நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 11, 2012

சசிகலாவுடன் மோதியதால் கைது செய்யப்பட்ட செங்கோட்டையன் உதவியாளர்....



 சென்னை : குடித்து விட்டு வீட்டு உரிமையாளரிடம் தகராறு செய்த அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் அப்பு தெருவில் தேஜூ அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கோவர்த்தனன். இவரது மனைவி சசிகலா. இந்த அபார்ட்மென்ட்டில் சசிகலாவுக்கு சொந்தமாக இன்னொரு வீடும் உள்ளது. இந்த வீட்டில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் பிரிவு உதவியாளர் ஆறுமுகம்(38), வாடகைக்கு வசித்து வந்தார்.

ஆறுமுகத்தின் வீட்டுக்கு அடிக்கடி இரவு நேரத்தில் சிலர் வந்து சென்றனர். பலர் குடித்து விட்டும் வந்தனர். கார்களை தங்கள் விருப்பம்போல நிறுத்தி விட்டுச் சென்றனர். இதுகுறித்து அபார்ட்மென்ட்டில் வசித்தவர்கள் சசிகலாவிடம் புகார் செய்தனர். இதனால், கடந்த 4 மாதத்துக்கு முன் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம் சசிகலா கூறினார். ஆனால் அவர் காலி செய்யவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம், சசிகலா கூறியுள்ளார். அதனால், இரவு அவர் குடித்து விட்டு தனது கார் டிரைவர் ராஜசேகருடன் அங்கு வந்துள்ளார். சசிகலாவின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார். பின் வீட்டில் இருந்த டீப் பாயை உடைத்துள்ளார். அதோடு 'நான் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர். என்னிடமே உன் வித்தையை காட்டுகிறாயா' என்று சத்தம்போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து நேற்று மயிலாப்பூர் போலீசில் சசிகலா புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவிசேகரன், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோரை நேற்று கைது செய்தார். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 452, 506(2) மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் அவர்கள் இருவரும் சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் சிக்னல்

அமைச்சரின் உதவியாளர் மீது புகார் என்றதும், போலீஸ் அதிகாரிகள் இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பெண்ணை மிரட்டியது குறித்து தெரிந்ததும், உடனடியாக கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

டிஸ்கி-1: சசிகலா என்றதும் எதையோ நினைத்து வேகமாக படிக்க வந்த உங்களுக்கு நன்றி.

டிஸ்கி-2;இந்த சம்பவத்தோடு தொடர்புடைய சசிகலா படம் கிடைக்காததால் முன்னாள் உடன் பிறவா சகோதரியின் படத்தை போட்டு சமாளித்துள்ளேன்.


டிஸ்கி-3: சீரியாசாவே எத்தனை பதிவுதான் போடறது?

டிஸ்கி-4:  டிஸ்கி பதிவை விட பெருசா போயிடுச்சே...




செவ்வாய், ஜனவரி 10, 2012

மொக்கை பதிவர் சாம் மார்த்தாண்டனுக்கு ஒரு மடல்....


                                                            

அன்புள்ள சாம்,
நலமா??? நான் நலம். சில மாதங்களுக்கு முன்னர்தான் ஒரு பதிவுலக பிரபல??? பதிவர் மூலம் உங்கள் தளம் பற்றி கேள்விப்பட்டு, வாசிக்கத்தொடங்கினேன். எப்பொழுதெல்லாம் இணையம் பயன்படுத்துவேனோ அப்பொழுதெல்லாம் உங்கள் மொக்கை தளத்திற்கு வரத் தவறியது இல்லை. உங்கள் அடுத்த பதிவு எப்பொழுது எப்பொழுது என்று வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்(???).
இவ்வாறான சூழ்நிலையில், இன்றைய ஆண் வெஜ், பெண் வெஜ் பதிவில். இது தான் எனது கடைசி பதிவு என்று குறிப்பிட்டு எங்களை எல்லாம் மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கி விட்டீர்கள். ஏன் இந்த திடீர் முடிவு? என்ன நடந்தது? யார் உங்களை இந்த முடிவை நோக்கி தள்ளியது???

வேண்டாம் சாம். உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். அப்புறம் கடாபிக்கு யார் கடிதம் எழுதுவது??? இறந்து போன கடாபிக்கு கடிதம் எழுதும் தைரியம் உங்களை விட்டால் யாருக்கு இருக்கிறது????? வாசகர் கடிதப் போட்டி யார் நடத்துவது????


நீங்கள் நேர்மையானவர் இல்லை சாம். வாசகர் கடிதப்போட்டியில் 3 வது பரிசு பெற்ற கடிதத்தை வெளியிட்டுவிட்டு, முதல் பரிசு பெற்ற கடிதத்தை வெளியிடாமலே செல்கின்றீர்களே. இது எந்த விதத்தில் நியாயம்??? முதல் பரிசு பெற்ற கடிதத்தை அண்ணன் ஜெட்லியா வெளியிட முடியும்??? இது என்ன கூத்து சாம்.

/* எங்க நோக்கம் எல்லாம் தனிமனித தாக்குதல் துளியும் இல்லாம Spoof மற்றும் Parody பதிவுகள் எழுதுறது தான் சார் */
உங்களுடைய "சாம் காட் வெரி ஆங்ரி" என்ற பதிவில்,
மேற்சொன்னது போல் தானே கூறி இருந்தீர்கள். சொல்லியபடி செயல் என்ற சொல்வடைக்கு ஏற்ப(அண்ணன் பன்னிகுட்டி வந்து "ஏன் சொல் சமோசாவ இருக்க கூடாதா" என்று கேட்கக்கூடாது) நீங்கள் ஜெட்லி மீது தனிமனித தாக்குதல் நடத்தவில்லையே சாம், மாறாக அவர் குடும்பத்தையே தானே தாக்கினீர்கள். நீங்கள் ஒரு வாய்ச் சொல் வீரர் அல்ல என்பதை நிரூபித்தீர்களே சாம். அப்படி பட்ட உங்களுக்கு என்ன ஆனது???
மற்றொரு விஷயம் "மை டியர் மார்த்தாண்டன்" படத்தை விட உங்கள் பதிவுகள் நல்ல காமாடியாகவே இருந்தது. சீரியஸ் பதிவுகள் எல்லோராலும் எழுத முடியும். காமடி பதிவு எழுதுவது தான் கஷ்டம். உங்களுடைய பல பதிவுகள் மொக்கையாக இருந்தாலும் சில பதிவுகள் எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது உண்மை.

/* ஜெட்லி மற்றும் மற்ற பதிவர்களுக்கு வேண்டுகோள்: உங்க பதிவுகளை ஆரோக்கியமான முறையில spoof செய்வது புடிக்கலேனா, "இல்லப்பா. அதை ஏத்துக்குற பக்குவம் எனக்கு இல்ல. என் பதிவுகளை கிண்டல் பண்ணாதீங்க. எனக்கு புடிக்கல"னு சொல்லுங்க சார். நிப்பாட்டிருவோம் உடனே. */
சாம் காட் ஆங்ரி என்ற அதே பதிவில் மேற் சொன்னபடி தானே கூறி உள்ளீர்கள். ஜெட்லி என்னை கிண்டல் பண்ணாதீங்க என்று வெளிப்படையாக கேட்க வில்லையே சாம். அப்புறம் எதற்க்காக நீங்கள் நிறுத்த வேண்டும்???? ஒரு விஷயம் தெரியுமா? உங்கள் பதிவுகள் மூலம் ஜெட்லி மேலும் பிரபலம் அடைந்தார் என்பதே உண்மை. அப்படி இருக்கையில் எதற்காக சாம் நீங்கள் நிறுத்த வேண்டும்? 

ஒவ்வொரு பதிவின் முடிவிலும் முத்தாய்ப்பாய் ஒரு வசனம் வைப்பீர்களே. உங்களால் மட்டும் தான் சாம் முடியும். இந்த பதிவில் கூட..
/* நனைப்பதல்ல நீ !!
துவைத்து காய போடுவதே நீ !!!  */
என்று முடித்தீர்களே.

மேலும் கடாபிக்கு எழுதிய கடிதத்தில்

/* நான் அல்ல நீ..... அவன் அல்ல நீ..... இவன் அல்ல நீ... நீ என்பதே நீ....  */

என்று முடித்தீர்களே.

இவற்றையா இனி நாங்கள் பார்க்க முடியாது??? ஏற்றுக்கொள்ள முடியவில்லை சாம். உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்.
ஒன்று மட்டும் உண்மை. உங்களின் இந்த அறிவிப்பு என்னைப் போன்ற ஏராளமான பதிவர்களை பாதிக்குமோ இல்லையோ, நிச்சயம் ஜெட்லியை பாதிக்கும்.
தேவை ஏற்பட்டால் உங்களுக்கு இரண்டாவது கடிதமும் எழுதுவேன் சாம்.
டிஸ்கி-1  : நீங்கள் தொடர்ந்து மொக்கை ப்ளாக்கில் எழுத வில்லை என்றால். உங்களுடைய ஒரிஜினல் தளத்தில் வந்து நான் கடுமையாக சண்டை போடுவேன் என்பதை இங்கே ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

டிஸ்கி - 2 :
டிஸ்கி 1ல்  ஒரு வார்த்தை மட்டும் மிஸ்ஸிங். அது என்னன்னு தேவை ஏற்பட்டால்
சொல்வேன்.


வியாழன், மே 19, 2011

அ.தி.மு.க வெற்றிக்கு நானே காரணம் - நடிகர் சிங்கமுத்து பரபர பேட்டி....



சென்ற திங்கட்கிழமை காலையில் எங்கள் அள்ளி விட்டான் கம்பெனி பத்திரிகை அலுவலகத்திற்கு  நடிகர் சிங்கமுத்து போன் செய்து உங்களிடம் சில விசயங்களை பகிர வேண்டுமே, சந்திக்க முடியுமா? என்றார். அதற்க்கு நாங்கள் வேறு நல்ல வேலைகள் பல உள்ளனவே என்றோம். அப்படியா, பரவாயில்லை நானே வருகிறேன் என்று எங்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்தே விட்டார். இதோ எங்கள் டுபாக்கூர் நிருபர் அஞ்சும் சிங்கம், அவருடன் கண்ட மினி பேட்டி....

நிருபர் அஞ்சும் சிங்கம் : வணக்கம் சிங்கமுத்து சார், நல்லா இருக்கீங்களா?

சிங்கமுத்து : நல்ல வேலை நீனாவது கேட்டியே தம்பி, நல்லா இருக்கேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : ஏன் சார் இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

சிங்கமுத்து : பின்ன என்னப்பா, தேர்தல் அப்போ வேகாதா வெயில்ல நல்லா வேலை வாங்கினாங்க. தேர்தல் முடிஞ்ச உடனே ஒரு பய கண்டுக்க மாட்டேங்கிறான்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : பின்ன தேர்தலுக்கு  பிறகு சபாநாயகர் பதவி தருவாங்கன்னு எதிர்பார்த்தீங்களா?

சிங்கமுத்து : இந்த நக்கல் தானே வேணாங்கிறது. சபாநாயகர் பதவி எல்லாம் தர வேணாம், ஒரு நன்றி சொல்லலாம்ல.

நிருபர் அஞ்சும் சிங்கம் : அதான் அம்மா தேர்தல் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றின்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் என்ன, விடுங்கண்ணே.

சிங்கமுத்து : இல்ல... இருந்தாலும் ... வேகாத வெயில்ல வெந்து இருக்கேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சும்மா வேகாத வெயிலு வேகாத வெயிலுன்னுகிட்டு...அப்புறம் மத்தவங்கல்லாம் என்ன வெந்த வெயில்லையா வெந்துகிட்டு இருக்காங்க??? எல்லாருக்கும் வேகாத வெயில்தான்.

சிங்கமுத்து : இப்படி எல்லாம் பேசின, அப்புறம் காத கடிச்சு துப்பிபுடுவேன்... ஆமாம்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சரிண்ணே, ஒரு வேலை அம்மா உங்கள  கூப்பிட்டு அமைச்சர் பதவி தந்தா ஏத்துக்குவீங்களா?

சிங்கமுத்து : என்ன தம்பி இப்படி எக்கு தப்பா கேட்டுட்ட?

நிருபர் அஞ்சும் சிங்கம் : கேட்ட கேள்விக்கு பதில்...ஏத்துக்குவீங்களா? மாட்டீங்களா?

சிங்கமுத்து : அது வந்து...அது வந்து... சொத்து பாதுகாப்பு துறைன்னு ஒன்னு ஆரம்பிச்சு அதுக்கு அமைச்சரா போட்டா ஏத்துக்குவேன் தம்பி.

நிருபர் அஞ்சும் சிங்கம் : சொத்து பாதுகாப்பு துறையா??? அப்படி ஒரு துறை இல்லையே?

சிங்கமுத்து : இருக்குன்னு சொன்னனா...அப்படி ஒரு துறையை ஆரம்பிச்சா இருக்கேன்னு சொன்னேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம்: இந்த துறை தான் வேணும்னு சொல்ல ஏதாவது காரணம் இருக்கா?

சிங்கமுத்து : இல்ல.. வடிவேலு தம்பிக்கு சொத்து வாங்கி குடுத்ததில கொஞ்சம் முன் அனுபவம் இருக்கு... அனுபவம் உள்ள துறைனா கொஞ்சம் ஈசி தானே.

நிருபர் அஞ்சும் சிங்கம்: எது ஈசி? சொத்த லவட்டுறதா?

சிங்கமுத்து : இப்படி எடக்கு மடக்காவே கேள்வி  கேட்டீன்னா  அப்புறம் கோயில்ல காசு வெட்டி போட்டுருவேன்  ஆமாம்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: சரின்னேன் டென்ஷன் ஆகாதிங்க... உங்களுக்கும் வடிவேலுக்கும் என்னதான் பிரச்சனை?

சிங்கமுத்து: அது ஒன்னும் இல்லப்பா.. அது ஒரு சில்லற  பிரச்சனை... தம்பி நம்மகிட்ட சொத்து வாங்கி கேட்டுச்சு... நானும் வாங்கி  குடுத்தேன் அவ்வளவுதான்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது நல்லா விசயமாச்சே... இதுக்கா அவரு உங்கள இப்படி கரிச்சு கொட்றார்???

சிங்கமுத்து: அதுல ஒரு சின்ன கசமுசா ஆகிருச்சு, வடிவேலு தம்பி குடிகாரர் ஆச்சா அதனால அவரு குடிச்சே சொத்த அழிச்சிருவாறு அப்படிங்கிற நல்ல எண்ணத்தில சொத்து எல்லாத்தையும் என் பேர்லே வாங்கிட்டேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது தான் உங்களுக்கு சில்லற பிரச்சனையா???(அஞ்சும் சிங்கம் சத்தம் இல்லாமல் மனசுக்குள்... 'கொய்யால உன்னை எல்லாம் அடிச்சே சாவடிக்கனும்டா') சரி அண்ணேன் ... அ.தி.மு.க வின் வெற்றில உங்க பங்களிப்பு என்னண்ணே?

சிங்கமுத்து : என்ன தம்பி ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு உங்களுக்கு தெரியலையே?

நிருபர் அஞ்சும் சிங்கம்: என்ன ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு?

சிங்கமுத்து: இல்ல... அ.தி.மு.க ஜெயிச்சதே என்னாலதான்னு... நான் மட்டும் எதிர்ப்பிரச்சாரம் செய்யலைன்னா இந்நேரும் கலைஞர்ல முதல் அமைச்சரா ஆகி இருப்பாரு.

நிருபர் அஞ்சும் சிங்கம்:அண்ணே இத்தோட பேட்டிய முடிச்சுக்குவோம்... நான் புள்ள குட்டிகாரன்... இப்பவே ஆட்டோ வர்ற சத்தம் கேட்குது... என்ன விட்ருங்க நான் ஓடணும்....வேணும்னா நீங்க எங்க ஓனர்கிட்ட  பேட்டிய தொடருங்க....

சிங்கமுத்து: அப்படியா தம்பி.... ரொம்ப சந்தோசம்...உங்க மொதலாளி பேரு என்ன?

நிருபர் அஞ்சும் சிங்கம்:  P .R . K . செமதில்


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters