மிகப் பெரும்பான்மை தொகுதிகளை வென்று மீண்டும் தமிழக முதல்வராக வந்ததற்கு உங்களுக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் . வெற்றிக் களிப்பில் உள்ளபோதும், சென்ற ஆட்சியை ஏன் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று நினைத்தால் உங்களுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.
நீங்கள் மாறிவிட்டீர்களா புதிய முதல்வரே? யோசிக்கும் பொழுது ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நீங்கள் ஜெயா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி கொடுத்தீர்கள். அந்த பேட்டியை எடுத்தவர் உங்களின் அடிமைகளில் ஒருவரான ரபி பெர்னாட் அவர்கள்(மன்னிக்கவும் ரபி பெர்னாட், இதைவிட சிறந்த வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை, நீங்கள் உங்கள் தனித்தன்மையை இழந்து பல வருடங்கள் ஆகி விட்டது. இப்பொழுது நீங்கள் அ.தி.மு.க வின் மற்றொரு கொ.ப.செ அவ்வளவே). எனக்கு இந்த கணம் வரை பசுமையாக ஞாபகம் இருக்கிறது, அந்த பேட்டியில் நீங்கள் சொன்னீர்கள் "இந்த வெற்றி என்னுடைய வெற்றி அல்ல மாறாக இது தமிழக மக்களின் வெற்றி" என்று, நிறம்ப சந்தோசமாக இருந்தது அதைக் கேட்ட பொழுது. ரொம்ப தன்னடக்கத்துடன் இருந்தீர்கள். இனி இப்பொழுதும் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பீர்கள் என்று நம்புகிறோம், எதிர்பார்க்கிறோம்.
ஆனால் புதிய தலைமைச்செயலக விசயத்தில் உங்களின் அணுகுமுறை அறிவு சார்ந்ததாய் தெரியவில்லை. கருணாநிதி கட்டினார் என்பதைத் தவிர அதை நீங்கள் வெறுக்க என்ன காரணம் இருக்க முடியும்? இந்த புறக்கணிப்பு தேவைதானா? உங்களின் ஈகோ வைக்காட்ட மக்களின் வரிப்பணத்தை தான் வீணடிக்க வேண்டுமா? தயவு செய்து யோசியுங்கள். கருணாநிதி செய்த எதுவும் வேண்டாம் என்றால் அவர் வகித்த முதல்வர் பதவியும் வேண்டாம் என்று சொல்வீர்களா???
எனக்கு பயமாய் இருக்கிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மிக அழகிய முறையில் கட்டி அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளார் கருணாநிதி. அவரை எதிர்க்கும் குணத்தால் தயவு செய்து அதற்க்கு எந்த தீங்கும் செய்து விடாதீர்கள். முடிந்தால் அதற்க்கு இன்னும் மெருகூட்டி உங்கள் மதிப்பை இன்னும் உயர்த்திக் கொள்ளுங்கள். அதே போல் சென்ற ஆட்சியின் நல்ல திட்டங்கள் அனைத்தையும் தொடருங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது.
நிறைய புதுமை செய்வேன் என்று வாக்களித்து உள்ளீர்கள். நன்றாக செய்யுங்கள், உங்களை பாராட்ட காத்திருக்கிறோம். ஆனால் மனம் போன போக்கில் நடந்தால் எதிர்ப்பை காட்டவும் தயாராக உள்ளோம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
வெற்றிக்குப் பிறகு உங்களிடம் அமைதி தெரிகிறது. அது எங்களுக்கு சந்தோசச் செய்தி. ஆனால் தலைமைச் செயலக விஷயத்தால் எங்களுக்கு ஒரு பயம் வருகிறது. அது உங்களுக்கு கெட்ட செய்தி.
உங்களை கணிக்க முடியவில்லை... மீண்டும் மாறிவிடுவீர்களோ ? பயமாய் இருக்கிறது.
Tweet |
திக் திக் ....ஆரம்பம் ...2016 கிளைமாக்ஸ்
பதிலளிநீக்குபார்ப்போம்
பதிலளிநீக்கு=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே
http://speedsays.blogspot.com/2011/05/how-to-make-problems.html
உன்னை ஒட்டியே என் பதிவும்
பதிலளிநீக்குஉங்கள் நண்பர் போலவெ நீங்களும் தி.மு.க அனுதாபியா ஆச்சர்யமா இருக்கே
பதிலளிநீக்குதண்ணி தொட்டி மாதிரி இருக்கிற அந்த கட்டிடத்தை பார்த்தா சிரிப்புதான் வருது..கம்பீரமான கட்டிடம் கோட்டை மட்டுமே..சிங்கம் கோட்டையில் இருப்பதுதான் அழகு..
பதிலளிநீக்குபிளாகர் ரஹீம் கஸாலி கூறியது...
பதிலளிநீக்குஉன்னை ஒட்டியே என் பதிவும்
hi hi hi இருவரும் ஒருவரே?
சட்ட மன்றம் என்பது கலாசாரத்தை பிரதிபலிப்பதாகவும் கம்பீரமாகவும் இருக்கவேண்டும் அந்த படத்தை நீங்களே பாருங்கள் . இந்தியன் ஆயில் டான்க் மேல கருப்பு மஞ்சள் பெயின்ட் அடிச்சா மாதிரி இருக்கு.....
பதிலளிநீக்குஇந்த 'அம்மா' என்ன தான் பண்ண போறங்கன்னு பாக்கலாம்.
பதிலளிநீக்குஅவரு எதுக்கு ஜார்ஜ் கோட்டையை மாத்தி 1200 கோடி செலவு பண்ணி புதுசா கட்டுனாரு. நீங்க மாத்துங்கம்மா. சிராஜ் சொன்னதை கண்டுக்காதீங்க!
பதிலளிநீக்கு