநிலையுடன் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அதற்க்கு சில பக்கங்கள் தள்ளி தலையங்கத்தில் காட்டிய புத்திசாலிதனத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் சில வரிகள் இருந்தன. அந்த கட்டுரையின் தலைப்பு.



இலையைத் துளிர்க்கவைத்த  இரண்டு தலைகள்...


விகடன் கூறும் இரண்டு தலைகள் யார் தெரியுமா?

சசிகலா மற்றும் சோ ராமசாமி


                               

அதற்க்கு விகடனார் கூறும் காரணம். சோ ராமசாமி தான் விஜயகாந்துடன் கூட்டணி முக்கியம் என்றாராம், சசிகலா சரியான வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தாராம்.

நான் விகடனை பார்த்து கேட்கிறேன். அ.தி.மு.க வேட்பாளர்கள் நல்லவர்கள் என்பதற்க்காகத்தான் மக்கள் அந்த வேட்பாளர்களுக்கு வக்களித்தார்களா? விஜயகாந்துடன்  கூட்டணி வைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற அந்த கடினமான முடிவை எடுக்க சோ வால்தான் முடியுமா? அரசியல் அறிவு அறவே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட கணிக்க கூடிய கணிப்பல்லவா அது... பொதுமக்களை விடுங்கள் என் மகனுக்கு கூட தெரிந்த கணிப்புதான் அது.
அதுகூட தெரியாமல் தான் ஜெயலலிதா  இருந்தாரா அவருக்கு சோ சொல்லி புரிய?

                                                              

யாரை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறீர்கள் விகடனாரே? சோ வையா? ஏன்??? தமிழகத்தில் இலையை துளிர்க்க வைக்க அவர் ஏதும் புரட்சி செய்தாரா? கடந்த ஐந்து வருடங்களாக கருணாநிதியின் ஆட்சியை அகற்ற மக்களுடன் இணைந்து போராடினாரா? ஒரு புண்ணாகும் இல்லைல... அப்புறம் என்ன?

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் வாக்குச் சீட்டில் கொட்டி இலையை துளிர்க்க வைத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க மக்கள் புரட்சி. பெரும்பாலான மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை...  மக்களின் கஷ்டம் புரியாத, மக்களோடு மக்களாக இணைந்து ஒரு போராட்டம் கூட நடத்திராத  சோ மற்றும் சசிகலாவிற்கு சமர்ப்பிக்காதீர்கள். அது நியாயம் அல்ல. (பத்திரிகை) தர்மமும் அல்ல.

அப்படி தான்தான்  காரணம் என்று சோ நினைப்பாரேயானால் அதை அவர் தனது துக்ளக்கில் எழுதி மகிழட்டும். யார் கேட்கப்போகிறார்கள்?.ஆனால் ஒரு வெகுஜன பத்திரிகையாகிய நீங்கள் எழுதி அவரை மகிழ்விக்க வேண்டாம்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் விகடனாரே.....
இப்படி சிறுபிள்ளைத்தனமாக எழுதுவது ஒரு பாரம்பரிய பத்திரிகைக்கு அழகல்ல....




வியாழன், மே 19, 2011

அ.தி.மு.க வெற்றிக்கு நானே காரணம் - நடிகர் சிங்கமுத்து பரபர பேட்டி....



சென்ற திங்கட்கிழமை காலையில் எங்கள் அள்ளி விட்டான் கம்பெனி பத்திரிகை அலுவலகத்திற்கு  நடிகர் சிங்கமுத்து போன் செய்து உங்களிடம் சில விசயங்களை பகிர வேண்டுமே, சந்திக்க முடியுமா? என்றார். அதற்க்கு நாங்கள் வேறு நல்ல வேலைகள் பல உள்ளனவே என்றோம். அப்படியா, பரவாயில்லை நானே வருகிறேன் என்று எங்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்தே விட்டார். இதோ எங்கள் டுபாக்கூர் நிருபர் அஞ்சும் சிங்கம், அவருடன் கண்ட மினி பேட்டி....

நிருபர் அஞ்சும் சிங்கம் : வணக்கம் சிங்கமுத்து சார், நல்லா இருக்கீங்களா?

சிங்கமுத்து : நல்ல வேலை நீனாவது கேட்டியே தம்பி, நல்லா இருக்கேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : ஏன் சார் இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

சிங்கமுத்து : பின்ன என்னப்பா, தேர்தல் அப்போ வேகாதா வெயில்ல நல்லா வேலை வாங்கினாங்க. தேர்தல் முடிஞ்ச உடனே ஒரு பய கண்டுக்க மாட்டேங்கிறான்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : பின்ன தேர்தலுக்கு  பிறகு சபாநாயகர் பதவி தருவாங்கன்னு எதிர்பார்த்தீங்களா?

சிங்கமுத்து : இந்த நக்கல் தானே வேணாங்கிறது. சபாநாயகர் பதவி எல்லாம் தர வேணாம், ஒரு நன்றி சொல்லலாம்ல.

நிருபர் அஞ்சும் சிங்கம் : அதான் அம்மா தேர்தல் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றின்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் என்ன, விடுங்கண்ணே.

சிங்கமுத்து : இல்ல... இருந்தாலும் ... வேகாத வெயில்ல வெந்து இருக்கேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சும்மா வேகாத வெயிலு வேகாத வெயிலுன்னுகிட்டு...அப்புறம் மத்தவங்கல்லாம் என்ன வெந்த வெயில்லையா வெந்துகிட்டு இருக்காங்க??? எல்லாருக்கும் வேகாத வெயில்தான்.

சிங்கமுத்து : இப்படி எல்லாம் பேசின, அப்புறம் காத கடிச்சு துப்பிபுடுவேன்... ஆமாம்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சரிண்ணே, ஒரு வேலை அம்மா உங்கள  கூப்பிட்டு அமைச்சர் பதவி தந்தா ஏத்துக்குவீங்களா?

சிங்கமுத்து : என்ன தம்பி இப்படி எக்கு தப்பா கேட்டுட்ட?

நிருபர் அஞ்சும் சிங்கம் : கேட்ட கேள்விக்கு பதில்...ஏத்துக்குவீங்களா? மாட்டீங்களா?

சிங்கமுத்து : அது வந்து...அது வந்து... சொத்து பாதுகாப்பு துறைன்னு ஒன்னு ஆரம்பிச்சு அதுக்கு அமைச்சரா போட்டா ஏத்துக்குவேன் தம்பி.

நிருபர் அஞ்சும் சிங்கம் : சொத்து பாதுகாப்பு துறையா??? அப்படி ஒரு துறை இல்லையே?

சிங்கமுத்து : இருக்குன்னு சொன்னனா...அப்படி ஒரு துறையை ஆரம்பிச்சா இருக்கேன்னு சொன்னேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம்: இந்த துறை தான் வேணும்னு சொல்ல ஏதாவது காரணம் இருக்கா?

சிங்கமுத்து : இல்ல.. வடிவேலு தம்பிக்கு சொத்து வாங்கி குடுத்ததில கொஞ்சம் முன் அனுபவம் இருக்கு... அனுபவம் உள்ள துறைனா கொஞ்சம் ஈசி தானே.

நிருபர் அஞ்சும் சிங்கம்: எது ஈசி? சொத்த லவட்டுறதா?

சிங்கமுத்து : இப்படி எடக்கு மடக்காவே கேள்வி  கேட்டீன்னா  அப்புறம் கோயில்ல காசு வெட்டி போட்டுருவேன்  ஆமாம்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: சரின்னேன் டென்ஷன் ஆகாதிங்க... உங்களுக்கும் வடிவேலுக்கும் என்னதான் பிரச்சனை?

சிங்கமுத்து: அது ஒன்னும் இல்லப்பா.. அது ஒரு சில்லற  பிரச்சனை... தம்பி நம்மகிட்ட சொத்து வாங்கி கேட்டுச்சு... நானும் வாங்கி  குடுத்தேன் அவ்வளவுதான்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது நல்லா விசயமாச்சே... இதுக்கா அவரு உங்கள இப்படி கரிச்சு கொட்றார்???

சிங்கமுத்து: அதுல ஒரு சின்ன கசமுசா ஆகிருச்சு, வடிவேலு தம்பி குடிகாரர் ஆச்சா அதனால அவரு குடிச்சே சொத்த அழிச்சிருவாறு அப்படிங்கிற நல்ல எண்ணத்தில சொத்து எல்லாத்தையும் என் பேர்லே வாங்கிட்டேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது தான் உங்களுக்கு சில்லற பிரச்சனையா???(அஞ்சும் சிங்கம் சத்தம் இல்லாமல் மனசுக்குள்... 'கொய்யால உன்னை எல்லாம் அடிச்சே சாவடிக்கனும்டா') சரி அண்ணேன் ... அ.தி.மு.க வின் வெற்றில உங்க பங்களிப்பு என்னண்ணே?

சிங்கமுத்து : என்ன தம்பி ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு உங்களுக்கு தெரியலையே?

நிருபர் அஞ்சும் சிங்கம்: என்ன ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு?

சிங்கமுத்து: இல்ல... அ.தி.மு.க ஜெயிச்சதே என்னாலதான்னு... நான் மட்டும் எதிர்ப்பிரச்சாரம் செய்யலைன்னா இந்நேரும் கலைஞர்ல முதல் அமைச்சரா ஆகி இருப்பாரு.

நிருபர் அஞ்சும் சிங்கம்:அண்ணே இத்தோட பேட்டிய முடிச்சுக்குவோம்... நான் புள்ள குட்டிகாரன்... இப்பவே ஆட்டோ வர்ற சத்தம் கேட்குது... என்ன விட்ருங்க நான் ஓடணும்....வேணும்னா நீங்க எங்க ஓனர்கிட்ட  பேட்டிய தொடருங்க....

சிங்கமுத்து: அப்படியா தம்பி.... ரொம்ப சந்தோசம்...உங்க மொதலாளி பேரு என்ன?

நிருபர் அஞ்சும் சிங்கம்:  P .R . K . செமதில்


புதன், மே 18, 2011

பயோ டேட்டா....சராசரி இந்தியக் குடிமகன்...




                                                  
                                 பயோ-டேட்டா...


பெயர் : இந்தியக் குடிமகன்

மொழி : 1500  க்கும் மேல்

இனம் : கணக்கில்லை

பிடித்தது     :  சினிமா மற்றும் பேச்சு

பிடிக்காதது :  அடுத்தவர்களின் தவறு

விரும்புவது : ஊழலை ஒழிக்க

விரும்பாதது : அதற்காக தான் போராடுவதை

எதிரி : பாகிஸ்தான்

உப எதிரி : சீனா

ஆதர்ச புருசர்கள் : சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்

பார்க்க விரும்புவது : இந்தியாவை வல்லரசாக

பார்த்தது : விஜயகாந்தின் வல்லரசு

வாழவேண்டியவர்கள் : தானும் தன் குடும்பத்தாரும்

மற்றவர்கள் : எக்கேடு கெட்ட எனக்கென்ன

பிடித்த விளையாட்டு : கிரிக்கெட்... கிரிக்கெட் ... கிரிக்கெட் மட்டுமே


தவறே செய்யாத நாடு : இந்தியா

தவறை மட்டுமே செய்யும் நாடு : பாகிஸ்தான்

பலம் : மக்கள் தொகை

பலவீனம் : பலமே பலவீனம்

நம்புவது : ஆட்சியாளர்களை(இன்னுமா நம்புறீங்க???)

சாதனை : வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பெரும்பாலோனோர் இன்னும் நல்லவர்களாக இருப்பது.


திங்கள், மே 16, 2011

பயமாய் இருக்கிறது முதல்வரே ... மீண்டும் ஆரம்பித்து விடுவீர்களோ???




                                                                   

மிகப் பெரும்பான்மை தொகுதிகளை வென்று மீண்டும் தமிழக முதல்வராக வந்ததற்கு உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் . வெற்றிக் களிப்பில்  உள்ளபோதும், சென்ற ஆட்சியை ஏன் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று நினைத்தால்  உங்களுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.

நீங்கள் மாறிவிட்டீர்களா புதிய முதல்வரே? யோசிக்கும் பொழுது ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நீங்கள் ஜெயா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி கொடுத்தீர்கள். அந்த பேட்டியை எடுத்தவர் உங்களின்  அடிமைகளில் ஒருவரான  ரபி பெர்னாட் அவர்கள்(மன்னிக்கவும் ரபி பெர்னாட்,  இதைவிட சிறந்த வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை, நீங்கள் உங்கள் தனித்தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. இப்பொழுது நீங்கள் அ.தி.மு.க வின் மற்றொரு கொ.ப.செ அவ்வளவே). எனக்கு இந்த கணம் வரை பசுமையாக ஞாபகம் இருக்கிறது, அந்த பேட்டியில் நீங்கள் சொன்னீர்கள் "இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல மாறாக இது தமிழக மக்களின் வெற்றி" என்று, நிறம்ப சந்தோசமாக இருந்தது அதைக்  கேட்ட பொழுது. ரொம்ப தன்னடக்கத்துடன் இருந்தீர்கள். இனி இப்பொழுதும்  எப்பொழுதும் அப்படித்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.


                                                                     




ஆனால் புதிய தலைமைச்செயலக விசயத்தில் உங்களின் அணுகுமுறை அறிவு சார்ந்ததாய் தெரியவில்லை. கருணாநிதி கட்டினார் என்பதைத் தவிர அதை நீங்கள் வெறுக்க என்ன காரணம் இருக்க முடியும்? இந்த புறக்கணிப்பு தேவைதானா? உங்களின் ஈகோ வைக்காட்ட மக்களின் வரிப்பணத்தை தான் வீணடிக்க வேண்டுமா? தயவு செய்து யோசியுங்கள். கருணாநிதி செய்த எதுவும் வேண்டாம் என்றால் அவர் வகித்த முதல்வர் பதவியும் வேண்டாம் என்று சொல்வீர்களா???

எனக்கு பயமாய் இருக்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மிக அழகிய முறையில் கட்டி அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளார் கருணாநிதி. அவரை எதிர்க்கும் குணத்தால் தயவு செய்து அதற்க்கு எந்த தீங்கும் செய்து விடாதீர்கள். முடிந்தால் அதற்க்கு இன்னும் மெருகூட்டி உங்கள் மதிப்பை இன்னும் உயர்த்திக் கொள்ளுங்கள். அதே போல் சென்ற ஆட்சியின் நல்ல திட்டங்கள் அனைத்தையும் தொடருங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது.

நிறைய புதுமை செய்வேன் என்று வாக்களித்து உள்ளீர்கள். நன்றாக செய்யுங்கள், உங்களை பாராட்ட காத்திருக்கிறோம். ஆனால் மனம் போன போக்கில் நடந்தால் எதிர்ப்பை காட்டவும் தயாராக உள்ளோம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

வெற்றிக்குப் பிறகு உங்களிடம் அமைதி தெரிகிறது. அது எங்களுக்கு சந்தோசச் செய்தி. ஆனால் தலைமைச் செயலக விஷயத்தால் எங்களுக்கு ஒரு பயம் வருகிறது. அது உங்களுக்கு கெட்ட செய்தி.

உங்களை கணிக்க முடியவில்லை... மீண்டும் மாறிவிடுவீர்களோ ? பயமாய் இருக்கிறது.
     
                                                   


சனி, மே 14, 2011

கலைஞருக்கு நன்றி... மிக்க நன்றி....


                                                                      

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பீர்கள். தோல்விக்கான காரணங்கள் என்ற பெயரில் உங்கள் மீது வீசப்படும் விமர்சனங்களால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பீர்கள்.

ஆனால் நான் உங்களை காயப்படுத்தப்போவதில்லை... உங்களுக்கு பல விதங்களில் நன்றி சொல்ல தமிழக மக்களாகிய நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.

1 . ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு குடுத்ததற்க்காக, நிச்சயமாக இது ஏழைகளுக்கு உதவிய நல்ல திட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

2 . மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், 108  இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை திறமையாக செயல்படுத்தியதற்க்காக நன்றி.

3. இலவச காப்பீடு  திட்டத்தை 
செயல்படுத்தியதற்க்காக. நிச்சயமாக பல ஏழைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பது உண்மை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

4 . குக்கிராமங்களில் கூட ஓரளவு சாலை வசதி செய்து தந்ததற்கு நன்றி.

5 . வாக்களித்தபடி பெரும்பாலோருக்கு வண்ணத் தொலைக்காட்சி தந்ததற்கு நன்றி.

6 . சென்னையில் பல மேம்பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைத்ததற்கு நன்றி.

7 . மின் அலுவலக நடவடிக்கைகளை முறைப்படுத்தியதற்க்காக. மின்வெட்டு அடிக்கடி நிகழ்ந்தது என்னவோ உண்மை, ஆனால்  சென்னையில் எந்த நேரம் போன் செய்தாலும் மின் அலுவலகங்களில் எடுத்து முறையான பதில் தந்தார்கள். அதற்க்காக நன்றி.

8 . ரேஷன் அலுவலகங்களில் கையூட்டு வாங்காமல் தேவையான மாற்றங்களை செய்து தந்தார்கள். அதற்க்காக நன்றி.

9 . மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கியதற்க்கு நன்றி.

10 . சிறுபான்மையினருக்கு இட
ஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி.

மேலும் பல நல்ல திட்டங்களை செயல் படுத்தியதற்க்காக நன்றி.

இவ்வளவு செய்தும் ஏன் தோல்வி அடைந்தோம் என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். பின்வரும் காரணங்களை களைய உடனடி நடவைக்கை எடுங்கள். எடுத்தால்... நிச்சயம் அடுத்த தேர்தலில் தி.மு.க ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியும்.





                                                           
                                              

1 . குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எல்லா மட்டங்களிலும் கட்டுப் படுத்துங்கள்.

2 . திரைத்துறையில், தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இருந்து உங்கள் குடும்பத்தினரை விலகச் சொல்லுங்கள் அல்லது அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள். சினிமா மக்கள் அதிக முக்கியத்துவம் குடுத்து கவனிக்கும் ஊடகம். அதில் உங்கள் குடும்பத்தினரின் கடும் ஆதிக்கம் மக்களிடம் இயல்பான வெறுப்பை சம்பாதித்தது.

3 . ஏன் வியாபாரங்களில் இவ்வளவு போட்டி, யாருக்காக சம்பாதிக்கிறார்கள்? ஏற்கனவே 100  தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. இன்னும் ஏன் இவ்வளவு வெறி பணத்தின் மீது? இங்கு ஒரு தலைமுறையே சாப்பட்டிற்க்கும் சாதாரண வாழ்க்கைக்கும் போராடிக்கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 . நீங்கள் குடும்பத்தினரை சமாளிப்பதிலே அல்லது காப்பாற்றுவதில் போராடிக்கொண்டு இருக்கையில், பாரபட்சம் இல்லாமல் எல்லா அமைச்சர்களும்,       MLA-க்களும் புகுந்து விளையாடி விட்டார்கள். யாருக்கும் 10  கோடிக்கு கம்மி சொத்து இல்லை.

5 . இவை அனைத்தையும் மக்களுக்கு காசு கொடுத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தீர்கள். மக்களை காசு குடுத்து விளக்கி வாங்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த குறைகளை சரி செய்தால் நிச்சயம் மீண்டும்  ஆட்சியை தி.மு.க வெல்லும். 


நம்பிக்கையோடு இருங்கள். மனம் தளர்ந்து விடாதீர்கள். சிறந்த இரண்டாவது எதிர்க்கட்சியாக ஜனநாயக் கடமையை ஆற்றுங்கள்.
மக்கள் நன்மதிப்பை மீட்டெடுக்க போராடுங்கள்.

மற்றபடி, உங்களுக்கு.... மீண்டும் நன்றி....மிக்க நன்றி....


சனி, மே 07, 2011

தமிழக கம்யூனிஸ்டுகள் மட்டும் என்ன உத்தமபுத்திரர்களா?




இன்று யாரிடம் போய் தேர்தல் பற்றி பேசினாலும் ஒருவித சலிப்பைக் காணலாம். எங்கங்க எல்லாம் திருட்டுபயல்களா இருக்காங்க, இந்த நிலைமைல யாருக்கு ஓட்டுபோட்டு என்னத்த பண்றதுன்னு.

நிஜமாவே எல்லாருமே திருடர்கள்தானா? ஊழல்வாதிகல்தானா? என்று கட்சி வாரியாக யோசித்தபோது, தூய்மையானவர்கள் என்று எந்த கட்சியிலும் ஒரு பெயர்கூட நினைவிற்கு வரவில்லை. சரி ரொம்ப வருடங்களா முன்னேற்றமே இல்லாம இருக்கிற கம்யுனிஸ்ட்டுகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்தால் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றே தோன்றுகிறது, ஒரு நம்பிக்கை கீற்று தெரிகிறது.

ஆம், என்னுடைய நினைவிற்கு 3 பெயர்கள் வருகிறது.

நல்லகண்ணு
பாலபாரதி
நன்மாறன்

ஏழ்மையான நிலையில்கூட கட்சி தனக்காக வசூல் செய்து குடுத்த 1 கோடி ரூபாய் பணத்தை கட்சிக்கே திருப்பி குடுத்த பெருந்தன்மை தோழர் நல்லகண்ணுவிடம் இருந்தது. MLA வாக இருந்தும் அரசு பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழத்தெரியாத,குடிசை வீட்டில் வாழ்ந்த நேர்மை நன்மாரனிடம் இருந்தது. போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து சொத்துகணக்கை கூட்டி காட்டும் அமைச்சர்கள் மற்றும் MLA க்கள் மத்தியில் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் சொத்து கணக்கு குறைந்த நிலையில் பாலபாரதி இருக்கிறார்.

தமிழக கம்யூனிஸ்டுகள் அனைவருமே நல்லவர்களா? எனக்கு தெரியாது. ஆனால் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் உத்தமபுத்திரர்களாகவே இருக்கிறார்கள்.

ஊழலை இந்த அளவு எதிர்க்கும் மக்கள் நியாயமாக கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் பலமுறை தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பவர்களை விட்டுவிட்டு, புதிதாக ஒருவர் (தேவலோகத்திலிருந்து) பிறப்பார் என்று எதிர்பார்க்கும் இந்த மக்களை என்ன சொல்ல?

செவ்வாய், மே 03, 2011

லோக்பால் மசோதாவாவது... வெங்காயமாவது...


இன்றைக்கு நாடெங்கும் நடக்கும் ஒரே விவாதம், லோக்பால் மசோதா. இதில என்ன கொடுமைன்னா முக்கால்வாசி பேருக்கு இதோட முழு விவரம் தெரியாது(எனக்கும் தான்). ஆனா இந்த மசோதா வந்தவுடனே அதன்பிறகு இந்தியாவில ஊழலே நடக்க போறது இல்லைங்கற மாதிரியும், எல்லா ஊழல் பெருச்சாளிகளும் நல்லவங்களா மாற்றப்படுவாங்கன்கிற மாதிரியும் பேசிகிட்டு திரியிறோம்.

ஊழல ஒழிக்க குறைந்த பட்சம் சில அடிப்படை விஷயங்களையாவது நாம சரி செய்யணும். அத விட்டுட்டு இண்டர்நெட்ல, ட்விட்டர்ல, SMS ல வோட்டு போட்டெல்லாம் இந்தியாவ்ல ஊழல ஒழிக்க முடியாது. இந்த உண்மைய மொதல்ல நாம புரிஞ்சிக்கணும்.நம்ம நாட்ல ஊழல் ஒன்னும் ஆரம்ப கட்டத்தில இல்ல, கடைசி கட்டத்தில இருக்கு. இதுக்கு மேல இனிமே எவன்னாளுயும் ஊழல் பண்ணமுடியாது.உலகத் தலைவர்கள்லாம் நம்மாளுகள பார்த்து வாய் அடச்சிப்போய் இருக்கானுங்க. அட ஆமாங்க, ஊழல்ல நாம வல்லரசாகி பல வருசங்கள் ஆச்சு.

சரி ஊழல ஒழிக்க என்ன வழி இருக்குன்னு யோசிச்சா, என்னோட அறிவுக்கு 3 வழி தென்பட்டுச்சு.

ஒன்று... தனி மனித மன மாற்றம், ஆம் நாமெல்லாம் இனி லஞ்சம் குடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன், லஞ்சத்த ஒழிக்க பிரச்சாரம் செய்வேன் போரடுவேன்னுஉறுதி மொழி எடுக்கணும்.

இரண்டு.... நீதித் துறை, அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை இந்த மூன்றிலும் களையெடுப்பு நடத்தனும்...

மூன்று.... இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் சாதி, மதம் மற்றும் மொழி போன்ற காரணிகளை பார்க்காமல், நேர்மை மற்றும் தூய்மை இவை இரண்டை மட்டுமே அடிப்படையாக கொண்டு தனது வேட்பாளரை தேர்வு செய்து , நல்லவர்கள் நாடால வரணும்.

இந்த மாற்றங்கல்லாம் வர நாட்டின் பெரும்பன்மயானவர்கள் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணி ஆற்றனும். அப்ப தான் சாத்தியம். களப்பணி ஆற்றுவார்களா? நம்மாளுக டீ தான் ஆத்துவாங்க.

இதை எல்லாம் நாம் செய்யாதவரை நமது அரசியல் வாதிகளுக்கு...
லோக்பாலும்... அமலாபாலும்(நடிகை) ஒண்ணுதான். இரண்டாலும் நாட்டுக்கு எந்த பிரோஜனமும் இல்லை.
அதனாலதான் மீண்டும் சொல்றேன்...
லோக்பாலாவது வெங்காயமாவது.....

டிஸ்கி-1 : அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த அன்று சென்னைல உண்ணாவிரதம் இருந்தவங்க மொத்தம் 20 பேர்கள் தான். அதிலயும் கடைசி வரை இருந்தது 8 பேர் தான். நம்ம போராட்ட குணத்தோட லட்சணம் இது தான்.

டிஸ்கி-2 : உண்ணாவிரத எண்ணிக்கை பற்றி தகவல் தந்த நண்பர் K .R .P செந்திலுக்கு நன்றி.



வெள்ளி, ஏப்ரல் 29, 2011

ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஏற்படுத்தி கொடுத்த அருமையான வாய்ப்பு


செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு இறுதி வாய்ப்பு... பரவலாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி இந்த முறை அ.தி.மு.க மயிரிழையில் வெற்றியை தட்டிச் செல்லும் என்றே தெரிகிறது. (என்னோட கருத்து கணிப்பு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றது.)

இந்த வெற்றியை தனது வெற்றியாக நினைத்து செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அகம்பாவத்தில் ஆடினால்(வழக்கம் போல்...) இதுவே அவரது கடைசி வெற்றியாக இருக்கும்.

ஆம், இந்த முறை தி.மு.க வை ஜெயலலிதா தோற்கடிக்க வில்லை, மாறாக கலைஞரே தோற்கடிக்க வைத்தார், தனது குடும்பத்தினரை வரம்புக்கு மீறி தி,மு,க வில் ஆதிக்கம் செலுத்தவிட்டதன் மூலமும், சன் தொலைக்காட்சியை வரம்புக்கு மீறி வளர விட்டதன் காரணமாகவும்.

மற்றபடி கலைஞர் ஆட்சி ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்றே சொல்லலாம். பல நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது. உடனே நண்பர்கள் மின்சாரப் பிரச்சனையையும், விலைவாசி பிரச்சனையையும் கிளப்ப வேண்டாம். அவை தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் அல்ல, மாறாக ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

கலைஞர்ருக்கு மாற்று வேண்டும் என்று யோசித்த பெரும்பான்மை வாக்காளர்கள் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க விற்கு வாக்களித்தார்கள் என்பதே யதார்த்தம். இதை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொண்டு நல்லாட்சி தர முயல வேண்டும். அதை விடுத்து தனது பழைய பாணியையே பின்பற்றினால் இதுவே அவரது கடைசி முதலமைச்சர் வாய்ப்பாக இருக்கும். மற்றபடி முதலமைச்சர் பதவி பற்றி கனவு மட்டுமே காணலாம்.


மைனாரிட்டி அ.தி.மு.க அரசும் கலைஞரும்


காலைல எந்திரிச்ச உடனே பல்லு விலக்குராரோ இல்லையோ மைனாரிட்டி தி.மு.க அரசு....
மைனாரிட்டி தி.மு.க அரசு.... என்று பல்லவி பாட ஆரம்பித்து விடுவார் ஜெயலலிதா. இவ்வாறு சொல்வது மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எந்த மடையன் சொல்லிகுடுத்தான்னு தெரியல. ஆனா மக்களுக்கு இது சில நேரங்களில் பெரிய காமெடியாவும் பல நேரங்களில் கடுப்பாவும் இருந்துச்சு என்பது தான் உண்மை.

சரி
விசயத்துக்கு வருவோம், இந்த போஸ்ட் அத பத்தி இல்ல, இப்ப நடந்த தேர்தல்ல அ.தி.மு.க வும் மைனாரிட்டி ஆகப்போகுது என்பது தான் விஷயம். நிச்சயம் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை. எனவே கூட்டணி ஆட்சிதான் அமையப் போகுது. இந்த சுழ்நிலையில குரு சிஷ்யன் படத்தில ரஜினியும் பிரபுவும் ஆடும் டான்ஸ் தான் நினைவிற்கு வருது...

இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய.....ஹே...டண்டனக்க ...
இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய....

இதனால் நமக்கு தெரியவருவது என்னவென்றால்... தன் வார்த்தை தன்னையே சுடும்...

டிஸ்கி-1 : ஒரு வேலை கலைஞரும் மே 13 க்கு பிறகு மைனாரிட்டி அ.தி.மு.க அரசு என்று சொல்ல ஆரம்பிப்பாரோ? சொன்னாலும் சொல்வார். யார் கண்டா? இவங்கட்ட இருந்து நாம தப்பிக்கவே முடியாதா? என்ன கொடும சார் இது....

டிஸ்கி-2 : ஏன்பா கஸாலி இந்த டிஸ்கி டிஸ்கி னு ஒன்ன கடைசியில போடறீங்களே? என்ன எலவுயா அது. ஒண்ணுமே புரியாம நானும் போடறேன். எவன்யா இதெல்லாம் கண்டு பிடிச்சவன்?


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters