தமிழக அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 08, 2013

மாணவர்களா??? பலி ஆடுகளா???


செய்தித்தாள்களும், செய்தி சேனல்களும்  அந்த செய்தியை வாசித்த போது மனம் முழுக்க பாரமாகி பல்வேறு சிந்தனைகளில் மூழ்க ஆரம்பித்தது...

பள்ளி நேர மாற்றம்!!!!

வரும் கல்வி ஆண்டு முதல் புத்தகச் சுமையோடு இன்னொரு சுமையாக பள்ளிகள் துவங்கும் நேரத்தை காலை 7.30 க்கு  அரசு மாற்றியுள்ளது....
9.30க்கு துவங்கும் பள்ளிக்கே 8.30க்கு  வீட்டுவாசலில் வேன் வந்து நிற்கும். இனி 7.30 எனில்????????????????????????



9.30  எனில்
7.30  எனில்
காலை 6 மணி :  சமையல் செய்யவேண்டும்.  
காலை 5 மணி: 
சமைக்க
வேண்டும்.
7 மணி: 
மகனை
எழுப்ப வேண்டும்.
5மணி:
தூக்கம்
பற்றாக்குறையால் 5மணிக்கு எழுப்பினாலும் 6மணிக்கு எழுவான்.
7.15 :
சாவகாசமாக
பால் கொடுத்த பின் கொஞ்சம் வெயில் எட்டிபார்த்த பின் சூடான நீரில் குளியல்... அதன் பின் சிறுது நேரம் படிப்பு
6 மணி:
குளியலா
?  இன்னும் அரைமணி நேரம்தான் இருக்கு.முகம் கழுவினால் போதும்
8 மணி:  காலை டிபன் ஊட்டிவிடுதல்
6மணி:
டிபனா
? இப்பதான் பால் குடிச்சான் அதுக்குள்ளையுமா? வேண்டாம்.
8.15 தொடங்கி 8.30 க்குள் : வேகவேகமாக  அவனை ரெடி பண்ணி முடிப்பதற்க்குள் வாசலில் வேன்ஹார்ன் அடிக்கும்  
6.15 தொடங்கி 6.30க்குள்:இன்னும் கால்  மணி  நேரம் தான் இருக்கு.. வேகவேகமாக  அவனை ரெடி பண்ணி முடிப்பதற்க்குள் 6.30 க்கு வாசலில் வேன்ஹார்ன் அடிக்கும்
ஸ்கூல் சேரும் ஒருமணி நேரம் வரை   சகமாணவருடன்  விளையாடிக்கொண்டே பயணிக்கிறான்          
காலையில் விட்ட தூக்கத்தை ஒருமணி நேரம் பிடித்துக்கொண்டே பயணிக்கிறான்





  ****சிலநாட்களுக்கு கஷ்ட்டம் என்றாலும்  சில நாட்களில் பழகிவிடும் என்றாலும்  ஒரு தாயாய் பல சங்கடங்கள் குழந்தையை நினைத்து!

   
 கொடுக்கப்பட்ட ஹோம்வொர்க் ,நடத்தப்பட்ட பாடங்களை படிக்கவே நேரம் இரவு 9 முதல் 10 மணிக்கு மேல் ஆகிறது. சாப்பிட்டு தூங்க மட்டுமே குழந்தைகளுக்கு நேரம் இருக்கும்… பெரியவர்களை போல் 8 மணிநேர தூக்கக் கட்டுப்பாடுகள் குழந்தைகளிடம் செல்லுபடியாகாது. காலை என்னதான் நாம் கெஞ்சினாலும் "எழ மாட்டேன்" என அடம்பிடிக்கும் குழந்தையை பார்க்க  பாவமாக இருந்தாலும் , காலை நேர பரபரப்பில் அடித்து வழுக்கட்டாயமாய் எழுப்புவது மட்டுமே நமக்கு தெரிந்த ஒரே வழி. தூக்க கலக்கத்திலேயே பால் குடித்து, தூக்க கலக்கத்திலேயே முகம் கழுவ மட்டும் தான் நேரமிருக்கும்.

நம் அவசரப்படுத்துதலில் இனி குழந்தைகளுக்கு பள்ளி என்றாலே தீராத வெறுப்பு வரும். காலை நேர உணவு சாப்பிட நேரமிருக்காது, அதையும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பிவிடுவதால் 2 பாக்ஸ், 2 வாட்டர் கேன், ஸ்னேக்ஸ்பாக்ஸ் என கூடுதலாக ஒரு சுமை. வீட்டிலேயே சரியாக சாப்பிடாதவன் அங்கே சாப்பிடுவானா? வீட்டில் என்றால் கொஞ்சமேனும் வயிற்றை நிரப்பி அனுப்ப முடியும். இனி அந்த கவலை வேறு.

வெயில் பிரதேஷத்தில் இருந்தாலும் கூட, பனி/குளிர் இங்கே இல்லை என்ற போதும் கூட  காலை நேர பனி, வாடை காற்றை  தாங்கும் சக்தி குறைவே  இந்த கால குழந்தைகளுக்கு … கால நிலை லேசாக மாறினாலும் தும்மல், சளி என்பது சர்வசாதாரணமாக எட்டிபார்க்கும் நிலையில் , முகத்தில் அடிக்கும் வாடைக்காற்று விடாத இருமலையும் , சளியையும் பரிசாய் கொடுக்கும்! பழகிக்கொள்ளும் வரை சிரமமே...

காலை சுறுசுறுப்பாக செயல்பட்டாலும் பாவம் அவனும் குழந்தை தானே…??? எவ்வளவுதான் தாக்கு பிடிக்க முடியும்? தூக்கம் மீண்டும் எட்டிபார்க்கும் மதியவேளையில்… ஆனால் அதற்கும் அனுமதி தரப்படுவதில்லை… மதியத்துடன் விட்டாலும் தேவலை, வீட்டில் சிறிது ஓய்வு கிடைக்கும். ஆனால்  படிப்பு படிப்பு என கசக்கி பிழியும் பள்ளிகள் மதிய நேரத்தை தியாகம் செய்துவிடுமாக்கும்? அப்படியே விட்டாலும் வேலைக்கு செல்லும் அம்மா,அப்பாவை பெற்றிருக்கும் குழந்தைகளின் நிலை அதைவிட பரிதாபம்! 


சிலநாட்களுக்கு கஷ்ட்டம் என்றாலும்,   சில நாட்களில் பழகிவிடும் என்றாலும்  ஒரு தாயாய் பல சங்கடங்கள் குழந்தையை நினைத்து! சீரியல் பார்க்கும் அம்மா இல்லை என்பதாலும் :-) விடிய காலை தொழுகைக்கு எழ பழகிவிட்டதால் இவையெல்லாம் சுமை இல்லை என்ற போதிலும் அனைத்தும் குழந்தைகளை மையமாக வைத்தே சிந்தனை செல்கிறது... இதுவும் பழகிப்போகும் :-) 

ரொம்ப தான் பீலிங்க்ஸ் ஆப் இந்தியா படம் காமிச்சுட்டிருக்கேன் போல... சரி சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடுறேன்!


 உப்புசப்பில்லாத காரணத்தால் நேரமாற்றம்:
சாலைகளில் விபத்து அதிகரிப்பதை தடுக்கத் தான் இந்த நடைமுறையை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது சுத்த முட்டாள்தனம்…  குழந்தைகள் மீது ஏன் இந்த இரக்கமற்ற செயலை திணிக்க வேண்டும்? ஏற்கனவே மின்வெட்டால் தூக்கம் இழந்து  , மன உளைச்சலில் பைத்தியங்களாய் திரியும் மக்களுக்கு இன்னொரு அடியா? விபத்துதான் காரணம் எனில் அதற்கு பல வழிகள் இருக்கும் போது இதனை தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம் ??!!!


கொஞ்சம் அறிவோடு சிந்திப்போமா?
மேலை நாடுகளிலும் இதே முறை தான் . இங்கே கொண்டு வருவதில் என்ன தவறு என்ற வாதம் வலுக்கிறது. நியாயம் தான்… ஆனால் அங்கு கல்வியை பார்க்கும்  விதமும் இந்தியாவில்  மாணவர்களை சக்கையாய் பிழியும் கல்விமுறைக்கும் எக்கசக்க வித்தியாசம் உள்ளது.  தன் பள்ளியில் 100 சதவித தேர்ச்சி காட்ட இரவு ஒன்பது மணி வரை பாடாய்படுத்தும் சர்வாதிகார பள்ளி நிலையங்கள் மதியத்துடன் ஓய்வை கொடுப்பார்கள் என்பதை  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை (சட்டமா?  கிழிஞ்சது… சமச்சீர் புத்தகத்தையே  சும்மா ஷோவுக்கு தான் கொடுத்திருக்கோம்.. இதுல மட்டும் உங்க மதியத்துடன் பள்ளி முடிக்கவேண்டும் என்ற சட்டத்தை பாலோ பண்ணுவோமாக்கும்?) மதியத்துடன்  மாணவர்களுக்கு ஓய்வு விட்டால் மட்டுமே இந்த சட்டம் சரியானதாக இருக்க முடியும்!

விபத்து நடப்பது அனைவரும் ஒரே நேரத்தில் வருவதால் என  யோசிக்கும் அரசு ஏன்  எல்லாரின் நேரத்தை மாற்றியமைக்க கூடாது?
வழக்கம் போல் 9.30க்கே (கூட வேண்டாம் 8.30க்கு) குழந்தைகளுக்கு பள்ளி திறந்துவிட்டு, தனியார்/பொதுதுறையில் வேலை செய்பவர்களின்  நேரத்தை 11 மணிக்கு மாற்றிவிடலாமே?

கூட்ட நெரிசலால் படிகட்டுகளில் தொங்கும் நிலை ஏற்படுவதால் விபத்து அதிகரிக்கிறது எனில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் கட்டாயம் வேன் அல்லது பஸ் வசதி செய்து கொடுக்கலாமே?? 
பணம் பறிக்கும் தனியார்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பள்ளி வேனிலே சென்று வந்து விடுகிறார்கள். எத்தனையோ இலவசங்களை வாரி வழங்க தயாராக இருக்கும் அரசாங்கம் , அரசுபள்ளிக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுப்பதில் நிச்சயம் சிரமமே இருக்காது. இது நீண்ட கால திட்டமும் கிடையாது… மாணவர் நலனில் உண்மையிலே அக்கறை இருந்தால், உடனே செயல்படுத்திவிட முடிந்த விஷயமே… 

இது தவிர காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்கலாம்.  சில கிராமங்களுக்கு  சாயங்காலம் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் முட்டி மோதி போகும் சூழல் இருக்கிறது. லாபம் பார்க்காமல்  சேவை அடிப்படையில் கிராமப்ப்புறங்களுக்கு கூடுதல் பஸ்வசதியை  ஏற்படுத்தி கொடுத்தால் , இது இல்லையென்றாலும் அடுத்து பேருந்து வரும் என மாணவர்களும் இருந்துவிடுவாங்க…

எல்லாத்தை விடவும் முக்கியமா , சுத்தி சுத்தி வளைக்காம தானியங்கி கதவை அனைத்து பேருந்துகளிலும் செயல்படுத்துங்க… தொங்கும் நிலை அறவே இருக்காது, விபத்தும் ஏற்படாது!

இதெல்லாம்விட்டுட்டு நேரத்தை மாத்துறாங்களாம்….??? என்னதான் யோசிக்கிறாங்களோ…???  யார் தான் ஐடியா கொடுக்குறாங்களோ??? 

குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் இது போன்ற அறிவிப்புகளை விடுத்து, அறிவாய் யோசித்து  மாணவர்கள் பாதிக்கப்படா வண்ணம், ஆகவேண்டிய காரியங்களை செய்யலாம் தமிழக அரசு!

அரசு பரிசீலிக்குமா?????? 

*******************
 

ஆக்கம்- ஆமினா முஹம்மத்


திங்கள், ஜனவரி 07, 2013

அரசு பொருட்காட்சியா??? கொள்ளையர்களின் கூடாரமா???

ஜனவரி மாதம் என்றாலே சென்னைவாசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!!! குதூகலம் தான்!!!! காரணம், ஒவ்வொரு வருடமும் இந்த மாதம் நடைபெறும் புத்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சி... ஒன்று அறிவுக்கு தீனி போடும் மற்றொன்று நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களின் குழந்தைகளை மகிழ்விக்கும்.

இந்த வருடமும் இந்த வழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால்...ஆனால்...ஆனால்...

நேற்று ஞாயிற்றுகிழமை... மண்ணடிக்கு புர்கா வாங்கலாம் என்று குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்புகையில், பொருட்காட்சி கண்ணில் பட்டது... பார்த்ததும் நேராக மெரினா பீச் சென்றுவிட்டு வீடு திரும்பும் திட்டத்தை கை விட்டு, காரை பொருட்காட்சி திடலுக்குள் செலுத்தினேன். கார் பார்க்கிங்கோ, என்ட்ரன்ஸ் பீஸ்ஸோ எதுவும் வாங்கவில்லை... (வேலை முழுமையடையாததால் நுழைவுக்கட்டணம் வசூலிக்கவில்லை என்பது அப்போது எனக்கு தெரியாது) அரசு நடத்தும்  பொருட்காட்சியாச்சே அதனால் தான் இந்த சலுகை, நம் பர்ஸ்க்கும் பாதுகாப்பு என்ற மனநிம்மதியோடு உள்ளே நுழைந்தேன்... உள்ளே சென்றதும் தான் தெரிந்தது என் எண்ணம் எவ்வளவு தவறானது என்று.... வச்சாய்ங்க பாருங்க ஆப்பு...

ஒவ்வொரு ரைட்டிற்கும்(இராட்டிணம்) ஒரு நபருக்கு  கூசாமல் 40 ரூபாய் வாங்குகிறார்கள். பத்து ரைடில் ஏறினால் 400 ரூபாய் வந்துவிடும்... அம்மாடி!!!!!!   இவர்களுக்கு தனியார் நடத்தும் தீம் பார்க் எவ்வளவோ பரவாயில்லை...அங்கு 400 ரூபாய் நுழைவுகட்டணத்திலே  அவன் வைத்திருக்கும் 50க்கும் மேற்பட்ட ரைட்ஸில் இலவசமாக பயணிக்கலாம்... ஆனால் இங்கே அரசு சார்பில் நடக்கும் பொருட்காட்சியில் ஒவ்வொன்றுக்கும் ஒரு நபரிடம் 40 வசூலித்தால்........... 10 ரைடிலே 400 ரூபாய் போய் விடும்....அடேங்கப்பா அதிகாரப்பூர்வ கொள்ளை அல்லவா நடந்து கொண்டு இருக்கிறது????? 

அதன் பின் சாப்பாடு பக்கம் பார்வை செல்ல, அங்கேனும் நியாயமாக வியாபாரம் நடக்கும் என நினைத்தால் என் எண்ணத்திற்கு 144 தடா...  ஆம் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு போன உணர்வு... சாதாரணமாக வெளியே 10 ரூபாய்க்கு விற்கும் பாம்பே அப்பளம் இங்கே 30 ரூபாய்! 8 ரூபாய்க்கு வெளியே விற்கும் கரும்பு ஜூஸ் 20 ரூபாய்...   இது போல் தான் அனைத்து உணவுப்பொருட்களும் 3 மடங்கு  அதிகமாக மக்களிடம் வசூலிக்கிறார்கள்...

அய்யா கணவான்களே... அரசு நடத்தும் பொருட்காட்சி, குறைந்த செலவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தான் அங்கு மக்கள் வருகிறார்கள்... இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்களே??
இது எந்த அதிகாரிக்கும் தெரியாதா??  அல்லது தெரிந்தே அனுமதிக்கிறீர்களா கமிஷன் வந்தால் போதும் என்று???

இந்த பணமெல்லாம் அரசுக்கு செல்லும் என்றாலும் ஓரளவுக்கு திருப்தியடையலாம். ஆனால் நடத்துவது மட்டுமே அரசு... ஸ்டால்களும் , ரைட்களும் கான்ட்ராக்ட் மூலம் நடத்தப்படுகிறது என்றே தெரிகிறது!  நம்மிடம் அடிக்கும் கொள்ளை லாபம் முழுக்க முழுக்க  கான்ட்ராக்டர்கள் வசமே போகிறது...  போன வருடம் 14 லட்சம் மக்கள் போனதாகவும், இந்த வருடம் 20 லட்சம் மக்கள் வர வாய்ப்புண்டு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.  இனி வரும் நாட்களில் ஒரு நபருக்கு 15 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும் நுழைவுகட்டணம் மட்டுமே அரசுக்கு சேரும்!  மற்றபடி ஒவ்வொரு ரைடுக்கும், உணவுக்கும் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் காண்டிராக்டர்கள் மடியிலே தான் விழும். கணக்கிட்டுக்கொள்ளுங்கள் அப்ப 20 லட்சம் பேருக்கு  எவ்வளவு கொள்ளை அடிப்பார்கள் என்று ,

தல சுத்துதுடா சாமி.........

இதைவிட, பேசாமல் அரசே பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணத்தை அதிக படுத்தி... ஒவ்வொரு கடைக்கும் இவ்வளவுக்கு தான் விற்க வேண்டும் என்று விலை நிர்ணயித்துவிடலாம்...

ஓரளவு நல்ல சம்பளம் வாங்கும் எனக்கே செலவழிக்க மனசு தயங்கியது என்றால்.. ஏழை, எளியவர்கள் நிலை???????


பொருட்காட்சிக்கு வரும் அனைவரும் கோடிகளில் புரல்பவர்கள் அல்ல... நடுத்தர மக்களும் , ஏழை மக்களுமே அதிகம்!  ஏன் இப்படி பொதுமக்களை முட்டாளாக்க வேண்டும்? பொருட்காட்சி என்ற பெயருக்கு பதிலாக தமிழக அரசியின் அதிகாரபூர்வ கொள்ளையடிக்கும் காட்சி என பெயரை வைக்கலாம்!

தமிழக  அரசு ஏழை, எளிய மக்கள் மீது இரக்கம் கொண்டு,  முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் விலை நிர்ணயித்து நடத்தினால் மட்டுமே இது பொருட்காட்சியாக இருக்கும். இல்லையேல் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் மக்களின் பணத்தை காண்டிராட்கடர்கள் அநியாயமாய் திருட அரசே பாதையை  ஏற்படுத்திக் கொடுத்ததாகிவிடும்!

கவனிக்குமா அரசு?????????

குறிப்பு : பொருட்காட்சி மொத்தம் 2 1/2 மாதங்கள் நடைபெறும்...  ஒரு சில கடைகளே இப்பொழுது இருக்கின்றன. மற்ற அரங்குகளுக்கு இப்பொழுது தான் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. சோ, இப்ப யாரும் போகாதீங்க. ஜனவரி கடைசியில் போங்க. அப்பொழுது தான் எல்லா கடைகளும் வந்து இருக்கும்.


புதன், பிப்ரவரி 22, 2012

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு


 
                                                      
 
மாண்புமிகு முதலமைச்சர் செல்வி J . ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் சொன்ன சில முக்கியமான வாக்குறுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவேன் என்பதும் ஒன்று.
 
 
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது தற்போதைய முதல்வரின் ஸ்பெசாலிட்டி என்பது போன்ற ஒரு பிம்பமும் நீண்ட நெடுங்காலமாய் அவரின் ஆதரவு பத்திரிக்கைகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் வாயிலாக பெருமையுடன் பேசப்பட்டு வந்தது. இப்பொழுது நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இதுவும் அரசிடம் காரியம் சாதிக்க நினைக்கும் நபர்களின் துதிகளில் ஒன்றோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
 
 
நிறைய உதாரணங்கள் இருந்தாலும் ஓரிரு சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.
 
 
சம்பவம்-1 : சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த மாதம் 23ம் தேதிதான் பிற்பகல் வாக்கில் 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.


சம்பவம்-2 : சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.இந்த வங்கியில் நேற்று பகல் 2 மணிக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தனர். வந்தவர்கள் துப்பாக்கியை நீட்டி சர்வ சாதாரணமாக ரூ 14 லட்சங்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
 
 
சம்பவம்-3 : நேற்று இரவு திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த திருடர்கள் ரூ 14 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
இதே திருப்பூரில் சில மாதங்களுக்கு முன் முத்தூட் நிறுவனத்தில் ரூ 3 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.
 
 
                                                      
 
 
கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசு என்ன செய்ய முடியும்???? ஒவ்வொரு கடை அல்லது நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நடை முறைச் சாத்தியமா? என்று யோசித்தால், அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே கொள்ளை நடக்கும் விசயத்தில் அரசை பெரிதாக நாம் குற்றம் சாட்டி விட முடியாது தான்.
ஆனால் பெரிய அளவில் திட்டம்   போட்டு பட்டப் பகலில் பஹிரங்கமாக துப்பாக்கி காட்டி கொள்ளை அடிக்கும் நபர்களை பல மாதங்களாக பிடிக்க முடியாமல் இருப்பது நிச்சயம் காவல்துறை மற்றும் உளவுத் துறையின் தோல்வியைத் தான் காட்டுகிறது.
 
 
இதற்கு மேலும் தாமதிக்காமல், முதல்வர் மக்களுக்கு கொடுத்த சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவேன் என்ற வாக்குறுதியை உறுதியாக செயல்படுத்த வேண்டும். உண்மையோ பொய்யோ, அவரின் மீது கூறப்படும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர் என்ற சொல்லை காக்க கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது நிச்சயம் அவரின் ஆட்சியின் நீங்காத கரையாக வரலாற்றில் பதியப்படும். பின் அந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது சாதாரண விஷயம் இல்லை.
 
 
நான் ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்று பெருமை பொங்க அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
அது முற்றிலும் உண்மை தான். அதற்காக நன்றி மேடம்.
 
 
ஆனால்... ஆனால்... பேங்குகளையும், நகைக்கடைகளையும் கொள்ளை அடிக்கும் பலே திருடர்கள் அனைவரும்
ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து விட்டார்களே அம்மா. வாட் டு டூ!!!!!!
 
 
இது தொடர்பில் நான் இந்த ஆட்சியின் ஆரம்ப நாட்களில் பதிவிட்ட கீழ்க்கண்ட பதிவையும் பார்வையிடுங்கள் நண்பர்களே...
 


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters