சனி, பிப்ரவரி 18, 2012

என்னப்பா இது... வினவுக்கு வந்த சோதனையா இது....??????

கடைய நல்லூர்ல துரப்ஷா துரப்ஷா னு ஒருத்தர் கோழி கடை வச்சி இருந்தாராம். அவர் ஒரு முஸ்லிமா இருந்தாராம். சிலப் பல நாட்களுக்கு பிறகு இஸ்லாமிய கொள்கை 
பிடிக்காமால் கம்யுனிஸ்ட் ஆகிட்டாராம். ஆனா என்ன, அமைதியா கோழி வியாபாரம் பார்த்துகிட்டு குழந்த குட்டிய படிக்க வச்சிக்கிட்டு ஜாலியா இருக்க வேண்டியதுதானே.

அண்ணே அத தான் செய்யல. கம்யுனிஸ்ட் புத்தி சும்மா இருக்குமா???? இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் மதிக்கும் லூத் என்ற நபிய பத்தி எவனோ எழுதின ஒரு கட்டுரைய பேஸ்புக் ல பஹிர்ந்தாராம். சரி அதாவது ஒரு நாகரிகமாக பேசும் கட்டுரயான்னா பதில் இல்லன்னு தான் சொல்லணும். பார்த்த  நம்ம பக்கிய சும்மா இருக்குமா???
பிரிச்சு மேஞ்சுருச்சுகன்னு நினைக்கிறேன். சரியா தெரியல. மேஞ்சிட்டாணுக என்றே கொள்வோமே?? என்ன கெட்டிவிட போகிறது???

ஏன் பிரிச்சாணுக???? அது என்ன அவுக எழுதுன கட்டுரையா??? பஹிர்ந்தது தானே??? யார் எழுதுனதுன்னு நீங்க ஏன் ஆராட்சி பண்ணல???? அப்படின்னு வினவு குதிக்குது. இங்க தான் எனக்கு ஒரு மைல்ட் டவுட்டு. எழுதுனா என்ன?? பஹிர்ந்தா என்ன??? எல்லாம் ஒண்ணுதானே???? என்னோவோ போங்க வினவுக்கு தான் வெளிச்சம்.

சரி, மேஞ்சு முடிச்சாச்சா???? மேஞ்ச உடனே நம்ம துரப்ஷா என்ன பண்ணி இருக்கணும்??? வினவுக்கு போன் போட்டு இருக்கணும். இந்த இந்த மாதிரி நம்ம கொள்கைய எதிர்க்கிராணுவ, கருத்து சுதந்திரம் இல்லாம போய்டுச்சு, கேவலம் 400 கோடி பேர் மதிக்கும் ஒரு மனிதரை அநாகரிகமாக பேசுவது தவறா???  அராஜகம் தலை விரித்து ஆடுது,
நாங்கல்லாம் சீனாவுக்கு போய் அங்கேயே ஜிங் ஜங் ஜக்க எதிர்த்து கேள்வி கேட்போம், இவனுக என்ன சுண்டக்கா  அப்படின்னு. அப்படி செஞ்சாரா நம்ம துரப்ஷா. அது தான் இல்ல. அடிச்சாரு பாருங்க ஒரு ட்விஸ்ட்.

அட ஆமாங்க, நம்புங்க.. "நான் தப்பு பண்ணிட்டேன், என்ன மன்னிச்சுகங்க, நான் அல்லாஹ்வையும் முஹம்மது நபியையும் உளமார நம்புறேன்னு" சொல்லிட்டு படக்குன்னு முஸ்லிம் ஆயிட்டாரு இந்த கொள்கைக்  குன்று.

பொறுக்குமா வினவுக்கும் அவர் கூட்டாளி ரெட் flag க்கும்???? போட்டாங்க பாரு ஒரு கட்டுரைய. அந்த கத உங்களுக்கே தெரியும். அத பார்த்து மனிதாபிமானி சும்மா இருப்பாரா??  போட்டாரு பாருங்க அவரு ஒன்ன, அதுவும் பத்திகிட்டு ஓடுது. இதெல்லாம்  பார்த்துகிட்டு நான்  சும்மா இருப்பேனா?? போட்டேன் பாருங்க நான் ஒன்ன. அதான் இது.

யாரோ நாலு பேரு இழுத்துகிட்டு போய் அவர முஸ்லிம் ஆக்கிடாங்கலாம். நான் நெனைக்கிறேன் இதுக்கு முன்னாடி செங்கொடி தான் இழுத்துகிட்டு போய் மிரட்டி அவர கம்யுனிஸ்ட் ஆக்கி இருப்பாருன்னு. இப்ப முஸ்லிம்கள் மிரட்டி முஸ்லிம் ஆக்கிட்டாங்க. நாளைக்கு RSS காரன் மிரட்டி இந்து ஆக்குவாணுக. அதுக்கு பிறகு கம்யுனிஸ்ட் மீண்டும் மிரட்டி பொதுவுடமைக்கு வருவாரு.

துராப்சாவுக்கு இருக்கிறதுக்கு பேரு ஒரு கொள்கை??? இதில அவரு எங்க கோஷ்டி, உங்க கோஷ்டின்னு ஒரு சண்டை??? அதுக்கு 3 பதிவு வேற. போங்கப்பா, போய் வேலைய பாருங்கப்பா. நாளைக்கே  அவரு கிறித்துவரா  வந்தாலும் வருவாரு.

முடிக்கும் முன், இதுக்கு நடுவுல என்ன காமடி நடந்துச்சுன்னு தெரியல. இன்னொரு பொது உடமை கொள்கைக் குன்று ரெட் FLAG  தன் தளத்த மூடிருச்சு. என்ன நடந்துச்சு, என்னான்னு புரியல. மர்மமா இருக்கு. இந்த குன்றோட ஊரும் கடையநல்லூர் தான் என்பது கூடுதல் தகவல்.

என்னப்பா இது!!!
(கடைய)நல்லூருக்கு வந்த சோதனையா இது....
பொதுவுடமைக்கு வந்த சோதனையா இது....
குறிப்பா வினவுக்கு வந்த சோதனையா இது....??????


32 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. முதல் வருகைக்கு நன்றி ஹாஜா மச்சான்.

   நீக்கு
 2. டீக்கடையில பஜ்ஜி வடை சாப்பிட வந்தா வினவை வறுத்து எடுத்துருக்கீங்க. :-)

  இப்படி கொள்கையில் பிடிப்பு இல்லாதவர் இஸ்லாத்துக்கு தேவையில்லை. பேசாம உண்மையை விளக்கி அவரை திரும்பவும் கம்யூனிஸ்ட் ஆக்கிக் கொள்ளலாம். வினவு முயற்சி எடுக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ சுவனப்பிரியன்,

   நம்மள எழுதாம இருக்க விடமாட்டாங்க போல இருக்கு.

   /* இப்படி கொள்கையில் பிடிப்பு இல்லாதவர் இஸ்லாத்துக்கு தேவையில்லை. பேசாம உண்மையை விளக்கி அவரை திரும்பவும் கம்யூனிஸ்ட் ஆக்கிக் கொள்ளலாம். வினவு முயற்சி எடுக்கட்டும். */

   இல்லை சகோ. நமது சகோதரர்கள் பேசியவரை அவர் மனம் திருந்தி தான் வந்துள்ளார். அதை நாம் சந்தேகப் பட முடியாது. அப்படி இல்லை என்றால் அவர் தாரளமாக செல்லட்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

   நீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் சிராஜ் பாய்,
  பாவம் வினவு குரூப்ஸ். ஒன்னும் தெரியாத கொள்கை குன்றுகளை வைத்து தான் புரட்சி பண்ண போகிறார்கள் என்பதை நினைக்கும் போது புல்லரிக்கிறது. அந்த புர்ச்சியை நினைத்து இப்பவே அடிவயிறு கலங்குவதை மறைக்க முடியவில்லை. ஏற்கெனவே ஒரு புர்ச்சி வீரன் "அலாவுதீன்" என்னும் அற்புத விளக்கை "வடக்கு அம்மாபட்டினத்தில்" களம் இருக்கினார்கள். அந்தோ பரிதாபம் அந்த புர்ச்சி வீரன் வேற விதமா புர்ச்சி பண்ணிக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால் பாருங்கள் இவர்கள் தான் வினவு முன்னெடுக்கும் புரட்சியின் முன்னணி தளபதிகள். எனவே வினவு குரூப்ஸ் எழுதுவதை வெறும் நகைச்சுவையாக (தமிழ்இந்து தளத்தை போல காமெடியாக ) எடுத்துக் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைக்கும் சலாம் சகோ சேக் தாவுத்,

   இது காமெடி பதிவுதான். அங்க போய் பாருங்க...ஒரே பொய்யா சொல்றாங்க.

   உதாரணத்திற்கு, நல்லூர் முழக்கம் என்னும் சகோ, மனிதாபிமானி தளத்தில் பின்னூட்டம் இட்டதாகவும் அதை மனிதாபிமானி மட்டுறுத்த வாய்ப்பிருப்பதால் வினவு தளத்தில் பதிவதாகவும் சொல்லி ஒரு பின்னூட்டம் போட்டார். அவர் சொன்னது போல் அந்த பின்னூட்டம் மனிதாபிமானி தளத்தில் இல்லை. காரணம் என்ன தெரியுமா?? அவர் அந்த பின்னூட்டத்தை மனிதாபிமானி தளத்தில் இடவே இல்லை. ஆனால் இட்டதாக பொய் சொல்லி உள்ளார். பாவம், மனிதாபிமானி தளத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லை என்று தெரியாமலே உளறி விட்டார்.

   நீக்கு
 4. அன்பின் சகோ. சிராஜ்!

  கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதிக்கும் தீர்க்கதரிசி (நபி) லோத்து (அ) லூத் அவர்களை கேவலமாக எழுதுவது மிகவும் கண்டனத்திற்குரியதுதான். நம் அறிவுக்கு மீறிய இப்படிப்பட்ட விஷயங்களில் ஏன் இவர்கள் தங்கள் மூக்கை நுழைக்கின்றனர் என்பது தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ துரைடேனியல்,

   இது ஒரு உப்பு சப்பில்லாத பிரச்சனை. இது ஏதோ பெரிய விஷயம் மாதிரி வினவு பெரிசு படுத்துறாங்க. இது நடந்து ரொம்ப நாள் ஆச்சு. அப்ப பேசாம இப்ப வந்து தேவை இல்லாம கொழப்பம் செய்றாங்க. அதான் நான் கேட்டேன், அவர வந்து அறிவிக்க சொல்லுங்க மேட்டர் முடிஞ்சிரும்னு. அத செய்ய முடியாம தையா தக்கான்னு குதிக்கிறாங்க.

   /* கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் மதிக்கும் தீர்க்கதரிசி (நபி) லோத்து (அ) லூத் அவர்களை கேவலமாக எழுதுவது மிகவும் கண்டனத்திற்குரியதுதான். */

   ரொம்பச் சரி சகோ. எல்லா நபிமார்களும் சமமானவர்களே. அவர்களை அநாகரிகமாக விமர்ச்சிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. எழுதுவதற்கு ஒரு வரை முறை, வார்த்தைகள் உண்டல்லவா?? என்ன நாகரிகமோ இவர்களது????

   நீக்கு
 5. அப்படி என்ன தான் நம்ம புர்ச்சி வீரன் "அலாவுதீன்" பண்ணினார்னு யாரும் கேட்டுற கூடாதுல. அவரோட கதையை இதோ சொல்லுறேன். கேட்டுக்குங்க புதிய மற்றும் பழைய புர்ச்சி வீரர்களே.

  வடக்கு அம்மாபட்டினத்தைச் சேர்ந்த வினவின் புர்ச்சி வீரன் அலாவுதீன் கல்லுக்கு சேலை கட்டியிருந்தாலும் அதைக் கிளப்பிப் பார்க்கும் குணத்தில் பச்சைப் பொறுக்கியாக இருந்த இந்த அலாவுதீன், ஒரு முறை கடும் குடிபோதையில் அந்த ஊரின் ஒதுக்குப் புறத்தோப்பு வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சித்த போது அந்த ஊர்க்காரர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு ஊர்ப் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டான். அலாவுதீனுடைய தந்தை அன்றைக்கு வடக்கு அம்மாபட்டினத்தில் பள்ளிவாசல் ஜமாத்தில் பொறுப்பாளராக இருந்தவர். பட்டாணி வீட்டுச் சொத்து என்றால் 4 தலைமுறைக்கு உக்காந்து சாப்பிடலாம் என அந்த ஊர் பேசும் அளவிற்கு அவ்வளவு வசதியான குடும்பம் அலாவுதீனின் குடும்பம். இவ்வளவு பெரிய குடும்பத்தின் பிள்ளை ஒரு பெண்ணை கற்பழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் மனமுடைந்த அலாவுதீனின் தந்தை பஞ்சாயத்தில் தன் மகன் அலாவுதீன் ஒரு பைத்தியம் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் பைத்தியம் என்பதற்காக அலாவுதீனுக்கு ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் அந்த ஊர்த்தலைவர்.

  பதிலளிநீக்கு
 6. பஞ்சாயத்தில் அவமானப்படுத்திய ஊர் தலைவரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவரது மகளை ஒருவருடன் தொடர்புப்படுத்தி மொட்டைக் கடிதம் போட்டிருக்கிறான் அலாவுதீன். கடிதம் வந்ததும் கொதித்துப் போன வடக்கு அம்மாபட்டினம் ஊர்த்தலைவர், இது யார் வேலை என விசாரிக்க சிக்கினான் மகஇகவின் புரட்சித் தளபதி அலாவுதீன். பெயர் பெற்ற இந்த பொறுக்கிப்பயலுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும் என பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டு அலாவுதீனுக்கு மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கள்ளி மாலை, கற்றாழை மாலை போட்டு, பொம்பளைப் பொறுக்கி என சிலேட்டில் எழுதி கழுத்தில் கட்டி அவனை ஊர்வலமாய் அழைத்துச் சென்றுள்ளனர் வடக்கு அம்மாபட்டினம் ஜமாத்தார்கள்.

  இதனால் கடுப்பான இந்த அலாவுதீனுக்கு அந்த ஊரும் வெறுத்தது, விபச்சாரத்தை, குடியை தடுக்கும் இஸ்லாமும் வெறுத்தது. விபச்சாரத்தையும் குடியையும் ஆதரிக்கும் ஒரு அமைப்பின் ஆறுதல் தேவை என கருதிய அவனை இரு கரம் ஏந்தி வரவேற்றது மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற மகஇக. தன்னை பழிவாங்கிய ஊரையும், தன் பொறுக்கித்தனத்தைத் தடுக்கும் இஸ்லாத்தையும் பழி வாங்க வேண்டும் என அன்றைக்கு முடிவு செய்தான் அலாவுதீன். இந்தச் சம்பவத்தை அன்றைக்கு நக்கீரன் பத்திரிகையில் பேட்டியாகக் கொடுத்தான் அலாவுதீன். தவறே செய்யாத தன்னை இப்படி பழி வாங்கிவிட்டார்கள் எனப் பேட்டி கொடுத்து அது அன்றைய தினம் நக்கீரன் பத்திரிகையிலும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. வடக்கு அம்மாபட்டினத்தை பழிவாங்கிய மகிழ்ச்சியோடு சென்னையில் மகஇகவின் ஆறுதலில் கொஞ்சநாள் இருந்திருக்கிறான் புரட்சித் தளபதி பச்சைப் பொறுக்கி அலாவுதீன்.

  பதிலளிநீக்கு
 7. கொஞ்ச நாள் கழித்து மீண்டும் தன் ஊரான வடக்கு அம்மாபட்டினத்திற்கு சென்று அங்கே குடியிருக்க ஆரம்பித்தான். கவுரமான குடும்பத்தில் பிறந்த கழிசடை அலாவுதீனை அந்த ஊர் ஜமாத்தார்கள் கண்டிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அவனது நடத்தைகளை வைத்து அவனைப் பைத்தியம் என்றே முடிவு செய்தார்கள் அந்த ஊர்க்காரர்கள். ஆனாலும் அவனது தந்தைக்காக அலாவுதீனை விட்டுவைத்தனர். ஆனால் இந்த பொறுக்கி அலாவுதீன் அத்தோடு சும்மா இருந்து விடவில்லை. வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் மணமேல்குடியில் சந்தை கூடும். அந்தச் சந்தைக்கூட்டத்திற்கு விபச்சாரம் செய்யும் பெண்களும் வருவார்கள். வார ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மகஇகவின் புரட்சித்தளபதி அலாவுதீனுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஞாயிற்றுக் கிழமை இரவுகளைச் சந்தப்பேட்டை சத்திரத்திலேயே கழித்தான் அலாவுதீன். தமிழில் மிருகம் என்றொரு சினிமா வந்தது. அந்த சினிமாவின் கதாநாயகன் கண்ட இடத்தில் படுத்து எழுவான். அதைப்போலவே ஆகினான் இந்த மகஇகவின் போர்வாளாய்ச் செயல்பட்ட பொறுக்கி அலாவுதீன்.

  பதிலளிநீக்கு
 8. இதைவிட ஒரு கேவலமான கதை இருக்கிறது இந்த மகஇக தளபதி அலாவுதீனைப் பற்றி: மணமேல்குடியிலிருந்து கடற்கரையை நோக்கி கிழக்குத் திசை நோக்கி பயணம் செய்தால் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த வடக்கு அம்மாபட்டினம். இந்த ஊருக்கு போகும் வழியில் தென்னந்தோப்புகள் நிறைந்திருக்கும். மணமேல்குடிக்கும் வடக்கு அம்மாபட்டினத்திற்கும் இடையில் செங்குந்தபுரம் என்ற ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில் கஸ்தூரி என்ற பெண் வசித்து வருகிறாள். தாழ்த்தப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கணவன் மணமேல்குடியில் மூட்டை தூக்கும் லோடு மேனாய் இருந்து வருகின்றார்.

  விபச்சாரம் செய்யும் போது சாதி பார்க்கக் கூடாது என்ற மகஇகவின் புரட்சிகர போதையில் திழைத்த இந்த அலாவுதீன் கஸ்தூரியை பிராக்கெட் போட்டு அவளோடு உறவாடத் துவங்கினான். இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் இதை கஸ்தூரியின் கணவனின் தெரிவிக்க, ஒரு நாள் கையும் களவுமாக அலாவுதீனைப் பிடித்து நையப்புடைத்து அனுப்பினார் அந்த லோடுமேன். சாதி பார்க்காமல் உறவாடிய இந்தச் செயலைத்தான் வினவு கும்பல் புரட்சி என்பார்களோ?

  பதிலளிநீக்கு
 9. சோ வினவு சொல்லுற இந்த புர்ச்சி நமக்கு வேணாம்பா. இந்த மாதிரி புர்ச்சியை எல்லாம் வினவு கும்பலே செய்து கொள்ளட்டும். இவ்ளோ தாங்க நம்ம புர்ச்சி வீரன் அலாவுதீனோட கதை. இதுல உங்களுக்கு டவுட்டுனா நேரா வடக்கு அம்மாப்பட்டினம் போங்க. அங்க இருக்குற பொது மக்கள் கிட்ட விசாரிச்சுக்குங்க.

  பதிலளிநீக்கு
 10. அப்ப..அலாவுதீனும் அற்பக் கதையும்னு சொல்லுங்க....

  இருந்தாலும் எல்லா கம்யுனிச சகோதரர்களையும் இந்த லிஸ்டில் சேர்த்துவிட முடியாது.
  உண்மையிலே மக்கள் நலனுக்காக பாடுபடக் கூடியவர்களும் இருக்கிறார்கள் தான்.
  அவர்களுக்கு உரிய மரியாதையை நாம் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

  இனிமே இஸ்லாத்திலிருந்து எவனும் கம்யுனிசத்துக்கு வந்தா கொஞ்சம் டெஸ்ட் வச்சு சேருங்க வினவு.
  இல்லாட்டி உங்க மானத்த கப்பல் எத்திருவாணுக நம்ம பக்கிய...

  பதிலளிநீக்கு
 11. அலாவுதீனின் அற்பப் புர்ச்சிய வெலாவாரியா சொன்னதற்கு நன்றி சகோ ஷேக் தாவுத்.
  புதுசா வந்தவங்க தெரிஞ்சிகிருவாங்கள்ள.

  அலாவுதீனின் அற்பப் புர்ச்சிய வெலாவாரியா சொன்னதற்கு நன்றி சகோ ஷேக் தாவுத்.
  புதுசா வந்தவங்க தெரிஞ்சிகிருவாங்கள்ள.

  அம்மாபட்டினம் போயெல்லாம் விசாரிக்க வேண்டாம் சகோ. உங்களிடம் இருந்து பொய்யை நான் இதுவரை கேள்வி பட்டதில்லை. ஆகவே நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. எல்லாரையும் நான் பொதுப்படுத்தி சொல்லவில்லை சிராஜ் பாய். இவர்களால் புரட்சி வீரன் என்று அறிமுகம செய்து வைக்கப்பட்ட அலாவுதீனை தான் சொல்லுகிறேன். எல்லா கம்யூனிஸ்ட்டுகளும் அலாவுதீன் மாதிரி தான் என்று என்னால் வினவு போன்று பொய் சொல்ல முடியாது. (ஏனெனில் பங்களாதேசில் ஆசிட் ஊற்றினால் அதுக்கு காரணம் இஸ்லாம், சவுதியில் அரபி சம்பளம் சரியா தரலையா அதுக்கு காரணம் இஸ்லாம் என்று வினவு கட்டுரை வரைந்ததே அது மாதிரி)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ சேக் தாவூத்,

   நீங்கள் அனைவரையும் சொல்லவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது சகோ. அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் அப்படி கேட்டேன்.
   வருகைக்கும் உண்மைகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்ததற்கும் நன்றி சகோ. தொடரட்டும் உங்கள் பின்னூட்ட சேவை.

   நீக்கு
 13. ஒரு சந்தேகம்.. ஏன் எல்லாரும் வினவ அது இதுன்னு பேசறீங்க??? வினவு என்ன பூச்சியா???

  பதிலளிநீக்கு
 14. இந்த மாதிரியான சண்டைகள பாக்க நல்ல காமெடியா இருக்குதுங்க, செம டைம் பாஸ் ஆகுது :-) ஆ வூன்னா ஒரு கோஷ்டி ஒரு பஞ்சாயத்த கிளப்பறதும், அதுக்கு சப்போர்ட்டா அந்த பக்கம் ஒரு பத்து பேரும், இந்த பக்கம் ஒரு பத்து பேரும் மாத்தி மாத்தி பதிவு எழுதறதும் ஹா ஹா ஹா

  உண்மையிலேயே அந்த கோஷ்டி மிரட்டி இருந்தா அந்தாளு வந்து உண்மைய சொல்ல போறதும் இல்ல

  இல்ல உண்மையிலேயே மனம் திருந்தி நல்லவரா மாறிட்டா இவங்களும் விடப்போறதில்ல

  மொத்தத்துல உண்மை என்னன்னு அவங்கவங்களுக்கு மட்டும்தான் தெரியும்

  நடுவுல இந்தமாதிரி பஞ்சாயத்த இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பண்ணிகிட்டு இருப்பீங்க?

  பொதுவா மதம் சம்பந்தமான பதிவுகளுக்கு நான் கமெண்ட் போட்டது இல்ல, உங்கள தெரியும்கறதால என்னோட கருத்த சொன்னேன், அவ்வளவுதான் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ இரவு வானம்,
   முதலில் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

   நாங்களா சொல்லல சகோ. ஒருவர் பிரச்சனையை பற்றி எழுதி விட்டார். அதற்க்கு மறுப்பு தெரிவிக்காவிட்டால் அவர்கள் சொன்னது உண்மை என்று சிலர் நம்பத் துவங்குவார்கள். ஏன்... அவர்களே சொல்வார்கள் "பார்த்தீர்களா பதில் சொல்ல முடியவில்லை" என்று, அதனாலே இது போன்ற பதிவுகள் வெளியிட வேண்டி உள்ளது.

   நீக்கு
 15. //எந்த பன்னாடயோ எழுதின ஒரு
  கட்டுரைய பேஸ்புக் ல பஹிர்ந்தாராம். //

  மதபிடிப்புள்ள சிராஜ் இந்த வார்த்தைய யூஸ் பண்ணினா, மத நம்பிக்கை இல்லாதவங்க எதிராளியின் குற்றத்தை சொல்லிக்காட்ட கெட்ட வார்த்தையைத்தான் யூஸ் பண்ணுவாங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம்...

   நீக்கியாகிவிட்டது சகோதரர் ஷர்புதீன்

   நீக்கு
  2. சகோ சர்புதீன்,

   நான் ஊருக்கு போகும் அவசரத்தில் அந்த கட்டுரையை பதிந்தேன். கவனக்குறைவாக வந்து விட்டது. அந்த வார்த்தை தேவை இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
   சுட்டி காட்டியதற்கு நன்றி.

   என் சார்பாக அதை நீக்கிய சகோ ஆசிக் அஹமது அவர்களுக்கும் நன்றி.

   நீக்கு
 16. //அவர் அந்த பின்னூட்டத்தை மனிதாபிமானி தளத்தில் இடவே இல்லை. ஆனால் இட்டதாக பொய் சொல்லி உள்ளார். பாவம், மனிதாபிமானி தளத்தில் பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லை என்று தெரியாமலே உளறி விட்டார்.//

  அட விடுங்க சிராஜ் பாய், பத்தோட பதினொன்னு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படி பொய் சொல்லுகிறார்கள் பாருங்கள் சகோ . மாற்றி மாற்றி பேசுவார்கள் என்று சகோதரர்கள் சொன்னார்கள். இப்பொழுதுதான் நேரடியாக பார்க்கிறேன். வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 17. சகோ சிராஜ்
  நீங்கள் கொஞ்சம் வித்தியாசமா சிந்திக்கிறீங்க!
  ஒரு கேள்வி

  1.மத புத்தகங்களில் உள்ள ஆபாசத்தை விமர்சிப்பது நாகரிகமான விடயமா?

  இல்லை என்று சொன்னால் திரு பி.ஜே அவர்களின் ஜெர்ரி தாமஸ் உடன் நடந்த விவாதம் அப்படிப்பட்டதுதான்.அது முன்னால் இந்த கட்டுரை ஒன்றுமே இல்லை.அவர் பேசியது ஆபாசம் இல்லை எனில் அவர் பேசிய காணொளி விள்க்கி பதிவ்டுகிறேன்.நாகரிகம் கருதி அப்படி செய்ய வில்லை.

  என்ன பி.ஜே கிறித்தவ மதத்தை விமர்சித்தார்.அக்கட்டுரை குரானை விமர்சித்தது. அக்கட்டுரை தவறு எனில் பி.ஜேவின் ஆபாச வாதமும் தவறுதான்.பி.ஜே க்கு கண்டனம் தெரிவிப்பீர்களா?அவர் நடத்தும் ஒரு தளமும் ஜீசஸ் இன்வைட்ஸ்.காம் அப்படிப்பட்ட தளம்தான்.
  **************

  2.துராபஷாவும் பெரியார் தாசனும்
  **********
  துராப்ஷா கம்யுனிச மதத்தில் இருந்து சன்னி இஸ்லாமுக்கு மதம் மாறிவிட்டது போல்,பெரியார் தாசனும் இந்து, நாத்திகம் ,பௌத்தம் என சன்னி இஸ்லாமுக்கு வந்தவர்தான்.
  இருவரும் ஏன் மாறினார்கள் என்பது அவ்ர்களுக்கே வெளிச்ச்சம்.
  துராப்ஷா இனிமேலாவது எந்த பிரச்சினை இல்லாமல் வாழட்டும்.

  இதெல்லாம மத அரசியலில் சகஜம்பா!!!!!!!!!!!


  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ சார்வாகன்,

   உங்கள் கேள்விகளுக்கு அந்த ஊர்காரர்(???) சகோ ரப்பானி பதில் அளித்து விட்டார். எனக்கு வேலை மிச்சம்.

   விவாதம் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு பதில்...
   விவாதத்த முழுதும் பார்த்து விட்டீர்கள் போல இருக்கு???? நான் இன்னும் முழுதாக பார்க்கவில்லை சகோ. அது இரு தரப்பும் ஏற்றுக்கொண்டு செய்யும் விவாதம். அதில் குறைகளை சொல்வது என்பது வேறு, ஏனெனில் அதில் அவர்களுக்கு மறுக்கும் வாய்ப்பு அங்கே கிடைக்கிறது. மற்றபடி இணையத்தில் ஒரு பதிவில்
   பொத்தாம் பொதுவாக அசிங்கமாக பேசுவது என்பது வேறு. அதை பார்க்கும் பாதி பேர் அதை உண்மை என்று நம்பும் வாய்ப்பு இருக்கிறது சகோ.

   நீக்கு
  2. பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்று கொண்டது எதனால் என்று ஒரு கேள்வி வருகிறது. அவர் எதற்காக ஏற்றுக்கொண்டார் என்பதை அவர் தான் சொல்லவேண்டும். சொல்லியும் உள்ளார். அது பொய், பணத்திற்காக மாறினார் என்றால், அதை நிரூபிக்க வேண்டியது குற்றம் சுமத்துபவர்களின் கடமை.

   மேலும் ஒரு அதிகப்படி தகவல், மற்ற மதங்களைப் பற்றி எனக்கு தெரியாது. இஸ்லாத்தை பொறுத்தவரை பணம் கொடுத்து யாருமே மத மாற்றம் செய்ய மாட்டார்கள்.

   ஏனெனில் அப்படி யாரும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இஸ்லாத்திற்கு இல்லை, அது முற்றிலும் இஸ்லாத்திற்கு எதிரானது. இந்த பதிவில் சகோ சுவனப்பிரியனின் பின்னூட்டத்துடன் நான் நூறு சதவிகிதம் ஒத்து போவேன். பணம் கொடுத்து இஸ்லாத்திற்கு மாறச் சொன்னவர்கள் என்று யாரும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் சகோ. அவருக்கு நாங்கள் பொங்கல் வைக்கிறோம்.

   நீக்கு
 18. ஸலாம் சகோ சார்வாகன்
  ஆபாசாம் அபத்தம் எங்கிருந்தாலும் திறந்த மனதோடு விமர்சனம் செய்வதை வரவேற்கிறோம் ஆனால் அந்த கட்டுரை இஸ்லாமிய நம்பிக்கையை தர்கரீதியில் வலுவான காரணம் இல்லாமல் வேண்டுமென்றே சேற்றைவாரி இறைத்திருந்தார் மேலும் இறுதியில் பைபிளில் உள்ள கருத்தை குர்ஆனில் உள்ளது போல் காட்ட முற்பட்டு இருந்தார் அதனால் தான் மக்கள் கொதிதெளுந்தனர்

  பதிலளிநீக்கு
 19. ஸலாம் சகோ
  செங்கொடி அவரது தளங்களை மூடவில்லை மாறாக அவர் விரும்பும் வாசகர்களை மட்டும் பார்வையிட அனுமதிக்கிறார் என நினைக்கிறேன். இந்த துராப்ஷா ஒரு காமெடி பீஸ் அதனால் அவரை விட்டுவிடலாம் அவர் திரும்பவும் இஸ்லாத்தில் இணைவார் என்று எதிர்பார்த்தது தான். மேலும் எங்க ஊர் சம்பவம் நடந்த பிறகு இப்னு ஷகீர் என்ற தளத்தை காணவில்லை.எதுஎப்படியோ நல்லது நடக்க இறைவனை பிராத்திப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ ரப்பானி,


   ஆகா.... அப்ப இப்னு ஷஹிர் ரும் இந்த தலைவர்கள் தானா???? எத்தன பேர்ல எழுதுறாங்க??? "நல்லூர் முழக்கம்","நல்லூரான்", "இப்னு ஷஹிர்", "செங்கொடி". இன்னும் எத்தனையோ???? அடப் பக்கிகளா..

   வருகைக்கும், அற்ப்புதமான பின்னூட்ட பதில்களுக்கும் நன்றி சகோ ரப்பானி.

   நீக்கு
 20. சகோதரர்களே,

  நேற்று பதிவை வெளியிட்டவுடன் அவசர வேலையாக திருச்சி வரை செல்லவேண்டியது ஆகி விட்டது. அதனால் உங்கள் கேள்விகளுக்கு உடனே பதில் அளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters