நேர்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேர்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 25, 2013

விஸ்வரூபம் திருட்டு சிடி - முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்.....


தமிழக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....


முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பு காரணமாக விஸ்வரூபம் தமிழகம் மற்றும் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் அந்தப்படம் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நமது அண்டை மாநிலங்களிலும் பல வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி திருட்டு விசிடி விற்பவர்கள் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டு காசு பார்க்க குறியாக இருப்பார்கள்.
பிரச்சனை கோர்ட்டில் உள்ளது, அந்த தீர்ப்பு வரும் வரை முஸ்லிம்கள் யாரும் இந்த படத்தை திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள்.

அதே போல் திருட்டு விசிடி விற்பவர்களையும் கண்காணித்து போலிஸிடம் ஒப்படையுங்கள்.

நமது நோக்கம் படத்தில் இருக்கும் ஆட்சேபத்துக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்பது தானே ஒழிய, கமலை நட்டம் அடைய வைப்பது அல்ல...
100 கோடி ருபாயை முதலீடு செய்து உள்ளார். குறைந்த பட்சம் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் வரை பார்க்காதீர்கள். ப்ளீஸ்...

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தமிழகத்தில் ஆகும் வசூல் தான் பெரிது. ஏனைய மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு உரிமையில் பெரிதாக சம்பாதித்துவிட முடியாது..

இந்த சூழ்நிலையில் பொறுமையும் , நிதானமும் நமக்கு மிகவும் அவசியம். நாம் சொல்ல வந்த செய்தி, அனைவரையும் அடைந்தே இருக்கிறது. நமது போராட்டங்கள் நியாயமான வழியில் இருக்க வேண்டுமே ஒழிய, குறுக்கு வழியில் ஒரு போதும் இருக்கக்கூடாது.

3 நாள் என்பது மிகப்பெரியது, 72 மணி நேரத்திற்குள் திருட்டு விசிடி கும்பல் இந்த படத்தை தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் சேர்த்து விடும். அதை நடக்க விடாமல் செய்வோம். அந்த கடமை நமக்கு உள்ளது.

குறிப்பு : இதை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுத நினைத்தேன். நேரமின்மையால் சுருக்கமாக எழுத வேண்டி ஆகிவிட்டது.




Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters