செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு இறுதி வாய்ப்பு... பரவலாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி இந்த முறை அ.தி.மு.க மயிரிழையில் வெற்றியை தட்டிச் செல்லும் என்றே தெரிகிறது. (என்னோட கருத்து கணிப்பு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றது.)
இந்த வெற்றியை தனது வெற்றியாக நினைத்து செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அகம்பாவத்தில் ஆடினால்(வழக்கம் போல்...) இதுவே அவரது கடைசி வெற்றியாக இருக்கும்.
ஆம், இந்த முறை தி.மு.க வை ஜெயலலிதா தோற்கடிக்க வில்லை, மாறாக கலைஞரே தோற்கடிக்க வைத்தார், தனது குடும்பத்தினரை வரம்புக்கு மீறி தி,மு,க வில் ஆதிக்கம் செலுத்தவிட்டதன் மூலமும், சன் தொலைக்காட்சியை வரம்புக்கு மீறி வளர விட்டதன் காரணமாகவும்.
மற்றபடி கலைஞர் ஆட்சி ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்றே சொல்லலாம். பல நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது. உடனே நண்பர்கள் மின்சாரப் பிரச்சனையையும், விலைவாசி பிரச்சனையையும் கிளப்ப வேண்டாம். அவை தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் அல்ல, மாறாக ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.
கலைஞர்ருக்கு மாற்று வேண்டும் என்று யோசித்த பெரும்பான்மை வாக்காளர்கள் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க விற்கு வாக்களித்தார்கள் என்பதே யதார்த்தம். இதை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொண்டு நல்லாட்சி தர முயல வேண்டும். அதை விடுத்து தனது பழைய பாணியையே பின்பற்றினால் இதுவே அவரது கடைசி முதலமைச்சர் வாய்ப்பாக இருக்கும். மற்றபடி முதலமைச்சர் பதவி பற்றி கனவு மட்டுமே காணலாம்.
Tweet |
இன்னும் நாலு நாள்தான....பாக்கலாம்!!
பதிலளிநீக்குஅப்படியா செல்றீங்க..
பதிலளிநீக்குபொருத்திருந்து பார்ப்போம்...
சகோ.சிராஜ்,
பதிலளிநீக்குநீங்கள் இப்படி நினைக்கிறீர்கள்.
ஆனால்,
சுப்ரீம் கோர்ட் திமுக ஜெயிக்கும் என்று நம்புகிறது.
அதனால்தான், கனிமொழி முன் ஜாமீன் கேஸ் ரிசல்டுக்கு அடுத்தநாள் மே 14ம் தேதிக்கு போயிருச்சு.
திமுக வெற்றின்னா... கனிமொழிக்கு முன்ஜாமீன்.
இல்லேன்னா...
ரோஹினி சிறை.
மற்றபடி... நீங்கள் முன்பு சொன்னபடி,
'மைனாரிட்டி ஆதிமுக அரசு' அமையலாம்... ஆனால், காங்கிரஸ் கூட்டணியோடு..!
இது எனது பயம்..!
அவசரப்படுறதே உனக்கு வேலையா போச்சு....இன்னும் மூணு நாள்தானே....பொறுத்திருவே....
பதிலளிநீக்குசமநிலைப் பார்வை!வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதேர்தல் முடிவு இன்று வரை மதில்மேல் பூனைதான்!
பதிலளிநீக்குநான் நெனைச்சேன் நீங்க சொல்லிடீங்க
பதிலளிநீக்குhttp://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
பதிலளிநீக்குஇரு இரு உனக்கு விரிச்சிககாந்த் வச்சி பொங்கல் வைக்க சொல்றேன் .............
பதிலளிநீக்குலக்கி அருவாளை தீட்டும் சத்தம் எனக்கு இங்க வரைக்கும் கேக்குது ............
wrong guess
பதிலளிநீக்குDMK+ is winning 130 seats
திமுகவே ஜெயிக்கும் என பரவலாக பேசப்படுகிறதே?
பதிலளிநீக்குnanbar ingae spectrum oozhalai marandhu vitar polum..
பதிலளிநீக்குI think what you say is what the majority of Tamilians all over the world feel.Jaya has to come down from the high horse she is riding and try to be more practical.She must avoid traffic holdup during her secretariat outings and avoid making all officers Stand in front of her while talking, while she alone is seated.She has to act responsibly. She is talented, gutsy and is capable of giving good administration too. Lets see. They say we get what we deserve in a democracy.
பதிலளிநீக்கு