வெள்ளி, மே 27, 2011

செல்வி ஜெயலலிதாவிற்கு ஒரு ஷொட்டு.... ஒரு குட்டு...


ஷொட்டு - சட்ட மேல்சபை

                                                                        
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் இனி தமிழகத்தில் மேல்சபை வராது என்று அறிவித்து உள்ளார். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவாகவே இந்த முடிவு தெரிகிறது. எதுக்கு சட்ட மேல்சபை? அதனால் மக்களுக்கு என்ன பயன் என்று பார்த்தால், ஒன்றும் இல்லை. தமிழக சட்டசபையில் பேசமுடியாத எந்த விஷயத்தை மேல் சபையில் பேசிவிடப் போகிறார்கள்?

யாருக்கேனும் பதவி கொடுக்காவிட்டால் அல்லது கொடுக்க முடியாவிட்டால் அவர்களுக்கு தன் இதயத்தில் இடம் உண்டு என்று கூறுவார் கலைஞர். இதயத்தில் கொடுத்த இடத்தால் சமாதானம் ஆகாதவர்களுக்கு பதவி கொடுக்கவே சட்ட மேல்சபை பயன்படும். மற்றபடி அதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

இப்பொழுது இருக்கும் ஒவ்வொரு MLA க்களுக்கும் மாத சம்பளமாக ருபாய்      45 ,000 , படி, பாதுகாப்பு செலவு மற்றும் இத்யாதி இத்யாதி என்று ஒரு மாதத்திற்கும் ஆகும் செலவே லட்சத்தை தொடும். அப்படி இருந்தும் அவர்களில் பாதி பேர் சட்டசபையில் பேசுவதே இல்லை, பேசாட்டியும் பரவாயில்லை பாதி பேர் தூங்கிர்றாங்க. இந்த நிலையில் சட்ட மேல் சபையை கொண்டு வந்து அவர்களுக்கும் தெண்டமாக செலவு செய்ய வேண்டுமா? தேவையே இல்லை. உள்ளவங்க சட்டசபையில் கிழித்தால் போதும், புதுசா யாரும் வந்து ஒன்னும் செய்யவேண்டியது இல்லை.

முதல்வரே, ரொம்ப நல்ல காரியம் செஞ்சு இருக்கீங்க.உங்களின் இந்த நல்ல முடிவை கை தட்டி ஆராவரித்து வரவேற்கிறோம்.

குட்டு - சமச்சீர் கல்வி

                                                           
முதல்வரே.. என்ன முதல்வரே இப்படி பண்ணிட்டீங்க. கிராமப்புற மாணவர்களுக்கும் நகரத்து மாணவர்களுக்கும் கல்வித் தரத்தில் பெரிய வித்தியாசங்கள் உள்ளன என்பது காலம் காலமாக தமிழகத்தில் இருந்து வரும் பிரச்சனை.  அந்த பிரச்சனையை தீர்க்க சமச்சீர் கல்வி தான் ஒரே வழி என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த வித்தியாசத்தை களைவதற்கான முதல் படி சமச்சீர் கல்வி அல்லவா? முதல் முயற்சியே தடை படலாமா? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது நாடறிந்த முதுமொழி ஆயிற்றே.

ஆகவே முதல்வரே...  பாட திட்டங்களில் குளறுபடிகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே அறிவு சார்ந்த நடவடிக்கையாக எனக்கு படுகிறது. கலைஞர் தன்னை பற்றி பாடத்திட்டங்களில் சேர்த்து இருந்தால் அந்த பாடத்தை தடை செய்து விடுங்கள், இதில் நாட்டு மக்களாகிய எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே போல் நீங்களும் வரும் ஆண்டுகளில் உங்கள் பற்றிய பாடங்களை சேர்த்து விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம்.

தன்னுடைய ஆட்சியின் பொது தன்னைப்பற்றியே பெருமையாக மாணவர்கள் படிக்கும் பாடங்களில் சேர்ப்பது என்பது கொஞ்ச நஞ்சம் ஈனம் மானம்  உள்ள மக்கள்கூட செய்ய முடியாத செயல். எப்படிதான் தமிழக அரசியல் வாதிகள் செய்கிறார்களோ???? பொது மேடையிலும், சினிமா நிகழ்சிகளிலும் பெருமை பேசிக் கொள்கிறீர்களே அது போதாதா? மாணவர்கள் மடியிலும் வந்து கை வைக்க வேண்டுமா?? வெட்கக்கேடு.

தயவு செய்து சமச்சீர் கல்வி முறையில் உள்ள குறைகளை களைந்து அதை தொடர்வதற்கான முயற்சிகளை எடுங்கள். அதை விடுத்து அந்த திட்டத்தையே நிறுத்துவது என்பது கிராமப் புற தற்போதைய மாணவர்களுக்கும், எதிர்கால சந்ததிகளுக்கும் செய்யும் துரோகமே ஆகும். கிராமப் புற ஏழைகளின் வயித்தில் அடித்த எந்த ஆட்சியாளரும்  நீண்ட நாட்கள் சந்தோசமாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.


சொல்வது எங்கள் தலையாய கடமை... முடிவு உங்களிடம்.


20 கருத்துகள்:

  1. சரிதான் மேல்சபை தேவையில்லாதுதான்

    சட்டசபையே போதும்

    சம்ச்சீர் கல்விதிட்டத்தில் நிறைய குளறுபடி

    அடுத்த வருடம் செயல்படுத்தப்படும்
    என நிணைக்கிறேன்
    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    USB செல்லும் பாதை

    http://speedsays.blogspot.com/2011/05/usb.html

    பதிலளிநீக்கு
  2. #அதே போல் நீங்களும் வரும் ஆண்டுகளில் உங்கள் பற்றிய பாடங்களை சேர்த்து விடாதீர்கள். உங்களுக்கு கோடி புண்ணியம்.#


    குசும்பு....ஆனாலும் உண்மைதான்....

    பதிலளிநீக்கு
  3. @Speed Masterஅடுத்த வருடமாவது செயல்படுத்தப்பட்டால் ரொம்ப சந்தோசம்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்பீட் மாஸ்டர்...

    பதிலளிநீக்கு
  4. @NKS.???? ??????எல்லாரும் அதானே மச்சான் பண்றாங்க... ஆளும் கட்சியா இருக்கைல, எதிர்கட்சி அவங்களுக்கு சாதகமா செஞ்சாத எல்லாம் தூக்கிர்றது, ஆனால் ஆளும்கட்சி சம்பந்தபட்டத சேத்திர்றது. வருகைக்கு நன்றி, மீண்டும் வருக

    பதிலளிநீக்கு
  5. ஷொட்டும், குட்டும் -சரியான பார்வை.

    பதிலளிநீக்கு
  6. ///மாணவர்கள் மடியிலும் வந்து கை வைக்க வேண்டுமா?? வெட்கக்கேடு.///புகழ் போதை யாரை விட்டது ..இந்தம்மா காலில் விழும் மந்திரிகளை வைத்து திருப்தி பட்டுக்க சொலுங்க ,மாணவர்களுக்கு தேவை பிரகாசமான எதிர்காலம் மட்டுமே

    பதிலளிநீக்கு
  7. சலாம்...சகோ.சிராஜ்...
    நல்ல கொட்டு, நல்ல சொட்டு.

    பல கோடி ரூபாய் செவழித்து அச்சடிச்ச புக்ஸ் எல்லாம் வேஸ்ட். வேற என்னத்த சொல்ல..? தலைவிதி..! இதுல மேல்சபை வந்து ஒண்ணும் ஆணிய புடுங்க வேண்டாம்..!

    (நல்லவேளை கருணாநிதி... மேல்சபைக்கு எதிர்ப்பு மட்டும் தெரிவித்து அறிக்கை விட்டு விட்டால்... அந்தோ.. அடுத்த நாளே மேல்சபை வந்துவிடும்..!)

    பதிலளிநீக்கு
  8. அன்பின் சிராஜ் - இடுகை நன்று - மேல்சபை தேவை இல்லாத ஒன்று தான் - சமச்சீர் கல்வி-இன்னும் கொஞ்சம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. குறைகளைச்சுட்டுவதும்,நிறைகளை சொல்வதும் நம் கடமை.

    பதிலளிநீக்கு
  10. @?????????????வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... மீண்டும் வருக...

    பதிலளிநீக்கு
  11. @ரியாஸ்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரியாஸ்... மீண்டும் வருக... தமிழ்மணம் உங்களுக்கு அனுமதி வழங்கி விட்டதா???

    பதிலளிநீக்கு
  12. @ஆசிக்
    'Citizen of World'


    சலாம் சகோ. ஆசிக்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  13. @cheena (சீனா)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா அண்ணன்...

    பதிலளிநீக்கு
  14. @FOOD

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணன்...

    பதிலளிநீக்கு
  15. @சென்னை பித்தன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா சென்னை பித்தன் அவர்களே... மீண்டும் வருக... படத்த மாத்திட்டீங்க போல???

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லாசனி, 28 மே, 2011

    மேல்சபைன்னா எத்தனாவது மாடில இருக்கும்?

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாசனி, 28 மே, 2011

    /பாதி பேர் சட்டசபையில் பேசுவதே இல்லை, பேசாட்டியும் பரவாயில்லை பாதி பேர் தூங்கிர்றாங்க//

    சட்டம் தூங்கலாம். சட்டசபை தூங்கக்கூடாதா??

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லாசனி, 28 மே, 2011

    /முதல்வரே.. என்ன முதல்வரே இப்படி பண்ணிட்டீங்க//

    அம்மா கிட்ட நேர்ல பேசுற மாதிரி சவுண்டு விடறீங்க. நாளைக்கி போயஸ் கார்டன் போலாம் வர்றீங்களா?

    பதிலளிநீக்கு
  19. அருமை.... ய்யா ...பிரமாதம்.... ய்யா ...பின்னிடீங்க.... ய்யா ...(பாப்பையா போல வாசிக்கவும் )

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters