வெள்ளி, ஏப்ரல் 29, 2011

யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு...


அன்பு நண்பர்களே... அருமைத் தம்பிகளே... பெரியோர்களே...
தாய்மார்களே... இதோ வலை உலகத்திற்கு ஒரு புதிய அறிமுகம்...
நீண்ட நாட்களாகவே பதிவுலக ஜாம்பவான் நண்பர்கள் என்னை வலை உலகிற்குள் வருமாறு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் சரி என்னதான் நடக்குது, எப்டிதான் எழுதுறாங்கன்னு பாத்துட்டு அப்புறம் நுழையலாம்னு கடந்த இரண்டு வாரமா வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தேன். உள்ளதும் போச்சிடா நொள்ள கண்ணாங்கிற கதையா ஏன்டா இத்தன நாள் வாட்ச் பண்ணோம்னு ஆயிடுச்சு. பின்ன என்னங்க கொஞ்ச நஞ்சமா ஏழுதுறாங்க? இத பாத்தா பின்னால நாமள்லாம் பதிவுலகத்தில தாக்கு புடிக்க முடியுமான்னு சந்தேகமாவே இருக்கு.

இருந்தாலும் இந்த கடல்ல நீச்சலடிச்சு தான் பார்ப்போமேன்னு தொபுகடீர்னு குதிச்சிட்டேன், ஹ்ம்ம்.. பார்ப்போம்... தேருவனான்னு...
இருக்கிற ஆளுங்க பத்தாதா இவன் வேறயான்னு நீங்க முனுமுக்கிறது காதில விழுது. கவலையே படாதீங்க, அடிக்கடி எழுதி தொந்தரவு செய்ய மாட்டேன்... மனசில தோணுனா மட்டும் தான் எழுவேன். ஆனா மனசில தோன்றது எல்லாத்தையும் எழுவேன், முடிந்த அளவு அடுத்தவர் மனதை காய படுத்தாமல்.

ஆனா யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு... ஆமாம். மத்தபடி மனசில படுற கமெண்ட்ச தயங்காம போடுங்க, படிச்சு என்னைய திருதிக்கிறேன் இல்லாட்டி அத பார்த்து என்ன வளர்த்து கொள்கிறேன்.
பதிவு உலகிற்குள் நான் இன்று நுழைய முழுக்க முழுக்க காரணம் எனது அருமை நண்பன் ரஹீம் கஸாலி தான். எனக்கு ஊக்கம் அளித்து எல்லா வகைகளிலும் உதவி புரிந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள்.

நட்புடன்,
சிராஜ்.40 கருத்துகள்:

 1. முதல் கமெண்ட் கொடுத்த கருண் அவர்களுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 2. வலைத் தளத்தில் தொடர்ந்து, எழுத வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 3. அஹா ஆரம்பமே அமர்களம்

  கலக்குங்க

  பதிலளிநீக்கு
 4. வலைப்பூவுலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. வாய்யா டீ மாஸ்டரு...பலகாரமெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கத்தானே போறோம்...தமிழ் வலைப்பதிவுலகம் தங்களை வருக வருக என வரவேற்கிறது...!!!

  பதிலளிநீக்கு
 6. வாங்க சிராஜ்!வடை,பஜ்ஜி......எல்லாம் எடுத்து வையுங்க!சாப்பிடலாம்!

  பதிலளிநீக்கு
 7. வந்தாச்சுல்லா. கலக்குங்க பாஸ் தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. வலைப்பூக்கள் நடுவே பூத்துக் குலுங்க கவிதை வீதி வாழ்த்துகிறது....


  என்று தங்களுக்கு ஆதரவுடன்...

  பதிலளிநீக்கு
 9. வருக! வளர்க!! வாழ்க!!! (இந்த கோஷம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?)

  பதிலளிநீக்கு
 10. welcome my boy...ஆபீஸ் உங்களை அன்போடு வரவேற்கிறது

  பதிலளிநீக்கு
 11. வாங்க மக்கா எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாத்துர மாட்டமா என்ன....

  பதிலளிநீக்கு
 12. தமிழ்மணம் இணைப்பு வேலை செய்யலை...

  பதிலளிநீக்கு
 13. >>
  ஆனா யாராவது என்ன காய படுத்த நெனச்சீங்க... பிச்சு புடுவேன் பிச்சு...

  ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 14. பதிவுலகத்திற்கு அன்போடு வரவேற்கிறோம்..!!

  பதிலளிநீக்கு
 15. [MA]என் நண்பனை உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி[/MA]

  பதிலளிநீக்கு
 16. என்ன சி.பி.செந்தில் இப்படி சொல்லிட்டிய? சொந்த டைட்டில் அய்யா, சொந்த டைட்டில்... பொதுவா நம்ம சாப்பாட்டில கூட காப்பி சேக்கிறது இல்ல, ஒன்லி டீ தான்.

  பதிலளிநீக்கு
 17. வாங்க வாங்க! கலக்குங்க!

  பதிலளிநீக்கு
 18. பஜ்ஜி,வட, போண்டா,.... டீ........சரிதான்....... ஆனா....சிகிரெட் ?
  இல்லையே........சரி. கட புதுசு .....அஜ்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். அடுத்த தடவ வரும்போது சிகிரெட் இருக்கணும்.
  இல்லாட்டி நாங்க பிச்சிபுடுவோம் பிச்சி......

  பதிலளிநீக்கு
 19. அன்பின் சிராஜுதீன்

  வலையுலகத்திற்கு வரவேற்கிறோம். ஜமாய்ங்க ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 20. அன்பின் சிராஜுதீன்

  இடுகை இரு முறை வருகிறதே - ஒன்றினை அடுத்து மற்றொன்றாக ..... கஸாலியின் இடுகையும் இது மாதிர வருகிறது. அவர் சொல்லிக் கொடுத்தாரா ? இருவரும் காரணம் கண்டு பிடித்து நிவர்த்தி செய்யுங்கள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 21. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  தமிழ் வலைப்பூவிற்கு மற்றுமொரு புதிய அதிரடி பதிவர், ஏன்னா முதல் தலைப்பே காட்டுகின்றதே.

  பதிலளிநீக்கு
 22. ஸ்டார் மூசிக் ...............

  ரெண்டு டீ பார்சல்

  பதிலளிநீக்கு
 23. வலை உலகிற்கி தங்களை அன்புடன் அழைகின்றோம்

  பதிலளிநீக்கு
 24. வருகை புரிந்து ஆதரவு அளித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 25. பெயரில்லாசனி, 30 ஏப்ரல், 2011

  தமிழ் வலைப்பூவுலகிற்கு உங்களை வருக! வருக! என வரவேற்கிறேன்.

  One Humble Request!

  Pl don't write CINEMA/ Actor's related article/post.

  பதிலளிநீக்கு
 26. வருக வருக! உங்கள் வரவு நல்வரவு ஆகுக! வந்தவுடன், நண்பர் கசாலியின் அறிமுகம் அருமை!

  பதிலளிநீக்கு
 27. ஹி ஹி ..............நானும் இங்க தான் இருக்கேன் .......
  வாடி வா ........ .....டீ சூடா இருக்கணும் சொல்லிட்டேன் ஆமா ...........

  பதிலளிநீக்கு
 28. வாழ்த்துக்கள் தோழரே தங்களின் முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக

  பதிலளிநீக்கு
 29. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters