சனி, நவம்பர் 19, 2011

கழுதைக்கு வாக்கபட்டாலாவது உதையோட போகும்... நாம வாக்கபட்ருக்கது.....

                                                            
                                                                                                                 
ஏன் தமிழக மக்களே இப்படி செய்தீர்கள்? சென்ற தேர்தலில் நான் அ.தி.மு.க விற்கு வோட்டு போடவில்லை. நீங்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததால் தான் செல்வியின் ஆட்சி வந்தது. வாக்களித்த நீங்கள் கடிபடுவது நியாயமானது? தேவை இல்லாமல் அவரை ஆதரிக்காத நான் ஏன் கடிபடவேண்டும்?

என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க இந்த அம்மா? கஜானவில காசு இல்லாட்டி, வரி போட்றதும், விலைவாசியை ஏத்துறதும்  தான் வழியா?  இத செய்றதுக்கு நீங்களும், படிச்ச அந்த பொடலங்கா IPS  ஆபிசர்களும் எதுக்கு? படிக்காத பாமரன்  கூட இந்த பட்ஜெட்டை போடுவாங்களே?  ஏன் நானே போடுவேனே? ஆட்சி செய்ய தெரியாட்டி ஊர பாத்திக்கிட்டு போங்கம்மா.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.


பொருள் ஈட்டுதல் என்பதில் தான் உங்கள் திறமை இருக்கு. அதில காட்டுங்க உங்க வேகத்த. வருமானத்திற்கு வழியா இல்லை?  நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எல்லா அரசு சார்ந்த திட்டங்களிலும்  10 %கமிசன் அடிச்சுகிட்டு  இருக்காங்கல்ல எல்லா MLA, மந்திரி , மாவட்டம், வட்டம்  மற்றும் அல்லக்கைகள்.  அது உங்களுக்கு தெரியாதா?  அவங்ககிட்ட போய் நிதிநிலை ரொம்ப கேவலமா இருக்கு , இந்த 5  வருஷம் மட்டும் ஊழல் பண்ணாதீங்கன்னு   சொல்லி,  அத நிறுத்த சொல்லுங்க, மொத்த செலவில 10 % சேமிக்கலாம், அதன் மூலம் பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை காலத்துக்கும் கட்டுக்குள்ள வச்சிருக்கலாம். தமிழகத்தில 40 % அளவுக்கு மின் திருட்டு அல்லது மின் இழப்பு மூலம் மின்சாரம் வீணாகிறது . மின் வாரிய ஊழியர்களையும் காவல் துறையையும் லஞ்சம் வாங்காம மனசாட்சியோட இந்த விசயத்தில வேலை செய்ய சொல்லுங்க. மின்சார கட்டணத்த அடுத்த 50 வருசத்துக்கு ஏத்தவேண்டியது இல்ல.

எனக்கே இத்தனை வழிகள் தோன்றும் பொழுது உங்களுக்கு தோன்றாமல் இருக்காது. ஆனா உங்களுக்கு உங்க கட்சிக்காரன் கொள்ள அடிக்கிறது நிற்கக் கூடாது, தனியார் பால் அதிபர்கள் கொடுக்கும் கோடிகள் உங்களுக்கு வேணும். ஆனால் அரசும் நடக்கணும்னா பக்கத்து மாநிலங்களுக்கு போய் கொள்ளை அடிச்சாத்தான் முடியும். அத வேணும்னாலும் செய்யுங்கள். எங்களை கொள்ளை அடிக்கிரத  மட்டும் விட்டுடுங்க.

அது சரி, இப்பவும்  இலவச திட்டங்கள் தொடருமா? இல்ல அதுக்கும் ஆப்பா? அப்படி தொடர்ந்தால், தயவு செய்து ஒரு பிஞ்ச செருப்பையும் இலவசமா குடுங்க. உங்கள்கிட்ட ஆட்சியை தந்ததுக்காக எங்கள நாங்களே செருப்பால அடிச்சிகிறோம். அத தவிர இந்த ஏழைகளால என்னதான் பண்ண முடியும்?

டிஸ்கி : கலைஞர் ஆட்சில இருக்கும் பொது கவுன்ட் டவுன் வச்ச அந்த புண்ணியவான்களே. இந்த ஆட்சிக்கும் ஏதாவது பண்ணுவீங்களா?  கவுன்ட் டவுன்லாம் வேணாம், நாலரை வருஷம் கொறஞ்சு வர்றதுக்குள்ள தமிழ் நாட்ல யாருமே இருக்க மாட்டாங்க, சுடுகாடுதான் இருக்கும். உடனே நடக்கிறமாதிரி ஏதாவது யோசிங்க.


23 கருத்துகள்:

 1. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  இலவசமாக ஆடு கொடுக்கிறது மாடு கொடுக்கிறது இதையேல்லாம் விட்டுபுட்டு உருப்படியாக விலைவாசியை குறைத்து தமிழகவாசிகளை நரகவாசிகளா மாற்றமால் காப்பற்ற உருப்புடியாக எதாவது செய்தால் நல்லது

  பதிலளிநீக்கு
 2. @????? ???
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 3. ???? ??????? ???? ??????????? ??????????? ???????? ???????? ????????? ?????????. ???????? ????????? ????? ??????

  பதிலளிநீக்கு
 4. இந்த பதிவில் தான் உருப்படியாக கொஞ்சமாவாது மக்களின் ஏகோபித்த எதிர்ப்பு தெரிகிறது. உண்மையான பதிவிற்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 5. பேயிர்க்கும் பிசாசிற்கும் வாக்க பட்டா இப்படிதான் ...........
  அம்மாவின் தாயுள்ளத்தை புரிந்துகொள்ளாமல் இப்படி கண்ணா பின்னா வென்று எழுதி இருக்கும் உம்மை வன்மையாக கண்டிக்கிறேன் ..............
  இதை பற்றி நான் ஒரு பதிவு போடுகிறேன் அப்போது புரியும் அம்மாவின் உண்மையான தாய் உள்ளம் .
  திங்கள் கிழமை வந்து படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும் .............

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ஜீவன்சிவம் அவர்களே

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கு நன்றி நண்பர் அஞ்சா சிங்கம் அவர்களே... கண்டிப்பா வந்து பார்க்கிறேன்... வுங்க தளத்துக்கு அடிக்கடி வந்துகிட்டு தான் இருக்கேன். அதிகமா கமெண்ட்ஸ் போட்றதில்லை.

  பதிலளிநீக்கு
 8. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.htmlData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  பதிலளிநீக்கு
 9. ரூம் போட்டாவது உருபடியா யோசிங்க மக்களே - எல்லாம் நேரம்.....

  பதிலளிநீக்கு
 10. இப்பத்தான் தலைவா ஆரம்பம். இதுக்கே அலுத்துகிட்டா எப்பூடி? இன்னும் நாலரை வருசம் பாக்கி இருக்கும்மா! தைரியத்தை அதுக்குள்ள இழந்துடலாமா?

  பதிலளிநீக்கு
 11. அன்பரே!
  சரியான சவுக்கடி!
  பாராட்டுக்கள்

  த ம ஓ 8

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் மனசாட்சி அவர்களே... மக்கள் என்ன பண்ணுவாங்க? அடுத்த தடவை தி.மு.க விற்கு வோட்டு போடுவாங்க. அவங்க வந்து, விட்டுட்டு போன மிச்ச மீதி இடங்களையும் வளச்சிருவாங்க.

  பதிலளிநீக்கு
 13. இன்னும் இருக்கும் நாலரை வருஷத்த நினைச்சாதான் அடிவயிறு எல்லாம் கலங்குது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ஜபருல்லாஹ் அவர்களே.

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும் பகிர்விர்க்கும் நன்றி அய்யா வாஞ்சூர் அவர்களே

  பதிலளிநீக்கு
 15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் அய்யா ராமானுசம் அவர்களே

  பதிலளிநீக்கு
 16. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
  வகுத்தலும் வல்லது அரசு./

  nice..

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே

  பதிலளிநீக்கு
 18. ஸலாம் சகோ.சிராஜ்,
  சுமார் ஆறுமாசம் கழிச்சு வந்து இருக்கீங்க. ஆனால், பதிவு செம சூடு. இப்படி 'ஜனநாயக கட்டாயத்திருமணம்' கட்டி வச்சு வாக்கப்பட்டுட்டா இந்த வருஷமே இதுக்கு டைவர்ஸ் வாங்குறதுக்கு எங்கே போறதுன்னுதான் புரியலை. என்ன செய்றது. "கவுண்ட் டவுன் நாலரை வருஷம் ஸ்டார்ட்ஸ்" என்று இப்போவே சொன்னால், அது ஆள்றவங்களுக்குத்தான் ரொம்ப அசிங்கம்.

  பதிலளிநீக்கு
 19. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ ஆசிக்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. விலை ஏற்றம் ஏதோ ஒரு ருபாய் ரெண்டு ரூபாய்ன பரவா இல்லை. இப்படியா ஒரே அடியா ஏத்தறது. கொஞ்சமாவது நியாயம் வேணாம்

  பதிலளிநீக்கு
 20. @சிராஜ் படிச்ச சூட்டோடு சூடா நானும் ஒரு பதிவு போட்டுட்டேன் சகோ.சிராஜ்,

  கைவாளேந்திய காரிகை..!


  //விலை ஏற்றம் ஏதோ ஒரு ருபாய் ரெண்டு ரூபாய்ன பரவா இல்லை. இப்படியா ஒரே அடியா ஏத்தறது. கொஞ்சமாவது நியாயம் வேணாம்//---அநியாயம்..! அக்கிரமம்..!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters