வியாழன், மே 19, 2011

அ.தி.மு.க வெற்றிக்கு நானே காரணம் - நடிகர் சிங்கமுத்து பரபர பேட்டி....சென்ற திங்கட்கிழமை காலையில் எங்கள் அள்ளி விட்டான் கம்பெனி பத்திரிகை அலுவலகத்திற்கு  நடிகர் சிங்கமுத்து போன் செய்து உங்களிடம் சில விசயங்களை பகிர வேண்டுமே, சந்திக்க முடியுமா? என்றார். அதற்க்கு நாங்கள் வேறு நல்ல வேலைகள் பல உள்ளனவே என்றோம். அப்படியா, பரவாயில்லை நானே வருகிறேன் என்று எங்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு வந்தே விட்டார். இதோ எங்கள் டுபாக்கூர் நிருபர் அஞ்சும் சிங்கம், அவருடன் கண்ட மினி பேட்டி....

நிருபர் அஞ்சும் சிங்கம் : வணக்கம் சிங்கமுத்து சார், நல்லா இருக்கீங்களா?

சிங்கமுத்து : நல்ல வேலை நீனாவது கேட்டியே தம்பி, நல்லா இருக்கேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : ஏன் சார் இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

சிங்கமுத்து : பின்ன என்னப்பா, தேர்தல் அப்போ வேகாதா வெயில்ல நல்லா வேலை வாங்கினாங்க. தேர்தல் முடிஞ்ச உடனே ஒரு பய கண்டுக்க மாட்டேங்கிறான்.

நிருபர் அஞ்சும் சிங்கம் : பின்ன தேர்தலுக்கு  பிறகு சபாநாயகர் பதவி தருவாங்கன்னு எதிர்பார்த்தீங்களா?

சிங்கமுத்து : இந்த நக்கல் தானே வேணாங்கிறது. சபாநாயகர் பதவி எல்லாம் தர வேணாம், ஒரு நன்றி சொல்லலாம்ல.

நிருபர் அஞ்சும் சிங்கம் : அதான் அம்மா தேர்தல் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றின்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் என்ன, விடுங்கண்ணே.

சிங்கமுத்து : இல்ல... இருந்தாலும் ... வேகாத வெயில்ல வெந்து இருக்கேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சும்மா வேகாத வெயிலு வேகாத வெயிலுன்னுகிட்டு...அப்புறம் மத்தவங்கல்லாம் என்ன வெந்த வெயில்லையா வெந்துகிட்டு இருக்காங்க??? எல்லாருக்கும் வேகாத வெயில்தான்.

சிங்கமுத்து : இப்படி எல்லாம் பேசின, அப்புறம் காத கடிச்சு துப்பிபுடுவேன்... ஆமாம்...

நிருபர் அஞ்சும் சிங்கம் : சரிண்ணே, ஒரு வேலை அம்மா உங்கள  கூப்பிட்டு அமைச்சர் பதவி தந்தா ஏத்துக்குவீங்களா?

சிங்கமுத்து : என்ன தம்பி இப்படி எக்கு தப்பா கேட்டுட்ட?

நிருபர் அஞ்சும் சிங்கம் : கேட்ட கேள்விக்கு பதில்...ஏத்துக்குவீங்களா? மாட்டீங்களா?

சிங்கமுத்து : அது வந்து...அது வந்து... சொத்து பாதுகாப்பு துறைன்னு ஒன்னு ஆரம்பிச்சு அதுக்கு அமைச்சரா போட்டா ஏத்துக்குவேன் தம்பி.

நிருபர் அஞ்சும் சிங்கம் : சொத்து பாதுகாப்பு துறையா??? அப்படி ஒரு துறை இல்லையே?

சிங்கமுத்து : இருக்குன்னு சொன்னனா...அப்படி ஒரு துறையை ஆரம்பிச்சா இருக்கேன்னு சொன்னேன்.

நிருபர் அஞ்சும் சிங்கம்: இந்த துறை தான் வேணும்னு சொல்ல ஏதாவது காரணம் இருக்கா?

சிங்கமுத்து : இல்ல.. வடிவேலு தம்பிக்கு சொத்து வாங்கி குடுத்ததில கொஞ்சம் முன் அனுபவம் இருக்கு... அனுபவம் உள்ள துறைனா கொஞ்சம் ஈசி தானே.

நிருபர் அஞ்சும் சிங்கம்: எது ஈசி? சொத்த லவட்டுறதா?

சிங்கமுத்து : இப்படி எடக்கு மடக்காவே கேள்வி  கேட்டீன்னா  அப்புறம் கோயில்ல காசு வெட்டி போட்டுருவேன்  ஆமாம்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: சரின்னேன் டென்ஷன் ஆகாதிங்க... உங்களுக்கும் வடிவேலுக்கும் என்னதான் பிரச்சனை?

சிங்கமுத்து: அது ஒன்னும் இல்லப்பா.. அது ஒரு சில்லற  பிரச்சனை... தம்பி நம்மகிட்ட சொத்து வாங்கி கேட்டுச்சு... நானும் வாங்கி  குடுத்தேன் அவ்வளவுதான்....

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது நல்லா விசயமாச்சே... இதுக்கா அவரு உங்கள இப்படி கரிச்சு கொட்றார்???

சிங்கமுத்து: அதுல ஒரு சின்ன கசமுசா ஆகிருச்சு, வடிவேலு தம்பி குடிகாரர் ஆச்சா அதனால அவரு குடிச்சே சொத்த அழிச்சிருவாறு அப்படிங்கிற நல்ல எண்ணத்தில சொத்து எல்லாத்தையும் என் பேர்லே வாங்கிட்டேன்...

நிருபர் அஞ்சும் சிங்கம்: இது தான் உங்களுக்கு சில்லற பிரச்சனையா???(அஞ்சும் சிங்கம் சத்தம் இல்லாமல் மனசுக்குள்... 'கொய்யால உன்னை எல்லாம் அடிச்சே சாவடிக்கனும்டா') சரி அண்ணேன் ... அ.தி.மு.க வின் வெற்றில உங்க பங்களிப்பு என்னண்ணே?

சிங்கமுத்து : என்ன தம்பி ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு உங்களுக்கு தெரியலையே?

நிருபர் அஞ்சும் சிங்கம்: என்ன ஊருக்கெல்லாம் தெரிஞ்சு இருக்கு?

சிங்கமுத்து: இல்ல... அ.தி.மு.க ஜெயிச்சதே என்னாலதான்னு... நான் மட்டும் எதிர்ப்பிரச்சாரம் செய்யலைன்னா இந்நேரும் கலைஞர்ல முதல் அமைச்சரா ஆகி இருப்பாரு.

நிருபர் அஞ்சும் சிங்கம்:அண்ணே இத்தோட பேட்டிய முடிச்சுக்குவோம்... நான் புள்ள குட்டிகாரன்... இப்பவே ஆட்டோ வர்ற சத்தம் கேட்குது... என்ன விட்ருங்க நான் ஓடணும்....வேணும்னா நீங்க எங்க ஓனர்கிட்ட  பேட்டிய தொடருங்க....

சிங்கமுத்து: அப்படியா தம்பி.... ரொம்ப சந்தோசம்...உங்க மொதலாளி பேரு என்ன?

நிருபர் அஞ்சும் சிங்கம்:  P .R . K . செமதில்


15 கருத்துகள்:

 1. அட்டகாசம்

  கலக்குங்க  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
  இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

  நாமே ராஜா, நமக்கே விருது-7

  http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

  பதிலளிநீக்கு
 2. தேர்தலுக்கு பிறகு சிங்கமுத்துவை யாருமே கண்டுகலைன்னு நினச்சேன் நீங்களாவது கண்டுக்கிட்டீன்களே ........

  பதிலளிநீக்கு
 3. எங்க பெல்பாட்டம் முதலாளிய விட்டு உமக்கு ஒரு பயோடேட்டா போடா வச்சாதான் நீ அடங்குவேன்னு நினைக்கிறேன் .........

  பதிலளிநீக்கு
 4. சிங்கத்தையும், செமதில்லையும் வம்புக்கு இழுத்துட்டீங்களா. ரொம்ப சந்தோஷம். 1.76 லட்சம் கோடியை ஒரே நாள்ல செலவு பண்ண மாதிரி இருக்கு. அடிக்கடி அவங்கள உரண்டைக்கு இழுங்க!!

  பதிலளிநீக்கு
 5. சீக்கிரம் செமதில், அஞ்சும் சிங்கம் ரெண்டு பேரோட 'பய' டேட்டாவை போடுங்க. சண்டைல சட்டை கிழிஞ்சி தொங்குனாலும் சரி. கலவரத்தை கண்டின்யூ பண்ணியே தீரனும். பலே வெள்ளையத்தேவா!!

  பதிலளிநீக்கு
 6. டம்மி பீசைஎல்லாம் ஏன்னே பெரிய ஆள் ஆகுறீங்க ...

  பதிலளிநீக்கு
 7. நீ கலக்குடா.....ஆமா இந்த அஞ்சும் சிங்கம். PRK.செமதில் என்ற பேரில் எல்லாம் உள்குத்து இல்லியே....

  பதிலளிநீக்கு
 8. சே...சே... நிருபர் அஞ்சும் சிங்கம்கிறது நண்பர் அஞ்சா சிங்கம் இல்ல... PRK செமதில் கிறது நண்பர் KRP செந்தில் இல்ல... ரெண்டையும் போட்டு கொழப்பிக்காதீங்க மக்களே...

  பதிலளிநீக்கு
 9. /*டம்மி பீசைஎல்லாம் ஏன்னே பெரிய ஆள் ஆகுறீங்க ...
  */

  சிங்கமுத்த பெரிய ஆளா காட்ட அல்ல இந்த பதிவு... சும்மா ஒரு மொக்க பதிவு அவ்வளவே....

  பதிலளிநீக்கு
 10. @ ரியாஸ் அஹமது
  // டம்மி பீசைஎல்லாம் ஏன்னே பெரிய ஆள் ஆகுறீங்க ... //

  இருந்தாலும் நீங்க செல்வினை அப்படி சொல்லியிருக்க கூடாது...

  பதிலளிநீக்கு
 11. அன்பின் சிராஜ் - மொக்கப்பதிவு நல்லாவே இருக்கு - இரசிக்கலாம் - நல்வாழ்த்துகள் சிராஜ் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 12. ?????? ?????? ????? ????????? ?? ???? ??????????? ?????? ????????..

  பதிலளிநீக்கு
 13. நண்பர் சிராஜ் திமுக அனுதாபியோ என எண்ண தோன்றுகிறது உங்கள் பதிவுகள்..

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters