புதன், பிப்ரவரி 22, 2012

தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு


 
                                                      
 
மாண்புமிகு முதலமைச்சர் செல்வி J . ஜெயலலிதா பதவி ஏற்ற உடன் சொன்ன சில முக்கியமான வாக்குறுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவேன் என்பதும் ஒன்று.
 
 
சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவது தற்போதைய முதல்வரின் ஸ்பெசாலிட்டி என்பது போன்ற ஒரு பிம்பமும் நீண்ட நெடுங்காலமாய் அவரின் ஆதரவு பத்திரிக்கைகள் மற்றும் ரத்தத்தின் ரத்தங்கள் வாயிலாக பெருமையுடன் பேசப்பட்டு வந்தது. இப்பொழுது நடக்கும் சம்பவங்களை பார்த்தால், இதுவும் அரசிடம் காரியம் சாதிக்க நினைக்கும் நபர்களின் துதிகளில் ஒன்றோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
 
 
நிறைய உதாரணங்கள் இருந்தாலும் ஓரிரு சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.
 
 
சம்பவம்-1 : சென்னையை அடுத்த பெருங்குடி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் கடந்த மாதம் 23ம் தேதிதான் பிற்பகல் வாக்கில் 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 18 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் அதே பாணியில் ஒரு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.


சம்பவம்-2 : சென்னை கீழ்க்கட்டளை மேடவாக்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது.இந்த வங்கியில் நேற்று பகல் 2 மணிக்கு 4 பேர் வந்தனர். அவர்கள் முகத்தை கைக்குட்டையால் மூடி இருந்தனர். வந்தவர்கள் துப்பாக்கியை நீட்டி சர்வ சாதாரணமாக ரூ 14 லட்சங்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
 
 
சம்பவம்-3 : நேற்று இரவு திருப்பூர் ஆலுக்காஸ் நகைக் கடைக்குள் ஓட்டை போட்டு நுழைந்த திருடர்கள் ரூ 14 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
இதே திருப்பூரில் சில மாதங்களுக்கு முன் முத்தூட் நிறுவனத்தில் ரூ 3 கோடி மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்றனர்.
 
 
                                                      
 
 
கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசு என்ன செய்ய முடியும்???? ஒவ்வொரு கடை அல்லது நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நடை முறைச் சாத்தியமா? என்று யோசித்தால், அது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆகவே கொள்ளை நடக்கும் விசயத்தில் அரசை பெரிதாக நாம் குற்றம் சாட்டி விட முடியாது தான்.
ஆனால் பெரிய அளவில் திட்டம்   போட்டு பட்டப் பகலில் பஹிரங்கமாக துப்பாக்கி காட்டி கொள்ளை அடிக்கும் நபர்களை பல மாதங்களாக பிடிக்க முடியாமல் இருப்பது நிச்சயம் காவல்துறை மற்றும் உளவுத் துறையின் தோல்வியைத் தான் காட்டுகிறது.
 
 
இதற்கு மேலும் தாமதிக்காமல், முதல்வர் மக்களுக்கு கொடுத்த சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவேன் என்ற வாக்குறுதியை உறுதியாக செயல்படுத்த வேண்டும். உண்மையோ பொய்யோ, அவரின் மீது கூறப்படும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர் என்ற சொல்லை காக்க கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும். இல்லை என்றால் இது நிச்சயம் அவரின் ஆட்சியின் நீங்காத கரையாக வரலாற்றில் பதியப்படும். பின் அந்த நம்பிக்கையை மீட்டெடுப்பது சாதாரண விஷயம் இல்லை.
 
 
நான் ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்று பெருமை பொங்க அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.
அது முற்றிலும் உண்மை தான். அதற்காக நன்றி மேடம்.
 
 
ஆனால்... ஆனால்... பேங்குகளையும், நகைக்கடைகளையும் கொள்ளை அடிக்கும் பலே திருடர்கள் அனைவரும்
ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து விட்டார்களே அம்மா. வாட் டு டூ!!!!!!
 
 
இது தொடர்பில் நான் இந்த ஆட்சியின் ஆரம்ப நாட்களில் பதிவிட்ட கீழ்க்கண்ட பதிவையும் பார்வையிடுங்கள் நண்பர்களே...
 


21 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. Yes...Yes..

      அது எப்படி மச்சான் இரண்டு பேருக்கும் ஒரே விஷயம் பற்றி பதிவிட தோணிச்சு???

      நீக்கு
  2. சந்தி மட்டுமா. மெயின் ரோடும் சேந்துதான் சிரிக்குது. இதை தடுக்க உடனே நமது 'சோ.ராமசாமி' கஸாலி அவர்கள் திட்டம் வகுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சசிகலா, நடராஜன் ஆதரவாளர்ன்னு முதல்ல இந்த ஆளை பிடிச்சு உள்ளே போடனும்..ஸ்.யப்பா முடியலே

      நீக்கு
  3. நீங்களும் இரவில் டீக் கடையை நன்றாக பூட்டி விட்டு செல்லவும். :-) காலம் கெட்டு கிடக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் சகோ சுவனப்பிரியன்,

      நம்ம கடைல கொள்ளை அடிக்க என்ன சகோ இருக்கு????? கேட்டா நானே கொடுத்துடுவேன்... ஹி.ஹி.ஹி..

      நீக்கு
  4. //நான் ஆட்சிக்கு வந்தவுடன் சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டார்கள் என்று பெருமை பொங்க அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.//

    தற்போது நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது இந்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வந்தது. பிறகு வடிவேலு காமெடி நினைவுக்கு வந்தது.

    வடிவேலு ஒன்றை துரத்த அது சென்றுவிட்டு பிறகு கூட்டத்துடன் வரும். அப்படி தான் செயின் திருடர்கள் சென்றுவிட்டு பல திருடர்களை வந்துவிட்டார்கள்.

    செய்தி சேனல்களை திறந்தாலே இவைகள் தான் தலைப்பு செய்திகள். ஜெயா டிவியில் இருப்பவர்களுக்கு கவலையில்லை. அங்கு திருட்டே நடக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் தம்பி பிளாக்கர்நண்பன் அப்துல் பாசித்,

      /* ஜெயா டிவியில் இருப்பவர்களுக்கு கவலையில்லை. அங்கு திருட்டே நடக்காது. */

      ஒன்றே சொன்னீர் அதுவும் நன்றே சொன்னீர். வருகைக்கு நன்றி.

      நீக்கு
  5. //தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு//

    தமிழகத்தில் நடக்கும் கொள்ளைகளை பார்த்து மக்கள் பீதியில் சாந்தி இல்லாமல் இருக்கும் போது சந்தி சிரிக்கும் என்று நக்கலா??

    பதிலளிநீக்கு
  6. ஸலாம் சகோ.சிராஜ்,
    பீதியூட்டும் பயங்கர சம்பவங்கள் நிறைந்த திகில் பதிவு. விழிப்புணர்வூட்டலுக்கு நன்றி.

    உடனடியாக இவர்களை பிடித்து கடும் தண்டனை கொடுத்தால் மட்டுமே இனி கொள்ளை நிகழ்வுகள் குறையும். 'கடும் தண்டனை' என்றால்... பப்ளிக்காய் லைவ் ஷோ காட்டி... நீதிமன்றம் நியமித்த ஒரு அதிகாரி, திருடனின் கையை மணிக்கட்டோடு வெட்டி நீக்கி விடுவது..! அடுத்தநாள் எல்லா ஊடகங்களிலும் இதுதான் போட்டோவுடன் வீடியோவுடன் தலைப்புச்செய்தி..!

    இதற்கு அப்புறம் இரவு வங்கியை பூட்ட மறந்து சென்றாலும் கூட, கவலை இன்றி தூங்கி காலை வரலாம் வங்கி மேலாளர்..! அப்போது, சட்டம் ஒழுங்கு சந்தி.. சாரியை... விகாரமாக... எல்லாம் சிரிக்காது சகோ.சிராஜ். தலை நிமிர்ந்து நெஞ்சுரத்துடன் மக்களை காவல் காக்கும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் சகோ பின்னூட்டவாதி முஹம்மது ஆசிக்,

      ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க சகோ. இன்னக்கி எல்லாரையும்??? போட்டு தாக்கிட்டாங்க சகோ.

      நீக்கு
  7. ஆட்சியாளர்களை விடுங்கள்....தமிழ்நாடு உங்கள் ஏக இறைவனின் கட்டுப்பாட்டில் இல்லையா? உங்கள் ஏக இறைவன் திருடர்களை உடனடியாக தண்டிக்கமாட்டாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி..ஹி..ஹி...

      நல்லா கேள்வி கேட்கிறீங்க சகோ. பேசாம நீங்க இஸ்லாத்திற்கு வந்திருங்களேன்?????? வந்தா இந்த கேள்விக்கு விடை உங்களுக்கே தெரிஞ்சிரும்.
      வருகைக்கு நன்றி. தொடர்ந்து வந்து கோக்கு மாக்கா ஏதாவது கேட்டு கிட்டே இருங்க. நீங்க தான் நமக்கு பூஸ்ட்.

      நீக்கு
  8. @ முஹம்மது அஷிக்..//திருடனின் கையை மணிக்கட்டோடு வெட்டி நீக்கி விடுவது..!//

    என்ன சகோ.. இப்படியெல்லாம் சொல்(பின்னூட்டு)றீங்க, அப்புறம் காட்டுமிராண்டிச் சட்டம்னு சொல்லிக்கிட்டு பத்து பேர் வந்து பின்னூட்டம் இடுவாங்க, அதுனால இந்த சட்டத்தை அமுல் படுத்தாம, இந்த திருடர்களை மனிதாபத்தோட மன்னித்து ஏக இறைவனின் சட்டத்தை அமுல் படுத்த வேணாம்.

    என்ன சொன்னது புரிஞ்சுதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் சகோ இப்ராம் ஷா,

      /* என்ன சகோ.. இப்படியெல்லாம் சொல்(பின்னூட்டு)றீங்க, அப்புறம் காட்டுமிராண்டிச் சட்டம்னு சொல்லிக்கிட்டு பத்து பேர் வந்து பின்னூட்டம் இடுவாங்க, */

      என்னது கைய வெட்னா காட்டுமிராண்டியா???? போங்க சகோ, இன்னக்கி ஆளையே போட்டு தாக்கிட்டாங்க. இதில என்ன கொடுமைன்னா கைய வெற்றது காட்டு மிராண்டிகளின் சட்டம் என்று சொன்ன
      அனைவரும் இந்த கொலைகளை கை தட்டி ஆராவம் செய்து வரவேற்கிறார்கள். அதெல்லாம் இஸ்லாம் சொல்றது நாலா எதிர்க்கிறோம், மத்தபடி ஒன்னும் இல்லை.

      இப்ப எனக்கு ஒரு டவுட்டு வருது. இப்ப யாரு உண்மையிலே காட்டுமிராண்டி???? ஹி..ஹி..ஹி..

      நீக்கு
  9. //நீங்களும் இரவில் டீக் கடையை நன்றாக பூட்டி விட்டு செல்லவும். :-) காலம் கெட்டு கிடக்கு.//

    அதேதான் இல்லாங்காட்டி அப்பூட்டுதேன்..

    சட்டம் சட்டமாக்கி சுவற்றில் தொங்குகிறதுன்னு நெனக்கிறேன்..

    நல்லதொரு பதிவு..

    பதிலளிநீக்கு
  10. பளிச் பதிவு.. இந்த லட்சணத்தில் அம்மா சொல்கிறார்கள் தமிழகம் அமைதி பூங்கா என்று.. என் பதிவு அதை பற்றி..(http://www.vasanth-home.blogspot.in/)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters