விஸ்வரூபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஸ்வரூபம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 02, 2013

அவன் அழுதால் நாமும் அழ வேண்டாமா??? - என்னத்த சொல்ல...



இது ஒருத்தருக்கு.....
நமக்கு அந்நிய நாடானா ஆப்கானிஸ்தான், தாலிபன் கதைகளை ஆஹா, ஓஹோ என்று புகழும் சிலர்...

நமது நாட்டில் இருக்கும் ஒரு மாநில மக்களின் கதையான "டேவிட்" படத்தை தமிழுக்கு ஒட்டாது, பார்க்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்... என்னத்த சொல்ல???

பார்க்க வேண்டாம் என்று சொல்ல நீங்க யாரு பாஸ்?? ஏன் அடுத்தவனின் கருத்து சுதந்திரத்தில் தலையிட்றீங்க....??? ஹி..ஹி..ஹி.. (இது அவர் சொன்ன டயலாக் தான்).. ஹி..ஹி..ஹி...

கமலுக்கு வழிஞ்சா இரத்தம்??? டேவிட் பட தயாரிப்பாளருக்கு வழிஞ்சா தக்காளி சட்னியா???
 டேவிட் பட தயாரிப்பாளர் மட்டும் நஷ்டம் அடையளாமா பாஸு?????  புரியல
 ஏன் இந்த இரட்டை முகம்???

முகமூடி கிழிஞ்சு தொங்குது பாஸ்... எடுத்து ஒட்டிக்கங்க....
 இது அடுத்தவருக்கு.....
 இன்னொருத்தர், "என்ன படம் கடல்???"  ஹீரோ அழுகையில் நாம் அழுக வேண்டாமா?? அவன் சிரிக்கையில் நாம் சிரிக்க வேண்டாமா??? என்று புலம்பி உள்ளார். இவர்  தான் முன்னொரு நாள் சினிமாவ சினிமாவ பார்க்க சொன்னது.
 சினிமாவில் அவன் அழுதா நீங்க ஏன் அழுகணும்?? லூசா நீங்க??
 இன்னொரு சந்தேகம்... அவன் அழுதா நீங்க அழுவீங்க... திரைல  நடக்கிற பார்த்து நீங்க பீல் பண்ணுவீங்க.. முஸ்லிம தீவிரவாதிய காட்டினா மட்டும் அப்படி எடுத்துக்க மாட்டீங்க??? அப்டிதானே??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். . நம்பிட்டோம்.... ஏன்னா நாங்க அறிவில்லாதவங்க தானே???
"சினிமாவ சினிமாவா பாருங்க பாஸ்..."  - மனசாட்சி இருந்தா இந்த டயலாக்க இனி சொல்ல மாட்டீங்க சாரே....
 இது எனக்கு...
 இந்த பிரட்சனைய வச்சு இவ்ளோ போஸ்ட் போட்றியே?? உனக்கு வேலை வெட்டியே இல்லையா????
 மனசாட்சி இருந்தா இனி நீ போஸ்ட் போட மாட்ட.. ஹா..ஹா..ஹா..


வியாழன், ஜனவரி 31, 2013

இஸ்லாமிய அமைப்புகள் என்ன செய்ய வேண்டும்????



                                                           
                                                               

விஸ்வரூப பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து எங்கு சென்றாலும் இதை பற்றி தான் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கமல் இப்பொழுது தான் சரியான திசைக்கு வந்து இருக்கிறார்.... பேச்சுவார்த்தைக்கு தயார், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குகிறேன் என்று சொல்லி உள்ளார்.  இருப்பதிலே மிகச் சரியான முடிவு இது தான். காலம் தாழ்த்தி எடுத்து இருந்தாலும் சரியான முடிவு. அப்ரிசியேட் கமல்...

இதையே தான் நான் ஒரு வாரம் முன்பே என் பதிவின் கமெண்டுகளில் சொல்லி இருந்தேன். "இவர்கள் அனைவரும் உங்களை தூண்டுகிறார்கள்.. ஆனால் சிறந்த வழி "பெட்டர் கோ பார் பீஸ் டாக்""என்று...
பல களேபரங்களுக்கு பிறகு இன்று அது தான் நடந்துள்ளது.

ஓக்கே. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.

இன்று மாலை முஸ்லிம்களின் கூட்டமைப்பு தலைவர்களுடன், கமல் சார்பாக இயக்குனர் அமீர் பேச இருக்கிறார். அந்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

இந்த நிலையில்... தமிழகத்தின் மாபெரும் இஸ்லாமிய அமைப்பான ததஜ தலைவர் பி.ஜெய்னுலாபிதீன் இந்த பேச்சு வார்த்தையை வரவேற்று இருப்பது யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது.  இந்த படம் வெளிவருவதில் ததஜ வின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே, அண்ணன் பிஜே அவர்களின் அறிவிப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.

                                                      


இது குறித்து தட்ஸ் தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கை..

"சென்னை: விஸ்வரூபம் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க நடிகர் கமல் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். பிரச்சினையை வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளும். இந்த விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/31/tamilnadu-tamil-nadu-tauheed-jamaat-puts-new-168913.html  "

ஆனால்.. சில அரசியல் சித்து விளையாட்டுக்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய இயக்கமான ததமுக, அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி. சோ, அதன் மூலம் நிர்பந்தம் கொடுக்க யாரும் முனையலாம்.

இந்த சூழ்நிலையில், தமுமுக எடுக்க இருக்கும் நிலைப்பாடும் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது. ததஜ அறிவித்தது போல், 23 கூட்டமைப்பினர் எடுக்கும் முடிவிற்கு தமுமுக ஒத்துழைப்பு அளித்து பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதே பெரும்பாலான முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களின் எதிர்பார்ப்பு.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய தருணம் இது தான். அவரின் அறிவும், பொருமையும்  நிச்சயம் அவரை சரியான முடிவையே எடுக்க சொல்லும் என்று நம்புகிறோம்.

                                                             

அனைத்துக்கும் மேலாக... என்னுடைய இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு சொல்லிக் கொள்வது இது தான். நமது போராட்டம் அனைவரின் கவனத்திற்கும் சென்று விட்டது. இனி இது போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதை நிச்சயம் தவிர்ப்பார்கள். அந்த விதத்தில் இந்த போராட்டம் மாபெரும் வெற்றியே. கமலை நஷ்டம் அடைய வைப்பது நம் நோக்கம் அல்ல.... ஆகவே, இஸ்லாமிய கூட்டமைப்பினர் எடுக்கும் முடிவிற்கு விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கட்டுப்படுவோம். பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
  
 இறுதியாக கமலை ஆதரிக்கும் நண்பர்களுக்கு சும்மா "ஐ சப்போர்ட் கமல்" னு குதிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை. உண்மையிலே கமல சப்போர்ட் பண்றதா இருந்தா தயவுசெய்து இந்த படத்த திருட்டு விசிடில பார்க்காதீங்க. இந்த படம் தாமதம் ஆவதால் கமலுக்கு பெரிய நட்டம் வராது. தேவையான அளவு விளம்பரம் கிடைத்துவிட்டது. சோ, படம் வந்தாலும் நன்றாகவே ஓடும். ஆனால் மிகப் பெரிய பிரச்சனை திருட்டு விசிடி தான். சோ, அதை உங்களால் இயன்ற அளவு தடுத்து கமலுக்கு உதவுங்கள். அதான் உண்மையான சப்போர்ட்.

இதை ஏன் நான் சொல்றேன்னா... ஐ சப்போர்ட் கமல் னு சொன்ன ஒரு ஆளு, நேற்று என்னிடம் பேசும் போது திருட்டு விசிடி கிடைச்சா பார்ப்பேன், ஆர்வமா இருக்குன்னு சொன்னான். கேட்டதும் கடுப்பாயிடுச்சு... ஆர்வம் தாங்க முடியலையாம்... ஒரு வாரம் தள்ளி படம் பார்த்தா என்ன?? தலை வெடிச்சிடுமா??? இதுல சினிமாவ சினிமாவ பாருங்கன்னு அறிவுரை வேற சொன்னவன் அவன். அடப்பாவிங்களா?? நீங்க சினிமாவாவா பார்க்கிறீங்க?? வெறி பிடிச்சுல்ல பார்க்கிறீங்க....???

உங்க வாதப்படி...

எங்களுக்கு மதம் என்ற மதம் பிடிச்சு இருக்கு..

எங்கள் வாதப்படி உங்களுக்கு...

சினிமா என்ற மதம் பிடிச்சு இருக்கு....

ஹா..ஹா...ஹா. மொத்ததில பூரா பேருக்கும் எதாவது ஒரு மதம் பிடிச்சு தான் இருக்கு...

குறிப்பு : கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்கள்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................




செவ்வாய், ஜனவரி 29, 2013

8 மணிக்கு தீர்ப்பு - நாம் செய்ய வேண்டியது என்ன????


விஸ்வரூப பட விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.

தீர்ப்பு எப்படி இருக்கும்?

சில கண்டிஷன்களுடன் படம் வெளியிட அனுமதி அளிப்பார்கள் என்பதே என்னுடைய கணிப்பு. அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

நாம் என்ன செய்ய வேண்டும்????

1. சகோஸ்.. தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் தயவுசெய்து உணர்ச்சிவசப் படாதீர்கள்.

2. என்றும் இல்லாத அதிசயமாய் 24 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். இதற்காக கமலுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நன்றி கமல். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

சோ, இந்த கூட்டமைப்பினர் எடுக்கும் அடுத்த கட்ட ஜனநாயக ரீதியான போராட்டத்திற்காக பொறுத்திருங்கள்.

3. தனி மனிதர்களாக எந்த போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம்.

4. தயவுசெய்து வன்முறையில் யாரும் இறங்காதீர்கள்.

5. போராடுவது மட்டுமே நம் கடமை. வெற்றி , தோல்வி அளிப்பவன் இறைவனே என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

6. எந்த கருத்தை, எங்கு சொல்வதாக இருந்தாலும் நாகரிகமாக மட்டுமே பேசுங்கள். அப்படி பேச முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு இருந்தால், நீங்கள் பேசவே வேண்டாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.

7. சாலை மறியல் கண்டிப்பாக செய்யாதீர்கள். 

8. எந்த போராட்டமாக இருந்தாலும் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். பொதுமக்களை வருத்தி நடக்கும் எந்த போராட்டத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
 
9. தியேட்டர் முற்றுகைப் போராட்டமோ அல்லது வேறு ஏதேனும் போராட்டம் என்றாலும் அரசின் அனுமதியுடனே நடத்துங்கள் அல்லது அரசுக்கு முன்னரே தெரிவித்துவிடுங்கள்.

10  இறுதியாக, நாம் இந்த போராட்டத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் என்பதை மறவ வேண்டாம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் இனி ஒரு படம் இது போல் எடுக்க யோசிப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்



மொத்தத்தில் தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் உங்கள் போராட்டம் ஜனநாயக ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே தமிழக முஸ்லிம்கள் மற்றும் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.






வெள்ளி, ஜனவரி 25, 2013

விஸ்வரூபம் திருட்டு சிடி - முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்.....


தமிழக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....


முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக விஸ்வரூபம் தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் அந்தப்படம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நமது அண்டை மாநிலங்களிலும் பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி திருட்டு விசிடி விற்பவர்கள் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டு காசு பார்க்க குறியாக இருப்பார்கள்.
பிரச்சனை கோர்ட்டில் உள்ளது, அந்த தீர்ப்பு வரும் வரை முஸ்லிம்கள் யாரும் இந்த படத்தை திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள்.

அதே போல் திருட்டு விசிடி விற்பவர்களையும் கண்காணித்து போலிஸிடம் ஒப்படையுங்கள்.

நமது நோக்கம் படத்தில் இருக்கும் ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பது தானே ஒழிய, கமலை நட்டம் அடைய வைப்பது அல்ல...
100 கோடி ருபாயை முதலீடு செய்து உள்ளார். குறைந்த பட்சம் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் வரை பார்க்காதீர்கள். ப்ளீஸ்...

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தமிழகத்தில் ஆகும் வசூல் தான் பெரிது. ஏனைய மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமையில் பெரிதாக சம்பாதித்துவிட முடியாது..

இந்த சூழ்நிலையில் பொறுமையும் , நிதானமும் நமக்கு மிகவும் அவசியம். நாம் சொல்ல வந்த செய்தி, அனைவரையும் அடைந்தே இருக்கிறது. நமது போராட்டங்கள் நியாயமான வழியில் இருக்க வேண்டுமே ஒழிய, குறுக்கு வழியில் ஒரு போதும் இருக்கக்கூடாது.

3 நாள் என்பது மிகப்பெரியது, 72 மணி நேரத்திற்குள் திருட்டு விசிடி கும்பல் இந்த படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சேர்த்து விடும். அதை நடக்க விடாமல் செய்வோம். அந்த கடமை நமக்கு உள்ளது.

குறிப்பு : இதை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத நினைத்தேன். நேரமின்மையால் சுருக்கமாக எழுத வேண்டி ஆகிவிட்டது.




வியாழன், ஜனவரி 24, 2013

விஸ்வரூபம் - தடையை விலக்க கோரிய வழக்கு தள்ளிவைப்பு..


தன் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்க கோரி கமல் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் 28-ஆம் தேதி வரை ஒத்திவைத்துள்ளது. படத்தை பார்த்த பிறகே தீர்ப்பு என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஸ்வரூபம் படத்திற்கான தடை நீடிக்கின்றது. 

அதாவது இக்பால் செல்வன்.. உங்கள் டிவிட்டர் முயற்சி தோற்றுவிட்டது.. நாளை படம் ரிலீஸ் கிடையாது...டையாது..யாது....  

அதே போல் டேம் 999 படமும் தமிழகத்தில் வெளியிடப்படாது... ஹா..ஹா

என்னே கருத்து சுதந்திரம்???
வாழ்க கருத்து சுதந்திரம்...

குறிப்பு : மலேஷியாவிலும் நாளை தடை என்ற அறிவிப்பு வெளியிடப்படலாம்... 

வியாழன் என்ற சகோதரின் பின்னூட்டத்தையும் அதற்கான என் பதிலையும் நான் இத்துடன் இணைக்கிறேன்... வேற வழி, மொக்கை பதிவு, ரொம்ப சின்னதா வேற இருக்கு..  அதான்..ஹி..ஹி.ஹி

வியாழன் சகோ..


//Anyway we will watch the movie in thiruttu vcd //

இத கமல் பார்த்தா இரத்தக் கண்ணீர் வடிப்பார்.. அடப்பாவிங்களா அவங்க தான்(முஸ்லிம்ஸ்) பிரச்சனை பண்றாங்கன்னா நீங்களுமான்னு?? ஹா..ஹா..ஹா

ப்ளீஸ் டோன்ட் டூ தட்.. நாங்க செய்றத தான் நீங்க செய்றீங்க இப்ப?? இது கமலுக்கு எந்த விதத்திலும் உதவாது... 3 நாளோ ஒரு வாரமோ வெயிட் பண்ணுங்க படம் கண்டிப்பா வரும்.... தியேட்டரிலே போய் பாருங்க...

படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்....

என்னடா இப்படி சொல்றானேன்னு ஆச்சரியமா இருக்கா?? இனி படம் வந்தாலும் எனக்கு கவலை இல்லை.. நாங்க சொல்ல விரும்பிய மெசேஜ் எல்லாருக்கும் தெளிவாவே போய் சேர்ந்து இருக்கும் இன்னேரம்...  :) :-)) :-)))

வி அல்ரெடி வோன் திஸ் பேட்டில் பாஸ்.... 

குறிப்பு - 2 : எதிர்பார்த்தபடியே , மலேசியாவில் விஸ்வரூபம் தடை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு. மலேசிய அமைச்சர் மேற்கண்ட செய்தியை அறிவித்ததாக புதிய  தலைமுறை சற்றுமுன் அறிவிப்பு. ( இது எனக்கு உறுதியா தெரியல, பட் சரியா இருக்க வாய்ப்பு அதிகம்).


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters