தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 19, 2011

கழுதைக்கு வாக்கபட்டாலாவது உதையோட போகும்... நாம வாக்கபட்ருக்கது.....





                                                            
                                                                                                                 
ஏன் தமிழக மக்களே இப்படி செய்தீர்கள்? சென்ற தேர்தலில் நான் அ.தி.மு.க விற்கு வோட்டு போடவில்லை. நீங்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததால் தான் செல்வியின் ஆட்சி வந்தது. வாக்களித்த நீங்கள் கடிபடுவது நியாயமானது? தேவை இல்லாமல் அவரை ஆதரிக்காத நான் ஏன் கடிபடவேண்டும்?

என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க இந்த அம்மா? கஜானவில காசு இல்லாட்டி, வரி போட்றதும், விலைவாசியை ஏத்துறதும்  தான் வழியா?  இத செய்றதுக்கு நீங்களும், படிச்ச அந்த பொடலங்கா IPS  ஆபிசர்களும் எதுக்கு? படிக்காத பாமரன்  கூட இந்த பட்ஜெட்டை போடுவாங்களே?  ஏன் நானே போடுவேனே? ஆட்சி செய்ய தெரியாட்டி ஊர பாத்திக்கிட்டு போங்கம்மா.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.


பொருள் ஈட்டுதல் என்பதில் தான் உங்கள் திறமை இருக்கு. அதில காட்டுங்க உங்க வேகத்த. வருமானத்திற்கு வழியா இல்லை?  நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எல்லா அரசு சார்ந்த திட்டங்களிலும்  10 %கமிசன் அடிச்சுகிட்டு  இருக்காங்கல்ல எல்லா MLA, மந்திரி , மாவட்டம், வட்டம்  மற்றும் அல்லக்கைகள்.  அது உங்களுக்கு தெரியாதா?  அவங்ககிட்ட போய் நிதிநிலை ரொம்ப கேவலமா இருக்கு , இந்த 5  வருஷம் மட்டும் ஊழல் பண்ணாதீங்கன்னு   சொல்லி,  அத நிறுத்த சொல்லுங்க, மொத்த செலவில 10 % சேமிக்கலாம், அதன் மூலம் பால் விலை மற்றும் பேருந்து கட்டணத்தை காலத்துக்கும் கட்டுக்குள்ள வச்சிருக்கலாம். தமிழகத்தில 40 % அளவுக்கு மின் திருட்டு அல்லது மின் இழப்பு மூலம் மின்சாரம் வீணாகிறது . மின் வாரிய ஊழியர்களையும் காவல் துறையையும் லஞ்சம் வாங்காம மனசாட்சியோட இந்த விசயத்தில வேலை செய்ய சொல்லுங்க. மின்சார கட்டணத்த அடுத்த 50 வருசத்துக்கு ஏத்தவேண்டியது இல்ல.

எனக்கே இத்தனை வழிகள் தோன்றும் பொழுது உங்களுக்கு தோன்றாமல் இருக்காது. ஆனா உங்களுக்கு உங்க கட்சிக்காரன் கொள்ள அடிக்கிறது நிற்கக் கூடாது, தனியார் பால் அதிபர்கள் கொடுக்கும் கோடிகள் உங்களுக்கு வேணும். ஆனால் அரசும் நடக்கணும்னா பக்கத்து மாநிலங்களுக்கு போய் கொள்ளை அடிச்சாத்தான் முடியும். அத வேணும்னாலும் செய்யுங்கள். எங்களை கொள்ளை அடிக்கிரத  மட்டும் விட்டுடுங்க.

அது சரி, இப்பவும்  இலவச திட்டங்கள் தொடருமா? இல்ல அதுக்கும் ஆப்பா? அப்படி தொடர்ந்தால், தயவு செய்து ஒரு பிஞ்ச செருப்பையும் இலவசமா குடுங்க. உங்கள்கிட்ட ஆட்சியை தந்ததுக்காக எங்கள நாங்களே செருப்பால அடிச்சிகிறோம். அத தவிர இந்த ஏழைகளால என்னதான் பண்ண முடியும்?

டிஸ்கி : கலைஞர் ஆட்சில இருக்கும் பொது கவுன்ட் டவுன் வச்ச அந்த புண்ணியவான்களே. இந்த ஆட்சிக்கும் ஏதாவது பண்ணுவீங்களா?  கவுன்ட் டவுன்லாம் வேணாம், நாலரை வருஷம் கொறஞ்சு வர்றதுக்குள்ள தமிழ் நாட்ல யாருமே இருக்க மாட்டாங்க, சுடுகாடுதான் இருக்கும். உடனே நடக்கிறமாதிரி ஏதாவது யோசிங்க.


புதன், ஜூன் 01, 2011

சேலம் மற்றும் மன்னார்குடியை ஆந்திராவிற்கு தாரைவார்த்த தமிழக அரசு



                                                                                                                                

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்றவுடன் செய்த அறிவிப்புகளில் முக்கியமான ஒன்று "கழக அரசு பதவி ஏற்ற உடன் வழிப்பறி திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் அனைவரும் ஆந்திராவிற்கு தப்பி ஓடிவிட்டதாக கேள்வி பட்டேன்" என்பதுதான். இந்த பேட்டி எப்படி இருந்தது என்றால் என்னமோ கலைஞர் தான் கொள்ளையர்களை கொள்ளை அடிக்க சொன்னது போலவும், அவரின் ஆட்சி முடிந்த உடன் இனி நமக்கு சப்போர்ட் யாரும் இல்லை என்று கொள்ளையர்கள் ஓடி விட்டது போலும் இருந்தது.

உண்மையா இது? என்று பார்த்தால் உண்மை இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய கொள்ளை சம்பவங்கள் செல்வி ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் நடந்துள்ளன. சமீபத்திய 3  நிகழ்வுகளை மட்டும் பார்ப்போம்.

சம்பவம் 1 : தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க MLA வாக இருக்கும் பழ.கருப்பையா அவர்களின் மனைவி இடமே சங்கிலி பறிப்பு கொள்ளை நடந்துள்ளது.

சம்பவம் 2 : நேற்றைய முன் தினம் சேலத்தில் 150  பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் 3 : நேற்றைய தினம் மன்னார்குடியில்(சின்னம்மாவின் ஊர் என்பதை இங்கு நினைவில் வைக்க வேண்டும்) 500  சவரன் தங்க நகைகள் அடகுக் கடையில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.




                                                            

கலைஞர் ஆட்சியிலாவது 10 பவுன் 20 பவுன் என்று கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தார்கள். இப்பொழுது என்னடா என்றால் 100 பவுன் 500 பவுன் என்று பல்க்காக ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் சொன்னது போல் வழிப்பறி செய்யும் குட்டி திருடர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி அங்கிருந்து ப்ரொபசனல் திருடர்கள் இங்கு வந்து விட்டார்களா? அல்லது சேலத்தையும் மன்னார்குடியையும் ஆந்திராவிற்கு தமிழக அரசு தாரை வார்த்து விட்டதா?




மக்கள் எதிர்பார்ப்பது உறுதியான நடவடிக்கைகள் மட்டுமே, பேட்டிகளை அல்ல. சென்ற ஆட்சியில் நிறைய பேட்டிகள், பேச்சுகள் மற்றும் கவிதைகளை கேட்டு விட்டோம்.


சனி, மே 21, 2011

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் ஆனந்த விகடன்




 வழக்கமான ஆர்வத்துடன் இந்த வார ஆனந்த விகடனை வாங்கி பார்வையை செலுத்தினேன். தலையங்கத்தில், நடந்து முடிந்த தேர்தலில் ஏன் கலைஞர் தோற்றார்  என்பதற்க்கான நியாயமான காரணங்களை பட்டியலிட்டும் , அதே நேரம் ஜெயலலிதாவின் கடந்த கால தவறுகளையும் சுட்டி காட்டி, இவை இரண்டும் போல் இல்லாமல் நல்லாட்சி தாருங்கள் என்று இருந்தது.  தலையங்கம் மிகவும் அற்புதமாக நடுநிலையுடன் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அதற்க்கு சில பக்கங்கள் தள்ளி தலையங்கத்தில் காட்டிய புத்திசாலிதனத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் சில வரிகள் இருந்தன. அந்த கட்டுரையின் தலைப்பு.



இலையைத் துளிர்க்கவைத்த  இரண்டு தலைகள்...


விகடன் கூறும் இரண்டு தலைகள் யார் தெரியுமா?

சசிகலா மற்றும் சோ ராமசாமி


                               

அதற்க்கு விகடனார் கூறும் காரணம். சோ ராமசாமி தான் விஜயகாந்துடன் கூட்டணி முக்கியம் என்றாராம், சசிகலா சரியான வேட்பாளர்களை தேர்ந்து எடுத்தாராம்.

நான் விகடனை பார்த்து கேட்கிறேன். அ.தி.மு.க வேட்பாளர்கள் நல்லவர்கள் என்பதற்க்காகத்தான் மக்கள் அந்த வேட்பாளர்களுக்கு வக்களித்தார்களா? விஜயகாந்துடன்  கூட்டணி வைத்தால் தான் ஜெயிக்க முடியும் என்ற அந்த கடினமான முடிவை எடுக்க சோ வால்தான் முடியுமா? அரசியல் அறிவு அறவே இல்லாத ஒரு சாதாரண மனிதன் கூட கணிக்க கூடிய கணிப்பல்லவா அது... பொதுமக்களை விடுங்கள் என் மகனுக்கு கூட தெரிந்த கணிப்புதான் அது.
அதுகூட தெரியாமல் தான் ஜெயலலிதா  இருந்தாரா அவருக்கு சோ சொல்லி புரிய?

                                                              

யாரை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறீர்கள் விகடனாரே? சோ வையா? ஏன்??? தமிழகத்தில் இலையை துளிர்க்க வைக்க அவர் ஏதும் புரட்சி செய்தாரா? கடந்த ஐந்து வருடங்களாக கருணாநிதியின் ஆட்சியை அகற்ற மக்களுடன் இணைந்து போராடினாரா? ஒரு புண்ணாகும் இல்லைல... அப்புறம் என்ன?

நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் தங்கள் மனக்குமுறல்கள் அனைத்தையும் வாக்குச் சீட்டில் கொட்டி இலையை துளிர்க்க வைத்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க மக்கள் புரட்சி. பெரும்பாலான மக்களின் ஆவேசத்தால் நிகழ்ந்த மாற்றத்தை...  மக்களின் கஷ்டம் புரியாத, மக்களோடு மக்களாக இணைந்து ஒரு போராட்டம் கூட நடத்திராத  சோ மற்றும் சசிகலாவிற்கு சமர்ப்பிக்காதீர்கள். அது நியாயம் அல்ல. (பத்திரிகை) தர்மமும் அல்ல.

அப்படி தான்தான்  காரணம் என்று சோ நினைப்பாரேயானால் அதை அவர் தனது துக்ளக்கில் எழுதி மகிழட்டும். யார் கேட்கப்போகிறார்கள்?.ஆனால் ஒரு வெகுஜன பத்திரிகையாகிய நீங்கள் எழுதி அவரை மகிழ்விக்க வேண்டாம்.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள் விகடனாரே.....
இப்படி சிறுபிள்ளைத்தனமாக எழுதுவது ஒரு பாரம்பரிய பத்திரிகைக்கு அழகல்ல....




வெள்ளி, ஏப்ரல் 29, 2011

ஜெயலலிதாவிற்கு கலைஞர் ஏற்படுத்தி கொடுத்த அருமையான வாய்ப்பு


செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு இறுதி வாய்ப்பு... பரவலாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி இந்த முறை அ.தி.மு.க மயிரிழையில் வெற்றியை தட்டிச் செல்லும் என்றே தெரிகிறது. (என்னோட கருத்து கணிப்பு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றது.)

இந்த வெற்றியை தனது வெற்றியாக நினைத்து செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அகம்பாவத்தில் ஆடினால்(வழக்கம் போல்...) இதுவே அவரது கடைசி வெற்றியாக இருக்கும்.

ஆம், இந்த முறை தி.மு.க வை ஜெயலலிதா தோற்கடிக்க வில்லை, மாறாக கலைஞரே தோற்கடிக்க வைத்தார், தனது குடும்பத்தினரை வரம்புக்கு மீறி தி,மு,க வில் ஆதிக்கம் செலுத்தவிட்டதன் மூலமும், சன் தொலைக்காட்சியை வரம்புக்கு மீறி வளர விட்டதன் காரணமாகவும்.

மற்றபடி கலைஞர் ஆட்சி ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்றே சொல்லலாம். பல நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது. உடனே நண்பர்கள் மின்சாரப் பிரச்சனையையும், விலைவாசி பிரச்சனையையும் கிளப்ப வேண்டாம். அவை தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் அல்ல, மாறாக ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

கலைஞர்ருக்கு மாற்று வேண்டும் என்று யோசித்த பெரும்பான்மை வாக்காளர்கள் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க விற்கு வாக்களித்தார்கள் என்பதே யதார்த்தம். இதை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொண்டு நல்லாட்சி தர முயல வேண்டும். அதை விடுத்து தனது பழைய பாணியையே பின்பற்றினால் இதுவே அவரது கடைசி முதலமைச்சர் வாய்ப்பாக இருக்கும். மற்றபடி முதலமைச்சர் பதவி பற்றி கனவு மட்டுமே காணலாம்.


Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters