வெள்ளி, ஜனவரி 04, 2013

டெல்லி மாணவி உயிரோடு இருந்திருந்தால்.....

எனக்கு நன்கு தெரியும்... இந்த மருத்துமனையிலிருந்து உயிரோடு நான் திரும்பி வந்தாலும் என்னுடல் பலவீனத்திலிருந்து மீண்டு வர  முடியாது என்று... என் இளமை கால வசந்தம் அன்றிரவுடன்  முடிந்துவிட்டதை தெரிந்தே வைத்திருக்கிறேன்.  என் வாழ்க்கை முடக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை!

அந்த கொடிய இரவை நினைத்து பல வருடங்கள் எனக்கு தூக்கம் வராது. இனி இரவுகளை பார்க்கும் நேரமெல்லாம் அந்த கொடிய விஷயமே என் நினைவில் வந்து நிற்கும்!  ஆண்களை கண்டால் என்னை அறியாமல் என்னுடல் அலர்ஜியால் துடிதுடிக்கும்! இத்தனைக்கும் ஏன்?....  என்  தந்தையோ சகோதரனோ  மீதும் வெறுப்பு கலந்த சந்தேகம் தோன்றிக்கொண்டே இருக்கும்!  என் சக தோழிகளை சந்திக்க நேர்ந்தால் கண்ணீர் முட்டும், என்னை பரிதாபமாக பார்க்கப்படும் ஒவ்வொரு நொடியும் மரணமே என் பக்கம் வந்ததுபோல் உணர்வு வரும். என் கனவுகள் ஆறு பேரால் மாற்றியமைக்கப்பட்டுவிட்டதை ஜீரணிக்கமுடியவில்லை என்றாலும் இது தான் என் நிலை!

லேசான எலும்பு முறிவுக்கு மருத்துவம் பார்த்தாலும்  அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கும்.  சாதாரண மாத்திரைகளுமே பக்கவிளைவை ஏற்படுத்தும் எனும் போது  என் உச்சந்தலை முதல் கருப்பை வரை  தாக்கப்பட்ட வலி ஆறு மாதத்திற்குள் நின்றுவிடாது என்பதை  உங்களால் உணர முடிகிறதா? நிச்சயம் எனக்கு தெரியும்...   இனி வீல் சேரும், சிறிய அறையுமே என் தோழி.. என் சுயதேவைகள் அனைத்தும் இனி என் அன்னையின் உதவியால் மட்டுமே முடியும்... சாகும் வரை இந்த வேதனைகளும் வலிகளும் சுமக்க போவது நான் மட்டுமே...

எந்த தவறும் செய்யாத நான் மட்டும் வீட்டுச்சிறையில் மரணத்தை எதிர்நோக்கி!
என்னை சீரழித்தவர்கள் சிலமாத காவல் சிறைக்குப்பின்  விடுதலை எதிர்நோக்கி!

ஒருவேளை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டால்....

பரிதாபம் கொண்டு இந்த மருத்துவச்செலவை ஏற்கிறது அரசு... மருத்துவமனை விட்டு நான் சென்ற பின்??? ஊடகங்களும் போராட்டக்காரர்களும் அடங்கிய பின்?
ஆனால்,
என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய அந்த விஷ ஜந்துக்களுக்கு இன்றும் என்றும் ஆயுள்தண்டனை என்ற பெயரில் அரசின் செலவில் இனிதாய் வாழ்க்கை கழிக்கும்! நிச்சயமாய் சில நாட்கள் குற்ற உணர்வு அவர்களை தொற்றிக்கொள்ளும்... ஆனால் நிரந்தரமல்ல... என் அவலநிலை மட்டும் நான் சாகும் வரை நிரந்தரமே...


இரக்கமற்றவர்களின் இருப்பு கம்பி அடியால் தலையில் பலத்த அடி வாங்கிய போதும், என்னை  காப்பாற்ற அந்த ஆறுபேருடன் போராடி தோற்ற போதும்,   கொசு கடிபட்டாலே பதறிப்போகும் போகும் என் மெல்லிய  தோல், வேகமாய் ஓடிக்கொண்டிருக்கும்   பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு உராய்வு ஏற்பட்டு ரத்தத்தால் சிவப்புச்சாயம்  பூசப்பட்ட போதும்  ,  கூடியவர்களுக்கு முன் நிர்வாணமாய் நான் காட்சியளித்த  போதும்  என் உயிர் என்னுடலில் ஒட்டியிருந்ததற்கும் இல்லை... இல்லை...  வலுகட்டாயமாய் தைரியம் வரவழைத்து உயிரை பிடித்து வைத்திருந்ததற்கும்  ஒரே காரணம் கயவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே! மனதில் இருந்த ஒரே  எண்ணம் இவர்களை  தண்டிக்க வேண்டும் என்பதே! நான் கண் விழித்ததும் எதிர்பார்த்ததும் அதுவே! 

பாறைக்கு கண் இருந்தாலும்  அன்றிரவு என்னை பார்த்து அன்று அழுதிருக்கும்... 

கேட்போரையும்  கதறச்செய்யும் எனக்கிழைக்கப்பட்ட கொடுமை பார்த்த பின்னும் காமவெறியர்களை திருந்த வாய்ப்பு கொடுக்கச்சொல்லும் சமூகம்... சிரிப்பு மட்டுமே வருகிறதெனக்கு...

 எறும்புகடித்தால் அதை நசுக்கி கொல்லாமல், கையை விட்டு மெல்லமாய் அப்புறப்படுத்துகிறதா   அவர்களின்  பகுத்தறிவு ? 

 வீட்டில் பாம்பு நுழைந்தால் அதை அடிக்காமல் ,  இரக்கப்பட்டு , மன்னித்து, மெல்லமாய்  எடுத்து வெளியே அனுப்பிவிடுகிறதா அவர்களின் மனிதாபிமானம்?

ஆம் எனில், நானும் அவர்களுடன் கைகோர்க்கிறேன்... ஹா..ஹா..ஹா... சிறுகடிக்கே அறிவற்ற உயிரியை கொல்லதுணியும் நாம், நல்ல மனநிலையில்,  வேண்டுமென்றே ஒரு பெண்ணை சித்ரவதை  செய்த கேடுகெட்டவர்களை மன்னித்துவிடவேண்டுமா? தாராளமாக மன்னிக்கட்டும்..... அவர்கள்  வீட்டு பெண்ணுக்கு இந்த அலங்கோல நிலை ஏற்படும்போது!
 
மன்னிப்பார்கள் எனில் ...
அவர்களும்  திருந்தக்கூடும் எனில் ... 
அவர்களை திருத்தியதால் அனைத்தும் சரியாகிவிட்டதா?  இனி உருவாகிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் காமவெறியர்களை  எப்படி திருத்தப்போகிறார்கள்... "தைரியமா கற்பழி! மனிதாபிமானம் கொண்ட சட்டம் உன்னை மன்னித்து விடுதலை செய்துவிடும் "  என்றா???   


கேட்டுக்கொள்ளுங்கள்.... அந்த ஆறு பேரை விடவும் கேவலமானவர்கள் இவர்களே...!!!
குறித்துக் கொள்ளுங்கள்... எனக்கு நடந்தது போல் இனி நடக்கபோகும் அனைத்து கொடிய நிகழ்வுக்கும்  பொறுப்புத்தாரி  இவர்கள் மட்டுமே!
பாதுகாத்துக் கொள்ளுங்கள்.... இல்லையேல் நாளை உங்கள் வீட்டுப்பெண்ணுக்கும் இதே நிலையே!!!!


என் விதியை நிச்சயம் மாற்றியமைக்க முடியாது... ஆனாலும் மற்ற பெண்கள் இந்நிலையை அடையாதிருக்க, சிறந்த வழியை என்னை பார்த்த பின்பாவது ஏற்படுத்திகொடுக்கட்டும் இவ்வரசு! ஆணாதிக்கத்தை தீயிழிட்டு பொசுக்க இன்றேனும் சந்தர்ப்பத்தை உருவாக்கட்டும் இவ்வரசு!



*********************

ஆக்கம் - ஆமினா முஹம்மத்


45 கருத்துகள்:

  1. //எந்த தவறும் செய்யாத நான் மட்டும் வீட்டுச்சிறையில் மரணத்தை எதிர்நோக்கி!
    என்னை சீரழித்தவர்கள் சிலமாத காவல் சிறைக்குப்பின் விடுதலை எதிர்நோக்கி!
    //

    திருடன் ஒரு தடவைதான் திருட யோசிப்பான்... முதன் முதலாய் திருடும்போது மட்டுமே யோசிப்பான்... அடுத்த தடவை ஒரு கணம் மட்டுமே அது எட்டிப்பார்க்கும் ஆழ் மனதில். அதற்கும் அடுத்த தடவை சலனம் கூட இராது. இதுதான்...இதுதான் இவர்களின் தைரியம். இந்தக் கேடு கெட்டவர்களின் மனது கூறும் அறிவுரை. இதை அகற்றினால் மட்டுமே குற்றம் செய்ய யோசிப்பவர்கள் திருந்துவார்கள்.

    இந்தக் கட்டுரையைப் படிக்க படிக்க கண்ணீர் அல்ல, செந்நீரே வருகிறது. மிக மிகக்கடினமாய் இருக்கிறது. எப்படி எப்படி இப்படி எப்படி வாழ முடியும்? என்ன சொல்லி வாழ்வாள் என்று. உண்மையிலேயே இறப்பு அவளுக்கு நிம்மதியை தந்திருக்கும் என்றே கருதுகிறேன். இத்தகைய பேடிகளை திருத்தவும், அடக்கவும் வழி தெரியாமல், அரசை பழி சுமத்திவிடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக சிங்கப்பூர் அனுப்புதல், அதிகாலையில் விமான நிலையத்தில் உடலை வாங்குதல், அதிக நிதி உதவியை பிரகடனப்படுத்துதல் என எல்லா வழிகளிலும் தன் கையாலாகாத்தனத்தை வெளிக்காட்டும் அரசு ஆட்சி இருக்கும் நாட்டில் வாழ்வதற்கு பதில் சாவதே மேல். ப்ச்... தமிழில் படிக்கும்போது உணர்வுகளை ஒருங்கே அமைக்க முடியவில்லை... உணர்ச்சிமயமாய் ஆகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையாலாகாத தனம் தான் அன்னு....

      லட்சங்களும் அரசு வேலையும் கொடுத்துவிட்டால் இத்துடன் முடிந்துவிட்டதாக ஆக்கிவிட்டு அடுத்த வேலையை பார்க்கச்செல்வார்கள்... இதோ பிரச்சனையை முடித்தும் விட்டார்கள்... சட்டம் குற்றம் குறைக்கும் என நாம் நம்பிக்கொண்டே இருக்க வேண்டியது தான்...

      அந்த பெண் நிலை குறித்து விசயங்கள் படிக்க படிக்க வேதனை தான் மிஞ்சியது... அதை விட மன்னிப்பே ஆயுதம் என கூறுபவர்களை பார்த்த போது கோபமே மேலிட்டது..

      தன்னை கற்பழித்தவர்களில் வயது குறைந்த ஒருவனுக்கு, வயதை காரணம் காட்டி விடுதலை செய்துவிடுவார்களோ என வருத்தம் கொள்ளும் அளவுக்கு அவர் மனநிலை அன்று இருந்தால்.... வலி அனுபவித்தவர்களுக்கு தான் அந்த கொடூரம் தெரியும்... பாவம் கையாலாகாத சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்து தான் கண்மூடினாரோ என்னவோ.... :( :( :(

      நீக்கு
  2. அன்னை ஆமினா ! சலாம்...

    பகுத்தறிவு ,மனிதாபிமானம் என்கிற பெயரில் ஏசி அறையில் புஸ் பேக் சேரில் அமர்ந்து கொண்டு நாட்டமை பேசுவர்,அவர்களின் வீட்டு குழந்தைகளுக்கு இவ்வாறு நேரும் வரை..ஒரு வேளை நேர்ந்தால் தூக்கிலிட வேண்டும் ,கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்பர் ..மாறி மாறி பேசும் மனிதர்கள் இருக்கும் வரை சமுதாயத்தில் ஏற்படும் துன்பங்கள் மாறாது...

    எழுத்து நடை அற்புதமாக இருக்கிறது..அது தாங்கி கொண்டிருக்கும் கருத்துக்களும் அருமை..( இது வடை மடிச்சி கொடுக்கும் தாளில் இருந்ததுதானே !! :-)) )

    நன்றி !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வ அலைக்கும் சலாம்

      //பகுத்தறிவு ,மனிதாபிமானம் என்கிற பெயரில் ஏசி அறையில் புஸ் பேக் சேரில் அமர்ந்து கொண்டு நாட்டமை பேசுவர்,அவர்களின் வீட்டு குழந்தைகளுக்கு இவ்வாறு நேரும் வரை..ஒரு வேளை நேர்ந்தால் தூக்கிலிட வேண்டும் ,கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்பர் ..மாறி மாறி பேசும் மனிதர்கள் இருக்கும் வரை சமுதாயத்தில் ஏற்படும் துன்பங்கள் மாறாது...//

      உண்மை தான்... யாரும் ஒன்றை யோசிப்பதே இல்லை... கெடுத்தவனை மன்னித்து விடுவது பெரிய தண்டனை தான்... ஆனால் உருவாகிக்கொண்டிருக்கும் வெறிநாய்களுக்கு இந்த சந்தர்ப்பம் அல்வா தான்....

      வருகைக்கு நன்றி சகோ


      //இது வடை மடிச்சி கொடுக்கும் தாளில் இருந்ததுதானே !! :-)
      :-)

      நீக்கு
  3. அருமை! பதிவின் கருத்துக்களும் அதை சொல்லிய விதமும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. இந்தப் பதிவை, கிட்டத்தட்ட 40 வருடங்களாக உயிரிருந்தும் பிணமாக வாழும் ‘அருணா ஷான்பாக்’கின் குரலாக நான் காண்கிறேன் ஆமினா. அந்த வழக்கிலும், கொடூரமாகத் தாக்கப்பட்ட அருணா இப்படி இருக்க, அந்தப் பாதகனோ குடும்பம் குழந்தை என்று எங்கோ, இதன் தாக்கம் கிஞ்சித்தும் இல்லாமல், மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்!!

    இதை நினைக்கும்போது, நல்ல வேளை (இப்படி நினைப்பது வெட்கமாக இருந்தாலும்) ஜோதி (டெல்லி மாணவி) இறந்துவிட்டாள் என்றே நினக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தப் பதிவை, கிட்டத்தட்ட 40 வருடங்களாக உயிரிருந்தும் பிணமாக வாழும் ‘அருணா ஷான்பாக்’கின் குரலாக நான் காண்கிறேன் ஆமினா. அந்த வழக்கிலும், கொடூரமாகத் தாக்கப்பட்ட அருணா இப்படி இருக்க, அந்தப் பாதகனோ குடும்பம் குழந்தை என்று எங்கோ, இதன் தாக்கம் கிஞ்சித்தும் இல்லாமல், மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்!! ////

      ச்ச்ச... கேவலமான விஷயம் இது! இதனாலேயே கற்பழிப்பு என்பது பெரிய குற்றம் இல்லை என்பது போல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது!!

      சுவனப்பிரியன் பதிவில் ஆசிட்டால் வீசப்பட்ட ஒரு பெண்ணை பற்றி வாசிக்கும் போது, அந்த பெண் பேச்சை பார்க்கும் போது வேதனையே மிஞ்சியது...

      //இதை நினைக்கும்போது, நல்ல வேளை (இப்படி நினைப்பது வெட்கமாக இருந்தாலும்) ஜோதி (டெல்லி மாணவி) இறந்துவிட்டாள் என்றே நினக்கத் தோன்றுகிறது.//
      ம்ம் :(

      நீக்கு
  5. தூக்குல போட்றதெல்லாம் சரி வராது... நடு ரோட்டில் நிறுத்தி கல்லால அடிச்சு கொல்லுங்க... எல்லாம் சரி ஆகும்...

    என்ன?? கல் எறிஞ்சு கொல்றது காட்டு மிராண்டித்தனமா??? அப்ப கற்பழிக்கிறதுக்கு பேரு என்ன????

    காட்டுமிராண்டிகளுக்கு அவர்கள் பாணில தான் தண்டனை கொடுக்கணும்... ஒருத்தன அடிச்சு டிவில லைவ் பண்ணுங்க... அடுத்து இந்தியா புல்லா ஒரு கற்பழிப்பு கூட நடக்காது இருப்பானுங்க...

    அதையும் மீறி பண்றானா?? மறுபடியும் கல்லால் அடி.. அடிக்க அடிக்க அம்மியும் நகரும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //என்ன?? கல் எறிஞ்சு கொல்றது காட்டு மிராண்டித்தனமா??? அப்ப கற்பழிக்கிறதுக்கு பேரு என்ன???? //

      கொலைக்கு கொலை தீர்வாகாது. உயிரைக்கொல்லும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது? வாழ்நாள் சிறையே அவர்களுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை...

      இப்படிக்கு
      உலகின் நம்பர் ஒன் மனிதாபிமானி என காட்டிக்கொள்வோர் :-) :-) :-) :-)

      நீக்கு
  6. salam,
    சகோ.அந்தப் பெண் அந்நிய ஆணுடன் நடுராத்திரியில் ஊர் சுற்றியதை எந்த மீடியாக்களும் கண்டுக் கொள்ளாமல்,அந்த பெண்ணை முன்னிலை படுத்தி வியாபராமகுகிறது.

    தவறை ஆண்கள் செய்தாலும் தவறு தான் அதில் ஆண் பெண் என்ற பாகுபாடில்லை,ஆனாலும் தவறு அந்த பெண்ணிடமும் உள்ளது என்பதால் இனி அந்த பெண்ணை ஓட்டு மொத்த இந்தியாவின் பெண்ணின அடையாளமாக காட்ட நாம் முன் வரக் கூடாது சகோதரா.ஆகவே அந்த பெண்ணை மையப்படுத்தி இனி தங்களை போன்றவர்கள் பதிவெழுத வேண்டாம் என்பது என் கருத்து.

    நீங்கள் நல்ல கருத்துகளை தான் சொல்ல முனைந்துள்ளீர்கள் ஆனாலும் இதுபோன்றவர்களை உதாரணம் காட்டி வெளியிடும் கட்டுரைகளை தவிர்க்கலாமே

    சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண்டும்,தனி மனித ஒழுக்கமும் வேண்டும் இதுவே இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமையும்...

    ***என் கருத்து நிச்சயம் உங்களை குறை காண்பதற்காக இல்லை

    என் தளத்தில் இன்று:முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?
    tvpmuslim.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வ அலைக்கும் அஸ்ஸலாம்...

      நடு இரவில் ஒரு பெண் போவதற்க்கு பயம் இருக்கக் கூடாது.. இருந்தால் அந்த அரசு சரி இல்லை என்று அர்த்தம்.... அந்த பெண் பாய் பிரண்ட்டுடன் நடு இரவில் போனது தவறாகவே இருந்தாலும் கற்பழிக்கும் உரிமை எவருக்கும் இல்லை...

      // சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண்டும்,தனி மனித ஒழுக்கமும் வேண்டும் இதுவே இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமையும்... //

      இந்த கருத்து மிகவும் சரியானது... குற்றங்கலை தடுக்க இவை இரண்டுமே அவசியம்... எல்லாத்துக்கும் வரும் முன் காப்போம்னு சொல்றாங்க... கலாச்சாரத்தில் மட்டும் கோட்டை விட்டுட்றாங்க...

      இதுல மனிதனுக்கு ஏற்ற கலாச்சாரத்தை சொல்லும் இஸ்லாத்தை கிண்டல் வேறு செய்து கொள்வார்கள் இந்த விளக்கெண்ணய்கள்...

      நீக்கு
    2. வ அலைக்கும் சலாம் வரஹ்...

      சகோ. அந்த பெண் அவள் கலாச்சார,சூழல்ப்படி நடந்துக்கொண்டவிதம் அவளுக்கோ மற்றவர்களுக்கோ பெரிய தவறாக தெரியாது. இன்று சிட்டிகளில் இதான் நிலை... சகஜமாகிவிட்டது! அந்த ஆண் அவள் நெருங்கிய உறவினராகவும் இருக்கலாம், அந்த பெண் வீட்டில் அனுமதி பெற்று வெளியே சென்று வந்திருக்கலாம்... ஆக ஊர் சுற்றினாள் போன்ற குற்றச்சாட்டுக்கள் வேண்டாம்..
      என்ன நடந்தது என்பது நமக்கு பாதியளவே தெரியும்.. அதை வைத்து முழு விஷயம்மாக பேசுவது அவதூறுக்கு சமம் சகோ...

      //ஆகவே அந்த பெண்ணை மையப்படுத்தி இனி தங்களை போன்றவர்கள் பதிவெழுத வேண்டாம் என்பது என் கருத்து. //
      வேதனையாக இருக்கிறது இந்த வார்த்தை கேட்க... யாரும் அந்த பெண்ணை வீரமங்கை, முன்மாதிரி என பாராட்டவில்லை... அவர் மீதும் குற்றம் இருக்கு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை... ஆனால் ஆண் நண்பருடன் வெளியே சென்றதை மட்டும் வைத்து அவள் மீது ஒட்டுமொத்த தவறு இருப்பது போல் இந்த கருத்து தொனிக்கிறது !!! அவள் இரவில் வந்ததை தவிர்த்திருக்கலாம் என்றதை தவிர வேறு என்ன அந்த பெண் மீது குற்றம் இருக்கு?

      வெளியே இரவில் சென்றதை தவிர என்ன தவறு செய்துவிட்டார் அவர்? அன்று அவள் தன் சகோதரனுடன் சென்றிருந்தாலும் இந்த நிலை உருவாகியிருக்காது என நம்மால் வாக்குறுதி கொடுக்க முடியுமா???

      9 மணி என்பது சாதாரணமாக அனைவரும் வெளியிடங்களில் இருக்கும் நேரமே... தியேட்டருக்கே அல்லாமல் வேறு அவசர முக்கிய காரியத்திற்கு சென்றிருந்தால் என்ன செய்திருக்க முடியும்.... ஏன் பகலில் எந்த கொலை, கொள்ளை,கற்பழிப்பு நடக்கவில்லையா என்ன?

      எல்லா பக்கமும் பார்வை செலுத்தி நடுநிலையோடு பேசுங்க சகோ....

      //ஆனாலும் இதுபோன்றவர்களை உதாரணம் காட்டி வெளியிடும் கட்டுரைகளை தவிர்க்கலாமே //

      ஒருபக்கமாய் மட்டும் பார்த்து பெண் மீது முழு தவறு இருப்பது போல் கருத்திடுவதை தவிருங்க சகோ...

      //சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண்டும்,தனி மனித ஒழுக்கமும் வேண்டும் இதுவே இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமையும்...//
      நிச்சயமாக மாற்றுக்கருத்தே இல்லை!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      நீக்கு
    3. சலாம்,

      என் கருத்தை நீங்கள் தவறாக விளங்கியதாகவே உணர்கிறேன்.

      //வெளியே இரவில் சென்றதை தவிர என்ன தவறு செய்துவிட்டார் அவர்? அன்று அவள் தன் சகோதரனுடன் சென்றிருந்தாலும் இந்த நிலை உருவாகியிருக்காது என நம்மால் வாக்குறுதி கொடுக்க முடியுமா??? //

      ஏதோ உலகம் உண்டானதிலிருந்து பெண்ணினத்திற்கு இதுபோன்ற சம்பவம் அன்று தான் நடந்தது போல உள்ளது நீங்கள் சொல்வது.அதே டெல்லியில் பகலிலும் இரவிலும் இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடந்துள்ளதை நிச்சயம் அந்தப் பெண் அறிந்திருப்பார்.

      இந்தியா டுடே,புதிய தலைமுறை போன்ற புத்தகங்கள் தெள்ளத் தெளிவாக பதிந்துள்ளது இந்தியா பெண்கள் வாழ தகுதியற்ற நாடு என்று..ஏனென்றால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் சர்வசாதாரணமாக பெருகிவிட்டது.இதுபோன்ற நிலையில் ஒரு முஸ்லிமாக இருக்ககூடிய நான்,உலகில் ஒரு வன்செயல் நடந்தால் அதற்க்கு இஸ்லாம் என்ன தீர்வை வைத்துள்ளது என்று தான் பார்ப்பேன்.அதன் அடிப்படையில் தான் அந்த பெண் செய்தது தவறு அந்த ஆண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அதுவும் தவறு என்று சொல்கிறேன்.

      என் அடிப்படையே அந்தப் பெண் அந்நிய ஆண்களுக்கு முன் தன்னை மறைகாததையே குற்றம் என்கிறேன்.

      இந்தியாவில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிந்தப் பின் இது போன்ற அனாவசிய சுற்றல்களை அந்தப் பெண் நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்.

      //ஒருபக்கமாய் மட்டும் பார்த்து பெண் மீது முழு தவறு இருப்பது போல் கருத்திடுவதை தவிருங்க சகோ...//

      சமீபத்திய ஒரு தகவல் அந்தப் பெண்ணை யாரும் கற்பழிக்கவில்லை,அந்நிய ஆணுடன் அந்தப் பெண் பலர் முன்னிலையில் மோசமான செயல்களில் ஈடுபட்டதால் அங்கிருந்தோர் அதை சகிக்காது வெறிகொண்டு தாக்கினார்களாம்.அதையும் கொஞ்சம் பாருங்க சகோ.

      http://www.tntj.net/123725.html(வீடியோவை டவுன்லோட் செய்து பார்க்கவும்)

      இரண்டில் எது உண்மை பொய் என்று தெரியாமல் இதை பற்றி நாம் பேசக் கூடாது.இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடும் முன் இன்னொரு பக்க செய்திகளையும் அறிந்து வெளியிடலாம் என்பது என் கருத்து.

      நீக்கு
    4. //ஏதோ உலகம் உண்டானதிலிருந்து பெண்ணினத்திற்கு இதுபோன்ற சம்பவம் அன்று தான் நடந்தது போல உள்ளது நீங்கள் சொல்வது.//

      :-)
      சகோ... அதே டெல்லியில் பகலிலும் இரவிலும் இது போல் செயல்கள் நடைபெறுகிறது என்பதற்காக யாரும் வெளியே சொல்லாமல் இருக்கிறார்களா? அந்த பெண் மருத்துவ உதவி புரியவதற்காக சென்றிருந்து இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்திருந்தால் அப்ப நம் மனநிலை என்னவாக இருக்கும்?
      நான் அந்த பெண்ணின் செயலை நியாயப்படுத்தவில்லை... ஆனாலும் அவர் மீது மட்டுமே தான் குற்றம் இருக்கு என சொல்லப்படுவதை மறுக்கிறேன்.. அவரின் அறியாமைக் காரணமாக அவர் செய்த தவறுக்காக அவரை ஒதுக்குவதை மனிதாபிமானமற்ற செயலாக நினைக்கிறேன்!!!



      //இதுபோன்ற நிலையில் ஒரு முஸ்லிமாக இருக்ககூடிய நான்,உலகில் ஒரு வன்செயல் நடந்தால் அதற்க்கு இஸ்லாம் என்ன தீர்வை வைத்துள்ளது என்று தான் பார்ப்பேன்.//

      அதே இஸ்லாம் கூறும் தீர்வாகத்தான் இஸ்லாமியப் பெண்மணியிலும் , டீக்கடையில் என் முந்தைய பதிவிலும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என சொல்லிவிட்டோம் சகோ... ஒரே விஷயத்தை எத்தனைமுறை தான் சொல்வது? இங்கே இந்த பெண்ணை மட்டும் குறை கூறுவதால் என்ன பயன்? வீட்டில் இருந்தாலும் கற்பழிக்கப்படுகிறார்களே... என்ன செய்ய நாம்???

      //என் அடிப்படையே அந்தப் பெண் அந்நிய ஆண்களுக்கு முன் தன்னை மறைகாததையே குற்றம் என்கிறேன்.//
      இதுமட்டுமே பிரச்சனைக்கு அடிப்படை இல்லை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் நாம்!

      //இந்தியாவில் தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிந்தப் பின் இது போன்ற அனாவசிய சுற்றல்களை அந்தப் பெண் நிச்சயம் தவிர்த்திருக்க வேண்டும்.//
      இந்த பெண் தவிர்த்திருக்கலாம்... அந்த சம்பவம் அன்னைக்கு நடக்காமல் இருந்திருக்கலாம். நீங்க இந்த பெண்ணை மட்டுமே பாக்குறீங்க... நான் ஒட்டுமொத்தமா வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் அன்றைய வலியின் வேதனைகளை கூறுவதன் மூலம் பெண்களூக்கு எச்சரிக்கையும், எதிர்கால நிலையை கூறி கயவர்களின் நிலையை ஒப்பீடு செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும் பதிவில் கருவாக வைத்திருக்கிறேன்... மீண்டும் ஒருமுறை வாசிங்க... வெளியே போனதால் மட்டும் அந்த பெண்ணுக்கு நிகழ்ந்ததெல்லாம் கொடுமை இல்லை என சொல்லமுடியாது!

      //இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடும் முன் இன்னொரு பக்க செய்திகளையும் அறிந்து வெளியிடலாம் என்பது என் கருத்து. //
      இதுப்போன்று என்றால் என்ன? உங்கள் பார்வையில் இந்த கட்டுரை என்ன மாதிரியான கட்டுரை என்பதை சொல்லமுடியுமா? அது தெரிந்தால் அடுத்தடுத்த கெமென்ட்களுக்கு வேலையே இல்லை...

      நீக்கு
    5. விடியோ இன்னும் பாக்கல... பார்த்துவிட்டு சொல்கிறேன்...

      நீக்கு
    6. சில விஷயங்கள் மனதிற்கு தேவைபடுகிறது..... குட்டை பாவாடை அணிந்து கல்வி வளாகம் செல்வதற்கு மாணவிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பி ஜே பி ஐ சார்ந்த ஒருவர் சொல்லி இருக்கிறார்....ஆனால் குட்டை பாவாடை அணிந்து செல்லும் மாணவிகள் இந்த கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று சொல்லி அவருக்கு குட்டை பாவாடை ஒன்றை பரிசாக அனுப்பி உள்ளனர்.....நடக்காமல் இருக்க துவா செய்வோம் ஆனால் நாளை ஒருநாள் இந்த குட்டை பாவாடை அணிந்து செல்லும் மாணவிக்கு இதே போல ஒரு சம்பவம் நடந்தால் என்ன முடிவெடுக்க வேண்டும் சகோ.....

      நீக்கு
    7. பிஜே பேச்சை முழுதாய் பார்த்தாகிற்று சகோ...

      //சமீபத்திய ஒரு தகவல் அந்தப் பெண்ணை யாரும் கற்பழிக்கவில்லை,அந்நிய ஆணுடன் அந்தப் பெண் பலர் முன்னிலையில் மோசமான செயல்களில் ஈடுபட்டதால் அங்கிருந்தோர் அதை சகிக்காது வெறிகொண்டு தாக்கினார்களாம்.அதையும் கொஞ்சம் பாருங்க சகோ.//


      இந்த அவதூறுக்கு முதலில் ஆதாரம் வைங்க சகோ... பிஜே எப்ப நியூஸ் சேனல் ஓபன் பண்ணாரு? ஒரு செய்தி உங்களுக்கு வரும்போது அதை அப்படியே அடுத்தவருக்கு கூறுவீர்களா? எங்கிருந்து அவர் எடுத்தார் என அவரிடம் கேக்க முடியவில்லை என்றாலும் நெட்டில் தேடி பார்த்தாவது தரலாமே?

      வசதியான ஒரு புள்ளைய படிக்க வச்சிருக்காங்க டெல்லியிலன்னு அவர் சொன்ன முதல் வரியே அபத்தம்... பாவம் உத்திரப்பிரதேஷத்தில் தன் நிலம் விற்று தான் தன் மகளை படிக்க வைத்ததாக பெற்றோரே சொல்லியிருக்காங்க...

      //The 23-year-old had persuaded her parents to sell their small piece of land in Uttar Pradesh so she could move to Delhi to study medicine. Since then, they said recently, their meals are very often rotis with namak (bread with salt). Their two sons are studying. //

      http://www.ndtv.com/article/india/victim-of-gang-rape-in-india-dies-at-hospital-in-singapore-310939

      2, 3 இடங்களீல் 1 மணி 2 மணிக்கு வெளீயே சினிமா பாத்துட்டு வந்தாங்கன்னு சொல்லியிருக்கார். ஆனால் எல்லா செய்தி நாளேடுகளிலும் 9.30 க்குதான் சம்பவம் நடந்ததாக சொல்லியிருக்காங்க!

      //The couple boarded the bus at around 9.30 pm.//

      http://www.ndtv.com/article/cities/delhi-gang-rape-case-what-happened-that-night-308689

      ஒருவரின் தனிப்பட்ட கருத்தை/ மேடைப்பேச்சை தயவு செய்து ஆதாரமாக கொண்டு வராதீங்க சகோ...

      நீக்கு
    8. @riz

      //ஆனால் குட்டை பாவாடை அணிந்து செல்லும் மாணவிகள் இந்த கருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று சொல்லி அவருக்கு குட்டை பாவாடை ஒன்றை பரிசாக அனுப்பி உள்ளனர்.//

      இப்படிப்பட்ட அறிவாளிகள் பேப்பரில் எழுதி கொடுக்கட்டும் , " எனக்கு இது போல் சம்பவம் நடந்தால், அதற்கு நானே முழுபொறுப்பு. யாரையும் குற்றம் சொல்லமாட்டேன்" என்று!

      உடை ஒழுக்கத்தின் அவசியம் உணர்தலும், தனிமனித ஒழுக்கம் பேணுதலும் கட்டாயம் வேண்டும்.. அவரவர் செயலுக்கு அவரவரே பலனை அனுபவிக்கிறார்கள்!!!

      நீக்கு
    9. சலாம்,
      //இந்த அவதூறுக்கு முதலில் ஆதாரம் வைங்க சகோ... பிஜே எப்ப நியூஸ் சேனல் ஓபன் பண்ணாரு? ஒரு செய்தி உங்களுக்கு வரும்போது அதை அப்படியே அடுத்தவருக்கு கூறுவீர்களா? எங்கிருந்து அவர் எடுத்தார் என அவரிடம் கேக்க முடியவில்லை என்றாலும் நெட்டில் தேடி பார்த்தாவது தரலாமே?//

      //ஒருவரின் தனிப்பட்ட கருத்தை/ மேடைப்பேச்சை தயவு செய்து ஆதாரமாக கொண்டு வராதீங்க சகோ..//

      நான் அந்த கருத்தை ஆதாரமாக வைக்கவில்லை இப்படியும் ஒரு தகவல் உள்ளது என்று தான் சொல்லியுள்ளேன்.ஆதாரமாக வைத்திருந்தால் அப்படி தான் நடந்தது என்று பதிந்திருப்பேன்.

      //உடை ஒழுக்கத்தின் அவசியம் உணர்தலும், தனிமனித ஒழுக்கம் பேணுதலும் கட்டாயம் வேண்டும்.. அவரவர் செயலுக்கு அவரவரே பலனை அனுபவிக்கிறார்கள்!!!//

      இவ்வளவு நேரம் நான் கேட்ட கேள்விக்கு அர்த்தமே இந்த பதிலை எதிர்பாத்து தான்.மிக்க நன்றி .........

      அவர்களே அனுபவிக்கும் பலனுக்கு நாம் ஏன் அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.

      9.30 மணியோ அல்லது எத்தன மணியோ இந்த நேரத்துல போனா நம் கற்புக்கு ஆபத்து என்று அந்த கிராமத்து பெண்ணுக்கு தெரியாதா?பொதுவாக சிட்டியில் வசிபவர்களை விட கிராமத்திலிருந்து சிட்டிக்கு வருபவர்களுக்கு சிட்டியில் சுத்துவதற்கே பயம் அதிகமாக இயல்பிலே இருக்கும் அதுவும் பெண்களுக்கு இன்னும் அதிகம் அதுவும் ஒரு ஆணுடன் என்றால் ரொம்ப ரொம்ப ....இது நம் கூடு உண்மை.....

      இப்படி தன்னையும்,தான் கர்பைபற்றியும் கவலையற்ற ஒரு பெண்ணுக்கு ஒரு பெண் நீங்கள் ஆதரிக்கலாமா?

      நானும் எத்தனை தடவை சொல்வது இது ஒரு தலை பட்ச பேச்சு இல்லை நான் அந்த பெண் செய்தது மட்டும் தான் தவறு என்று வாதிடவில்லை,அவ்வாறு நான் செய்தல் அது முற்றிலும் தவறு.தவறு பெண்ணிடத்திலும் இருக்கும் பொழுது இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் தொடரும்...

      அந்தப் பெண் அந்நிய ஆணுடன் சென்றதும்,முறையாக ஹிஜாபை பேனாததையும் நான் தவறு என்கிறேன் ஆனால் நீங்களோ ////வெளியே இரவில் சென்றதை தவிர என்ன தவறு செய்துவிட்டார் அவர்?//// என்கிறீர்கள் என் அடிப்படை இப்படி சென்றாதே தவறு என்கிறது.இதற்கு பிறகு தான் அடுத்துள்ள சம்பவங்கள் அனைத்தும்..முன்னுள்ளதை தடுத்தால் தான் பின்னுள்ளது நிற்கும்.அதை நீங்கள் ஏற்கவும் செய்கிறீர்கள் அதே சமயம் அந்த பேணுதலை பேணாத பெண்ணுக்கு ஆதரவாகவும் பேசுகிறீர்கள்.என்ன ஒரு விந்தை சகோ..அல்லாஹு அக்பர் .....

      இதுபோன்ற செயல்களை செய்பவர்கள் எழுதி கொடுக்க வேண்டும் என்று தான் இல்லை செயல்கள் நடக்கும் பொழுது தானாக தெரியும்.

      இது எப்படி இருக்கிறது என்றால் எழுதி கொடுத்தவர்களுக்கு ஏதாவது நடந்தால் நான் எதுவும் சொல்லமாட்டேன்.எழுதி தரவரை இது போன்று கேட்பேன் என்று நீங்கள் சொல்லாமல் சொல்வது போல உள்ளது

      ****வாசகர்கள் கவனத்திற்கு:
      நிச்சயம் இது இரு இஸ்லாமியர்களுக்கு இடையேயான சிறு கருத்து பரிமாற்றமே தவிர கருத்து யுத்தம் இல்லை

      நீக்கு
    10. சகோ..

      // அந்தப் பெண் அந்நிய ஆணுடன் சென்றதும்,முறையாக ஹிஜாபை பேனாததையும் நான் தவறு என்கிறேன் ஆனால் நீங்களோ ////வெளியே இரவில் சென்றதை தவிர என்ன தவறு செய்துவிட்டார் அவர்?//// என்கிறீர்கள் என் அடிப்படை இப்படி சென்றாதே தவறு என்கிறது.இதற்கு பிறகு தான் அடுத்துள்ள சம்பவங்கள் அனைத்தும்..முன்னுள்ளதை தடுத்தால் தான் பின்னுள்ளது நிற்கும்.அதை நீங்கள் ஏற்கவும் செய்கிறீர்கள் அதே சமயம் அந்த பேணுதலை பேணாத பெண்ணுக்கு ஆதரவாகவும் பேசுகிறீர்கள்.என்ன ஒரு விந்தை சகோ..அல்லாஹு அக்பர் ..... //

      சரி விடுங்க... இதையே வேற மாதிரி கேட்கிறேன்.... இந்த கற்பழிப்புக்கு இஸ்லாமிய சட்டப்படி எப்படி தீர்ப்பு சொல்வீங்க??? சொல்லுங்க?? அந்த பொண்ணு இரவு வெளியில் வந்தது தப்பு, சோ குற்றாவாளிகளுக்கு தண்டனை இல்லைனு அறிவிப்பீங்களா????

      நீக்கு
    11. அன்புள்ள சகோ சிராஜ் அவர்களுக்கு,

      // இந்த கற்பழிப்புக்கு இஸ்லாமிய சட்டப்படி எப்படி தீர்ப்பு சொல்வீங்க??? சொல்லுங்க?? அந்த பொண்ணு இரவு வெளியில் வந்தது தப்பு, சோ குற்றாவாளிகளுக்கு தண்டனை இல்லைனு அறிவிப்பீங்களா????//

      இதற்க்கு இஸ்லாமிய குற்றவியல் தண்டனை சட்டம் என்ன சொல்கிறதென்றால்.நிச்சயம் குற்றம் செய்த ஆணுக்கு கடுமையான தண்டனை உண்டு.அதே சமயம் குற்றம் செய்ய தூண்டியமைக்காக அப்பெண்ணுக்கும் தண்டனை உண்டு....

      நீக்கு
  7. அந்த அரேபிய அல்லா செயலற்றவன் என்பது மீண்டும் டெல்லியில் நிரூபணமாகியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்ளோ சோகமான நிகழ்வில் கூட உங்கள் கருத்தை நிறுவும் முயற்சியில் குறியாக இருக்கிறீர்களே.......... நீங்கள் செயலற்று அல்ல உணர்வற்றவர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

      மனிதர்களுடைய அநீதியின் காரண மாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.திருக்குர்ஆன்-16:61

      உங்கள் கெடு வருவதற்குள் விழித்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
    2. உங்களை இன்னும் விட்டுவைத்ததற்கு காரணம் இருப்பது போல் அதற்கும் காரணம் இருக்கலாம் ராவணன்... :-)

      நீக்கு
    3. ஹி..ஹி..ஹி என்னாச்சு ராவணன்...????

      ஏதோ ஒரு சாமி பேரு நீன்க சொல்வீங்களே?? அவுக எங்க போனாக???

      நீக்கு
  8. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக

    சிலருக்கு வாழ்க்கை தண்டனை...மரணம் விடுதலை....



    இந்தியாவில் கடுமையான சட்டம் வரும் என்று நாம் காத்து கிடப்பது வீண். நம் பொக்கிஷங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.வேறு வழி இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவ பிராத்திக்கிறேன் தம்பி

      //இந்தியாவில் கடுமையான சட்டம் வரும் என்று நாம் காத்து கிடப்பது வீண். நம் பொக்கிஷங்களை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.வேறு வழி இல்லை. :(//

      முழுதாக உடன்படுகிறேன்...
      சத்தியமா இந்தியாவுல போடுற சட்டத்தை நம்ப முடியவில்லை... சரியான சட்டம் அமையும் வரை நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்... அதற்கான அறிவுரைகளை சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். சமூகத்தில் நடக்கும் இது போன்ற செயல்களை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து விவாதித்து சமூகத்தின் இன்றைய அவல நிலையை, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை தம் குழந்தைகளுக்கு புரியவை வைக்க முயற்சிக்க வேண்டும்...

      இப்போதைக்கு இது மட்டுமே வழி :(

      நீக்கு
    2. வரும் முன் காப்பதே சிறந்தது....

      நாம் முன்னெச்செரிக்கையாக இருந்தால் 50 % குற்றங்களை மட்டுப்படுத்தி விடலாம்... மீதி 50% சட்டத்தின் மூலம்...

      இரண்டும் சேர்ந்தது தான் உண்மையான பாதுகாப்பு... இஸ்லாமும் அதைத்தான் சொல்கிறது... சூழ்சிலையை ஏற்பத்தாதீர்கள்... அதையும் மீறி தவறு செய்தால் கல்லால் அடிச்சு கொன்னுடுங்க... இரக்க்கம் வேண்டியது இல்லை...

      இரக்க பட்டால்... அந்த நிகழ்வுகள் தொடரும்.... இதான் எதார்த்தம்.. இதான் மனிதப் பண்பு என்று இறைவன் கூறுகிறான்..

      இறைவனின் வாக்கு பொய்பிக்குமா??? மனிதர்கள் 1000 சட்டங்கள் பேசினாலும் இறுதியில் இறைவனின் சட்டமே சரி என்று உணர்வார்கள்..

      இந்த பிரச்சனையிலும் அதான் நடந்து உள்ளது.... எல்லாரும் உடை பற்றியும் இரவில் வெளியில் செல்வது பற்றியும் பேசி உள்ளார்கள்... இது ஒரு நல்ல மாற்றம்...

      நீக்கு
  9. ம்ம் :(
    நல்ல பதிவு.
    கற்பழிப்புகளுக்கு மரணதண்டனை தருவதில் தவறில்லை. அதேநேரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு இதனால் எந்த லாபமும் அல்ல. கற்பழிப்புகளை ஒரு விபத்தாக சமுதாயம் பார்த்தால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு மன சுமை குறையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதேநேரத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு இதனால் எந்த லாபமும் அல்ல. //

      ஆம்... நிச்சயமாக இல்லை... ஆனால் நம் நாட்டிலிருக்கும் ஆயிரமாயிரம் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யலாம்...

      வெளியே வேலைக்கு நாம் செல்லும் போதும் , ஆணுக்கு நிகராய் நம் பங்களிப்பு இருக்க வேண்டும் என நினைக்கும் போதும் நாம் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவோமே என்ற அச்சம் நீங்கும்...

      //கற்பழிப்புகளை ஒரு விபத்தாக சமுதாயம் பார்த்தால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு மன சுமை குறையும். //
      சரியாச் சொன்னீங்க..
      அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க , ஏற்படுத்திக்கொடுக்க நல்லமனம் படைத்தவர்கள் முன்வர வேண்டும்...

      நன்றி சகோ

      நீக்கு
  10. மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சகோ, உணர்வு திண்ணும் விலங்களை கட்டுப்படுத்த முடியாது. இந்தப் பூவை கருக்கி விட்டார்கள். இனி பூக்கவிருக்கும் மொட்டுக்களை ஏனும் காப்பதற்கு ஒன்றினைய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. // இனி பூக்கவிருக்கும் மொட்டுக்களை ஏனும் காப்பதற்கு ஒன்றினைய வேண்டும். //
      கடுமையான சட்டத்தை எதிர்நோக்கி...


      வருகைக்கு நன்றி கலைவிழி

      நீக்கு
  11. அஸ்ஸலாம் அலைக்கும் சகோ....
    முன்பு இந்த கடைக்கு ஒருவர்தான் ஓனர் ...இப்ப பார்ட்னர் வேறயா..!!
    பார்ட்னர் ரொம்ப சூடா டீ போடுறாங்க ..நல்லாத்தான் இருக்கு ஆனா
    இந்தநேரத்துல திருவாளப்புத்தூர் முஸ்லீம் அவர்களின் கருத்தை புறம் தள்ளமுடியவில்லை ....அவர் கருத்தை வழிமொழிகிறேன் ...
    நீங்க வேணா பாருங்க அந்த கொடியவர்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்காது .......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்...

      //முன்பு இந்த கடைக்கு ஒருவர்தான் ஓனர் ...இப்ப பார்ட்னர் வேறயா..!!//
      ச்ச..ச்ச...
      ஆரம்பத்துல இருந்தே இது பொது தளம் தான்! ஏதோ ஒன்னோ ரெண்டோ தான் அவர் சொந்தமா யோசிச்சு போட்டது... அதுவும் மொக்கை போஸ்ட் தான்... :-) ரொம்ப நாளா ஈ ஆடுதேன்னு பெர்மிஷன் கேட்டு தூசு தட்டியிருக்கேன் :-)


      //திருவாளப்புத்தூர் முஸ்லீம் அவர்களின் கருத்தை புறம் தள்ளமுடியவில்லை//
      என்னாலும் அவர் கருத்தை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை! :-)

      //நீங்க வேணா பாருங்க அந்த கொடியவர்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்காது //
      நிச்சயம் கெடைக்காது :-)


      நீக்கு
  12. //சட்டங்களும் கடுமையாக்கப்பட வேண்டும்,தனி மனித ஒழுக்கமும் வேண்டும் இதுவே இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமையும்...//

    திருவாளப்புத்தூர் முஸ்லீம் அவர்களின் இந்த கருத்தில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால் இஸ்லாமிய சூழல் அல்லாத நிலையில் இருந்த அந்த பெண்ணிற்க்கு அதில் இருக்கும் ஆபத்துக்கள் தெரியவில்லை... அதனால் தான் இரவு நேரத்தில் நம்பிக்கையுடன் சென்றிருக்கார்.. பாவம் அவருக்கு இந்த உலகில் நம்பிக்கைக்கு வேலை என்பது தெரியாமல் போய்விட்டது...

    அவரை குற்றம் சுமத்த வேண்டியது இல்லை.. ஆனால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடம்...

    பதிலளிநீக்கு
  13. சரியான புரிதல் ஆமினா. பெண்ணின் உணர்வுகள் இன்னொரு பெண்ணினால் மட்டுமே சரியாகப் புரிந்து கொள்ளப்பட முடியும் என்பது இந்தப் பதிவில் தெரிகிறது. அவள் பட்ட வேதனை ஈடு செய்யப்பட முடியாதது. :(((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ. இன்று மீடியாக்களால் அதிகமாக பேசப்படுவதால் இந்த பெண்ணின் நிலையை பற்றி மட்டுமே அனைவரும் கணக்கில் எடுக்கிறார்கள்... இதுவரை கூறுகெட்ட கடைநிலை பிறவிகளால் வாழ்க்கையை தொலைத்த பலரின் எதிர்கால வாழ்க்கையும் பாவம் கேள்விக்குறியானதே... இவையெல்லாம் நினைத்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது! :(

      நீக்கு
  14. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ் ஆமீ..பெண்ணின் பார்வையில் இருந்து சரியான வார்த்தைகள்..ஒரு பெண்ணாக அதை நினைத்தாலே மனம் எல்லாம் நடுங்குது..எப்பேர்ப்பட்ட வேதனை அந்த பெண்ணிற்கு...எவ்வளவு காட்டுத் தனமான மிருகங்கள் மனித உருவில்..இப்படி கூட செய்வார்களா? எந்தளவு கீழ்த்தரமான மனிசனுங்க..நினைக்க நினைக்க மனம் ஆற வில்லை..

    தினம் ஒன்று வெளி வருது..இதே போல வெளிவராமல் எத்தனையோ...பெண்களுக்கு தான் எத்தனை சோதனைகள்..வெளிவராமல் உறவின் மூலமாகவும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது..

    மானத்திற்கு பயந்து அவ்வளவு எளிதில் யாரும் சொல்வதில்லை என்பது சர்வே முடிவு...என்றைக்கு ஒரு பெண்ணை தன் இச்சையை தீர்க்கும் கருவியாக மட்டுமே பார்க்கும் ஆண்களின் மனோநிலை மாறுதோ அப்போது தான் இந்நிலை மாறும்..ஆனா அது மாறுவதற்கான சூழ்நிலை எங்கையும் காணாம்..அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் தான் அதிகம் ஆயிருக்கு..

    பொது இடத்தில் வைத்து இது போன்ற ஆண்களை துடிக்க துடிக்க வேதனை படுத்தி சாகடிக்க வேணும்..கொஞ்சங் கொஞ்சமா சாகடிக்கணும்...அதை எல்லா பொது இடத்திலும் ஒளிபரப்பணும்..

    அப்போது இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு...ஆனால் இந்த நாட்டில் இருந்து கொண்டு இதை எதிர்பார்ப்பதை போன்ற முட்டாள்தனம் வேற இல்ல..மானத்தில் கூட ஏழை மானத்திற்கு தனி விலை. பணக்கார மானத்திற்கு தனி விலை...

    நாம் நம் வரையில் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..

    போங்கடா..நீங்களும் உங்க காமவெறிகளும் என்று அவன்களை பார்த்து காரித்துப்பி அந்த பெண்ணுக்கு அவர்கள் செய்த அனைத்தயும் அவர்களுக்கு பண்ண வேணும் போல இருக்கு..

    நல்ல பதிவுக்கு நன்றி ஆமீ..



    பதிலளிநீக்கு
  15. அப்பெண் இன்று உயிரோடிருந்தால் நீங்கள் எழுதியதைப்போல வருத்தப்பட்டு பாரஞ்சுமக்க மாட்டார். நேற்று அப்பெண்ணின் நணபரின் பேட்டியில் சொன்னதன்படி, அப்பெண் அந்த நண்பர் சென்று பார்த்த போது புன்னகை வீசினார். பின்னர் அவர்களை எப்படி தண்டனை வாங்கிக்கொடுக்கவேண்டுமென்ற உறுதியில் இருந்தார். அதற்காகவே வாழ ஆசைப்பட்டார்.

    1. வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவர்கள் தம்மை வஞ்சித்தவர்களை பழிவாங்கவேண்டுமென்பது ஒரு வகை.

    2. வஞ்சகர்களைத் திருத்தி வாழவைக்கவேண்டுமென்று சிலமதங்களும் மாந்தரும் சொல்வது இன்னொருவகை.

    3. இக்கதையில் வஞ்சகர்கள் தண்டிப்பது அவர்களோடு முடிந்துவிடாமல் மேலும் இப்படிப்பட்ட வஞ்சகர்கள் உருவாகாவாமல் எப்படித் தடுப்பது; அதற்காக வாணாள் முழுக்க போராட்டம் செய்ய தயாராகவிருப்பது நான் விரும்பும் வகை.

    அதையே அப்பெண்ணின் வாக்குமூலம் சொல்கிறது.

    உங்கள் பதிவு உங்கள் வகையில் போய் அப்பெண்ணின் நினைவுக்கு கல‌ங்கத்தை ஏற்படுத்துகிறது. அஃதாவது அவளை ஒரு அழுவாஞ்சிக்காவியம் பாடவைக்கிறது. She is called a Brave Heart. Pl remember that. If u want to know, I shall post.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் பதிவு உங்கள் வகையில் போய் அப்பெண்ணின் நினைவுக்கு கல‌ங்கத்தை ஏற்படுத்துகிறது. அஃதாவது அவளை ஒரு அழுவாஞ்சிக்காவியம் பாடவைக்கிறது.//

      எங்கே? எப்படி?? எந்த வகையில் அந்த பெண்ணை அழுவாச்சி காவியம் எழுத வைத்திருக்கிறேன்?

      "என் நிலை இதுவே, இதை பார்த்த பின்னும் அவர்களுக்கு மரணதண்டனை வேண்டாம் என சொல்லும் மூடர்களே"ன்னு தைரியமா தன் பக்கம் உள்ள விஷயத்தை சொல்லிட்டிருக்காங்க... நீங்க என்னடான்னா...

      உங்களை தவிர மற்ற அனைவருக்கும் பதிவு எந்த கோணத்தில் சொல்லப்பட்டிருக்குன்னு புரியுது :-)

      நீக்கு
  16. தன் தந்தையையும் உடன்பிறந்தவைக் கண்டுமே அலறுவார் என்று மனங்கூசாமல் எழுதி மனித உறவுகளின் புனிதத்தை அற்பப்படுத்திவிட்டீர்கள். அவர் அப்படி ஆகியிருந்தால் தன் நணபனைப் பார்த்து ஏன் புன்னகைக்கவேண்டும்? விசாரணைக்கு வந்த ஆண் போலீசாரைக்கண்டாவது அலறியிருப்பாரே?

    என்னை மிகவும் மனவருந்தச்செய்த பதிவு இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க உளவியல் படிச்சவராச்சே ??? இந்த சிம்பிள் விஷயம் கூடவா தெரியாது??

      ஒரு பெண்ணுக்கு கொடுமை நிகழ்த்தப்பட்டால் தன் சகோதரணும் இது போன்ற ஆண்வர்க்கம் தானே? தந்தையும் ஆண்வர்க்கம் தானே ... அவர்களும் இப்படிதான் இருப்பார்களா என்று தான் சிந்தனை போகும்...

      //தன் நணபனைப் பார்த்து ஏன் புன்னகைக்கவேண்டும்? விசாரணைக்கு வந்த ஆண் போலீசாரைக்கண்டாவது அலறியிருப்பாரே?//
      நீங்க இன்னைக்கு நெலமையை சொல்றீங்க...நான் இனி அவளின் வருங்காலத்தை சொல்லிட்டிருக்கேன், பாதிக்கப்பட்ட பல பெண்களின் இன்றைய நிலையை சொல்லியிருக்கிறேன்...

      //என்னை மிகவும் மனவருந்தச்செய்த பதிவு இது. //
      என்னை மிகவும் சிந்திக்கச் செய்த கமென்ட் இது ( என்னசொல்ல வருகிறோம் என்பதை கூடவா புரிந்துக்கொள்ள முடியாதவர்கள் இருக்க முடியும்னு :-)

      நீக்கு
  17. பகிர்வுக்காக:

    33 ஆண்டுகளுக்கு முன் கூட்டுப்பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் கட்டுரைகள்:

    http://thamizhvalaipoo.blogspot.com/2013/01/2013.html (2013)
    http://thamizhvalaipoo.blogspot.com/2013/01/1983.html?utm_source=BP_recent (1983)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters