திங்கள், பிப்ரவரி 20, 2012

இன்றைய சென்னை பனி மூட்டமும், எனது ஆக்ரா நினைவுகளும்....

 
இன்று அதிகாலை எழுந்து வீட்டின் கதவை திறந்த சென்னை வாசிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கிடந்தது.
 ஊரைச் சுற்றி வெள்ளை போர்வை போர்த்தியது போல் ஒரே பனிமூட்டம் (FOG ). சென்னைக்கு , அதுவும் பிப்ரவரி மாத இறுதியில் இது அரிதான காட்சி என்பதால் பார்க்கவே பரவசமாக இருந்தது.
 
 
                                                 
 
எனது மகனை பள்ளிக்கு அனுப்புவதற்காக பைக்கில் சென்ற பொழுது குளிர்க்காற்று முகத்தில் அறைந்தது பேரானந்தம்.
அதுவும் சில நாட்களாக வெயிலின் தாக்கமும் அதிகம் இருந்த நிலையில்.
நிச்சயம் அனைவரும் ரசித்து அனுபவித்து இருப்பார்கள். 
 
காற்றின் வேகக் குறைவும், ஈரப்பத குறைவும் இந்த பணிமூட்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அது தினமும் தொடர வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
டெல்லியில் இருப்பது போல் ஒரு பீலிங்.
 
இதன் மறுபக்கமாக, இன்று அதிகாலை முதல் 7 மணி வரை சென்னை விமான நிலையத்தில் எந்த விமானகளும் தரை இறங்கவோ அல்லது கிளம்பவோ இல்லை என்று புதிய தலைமுறை செய்தி சொன்னது. ECR ரோட்டில் ஒரு பஸ் கவிழ்ந்து உள்ளது. நிச்சயம் இதற்கும் பணிமூட்டமே  காரணமாக இருக்கும்.
 
இதைப் பார்த்தவுடன் இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு டிசம்பர் மாதத்தில் டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு தாஜ்மஹால் பார்க்க நண்பர்களுடன் சென்றது தான் நினைவிற்கு வருகிறது. பனி மூட்டம்னா மூட்டம், அப்படி ஒரு மூட்டம். மூட்டு மூட்டுன்னு மூட்டிருச்சு என்றே சொல்லலாம். 10   அடிக்கு   முன்னாள் இருந்த எதுவும் தெரியவில்லை. அதிகாலை 5 மணிக்கே புறப்பட்டுவிட்டோம் பெரிய பெரிய  கனவுகளுடன்.
 
 
                                                
 
என்ன கனவென்றால், நேராக பதேபூர் சிக்ரி(முகலாய மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம்) என்ற ஊருக்கு போவது. அதன் பின் தாஜ்மஹால் சென்று பார்த்துவிட்டு வரும் வழியில் சரித்திர புகழ் பெற்ற ஆக்ரா கோட்டையை பார்வை இடவேண்டும் என்றெல்லாம் ஏதேதோ கற்பனைகள். அனைத்துக்கும் இந்த பனி(FOG ) வச்சது பாருங்க ஆப்பு....
 
ஆமாங்க.. நாங்க அனைவரும் ஒரு செவ்ரோலே காரில்  சென்றோம், ஒரு 3  மணி நேரத்தில் ஆக்ராவை அடைந்து விடலாம் என்று திட்டம். ஆனால் இந்த பணியால் 5 மணி நேரங்களுக்கு மேல் ஆனது. போகும் வழி எல்லாம் சிறு சிறு விபத்துக்களை காண நேர்ந்தது. விபத்து நடந்த ஒவ்வொரு இடங்களிலும் 3 அல்லது  அதற்க்கு மேற்பட்ட கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி நின்றன.
 
இப்படியாக தாமதம் ஆனதால், நிகழ்ச்சி நிரலில் சில மாறுதல்களை செய்தோம். அதாகப்பட்டது, பதேபூர் சிக்ரி போவது இல்லை என்றும். முதலில் ஆக்ரா கோட்டையை பார்த்துவிட்டு தாஜ் மஹால் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆக்ரா அடைந்தவுடன், அந்த ஆக்ரா கோட்டையை பார்வையிட உள் நுழைந்தோம்.....
 
 
                                             
 
ஆக்ரா கோட்டையை பார்வை இடுகையில் தான்...இந்திய வரலாறு எப்படி பொய்களாலும் நயவஞ்சகங்களாலும்  நிரப்பப்பட்டுள்ளது என்பதை கண்டு கொண்டேன்...
 
மக்களே தயவு செய்து இந்திய வரலாற்று புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் மொகலாயர்களின் வரலாறை நம்பாதீர்கள்.... அது பொய்களால் நிரப்பப்பட்டுள்ளது என்பதை நான்
எனது அடுத்த பதிவில் நிரூபிக்கிறேன்....
 
அதுவரை காத்திருங்கள் சகோஸ்.......


29 கருத்துகள்:

 1. ஸலாம் சகோ.சிராஜ்,
  எனக்கும் இந்த FOG பற்றி இங்கே சவூதியில் நான் இருக்கும் ஏரியாவில் நிறைய அனுபவம் இருக்கிறது சகோ.சிராஜ். ஆனால், இங்கே இந்த பனிமூட்டம் பற்றிய 'நியூஸ் ரீல்' முடிஞ்சு படம் ஆரம்பிக்கும்போது படார்னு கதவை திறந்து மணி அடிச்சு இண்டேர்வல் விட்டுட்டீங்களே..? அடடா.......

  //...எனது அடுத்த பதிவில் நிரூபிக்கிறேன்....//---ஈகர்லி அவெய்ட்டிங்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ முஹம்மது ஆசிக்,

   /**************** //...எனது அடுத்த பதிவில் நிரூபிக்கிறேன்....//---ஈகர்லி அவெய்ட்டிங்... ***********/

   ரொம்ப எதிர்பார்த்திட வேண்டாம். என்கிட்டே இருந்து ரொம்ப எதிர்பார்க்க மாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்.

   வருகைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 2. //இந்திய வரலாற்று புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் மொகலாயர்களின் வரலாறை நம்பாதீர்கள்//

  ஜிஸியாவைச் சொன்னவங்க, ஜகாத்தை வேணும்னேச் சொல்லாம விட்டாய்ங்களே, அப்பவே புரிஞ்சிடுச்சு. ஆனா, வருத்தம் என்னன்னா, பெரியவங்க எப்படியாவது விளங்கிகிடுவாங்க. ஆனா, பள்ளிப் புத்தகங்களில் படிக்கும் மாணவர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /* ஜிஸியாவைச் சொன்னவங்க, ஜகாத்தை வேணும்னேச் சொல்லாம விட்டாய்ங்களே, அப்பவே புரிஞ்சிடுச்சு. */

   சலாம் சகோ ஹுசைனம்மா,

   அவுரங்கசிப்பை நல்லவராக காட்டக்கூடாது என்று முடிவு செய்த பிறகுதான் இந்திய மொகலாய வரலாற்றை பலர் எழுதி இருக்கிறார்கள். அதனால் தான் ஜஸியா வரியை மட்டும் பேசினார்கள். உண்மையில் ஜஸியா என்றால் என்னவென்றே பலருக்கு முழுதாக தெரியாது. ஆனால் நான் சொல்லப்போவது வேறொரு வரலாற்று புரட்டை பற்றி சகோ.   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   நீக்கு
  2. /* ஆனா, வருத்தம் என்னன்னா, பெரியவங்க எப்படியாவது விளங்கிகிடுவாங்க. ஆனா, பள்ளிப் புத்தகங்களில் படிக்கும் மாணவர்கள்? */

   ரொம்ப ரொம்ப நியாயமான கவலைதான். இனியாவது வரலாற்று புத்தகங்களை தயாரிப்பவர்கள், ஒரு இனத்தின் மீதான தங்கள் வெறுப்பை காட்டாமல் உண்மையை மட்டும் சொல்ல வேண்டும். அது தான் இந்தியாவின் எதிர்கால சந்ததிகளுக்கு அவர்கள் செய்யும் நன்மை.

   Very valid point சகோ ஹுசைனம்மா.

   நீக்கு
 3. வரலாறறு தொடர் பதிவா....மொகலாயர்களைப் பற்றி நிறைய கட்டுக் கதைகள் வரலாற்று புத்தகங்களில். சிலவற்றையாவது பதிவர்கள் சரி செய்ய வேண்டும். அந்த வகையில் உங்களின் இந்த ஆக்கம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ சுவனப்பிரியன்,

   சலாம் சகோ சுவனப்பிரியன்,

   /* வரலாறறு தொடர் பதிவா.... */

   தொடர் பதிவா???? ஹும்...ஹும்.. இன்னும் ஒரு பதிவு இல்லாவிட்டால் இரண்டு, அவ்வளவு தான் சகோ.

   நான் என்ன கோவி கண்ணனா, ஒரு தீவுக்கு சுற்றுலா போனத 5 பதிவா எழுதி மக்களை கொல்றதுக்கு???

   வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

   நீக்கு
 4. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் சகோதரர் சிராஜ் பாய்,
  ////இந்திய வரலாற்று புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் மொகலாயர்களின் வரலாறை நம்பாதீர்கள்//
  இந்த வரிகளை கண்டவுடன் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது.
  இன்றைய காலையில் நானும் பணியை ரசித்தேன். (என்ன குளிக்கும் போது தண்ணீர் தான் சும்மா சில்லென்று இருந்தது.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சலாம் சகோ பாஸ்டா,

   /* இந்த வரிகளை கண்டவுடன் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது. */

   என்ன சகோ நம்மள பத்தி தெரிஞ்சும் எதிர்பார்ப்பு அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு...

   கண்ணுல தண்ணி வந்திருச்சு சகோ......


   வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

   நீக்கு
 5. நான் எதிர்பார்த்தது என்னவென்று உங்களுக்கு தெரியும் சிராஜ் பாய். அந்த தொடரை தான் எழுத போகிறீர்களோ என்று என்னுடைய எதிர்பார்ப்பை சொன்னேன்.
  //கண்ணுல தண்ணி வந்திருச்சு சகோ/
  நோ நோ இப்படிலாம் அழ கூடாது. எங்கே சிரிங்க இப்போ. ஹீ ஹீ ஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்க்கு ரொம்ப மெனக்கெடனும் சகோ. அதற்க்கு ஒரு ஆள் இருக்கார். அப்புறம் தனியா சொல்றேன். அவர கோர்த்து விட்ருவோம். சரியா....?

   இப்ப..இந்த பின்னோட்டம் பார்த்தவுடனே அழுக நின்றுச்சு...

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், தொடர்தளுக்கும் நன்றி துளசி ஐயா!

   நீக்கு
 7. //துளசி ஐயா!//

  ம்க்கும்... நீங்க பதிவுலக்குப் புதுசுதான், ஒத்துக்கிறேன், அதுக்காக? ஒரு ‘க்ளிக்’ பண்ணி, ஒரு எட்டு அவங்க தளத்துக்கும் போய்ப் பாத்துட்டு வந்து பதில் சொல்லிருக்கலாம்ல? :-)))))))

  அவங்க துளசி “மேடம்”!! சீனியர்மோஸ்ட் பதிவர் ஆஃப் தி பதிவுலகம். :-)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....
   சுட்டி காட்டியதற்கும் மிக்க நன்றி சகோ ஹுசைனம்மா.

   நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர் சிராஜ்,

   எத்தன தடவ தான் பல்பு வாங்கவீங்க. இது சரிபட்டு வராது. ஷேக் தாவுத் கிட்ட சொல்லி நீங்க பல்பு வாங்குறத கவுன்ட் பண்ண சொல்லணும். அப்ப தான் நீங்க வழிக்கு வருவீங்க... :) :)

   நீக்கு
  3. சலாம் சகோ ஆசிக் அஹமது,
   இதெல்லாம் நாளைக்கு புஸ்தகத்தில வரும்.... ஜனங்க படிப்பாங்க..ஐயோ...ஐயோ...

   நீக்கு
 8. // ம்க்கும்... நீங்க பதிவுலக்குப் புதுசுதான், ஒத்துக்கிறேன், அதுக்காக? ஒரு ‘க்ளிக்’ பண்ணி, ஒரு எட்டு அவங்க தளத்துக்கும் போய்ப் பாத்துட்டு வந்து பதில் சொல்லிருக்கலாம்ல? :-)))))))
  அவங்க துளசி “மேடம்”!! சீனியர்மோஸ்ட் பதிவர் ஆஃப் தி பதிவுலகம். :-))))) //
  ஹா ஹா ஹா ஏற்கெனவே சகோ ஆயிசா தளத்திற்கு போய் சகோ அஸ்மா னு பின்னூட்டம் போட்டவர் எங்க சிராஜ் பாய். சோ (இது அரசியல் சோ இல்லை. இங்கிலிபீஸ் சோ ) ஏதோ வாய் தவறி சொல்லியதை பெரிய மனது பண்ணி துளசி மேடம் அவர்கள் மன்னித்து விடுவார்கள் என்று நெனைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /* ஹா ஹா ஹா ஏற்கெனவே சகோ ஆயிசா தளத்திற்கு போய் சகோ அஸ்மா னு பின்னூட்டம் போட்டவர் எங்க சிராஜ் பாய். */

   நமக்கு எதிரி வெளிய இல்லேன்னு நெனைக்கிறேன்....

   ஹா.ஹா.ஹா. வலிக்காமல் குட்டியதற்கு நன்றி சகோ அன்பின் பாஸ்தா.....

   நீக்கு
 9. சீனியர் மோஸ்ட் பதிவரே தெரியாம இத்தன நாள் காலம்தள்ளி இருக்கேன்னா..என்னத்த சொல்ல..

  மன்னிசுகங்க துளசி மேடம்... இனி தெரிஞ்சுகிறேன்..

  பதிலளிநீக்கு
 10. வரலாறு முக்கியம் ..அதைவிட முக்கியம் அது உண்மையா இல்லையா என்பது...சீக்கிரம் உண்மையான வரலாற்றை பதிவு செய்யுங்கள்...

  பதிலளிநீக்கு
 11. வரலாற்றில் தமக்கு சாதகமானதை சேர்த்து, பல இடங்களில் உண்மையை கழுவில் ஏற்றி இருக்கிறார்கள் ஹஜா மச்சான்.
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. உங்க கடையில சூடா வடை பச்சிதான் கிடைக்கும்ன்னு எழுதியிருக்கீங்க!, வடைக்கும் பச்சிக்கும் சூப்பர் ஜோடி சட்னி.

  சட்னி வைக்கத் தெரியலன துளசி மேடத்துக்கிட்டயோ அல்லது ஹுஸைனம்மா கிட்டயோ ஐடியா கேட்டுக்கலாம்ல?.

  இங்கே! சவுதியில வடை, பச்சி, சட்னியைப் பார்த்தே பல காலங்கள் ஆகுது, குபுஸும் (ரொட்டி போன்ற ஒரு வகை) கப்ஸாவும்தான் (அரிசியில் செய்யப்படும் ஒரு உணவு) எங்க ஏரியாவுல பிரபலம்.

  பதிலளிநீக்கு
 13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,
  அது ஒரு நிலாக்காலம்

  பதிலளிநீக்கு
 14. /* ஆனா, வருத்தம் என்னன்னா, பெரியவங்க எப்படியாவது விளங்கிகிடுவாங்க. ஆனா, பள்ளிப் புத்தகங்களில் படிக்கும் மாணவர்கள்? */

  பள்ளியில் சொல்லிக் கொடுக்கலன்னா என்ன... நாம சொல்லிக் கொடுப்போம்... அவர்களையே அவர்களுடைய நண்பர்களுடன், கொஞ்சம் தைரியமானவர்களாயிருந்தால் ஆசிரியர்களிடமும் பகிர்ந்துகொள்ளச் செய்யலாமே... ரகசியத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
 15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  //ஏற்கெனவே சகோ ஆயிசா தளத்திற்கு போய் சகோ அஸ்மா னு பின்னூட்டம் போட்டவர் எங்க சிராஜ் பாய்.//
  பெரிய மனிதர்களின் வாழ்க்கையில் மறதி என்பது சகஜம் சகோ..:-))

  எப்போதும் வரலாற்று பதிவுகளின் நம்பகத் தன்மை கேள்விக்குரியதே ..ஒவ்வொரு ஆசிரியரின் தனிப்பட்ட விருப்புக்களும்,வெறுப்புக்களும் கலக்காமல் வெளிவருவது மிகக் குறைவே..

  பதிலளிநீக்கு
 16. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  /* ஆனா, வருத்தம் என்னன்னா, பெரியவங்க எப்படியாவது விளங்கிகிடுவாங்க. ஆனா, பள்ளிப் புத்தகங்களில் படிக்கும் மாணவர்கள்? */

  பள்ளிமாணவர்கள் தான் பிறகு பெரியவங்க ஆகி பிறகு நம்மை போல விளங்கிடுவாங்க ஹுசைனம்மா
  பிறகு சகோ சிராஜை போல //இந்திய வரலாற்று புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் மொகலாயர்களின் வரலாறை நம்பாதீர்கள்//
  என்று பதிவு எழுதுவார்கள்

  பதிலளிநீக்கு
 17. //ஏற்கெனவே சகோ ஆயிசா தளத்திற்கு போய் சகோ அஸ்மா னு பின்னூட்டம் போட்டவர் எங்க சிராஜ் பாய்.//
  siraj///தொடருங்கள் சகோ ஜாகிர் மற்றும் சையத் இப்ராஹிம் ////

  நான் சையத் இப்ராஹீம் அல்ல .எஸ்.இப்ராஹீம்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters