விஸ்வரூப பட விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.
தீர்ப்பு எப்படி இருக்கும்?
சில கண்டிஷன்களுடன் படம் வெளியிட அனுமதி அளிப்பார்கள் என்பதே என்னுடைய கணிப்பு. அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
நாம் என்ன செய்ய வேண்டும்????
1. சகோஸ்.. தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் தயவுசெய்து உணர்ச்சிவசப் படாதீர்கள்.
2. என்றும் இல்லாத அதிசயமாய் 24 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். இதற்காக கமலுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நன்றி கமல். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
சோ, இந்த கூட்டமைப்பினர் எடுக்கும் அடுத்த கட்ட ஜனநாயக ரீதியான போராட்டத்திற்காக பொறுத்திருங்கள்.
3. தனி மனிதர்களாக எந்த போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம்.
4. தயவுசெய்து வன்முறையில் யாரும் இறங்காதீர்கள்.
5. போராடுவது மட்டுமே நம் கடமை. வெற்றி , தோல்வி அளிப்பவன் இறைவனே என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
6. எந்த கருத்தை, எங்கு சொல்வதாக இருந்தாலும் நாகரிகமாக மட்டுமே பேசுங்கள். அப்படி பேச முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு இருந்தால், நீங்கள் பேசவே வேண்டாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.
7. சாலை மறியல் கண்டிப்பாக செய்யாதீர்கள்.
8. எந்த போராட்டமாக இருந்தாலும் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். பொதுமக்களை வருத்தி நடக்கும் எந்த போராட்டத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
9. தியேட்டர் முற்றுகைப் போராட்டமோ அல்லது வேறு ஏதேனும் போராட்டம் என்றாலும் அரசின் அனுமதியுடனே நடத்துங்கள் அல்லது அரசுக்கு முன்னரே தெரிவித்துவிடுங்கள்.
10 இறுதியாக, நாம் இந்த போராட்டத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் என்பதை மறவ வேண்டாம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் இனி ஒரு படம் இது போல் எடுக்க யோசிப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்
மொத்தத்தில் தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் உங்கள் போராட்டம் ஜனநாயக ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே தமிழக முஸ்லிம்கள் மற்றும் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.
| Tweet |