புதன், பிப்ரவரி 08, 2012

வாச்சாத்தி - கிடைத்தது முழுமையான நீதியா????


காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பார்கள். அந்த கூற்றை உண்மையாக்கியது போல் ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் 18 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட  கொடுமைகளுக்கு, கடும் போராட்டங்களுக்கு பிறகு , 19  ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதென்ன வாச்சாத்தி வழக்கு, ஒரு சின்ன ஃபிளாஷ் பேக்....

ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான ஒரு குக்கிராமம்தான் வாச்சாத்தி. இது தர்மபுரி மாவட்டத்தில் அரூருக்கு அருகில் இருக்கிறது. . கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை இந்தக் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய வெறியாட்டம் அராஜகத்தின் உச்சகட்டத்தை எட்டி்யது.


இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில்  சந்தன மரங்கள் ஏராளமாக இருந்த காலம் அது.  இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, சந்தன மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர்.

அங்கு சில பாலியல் ரீதியான தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர். மேலும், கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல் வெளிச்சத்திற்கு வர… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். ‘சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…’ என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.

அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு மாபெரும் பாலியல்  கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி மக்கள் 133 பேரை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். போலீஸார், வனத்துறையினர், வருவாய்த்துறையினரின் இந்த அராஜக அட்டூழியச் செயலுக்கு 34 பேர் உயிரிழந்தனர். 18 பெண்கள் கற்பிழந்தார்கள். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழக மலைவாழ் மக்கல் நல சங்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த அ(கே)வலத்தை கண்ட தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. பாதிக்கப்பட்ட இவர்களுக்கு நீதி கிடைக்க அந்த சங்கம் போராட்டத்தில் இறங்கியது.  இவர்களோடு கம்யூனிஸ்ட்டும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தது.  வழக்கும் போடப்பட்டது.

பல்வேறு சட்டப் போராட்டங்​களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப்​பட்டு, பிறகு சி.பி.ஐ. விசார​ணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 குற்றவாளிகளைப் பட்டியல் இட்டு, வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக,  இன்றைக்கு அந்த மக்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க(?????) தீர்ப்பை பெற்றுத்தந்துள்ளது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் MLA அண்ணாமலை மற்றும் அதற்காக பாடுபட்ட நெஞ்சுரம் மிகுந்த அனைத்து மக்களையும் நான் உளமார பாராட்டுகிறேன். இதுபோன்று ஏழைகளுக்காக, அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் நல்லோர்தான் வருங்கால இந்தியாவின் நம்பிக்கை. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்தது முழுமையான நீதி தானா? குற்றவாளிகள் 
அனைவரும் தண்டிக்கப்பட்டு விட்டார்களா??? சிந்திக்க வேண்டிய கேள்வி 
தோழர்களே,நண்பர்களே, சகோதரர்களே.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர் அளவில் மனசாட்சியோடு தீர்பளித்துவிட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இது ஒரு முழுமையான தீர்ப்பாக எனக்கு படவில்லை, ஒரு சின்ன நெருடல் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த நினைப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.
என்ன நெருடல் அது?????
இந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கும் பொழுதே இறந்து போனவர்கள் 54 பேர். அவர்கள் எந்த தண்டனையும் அனுபவிக்க வில்லையே???? அவர்களும் தவறு செய்தவர்கள் தானே???? அவர்களை நம்மால் தண்டிக்க முடியவில்லையே???? மரணம் அடைந்தது தான் தண்டனையா???? அப்படி என்றால் அனைவரும் தானே மரணம் அடையப் போகிறோம்... அவ்வளவு ஏன் இந்த வழக்கில் பாதிக்கப் பட்டவர்களும் ஒரு நாள் மரணிக்கத் தானே போகிறார்கள். எனவே குற்றவாளிகள் மரணம் அடைந்து விட்டால், அவர்கள் செய்த தீங்குகள் அநீதிகள் இல்லையென்று ஆகி விடுமா????
நிச்சயமாக மரணம் அடைந்தவர்களை எழுப்பி தண்டனை கொடுக்க முடியாது. வேறு என்னதான் தீர்வு????? இங்குதான் இறப்பிற்கு பின் ஒரு வாழ்க்கை என்ற தத்துவம் வருகிறது...... சொர்க்கம், நரகம் என்ற கான்செப்ட் வருகிறது.
இறந்தவர்களை ஒருநாள் கடவுள் மீண்டும் எழுப்புவார். அவர்களின் நன்மை, தீமை குறித்து விசாரிக்கப்பட்டு அதற்க்கு தகுந்தாற்போல் சொர்க்கமோ நரகமோ செல்வார் என்ற சித்தாந்தம் வருகிறது.
அருமைத் தோழர் அண்ணாமலை, பாபு மற்றும் இதற்காக பாடுபட்ட தோழர்கள் இதை நம்புவார்களோ மாட்டார்களோ. பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்கான உண்மையான நீதி மறுமை நாளில்தான் கிடைக்கும். செய்த பாவத்திற்கு எந்த தண்டனையும் அனுபவிக்காமல் சென்றுவிட்ட அந்த 54 பெரும் இறுதித் தீர்ப்பு நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்.

உலக மக்கள் அனைவர் முன்னிலயிலும் நடக்கும் அந்த நீதி விசாரணையின் போது தவறிழைத்தவர்கள் தலைகுனிந்தும், வாச்சாத்தி மக்கள் தலை நிமிர்ந்தும் சந்தோசமாக நடக்கும் அந்த கணம் நிச்சயம் வந்தே தீரும். அன்றுதான் அவர்கள் நீதிக்கான தேடல் முற்றுப்பெறும்.

குறிப்பு: நீண்ட நாட்களாக ட்ராஃப்டில் இருந்த பதிவு இது...  நேரமின்மை காரணமாக அப்போது வெளியிட முடியவில்லை.


6 கருத்துகள்:

 1. எப்பா...யாராவது வந்து கமெண்ட் போடுங்கப்பா....
  ஹி..ஹி..ஹி.. ரொம்ப நேரமா யாரும் போடல..அதான் கடுப்பில நானே போட்டுகிட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. சலாம்! சகோ சிராஜ்!

  டீக்கடையில சுடச்சுட பலகாரம் கொடுத்தால்தான் கூட்டம் வரும். நீங்கள் ஏற்கெனவெ போட்ட சரக்கை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தா எப்படி வாங்க வருவாங்க! அதனால்தான் கூட்டம் குறைவு என்று நினைக்கிறேன். :-)

  பதிலளிநீக்கு
 3. சலாம் சகோ சுவனப்பிரியன்,,
  ஹ.ஹ.ஹ. உண்மைதான். ஒரு வித்தியாசமா கொஞ்ச நாள் கழித்து போடுவோமேன்னு டிராப்ட் ல வச்சி இருந்தேன். பட், கடுமைய ஊத்திக்கிச்சு. பரவாயில்லை சகோ. நீங்களாவது தொகுதி பக்கம் வந்தீங்களே.

  பதிலளிநீக்கு
 4. //டீ ஆத்தியது : சிராஜ் at 2/08/2012 03:42:00 PM
  பின்னூக்கங்கள்:
  சிராஜ்Feb 8, 2012 09:15 AM//
  என்ன சகோ இது!!முன்னுக்குப்பின் முரண்பாடு?
  By the way,1000 வழக்குகளில் 999கும் மறுமை தான் மன ஆறுதல்..சிந்திப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்..

  பதிலளிநீக்கு
 5. காலம் தாழ்ந்து வந்த முழுமையற்ற தீர்ப்பெனினும் ஏனோ சிறிய அளவில் ஆறுதல் அளிக்கின்றது.. அதிகார வர்க்கத்தினரின் அடக்கு முறைகள் காலம் காலமாக தொடர்ந்து வரும் சூழலில் ஆறிய பலகாரம் கூட தேவையாகத் தானிருக்கிறது;ருசியாகவும்! கசப்பின் ருசி.. சிறு நம்பிக்கையின் ருசி!

  நன்றி சகோ!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters