வியாழன், மே 12, 2011

கலைஞரின் ஆட்சியா? ஜெயின் ஆட்சியா? முடிவுசெய்யப்போகும் அரசரின் ராசி...



இதோ..இதோ... வந்தே விட்டது நாம் நீண்ட நாட்களாக காத்திருந்த தேர்தல் முடிவிற்கான நாள். கடந்த இரண்டு மாதங்களாக எத்தனையோ கருத்து கணிப்புகள் பத்திரிகைகளாலும் தொலைக்காட்சி உட்பட்ட மற்ற ஊடகங்களாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேவை இல்லாமல் ஊர் ஊராக சென்று வேகாத வெயிலில் வெந்து அல்லது கட்சிகளிடம் காசு வாங்கிக்கொண்டு கணிப்புகளை வெளியிட்டுவிட்டார்கள், ஆட்சி யாருக்கு என்று தெரிந்து கொள்வதற்கு மிகச் சுலபமான ஒரு வழி இருப்பது தெரியாமலே.


ஆம் நண்பர்களே, மிகச் சுலபமாக, யாருடைய ஆட்சி அமையும் என்பதை கணித்துவிடலாம். அதற்காக நீங்கள் தமிழகத்தின் 234  தொகுதிகளுக்கும் சென்று கருத்துக்கணிப்பு நடத்த வேண்டியது இல்லை. ஒரே ஒரே தொகுதிக்கு சென்று கருத்தை கணித்தால் போதும்.

அந்த பெருமைக்கு உரிய தொகுதி....



புதுக்கோட்டை மாவட்டத்திலும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குள்ளும் வரும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி.

அது எப்படி, ஒரே ஒரு தொகுதியை வைத்து ஒட்டு மொத்த தமிழக தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்வது? அங்கதான் இருக்கு ஒரு கணக்கு.. அந்த கணக்கு தான் என்ன???  இதோ விடை.....



1989-ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர்.  மறைவிற்கு  பின்  நடந்த தேர்தலில்  திருநாவுக்கரசர் அவர்கள் செல்வி ஜெயலலிதாவின் அணியில்  இணைந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். நல்ல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் அடைந்தார். ஆனால் அந்தத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைக்க முடியவில்லை. மாறாக கலைஞர் ஆட்சி அமைத்தார்.



வருடம் 1991 , ஜெயலலிதாவின் மீது கொண்ட அதிருப்தியில் திருநாவுக்கரசர் அண்ணா புரட்சித்தலைவர்  தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு கட்சி தொடங்கி  அந்த தேர்தலில் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த தேர்தலிலும் திருநாவுக்கரசர் வெற்றி அடைந்தார், அனால் ஆட்சி அமைத்தது செல்வி ஜெயலலிதா அவர்கள், கலைஞர் ஆட்சியை இழந்தார்.

வருடம் 1996 , திருநாவுக்கரசர்  மீண்டும் அ.தி.மு.க வில் இணைந்து போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் அபார வெற்றி அடைந்தார். ஆனால் செல்வி ஜெயலலிதா ஆட்சியை இழந்தார், கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

வருடம் 2001, இந்த முறை திருநாவக்கரசர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து கலைஞருடன் கூட்டணி அமைத்தார். தனது கட்சி சார்பாக அறந்தாங்கி தொகுதியில் அரசன் என்ற தனது நண்பரை நிறுத்தினார். என்ன ஒரு விநோதம் பாருங்கள், இந்த முறை அரசன் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால்...ஆனால்...ஆனால்... ஆமாங்க அதேதான்... கலைஞர் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார், ஜெயலலிதா அரியணை ஏறினார். 

அதன் பின் அரசர் நாடாளுமன்ற தேர்தல்கள் பக்கம் சென்றுவிட்டார், அதனால் தான் 2001  க்கு பின் கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை, நண்பர்கள் மன்னிக்கவும்.

இதிலிருந்து என்ன தெரியுது??? எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் திருநாவுக்கரசர் வெற்றி அடைந்தாலும்  அவர் சார்ந்த கூட்டணி கட்சி ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பதே.

என்ன அரசியல் வித்தகர்களே கணக்கு சரி தானே????

பார்ப்போம் இந்த தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்று....

டிஸ்கி-1 : ராசியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. இது ஒரு ஒப்பீடு அவ்வளவே.




12 கருத்துகள்:

  1. ஒரு பதிவை போட்டு அண்ணா.தி.மு.க.ஆதரவாளர்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கே... இதெல்லாம் திருநாவுக்கரசர் மாநில கட்சிகளில் இருக்கும் போது நிகழ்ந்தது...அவர் இப்போது தேசிய கட்சியில் இருக்கிறார்....அதனால் இந்த செண்டிமெண்ட் எல்லாம் செல்லாது...

    பதிலளிநீக்கு
  2. @ரஹீம் கஸாலிநானும் இது நடக்க கூடாதுன்னுதான் நினைக்கிறேன் ஆனால் நடந்திருமோன்னு பயமா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. எப்படியெல்லாம் யோசிக்கராங்க
    =+=+=+=+=+=+=+=+=+=+=+
    காலம் செய்த கோலம்

    http://speedsays.blogspot.com/2011/05/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  4. ஆகா!உங்கள் கணிப்புப் படி நடந்தாலும் நடக்கும்!

    பதிலளிநீக்கு
  5. எப்பிடியெல்லாம் யோசிகாரங்க

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லாவியாழன், 12 மே, 2011

    இது நல்லாருக்கே எப்படியோ தோத்தா சரி

    பதிலளிநீக்கு
  7. எல்லா விஷயங்களுக்கு, கருத்துகளுக்கும் நாளை இந்நேரம் முடிவு வந்து விடும்...

    தங்களின் கருத்து என்னவாகும் பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
  8. 35 ஆண்டு கால மேற்கு வங்க வரலாறே மாற போகுது ........

    பதிலளிநீக்கு
  9. எப்படியோ நல்லது நடந்தால் சரி ...

    பதிலளிநீக்கு
  10. வந்தேன் .. வாக்களித்தேன்.. சென்றேன்..

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters