திங்கள், மே 23, 2011

இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடியலப்பா...                                                               

போன வெள்ளிக்கிழமை சில பிரபல(???) மற்றும் பிரபலமில்லாத பதிவர்களின் வலைத்தளங்களை பார்வையிட்டுக்கொண்டு இருந்தேன். சிலருக்கு கமெண்ட்ஸ் சும் போட்டேன். அதில் சிலர் கமெண்ட் தணிக்கை செய்துள்ளார்கள். சரி கொஞ்ச நேரத்தில பாத்துட்டு கமெண்ட்ஸ்ச வெளியிட்டு விடுவார்கள் என்று பார்த்தால் ஞாயிற்று கிழமை வரை வெளியிடவே இல்லை.

அதனால கடுப்பாகி தான் இந்த பதிவை எழுதுகிறேன்...

அய்யா anonymous அப்ரசண்டிகளா, உங்களால் தான் இது போன்ற பிரச்சனைகள் வருகின்றன. நீங்கள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதால் தான், பதிவர் நண்பர்கள் இது போன்று கமெண்ட்களை மட்டுறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் தைரியமாக சொந்த பேரில் வந்து சொல்ல வேண்டியது தானே? எனக்கு தெரிந்து எல்லாப் பதிவர்களும் மாற்று கருத்தை பிரசுரிக்கவே செய்கிறார்கள். அப்புறம் ஏன் தயங்குகிறீர்கள்?


எங்களுடன் உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சண்ட போடுங்க, நாங்க வேணாம்னு சொல்லல, இன்னும் சொல்லப்போன வரவேற்கிறோம், ஆனால் BAD  வோர்ட்ஸ் மட்டும் வேணாம், மம்மி பாவம்.... என்ன டீல் ஓகே யா?(ஆமாம், ஆயிரம் பேர் சொல்லி கேட்காதவர்கள் நான் சொல்லியா கேட்பீர்கள்).
                                                                     
சரி நம்ம பதிவர்கள்கிட்ட வருவோம்....

எல்லா கமெண்ட் MODERATION  வச்சிருக்கவைங்களுக்கும்  ஒன்னு சொல்லிக்கிர்றேன். தினமும் பார்த்து கிளியர் பண்ண முடிஞ்சா வைங்க, இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கி விடுங்கடா...

(மேற்கண்ட வரிகளை மட்டும் கவுண்டமணி பாணியில் படிக்கவும்... தயவு செய்து மரியாதைக் குறைவாக எடுத்துகொள்ளாமல் கவுண்டர் பாணி நகைச்சுவையாக எடுத்துகொள்ளும் படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்).

நாங்க போட்ட கமெண்ட்ஸ்ச நாங்க பாக்கவே ரெண்டு மூணு நாலு காத்திருக்கணுமா?
 
கடுப்பேத்துராய்ங்க மை லார்ட்...


32 கருத்துகள்:

 1. /எல்லா கமெண்ட் MODERATION வச்சிருக்கவைங்களுக்கும் ஒன்னு சொல்லிக்கிர்றேன். தினமும் பார்த்து கிளியர் பண்ண முடிஞ்சா வைங்க, இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கி விடுங்கடா..//

  அது என்ன.. விடுங்க'டா'... 'டி' ன்னு ஒரு வார்த்தை தமிழ்ல இருக்கு. தைரியம் இருந்தா போடுங்க. அப்பராணி ஆம்பளைங்கன்னா கிண்டலா போச்சா?

  பதிலளிநீக்கு
 2. //நாங்க போட்ட கமெண்ட்ஸ்ச நாங்க பாக்கவே ரெண்டு மூணு நாலு காத்திருக்கணுமா?//

  என்னமோ கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுன வைரமுத்து மாதிரி சலிச்சிக்கறீங்க. நீங்க போட்ட கமண்டை காப்பி பண்ணி தனியா ஒரு பைல்ல போட்டு வச்சி பாருங்க. யார் வேணாம்னு சொன்னா?? ஹி..ஹி....

  பதிலளிநீக்கு
 3. ! சிவகுமார் ! சொன்னது… 1 அது என்ன.. விடுங்க'டா'... 'டி' ன்னு ஒரு வார்த்தை தமிழ்ல இருக்கு. தைரியம் இருந்தா போடுங்க. அப்பராணி ஆம்பளைங்கன்னா கிண்டலா போச்சா?மீ டூ ...சேம் பீலிங் ....கோவத்தை கௌண்டமணி உதவியுடன் பதிவு பண்ணிட்டீங்க ரைட்டு

  பதிலளிநீக்கு
 4. கருத்துக்களை தாங்கும் இதயம் இல்லாதவர்களும் பொறாமையிலும் செய்யும் சதியால்தான் பதிவர்கள் அதிகமாக கருத்துரைகளை அசட்டை செய்வதில்லையாக்கும்! எங்களுக்கு நீங்கள் பதில் போடமாட்டீர்கள் அந்த தைரியம்தான்!

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கு நன்றி சிவா... கவுண்டர் அடிக்கடி ஆண்கள தான் வாருவார்...அதான் "டா" இல்லாட்டி வேற மாதிரி சொல்லி இருக்கலாம்... கவுண்டருக்கு துரோகம் செய்ய முடியாது சிவா....

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கு நன்றி ரியாஸ்....

  பதிலளிநீக்கு
 7. கண்டிப்பாக பதில் போடுவேன் நேசன்... வருகைக்கு நன்றி....

  பதிலளிநீக்கு
 8. /* என்னமோ கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதுன வைரமுத்து மாதிரி சலிச்சிக்கறீங்க. நீங்க போட்ட கமண்டை காப்பி பண்ணி தனியா ஒரு பைல்ல போட்டு வச்சி பாருங்க. யார் வேணாம்னு சொன்னா?? ஹி..ஹி.... */

  நீங்க சொல்றத பார்த்த இந்த பதிவு உங்களுக்கும் பொருந்தும் போல இருக்கு

  பதிலளிநீக்கு
 9. இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடியலப்பா...

  பதிலளிநீக்கு
 10. ஹி.ஹி.ஹி.......... அப்போ நீங்களும் அடுத்தவுங்களுக்கு கமன்ட் போட மாடுரேசன் வச்சுக்கங்க ...... அவுங்க எப்போ பப்ளிஸ் பண்ணுறாங்களோ அப்போ நீங்களும் பப்ளிஸ் பண்ணுங்க
  இப்படிக்கு
  அக்கினி நட்சத்திர வெயிலில் மண்ட குழம்பி அடுத்தவரையும் குழப்புவோர் சங்கம்

  பதிலளிநீக்கு
 11. அப்புறமா படிச்சிட்டு கருத்து சொல்றேன்...இப்ப ஒட்டு மட்டும்...

  பதிலளிநீக்கு
 12. கரக்டா சொன்னீங்க

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
  ஒரு காதல் கதை
  http://speedsays.blogspot.com/2011/05/love-story.html

  பதிலளிநீக்கு
 13. ங்ணா... சேலத்துல முக்கிய பிரமுகர் கைதாமே?

  பதிலளிநீக்கு
 14. haa haa ஹா ஹா யார் எது செஞ்சாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இருக்கும் போல..

  பதிலளிநீக்கு
 15. வாங்க இராஜராஜேஸ்வரி ... இந்த தொல்லைக்கே சலிச்சுகிட்டா எப்படி???? இன்னும் எவ்வளவோ இருக்கு... வருகைக்கு நன்றி... மீண்டும் வருக...

  பதிலளிநீக்கு
 16. வருக வருக மங்குனி அமைச்சரே... கருத்துக்கு நன்றி... மீண்டும் வருக... மீண்டு வருக....

  பதிலளிநீக்கு
 17. /* அப்புறமா படிச்சிட்டு கருத்து சொல்றேன்...இப்ப ஒட்டு மட்டும்...
  */
  வாங்க ஹாஜா மச்சான், வோட்டு போடல போலிருக்கே...படிக்காம போடாதீங்க மச்சான்....படிச்சுட்டு அப்புறம் போடுங்க...சந்தோசமா ஏத்துக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 18. வருகைக்கு நன்றி ஸ்பீட் மாஸ்டர் அவர்களே.. மீண்டும் வருக...

  பதிலளிநீக்கு
 19. வாங்க பன்னிகுட்டி அண்ணே வாங்க, சி.பி அண்ணன் வந்தாங்க, நல்ல நேரம் சதீஸ் அண்ணன் வந்தாங்க மற்றும் நிறைய பிரபல பதிவர்கள் எல்லாம் வந்தாங்க... BUT நீங்க கடைக்கு இதுவரை வரலையேன்னு கவலையா இருந்தேன்... வந்திட்டீங்க... ரொம்ப சந்தோசம். அப்புறம் பண்ணு டீ லாம் ஒழுங்கா சாப்டறீங்களா????

  பதிலளிநீக்கு
 20. /* haa haa ஹா ஹா யார் எது செஞ்சாலும் அதை எதிர்க்க ஒரு கூட்டம் இருக்கும் போல..

  */

  நம்ம பொழப்பே எதிர்ப்புலதான் ஓடிகிட்டு இருக்கு.... வருகைக்கு நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 21. அன்பின் சிராஜ் - ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள். நன்று. மட்டுறுத்தல் வைப்பதே கருத்துகளை வெளியிடும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதனால் தான். ஆக அவர்களை நாம் நமது கருத்துகளை வெளியிட்டே ஆக வேண்டும் எனக் கட்டாயப்படுத்த இயலாது. தினந்தினம் வெளியிடும்படி கட்டாயப்படுத்தவும் இயலாது. நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 22. பின் தொடர இது ஒரு மறுமொழி

  பதிலளிநீக்கு
 23. மதியம் நெட்டின் வேகம் ரொம்ப குறைவு மச்சான்....அதான் பின்னூட்டமிடவில்லை...உங்கள் கருத்தை அதிமுக அமைச்சர்களைபோல படு பயங்கரமாக ஒப்பு கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
 24. //கடுப்பேத்துராய்ங்க மை லார்ட்...//
  புரிகிறது!ஆனால் சில நேரங்களில், தவறாமல் உடன் பதில் எழுதும் சிலருக்குக் கூட கவனக்குறைவினால் இது நடப்பது சகஜம்!அவ்வளவே!

  பதிலளிநீக்கு
 25. ஆடியில பயங்கரமா காத்தடிக்குமாமே.!
  சென்னையில பயங்கர வெயில்.. மும்பை நேத்து மேட்ச் வின்..
  Man u மேட்ச் வின்..

  சரி நீங்க என்ன சொல்றீங்க.!? அவ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 26. அன்பு சீனா அண்ணன், பதிவர்கள் மேல் பெரிய கோபம் எல்லாம் இல்லை, உடனுக்குடன் பின்னோட்டம் இட்டால்தான் அது தொடர்பான தொடர் கருத்துக்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பதே என் கருத்து. அதை சற்று நகைச்சுவையாக சொல்ல முயற்சித்தேன் அவ்வளவே. வருகைக்கு நன்றி... உங்கள் தொடர் ஆதரவுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 27. /* உங்கள் கருத்தை அதிமுக அமைச்சர்களைபோல படு பயங்கரமாக ஒப்பு கொள்கிறேன்...

  */
  வருகைக்கு நன்றி ஹாஜா மச்சான்.... இனி அடுத்த 5 வருடங்களுக்கு சிறந்த காமெடி பீசுங்க நம்ம அ.தி.மு.க அமைச்சர்கள் தான்...
  நம்ம பொழுப்பு ஈசியா ஓடிரும்....

  பதிலளிநீக்கு
 28. சென்னை பித்தன் அய்யா அவர்களே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... தொடர் ஆதரவிற்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 29. /* தம்பி கூர்மதியன் கூறியது...
  ஆடியில பயங்கரமா காத்தடிக்குமாமே.!
  சென்னையில பயங்கர வெயில்.. மும்பை நேத்து மேட்ச் வின்..
  Man u மேட்ச் வின்..

  சரி நீங்க என்ன சொல்றீங்க.!? அவ்வ்வ்வ் */
  இந்திய மக்கள் தொகை 121 கோடி....
  அமெரிக்க அதிபர் ஒபாமா....
  அ.தி.மு.க ஆட்சி....
  மனோரம்மாவும் ஆட்சி....

  இதுதான் நான் சொல்லவந்தது... புரிஞ்சிச்சா???? அவ்வ்வ்வவ்வ்வ்வ்......

  பதிலளிநீக்கு
 30. வருகைக்கு நன்றி தம்பி கூர்மதியான்....மீண்டும் வருக...

  பதிலளிநீக்கு
 31. சொல்ல வேண்டிய விஷயம்தான். என்ன, நீங்க கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டீங்க, நண்பரே!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters