வெள்ளி, பிப்ரவரி 03, 2012

ஈழ பதிவர்களாம், தமிழ் பதிவர்களாம்...என்ன பிரிவினை இது?

நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பதிவுலகில் சமீபத்தில் நடக்கும் சில சங்கடங்கள் வருத்தத்தை தருவதால், எங்கள் நிலையை தெளிவுபடுத்தவே இந்த பதிவு.

சில ஈழ பதிவர்கள் மீது எங்களுக்கு வருத்தம் உண்டு. அதற்காகவே தற்போது அவர்களிடம் இருந்து விலகி இருக்கின்றோம். அதே நேரம், இந்த வருத்தத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படுவோம் என்பது மாதிரியான எண்ணம் எழுந்தால் அது தவறானது (சகோதரர் நிரூபன் அவர்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதிவிற்கு சில முஸ்லிம்கள் ஆதரவு வோட் போட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம். அதுபோல தமிழக நண்பர்களை தாக்கி எழுதப்பட்ட பதிவுகளில் எந்த முஸ்லிமாவது ஆதரவு கொடுத்திருந்தால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றோம்).

"...எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை அறிந்தவனாக இருக்கின்றான்" - குர்ஆன் 5:8

இறைவனின் இந்த வார்த்தைகளை நன்கு அறிந்தே இருக்கின்றோம். ஒருவர் மீது நாங்கள் கொண்டுள்ள வருத்தம், நியாயம் அநியாயம் பார்க்காமல் அவருக்கு எதிராக செயல்பட வைக்குமானால் நாங்கள் முஸ்லிம்களே இல்லை.

ஈழ, முஸ்லிம் பதிவர்கள் இடையிலான பிரச்சனை துரதிஷ்டவசமானது. இந்த பிரச்சனையில் எங்களுக்கு உதவ இங்குள்ள தமிழ் பதிவர்கள் வரவில்லை என்ற கருத்தையும் காண நேர்ந்தது. இதுப்போன்ற கருத்துக்கள் வருத்தமளிக்க கூடியவை. இங்குள்ள பல பதிவர்களுடன் அழகான நட்பு எங்களுக்கு இருக்கின்றது. பல விசயங்களில் ஒருவருக்கொருவர் உதவியும் கொள்கின்றோம். அப்படியான நிலையில் அவர்கள் மீது வருத்தம் கொள்ள ஒன்றுமில்லை. அவர்கள் நிலையில் இருந்து இதனை அணுகவே விரும்புகின்றோம்.

உலகில் உள்ள அனைவரும் சகோதர சகோதரிகளே. இதில் ஈழ, தமிழர் என்று பிரித்து பார்க்க ஒன்றுமில்லை. பிரச்சனை ரீதியான கருத்துவேறுபாடுகள் இருக்கலாமே ஒழிய, பகுதி வாரியான கருத்துவேறுபாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஈழ, தமிழர் என்று பிரிவினை பேசுவதெல்லாம் எங்கள் கொள்கைக்கு முற்றிலும் எதிராவை. இஸ்லாமிற்கு நேரடியாக பங்கம் விளைவிக்க கூடிய இந்த விசயத்தில் முஸ்லிம்கள் எவ்வித ஆதரவும் தர இயலாது.

பதிவுலக சகோதரர்களுக்கு நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம், தயவுக்கூர்ந்து உங்கள் வேறுபாடுகளை களைய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த பிரச்சனையை வளர்க்கும் விதமாக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ சாடி பதிவிடுவதை நிறுத்துங்கள். ஒருவருக்கு சிறிதளவு கூட சங்கடம் தரும் விதமாக, உணர்வுகளை தூண்டும் விதமாக பதிவிட வேண்டாம். சிலபல காலம் இதுக்குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்துக்கொள்ளுங்கள். நேர இடைவெளி நிச்சயம் ஒரு அழகான புரிதலை தரலாம் (இறைவன் நாடினால்).

இதுப்போன்ற துரதிஷ்டவசமான நிலையிலிருந்து பதிவுலகம் வெளியில் வந்து ஆரோக்கியமான வகையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

--- சிராஜ் & ஆஷிக் அஹமத்
நன்றி: முஸ்லிம் பதிவர்கள்.     


45 கருத்துகள்:

 1. இந்த பதிவு இரு தரப்பினருக்கும் ஒரு நல்ல புரிதலை கொடுக்கும் என்று நம்புகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் நல்ல புரிதலை கொடுக்கும் என்று நம்புவோம் கஸாலி.

   நீக்கு
 2. பிரிவினைகள் முடிவுக்கு வரட்டும்...

  தமிழுக்குள் என்ன பிரிவினை....

  தமிழர்களாக பார்த்து பழகினால் இனம், மதம்,நாடு என்ற பிரிவினைகள் நம்மை நெருங்காது...

  அனைவரும் ஒன்றுபடுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் சகோ சவுந்தர். இனியும் அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டாலே போதும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   நீக்கு
 3. அடடே....டிபன் சாப்பிடலாம் என்று டீக்கடை பக்கம் வந்தால் போனஸாக நல்ல அறிவுரைகளையும் அள்ளி வழங்குகிறீர்களே! அப்போ நிறைய கஸ்டமர்கள் வந்து வியாபாரமும் சூடு பிடிக்கும்.

  மொழி இனம் நாடு கடந்து அனைவரும் சகோதரர்கள் என்ற நிலைக்கு வருவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///மொழி இனம் நாடு கடந்து அனைவரும் சகோதரர்கள் என்ற நிலைக்கு வருவோம்.///---ர்ர்ரிப்பீட்டு...

   நீக்கு
  2. /* மொழி இனம் நாடு கடந்து அனைவரும் சகோதரர்கள் என்ற நிலைக்கு வருவோம் */
   வழி மொழிகிறேன்... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ சுவனப்பிரியன்.

   நீக்கு
 4. ஸலாம் சகோஸ்.சிராஜ்&ஆஷிக்,
  சரியான நேரத்தில் சரியான சுயபரிசோதனை பதிவு..! நன்றி சகோஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மீதும் இறைவனின் சந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் சகோ முஹம்மது ஆசிக்,

   வருகைக்கு நன்றி. இது போன வாரம் ஞாயிற்று கிழமை போடலாம்னு நினைத்தோம். சிலப் பல காரணங்களால் தாமதம் ஆகி விட்டது.

   நீக்கு
  2. வ அலைக்கும் சலாம் சகோதரர் முஹம்மத் ஆஷிக்

   நீக்கு
 5. சகோ!சிராஜ்.உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.ஐடியாமணி,நிரூபன் போன்ற நண்பர்களும் கருத்து வேறுபாடுகள் களைந்து நட்பாக பயணிக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. சகோ ராஜ நடராஜன்,

  வருகைக்கு நன்றி.

  /* ஐடியாமணி,நிரூபன் போன்ற நண்பர்களும் கருத்து வேறுபாடுகள் களைந்து நட்பாக பயணிக்க வேண்டுகிறேன். */
  வழி மொழிகிறேன். தமிழக நண்பர்களும் அவ்வாறே செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி பழனி.கந்தசாமி அண்ணன்

   நீக்கு
 8. ///இதுப்போன்ற துரதிஷ்டவசமான நிலையிலிருந்து பதிவுலகம் வெளியில் வந்து ஆரோக்கியமான வகையில் செயல்பட இறைவனை பிரார்த்திக்கின்றோம். ///

  இதில் இறைவன் என்பது எங்கள் ஊர் முனியாண்டி சாமிதானே, வேறு யாராக இருக்கமுடியும், இறைவன் என்றாலே அவர் மட்டுமே.

  http://anjjamvakuppu.blogspot.com/2012/02/blog-post.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணே ராவணன்,

   இது வம்பிழுக்கிற பதிவு கிடையாது. சமாதானதத்திர்க்கான பதிவு. ஹி.ஹி.ஹி...

   உங்களுக்கு யார இறைவன்னு வச்சிக்கிற தோணுது அவங்கள எடுத்துகங்க சகோ. No worries.

   நீக்கு
 9. பதில்கள்
  1. சகோ நாய் நக்ஸ்,

   நீங்க இந்த பதிவ படிச்சு பின்னோட்டம் போட்டது உண்மையிலே சந்தோசம் தருகிறது.

   நேரம் ஒன்று உண்டாகும்...
   எல்லாம் அன்று நன்றாகும்...
   ஒன்றாகத்தான் நாமிருக்க பின்னால் ஒரு நாள் வரும்.

   நீக்கு
  2. நீ ஒரு வாத்தியார் வீட்டு பிள்ளைன்னு பாடலின் மூலம் காட்டுகிறாய்

   நீக்கு
 10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  அன்பு சகோஸ்!

  அவசியமான பதிவு... ஈழத்தமிழ் "சகோதரர்"களும் இந்த எண்ணத்தை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே நம் ஆவல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /* ஈழத்தமிழ் "சகோதரர்"களும் இந்த எண்ணத்தை முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே நம் ஆவல்! */

   புரிந்துகொள்வார்கள் சகோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   நீக்கு
 11. உயர்ந்த கருத்து.தங்களின் கருத்துப்படியே, கால இடைவெளி நல்ல மாற்றங்கள் கொண்டுவரட்டும். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ உணவு உலகம்,

   உங்கள் வருகை மற்றும் நாய் நக்ஸ் இருவரின் வருகையும் இந்த பதிவின் நோக்கத்தை பெருமளவில் நிறைவேற்றி உள்ளது என்றால் அது மிகை இல்லை.

   அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பார்கள்.
   பதிவுலகில் நிரந்தர நண்பர் இருக்கிறாரோ இல்லையோ, நிரந்தர எதிரி என்று யாரும் கிடையாது.

   அனைத்தும் சரியாகும், அனைத்தும் கடந்து போகும்.
   வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 12. இனிய இரவு வணக்கம் சிராஜ் மற்றும் நண்பர்களே.

  நானோ அல்லது ஐடியா மணியோ பிரிவினை நோக்கில் ஒரு போதும் செயற்பட்டதில்லை. எட்டுக் கோடி தமிழகச் சொந்தங்கள் வாழும் நாட்டில் எம்மை மாற்றானாக ஆறு பேர் கருதினால் நடக்கிற காரியமா?

  நண்பா, நாங்கள் பிரிவினை வேணாம் என்று தான் பணிவாக மடல் கூட எழுதிப் பார்த்தோம். ஆனால் கேட்கும் நிலையில் யாருமே இல்லை.
  அப்புறமா, பிரிவினையை யார் தூண்டினார்களோ! அது தவறு என்று கருதித் தான் அவர்களின் பெயர்களைச் சுட்டி கண்டனப் பதிவு எழுதினோம்.

  இதுவும் கடந்து போகும் என்று சொல்வதை தவிர வேறு என்ன இருக்கிறது.

  ஒரு சிலர் பிரித்தாளும் நோக்கில் ஆட்களை வேறு திரட்டி, ஏனைய பதிவர்களிடமும் உதவி கேட்டிருந்தார்கள். நாம் கவலைப்படவில்லை. காரணம் எட்டுக்கோடி மொத்தச் சொந்தங்களில் ஆறு பேரின் கருத்து ஒரு சிறு தூசி! ஆகவே மறப்போம்! மன்னிப்போம் நண்பா!

  பேதங்கள் வேண்டாம் என்பது தான் அனைவரது விருப்பமும்

  தங்களின் இனிய பதிவிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கருத்து சகோ.. உங்கள் பதிவுக்கு நன்றி!!

   நீக்கு
  2. சகோ நிரூபன்,
   /* ஒரு சிலர் பிரித்தாளும் நோக்கில் ஆட்களை வேறு திரட்டி, ஏனைய பதிவர்களிடமும் உதவி கேட்டிருந்தார்கள். */

   பிரித்தாளும் நோக்கு என்பதெல்லாம் பெரிய வார்த்தைகள். அவற்றை பயன்படுத்த வேண்டாமே. உங்களுக்குள் ஏற்பட்டிருப்பதெல்லாம் மிஸ் understanding தான். இரு தரப்பும் சிறுது நாட்களுக்கு ஒருவருக்கு ஒருவர் சீண்டாமல் இருந்தாலே காயங்கள் மெல்ல ஆறும். ஆறுமோ ஆறாதோ... நிச்சயம் அதிகரிக்காது.

   ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் உங்களிடம் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். யாரும் எதிர்ப்பதிவுகள் போட வேண்டாம். அப்படியே விட்டு விடுவோம். சில நாட்களுக்குப் பின் பேச்சு வார்த்தையை தொடங்கலாம்.

   நீக்கு
 13. நல்ல கருத்துக்களை சொல்லி உள்ளீர்கள் சார் ! நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ தனபாலன்,

   வருகைக்கு நன்றி. இது நமது கடமை தானே சகோ.

   நீக்கு
 14. சிராஜ், பதிவுகளில் நேரடியாக ஈழப் பதிவர்களைப் புறக்கணிப்போம் என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள்.
  பின்னூட்டத்தில் எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

  எதனை தவறான புரிதல் என்று சொல்லுகிறீர்கள்?

  நாம பிரச்சினை வேணாம் என்று தற்போது காமெடிப் பதிவுகள் எழுதிட்டு இருக்கோம்! ஏன்னா, அறிவீலிகள் சிலருடன் பேசி என்ன பலன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ நிரூபன்,

   /* நாம பிரச்சினை வேணாம் என்று தற்போது காமெடிப் பதிவுகள் எழுதிட்டு இருக்கோம் */

   ரொம்ப நல்ல விஷயம். இதையே சில காலம் தொடருங்கள்.

   /* ஏன்னா, அறிவீலிகள் சிலருடன் பேசி என்ன பலன்? */
   இது போன்று தொடர வேண்டாமே.. ப்ளீஸ்...

   நீக்கு
 15. சகோ காட்டான்,

  உங்கள் வருகைக்கு நன்றி. நீங்களும் இந்த பிரச்சனையை முடிக்க உங்கள் தரப்பில் உங்களால் முடிந்த அளவு முயற்சி செய்யும் படி, பிரச்சனை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்படி தமிழகத்தில் வாழும் பதிவர்களாகிய நாங்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 16. சிராஜ் தக்க நேரத்தில் பகிர்ந்த பதிவு...

  அனைவரும் புரிந்துணர்வுடன் செயல்பட இந்த பதிவு துணை புரியும்....

  பகிர்வுக்கு நன்றி சிராஜ்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ தமிழ்வாசி,

   ஓரளவு இணக்கத்தை ஏற்படுத்தும் என்றே நாங்களும் நம்புகிறோம் சகோ. வருகைக்கு நன்றி.

   நீக்கு
 17. இந்த பதிவு பதிவர்களிடையே சுமுகத்தை உண்டாக்கும் என நம்புகிறேன்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் ஏற்படுத்தும் endre நம்புவோம் ஹாஜா மச்சான். வருகைக்கு நன்றி...

   நீக்கு
 18. சகோ சிராஜ்!

  இப்பதிவுக்கு எனது பின்னூட்டம் அவசியப்படுமா? என்று தெரியவில்லை! இருப்பினும் எனது கருத்தை முன் வைக்கிறேன்!

  முதலில் இப்பதிவில் இருக்கும் நடுநிலைமைக்கு மிகவும் நன்றி! இப்போது எல்லாவற்றையும் மறந்துவிட்டு, நாங்கள் மிகவும் அமைதியாக இருக்கிறோம்! பிரிவினை தொடங்கியது அங்கிருந்துதான்! அதனைக் கண்டித்தோம்! உள்குத்து போட்டோம்! இப்போது அனைத்தையும் நிறுத்திவிட்டோம்!

  நாம் தாக்க மட்டுமல்ல, நேசக் கரமும் நீட்டவே செய்கிறோம்! அன்புடன் நாம் நீட்டிய நேரக் கரத்தைத் தட்டிவிட்டு “ வழிகிறார்கள்” என்று சொல்லப்பட்டதால், இப்போது நேசக்கரம் நீட்டுவதையும் நிறுத்திவிட்டோம்! நாம் அமைதியையும் அன்பையும் மிகவும் விரும்புகிறோம்! அதற்காக வழிந்து போகவேண்டிய அவசியம் இல்லை! சக தோழனாக ஏற்றால், நாம் இப்போதும் அன்பாகப் பழக தயார்!

  மேலும், ஒற்றுமை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சண்டையாவது போடாமல் இருப்போமே என்கிற நல்லெண்ணத்தில்தான்! ஆகவே இனி எமது தரப்பு கடுமையாக மௌனம் காக்கும்!

  மேலும் இங்கு நண்பன் நிரூபன் கொஞ்சம் கோபமாகப் பேசிவிட்டான்! அவன் பதிவுலகில் பலரை மிகவும் நேசிக்கிறான்! எல்லோருக்கும் உதவி செய்வான்! அவனது ஆழமான அன்பினை சிலர் புரிந்துகொள்ளவில்லை எனும் வருத்தத்தில் இருக்கிறான்! அதனால் தான் அப்படிப் பேசிவிட்டான்! நிரூவை நாம் ஆறுதல்படுத்துவோம்!

  அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்க நாமும் ஒத்துழைப்போம்! நன்றி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் உங்கள் பின்னூட்டம் இந்த பதிவிற்கு அவசியமான ஒன்றே, ஒன்றுமே தெரியாதவரே!!!!!!!!

   /* ஆகவே இனி எமது தரப்பு கடுமையாக மௌனம் காக்கும்! */

   உங்கள் தரப்பு பதிலை தெளிவாக சொன்னதற்காக நன்றிகள். இந்த பதில் தமிழக நண்பர்களை சென்றடையும் என்று நம்புவோம்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி மாப்ள விக்கி வேர்ல்ட்....
   தற்பொழுது நீங்களும் படித்து விட்டீர்கள் என்ற திருப்தி எங்களுக்கு.

   நீக்கு
 20. பதில்கள்
  1. சலாம் சகோ ஆமினா,

   ஹ்ம்ம்ம்ம்ம்மம்மம்ம்ம்ம்......... வருகைக்கு நன்றி.

   நீக்கு
  2. பதிவை விட முக்கியமாக பின்னூட்டத்தை தான் படித்தேன். ஆம் பின்னூட்டத்தை படித்தால் தான் பதிவு எந்தளவு சென்றிருக்கிறது என்று தெரியும்.

   சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து நடப்பார்கள் என்று நம்புவோமாக.

   சரியான நேரத்தில் சரியான பகிர்வு.

   வாழ்த்துக்கள் சகோ சிராஜ் மற்றும் சகோ ஆஷிக் அஹமத்

   நீக்கு
 21. என்னான்னு சரியா புரியல்லியே!!!!

  இருந்தும் ஆளுக்காள் அடிச்சிக்காதிங்கப்பா.. ஹெப்பியா இருங்க.. மிஞ்சி மிஞ்சி போனா ஒரு 100 வருஷம் வாழ்ந்திடுவோமா?

  எதுக்கு இதெல்லாம்.. டோன்ட் ஒரி.....பீ ஹேப்பி.............

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters