கடந்த நான்கு வருடங்களாக நடை பெற்றுவரும் இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான IPL -ல் இந்த வருடமும் வெற்றி பெரும் வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கே பெருமளவில் உள்ளது. இதை நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை மாறாக ஒவ்வொரு அணியின் குறை நிறைகளை அலசியே சொல்கிறேன்.
நடந்து முடிந்த எல்லா IPL போட்டிகளிலும் அரை இறுதி சுற்றை அடைந்த ஒரே அணி சென்னை தான். வெற்றி நிலவரங்கள்.
2008 - இறுதிச் சுற்றில் தோல்வி. 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
2009 - அரை இறுதிச் சுற்றில் தோல்வி. 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
2010 - கோப்பையை கைப்பற்றி சாம்பியன். எதிர்த்து ஆடியது மும்பை இந்தியன்ஸ், 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
2010 - சாம்பியன்ஸ் கோப்பையில் முதல் முறையாக பங்கு பெற்று கோப்பையை வென்றது.
2011 - இறுதி போட்டிக்கு தகுதி. எதிர்த்து விளையாடப் போவது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.
பேட்டிங் வரிசை:
எப்படி இந்த வெற்றிகள் சென்னைக்கு சாத்தியமாகின? நிச்சயமாக அதன் மிக வலுவான பேட்டிங் வரிசை தான் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணமாகும். கடந்த எல்லா IPL போட்டிகளின் போதும் இக்கட்டான தருணங்களில் மிகச் சிறப்பாக விளையாடியே இந்த வெற்றிகளை அவர்கள் பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு அணியிலும் அதிரடி பேட்ஸ்மேன்கள் ஒருவரே இருப்பார்(கைல், பொல்லார்ட், யூசுப் பதான் போன்றோர்). இந்த இடத்தில் தான் சென்னை அணி மற்ற அணிகளுடன் வேறு படுகிறது. ஆம், சென்னை அணியில் சுரேஷ் ரைனா, டோனி மற்றும் அல்பி மோர்கல் என்ற 3 அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளார்கள். ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை கரை சேர்த்து விடுகிறார்.
பந்து வீச்சு:
போல்லின்ஜர் என்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் அணியில் இணையும் வரை சென்னை பந்து வீச்சு பரிதாபகரமான நிலையிலே இருந்தது. அவர் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இணைந்தவுடன் பந்து வீச்சிலும் ஓரளவுக்கு நல்ல நிலையை அணி அடைந்தது. போல்லிஞ்சரின் பந்து மற்ற பந்து வீச்சாளர்களை ஒப்பிடுகையில் சற்று மேல் எழும்பி செல்கிறது, அதனால் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் சிறிது தடுமாறி விடுகிறார்கள். நம்மவர்கள் எப்பொழுதுமே BOUNCER பந்துகள் என்றால் கொஞ்சம் அலறுவார்கள். சுழல் பந்து வீச்சில் சென்னை பையன் அஸ்வின் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். ஆகா மொத்தத்தில் பந்து வீச்சும் மோசம் என்று சொல்லி விட முடியாது.
இந்த நிலையில் அணித் தலைவர் டோனியின் அணுகு முறையும் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலம் ஆகும். மற்ற அணித்தலைவர்கள் போல் பொறுப்புகளை மற்றவர்களிடம் தள்ளாமல் இவர் தன் தோளில் சுமக்கிறார். இது தான் இவருடைய வெற்றியின் ரகசியம் ஆகும். இந்த அணுகு முறை நிச்சயம் சென்னைக்கு அனுகூலம் ஆகும்.
இறுதிப் போட்டி:
இன்று நடக்கும் இறுதிப் போட்டியை பொறுத்த வரையில் Gayle லை 35 ரன்னுக்குள் அவுட் செய்து விட்டால் வெற்றி சென்னைக்கே. இவர் ஒருவர் தான் சென்னைக்கு பெரிய சவால். இந்த சவாலில் வென்று விட்டால் கோப்பை சென்னைக்கே. அதேபோல் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த வருடம் சென்னையில் நடந்த எந்த போட்டியிலும் சென்னை அணி தோற்க்கவில்லை என்பதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் அந்த அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.
டாஸ் வென்றால் கண்ணை மூடிக்கொண்டு பேட்டிங்கை தேர்வு செய்து விட வேண்டும். சென்னை மைதானம் நேரம் செல்லச் செல்ல சிறிது SLOW ஆகிவிடும். நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் செய்த தவறை சென்னை செய்து விடக்கூடாது.
ஆகா மொத்தம் இன்றைய போட்டியில் சென்னைக்கு வெற்றி வாய்ப்பு 80 சதவீதமாக உள்ளது.
Tweet |
நல்ல விமர்சனம் பாஸ்.. உண்மையிலே சென்னையில் அதிரடி வீரர்கள் உள்ளார்கள்.. ஆனால் பந்துவீச்சிலே போலிஞ்சரை தவிர சர்வதேச போட்டிகளில் நிலையாக விளையாடும் வீரர்கள் யாரும் இல்லை. அஸ்வினும் சிறப்பாக வீசுகிறார்.
பதிலளிநீக்குநானும் சென்னை தான் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். ஆனால் கெயில் சிறிது நேரம் களத்தில் நின்றாலே கதை கந்தலாகிவிடும். அதோடு 20 /20 போட்டிகளை பொறுத்தவரை ஓரிரு பந்துகளே போட்டியின் போக்கை மாற்றிவிடும்...
சென்னை வெற்றி பெற வாழ்த்துக்கள்...
அண்ணாத்தே நமக்கு கிரிக்கெட் ஆவாது! ஆனாலும் ஒட்டு போட்டுட்டு கெளம்புறென்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கந்தசாமி அவர்களே. நானும் சென்னை தான் ஜெயிக்கும் என்று நினைக்கிறேன். மீண்டும் வருக.
பதிலளிநீக்குவருகைக்கும் வோட்டிர்க்கும் நன்றி ஓட்டவடை அவர்களே. கிரிக்கெட் பிடிக்காதா??? உண்மையிலே நீங்கள் வித்தியாசமானவர் தான்.
பதிலளிநீக்குகண்டிப்பா எல்லாமே match fixing..http://zenguna.blogspot.com
பதிலளிநீக்குஏன் இந்த சூதாத்தட்டிற்கு இவள்ளவு மெனக்கட்டு புள்ளி விபரங்கள் பணம் படைத்தவர்கள் தீர்மானிக்கும் விஷயம் தானே ......
பதிலளிநீக்குஎன் வயித்தில் பீரை வார்த்தீர்கள்
பதிலளிநீக்குஅன்பின் சிராஜ் - சென்னை வெற்றி பெற வாய்ப்பிருக்கிறாது - 206 ரன் என்ற இலக்கினை நோக்கி பெங்களூர் ஆட வேண்டும். பார்ப்போம். சென்னை அணி வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குபின் தொடர இது
பதிலளிநீக்குcheena (சீனா) சொன்னது… பின் தொடர இது///
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அய்யா....பின்தொடர இது என்ற உங்களின் பின்னூட்டம் எனக்கு புரியவில்லை. எதற்காக அந்த வார்த்தையென்று தெரிந்து கொள்ளலாமா?
எனக்கும் ஸ்போர்ட்ஸூக்கும் ரொம்ப தூரம் ஹி ஹி நட்புக்காக ...
பதிலளிநீக்குஅன்பின் சிராஜ்
பதிலளிநீக்குபொதுவாக கருத்துகளைப் பின் தொடர் வேண்டுமெனில் ( என் கருத்துகளுக்குப் பிறகு யார் க்ருத்து கூறினாலும், அக்கருத்து எனக்கு மின்னஞ்சலில் வந்து விடும் ) - இரண்டாவதாக ஒரு மறு மொழி இட வேண்டும். அப்பொழுது தான் மின்னஞ்சலில் வரும். அதற்காக இரண்டாவதாக் மறுமொழி இடும் போது = For Follow up of Comments னு எழுதுவேன். வேறொன்றுமில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
//சென்னையே வெற்றி பெரும்//
பதிலளிநீக்குபெறுமா? பெருமா?
//ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை கரை சேர்த்து விடுகிறார்.//
அப்பா இந்த அணில பாதி பேர் கப்பல் ஓட்டுற கேப்டன் வேலை செஞ்சாங்களா?
//மற்ற அணித்தலைவர்கள் போல் பொறுப்புகளை மற்றவர்களிடம் தள்ளாமல் இவர் தன் தோளில் சுமக்கிறார்.//
பதிலளிநீக்குஆமா. அவர் தோளில் விளம்பரதாரர் லோகோ இருந்ததை பார்த்தேன். நல்லாதான் சுமக்கிறார். கோடி ரூவா குடுத்தா சுமந்துதானே ஆகணும்.
எப்படியோ நீங்க சொன்னபடி ஜெயித்து விட்டது சிராஜ். சந்தோஷம்!!
தமிழில் எழுத்துப்பிழையுடன் பதிவிடுவோரை தட்டிக்கேட்க மீண்டும் வருகிறேன்...விரைவில்!!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி அண்ணன் அஞ்சா சிங்கம் அவர்களே... மீண்டும் வருக...
பதிலளிநீக்குநட்புக்காக வருகை புரிந்த அண்ணன் C .P . செந்தில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... என்னுடைய மடிக்கணினியும் சொதப்பி விட்டது அதனால்தான் உடனே மறுமொழி இட முடியவில்லை...
பதிலளிநீக்கு@! சிவா !
பதிலளிநீக்குஎது சொன்னாலும் எதுக்கிறதா முடிவு பண்ணியாச்சா சிவா...நாளைக்கு மெட்ராஸ்பவன் சிவா நல்லவரு ஒரு வல்லவருன்னு எழுதலாம்னு இருக்கேன்... பழக்க தோஷத்தில் அதையும் எதிர்ப்பீர்களா?
@தமிழ் ஈட்டி !
பதிலளிநீக்குவாங்க அண்ணன் தமிழ் ஈட்டி அவர்களே, நல்ல வேலை எழுத்து பிழையை மட்டும் பார்ப்பேன் என்று சொன்னீர்கள், இலக்கண பிழையும் பார்ப்பேன் என்று கூறி இருந்தீர்களோ? அப்புறம் தமிழ்ல எந்த ப்ளாக்கும் இருக்காது.
@தமிழ் ஈட்டி!
பதிலளிநீக்குஉங்களோட கமெண்ட்ல எழுத்து பிழை இருக்கான்னு கண்ணுல வெளக்கெண்ணை விட்டு தேடினேன், கிடைக்கவில்லை. வாழ்க தமிழ்... வாழ்க ஈட்டி...