வெள்ளி, ஏப்ரல் 29, 2011

ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஏற்படுத்தி கொடுத்த அருமையான வாய்ப்பு


செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு இறுதி வாய்ப்பு... பரவலாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி இந்த முறை அ.தி.மு.க மயிரிழையில் வெற்றியை தட்டிச் செல்லும் என்றே தெரிகிறது. (என்னோட கருத்து கணிப்பு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றது.)

இந்த வெற்றியை தனது வெற்றியாக நினைத்து செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அகம்பாவத்தில் ஆடினால்(வழக்கம் போல்...) இதுவே அவரது கடைசி வெற்றியாக இருக்கும்.

ஆம், இந்த முறை தி.மு.க வை ஜெயலலிதா தோற்கடிக்க வில்லை, மாறாக கலைஞரே தோற்கடிக்க வைத்தார், தனது குடும்பத்தினரை வரம்புக்கு மீறி தி,மு,க வில் ஆதிக்கம் செலுத்தவிட்டதன் மூலமும், சன் தொலைக்காட்சியை வரம்புக்கு மீறி வளர விட்டதன் காரணமாகவும்.

மற்றபடி கலைஞர் ஆட்சி ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்றே சொல்லலாம். பல நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது. உடனே நண்பர்கள் மின்சாரப் பிரச்சனையையும், விலைவாசி பிரச்சனையையும் கிளப்ப வேண்டாம். அவை தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் அல்ல, மாறாக ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

கலைஞர்ருக்கு மாற்று வேண்டும் என்று யோசித்த பெரும்பான்மை வாக்காளர்கள் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க விற்கு வாக்களித்தார்கள் என்பதே யதார்த்தம். இதை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொண்டு நல்லாட்சி தர முயல வேண்டும். அதை விடுத்து தனது பழைய பாணியையே பின்பற்றினால் இதுவே அவரது கடைசி முதலமைச்சர் வாய்ப்பாக இருக்கும். மற்றபடி முதலமைச்சர் பதவி பற்றி கனவு மட்டுமே காணலாம்.


மைனாரிட்டி அ.தி.மு.க அரசும் கலைஞரும்


காலைல எந்திரிச்ச உடனே பல்லு விலக்குராரோ இல்லையோ மைனாரிட்டி தி.மு.க அரசு....
மைனாரிட்டி தி.மு.க அரசு.... என்று பல்லவி பாட ஆரம்பித்து விடுவார் ஜெயலலிதா. இவ்வாறு சொல்வது மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எந்த மடையன் சொல்லிகுடுத்தான்னு தெரியல. ஆனா மக்களுக்கு இது சில நேரங்களில் பெரிய காமெடியாவும் பல நேரங்களில் கடுப்பாவும் இருந்துச்சு என்பது தான் உண்மை.

சரி
விசயத்துக்கு வருவோம், இந்த போஸ்ட் அத பத்தி இல்ல, இப்ப நடந்த தேர்தல்ல அ.தி.மு.க வும் மைனாரிட்டி ஆகப்போகுது என்பது தான் விஷயம். நிச்சயம் தனிப்பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை. எனவே கூட்டணி ஆட்சிதான் அமையப் போகுது. இந்த சுழ்நிலையில குரு சிஷ்யன் படத்தில ரஜினியும் பிரபுவும் ஆடும் டான்ஸ் தான் நினைவிற்கு வருது...

இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய.....ஹே...டண்டனக்க ...
இப்ப என்ன சொல்லுவிய.... இப்ப என்ன சொல்லுவிய....

இதனால் நமக்கு தெரியவருவது என்னவென்றால்... தன் வார்த்தை தன்னையே சுடும்...

டிஸ்கி-1 : ஒரு வேலை கலைஞரும் மே 13 க்கு பிறகு மைனாரிட்டி அ.தி.மு.க அரசு என்று சொல்ல ஆரம்பிப்பாரோ? சொன்னாலும் சொல்வார். யார் கண்டா? இவங்கட்ட இருந்து நாம தப்பிக்கவே முடியாதா? என்ன கொடும சார் இது....

டிஸ்கி-2 : ஏன்பா கஸாலி இந்த டிஸ்கி டிஸ்கி னு ஒன்ன கடைசியில போடறீங்களே? என்ன எலவுயா அது. ஒண்ணுமே புரியாம நானும் போடறேன். எவன்யா இதெல்லாம் கண்டு பிடிச்சவன்?


யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு...


அன்பு நண்பர்களே... அருமைத் தம்பிகளே... பெரியோர்களே...
தாய்மார்களே... இதோ வலை உலகத்திற்கு ஒரு புதிய அறிமுகம்...
நீண்ட நாட்களாகவே பதிவுலக ஜாம்பவான் நண்பர்கள் என்னை வலை உலகிற்குள் வருமாறு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் சரி என்னதான் நடக்குது, எப்டிதான் எழுதுறாங்கன்னு பாத்துட்டு அப்புறம் நுழையலாம்னு கடந்த இரண்டு வாரமா வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன். உள்ளதும் போச்சிடா நொள்ள கண்ணாங்கிற கதையா ஏன்டா இத்தன நாள் வாட்ச் பண்ணோம்னு ஆயிடுச்சு. பின்ன என்னங்க கொஞ்ச நஞ்சமா ஏழுதுறாங்க? இத பாத்தா பின்னால நாமள்லாம் பதிவுலகத்தில தாக்கு புடிக்க முடியுமான்னு சந்தேகமாவே இருக்கு.

இருந்தாலும் இந்த கடல்ல நீச்சலடிச்சு தான் பார்ப்போமேன்னு தொபுகடீர்னு குதிச்சிட்டேன், ஹ்ம்ம்.. பார்ப்போம்... தேருவனான்னு...
இருக்கிற ஆளுங்க பத்தாதா இவன் வேறயான்னு நீங்க முனுமுக்கிறது காதில விழுது. கவலையே படாதீங்க, அடிக்கடி எழுதி தொந்தரவு செய்ய மாட்டேன்... மனசில தோணுனா மட்டும் தான் எழுவேன். ஆனா மனசில தோன்றது எல்லாத்தையும் எழுவேன், முடிந்த அளவு அடுத்தவர் மனதை காய படுத்தாமல்.

ஆனா யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு... ஆமாம். மத்தபடி மனசில படுற கமெண்ட்ச தயங்காம போடுங்க, படிச்சு என்னைய திருதிக்கிறேன் இல்லாட்டி அத பார்த்து என்ன வளர்த்து கொள்கிறேன்.
பதிவு உலகிற்குள் நான் இன்று நுழைய முழுக்க முழுக்க காரணம் எனது அருமை நண்பன் ரஹீம் கஸாலி தான். எனக்கு ஊக்கம் அளித்து எல்லா வகைகளிலும் உதவி புரிந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள்.

நட்புடன்,
சிராஜ்.



Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters