செவ்வாய், மே 03, 2011

லோக்பால் மசோதாவாவது... வெங்காயமாவது...


இன்றைக்கு நாடெங்கும் நடக்கும் ஒரே விவாதம், லோக்பால் மசோதா. இதில என்ன கொடுமைன்னா முக்கால்வாசி பேருக்கு இதோட முழு விவரம் தெரியாது(எனக்கும் தான்). ஆனா இந்த மசோதா வந்தவுடனே அதன்பிறகு இந்தியாவில ஊழலே நடக்க போறது இல்லைங்கற மாதிரியும், எல்லா ஊழல் பெருச்சாளிகளும் நல்லவங்களா மாற்றப்படுவாங்கன்கிற மாதிரியும் பேசிகிட்டு திரியிறோம்.

ஊழல ஒழிக்க குறைந்த பட்சம் சில அடிப்படை விஷயங்களையாவது நாம சரி செய்யணும். அத விட்டுட்டு இண்டர்நெட்ல, ட்விட்டர்ல, SMS ல வோட்டு போட்டெல்லாம் இந்தியாவ்ல ஊழல ஒழிக்க முடியாது. இந்த உண்மைய மொதல்ல நாம புரிஞ்சிக்கணும்.நம்ம நாட்ல ஊழல் ஒன்னும் ஆரம்ப கட்டத்தில இல்ல, கடைசி கட்டத்தில இருக்கு. இதுக்கு மேல இனிமே எவன்னாளுயும் ஊழல் பண்ணமுடியாது.உலகத் தலைவர்கள்லாம் நம்மாளுகள பார்த்து வாய் அடச்சிப்போய் இருக்கானுங்க. அட ஆமாங்க, ஊழல்ல நாம வல்லரசாகி பல வருசங்கள் ஆச்சு.

சரி ஊழல ஒழிக்க என்ன வழி இருக்குன்னு யோசிச்சா, என்னோட அறிவுக்கு 3 வழி தென்பட்டுச்சு.

ஒன்று... தனி மனித மன மாற்றம், ஆம் நாமெல்லாம் இனி லஞ்சம் குடுக்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டேன், லஞ்சத்த ஒழிக்க பிரச்சாரம் செய்வேன் போரடுவேன்னுஉறுதி மொழி எடுக்கணும்.

இரண்டு.... நீதித் துறை, அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை இந்த மூன்றிலும் களையெடுப்பு நடத்தனும்...

மூன்று.... இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் சாதி, மதம் மற்றும் மொழி போன்ற காரணிகளை பார்க்காமல், நேர்மை மற்றும் தூய்மை இவை இரண்டை மட்டுமே அடிப்படையாக கொண்டு தனது வேட்பாளரை தேர்வு செய்து , நல்லவர்கள் நாடால வரணும்.

இந்த மாற்றங்கல்லாம் வர நாட்டின் பெரும்பன்மயானவர்கள் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணி ஆற்றனும். அப்ப தான் சாத்தியம். களப்பணி ஆற்றுவார்களா? நம்மாளுக டீ தான் ஆத்துவாங்க.

இதை எல்லாம் நாம் செய்யாதவரை நமது அரசியல் வாதிகளுக்கு...
லோக்பாலும்... அமலாபாலும்(நடிகை) ஒண்ணுதான். இரண்டாலும் நாட்டுக்கு எந்த பிரோஜனமும் இல்லை.
அதனாலதான் மீண்டும் சொல்றேன்...
லோக்பாலாவது வெங்காயமாவது.....

டிஸ்கி-1 : அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த அன்று சென்னைல உண்ணாவிரதம் இருந்தவங்க மொத்தம் 20 பேர்கள் தான். அதிலயும் கடைசி வரை இருந்தது 8 பேர் தான். நம்ம போராட்ட குணத்தோட லட்சணம் இது தான்.

டிஸ்கி-2 : உண்ணாவிரத எண்ணிக்கை பற்றி தகவல் தந்த நண்பர் K .R .P செந்திலுக்கு நன்றி.7 கருத்துகள்:

 1. நல்லவர்கள் நாடால வரணும்................//////////
  ///////////////
  அட போப்பா வரும்போது எல்லாரும் நல்லவங்கதான் . அதிகாரம் கைக்கு வந்ததும் அவர்கள் நல்லவர்களாக தொடர்வதில்லை அதை முதலில் புருஞ்சிகங்க .................................

  பதிலளிநீக்கு
 2. கரக்டா சொன்னீங்க

  ------------------------
  பாதுகாப்பா இருக்கறது எப்படி?
  http://speedsays.blogspot.com/2011/05/blog-post_04.html

  பதிலளிநீக்கு
 3. ஊழல் பண்றவங்கள எல்லாம் பெருச்சாளின்னு சொல்லி எதுக்கு பெருச்சாளிய கேவலப்படுத்தறீங்க..பாவம்.

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாவியாழன், 05 மே, 2011

  ஹே..யார் சொல்லியும் திருந்தாத நாங்கள் நீ(ஸாரி)சொல்லியா திருந்தப்போரோம்
  இப்படிக்கு,
  நாட்டை கொள்ளையிடவும் யாரையும் கொலை செய்யவும் அஞ்சாத அரசியல்வாதிகள் சங்கம்.

  பதிலளிநீக்கு
 5. நீங்க சொல்வது சரிதான் நண்பரே. மூன்று வழில முதலாவது ஓகே. ரெண்டாவது கொஞ்சம் கஷ்டம். மூணாவது சாத்தியமா?

  பதிலளிநீக்கு
 6. நெத்தியடி கருத்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. பெயரில்லாஞாயிறு, 08 மே, 2011

  அரபு நடுகளின் சட்டங்களை போல் நமது நாட்டிலும் சட்டங்கள் இயற்றினால் பாதிக்கும் மேலாக ஊழல் குறைய வாய்ப்புண்டு.எப்படியும் தப்பிவிடலாம் என்பதால் தான் கவலையின்றி ஊழல் புரிகிறார்கள்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters