புதன், ஜூன் 01, 2011

சேலம் மற்றும் மன்னார்குடியை ஆந்திராவிற்கு தாரைவார்த்த தமிழக அரசு                                                                                                                                

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் செய்த அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று "கழக அரசு பதவி ஏற்ற உடன் வழிப்பறி திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டதாக கேள்வி பட்டேன்" என்பதுதான். இந்த பேட்டி எப்படி இருந்தது என்றால் என்னமோ கலைஞர் தான் கொள்ளையர்களை கொள்ளை அடிக்க சொன்னது போலவும், அவரின் ஆட்சி முடிந்த உடன் இனி நமக்கு சப்போர்ட் யாரும் இல்லை என்று கொள்ளையர்கள் ஓடி விட்டது போலும் இருந்தது.

உண்மையா இது? என்று பார்த்தால் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய கொள்ளை சம்பவங்கள் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் நடந்துள்ளன. சமீபத்திய 3  நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.

சம்பவம் 1 : தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க MLA வாக இருக்கும் பழ.கருப்பையா அவர்களின் மனைவி இடமே சங்கிலி பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

சம்பவம் 2 : நேற்றைய முன் தினம் சேலத்தில் 150  பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் 3 : நேற்றைய தினம் மன்னார்குடியில்(சின்னம்மாவின் ஊர் என்பதை இங்கு நினைவில் வைக்க வேண்டும்) 500  சவரன் தங்க நகைகள் அடகுக் கடையில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
                                                            

கலைஞர் ஆட்சியிலாவது 10 பவுன் 20 பவுன் என்று கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது என்னடா என்றால் 100 பவுன் 500 பவுன் என்று பல்க்காக ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் சொன்னது போல் வழிப்பறி செய்யும் குட்டி திருடர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி அங்கிருந்து ப்ரொபசனல் திருடர்கள் இங்கு வந்து விட்டார்களா? அல்லது சேலத்தையும் மன்னார்குடியையும் ஆந்திராவிற்கு தமிழக அரசு தாரை வார்த்து விட்டதா?
மக்கள் எதிர்பார்ப்பது உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே, பேட்டிகளை அல்ல. சென்ற ஆட்சியில் நிறைய பேட்டிகள், பேச்சுகள் மற்றும் கவிதைகளை கேட்டு விட்டோம்.


17 கருத்துகள்:

 1. உண்மையான திருடர்களை அடையாளம் கண்டால்தான் திருட்டை ஒழிக்க முடியும் ....செய்வார்களா ?

  பதிலளிநீக்கு
 2. தலைப்பை பார்த்து எதிர்பார்த்தது வேறு

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

  நூறு = 100 = சதம் == தமிழுக்கு நன்றி

  http://speedsays.blogspot.com/2011/06/100.html

  பதிலளிநீக்கு
 3. நெருப்பு பதிவு ....ஹி ஹி நல்ல நச் நறுக் பதிவு

  பதிலளிநீக்கு
 4. சரியா போச்சி .........கலைஞர் ஆட்சியிலாவது 10 பவுன் 20 பவுன் என்று கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தார்கள்..//////////////அப்போ அந்த ஒரு லசத்தி எழுவதாரயிரம் கோடி .........

  பதிலளிநீக்கு
 5. நல்ல அரசியல் பதிவு நண்பரே
  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலும் தேனும் ஓடும் என்று இவர்கள் பிரச்சாரம் செய்ததை எத்தனை நாட்களில் நிறைவேற்றுகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். ஊடகங்கள் கண்மூடித்தனமான ஆதரவை வழங்குகின்றன , போக போகப் புரியும் , இந்த பூவின் வாசம் தெரியும்

  பதிலளிநீக்கு
 6. திருடனுக்கு அம்மாவா இருந்த என்ன? அய்யாவா இருந்தா என்ன? நேற்று கூட போலீஸ் வீட்டிலே திருட்டு நடந்து இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 7. மத ரீதியான ஒரு விவாதத்திற்குரிய இன்றைய அடியேனின் பதிவை பார்வை இட அழைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் சர்புதீன்...

  ஆர்வமுடன் காத்திருக்கிறேன், விவாதம் அழகிய முறையில் இருந்தால் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். கமெண்ட் moderation வைத்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் இது sensible டாபிக்.

  பதிலளிநீக்கு
 9. அம்மா என்றழைக்காத உயிரில்லையே. அம்மாவை வணங்காது உயர்வில்லையே. நேரில் நின்று பேசும் தெய்வம்........(அதேதான்!)

  பதிலளிநீக்கு
 10. # ஷர்புதீன் வேண்டா வெறுப்பாக ஒரு மதத்தில் இருப்பதை விடவும் அவற்றில் இருந்து விலகி விடுவது மிகவும் நல்லது .. உறவுகளுக்கு அச்சப்படத் தேவை இல்லை ... என்பது எனதுக் கருத்து .. !!!

  #

  சர்புதீன், இக்பால் செல்வன் எழுதியதிலே இந்த வரிகள்தான் சிறந்தவையாக எனக்கு படுகிறது. இது தான் உண்மையும் கூட. இஸ்லாமும் இக்பால் செல்வனும் ஒத்திருக்கும் ஒரே புள்ளி இது தான். இஸ்லாமும் இதையே தான் வலியுறுத்துகிறது.

  இந்த மார்கத்தில் எந்த கட்டாயமும் இல்லை. (அல்-குரான்)

  எனவே நீங்கள் ஒரு நல்ல முடிவு எடுத்து அதை நெட்டில் அறிவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். தண்ணி அடிக்கிற, விபச்சாரம் செய்கின்ற உங்களின் உறவினர்களுக்காக பயப்பட தேவையே இல்லை. Common Sir , Go ahead .

  பதிலளிநீக்கு
 11. மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

  பதிலளிநீக்கு
 12. மேலும் வாசிக்க....

  Do Visit

  http://www.verysadhu.blogspot.com/

  பதிலளிநீக்கு
 13. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

  பதிலளிநீக்கு
 14. நம்ம சைட்டுக்கு வாங்க!
  கருத்த சொல்லுங்க!!
  நல்லா பழகுவோம்!!!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters