புதன், மே 18, 2011

பயோ டேட்டா....சராசரி இந்தியக் குடிமகன்...




                                                  
                                 பயோ-டேட்டா...


பெயர் : இந்தியக் குடிமகன்

மொழி : 1500  க்கும் மேல்

இனம் : கணக்கில்லை

பிடித்தது     :  சினிமா மற்றும் பேச்சு

பிடிக்காதது :  அடுத்தவர்களின் தவறு

விரும்புவது : ஊழலை ஒழிக்க

விரும்பாதது : அதற்காக தான் போராடுவதை

எதிரி : பாகிஸ்தான்

உப எதிரி : சீனா

ஆதர்ச புருசர்கள் : சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்

பார்க்க விரும்புவது : இந்தியாவை வல்லரசாக

பார்த்தது : விஜயகாந்தின் வல்லரசு

வாழவேண்டியவர்கள் : தானும் தன் குடும்பத்தாரும்

மற்றவர்கள் : எக்கேடு கெட்ட எனக்கென்ன

பிடித்த விளையாட்டு : கிரிக்கெட்... கிரிக்கெட் ... கிரிக்கெட் மட்டுமே


தவறே செய்யாத நாடு : இந்தியா

தவறை மட்டுமே செய்யும் நாடு : பாகிஸ்தான்

பலம் : மக்கள் தொகை

பலவீனம் : பலமே பலவீனம்

நம்புவது : ஆட்சியாளர்களை(இன்னுமா நம்புறீங்க???)

சாதனை : வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பெரும்பாலோனோர் இன்னும் நல்லவர்களாக இருப்பது.


24 கருத்துகள்:

  1. //பார்த்தது : விஜயகாந்தின் வல்லரசு//:))))

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு சகோ
    பதிவா சுயவிமர்சனமா?


    //வாழவேண்டியவர்கள் : தானும் தன் குடும்பத்தாரும்

    மற்றவர்கள் : எக்கேடு கெட்ட எனக்கென்ன//

    ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  3. பார்க்க விரும்புவது : இந்தியாவை வல்லரசாகபார்த்தது : விஜயகாந்தின் வல்லரசுஹா ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  4. #விரும்புவது : ஊழலை ஒழிக்க

    விரும்பாதது : அதற்காக தான் போராடுவதை#

    குசும்பான உண்மை..

    பதிலளிநீக்கு
  5. // தவறே செய்யாத நாடு : இந்தியா

    தவறை மட்டுமே செய்யும் நாடு : பாகிஸ்தான் //

    இது ஏதோ ஊமைக்குத்து மாதிரி தெரியுதே...

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்காவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லையே... அவர்கள் நண்பர்களா...? எதிரிகளா...?

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம்... கே.ஆர்.பிக்கு போட்டியா...?

    பதிலளிநீக்கு
  8. கவுண்டமணி செந்தில் வலைப்பூவில் ஒரு கலகம் நடந்துக்கொண்டிருக்கிறது... உங்கள் வருகையை எதிர்நோக்குகிறோம்...

    நையாண்டி பவனில் "பிராப்ள" பதிவர்கள்...!!!

    http://goundamanifans.blogspot.com/2011/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லாபுதன், 18 மே, 2011

    நல்லா இருக்கே பயோடேட்டா. கே. ஆர்.பி. செந்தில் கிட்ட இருந்து இந்த பதிவை காப்பாத்திக்கங்க!

    பதிலளிநீக்கு
  10. வருங்கால முதல்வரே ! ஆமா எங்களை சரியாய் புரிந்துகிட்ட உங்ககிட்ட தான் ஆட்சி (ஆச்சி அல்ல ) பொறுப்ப ஒப்படைக்கணும் ..

    பதிலளிநீக்கு
  11. நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

    "பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

    http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

    பதிலளிநீக்கு
  12. //சாதனை : வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பெரும்பாலோனோர் இன்னும் நல்லவர்களாக இருப்பது.


    கரக்ட்

    பதிலளிநீக்கு
  13. ஸலாம் உண்டாவதாக சகோ.சிராஜ்.

    இந்தியன் பயோடேட்டா மிக அருமை..!

    அதில், ஒவ்வொரு டேட்டாவும் தூள்..!

    ஆனால், ஒன்றைத்தவிர...

    //விஜயகாந்தின் வல்லரசு//---தமிழ்நாட்டுக்கு வெளியே சென்று அவரே தன்னை யாரென்று விளக்கி அறிமுகப்படுத்திகொண்டாலும் எத்தனை பேருக்கு அவரை தெரியும்...?

    (இந்த ஒரே ஒரு அம்சம் தமிழன் பயோடேட்டாவின் ஒரு டேட்டா..?)

    எனக்கு இதில் ரொம்ப பிடித்தது...

    ///பலம் : மக்கள் தொகை

    பலவீனம் : பலமே பலவீனம்///

    'மக்கள்தொகை' என்பதை 'மனிதவளம்' என்று மாற்ற ஆரம்பித்தவுடன் எவ்வளவு பெரிய மாற்றம்..?

    பதிலளிநீக்கு
  14. @Speed Masterவருகைக்கு நன்றி நண்பர்களே... நிச்சயம் உங்கள் அனைவரின் தளத்திற்கும் வருகிறேன்... சில அலுவலக வேலை காரணமாக முழு கவனம் செலுத்த முடியவில்லை

    பதிலளிநீக்கு
  15. @முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'விஜயகாந்தின் வல்லரசு மட்டும் சும்மா நகைச்சுவைக்காக சேர்த்தது. மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லாபுதன், 18 மே, 2011

    விஜயகாந்தின் வல்லரசு//
    செம டைமிங்சென்ஸ் உங்களுக்கு!!

    பதிலளிநீக்கு
  17. //பார்க்க விரும்புவது : இந்தியாவை வல்லரசாக
    பார்த்தது : விஜயகாந்தின் வல்லரசு//
    செம்ம! :-)

    பதிலளிநீக்கு
  18. சாதனை : வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பெரும்பாலோனோர் இன்னும் நல்லவர்களாக இருப்பது.


    ..... ஜெய் ஹிந்த்!

    பதிலளிநீக்கு
  19. அன்பின் சிராஜ் - பயோ டேட்டா நல்லாவே இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters