தெருவுல நடக்க முடியல.....
ஒரு கடைக்கு போக முடியல.....
காலைல இட்லி வாங்கலாம்னு ஹோட்டலுக்கு போனேன்(காலை சாப்பாடு எங்க வீட்ல கிடைக்குது??? )...
தெரிந்த நண்பர் தான் சமையல் மாஸ்டராக இருக்கிறார்.... அவர் கேட்டார் "பாய்... இன்னைக்கு ஏதும் ஹாட் நியூஸ் இருக்கா???"
நான்.. "இல்லையே அண்ணன்.. வழக்கம் போல் தான் இருக்கு" என்றேன்.
அதுக்கு அவர் "இல்ல..இன்னைக்கு உலகம் அழியப்போகுதாமே????" அப்டின்னார்.....
பாமரர்களில் இருந்து, படித்தவர்கள் வரை அனைவரும் இன்று உலகம் அழியப்போகுதாமே??? நிஜமா சார்????
யாரோ மாயன் இன மக்கள் உருவாக்கிய காலண்டர்ல 2012 க்கு மேல இல்லையாமே??
ஆச்சா...பூச்சானு ஒரே அலப்பரையா தான் இருக்கு....
ஆனா பாருங்க சகோதர, சகோதரிகளே!!!!
இன்று சாமி சத்தியமா உலகம் அழியாது... ஏன்னா..ஏன்னா..ஏன்னா...?????
அதே தான்.. நான் என்ன பெருசா சொல்லிட போறேன்... ???
இஸ்லாமிய நம்பிக்கைப் படி இன்று உலகம் அழியாது.. அழியவே அழியாது...
( இது மாயன் காலண்டர் இல்ல.. எங்க ஊரில் விசியோகிக்க
இருக்கும் 2013 காலண்டர்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....)
உலக அழிவின் முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
இதில் 10 விசயங்கள் சொல்லப்பட்டாலும், நான் அனைத்தையும் பற்றி பேசப்போவது இல்லை.. ஒரே ஒரு விசயம்... 5 வது பாயிண்ட்...
தன்னைப்போன்ற ஒரு நபியை போட்டியாக என்னாமல், தனக்குப் பின் உலகம் அழியும் போது வருவார், இஸ்லாமியர்களை தஜ்ஜாலிடம் இருந்து காப்பார் என்று இயேசுவை எவ்வளவு உயர்த்தி சொல்லி இருக்கிறார் முஹம்மது நபி ஸல் அவர்கள்???? அவரும், அவர் போதித்த இஸ்லாமும் உண்மையானது என்பதற்க்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி இல்லையா சகோஸ்??? நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் நிறையவே அத்தாட்சிகள் உண்டு. சிந்திப்பீர்களா சகோஸ்?????

ஈஸா (அலை) என்பது கிறிஸ்தவர்களின் கடவுளான ஏசுநாதரை குறிக்கும்.
ஏசுநாதரை குறித்த இஸ்லாமிய நம்பிக்கையை சுருக்கமாக 4 பாயிண்டுகளில் பார்த்து விடுவோம்.
1. முஸ்ஸிம்களைப் பொறுத்த அளவில் அவர் கடவுள் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போல் இறைவனின் தூதுவர். முந்தைய கால மக்களுக்காக வந்தவர்.
2. அவர் சிலுவையில் அறையப்படவில்லை. அதே போல் சாகவும் இல்லை. சிலுவை பிரச்சனையின் போது எதிரிகளிடையே குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் சிலுவையில் அறைந்தது ஏசுவை அல்ல. ஈஸா (அலை) அவர்கள் கடவுளிடத்தில் உயிருடன் உயர்த்தப்பட்டார்கள்.
3. உலக இறுதி நாளின் போது கடைசி 40 நாட்கள் அவர் வருவார். இந்த உலகை ஆள்வார். முஸ்லிம்கள் அனைவரும் அவரின் பின் அணி வகுப்பார்கள். அவரை கொண்டாடுவார்கள்.
4. தஜ்ஜால் என்ற கொடுங்கோலன் சர்வ வல்லமையுடன் இருப்பான். அவன் முஸ்லிம்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் இருப்பான். அவனை ஈஸா அலை அழிப்பார்கள். அத்துடன் உலகம் அழிக்கப்படும்.
இது குறித்த ஒரு நபி மொழியை பாருங்கள்.....
இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி),
இது குறித்த ஒரு நபி மொழியை பாருங்கள்.....
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.

'வேதம் வழங்கப்பட்டவர்களில்
எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை
கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர்
சாட்சியம் அளிப்பார்' (திருக்குர்ஆன் 04:159)
என்னும் வசனத்தை நீங்கள்
விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
தன்னைப்போன்ற ஒரு நபியை போட்டியாக என்னாமல், தனக்குப் பின் உலகம் அழியும் போது வருவார், இஸ்லாமியர்களை தஜ்ஜாலிடம் இருந்து காப்பார் என்று இயேசுவை எவ்வளவு உயர்த்தி சொல்லி இருக்கிறார் முஹம்மது நபி ஸல் அவர்கள்???? அவரும், அவர் போதித்த இஸ்லாமும் உண்மையானது என்பதற்க்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி இல்லையா சகோஸ்??? நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் நிறையவே அத்தாட்சிகள் உண்டு. சிந்திப்பீர்களா சகோஸ்?????
தஜ்ஜால் என்ற கொடுங்கோலனும்,ஈஸா நபியும் இந்த உலகத்திற்க்கு இன்னும் வர வில்லை. இதற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சாட்சி, கிருத்தவ சகோதரர்களும் சாட்சி.
ஆகவே சகோஸ்... இன்று சத்தியமா உலகம் அழியாது.. அழியவே அழியாது.....
டிஸ்கி : இது ஒரு இஸ்லாமிய பதிவல்ல... இஸ்லாமிய நம்பிக்கையைச் சொல்லி முட்டாள்களின் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு பதிவு.... ஹி..ஹி..ஹி..ஹி......
டிஸ்கி : இது ஒரு இஸ்லாமிய பதிவல்ல... இஸ்லாமிய நம்பிக்கையைச் சொல்லி முட்டாள்களின் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு பதிவு.... ஹி..ஹி..ஹி..ஹி......
| Tweet |