ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

என்னை பேச வைத்துவிடாதீர்கள்- ஜெயலலிதாவை மிரட்டும் விஜயகாந்த்.........
விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. இதில் தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:


இடைத்தேர்தலுக்கு 26 மந்திரிகள் உள்பட 34 பேர் கொண்ட குழு அதிமுக அமைத்திருக்கிறது. ஆனால், தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 26 மந்திரி உள்பட 34 பேர் கொண்ட குழுவை அனுப்பினீர்களா? எங்க மக்களை ஏமாற்ற பார்க்கிறீர்கள். சங்கரன் கோவிலில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை கொடுக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லாமல் இதையெல்லாம் எப்படி பயன்படுத்த முடியும். இதனால் மக்கள் அதிருப்திபயாக உள்ளனர். நலத் திட்டங்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவை பொது மக்களுக்கு சேருவதை நான் தடுக்க மாட்டேன்.


சங்கரன் கோயில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னால், வேட்பாளரை அறிவித்துவிட்டு குழுக்களை அமைத்து ஓட்டுக்ககு இலவசங்களை கொடுத்து வருகிறார்கள். இது உங்களுக்கு (அதிமுக) இடைத்தேர்தலில் தோல்வி பயம் உள்ளது என்பதை இப்போது தெரிந்துவிட்டது. என் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். எதற்கும் நான் பயப்பட போவதில்லை. என்னை பொய் வழக்குப் போட்டு மிரட்டிப் பார்க்காதீர்கள். இன்னும் நிறைய பேசுவேன். வேறு மாதிரி பேசுவேன்.

மக்கள் குறைகளை போக்குவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு போகிறோம். அங்கு மக்கள் குறைகளை தீர்க்க பேசுகிறோம். எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து ஆளுங்கட்சியினர் ஒருமையில் பேசியதால்தான் நான் கைநீட்டி பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டத்தில் கை நீட்டி பேசக் கூடாது என்று கூறவில்லை. சட்டமன்ற உரிமைக்குழுவை கூட்டி என்னை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து உள்ளனர்.   இந்த வேகத்தை தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காட்ட வேண்டியதுதானே? அதை விட்டு விட்டு என்னை சஸ்பெண்டு செய்து உள்ளனர்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் தான் முதன் முதலில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அதன் பின்னர்தான் மற்ற அரசியல் கட்சியினர் அந்த பகுதிகளுக்கு வந்தனர். மின்வெட்டு 2 மாதத்திற்குள் நீக்கி விடுவோம் என்று ஆட்சிக்கு வந்தவுடன் கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அருப்புக்கோட்டை பகுதியில் நெசவாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். தற்போது நிலவும் மின் வெட்டால் இப்பகுதியில் நெசவு தொழில் முற்றிலும் நசுங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த தேர்தலில் 60 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறிய தி.மு.க. தற்போது 6 ஆயிரம் ஓட்டுகள் கூட பெற முடியாத நிலையில் உள்ளது. இதே நிலைமைதான் அ.தி.மு.க.வுக்கும் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை. அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றி ஆட்சி அமைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார். டான்சி நிலத்தையும் ஒப்படைக்கிறேன் என்று கூறுபவர் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


13 கருத்துகள்:

 1. சலாம்! சகோ சிராஜ்!

  இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வாய்ச் சொல் வீரராகவே காலததை கழிப்பார் என பார்க்கலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேசியே ஆட்சிய புடிச்சிரலாம்னு தலைவர் மனக்கோட்டை கட்டுறார். களப் பணி???? ஹும்.... ஹும்... ஒன்னத்தையும் காணோம்.

   நீக்கு
 2. ஸலாம் சகோ.சிராஜ்,
  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நிச்சயமாக மாபெரும் வெற்றி பெற என் கிட்டே அற்புதமான ஐடியாக்கள் உள்ளன. அதை ஒரு பதிவாக போட்டு விடலாமா என்று எண்ணுகிறேன். அந்த ஐடியாக்களை அமல்படுத்தும் வேட்பாளர், வெல்ல மட்டுமே உறுதியாக வாய்ப்பு உள்ளது என்பதை அறிகிறேன். பதிவு போடவா..? என்ன சொல்கிறீர்கள்..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ முஹம்மது ஆசிக்,

   போட்டு தாக்குங்க சகோ. நீங்கள் தினமும் பதிவு எழுதினால் முதலில் சந்தோசப் படும் ஆள் நான் தான். உங்களின் அரசியல் பதிவை படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.

   நீக்கு
 3. //டான்சி வழக்கு தொடர்பான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு பிறகு அது எனது கையெழுத்து இல்லை என்று கூறுகிறார்.//

  கேப்டன் ஒரு நிமிஷம்...ஹோல்ட் ஆன். அவர் கையெழுத்து போட்டதை எனது கையெழுத்து(அதாவது 'உங்கள்') என்று ஏன் சொல்ல வேண்டும்?? எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டமில் ல எனக்கு புடிக்காத வார்த்தை நக்கலு.... அங்க்க்..... அப்புறம் புள்ளி விபரம் சொல்ல ஆரம்பிச்சுருவேன்....

   நீக்கு
 4. //எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். //

  அய்யா. அதை நீங்க சொல்லாட்டியும் பரவா இல்ல. சொல்லிடுவேன் சொல்லிடுவேன்னு சொல்றதை மட்டும் சொல்லாம இருந்தீங்கன்னா புண்ணியமா போகும். இதை நான் ஏன் சொல்றன்னா...

  பதிலளிநீக்கு
 5. //என்னை பொய் வழக்குப் போட்டு மிரட்டிப் பார்க்காதீர்கள். இன்னும் நிறைய பேசுவேன். வேறு மாதிரி பேசுவேன்.//

  என்னாது நிறைய பேசப்போறீங்களா? இப்பவே வயித்த கலக்குதே. ஜெ மேடம். ப்ளீஸ். அந்த ஜாமீன் தொகை எத்தனை கோடின்னு சொல்லுங்க. ரஜினி மாதிரி ஒரே பாட்டுல பணக்காரன் ஆகி இன்னைக்கே அமவுண்டை கட்டிடறேன். தவசி மேல பொய் கேஸ் போட்டுறாதீங்க. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு கற்பனை..... தவசி மேல கேசு போட்டு, அவர் படத்தில பேசிற மாதிரி நீதி மன்றத்தில பேசினா.......... வடிவேலோட கிணறு காமடில ஒரு போலீஸ் வேலைய விட்டு போவார்ல? அது மாதிரி ஜட்ஜ் போய்டுவாரு...
   அவ்வ்வ்வவ்வ்வ்....

   நீக்கு
 6. ஏன்னா, எனக்குத்தான் பேசத்தெரியாதே!! பிப்லிக்கா பிப்பிலி!

  – இது உண்மையான விசய காந்து!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters