ஜனவரி மாதம் என்றாலே சென்னைவாசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!!! குதூகலம் தான்!!!! காரணம், ஒவ்வொரு வருடமும் இந்த மாதம் நடைபெறும் புத்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சி... ஒன்று அறிவுக்கு தீனி போடும் மற்றொன்று நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களின் குழந்தைகளை மகிழ்விக்கும்.
இந்த வருடமும் இந்த வழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால்...ஆனால்...ஆனால்...
நேற்று ஞாயிற்றுகிழமை... மண்ணடிக்கு புர்கா வாங்கலாம் என்று குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்புகையில், பொருட்காட்சி கண்ணில் பட்டது... பார்த்ததும் நேராக மெரினா பீச் சென்றுவிட்டு வீடு திரும்பும் திட்டத்தை கை விட்டு, காரை பொருட்காட்சி திடலுக்குள் செலுத்தினேன். கார் பார்க்கிங்கோ, என்ட்ரன்ஸ் பீஸ்ஸோ எதுவும் வாங்கவில்லை... (வேலை முழுமையடையாததால் நுழைவுக்கட்டணம் வசூலிக்கவில்லை என்பது அப்போது எனக்கு தெரியாது) அரசு நடத்தும் பொருட்காட்சியாச்சே அதனால் தான் இந்த சலுகை, நம் பர்ஸ்க்கும் பாதுகாப்பு என்ற மனநிம்மதியோடு உள்ளே நுழைந்தேன்... உள்ளே சென்றதும் தான் தெரிந்தது என் எண்ணம் எவ்வளவு தவறானது என்று.... வச்சாய்ங்க பாருங்க ஆப்பு...
ஒவ்வொரு ரைட்டிற்கும்(இராட்டிணம்) ஒரு நபருக்கு கூசாமல் 40 ரூபாய் வாங்குகிறார்கள். பத்து ரைடில் ஏறினால் 400 ரூபாய் வந்துவிடும்... அம்மாடி!!!!!! இவர்களுக்கு தனியார் நடத்தும் தீம் பார்க் எவ்வளவோ பரவாயில்லை...அங்கு 400 ரூபாய் நுழைவுகட்டணத்திலே அவன் வைத்திருக்கும் 50க்கும் மேற்பட்ட ரைட்ஸில் இலவசமாக பயணிக்கலாம்... ஆனால் இங்கே அரசு சார்பில் நடக்கும் பொருட்காட்சியில் ஒவ்வொன்றுக்கும் ஒரு நபரிடம் 40 வசூலித்தால்........... 10 ரைடிலே 400 ரூபாய் போய் விடும்....அடேங்கப்பா அதிகாரப்பூர்வ கொள்ளை அல்லவா நடந்து கொண்டு இருக்கிறது?????
அதன் பின் சாப்பாடு பக்கம் பார்வை செல்ல, அங்கேனும் நியாயமாக வியாபாரம் நடக்கும் என நினைத்தால் என் எண்ணத்திற்கு 144 தடா... ஆம் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு போன உணர்வு... சாதாரணமாக வெளியே 10 ரூபாய்க்கு விற்கும் பாம்பே அப்பளம் இங்கே 30 ரூபாய்! 8 ரூபாய்க்கு வெளியே விற்கும் கரும்பு ஜூஸ் 20 ரூபாய்... இது போல் தான் அனைத்து உணவுப்பொருட்களும் 3 மடங்கு அதிகமாக மக்களிடம் வசூலிக்கிறார்கள்...
அய்யா கணவான்களே... அரசு நடத்தும் பொருட்காட்சி, குறைந்த செலவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தான் அங்கு மக்கள் வருகிறார்கள்... இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்களே??
இது எந்த அதிகாரிக்கும் தெரியாதா?? அல்லது தெரிந்தே அனுமதிக்கிறீர்களா கமிஷன் வந்தால் போதும் என்று???
இந்த பணமெல்லாம் அரசுக்கு செல்லும் என்றாலும் ஓரளவுக்கு திருப்தியடையலாம். ஆனால் நடத்துவது மட்டுமே அரசு... ஸ்டால்களும் , ரைட்களும் கான்ட்ராக்ட் மூலம் நடத்தப்படுகிறது என்றே தெரிகிறது! நம்மிடம் அடிக்கும் கொள்ளை லாபம் முழுக்க முழுக்க கான்ட்ராக்டர்கள் வசமே போகிறது... போன வருடம் 14 லட்சம் மக்கள் போனதாகவும், இந்த வருடம் 20 லட்சம் மக்கள் வர வாய்ப்புண்டு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் ஒரு நபருக்கு 15 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும் நுழைவுகட்டணம் மட்டுமே அரசுக்கு சேரும்! மற்றபடி ஒவ்வொரு ரைடுக்கும், உணவுக்கும் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் காண்டிராக்டர்கள் மடியிலே தான் விழும். கணக்கிட்டுக்கொள்ளுங்கள் அப்ப 20 லட்சம் பேருக்கு எவ்வளவு கொள்ளை அடிப்பார்கள் என்று ,
தல சுத்துதுடா சாமி.........
இதைவிட, பேசாமல் அரசே பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணத்தை அதிக படுத்தி... ஒவ்வொரு கடைக்கும் இவ்வளவுக்கு தான் விற்க வேண்டும் என்று விலை நிர்ணயித்துவிடலாம்...
ஓரளவு நல்ல சம்பளம் வாங்கும் எனக்கே செலவழிக்க மனசு தயங்கியது என்றால்.. ஏழை, எளியவர்கள் நிலை???????
பொருட்காட்சிக்கு வரும் அனைவரும் கோடிகளில் புரல்பவர்கள் அல்ல... நடுத்தர மக்களும் , ஏழை மக்களுமே அதிகம்! ஏன் இப்படி பொதுமக்களை முட்டாளாக்க வேண்டும்? பொருட்காட்சி என்ற பெயருக்கு பதிலாக தமிழக அரசியின் அதிகாரபூர்வ கொள்ளையடிக்கும் காட்சி என பெயரை வைக்கலாம்!
தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் மீது இரக்கம் கொண்டு, முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் விலை நிர்ணயித்து நடத்தினால் மட்டுமே இது பொருட்காட்சியாக இருக்கும். இல்லையேல் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் மக்களின் பணத்தை காண்டிராட்கடர்கள் அநியாயமாய் திருட அரசே பாதையை ஏற்படுத்திக் கொடுத்ததாகிவிடும்!
கவனிக்குமா அரசு?????????
குறிப்பு : பொருட்காட்சி மொத்தம் 2 1/2 மாதங்கள் நடைபெறும்... ஒரு சில கடைகளே இப்பொழுது இருக்கின்றன. மற்ற அரங்குகளுக்கு இப்பொழுது தான் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. சோ, இப்ப யாரும் போகாதீங்க. ஜனவரி கடைசியில் போங்க. அப்பொழுது தான் எல்லா கடைகளும் வந்து இருக்கும்.

| Tweet |