சனி, டிசம்பர் 31, 2011

ஈழப் பதிவர்கள் vs இஸ்லாமியர்கள்= தீர்வுதான் என்ன?


குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.////

இன்று காலை நண்பர் சந்ரு எழுதிய பதிவின் ஒரு வரிதான் இது.....

நண்பரே....சமீபத்தில் நண்பர் கந்தசாமி என்பவர் எழுதிய ஒரு பதிவில் அபுசனா என்ற இஸ்லாமிய நண்பர் அசிங்கமாக பின்னூட்டமிட்டிருந்தார் என்று ஒரு தனிப்பதிவே போட்டிருந்தார். அந்த பதிவில் இன்று உங்களால் குற்றம் சாட்டப்படும்/ குழு மனப்பான்மை உடைய இஸ்லாமிய பதிவர்கள் அத்தனை பேரும் அபுசனாவை கண்டித்துத்தான் பின்னூட்டமிட்டுருந்தார்கள். யாரும் அபுசனாவின் செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. பின்னர், அபுசனாவே அங்கு வந்து நான் அப்படி பின்னூட்டமிட்டிருந்தது தவறுதான் என்று மன்னிப்புக்கேட்டபின் கந்தசாமி அந்த பதிவையே நீக்கிவிட்டார். தேவை ஏற்பட்டால் அவரிடமே சென்று கேட்டுக்கொள்ளுங்கள். யாருக்கும் பல்லாக்கு தூக்க வேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இஸ்லாமிய பதிவர்களுக்கில்லை என்பதற்கு அந்த பதிவே சாட்சி.

நான் உங்களிடம் வருகிறேன்.....
வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்து விட்டால்,  அதை தனி மனித தவறாகவே பார்க்கும் சிலர் இஸ்லாமியர்கள் தவறு செய்தால் மட்டும் அதை மதக்கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். அந்தப்பார்வையே முதலில் தவறு....

நீங்கள் எழுதிய விபச்சாரம் சம்பந்தப்பட்ட பதிவால்தான் இத்தனை எதிர்விளைவுகளும்....
வீடு புகுந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்திருந்தால் அது ஒரு சாராரின் தவறு...ஆனால், விரும்பியே போகிறார்கள் என்றால் தவறு இரு சாரார் மீது தான்.இதற்கு ஏன் மதச்சாயம்? ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறை கூறுவதென்பது தவறுதானே....

இஸ்லாமியர்களை பற்றி துவேஷத்துடன் இன்று சிலர் எழுதிவருவதால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் இஸ்லாமிய துவேஷம் மிக்கவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்?
இன்று இந்தியாவில்  லஞ்சம் ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளில் அதிகமானோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே....அதற்காக பெரும்பானமை சமூகத்தை திருடர்கள் சமூகம் என்றா ஒட்டுமொத்தமாக குறை சொல்லிட முடியும்?

அனைத்து சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிலர் அயோக்கியர்களாக இருப்பதுண்டு. அந்த குறிப்பிட்ட சிலர் மூலமாக மதத்தை பார்க்காதீர்கள் என்று சொல்கிறேன்.
விபச்சாரம் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. வறுமையில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள். வளமாக இருப்பவர்கள் அங்கு போகிறார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.

உங்கள் பார்வையில் படுமாறு ஒரு சில இஸ்லாமியர்கள் போயிருக்கலாம்....ஆனால், உங்கள் பார்வையில் படாமல் வளமாக இருக்கிற எத்தனையோ ஈழத்தமிழர்களும் போயிருக்கலாமே? அதற்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்ல முடியுமா? அல்லது சில ஈழத்தமிழ் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அனைத்து ஈழப்பெண்களும் விபச்சாரிகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்லிவிடுவீர்களா?

வறுமையும் ஏழ்மையும் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு. அதற்கான தீர்வு விபச்சாரம் அல்லவே....விபச்சாரம் செய்யும் பெண்களை அழைத்து அவர்களிடம் பேசி, வேறு ஏதாவது மாற்றுத்தொழிலை முன் வையுங்கள். தனி மனித தவறுகளுக்கு எந்த ஒரு மதத்தையும் முன்வைத்து விவாதிக்காதீர்கள்.

ஒரு சிலரின் தவறுகளுக்காக, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவு எழுதுவதை நிறுத்துங்கள். இப்போது நான் கூட இந்தப்பதிவிற்க்கு, ஒரு சில ஈழப்பெண்கள் விபச்சாரம் செய்தார்கள் என்பதற்காக விபச்சாரிகளாக மாறிவரும் ஈழப்பெண்கள்  என்றும்,  ஒழுக்க கெட்ட ஈழத்தமிழ் பெண்கள் என்றும் தலைப்பிட்டு ஹிட்ஸ் வாங்கியிருக்க முடியும். அப்படி செய்வதென்பது ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே இழுக்கு. ஒரு சிலர் செய்தது ஒரு சிலரோடு போகட்டும். அதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சேர்க்க உங்களைப்போல் எனக்கு மனம் வரவில்லை.





வியாழன், டிசம்பர் 29, 2011

பதிவுலகின் ஒரே நேர்மையாளர் நிரூபனுக்கு ஒரு கடிதம்...



நலமா நிரூபன்?

நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். நமக்குள் கருத்து மோதல் தானே, மற்றபடி என்ன வாய்க்கால் சண்டையா? ஆகவே நாம் அனைவரும் நலமாகவே இருக்க வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் பெரிய பரிட்சயம் இல்லை. அதனால் என்னிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்து நீங்கள் சிறிது ஆச்சரியம் அடையக்கூடும். சில சந்தேகங்கள் சகோ.

சகோ என்று கூப்பிடலாம் தானே? போலித்தனமாக இல்லை, உண்மையாகவே. போலித்தனமாக யாரையும் எனக்கு விழிக்கத்தெரியாது நிரூ.

சகோ சவுந்தர் அவர்களுடன்  நீங்கள் சண்டையிட்ட ஒரு பதிவில், தவறான கருத்துள்ள பதிவிற்கு நான் பின்னூட்டமிடமாட்டேன்.
மாறாக, அவர்களுக்கு தனியாக மெயில் செய்வேன் என்பதுபோல்
கூறியிருந்தீர்கள்.  அதை படித்தவுடன் நீங்கள் மிகச்சிறந்த பண்பாளர் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.

நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ?, உங்களுக்கென்று ஒரு இடத்தை என் மனதில் கொடுத்திருந்தேன்.

ஆனால் பவுடர் அண்ணே மிக கொச்சையாக ஆபாசமாக பதிவிட்ட ஒரு பதிவிற்கு
   
வணக்கம் மச்சி மணி,,
 என்னா ஒரு வேகம்?
 இருங்க படிச்சிட்டு வாரேன்.
  
என்று முதல் பின்னூட்டமும்,அதை தொடர்ந்து

    உனக்கு எம்புட்டுத் தில் மச்சி!

    செமையா கலாய்ச்சிருக்காய்.

என்று இரண்டாவது பின்னூட்டமும் போட்டிருந்தீர். அது உங்கள் பார்வையில் ஒரு கண்ணியமான பதிவா? தரமான பதிவர் என்று பலராலும் அறியப்பட்ட உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை
ஒருவேளை மற்றவர்கள் தவறான முறையில் பதிவு எழுதினால் மட்டும்தான் மெயிலில் சொல்வீர்கள் போல.....அதே தவறை உங்கள் நண்பர் செய்தால் ஆதரிப்பீர்களோ? இது எந்த விதத்தில் நியாயம்?

அந்த பதிவில் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு உடன்பாடு இருந்திருக்கும். ஆனால்,
அதை எழுதிய முறையில் சில ஆபாசமும், அருவருப்பும் இருந்ததே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது கண்டுகொள்ளவில்லையா?

இவ்வளவு தானா நிரூபன் நீங்கள்?

இந்த இரண்டு முகங்களில் எது  நிருபனின் உண்மையான முகம்?

மேலும் ஒரு சந்தேகம்?,
அந்த பின்னூட்டத்திலேயே

உனக்கு எம்புட்டு தில் மச்சி....என்று
இன்னொன்றையும் சொல்லியிருந்தீர்கள்.

ஃபிரான்சில் படுத்துக்கொண்டு இஸ்லாத்தை திட்டி எழுத என்ன தில் வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
சவுதியில் இருந்துகொண்டு இஸ்லாத்தை தாக்கி பவுடர் அண்ணே எழுதியிருந்தா அது தில்லு.....அல்லது இலங்கையில், அதுவும் கொழும்பில் இருந்து ஏதாவது ஒரு பத்திரிகையில் ராஜபக்‌ஷேவை எதிர்த்து எழுதியிருந்தா அது தில்லு.

அதை விடுத்து, ஃபிரான்சில் உட்கார்ந்துகொண்டு தனது றஜீவன் என்ற ஒரிஜினல் பெயரிலோ அல்லது ஒரிஜினல் முகத்தையோ காட்டாமல் பவுடர் பூசிக்கொண்டு போலி பெயரில் அநாகரீகமாக கெட்டவார்த்தையில் எழுத என்ன தில் வேண்டும் நிரூ....

இந்த இரு சந்தேகங்களையும் கொஞ்சம்புரிய வைத்தால் நன்று....

தேவை ஏற்பட்டால் மீண்டும் சந்திப்போம்....இறைவன் நாடினால்.


புதன், டிசம்பர் 28, 2011

சும்மா காட்டு காட்டென்று காட்டும் பவுடர் ஸ்டார்...



சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு  பதிவில் நமது அண்ணன் பவுடர் ஸ்டார் என்ற பிறர்பல பதிவர் பின்வருமாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.

"நான் சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவேன், நீங்க வேற காட்டச் சொல்றீங்க" என்பது போல்...

அதை படித்த உடன், நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன் இவருக்கு எவ்வளவு கர்வம் மற்றும் தான் என்ற அகந்தை என்று.
அப்பொழுது நான் நினைத்தேன், அண்ணனோட பதிவுகள கண்டிப்பா படிக்கணும்னு. இப்ப  2 நாளாதான் பார்க்க முடியுது.


என்னமோ இவர் மட்டும் தான் அதி புத்திசாலி மாதிரியும், பதிவுலகில் எழுதும் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் மாதிரியும் நினைச்சிகிட்டு இருக்கார் போல சார்...

ஸ்டார் அண்ணே, நீங்க காட்டு காட்டென்று காட்டுவீங்களோ என்னமோ எனக்கு தெரியாது. இனி நான் என் அளவில் உங்களை காட்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம பெயரையும் உங்க டைரில எழுதி வச்சிக்கங்க.

ஆனாலும் ஸ்டார் அண்ணே, உங்களோட மோத எனக்கு கொஞ்சம், இல்ல ரொம்பவே பயமாத்தான் இருக்கு. ஏன்னா... சாக்கடையில் விழுந்து சண்டை போட கொஞ்சம் பயமா தான் இருக்கும்.

இவர் சாக்கடை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவரின் கீழ்கண்ட பதிவை முழுதாக ஒரு முறை படித்து விடுங்கள்.

லிங்க்-1

என்ன சகோ, இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? இந்தாங்க இந்த பதிவை பார்வையிடுங்கள். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வீர்கள்.


லிங்க்-2

டிஸ்கி-1 : இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், தயவு செய்து இந்த பதிவிற்கு யாரும் வோட்டு போட வேண்டாம். எனது வோட்டு எண்ணிக்கை "0 " ல இருக்கணும், இல்லாட்டி பவுடர் ஸ்டார் வகையறாக்கள் புண்ணியத்தில் மைனசில் இருக்க வேண்டும். ஏன்னா....இந்த பொறாமை புடிச்சவங்களுக்கு வோட்டு போட்டாலும் பிடிக்காது, ஒற்றுமையா  இருந்தாலும் பிடிக்காது. தானும் ஒற்றுமையா இருக்க மாட்டாங்க, அடுத்தவங்க இருந்தாலும் பொறாமைலேயே செத்துருவாங்க.

டிஸ்கி-2 : ஏன்பா பவுடர் ஸ்டார் வகையறாக்களா, நீங்களெல்லாம் ஒற்றுமையா இருக்க வேண்டாம்னு நாங்களெல்லாம் இலங்கை போலிஸ்லையா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கோம்? இல்ல ஐநா ஏதும் தடை விதிச்சி இருக்கா? நல்லா குரூப் சேர்த்து ஒற்றுமையா இருந்து மாத்தி மாத்தி வோட்டு போட்டுக்க வேண்டியது தானே...நாங்களா வேண்டாம்னு சொன்னோம்? ஏன் ஆள் சேர்க்க வேண்டியது தானே.... இவ்வளவு நயவஞ்சகமா இருந்தா உங்களோட எவன்யா சேருவான்? ஒருத்தர்  தமிழ் நாத்துன்னு ஆரம்பிச்சா உடனே அடுத்தவர் இங்கிலீஷ் நாத்துன்னு ஆரம்பிக்கிறார்.

ஆனா ஒண்ணுப்பா... உலகத்திலே ஒற்றுமையா இருக்கிறதா எதிர்க்கிற ஒரே குரூப் நீங்க தான்பா...


டிஸ்கி-3 :
உங்க குரூப் ரொம்ப பொறாமை பிடித்தது மற்றும் நயவஞ்சகமானது என்று நிறைய கேள்வி பட்டு இருந்தேன். அவற்றை மீண்டும் ஒரு முறை காட்டி, அறியாமல் இருந்த பிற சகோதரர்களுக்கும் அறிய தந்ததற்காக நன்றி.. மிக்க நன்றி...

டிஸ்கி - 4 : கண்டிப்பா தொடர்ந்து பவுடர் போட்டுகிட்டே தான் இருப்பேன்... ஆனால் வழக்கம் போல், உங்கள் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ தவறான வார்த்தைகளோ ஆபாசமோ இருந்தால் அவற்றிற்கு பதில் அளிக்க மாட்டேன். அதை வெற்றி என்று நீங்கள் எடுத்துக்கொண்டால், நீங்கள் தாராளமாக அதைக் கொண்டாடலாம். ஏனெனில் ஆபாச வார்த்தைகள் பேசி வெற்றி அடைய வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை. அதைவிட தோல்வியே மேல்.

டிஸ்கி-5: இந்த பிரச்சினையை நாங்கள் ஆரம்பிக்க வில்லை. ஆனால், ஆரம்பித்துவைத்தது நீங்கள்தான். உங்கள் மனதில் இருக்கும் வக்கிரத்தை, வன்மத்தை, குரோதத்தை மொத்தமாக கொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பதிவு எழுதிய நீங்கள் மதவெறியரா? அல்லது அதற்காக பதில் சொல்ல வந்த இஸ்லாமியர்கள் மதவெறியரா? என்ற கேள்வியை  உங்கள் மனசாட்சிக்கும்(?), நடு நிலையாளர்களின் மனசாட்சிக்குமே விட்டுவிடுகிறோம். 

இன்னும் காட்டுவேன்....


வியாழன், டிசம்பர் 22, 2011

நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு மாறிய பிரபல பதிவர்....


                                                               

இவ்வளவு நாளும் கிடைக்கும் சந்து பொந்து கேப்ல எல்லாம் நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த பிரபல பதிவர் கே.ஆர்.பி. செந்தில் அவர்கள்
டிசம்பர் 20 அன்று பதிவிட்ட ஒரு கவிதை மூலம் தான் நாத்திகவாதி அல்ல கடவுளை நம்பும் ஆத்திகவாதி என்ற உண்மையை முதல் முறையாக
உலகிற்கு தெரிவித்து உள்ளார்(நான் அறிந்த வகையில்). அவரை கடவுள் படைத்த நமது உண்மையான உலகிற்கு வரவேற்கிறேன்.

முதலில் அவரின் கவிதையை பார்த்து விடுங்கள், அதன் பின் எனது சந்தேகங்களை கேட்கிறேன்.

ஆற்றாமையாகத்தானிருக்கும்
எனக்கு..

கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..

அரசுப் பேரூந்தின் நடத்துனர்கள் 
ஏழை வயசாளிகளை 
ஒருமையில் விளிக்கும்போது
என்ன மனித நேயமென..

புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட 
பின்னும் 
முகாம்களில் தவிக்கும் 
சகோதரங்களை நினைத்து 
புத்தனும் செத்துப் போனான் என..

தெரு வண்டி வியாபாரியிடம் 
பத்து ரூபாய்க்கு கை நீட்டும் 
போலீஸ்காரன் நிலை நினைத்து 
இதுவா கடமை?  என..

கடவுளை 

இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..

ஓட்டுக்கு காசு வாங்கி 
தேர்தல் முடிந்தபின்னர் 
ஐயோகோ 
ஆட்சி சரியில்லை எனும் 
மக்களை நினைத்து 
உன் உரிமை இதுவா என..

தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..

இந்த கவிதையை படித்த உடன் தோன்றிய எனது சந்தேகங்கள்...

/* கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..   */


பெரியவர்களையும், சிறு பிள்ளைகளையும் மற்றும் பெண்களையும் கையேந்த விட்டது கடவுளா அல்லது மனிதர்களா?
அப்படி அவர்களை ஆக்கியதற்காக மனிதர்களாகிய நாம் தான் தூக்கில் தொங்க வேண்டும். அத விட்டுட்டு கடவுளை கொல்றாராம். நீங்க(நாம) பண்ற தப்புக்கு கடவுள கொள்ளுவீர்களா? நல்லா இருக்குப்பா உங்க நியாயம்....


/*
இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..   */

படைத்து, உயிர் கொடுத்து பரிபாலிக்கும் இறைவனை இல்லை என்று கூறும் துரோகிகளை மற்றும் முட்டாள்களை விட இனம் பிரித்து வணங்கும் மக்கள் ஒரு படி மேல் தான் நண்பரே.

/*
தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..  */

உங்களோட இந்த வைர வரிகளை மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறேன். You  rocks  here.

ஆனாலும் "கடவுளை கொன்றுபோட..." என்ற வரிகள் மூலம் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு நன்றிகள்.
(உயிருடன் இருக்கும் ஒன்றைத் தான் கொள்ள முடியும்).
 இன்று போலவே என்றும் இறை நம்பிக்கையுடன் நீங்கள் வாழவும்,  மேலும் உங்கள் நாத்திக நண்பர்களையும் ஆத்திகத்தை நோக்கி அழைக்க வேண்டும் என்றும்  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அண்ணனோட தளத்தில் உள்ள வரி "எங்கே செல்லும் இந்த பாதை". பாவம் எங்க போறதுன்னே தெரியாம சுத்திகிட்டு இருக்காரு போல. கவலை படாதீங்க நண்பா.
 
கடவுளிடம் தான்  போகும் இந்தப் பாதை....

 


சனி, நவம்பர் 19, 2011

கழுதைக்கு வாக்கபட்டாலாவது உதையோட போகும்... நாம வாக்கபட்ருக்கது.....





                                                            
                                                                                                                 
ஏன் தமிழக மக்களே இப்படி செய்தீர்கள்? சென்ற தேர்தலில் நான் அ.தி.மு.க விற்கு வோட்டு போடவில்லை. நீங்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததால் தான் செல்வியின் ஆட்சி வந்தது. வாக்களித்த நீங்கள் கடிபடுவது நியாயமானது? தேவை இல்லாமல் அவரை ஆதரிக்காத நான் ஏன் கடிபடவேண்டும்?

என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க இந்த அம்மா? கஜானவில காசு இல்லாட்டி, வரி போட்றதும், விலைவாசியை ஏத்துறதும்  தான் வழியா?  இத செய்றதுக்கு நீங்களும், படிச்ச அந்த பொடலங்கா IPS  ஆபிசர்களும் எதுக்கு? படிக்காத பாமரன்  கூட இந்த பட்ஜெட்டை போடுவாங்களே?  ஏன் நானே போடுவேனே? ஆட்சி செய்ய தெரியாட்டி ஊர பாத்திக்கிட்டு போங்கம்மா.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.


பொருள் ஈட்டுதல் என்பதில் தான் உங்கள் திறமை இருக்கு. அதில காட்டுங்க உங்க வேகத்த. வருமானத்திற்கு வழியா இல்லை?  நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எல்லா அரசு சார்ந்த திட்டங்களிலும்  10 %கமிசன் அடிச்சுகிட்டு  இருக்காங்கல்ல எல்லா MLA, மந்திரி , மாவட்டம், வட்டம்  மற்றும் அல்லக்கைகள்.  அது உங்களுக்கு தெரியாதா?  அவங்ககிட்ட போய் நிதிநிலை ரொம்ப கேவலமா இருக்கு , இந்த 5  வருஷம் மட்டும் ஊழல் பண்ணாதீங்கன்னு   சொல்லி,  அத நிறுத்த சொல்லுங்க, மொத்த செலவில 10 % சேமிக்கலாம், அதன் மூலம் பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை காலத்துக்கும் கட்டுக்குள்ள வச்சிருக்கலாம். தமிழகத்தில 40 % அளவுக்கு மின் திருட்டு அல்லது மின் இழப்பு மூலம் மின்சாரம் வீணாகிறது . மின் வாரிய ஊழியர்களையும் காவல் துறையையும் லஞ்சம் வாங்காம மனசாட்சியோட இந்த விசயத்தில வேலை செய்ய சொல்லுங்க. மின்சார கட்டணத்த அடுத்த 50 வருசத்துக்கு ஏத்தவேண்டியது இல்ல.

எனக்கே இத்தனை வழிகள் தோன்றும் பொழுது உங்களுக்கு தோன்றாமல் இருக்காது. ஆனா உங்களுக்கு உங்க கட்சிக்காரன் கொள்ள அடிக்கிறது நிற்கக் கூடாது, தனியார் பால் அதிபர்கள் கொடுக்கும் கோடிகள் உங்களுக்கு வேணும். ஆனால் அரசும் நடக்கணும்னா பக்கத்து மாநிலங்களுக்கு போய் கொள்ளை அடிச்சாத்தான் முடியும். அத வேணும்னாலும் செய்யுங்கள். எங்களை கொள்ளை அடிக்கிரத  மட்டும் விட்டுடுங்க.

அது சரி, இப்பவும்  இலவச திட்டங்கள் தொடருமா? இல்ல அதுக்கும் ஆப்பா? அப்படி தொடர்ந்தால், தயவு செய்து ஒரு பிஞ்ச செருப்பையும் இலவசமா குடுங்க. உங்கள்கிட்ட ஆட்சியை தந்ததுக்காக எங்கள நாங்களே செருப்பால அடிச்சிகிறோம். அத தவிர இந்த ஏழைகளால என்னதான் பண்ண முடியும்?

டிஸ்கி : கலைஞர் ஆட்சில இருக்கும் பொது கவுன்ட் டவுன் வச்ச அந்த புண்ணியவான்களே. இந்த ஆட்சிக்கும் ஏதாவது பண்ணுவீங்களா?  கவுன்ட் டவுன்லாம் வேணாம், நாலரை வருஷம் கொறஞ்சு வர்றதுக்குள்ள தமிழ் நாட்ல யாருமே இருக்க மாட்டாங்க, சுடுகாடுதான் இருக்கும். உடனே நடக்கிறமாதிரி ஏதாவது யோசிங்க.


புதன், ஜூன் 01, 2011

சேலம் மற்றும் மன்னார்குடியை ஆந்திராவிற்கு தாரைவார்த்த தமிழக அரசு



                                                                                                                                

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் செய்த அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று "கழக அரசு பதவி ஏற்ற உடன் வழிப்பறி திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டதாக கேள்வி பட்டேன்" என்பதுதான். இந்த பேட்டி எப்படி இருந்தது என்றால் என்னமோ கலைஞர் தான் கொள்ளையர்களை கொள்ளை அடிக்க சொன்னது போலவும், அவரின் ஆட்சி முடிந்த உடன் இனி நமக்கு சப்போர்ட் யாரும் இல்லை என்று கொள்ளையர்கள் ஓடி விட்டது போலும் இருந்தது.

உண்மையா இது? என்று பார்த்தால் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய கொள்ளை சம்பவங்கள் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் நடந்துள்ளன. சமீபத்திய 3  நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.

சம்பவம் 1 : தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க MLA வாக இருக்கும் பழ.கருப்பையா அவர்களின் மனைவி இடமே சங்கிலி பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

சம்பவம் 2 : நேற்றைய முன் தினம் சேலத்தில் 150  பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் 3 : நேற்றைய தினம் மன்னார்குடியில்(சின்னம்மாவின் ஊர் என்பதை இங்கு நினைவில் வைக்க வேண்டும்) 500  சவரன் தங்க நகைகள் அடகுக் கடையில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.




                                                            

கலைஞர் ஆட்சியிலாவது 10 பவுன் 20 பவுன் என்று கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது என்னடா என்றால் 100 பவுன் 500 பவுன் என்று பல்க்காக ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் சொன்னது போல் வழிப்பறி செய்யும் குட்டி திருடர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி அங்கிருந்து ப்ரொபசனல் திருடர்கள் இங்கு வந்து விட்டார்களா? அல்லது சேலத்தையும் மன்னார்குடியையும் ஆந்திராவிற்கு தமிழக அரசு தாரை வார்த்து விட்டதா?




மக்கள் எதிர்பார்ப்பது உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே, பேட்டிகளை அல்ல. சென்ற ஆட்சியில் நிறைய பேட்டிகள், பேச்சுகள் மற்றும் கவிதைகளை கேட்டு விட்டோம்.


சனி, மே 28, 2011

இந்த வருட IPL T20 யிலும் சென்னையே வெற்றி பெரும் - ஒரு பார்வை


                                                                  

கடந்த நான்கு வருடங்களாக நடை பெற்றுவரும் இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான IPL -ல்  இந்த வருடமும்  வெற்றி பெரும் வாய்ப்பு  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கே  பெருமளவில் உள்ளது. இதை நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை மாறாக ஒவ்வொரு அணியின் குறை நிறைகளை அலசியே சொல்கிறேன்.

நடந்து முடிந்த எல்லா IPL போட்டிகளிலும் அரை இறுதி சுற்றை அடைந்த ஒரே அணி சென்னை தான். வெற்றி நிலவரங்கள்.

2008 - இறுதிச் சுற்றில் தோல்வி. 3  விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

2009 - அரை இறுதிச் சுற்றில் தோல்வி. 6  விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

2010 - கோப்பையை கைப்பற்றி சாம்பியன். எதிர்த்து ஆடியது மும்பை இந்தியன்ஸ், 22  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

2010 - சாம்பியன்ஸ் கோப்பையில் முதல் முறையாக பங்கு பெற்று கோப்பையை வென்றது.

2011 - இறுதி போட்டிக்கு தகுதி. எதிர்த்து விளையாடப் போவது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.




பேட்டிங் வரிசை:                                                      
 
எப்படி இந்த வெற்றிகள் சென்னைக்கு சாத்தியமாகின?  நிச்சயமாக அதன் மிக வலுவான பேட்டிங் வரிசை தான் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாகும். கடந்த எல்லா IPL போட்டிகளின் போதும் இக்கட்டான தருணங்களில் மிகச் சிறப்பாக விளையாடியே இந்த வெற்றிகளை அவர்கள் பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் ஒருவரே இருப்பார்(கைல், பொல்லார்ட், யூசுப் பதான் போன்றோர்). இந்த இடத்தில் தான் சென்னை அணி மற்ற அணிகளுடன் வேறு படுகிறது. ஆம், சென்னை அணியில் சுரேஷ் ரைனா, டோனி மற்றும் அல்பி மோர்கல் என்ற 3 அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளார்கள். ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை கரை சேர்த்து விடுகிறார்.


                                                                  

பந்து வீச்சு:

 போல்லின்ஜர் என்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் அணியில் இணையும் வரை சென்னை பந்து வீச்சு பரிதாபகரமான நிலையிலே இருந்தது. அவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இணைந்தவுடன் பந்து வீச்சிலும் ஓரளவுக்கு நல்ல நிலையை அணி அடைந்தது. போல்லிஞ்சரின் பந்து மற்ற பந்து வீச்சாளர்களை ஒப்பிடுகையில் சற்று மேல் எழும்பி செல்கிறது, அதனால் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் சிறிது தடுமாறி விடுகிறார்கள். நம்மவர்கள் எப்பொழுதுமே BOUNCER பந்துகள் என்றால் கொஞ்சம் அலறுவார்கள். சுழல் பந்து வீச்சில் சென்னை பையன் அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். ஆகா மொத்தத்தில் பந்து வீச்சும்  மோசம் என்று சொல்லி விட முடியாது.

 இந்த நிலையில் அணித் தலைவர்   டோனியின் அணுகு முறையும் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும். மற்ற அணித்தலைவர்கள் போல் பொறுப்புகளை மற்றவர்களிடம் தள்ளாமல் இவர் தன் தோளில் சுமக்கிறார். இது தான் இவருடைய வெற்றியின் ரகசியம் ஆகும். இந்த அணுகு முறை நிச்சயம் சென்னைக்கு அனுகூலம் ஆகும்.

 இறுதிப் போட்டி:

 இன்று நடக்கும் இறுதிப் போட்டியை பொறுத்த வரையில் Gayle லை 35 ரன்னுக்குள் அவுட் செய்து விட்டால் வெற்றி சென்னைக்கே. இவர் ஒருவர் தான் சென்னைக்கு பெரிய சவால். இந்த சவாலில் வென்று  விட்டால் கோப்பை சென்னைக்கே. அதேபோல் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த வருடம் சென்னையில் நடந்த எந்த போட்டியிலும் சென்னை அணி தோற்க்கவில்லை என்பதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும்  அந்த அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.

டாஸ் வென்றால் கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங்கை தேர்வு செய்து விட வேண்டும். சென்னை மைதானம் நேரம் செல்லச் செல்ல சிறிது SLOW  ஆகிவிடும். நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் செய்த தவறை சென்னை செய்து விடக்கூடாது.

 ஆகா மொத்தம் இன்றைய போட்டியில் சென்னைக்கு வெற்றி வாய்ப்பு 80 சதவீதமாக உள்ளது.


வெள்ளி, மே 27, 2011

செல்வி ஜெயலலிதாவிற்கு ஒரு ஷொட்டு.... ஒரு குட்டு...


ஷொட்டு - சட்ட மேல்சபை

                                                                        
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் இனி தமிழகத்தில் மேல்சபை வராது என்று அறிவித்து உள்ளார். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவாகவே இந்த முடிவு தெரிகிறது. எதுக்கு சட்ட மேல்சபை? அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று பார்த்தால், ஒன்றும் இல்லை. தமிழக சட்டசபையில் பேசமுடியாத எந்த விஷயத்தை மேல் சபையில் பேசிவிடப் போகிறார்கள்?

யாருக்கேனும் பதவி கொடுக்காவிட்டால் அல்லது கொடுக்க முடியாவிட்டால் அவர்களுக்கு தன் இதயத்தில் இடம் உண்டு என்று கூறுவார் கலைஞர். இதயத்தில் கொடுத்த இடத்தால் சமாதானம் ஆகாதவர்களுக்கு பதவி கொடுக்கவே சட்ட மேல்சபை பயன்படும். மற்றபடி அதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

இப்பொழுது இருக்கும் ஒவ்வொரு MLA க்களுக்கும் மாத சம்பளமாக ருபாய்      45 ,000 , படி, பாதுகாப்பு செலவு மற்றும் இத்யாதி இத்யாதி என்று ஒரு மாதத்திற்கும் ஆகும் செலவே லட்சத்தை தொடும். அப்படி இருந்தும் அவர்களில் பாதி பேர் சட்டசபையில் பேசுவதே இல்லை, பேசாட்டியும் பரவாயில்லை பாதி பேர் தூங்கிர்றாங்க. இந்த நிலையில் சட்ட மேல் சபையை கொண்டு வந்து அவர்களுக்கும் தெண்டமாக செலவு செய்ய வேண்டுமா? தேவையே இல்லை. உள்ளவங்க சட்டசபையில் கிழித்தால் போதும், புதுசா யாரும் வந்து ஒன்னும் செய்யவேண்டியது இல்லை.

முதல்வரே, ரொம்ப நல்ல காரியம் செஞ்சு இருக்கீங்க.உங்களின் இந்த நல்ல முடிவை கை தட்டி ஆராவரித்து வரவேற்கிறோம்.

குட்டு - சமச்சீர் கல்வி

                                                           
முதல்வரே.. என்ன முதல்வரே இப்படி பண்ணிட்டீங்க. கிராமப்புற மாணவர்களுக்கும் நகரத்து மாணவர்களுக்கும் கல்வித் தரத்தில் பெரிய வித்தியாசங்கள் உள்ளன என்பது காலம் காலமாக தமிழகத்தில் இருந்து வரும் பிரச்சனை.  அந்த பிரச்சனையை தீர்க்க சமச்சீர் கல்வி தான் ஒரே வழி என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை களைவதற்கான முதல் படி சமச்சீர் கல்வி அல்லவா? முதல் முயற்சியே தடை படலாமா? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது நாடறிந்த முதுமொழி ஆயிற்றே.

ஆகவே முதல்வரே...  பாட திட்டங்களில் குளறுபடிகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே அறிவு சார்ந்த நடவடிக்கையாக எனக்கு படுகிறது. கலைஞர் தன்னை பற்றி பாடத்திட்டங்களில் சேர்த்து இருந்தால் அந்த பாடத்தை தடை செய்து விடுங்கள், இதில் நாட்டு மக்களாகிய எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே போல் நீங்களும் வரும் ஆண்டுகளில் உங்கள் பற்றிய பாடங்களை சேர்த்து விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம்.

தன்னுடைய ஆட்சியின் பொது தன்னைப்பற்றியே பெருமையாக மாணவர்கள் படிக்கும் பாடங்களில் சேர்ப்பது என்பது கொஞ்ச நஞ்சம் ஈனம் மானம்  உள்ள மக்கள்கூட செய்ய முடியாத செயல். எப்படிதான் தமிழக அரசியல் வாதிகள் செய்கிறார்களோ???? பொது மேடையிலும், சினிமா நிகழ்சிகளிலும் பெருமை பேசிக் கொள்கிறீர்களே அது போதாதா? மாணவர்கள் மடியிலும் வந்து கை வைக்க வேண்டுமா?? வெட்கக்கேடு.

தயவு செய்து சமச்சீர் கல்வி முறையில் உள்ள குறைகளை களைந்து அதை தொடர்வதற்கான முயற்சிகளை எடுங்கள். அதை விடுத்து அந்த திட்டத்தையே நிறுத்துவது என்பது கிராமப் புற தற்போதைய மாணவர்களுக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் செய்யும் துரோகமே ஆகும். கிராமப் புற ஏழைகளின் வயித்தில் அடித்த எந்த ஆட்சியாளரும்  நீண்ட நாட்கள் சந்தோசமாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.


சொல்வது எங்கள் தலையாய கடமை... முடிவு உங்களிடம்.


திங்கள், மே 23, 2011

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடியலப்பா...



                                                               

போன வெள்ளிக்கிழமை சில பிரபல(???) மற்றும் பிரபலமில்லாத பதிவர்களின் வலைத்தளங்களை பார்வையிட்டுக்கொண்டு இருந்தேன். சிலருக்கு கமெண்ட்ஸ் சும் போட்டேன். அதில் சிலர் கமெண்ட் தணிக்கை செய்துள்ளார்கள். சரி கொஞ்ச நேரத்தில பாத்துட்டு கமெண்ட்ஸ்ச வெளியிட்டு விடுவார்கள் என்று பார்த்தால் ஞாயிற்று கிழமை வரை வெளியிடவே இல்லை.

அதனால கடுப்பாகி தான் இந்த பதிவை எழுதுகிறேன்...

அய்யா anonymous அப்ரசண்டிகளா, உங்களால் தான் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன. நீங்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதால் தான், பதிவர் நண்பர்கள் இது போன்று கமெண்ட்களை மட்டுறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் தைரியமாக சொந்த பேரில் வந்து சொல்ல வேண்டியது தானே? எனக்கு தெரிந்து எல்லாப் பதிவர்களும் மாற்று கருத்தை பிரசுரிக்கவே செய்கிறார்கள். அப்புறம் ஏன் தயங்குகிறீர்கள்?


எங்களுடன் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சண்ட போடுங்க, நாங்க வேணாம்னு சொல்லல, இன்னும் சொல்லப்போன வரவேற்கிறோம், ஆனால் BAD  வோர்ட்ஸ் மட்டும் வேணாம், மம்மி பாவம்.... என்ன டீல் ஓகே யா?(ஆமாம், ஆயிரம் பேர் சொல்லி கேட்காதவர்கள் நான் சொல்லியா கேட்பீர்கள்).
                                                                     
சரி நம்ம பதிவர்கள்கிட்ட வருவோம்....

எல்லா கமெண்ட் MODERATION  வச்சிருக்கவைங்களுக்கும்  ஒன்னு சொல்லிக்கிர்றேன். தினமும் பார்த்து கிளியர் பண்ண முடிஞ்சா வைங்க, இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கி விடுங்கடா...

(மேற்கண்ட வரிகளை மட்டும் கவுண்டமணி பாணியில் படிக்கவும்... தயவு செய்து மரியாதைக் குறைவாக எடுத்துகொள்ளாமல் கவுண்டர் பாணி நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்).

நாங்க போட்ட கமெண்ட்ஸ்ச நாங்க பாக்கவே ரெண்டு மூணு நாலு காத்திருக்கணுமா?
 
கடுப்பேத்துராய்ங்க மை லார்ட்...


சனி, மே 21, 2011

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஆனந்த விகடன்




 வழக்கமான ஆர்வத்துடன் இந்த வார ஆனந்த விகடனை வாங்கி பார்வையை செலுத்தினேன். தலையங்கத்தில், நடந்து முடிந்த தேர்தலில் ஏன் கலைஞர் தோற்றார்  என்பதற்க்கான நியாயமான காரணங்களை பட்டியலிட்டும் , அதே நேரம் ஜெயலலிதாவின் கடந்த கால தவறுகளையும் சுட்டி காட்டி, இவை இரண்டும் போல் இல்லாமல் நல்லாட்சி தாருங்கள் என்று இருந்தது.  தலையங்கம் மிகவும் அற்புதமாக நடுநிலையுடன் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அதற்க்கு சில பக்கங்கள் தள்ளி தலையங்கத்தில் காட்டிய புத்திசாலிதனத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் சில வரிகள் இருந்தன. அந்த கட்டுரையின் தலைப்பு.



இலையைத் துளிர்க்கவைத்த  இரண்டு தலைகள்...


விகடன் கூறும் இரண்டு தலைகள் யார் தெரியுமா?

சசிகலா மற்றும் சோ ராமசாமி


                               

அதற்க்கு விகடனார் கூறும் காரணம். சோ ராமசாமி தான் விஜயகாந்துடன் கூட்டணி முக்கியம் என்றாராம், சசிகலா சரியான வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தாராம்.

நான் விகடனை பார்த்து கேட்கிறேன். அ.தி.மு.க வேட்பாளர்கள் நல்லவர்கள் என்பதற்க்காகத்தான் மக்கள் அந்த வேட்பாளர்களுக்கு வக்களித்தார்களா? விஜயகாந்துடன்  கூட்டணி வைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற அந்த கடினமான முடிவை எடுக்க சோ வால்தான் முடியுமா? அரசியல் அறிவு அறவே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட கணிக்க கூடிய கணிப்பல்லவா அது... பொதுமக்களை விடுங்கள் என் மகனுக்கு கூட தெரிந்த கணிப்புதான் அது.
அதுகூட தெரியாமல் தான் ஜெயலலிதா  இருந்தாரா அவருக்கு சோ சொல்லி புரிய?

                                                              

யாரை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறீர்கள் விகடனாரே? சோ வையா? ஏன்??? தமிழகத்தில் இலையை துளிர்க்க வைக்க அவர் ஏதும் புரட்சி செய்தாரா? கடந்த ஐந்து வருடங்களாக கருணாநிதியின் ஆட்சியை அகற்ற மக்களுடன் இணைந்து போராடினாரா? ஒரு புண்ணாகும் இல்லைல... அப்புறம் என்ன?

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் வாக்குச் சீட்டில் கொட்டி இலையை துளிர்க்க வைத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க மக்கள் புரட்சி. பெரும்பாலான மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை...  மக்களின் கஷ்டம் புரியாத, மக்களோடு மக்களாக இணைந்து ஒரு போராட்டம் கூட நடத்திராத  சோ மற்றும் சசிகலாவிற்கு சமர்ப்பிக்காதீர்கள். அது நியாயம் அல்ல. (பத்திரிகை) தர்மமும் அல்ல.

அப்படி தான்தான்  காரணம் என்று சோ நினைப்பாரேயானால் அதை அவர் தனது துக்ளக்கில் எழுதி மகிழட்டும். யார் கேட்கப்போகிறார்கள்?.ஆனால் ஒரு வெகுஜன பத்திரிகையாகிய நீங்கள் எழுதி அவரை மகிழ்விக்க வேண்டாம்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் விகடனாரே.....
இப்படி சிறுபிள்ளைத்தனமாக எழுதுவது ஒரு பாரம்பரிய பத்திரிகைக்கு அழகல்ல....




வியாழன், மே 19, 2011

அ.தி.மு.க வெற்றிக்கு நானே காரணம் - நடிகர் சிங்கமுத்து பரபர பேட்டி....



சென்ற திங்கட்கிழமை காலையில் எங்கள் அள்ளி விட்டான் கம்பெனி பத்திரிகை அலுவலகத்திற்கு  நடிகர் சிங்கமுத்து போன் செய்து உங்களிடம் சில விசயங்களை பகிர வேண்டுமே, சந்திக்க முடியுமா? என்றார். அதற்க்கு நாங்கள் வேறு நல்ல வேலைகள் பல உள்ளனவே என்றோம். அப்படியா, பரவாயில்லை நானே வருகிறேன் என்று எங்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்தே விட்டார். இதோ எங்கள் டுபாக்கூர் நிருபர் அஞ்சும் சிங்கம், அவருடன் கண்ட மினி பேட்டி....

நிருபர் அஞ்சும் சிங்கம் : வணக்கம் சிங்கமுத்து சார், நல்லா இருக்கீங்களா?

சிங்கமுத்து : நல்ல வேலை நீனாவது கேட்டியே தம்பி, நல்லா இருக்கேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : ஏன் சார் இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

சிங்கமுத்து : பின்ன என்னப்பா, தேர்தல் அப்போ வேகாதா வெயில்ல நல்லா வேலை வாங்கினாங்க. தேர்தல் முடிஞ்ச உடனே ஒரு பய கண்டுக்க மாட்டேங்கிறான்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : பின்ன தேர்தலுக்கு  பிறகு சபாநாயகர் பதவி தருவாங்கன்னு எதிர்பார்த்தீங்களா?

சிங்கமுத்து : இந்த நக்கல் தானே வேணாங்கிறது. சபாநாயகர் பதவி எல்லாம் தர வேணாம், ஒரு நன்றி சொல்லலாம்ல.

நிருபர் அஞ்சும் சிங்கம் : அதான் அம்மா தேர்தல் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றின்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் என்ன, விடுங்கண்ணே.

சிங்கமுத்து : இல்ல... இருந்தாலும் ... வேகாத வெயில்ல வெந்து இருக்கேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சும்மா வேகாத வெயிலு வேகாத வெயிலுன்னுகிட்டு...அப்புறம் மத்தவங்கல்லாம் என்ன வெந்த வெயில்லையா வெந்துகிட்டு இருக்காங்க??? எல்லாருக்கும் வேகாத வெயில்தான்.

சிங்கமுத்து : இப்படி எல்லாம் பேசின, அப்புறம் காத கடிச்சு துப்பிபுடுவேன்... ஆமாம்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சரிண்ணே, ஒரு வேலை அம்மா உங்கள  கூப்பிட்டு அமைச்சர் பதவி தந்தா ஏத்துக்குவீங்களா?

சிங்கமுத்து : என்ன தம்பி இப்படி எக்கு தப்பா கேட்டுட்ட?

நிருபர் அஞ்சும் சிங்கம் : கேட்ட கேள்விக்கு பதில்...ஏத்துக்குவீங்களா? மாட்டீங்களா?

சிங்கமுத்து : அது வந்து...அது வந்து... சொத்து பாதுகாப்பு துறைன்னு ஒன்னு ஆரம்பிச்சு அதுக்கு அமைச்சரா போட்டா ஏத்துக்குவேன் தம்பி.

நிருபர் அஞ்சும் சிங்கம் : சொத்து பாதுகாப்பு துறையா??? அப்படி ஒரு துறை இல்லையே?

சிங்கமுத்து : இருக்குன்னு சொன்னனா...அப்படி ஒரு துறையை ஆரம்பிச்சா இருக்கேன்னு சொன்னேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம்: இந்த துறை தான் வேணும்னு சொல்ல ஏதாவது காரணம் இருக்கா?

சிங்கமுத்து : இல்ல.. வடிவேலு தம்பிக்கு சொத்து வாங்கி குடுத்ததில கொஞ்சம் முன் அனுபவம் இருக்கு... அனுபவம் உள்ள துறைனா கொஞ்சம் ஈசி தானே.

நிருபர் அஞ்சும் சிங்கம்: எது ஈசி? சொத்த லவட்டுறதா?

சிங்கமுத்து : இப்படி எடக்கு மடக்காவே கேள்வி  கேட்டீன்னா  அப்புறம் கோயில்ல காசு வெட்டி போட்டுருவேன்  ஆமாம்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: சரின்னேன் டென்ஷன் ஆகாதிங்க... உங்களுக்கும் வடிவேலுக்கும் என்னதான் பிரச்சனை?

சிங்கமுத்து: அது ஒன்னும் இல்லப்பா.. அது ஒரு சில்லற  பிரச்சனை... தம்பி நம்மகிட்ட சொத்து வாங்கி கேட்டுச்சு... நானும் வாங்கி  குடுத்தேன் அவ்வளவுதான்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது நல்லா விசயமாச்சே... இதுக்கா அவரு உங்கள இப்படி கரிச்சு கொட்றார்???

சிங்கமுத்து: அதுல ஒரு சின்ன கசமுசா ஆகிருச்சு, வடிவேலு தம்பி குடிகாரர் ஆச்சா அதனால அவரு குடிச்சே சொத்த அழிச்சிருவாறு அப்படிங்கிற நல்ல எண்ணத்தில சொத்து எல்லாத்தையும் என் பேர்லே வாங்கிட்டேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது தான் உங்களுக்கு சில்லற பிரச்சனையா???(அஞ்சும் சிங்கம் சத்தம் இல்லாமல் மனசுக்குள்... 'கொய்யால உன்னை எல்லாம் அடிச்சே சாவடிக்கனும்டா') சரி அண்ணேன் ... அ.தி.மு.க வின் வெற்றில உங்க பங்களிப்பு என்னண்ணே?

சிங்கமுத்து : என்ன தம்பி ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு உங்களுக்கு தெரியலையே?

நிருபர் அஞ்சும் சிங்கம்: என்ன ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு?

சிங்கமுத்து: இல்ல... அ.தி.மு.க ஜெயிச்சதே என்னாலதான்னு... நான் மட்டும் எதிர்ப்பிரச்சாரம் செய்யலைன்னா இந்நேரும் கலைஞர்ல முதல் அமைச்சரா ஆகி இருப்பாரு.

நிருபர் அஞ்சும் சிங்கம்:அண்ணே இத்தோட பேட்டிய முடிச்சுக்குவோம்... நான் புள்ள குட்டிகாரன்... இப்பவே ஆட்டோ வர்ற சத்தம் கேட்குது... என்ன விட்ருங்க நான் ஓடணும்....வேணும்னா நீங்க எங்க ஓனர்கிட்ட  பேட்டிய தொடருங்க....

சிங்கமுத்து: அப்படியா தம்பி.... ரொம்ப சந்தோசம்...உங்க மொதலாளி பேரு என்ன?

நிருபர் அஞ்சும் சிங்கம்:  P .R . K . செமதில்


புதன், மே 18, 2011

பயோ டேட்டா....சராசரி இந்தியக் குடிமகன்...




                                                  
                                 பயோ-டேட்டா...


பெயர் : இந்தியக் குடிமகன்

மொழி : 1500  க்கும் மேல்

இனம் : கணக்கில்லை

பிடித்தது     :  சினிமா மற்றும் பேச்சு

பிடிக்காதது :  அடுத்தவர்களின் தவறு

விரும்புவது : ஊழலை ஒழிக்க

விரும்பாதது : அதற்காக தான் போராடுவதை

எதிரி : பாகிஸ்தான்

உப எதிரி : சீனா

ஆதர்ச புருசர்கள் : சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்

பார்க்க விரும்புவது : இந்தியாவை வல்லரசாக

பார்த்தது : விஜயகாந்தின் வல்லரசு

வாழவேண்டியவர்கள் : தானும் தன் குடும்பத்தாரும்

மற்றவர்கள் : எக்கேடு கெட்ட எனக்கென்ன

பிடித்த விளையாட்டு : கிரிக்கெட்... கிரிக்கெட் ... கிரிக்கெட் மட்டுமே


தவறே செய்யாத நாடு : இந்தியா

தவறை மட்டுமே செய்யும் நாடு : பாகிஸ்தான்

பலம் : மக்கள் தொகை

பலவீனம் : பலமே பலவீனம்

நம்புவது : ஆட்சியாளர்களை(இன்னுமா நம்புறீங்க???)

சாதனை : வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் பெரும்பாலோனோர் இன்னும் நல்லவர்களாக இருப்பது.


திங்கள், மே 16, 2011

பயமாய் இருக்கிறது முதல்வரே ... மீண்டும் ஆரம்பித்து விடுவீர்களோ???




                                                                   

மிகப் பெரும்பான்மை தொகுதிகளை வென்று மீண்டும் தமிழக முதல்வராக வந்ததற்கு உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் . வெற்றிக் களிப்பில்  உள்ளபோதும், சென்ற ஆட்சியை ஏன் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று நினைத்தால்  உங்களுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.

நீங்கள் மாறிவிட்டீர்களா புதிய முதல்வரே? யோசிக்கும் பொழுது ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நீங்கள் ஜெயா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி கொடுத்தீர்கள். அந்த பேட்டியை எடுத்தவர் உங்களின்  அடிமைகளில் ஒருவரான  ரபி பெர்னாட் அவர்கள்(மன்னிக்கவும் ரபி பெர்னாட்,  இதைவிட சிறந்த வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை, நீங்கள் உங்கள் தனித்தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. இப்பொழுது நீங்கள் அ.தி.மு.க வின் மற்றொரு கொ.ப.செ அவ்வளவே). எனக்கு இந்த கணம் வரை பசுமையாக ஞாபகம் இருக்கிறது, அந்த பேட்டியில் நீங்கள் சொன்னீர்கள் "இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல மாறாக இது தமிழக மக்களின் வெற்றி" என்று, நிறம்ப சந்தோசமாக இருந்தது அதைக்  கேட்ட பொழுது. ரொம்ப தன்னடக்கத்துடன் இருந்தீர்கள். இனி இப்பொழுதும்  எப்பொழுதும் அப்படித்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.


                                                                     




ஆனால் புதிய தலைமைச்செயலக விசயத்தில் உங்களின் அணுகுமுறை அறிவு சார்ந்ததாய் தெரியவில்லை. கருணாநிதி கட்டினார் என்பதைத் தவிர அதை நீங்கள் வெறுக்க என்ன காரணம் இருக்க முடியும்? இந்த புறக்கணிப்பு தேவைதானா? உங்களின் ஈகோ வைக்காட்ட மக்களின் வரிப்பணத்தை தான் வீணடிக்க வேண்டுமா? தயவு செய்து யோசியுங்கள். கருணாநிதி செய்த எதுவும் வேண்டாம் என்றால் அவர் வகித்த முதல்வர் பதவியும் வேண்டாம் என்று சொல்வீர்களா???

எனக்கு பயமாய் இருக்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மிக அழகிய முறையில் கட்டி அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளார் கருணாநிதி. அவரை எதிர்க்கும் குணத்தால் தயவு செய்து அதற்க்கு எந்த தீங்கும் செய்து விடாதீர்கள். முடிந்தால் அதற்க்கு இன்னும் மெருகூட்டி உங்கள் மதிப்பை இன்னும் உயர்த்திக் கொள்ளுங்கள். அதே போல் சென்ற ஆட்சியின் நல்ல திட்டங்கள் அனைத்தையும் தொடருங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது.

நிறைய புதுமை செய்வேன் என்று வாக்களித்து உள்ளீர்கள். நன்றாக செய்யுங்கள், உங்களை பாராட்ட காத்திருக்கிறோம். ஆனால் மனம் போன போக்கில் நடந்தால் எதிர்ப்பை காட்டவும் தயாராக உள்ளோம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

வெற்றிக்குப் பிறகு உங்களிடம் அமைதி தெரிகிறது. அது எங்களுக்கு சந்தோசச் செய்தி. ஆனால் தலைமைச் செயலக விஷயத்தால் எங்களுக்கு ஒரு பயம் வருகிறது. அது உங்களுக்கு கெட்ட செய்தி.

உங்களை கணிக்க முடியவில்லை... மீண்டும் மாறிவிடுவீர்களோ ? பயமாய் இருக்கிறது.
     
                                                   


சனி, மே 14, 2011

கலைஞருக்கு நன்றி... மிக்க நன்றி....


                                                                      

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வியால் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பீர்கள். தோல்விக்கான காரணங்கள் என்ற பெயரில் உங்கள் மீது வீசப்படும் விமர்சனங்களால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருப்பீர்கள்.

ஆனால் நான் உங்களை காயப்படுத்தப்போவதில்லை... உங்களுக்கு பல விதங்களில் நன்றி சொல்ல தமிழக மக்களாகிய நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்.

1 . ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு குடுத்ததற்க்காக, நிச்சயமாக இது ஏழைகளுக்கு உதவிய நல்ல திட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

2 . மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், 108  இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தை திறமையாக செயல்படுத்தியதற்க்காக நன்றி.

3. இலவச காப்பீடு  திட்டத்தை 
செயல்படுத்தியதற்க்காக. நிச்சயமாக பல ஏழைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பது உண்மை. இதற்க்காக உங்களுக்கு நன்றி.

4 . குக்கிராமங்களில் கூட ஓரளவு சாலை வசதி செய்து தந்ததற்கு நன்றி.

5 . வாக்களித்தபடி பெரும்பாலோருக்கு வண்ணத் தொலைக்காட்சி தந்ததற்கு நன்றி.

6 . சென்னையில் பல மேம்பாலங்களை கட்டி போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைத்ததற்கு நன்றி.

7 . மின் அலுவலக நடவடிக்கைகளை முறைப்படுத்தியதற்க்காக. மின்வெட்டு அடிக்கடி நிகழ்ந்தது என்னவோ உண்மை, ஆனால்  சென்னையில் எந்த நேரம் போன் செய்தாலும் மின் அலுவலகங்களில் எடுத்து முறையான பதில் தந்தார்கள். அதற்க்காக நன்றி.

8 . ரேஷன் அலுவலகங்களில் கையூட்டு வாங்காமல் தேவையான மாற்றங்களை செய்து தந்தார்கள். அதற்க்காக நன்றி.

9 . மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கியதற்க்கு நன்றி.

10 . சிறுபான்மையினருக்கு இட
ஒதுக்கீடு அளித்ததற்கு நன்றி.

மேலும் பல நல்ல திட்டங்களை செயல் படுத்தியதற்க்காக நன்றி.

இவ்வளவு செய்தும் ஏன் தோல்வி அடைந்தோம் என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். பின்வரும் காரணங்களை களைய உடனடி நடவைக்கை எடுங்கள். எடுத்தால்... நிச்சயம் அடுத்த தேர்தலில் தி.மு.க ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியும்.





                                                           
                                              

1 . குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எல்லா மட்டங்களிலும் கட்டுப் படுத்துங்கள்.

2 . திரைத்துறையில், தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் இருந்து உங்கள் குடும்பத்தினரை விலகச் சொல்லுங்கள் அல்லது அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள். சினிமா மக்கள் அதிக முக்கியத்துவம் குடுத்து கவனிக்கும் ஊடகம். அதில் உங்கள் குடும்பத்தினரின் கடும் ஆதிக்கம் மக்களிடம் இயல்பான வெறுப்பை சம்பாதித்தது.

3 . ஏன் வியாபாரங்களில் இவ்வளவு போட்டி, யாருக்காக சம்பாதிக்கிறார்கள்? ஏற்கனவே 100  தலைமுறைக்கு சொத்து இருக்கிறது. இன்னும் ஏன் இவ்வளவு வெறி பணத்தின் மீது? இங்கு ஒரு தலைமுறையே சாப்பட்டிற்க்கும் சாதாரண வாழ்க்கைக்கும் போராடிக்கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4 . நீங்கள் குடும்பத்தினரை சமாளிப்பதிலே அல்லது காப்பாற்றுவதில் போராடிக்கொண்டு இருக்கையில், பாரபட்சம் இல்லாமல் எல்லா அமைச்சர்களும்,       MLA-க்களும் புகுந்து விளையாடி விட்டார்கள். யாருக்கும் 10  கோடிக்கு கம்மி சொத்து இல்லை.

5 . இவை அனைத்தையும் மக்களுக்கு காசு கொடுத்து சமாளித்து விடலாம் என்று நினைத்தீர்கள். மக்களை காசு குடுத்து விளக்கி வாங்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்த குறைகளை சரி செய்தால் நிச்சயம் மீண்டும்  ஆட்சியை தி.மு.க வெல்லும். 


நம்பிக்கையோடு இருங்கள். மனம் தளர்ந்து விடாதீர்கள். சிறந்த இரண்டாவது எதிர்க்கட்சியாக ஜனநாயக் கடமையை ஆற்றுங்கள்.
மக்கள் நன்மதிப்பை மீட்டெடுக்க போராடுங்கள்.

மற்றபடி, உங்களுக்கு.... மீண்டும் நன்றி....மிக்க நன்றி....


வியாழன், மே 12, 2011

கலைஞரின் ஆட்சியா? ஜெயின் ஆட்சியா? முடிவுசெய்யப்போகும் அரசரின் ராசி...



இதோ..இதோ... வந்தே விட்டது நாம் நீண்ட நாட்களாக காத்திருந்த தேர்தல் முடிவிற்கான நாள். கடந்த இரண்டு மாதங்களாக எத்தனையோ கருத்து கணிப்புகள் பத்திரிகைகளாலும் தொலைக்காட்சி உட்பட்ட மற்ற ஊடகங்களாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேவை இல்லாமல் ஊர் ஊராக சென்று வேகாத வெயிலில் வெந்து அல்லது கட்சிகளிடம் காசு வாங்கிக்கொண்டு கணிப்புகளை வெளியிட்டுவிட்டார்கள், ஆட்சி யாருக்கு என்று தெரிந்து கொள்வதற்கு மிகச் சுலபமான ஒரு வழி இருப்பது தெரியாமலே.


ஆம் நண்பர்களே, மிகச் சுலபமாக, யாருடைய ஆட்சி அமையும் என்பதை கணித்துவிடலாம். அதற்காக நீங்கள் தமிழகத்தின் 234  தொகுதிகளுக்கும் சென்று கருத்துக்கணிப்பு நடத்த வேண்டியது இல்லை. ஒரே ஒரே தொகுதிக்கு சென்று கருத்தை கணித்தால் போதும்.

அந்த பெருமைக்கு உரிய தொகுதி....



புதுக்கோட்டை மாவட்டத்திலும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளும் வரும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி.

அது எப்படி, ஒரே ஒரு தொகுதியை வைத்து ஒட்டு மொத்த தமிழக தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்வது? அங்கதான் இருக்கு ஒரு கணக்கு.. அந்த கணக்கு தான் என்ன???  இதோ விடை.....



1989-ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர்.  மறைவிற்கு  பின்  நடந்த தேர்தலில்  திருநாவுக்கரசர் அவர்கள் செல்வி ஜெயலலிதாவின் அணியில்  இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் அடைந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைக்க முடியவில்லை. மாறாக கலைஞர் ஆட்சி அமைத்தார்.



வருடம் 1991 , ஜெயலலிதாவின் மீது கொண்ட அதிருப்தியில் திருநாவுக்கரசர் அண்ணா புரட்சித்தலைவர்  தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்கி  அந்த தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் திருநாவுக்கரசர் வெற்றி அடைந்தார், அனால் ஆட்சி அமைத்தது செல்வி ஜெயலலிதா அவர்கள், கலைஞர் ஆட்சியை இழந்தார்.

வருடம் 1996 , திருநாவுக்கரசர்  மீண்டும் அ.தி.மு.க வில் இணைந்து போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் அபார வெற்றி அடைந்தார். ஆனால் செல்வி ஜெயலலிதா ஆட்சியை இழந்தார், கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

வருடம் 2001, இந்த முறை திருநாவக்கரசர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து கலைஞருடன் கூட்டணி அமைத்தார். தனது கட்சி சார்பாக அறந்தாங்கி தொகுதியில் அரசன் என்ற தனது நண்பரை நிறுத்தினார். என்ன ஒரு விநோதம் பாருங்கள், இந்த முறை அரசன் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால்...ஆனால்...ஆனால்... ஆமாங்க அதேதான்... கலைஞர் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார், ஜெயலலிதா அரியணை ஏறினார். 

அதன் பின் அரசர் நாடாளுமன்ற தேர்தல்கள் பக்கம் சென்றுவிட்டார், அதனால் தான் 2001  க்கு பின் கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை, நண்பர்கள் மன்னிக்கவும்.

இதிலிருந்து என்ன தெரியுது??? எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் திருநாவுக்கரசர் வெற்றி அடைந்தாலும்  அவர் சார்ந்த கூட்டணி கட்சி ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பதே.

என்ன அரசியல் வித்தகர்களே கணக்கு சரி தானே????

பார்ப்போம் இந்த தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்று....

டிஸ்கி-1 : ராசியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. இது ஒரு ஒப்பீடு அவ்வளவே.




சனி, மே 07, 2011

தமிழக கம்யூனிஸ்டுகள் மட்டும் என்ன உத்தமபுத்திரர்களா?




இன்று யாரிடம் போய் தேர்தல் பற்றி பேசினாலும் ஒருவித சலிப்பைக் காணலாம். எங்கங்க எல்லாம் திருட்டுபயல்களா இருக்காங்க, இந்த நிலைமைல யாருக்கு ஓட்டுபோட்டு என்னத்த பண்றதுன்னு.

நிஜமாவே எல்லாருமே திருடர்கள்தானா? ஊழல்வாதிகல்தானா? என்று கட்சி வாரியாக யோசித்தபோது, தூய்மையானவர்கள் என்று எந்த கட்சியிலும் ஒரு பெயர்கூட நினைவிற்கு வரவில்லை. சரி ரொம்ப வருடங்களா முன்னேற்றமே இல்லாம இருக்கிற கம்யுனிஸ்ட்டுகள் எப்படி இருக்காங்கன்னு பார்த்தால் நிலைமை அவ்வளவு மோசம் இல்லை என்றே தோன்றுகிறது, ஒரு நம்பிக்கை கீற்று தெரிகிறது.

ஆம், என்னுடைய நினைவிற்கு 3 பெயர்கள் வருகிறது.

நல்லகண்ணு
பாலபாரதி
நன்மாறன்

ஏழ்மையான நிலையில்கூட கட்சி தனக்காக வசூல் செய்து குடுத்த 1 கோடி ரூபாய் பணத்தை கட்சிக்கே திருப்பி குடுத்த பெருந்தன்மை தோழர் நல்லகண்ணுவிடம் இருந்தது. MLA வாக இருந்தும் அரசு பணத்தை கொள்ளையடித்து சுகபோக வாழ்க்கை வாழத்தெரியாத,குடிசை வீட்டில் வாழ்ந்த நேர்மை நன்மாரனிடம் இருந்தது. போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து சொத்துகணக்கை கூட்டி காட்டும் அமைச்சர்கள் மற்றும் MLA க்கள் மத்தியில் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் சொத்து கணக்கு குறைந்த நிலையில் பாலபாரதி இருக்கிறார்.

தமிழக கம்யூனிஸ்டுகள் அனைவருமே நல்லவர்களா? எனக்கு தெரியாது. ஆனால் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் உத்தமபுத்திரர்களாகவே இருக்கிறார்கள்.

ஊழலை இந்த அளவு எதிர்க்கும் மக்கள் நியாயமாக கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்தி இருக்க வேண்டும். ஆனால் பலமுறை தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இருப்பவர்களை விட்டுவிட்டு, புதிதாக ஒருவர் (தேவலோகத்திலிருந்து) பிறப்பார் என்று எதிர்பார்க்கும் இந்த மக்களை என்ன சொல்ல?

செவ்வாய், மே 03, 2011

லோக்பால் மசோதாவாவது... வெங்காயமாவது...


இன்றைக்கு நாடெங்கும் நடக்கும் ஒரே விவாதம், லோக்பால் மசோதா. இதில என்ன கொடுமைன்னா முக்கால்வாசி பேருக்கு இதோட முழு விவரம் தெரியாது(எனக்கும் தான்). ஆனா இந்த மசோதா வந்தவுடனே அதன்பிறகு இந்தியாவில ஊழலே நடக்க போறது இல்லைங்கற மாதிரியும், எல்லா ஊழல் பெருச்சாளிகளும் நல்லவங்களா மாற்றப்படுவாங்கன்கிற மாதிரியும் பேசிகிட்டு திரியிறோம்.

ஊழல ஒழிக்க குறைந்த பட்சம் சில அடிப்படை விஷயங்களையாவது நாம சரி செய்யணும். அத விட்டுட்டு இண்டர்நெட்ல, ட்விட்டர்ல, SMS ல வோட்டு போட்டெல்லாம் இந்தியாவ்ல ஊழல ஒழிக்க முடியாது. இந்த உண்மைய மொதல்ல நாம புரிஞ்சிக்கணும்.நம்ம நாட்ல ஊழல் ஒன்னும் ஆரம்ப கட்டத்தில இல்ல, கடைசி கட்டத்தில இருக்கு. இதுக்கு மேல இனிமே எவன்னாளுயும் ஊழல் பண்ணமுடியாது.உலகத் தலைவர்கள்லாம் நம்மாளுகள பார்த்து வாய் அடச்சிப்போய் இருக்கானுங்க. அட ஆமாங்க, ஊழல்ல நாம வல்லரசாகி பல வருசங்கள் ஆச்சு.

சரி ஊழல ஒழிக்க என்ன வழி இருக்குன்னு யோசிச்சா, என்னோட அறிவுக்கு 3 வழி தென்பட்டுச்சு.

ஒன்று... தனி மனித மன மாற்றம், ஆம் நாமெல்லாம் இனி லஞ்சம் குடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன், லஞ்சத்த ஒழிக்க பிரச்சாரம் செய்வேன் போரடுவேன்னுஉறுதி மொழி எடுக்கணும்.

இரண்டு.... நீதித் துறை, அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை இந்த மூன்றிலும் களையெடுப்பு நடத்தனும்...

மூன்று.... இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் சாதி, மதம் மற்றும் மொழி போன்ற காரணிகளை பார்க்காமல், நேர்மை மற்றும் தூய்மை இவை இரண்டை மட்டுமே அடிப்படையாக கொண்டு தனது வேட்பாளரை தேர்வு செய்து , நல்லவர்கள் நாடால வரணும்.

இந்த மாற்றங்கல்லாம் வர நாட்டின் பெரும்பன்மயானவர்கள் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணி ஆற்றனும். அப்ப தான் சாத்தியம். களப்பணி ஆற்றுவார்களா? நம்மாளுக டீ தான் ஆத்துவாங்க.

இதை எல்லாம் நாம் செய்யாதவரை நமது அரசியல் வாதிகளுக்கு...
லோக்பாலும்... அமலாபாலும்(நடிகை) ஒண்ணுதான். இரண்டாலும் நாட்டுக்கு எந்த பிரோஜனமும் இல்லை.
அதனாலதான் மீண்டும் சொல்றேன்...
லோக்பாலாவது வெங்காயமாவது.....

டிஸ்கி-1 : அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த அன்று சென்னைல உண்ணாவிரதம் இருந்தவங்க மொத்தம் 20 பேர்கள் தான். அதிலயும் கடைசி வரை இருந்தது 8 பேர் தான். நம்ம போராட்ட குணத்தோட லட்சணம் இது தான்.

டிஸ்கி-2 : உண்ணாவிரத எண்ணிக்கை பற்றி தகவல் தந்த நண்பர் K .R .P செந்திலுக்கு நன்றி.



வெள்ளி, ஏப்ரல் 29, 2011

ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஏற்படுத்தி கொடுத்த அருமையான வாய்ப்பு


செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு இறுதி வாய்ப்பு... பரவலாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி இந்த முறை அ.தி.மு.க மயிரிழையில் வெற்றியை தட்டிச் செல்லும் என்றே தெரிகிறது. (என்னோட கருத்து கணிப்பு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றது.)

இந்த வெற்றியை தனது வெற்றியாக நினைத்து செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அகம்பாவத்தில் ஆடினால்(வழக்கம் போல்...) இதுவே அவரது கடைசி வெற்றியாக இருக்கும்.

ஆம், இந்த முறை தி.மு.க வை ஜெயலலிதா தோற்கடிக்க வில்லை, மாறாக கலைஞரே தோற்கடிக்க வைத்தார், தனது குடும்பத்தினரை வரம்புக்கு மீறி தி,மு,க வில் ஆதிக்கம் செலுத்தவிட்டதன் மூலமும், சன் தொலைக்காட்சியை வரம்புக்கு மீறி வளர விட்டதன் காரணமாகவும்.

மற்றபடி கலைஞர் ஆட்சி ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்றே சொல்லலாம். பல நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது. உடனே நண்பர்கள் மின்சாரப் பிரச்சனையையும், விலைவாசி பிரச்சனையையும் கிளப்ப வேண்டாம். அவை தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் அல்ல, மாறாக ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

கலைஞர்ருக்கு மாற்று வேண்டும் என்று யோசித்த பெரும்பான்மை வாக்காளர்கள் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க விற்கு வாக்களித்தார்கள் என்பதே யதார்த்தம். இதை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொண்டு நல்லாட்சி தர முயல வேண்டும். அதை விடுத்து தனது பழைய பாணியையே பின்பற்றினால் இதுவே அவரது கடைசி முதலமைச்சர் வாய்ப்பாக இருக்கும். மற்றபடி முதலமைச்சர் பதவி பற்றி கனவு மட்டுமே காணலாம்.


மைனாரிட்டி அ.தி.மு.க அரசும் கலைஞரும்


காலைல எந்திரிச்ச உடனே பல்லு விலக்குராரோ இல்லையோ மைனாரிட்டி தி.மு.க அரசு....
மைனாரிட்டி தி.மு.க அரசு.... என்று பல்லவி பாட ஆரம்பித்து விடுவார் ஜெயலலிதா. இவ்வாறு சொல்வது மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எந்த மடையன் சொல்லிகுடுத்தான்னு தெரியல. ஆனா மக்களுக்கு இது சில நேரங்களில் பெரிய காமெடியாவும் பல நேரங்களில் கடுப்பாவும் இருந்துச்சு என்பது தான் உண்மை.

சரி
விசயத்துக்கு வருவோம், இந்த போஸ்ட் அத பத்தி இல்ல, இப்ப நடந்த தேர்தல்ல அ.தி.மு.க வும் மைனாரிட்டி ஆகப்போகுது என்பது தான் விஷயம். நிச்சயம் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை. எனவே கூட்டணி ஆட்சிதான் அமையப் போகுது. இந்த சுழ்நிலையில குரு சிஷ்யன் படத்தில ரஜினியும் பிரபுவும் ஆடும் டான்ஸ் தான் நினைவிற்கு வருது...

இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய.....ஹே...டண்டனக்க ...
இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய....

இதனால் நமக்கு தெரியவருவது என்னவென்றால்... தன் வார்த்தை தன்னையே சுடும்...

டிஸ்கி-1 : ஒரு வேலை கலைஞரும் மே 13 க்கு பிறகு மைனாரிட்டி அ.தி.மு.க அரசு என்று சொல்ல ஆரம்பிப்பாரோ? சொன்னாலும் சொல்வார். யார் கண்டா? இவங்கட்ட இருந்து நாம தப்பிக்கவே முடியாதா? என்ன கொடும சார் இது....

டிஸ்கி-2 : ஏன்பா கஸாலி இந்த டிஸ்கி டிஸ்கி னு ஒன்ன கடைசியில போடறீங்களே? என்ன எலவுயா அது. ஒண்ணுமே புரியாம நானும் போடறேன். எவன்யா இதெல்லாம் கண்டு பிடிச்சவன்?


யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு...


அன்பு நண்பர்களே... அருமைத் தம்பிகளே... பெரியோர்களே...
தாய்மார்களே... இதோ வலை உலகத்திற்கு ஒரு புதிய அறிமுகம்...
நீண்ட நாட்களாகவே பதிவுலக ஜாம்பவான் நண்பர்கள் என்னை வலை உலகிற்குள் வருமாறு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் சரி என்னதான் நடக்குது, எப்டிதான் எழுதுறாங்கன்னு பாத்துட்டு அப்புறம் நுழையலாம்னு கடந்த இரண்டு வாரமா வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன். உள்ளதும் போச்சிடா நொள்ள கண்ணாங்கிற கதையா ஏன்டா இத்தன நாள் வாட்ச் பண்ணோம்னு ஆயிடுச்சு. பின்ன என்னங்க கொஞ்ச நஞ்சமா ஏழுதுறாங்க? இத பாத்தா பின்னால நாமள்லாம் பதிவுலகத்தில தாக்கு புடிக்க முடியுமான்னு சந்தேகமாவே இருக்கு.

இருந்தாலும் இந்த கடல்ல நீச்சலடிச்சு தான் பார்ப்போமேன்னு தொபுகடீர்னு குதிச்சிட்டேன், ஹ்ம்ம்.. பார்ப்போம்... தேருவனான்னு...
இருக்கிற ஆளுங்க பத்தாதா இவன் வேறயான்னு நீங்க முனுமுக்கிறது காதில விழுது. கவலையே படாதீங்க, அடிக்கடி எழுதி தொந்தரவு செய்ய மாட்டேன்... மனசில தோணுனா மட்டும் தான் எழுவேன். ஆனா மனசில தோன்றது எல்லாத்தையும் எழுவேன், முடிந்த அளவு அடுத்தவர் மனதை காய படுத்தாமல்.

ஆனா யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு... ஆமாம். மத்தபடி மனசில படுற கமெண்ட்ச தயங்காம போடுங்க, படிச்சு என்னைய திருதிக்கிறேன் இல்லாட்டி அத பார்த்து என்ன வளர்த்து கொள்கிறேன்.
பதிவு உலகிற்குள் நான் இன்று நுழைய முழுக்க முழுக்க காரணம் எனது அருமை நண்பன் ரஹீம் கஸாலி தான். எனக்கு ஊக்கம் அளித்து எல்லா வகைகளிலும் உதவி புரிந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள்.

நட்புடன்,
சிராஜ்.



Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters