திங்கள், ஜனவரி 09, 2012

பயோ-டேட்டா..... அமெரிக்காபெயர் : அமெரிக்கா

மறைமுகப் பெயர் : உலக வல்லாதிக்க அரசு

தொழில் : ஆயுத விற்பனை மற்றும் பெட்ரோலிய கொள்ளை

உப தொழில் : ஊரை அடிச்சு உலையில் போடுவது

நெருங்கிய நண்பர்கள் : இஸ்ரேல் மற்றும் பிரிட்டன்

பிற நண்பர்கள் : ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா,இந்தியா மற்றும் பாகிஸ்தான்

கொள்கை : முதலாளித்துவம்

முகம் : இரட்டை முகம்

குணம் : நயவஞ்சகம்

பலம் : அதி நவீன ஆயுதங்கள்

அசுர பலம் : வான் வழித் தாக்குதல்

பலவீனம் : தரைப்படையில் பலஹீனர்கள். நிலம்  வழித் தாக்குததில் பேரிழப்பை சந்திப்பது

வீழ்த்தியது : கம்யூனிசம்(ரஷ்யாவில் இருந்து)

வீழ்த்த நினைப்பது : இஸ்லாம் மற்றும் கம்யுனிசம்(சீனா)

வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)

அமெரிக்கர்கள் : வாழப்பிறந்தவர்கள்

மற்றவர்கள் : சாகப் பிறந்தவர்கள் அல்லது எக்கேடு கெட்டா எனக்கென்ன?

தீவிரவாதிகள் : தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும் அனைவரும்

தீவிரவாதத்திற்கு எதிரான போர் : கொள்ளை அடிக்க வசதியாக ஏற்படுத்திகொண்டது

சமீபத்தில் கொள்ளை அடித்த இடம்  : ஈராக்

தற்போது கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கும் இடம் : லிபியா

சமீபத்திய சந்தோசம் : ஒசாமா பின் லாடனை கொன்றது

நீண்டகால சந்தோசம் : உலகம் இவனை நல்லவன் என்று இன்னும் நம்புவது

அதிபர் : போர் செய்ய மற்றும் கொள்ளை அடிக்க திட்டம் போடுபவர்

மறந்தது : எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மையை

மறக்காதது : ஏதாவது ஒரு சப்ப காரணத்தை சொல்லி போர் செய்வதை

உலகம் : தனது அடாவடிகளை வேடிக்கை பார்க்கும் உருண்டை

சமீபத்திய எரிச்சல் : தலிபான்


நீண்டகால எரிச்சல்  :  ஈரான்  மற்றும் சீனா

ஒரே சாதனை : இன்னும் வல்லரசாக இருப்பது


37 கருத்துகள்:

 1. ஸலாம் சகோ.சிராஜ்,
  ஒவ்வொரு வரியும் சிக்ஸர்..!
  பட்டையை கிளப்பும் பதிவு.
  சபாஷ் சகோ.

  பதிலளிநீக்கு
 2. பயோடேட்டா குத்தகைதாரர் உடனே வரவும்!!

  பதிலளிநீக்கு
 3. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ ஆசிக்,
  முதல் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கு நன்றி சிவா,
  சண்டைய மூட்டி விடுவதுதான் தங்களின் வேலையோ???? மில்லேனிய நாரதர் வாழ்க.

  பதிலளிநீக்கு
 5. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ எதிர்க்குரல் ஆசிக்,
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


  //உப தொழில் : ஊரை அடிச்சு உலையில் போடுவது //

  பின்னிட்டீங்க போங்க... கடைசியா ஒருக்கா உங்க ப்ளாக்க பாத்துக்குறேன் :-)

  அனைத்தும் டாப்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. நிஜத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அந்நாட்டுக்கே உரிய தகுந்த தரமான சுயவிபரம் இது என்பதை, இதை வாசிக்கும் சிறுபிள்ளை கூட தெளிவாக அறிந்து கொள்ளும். காரணம் நடந்த நடந்து கொண்டிருக்கின்ற உண்மைகளை உலகம் அறிந்து வைத்துள்ளது.
  சிறந்த சுயவிபரம். இவ்வரக்கர்கள் பற்றி அறிய விக்கிப்பீடியாவில் கூட சேர்த்தால் நன்றாக இருக்கும்.

  நன்றி
  அன்ஸார்

  பதிலளிநீக்கு
 8. என்னவொரு அருமையான பயோடேட்டா.
  இது மற்றவர்களுக்கு பயோடேட்டா...
  அமெரிக்காவிற்கு மட்டும் பயடேட்டா

  பதிலளிநீக்கு
 9. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் சிராஜ்,
  பயோடேட்டா அருமை. ஆனால் சில திருத்தங்கள் உண்டு சகோதரரே.

  பிற நண்பர்கள் என்று ஐந்து நாடுகளை பட்டியலிட்டு இருக்கிறீர்களல்லவா. ஆனால் இந்த ஐந்து நாடுகளை அமெரிக்கா நண்பர்களாகவா பாவிக்கின்றது? அடிமை தேசங்களை போலல்லவா நடத்துகிறது. இந்த ஐந்து நாடுகள் பட்டியலில் என்னுடைய இந்திய தேசமும் அடங்குகிறது என்பதில் வெட்கித் தலைகுனிகிறேன்.

  நீண்ட கால எரிச்சல் என்று சீனாவையும் ஈரானையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இதில் சீன தேசம் என்பது ஓரளவுக்கு (அமெரிக்கா அளவிற்கு இல்லாவிட்டாலும்) வல்லமை பொருந்திய தேசம். ஆனால் ஈரான் அந்தளவிற்கு வலிமை பொருந்தியதல்ல. ஆனாலும் சர்வதேச ஊடகங்களினால் இந்த பிம்பம் ஈரானுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதை தான் அமெரிக்காவும் எதிர்பார்க்கின்றது. இந்த வலையில் அஹமதி நிஜாதும் ஈரானும் விழாமல் இருக்க வேண்டும். ஈராக்கை எப்படி பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு என்ற கெட்ட பிம்பத்தை உலக மக்கள் மனதில் உருவாக்கி பின்னர் அதை சூறையாடினார்களோ அதைபோன்று ஈரானையும் விழுங்கி விட துடிக்கின்றது அமெரிக்கா வல்லரசு.

  எந்த பேரரசும் வீழும் என்ற உண்மையை அமெரிக்க தேசம் உணராத வரையில் ஏகாதிபத்திய போர்களை அது நடத்திக் கொண்டேயிருக்கும். ஏனெனில் அமெரிக்க தேசம் செய்யும் ஒவ்வொரு போரும் அந்நாட்டின் அதிபர்கள் மட்டும் எடுக்கும் முடிவல்ல. அது யூத லாபி, ஆயுத தரகர்கள் லாபி, முதலாளித்துவ லாபி, பெண்டகன் என்று பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய கூறுகளை கொண்டது. அமெரிக்க வல்லாதிக்கம் செய்யும் போர்களை உலக உருண்டை அதுவரை வேடிக்கை மட்டுமே பார்க்கும். அமெரிக்கா ஒரு நாள் உண்மையை உணரும். ஆனால் அன்றைய நிலையில் அது சர்வதேச அளவில் படுபாதாளத்தில் தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

  பதிலளிநீக்கு
 10. முகம்: இரட்டை

  தெரிஞ்சது இரட்டை, தெரியாதது எத்தனையோ ...

  பதிலளிநீக்கு
 11. //பிற நண்பர்கள் : ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா,இந்தியா மற்றும் பாகிஸ்தான்//

  ஏனைய நாடுகள் சரி!இந்தியா சும்மா பழகலாம் வாங்கன்னு கூப்பிட்டதால பழகிப் பார்க்கிறாங்க:)

  பதிலளிநீக்கு
 12. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டு அரசியல் உலகம் அறிந்ததே!ஆனால் அமெரிக்காவிற்கு மாற்றாக யாரை முன்வைக்கிறீர்கள்?

  //வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)//

  தமாசு?

  பதிலளிநீக்கு
 13. மறந்தது : எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மையை

  பதிலளிநீக்கு
 14. தீவிரவாதிகள் : தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும் அனைவரும்

  ஜாக்கிரதை சகோதரா! டீக்கடையில் குண்டு விழுந்தாலும் விழும்!

  பதிலளிநீக்கு
 15. /* பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு என்ற கெட்ட பிம்பத்தை உலக மக்கள் மனதில் உருவாக்கி பின்னர் அதை சூறையாடினார்களோ அதைபோன்று ஈரானையும் விழுங்கி விட துடிக்கின்றது அமெரிக்கா வல்லரசு */

  மிகச் சரியாக சொல்லி உள்ளீர்கள் சகோ. போர் ஏற்பட்டால் ஈரானுக்கு பேரிழப்பு மட்டுமே ஏற்படும். அவர்களுக்கோ ஒரு 10 ,000 வீரர்கள் மட்டுமே இழப்பு ஏற்படும். ஈரான் கொஞ்சம் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஈரானை அடித்தால் பதிலுக்கு அவர்கள் அமெரிக்காவில் அடிக்கும்படி வல்லமையாக இருந்தால் மட்டுமே மோத வேண்டும்.

  பதிலளிநீக்கு
 16. வருகைக்கு நன்றி சகோ ஆமினா,
  /* கடைசியா ஒருக்கா உங்க ப்ளாக்க பாத்துக்குறேன் */
  இந்த வரிகளை பார்த்தால் நீங்கள் பதிவுலகில் இருந்து விடைபெற நினைப்பது போல் எண்ணத் தோன்றுகிறது.
  அப்படி எல்லாம் செய்துவிடாதீர்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 17. வருகைக்கும் அருமையான கருத்திற்கும் நன்றி சகோ அன்சார்.

  பதிலளிநீக்கு
 18. வருகைக்கு நன்றி கஜாலி நானா

  பதிலளிநீக்கு
 19. /* அமெரிக்கா ஒரு நாள் உண்மையை உணரும். ஆனால் அன்றைய நிலையில் அது சர்வதேச அளவில் படுபாதாளத்தில் தான் இருக்கும் என்பது என் கணிப்பு. */

  நிச்சயம் நடக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். வட்டியை அடிப்படையாக கொண்ட எல்லா பொருளாதாரமும் கூடிய விரைவில் வீழும். இந்த பொருளாதார அமைப்பு பணக்காரனை மேலும் பணக்காரன் ஆக்கும். ஏழை மேலும் ஏழை ஆவான். எனவே சிலப் பல வருடங்களுக்கு பிறகு போராட்டங்கள் பெருகும், பொருளாதாரம் வீழும்.

  வருகைக்கும் நேர்மையான கருத்திற்கும் நன்றி சகோ ஷேக் தாவுத்.

  பதிலளிநீக்கு
 20. /* தெரிஞ்சது இரட்டை, தெரியாதது எத்தனையோ ...*/

  சரியாகச் சொன்னீர்கள் சகோ ஜமால். வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. /* ஏனைய நாடுகள் சரி!இந்தியா சும்மா பழகலாம் வாங்கன்னு கூப்பிட்டதால பழகிப் பார்க்கிறாங்க:) */

  சரிதான் சகோ. ஒரு விஷயத்தை கவனித்தீர்களா. எல்லா வல்லரசுகளுடனும் இந்தியா அவற்றின் அந்திம காலங்களிலேயே நட்பு பாராட்டுகிறது. முன்னர் ரஷ்யா, இப்பொழுது அமெரிக்கா.
  வருகைக்கு நன்றி சகோ ராஜ நடராஜன்.

  பதிலளிநீக்கு
 22. /*
  அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டு அரசியல் உலகம் அறிந்ததே!ஆனால் அமெரிக்காவிற்கு மாற்றாக யாரை முன்வைக்கிறீர்கள்?

  //வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)//

  தமாசு? */

  சகோ.. அமெரிக்கா என்ற வல்லாதிக்க அரசை வீழ்த்த சிந்தாந்த ரீதியில் பலமான அரசுகள் தேவை. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் குறிப்பிட்ட இரண்டு தான் இன்றைய நிலையில் என் கண்களுக்கு தெரிகின்றது. அதனால் தான் அவற்றை குறிப்பிட்டேன்.

  சீனாவை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இஸ்லாத்தில் தான் உங்களுக்கு சந்தேகம் என்றால், சிலுவைப் போர் வரலாற்றை உற்று நோக்குங்கள். உங்களுக்கு விடை கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 23. வருகைக்கு நன்றி சகோ ராஜராஜேஸ்வரி

  பதிலளிநீக்கு
 24. /* ஜாக்கிரதை சகோதரா! டீக்கடையில் குண்டு விழுந்தாலும் விழும்! */
  விழுந்தாலும் பரவாயில்லை சகோ. என்றாவது ஒரு நாள் மரணம் அடையத்தானே போகிறோம். நமது உயிர் நமது கையிலா இருக்கிறது?
  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ ஜபருல்லாஹ். தொடர்ந்து வருகை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 25. //சரிதான் சகோ. ஒரு விஷயத்தை கவனித்தீர்களா. எல்லா வல்லரசுகளுடனும் இந்தியா அவற்றின் அந்திம காலங்களிலேயே நட்பு பாராட்டுகிறது. முன்னர் ரஷ்யா, இப்பொழுது அமெரிக்கா.
  வருகைக்கு நன்றி சகோ ராஜ நடராஜன்.//

  சகோ போட்டீட்டீங்களா சகோ!நன்றி.
  மறுமொழி பார்க்க மறுபடியும் வந்தேன்.இந்தியா ரஷ்யாவுடன் அந்திமக் காலத்தில் மட்டும் நட்புறவு பாராட்டவில்லை.அப்போதைய நிலை அமெரிக்க,ரஷ்யா பனிப்போர் நிலை.அமெரிக்கா ரஷ்யாவுக்கு செக் வைக்க பாகிஸ்தானை பயன்படுத்திக்கொள்ள பூகோள ரீதியாக ரஷ்யாவை இந்தியா சார்ந்திருக்க வேண்டிய நிலை.Bipolar இப்ப unipolar ஆகிவிட்டதாலும் 9/11க்குப் பின்பான உலக அரசியலில் இந்தியா அமெரிக்காவின் கைப்பிள்ளையாகி விட்டது ஒரு தவிர்க்க முடியாத இந்தியாவின் நலன் சார்ந்ததாகவும் அதேசமயத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு செக் வைக்க அமெரிக்கா கையாளும் தந்திரமும் கூட.

  கம்யூனிசத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளில் இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஒருவேளை நீங்கள் இஸ்லாமிய நாடுகளை மனதில் வைத்துக்கொண்டு மாற்று என்று குறிப்பிடுவதாக இருந்தால் தற்போதைக்கு ஈரான் ஒன்றைத் தவிர அனைத்துமே அமெரிக்காவின் கைப்புள்ளகள்.வளைகுடா,பாரசீக,அமெரிக்க உள் அரசியல் இன்னும் ஆழமானது.

  சீனாவின் மொத்தப் பொருளாதாரமே அமெரிக்க டாலரின் அடிப்படையில் இயங்குகிறது.அமெரிக்க அசுரபலத்தை தற்போதைக்கு தகர்க்கும் சக்தி இருப்பதாக எனக்குப் படவில்லை.

  ஜான் இறங்குனா படி இறங்கும்ங்கிற மாதிரி டாலர் இறங்குனா எல்லா நாணயமும் இறங்கும்.உலகப் பொருளாதார வளர்ச்சியையும்,வீழ்ச்சியையும் இயக்கும் சக்தியாக அமெரிக்காவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 26. அருமையான பதிவு தோழரே! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 27. /* கம்யூனிசத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளில் இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை */

  கம்யூனிசத்தை இஸ்லாத்துடன் நான் இணைக்கவே இல்லை. ஒரு போதும் இணைக்கவும் மாட்டேன். இரண்டு சக்திகள் என்ற அடிப்படையிலேயே
  அவ்வாறு கூறினேன். இன்றைய நிலையை விட்டு விடுங்கள், நீண்டகால நோக்கில் நீங்கள் வேறு ஏதேனும் மாற்றினை காண்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 28. /* கம்யூனிசத்தை இஸ்லாமியக் கோட்பாடுகளில் இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஒருவேளை நீங்கள் இஸ்லாமிய நாடுகளை மனதில் வைத்துக்கொண்டு மாற்று என்று குறிப்பிடுவதாக இருந்தால் தற்போதைக்கு ஈரான் ஒன்றைத் தவிர அனைத்துமே அமெரிக்காவின் கைப்புள்ளகள்.வளைகுடா,பாரசீக,அமெரிக்க உள் அரசியல் இன்னும் ஆழமானது. */

  நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இன்றைய நிலையில் ஈரான் தவிர ஏனைய பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளை(அவற்றின் அரச குடும்பங்களை, மக்களை அல்ல) அமெரிக்கா தன் கைப்பாவையாக வைத்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு அவர்கள் கைப்பிள்ளைகலாகவே இருக்க முடியாது நண்பா(சகோ என்பதை நீங்கள் விரும்ப வில்லையோ என்று தோன்றுகிறது, அதனாலே நண்பா), மத்திய கிழக்கின் மக்கள் நிலை முற்றிலும் அமெரிக்காவிற்கு எதிராகவே உள்ளது. இதில் வெளி வேஷம் போடா ஒன்றும் இல்லை, அனைத்து நாட்டின் முஸ்லிம்களின் மனநிலையும் அமெரிக்காவிற்கு எதிராகவே உள்ளது. இந்நிலையில் இதே உறவு அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிச்சயம் தொடர முடியாது. என்று மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்புகிறதோ, அந்த புள்ளியில் இருந்து உலக வரலாறு மாறத்தொடங்கும். 20 வருடங்கள் என்பது வரலாற்றில் மிகப் பெரிய தூரம் அல்லவே.

  பதிலளிநீக்கு
 29. /* சீனாவின் மொத்தப் பொருளாதாரமே அமெரிக்க டாலரின் அடிப்படையில் இயங்குகிறது.அமெரிக்க அசுரபலத்தை தற்போதைக்கு தகர்க்கும் சக்தி இருப்பதாக எனக்குப் படவில்லை.
  */
  முற்றிலும் உடன்படுகிறேன். இன்றைய நிலையில் இல்லை, ஆனால் 20 வருடங்களில் மாற்றம் நிச்சயம். 20 வருடம் என்பது எனது கணிப்புதான். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். ஐரோப்பிய நாடுகள் நிச்சயம் அமெரிக்காவிற்கு மாற்று கிடையாது. கண்டிப்பாக ஆசிய நாடுகள் தான். அதில் உங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் நண்பா.

  பதிலளிநீக்கு
 30. /* Bipolar இப்ப unipolar ஆகிவிட்டதாலும் 9/11க்குப் பின்பான உலக அரசியலில் இந்தியா அமெரிக்காவின் கைப்பிள்ளையாகி விட்டது ஒரு தவிர்க்க முடியாத இந்தியாவின் நலன் சார்ந்ததாகவும் அதேசமயத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு செக் வைக்க அமெரிக்கா கையாளும் தந்திரமும் கூட.
  */
  அமெரிக்கா நம்மை நெருங்குவதருக்கு காரணம் சீனாவிற்கு செக் வைக்க என்பது ஓரளவிற்கு உண்மையே. ஆனால் இதனால் எல்லாம் சீனாவின் வளர்ச்சியை தடுத்துவிட முடியாது என்பது என் புரிதல். நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நம்புகின்றேன்.
  காரணங்களை அடுக்கினால் பின்னூட்டங்கள் நீண்டுகொண்டே போகும்.

  பதிலளிநீக்கு
 31. /* Bipolar இப்ப unipolar ஆகிவிட்டதாலும் 9/11க்குப் பின்பான உலக அரசியலில் இந்தியா அமெரிக்காவின் கைப்பிள்ளையாகி விட்டது ஒரு தவிர்க்க முடியாத இந்தியாவின் நலன் சார்ந்ததாகவும் அதேசமயத்தில் சீனாவின் வளர்ச்சிக்கு செக் வைக்க அமெரிக்கா கையாளும் தந்திரமும் கூட.
  */
  அமெரிக்காவை நம்பி சீனாவை பகைத்து கொள்வது நல்லதல்ல. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே நடந்த நிழல் யுத்தத்தில் நாம் ரஷ்யாவை ஆதரித்தது வேறு. அமெரிக்கா சீனா நிழல் யுத்தத்தில் இந்தியா நடு நிலை காப்பதே நமக்கு நல்லது. சீனா நமது அண்டை நாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராணுவ வலிமையிலும், பொருளாதாரத்திலும் அவர்கள் நம்மை விட பல படி உயர்ந்தவர்கள்.

  பதிலளிநீக்கு
 32. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ சுவனப்பிரியன்,
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. //(சகோ என்பதை நீங்கள் விரும்ப வில்லையோ என்று தோன்றுகிறது, அதனாலே நண்பா)//

  நன்றி சொல்லியும் உங்களுக்கு குழப்பமா சகோ:)

  சீனா அண்டை நாடு என்கிறீர்கள்.தூரத்து அமெரிக்காவை விட ரஷ்யா அண்டைநாடு என்றுதானே இந்தியா முன்பு ரஷ்யா சார்ந்து இருந்தது?

  இருநாட்டின் நட்புறவுகளை மதிப்பீடு செய்வது அவை சார்ந்த தூதரக உறவுகள்,விசா அனுமதியின் எளிமை,வியாபார உறவுகள்,அமைப்பு ரீதியாக செயல்படுவது போன்றவைகளைக் கூறலாம்.எனக்கென்னமோ இந்திய,சீன உறவு பட்டும் படாமலே இருக்குற மாதிரி தெரிகிறது.

  நட்புறவு நாடுகளாக இருந்திருந்தால் மொத்த இலங்கையையும் இந்தியா சீனாவுக்கே தாரை வார்த்துக் கொடுத்திருக்கும்.நமக்கில்லாவிட்டாலும் நமது அடுத்த தலைமுறைக்கு சீனா ஆப்பு வைக்கலாம்.எனது பின்னூட்டம் பொய்யாகிப் போனாலும் மகிழ்ச்சியே.நன்றி.

  பதிலளிநீக்கு
 34. எல்லாம் சரி, ஆனால் புகைப்படத்தில் மட்டும் ஏன் KFC and PEPSI?

  பதிலளிநீக்கு
 35. வருகைக்கும் உங்கள் கருத்துக்களை கொண்டு விவாதித்ததற்க்கும் நன்றி ராஜ நடராஜன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 36. /* எல்லாம் சரி, ஆனால் புகைப்படத்தில் மட்டும் ஏன் KFC and PEPSI? */
  பெருசா ஒரு காரணமும் இல்லை சகோ சுப்பு. அந்த நேரத்தில் நான் வைத்திருந்ததிலே அந்த படம் நல்ல படம் போல் தோன்றியது, அதனால் தான். மேலும் அமெரிக்க தயாரிப்புகளை பயன்படுத்துவது இல்லை என்ற கொள்கை எல்லாம் என்னிடம் இல்லை. வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters