சனி, பிப்ரவரி 11, 2012

சசிகலாவுடன் மோதியதால் கைது செய்யப்பட்ட செங்கோட்டையன் உதவியாளர்.... சென்னை : குடித்து விட்டு வீட்டு உரிமையாளரிடம் தகராறு செய்த அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் அப்பு தெருவில் தேஜூ அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் கோவர்த்தனன். இவரது மனைவி சசிகலா. இந்த அபார்ட்மென்ட்டில் சசிகலாவுக்கு சொந்தமாக இன்னொரு வீடும் உள்ளது. இந்த வீட்டில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனின் அரசியல் பிரிவு உதவியாளர் ஆறுமுகம்(38), வாடகைக்கு வசித்து வந்தார்.

ஆறுமுகத்தின் வீட்டுக்கு அடிக்கடி இரவு நேரத்தில் சிலர் வந்து சென்றனர். பலர் குடித்து விட்டும் வந்தனர். கார்களை தங்கள் விருப்பம்போல நிறுத்தி விட்டுச் சென்றனர். இதுகுறித்து அபார்ட்மென்ட்டில் வசித்தவர்கள் சசிகலாவிடம் புகார் செய்தனர். இதனால், கடந்த 4 மாதத்துக்கு முன் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம் சசிகலா கூறினார். ஆனால் அவர் காலி செய்யவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினமும் வீட்டை காலி செய்யும்படி ஆறுமுகத்திடம், சசிகலா கூறியுள்ளார். அதனால், இரவு அவர் குடித்து விட்டு தனது கார் டிரைவர் ராஜசேகருடன் அங்கு வந்துள்ளார். சசிகலாவின் வீட்டுக்கு சென்று மிரட்டியுள்ளார். பின் வீட்டில் இருந்த டீப் பாயை உடைத்துள்ளார். அதோடு 'நான் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர். என்னிடமே உன் வித்தையை காட்டுகிறாயா' என்று சத்தம்போட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

இது குறித்து நேற்று மயிலாப்பூர் போலீசில் சசிகலா புகார் செய்தார். உதவி கமிஷனர் ரவிசேகரன், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், ராஜசேகர் ஆகியோரை நேற்று கைது செய்தார். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 452, 506(2) மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் அவர்கள் இருவரும் சைதாப்பேட்டை 18வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் சிக்னல்

அமைச்சரின் உதவியாளர் மீது புகார் என்றதும், போலீஸ் அதிகாரிகள் இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். பெண்ணை மிரட்டியது குறித்து தெரிந்ததும், உடனடியாக கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சரின் உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

டிஸ்கி-1: சசிகலா என்றதும் எதையோ நினைத்து வேகமாக படிக்க வந்த உங்களுக்கு நன்றி.

டிஸ்கி-2;இந்த சம்பவத்தோடு தொடர்புடைய சசிகலா படம் கிடைக்காததால் முன்னாள் உடன் பிறவா சகோதரியின் படத்தை போட்டு சமாளித்துள்ளேன்.


டிஸ்கி-3: சீரியாசாவே எத்தனை பதிவுதான் போடறது?

டிஸ்கி-4:  டிஸ்கி பதிவை விட பெருசா போயிடுச்சே...
18 கருத்துகள்:

 1. நல்ல கெளப்புராங்கப்பா பீதிய...
  :) :) :)

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் சிரிப்பிற்கும் நன்றி சகோ சுவனப்பிரியன்,

  ஏன் சிரிச்சீங்கன்னு எனக்கு தெரியும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ பாசித்,

   udaanz ல இந்த வாரம் ஸ்டாரா அறிமுகப் படுத்தினாங்க. சோ, எழுதாம இருந்தா நல்ல இருக்காது.அதான் இந்த பீதி...

   நீக்கு
 3. சிராஜ்,

  அரசியல் செய்திகள் ஹைப்பர் லின்க் உடையவை , ஒரு செய்தி மட்டும் பார்த்து போட்டுடிங்க போல.

  செங்கோட்டையன் தனி வீடு செட்டப் செய்துவிட்டு, வீட்டுக்கு வருவதில்லை. என அவர் மனைவி போயசில் புகார் அளித்து இருக்காராம். வழிக்காட்டி இந்த பி.ஏ என்றும் சொல்லி இருக்கார்.அதன் எதிரொலி தான் இந்த கைது.வரும் வார துப்பியெறியும் பத்திரிக்கைகளில் விலாவாரியாக போடுவாங்க. ஏற்ற்கனவே உங்கள் அபிமான தினமலர் டீக்கடை பெஞ்சிலும் போட்டுடாங்க :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ வவ்வால்,

   வருகைக்கும், தெளிவான விளக்கத்திற்கும் நன்றி.

   /* ஏற்ற்கனவே உங்கள் அபிமான தினமலர் */

   என்ன்ன்ன்னானானானானானானானானாது..... தினமலர் எங்களோட அபிமான பத்திரிக்கையா????

   தினமலருக்கு நான் கொடுக்கிற மெசேஜ் எவ்வளவோ பரவாயில்லை சகோ.

   நீக்கு
  2. தினமலருக்கு நான் கொடுக்கிற மெசேஜ் ////
   என்னது தினமலத்திற்கு நீதான் மெசேஜ் கொடுக்கறியா?

   நீக்கு
 4. அப்பவே சொன்னேன்...இந்த கஸாலி பயலோட சேராதேன்னு..கேட்டியா? இப்பப்பாரு மொக்கை பதிவுக்கு பரபரப்பான தலைப்பு வச்சு கூட்டம் சேர்த்திட்டியே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஜாலி நானா,

   நானும் சீரியஸ்சா எழுதி பார்க்கிறேன், கூட்டமே வர மாட்டேங்குது. இது மாதிரி ஏடாகூடமா போட்டாதான் கூட்டம் வருது.

   நீக்கு
 5. மச்சி, வணக்கமுங்கோ,
  செம பல்பு குடுத்திருக்கிறீங்க.
  முதல் பாதி செய்தியை சசிகலாவிற்கு அடி கொடுத்திருக்கிற மாதிரி பில்டப்பு குடுத்திட்டு
  கடைசி வரிகளில் சசிகலா வீட்டிற்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ரசித்தேன் நண்பா!
  சீரியஸ்ஸா எம்புட்டு நாளைக்குத் தான் எழுதிட்டு இருப்பது! கொர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நிரூபன்... இது ஒரு மொக்கை பதிவு, சும்மா ஒரு கடுப்புல போட்டது.

   நீக்கு
 6. ஸலாம் சகோ.சிராஜ்,
  தலைப்பு.......
  'மெய்யாலுமே செமை பல்பு' என்று சொல்ல முடியாது..!
  காரணம்...
  உடன்பிறவா சகோதரியின் போட்டோ. அது இல்லாமல் இருந்திருந்தால்... மட்டுமே உங்கள் 'பல்பு தரும் திறமையை' பாராட்ட முடியும்..! ஸாரி... சருக்கிட்டீங்க.

  அதேநேரம் இந்த செய்தியில்,
  ///அமைச்சரின் உதவியாளர் மீது புகார் என்றதும், போலீஸ் அதிகாரிகள் இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.////----இது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.

  தன் கட்சியினருடன் ஒருவர் அதுவும் சசிகலா என்ற பெயருடைய ஒருவர் மோதிய பின்னும் கூட, தம்மவர்களை கைது செய்ய சொல்லி இருக்கும் முதல்வர்.ஜெ. வின் நேர்மை உண்மையிலேயே பாராட்டுக்குரியது..! இவ்விஷயத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது..! நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ முஹம்மது ஆசிக்,

   /* தலைப்பு.......
   'மெய்யாலுமே செமை பல்பு' என்று சொல்ல முடியாது..!
   காரணம்...
   உடன்பிறவா சகோதரியின் போட்டோ. அது இல்லாமல் இருந்திருந்தால்... மட்டுமே உங்கள் 'பல்பு தரும் திறமையை' பாராட்ட முடியும்..! ஸாரி... சருக்கிட்டீங்க.
   */
   நாம சறுக்கிறது இது என்ன முதல் தடவையா என்ன????

   /*தன் கட்சியினருடன் ஒருவர் அதுவும் சசிகலா என்ற பெயருடைய ஒருவர் மோதிய பின்னும் கூட, தம்மவர்களை கைது செய்ய சொல்லி இருக்கும் முதல்வர்.ஜெ. வின் நேர்மை உண்மையிலேயே பாராட்டுக்குரியது..! */
   இந்த் விஷயம் உண்மை என்றால், நிச்சயம் அது பாராட்டுக்குரியதே.

   நீக்கு
 7. ஐயா சிராஜ்சு இதுவரை நான் வாங்கிய பல்புலேயே இதுதான் பெரிசு போல.. இதுலவேற போட்டோ ஏன்யா இந்த கொலவெறி?;-) ;-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோ காட்டான்,

   சும்மா ஒரு தமாசான பதிவு, அவ்வளவே.

   நீக்கு
 8. நல்ல போட்டிங்க முடிச்சு இரண்டுக்கும்....

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கு Liebster Blog விருது வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters