இன்று காலை வெளிவந்த நக்கீரனில் தேவையில்லாமல் வியாபார நோக்குடன் எழுதப்பட்ட ஒரு செய்தி அ.தி.மு.க.,வினரை ஏகத்துக்கு உசுப்பெற்றி விட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நக்கீரன் தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு மொத்த இதழ்களையும் அ.தி.மு.க., தொண்டர்களே வாங்கிவிட்டனர். சில இடங்களில் எடுத்துக்கொண்டனர். அதை வாங்கி இலவசமாக வினியோகமாவது செய்தார்களா என்றால் அதுதான் இல்லை. அனைத்து இதழ்களையும் நெருப்புக்கு இரையாக்கி விட்டனர்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல எரிக்கும் அவசரத்தில் அதில் ஜெயலலிதா படம் இருந்ததை கவனிக்கவில்லை போலும்...அந்தப்படத்தையும் சேர்த்தே எரித்திருக்கிறார்கள் ஹி...ஹி...
தன் படத்தை காலால் மிதித்தும், செருப்பால் அடித்தும் தீயிட்டு கொளுத்திய அத்தனை பேருக்கும் ஜெயலலிதாவால் ஆப்பு இருக்குடியோ.....
(ஏதோ நம்மால் முடிந்தது)
பி.கு: இந்த திடீர் தட்டுப்பாட்டை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்த கோபால், ஒரு ரகசிய இடத்தில் மீண்டும் ஒரு லட்சம் பிரதிகளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் சொல்கிறது. அப்படி அச்சடிக்கப்படும் பிரதிகள் ஹெலிகாப்டரின் மூலம் அந்தந்த பகுதி ஏஜெண்டிடம் கொடுக்கப்படும் என்று கோபால் தெரிவித்துள்ளார்.
| Tweet |
