திங்கள், பிப்ரவரி 06, 2012

பதிவர் சென்னை பித்தனின் மறுபக்கம்....


பிரபல பதிவர் சென்னை பித்தனை, பதிவுலகில் இருக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். எந்த வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் பதிவு உண்டு என்று எழுதக்கூடியவர், புதிய பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடியவர், இத்யாதி இத்யாதி. இது தான் அவரைப் பற்றி பெரும்பாலானோர் அறிந்தது. 
அது ஓரளவிற்கு உண்மை தான். ஆனால் அவர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறியாத சில விடயங்கள் உண்டு. அவற்றை பொது மேடையில் பேசுவதால் அவர் இதைப்பற்றி தவறாக எண்ணிவிடக் கூடாது**.
                                                       
கடந்த பொங்கல் அன்று, நானும் நண்பன் ரஹீம் கஸாலி அவர்களும் சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றோம். இது  சம்பந்தமாக நண்பன் கஸாலி, "புத்தகக் கண்காட்சியில் நான்" என்ற தலைப்பில் தொடராக எழுதி அனைவரையும் கொலையா  கொண்டதை நாம் அனைவரும் அத்துணை எளிதில் மறந்து விட முடியாது. நிற்க.
நாங்கள் அவருடன் ஒரு 10 அல்லது 15 நிமிடமே பேசி இருப்போம். இது தொடர்பில் சென்னை பித்தன் ஐயா அவர்கள் பதிவிட்டதை போல், நாங்கள் ஒன்றும் பதிவுலகயோ அல்லது மொத்த உலகையோ புரட்டி போடும் விஷயங்கள் பற்றி எல்லாம் பேசவில்லை. நாங்கள் நலம், நீங்கள் நலமா??? என்ற அளவில் தான் பேசினோம். இந்த பதிவு எங்கள் பேச்சு பற்றியோ அல்லது சந்திப்பு பற்றியோ அல்ல. மாறாக அவரது வீட்டில் நான் கவனித்த ஒரு நெகிழ்வான விஷயம் பற்றியது.

ஆம். நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் அவருக்கு அருகில் ஒரு வயதான அம்மா அமர்ந்திருந்தார்கள். பேச்சின் ஊடாக அவர்கள் யார் என்று கேட்டோம். அதற்க்கு அவர்தான் எனது தாயார், அவருக்கு வயது 93 ஆகிறது. இந்த வீட்டில் நானும் அவரும் மட்டும் தான் இருக்கிறோம், நான் தான் அவரை கவனித்து கொள்கிறேன்  என்று கூறினார். ஒரு நிமிடம் நான் ஆடிப்போய் விட்டேன்.

பெண்டாட்டி, பிள்ளை,, தம்பி தங்கை என்று இருக்கும் பொழுதே இந்த காலத்தில் பெற்ற தாய் தந்தையரை யாரும் கவனிப்பதில்லை. குறிப்பாக நகரம் என்ற நரகத்தில் வாழும் படித்த பொடலங்காய்கள் பொண்டாட்டிக்கு பிடிக்க வில்லை, நாங்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவோம் அதனால் இவர்களை கவனிக்க ஆளில்லை என்று ஏதாவது உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லி  பெற்ற தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடும் இந்த காலத்தில், 93 வயது நிரம்பிய தனது தாயை
அவர் ஒருவராக கவனித்துக் கொள்கிறார் என்றால்(சென்னை பித்தனுக்கு வயது 76 , சரியா ஐயா????), அந்த மனிதத்தை என்னவென்று சொல்வது???? அந்த பாசத்தை என்னவென்று சொல்வது????? வார்த்தைகள் இல்லை.

அந்த சந்திப்பிற்கு பின், பல முறை நான் அது பற்றி சிந்தித்தது உண்டு. 76 வயதில் நாம் நமது பெற்றோரை இது போன்று பார்த்துக்கொள்வோமா? ஏன் பெரும்பாலானோரால் .இவரைப்போல் இருக்கு முடியவில்லை? தனது பெற்றோரை புறக்கணிக்கும் கொடூர மனது மனிதனுக்கு எப்படி வருகிறது??? என்று எண்ணற்ற கேள்விகள் என்னுள் எழுந்தன.
நாமும் நமது பெற்றோரை கடைசி வரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மனதிற்குள்  நினைத்துக்கொண்டேன்.
சென்னை பித்தன் அய்யா!!!! இந்த பொருள்/பணம்  சார்ந்த உலகில், தனி மனிதராக தனது  தாயாரை கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் அனைவரும் பாராட்டுக்கு  உரியவர்கள். உங்களில் இருந்து தான், முதியோர் இல்லங்களில் தனது தாய் தந்தையரை விட்டுச் செல்லும் கழிசடைகள் பாடம் படிக்க வேண்டும். இன்று தனது தாய் தந்தையரை முதியோர் இல்லங்களில் அனாதைகளாக விடும் அனைவரும் நாளை நிச்சயம் அதைவிட கேவலமான நிலையையே அடைவார்கள்.
ஏனெனில், ஆத்திகர்களுக்கு சொல்வதானால், நிச்சயம் இறைவன் அவர்களை தண்டிப்பான். நாத்திகர்களுக்கு அறிவியல் பூர்வமாக சொல்வதென்றால்
ஒவ்வொரு வினைக்கும் அதற்க்கு சமமான எதிர்வினை ஒன்று உண்டு.


உங்கள் தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றோரில், தாயோ, தந்தையோ அல்லது இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உங்களோடு இருந்தால், அவர்களை ”சீ” என்று கூட கூறாதீர்கள். மேலும், அவர்களை கடிந்து பேசவேண்டாம். மாறாக, அவர்களிடம் கண்ணியமாக பேசுவீராக.....
அல்குர் ஆன் - 17:23

தமிழ்மணத்தில் வாக்களிக்க முடியாதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து வாக்களிக்கலாம்.


52 கருத்துகள்:

  1. சென்னைப்பித்தன் சார் பற்றி கஸாலி என்னிடம் விரிவாக கூறினார். எல்லா வளமும் பெற்று அவர் மனநிம்மதியுடன் வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /*

      சென்னைப்பித்தன் சார் பற்றி கஸாலி என்னிடம் விரிவாக கூறினார். எல்லா வளமும் பெற்று அவர் மனநிம்மதியுடன் வாழ வேண்டும். */

      வருகைக்கு நன்றி சிவா.

      நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    மிகுந்த நெகிழ்ச்சியான பதிவு. சென்னை பித்தன் அவர்கள் ஒரு மிகச் உதாரணமாக இருக்கின்றார்கள் என்றால் அதி மிகை ஆகாது.

    எங்கள் ஊரில் இதே போன்றதொரு நிலையை பார்த்திருக்கின்றேன். அந்த சகோதரரின் தந்தை படுத்த படுகை. அங்கங்களை அசைப்பதில் கூட சிரமம் தான். டூப் மூலமாக தான் எல்லாம்.

    மலம்/சிறுநீர் போன்றவற்றை அகற்றுவதிளிருந்து அந்த சகோதரர் அவ்வளவு அழகாக தன் தந்தையை கவனித்து கொள்வார். மாஷா அல்லாஹ்.

    ஒரு பிழிப்புனணர்வு பதிவிற்கு ஜசாக்கல்லாஹ்..

    வஸ்ஸலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோ ஆசிக் அஹமது,

      நிறைய நல்ல உள்ளங்கள் இது போல் இருக்கிறார்கள். பதிவர்களிடையே இருக்கும் நல்ல செயல்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே பதிவிட்டேன், அவரின் அனுமதியுடன்.

      நீக்கு
  3. அந்த சந்திப்பு எனக்கும் நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது. கடமையையே பாராட்டும் கால கட்டத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
    இனி வரும் காலங்களில் ஒரு தாய்பாலூட்டுவதற்கே பாராட்டு விழா வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நிச்சயம் சென்னைபித்தன் அய்யா பாராட்டுக்குரியவர்.கடமையாக இதை செய்தாலும் இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு மகனை பார்ப்பது அரிது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஜாலி நானா,

      பெற்றோரை பேணுவது நிச்சயம் பிள்ளைகளின் கடைமைதான். ஆனால் நிறைய பேர் அதை செய்யாத சூழ்நிலையில், தனது கடமையை செய்பவர்கள் உயர்வாகவே தெரிகிறார்கள்.

      நீக்கு
  4. சென்னை பித்தன் என்று சொல்வதைவிட‌ உண்மையில் இவர் பெற்றோர் பித்தன்,பாசபித்தன்,அன்புபித்தன்,விஸ்வாசபித்தன் என்றுதான் சொல்ல வேண்டும்.இத்தகைய எண்ணம் கொண்டவர்களல்லவா உண்மையான‌ மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், நல்லதொரு கருத்திற்கும் நன்றி சகோ சபி,

      நீக்கு
  5. அன்பு சிராஜ்.
    எழுதலாமா எனக்கேட்டுப் பின் எழுதிய உங்கள் பண்பாடு என்னை மிகவும் கவர்ந்தது.நான் ஐந்து வயதில் தந்தையை இழந்தவன்.;முழுவதும் தாயால்வளர்க்கப்பட்டவன் எனவே,ஒரு மகன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையைத்தான் நான் செய்கிறேன்.இதில் அதிகமாகப் பாராட்ட எதுவுமில்லை.உங்கள் அன்பு காரணமாகச் சிறிது மிகைப்படுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன். ;அன்புக்கு நன்றி.
    ஒரு திருத்தம்--என்வயது 67தான்;76 அல்ல!நம்பர் உல்டாவாகிவிட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /* ஒரு திருத்தம்--என்வயது 67தான்;76 அல்ல!நம்பர் உல்டாவாகிவிட்டது! */

      வயதை மாற்றி போட்டதற்கு மன்னிக்கவும்.

      கடமையே ஆயினும், நிறைய பேர் செய்யாத சூழ்நிலையில், இதை பாராட்டத்தான் தோன்றுகிறது சகோ. இதில் மிகையாக எனக்கு எதுவும் படவில்லை.

      நீக்கு
    2. ஸலாம் சகோ.சென்னை பித்தன்,
      நான் உங்கள் தளத்துக்கு வந்தது இல்லை என்றே நினைக்கிறேன். காரணம், உங்கள் வித்தியாசமான பெயர் என்னை ஏனோ அந்நியப்படுத்தி இருக்கலாம். இந்த பதிவை படித்த பின்னர்... 'ச்சே... பெயரை வைத்து ஒருவரை முடிவு பண்ணி விட்டோமே' என்று தலையில் குட்டிக்கொண்டேன். மன்னிக்கவும்.

      ///மகன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையைத்தான் நான் செய்கிறேன்.///---இதற்கு மேலே நான் என்ன சொல்ல..? தாங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்வோடும் நிறைவோடும் இவ்வுலகில் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

      மிக நல்ல மனிதரை பிறருக்கு அடையாளம் காட்டிய (முக்கியமாக எனக்கு) சகோ.சிராஜ், தங்களுக்கு மிகவும் நன்றி. ஜசாக்கலாஹ் க்ஹைர்.

      நீக்கு
  6. சிறந்த பதிவைத் தந்தமைக்கு பாராட்டுகள் சகோ! இவரைப் போன்றவர்கள் இன்னும் அதிகரித்தால் முதியோர் இல்லங்கள் குறைய வாய்ப்புண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைக்கு சலாம் சகோ சுவனப்பிரியன்,

      முதியோர் இல்லங்கள் இல்லாத நிலை நாட்டில் ஏற்ப்பட வேண்டும். வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  7. வணக்கம் சகோ!
    அருமையான விடயத்தை சொல்லி இருக்கிறீங்க..
    சென்னை பித்தனை வணங்குகிறேன். சிறப்பான ஆக்கம் தந்ததற்கு நன்றி சகோ!!

    பதிலளிநீக்கு
  8. சென்னை பித்தன் அய்யா!!!! இந்த பொருள்/பணம் சார்ந்த உலகில், தனி மனிதராக தனது தாயாரை கவனித்துக்கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  9. சொல்ல வார்த்தை இல்ல... நிச்சயம் பாராட்டுக்குரியவர் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் சகோ ஆமினா,

      நல்லா இருக்கீங்களா???? வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. படிக்கும் முன் கண்ணீர் கோத்து வருகிறது. ஆனந்த கண்ணீர்.

    //அந்த மனிதத்தை என்னவென்று சொல்வது???? அந்த பாசத்தை என்னவென்று சொல்வது????? வார்த்தைகள் இல்லை.//

    உண்மையான விஷயம்.

    இதற்கு பயந்து தான் தன்னுடைய பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் பலர் முன்கூட்டியே முதியோர் இல்லத்தில் முன்பதிவும் செய்கிறார்கள். சிறு வயதில் நம்மை பார்த்து பார்த்து வளர்த்த நம் பெற்றோர்களை அவர்கள் மறுபடியும் குழந்தைகள் ஆன போது (அந்திம காலத்தில்) கண்டிப்பாக நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் வயது முதிர்ந்தவர்கள் குழந்தைகளுக்குச் சமமானவர்கள் தான் சகோ. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களை கைவிட்டு விடாமல் அனுசரித்துச் செல்ல வேண்டும். வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  11. இன்றைய காலத்தின் நல்ல முன்னுதாரணம்! சென்னை பித்தன் ஐயாவுக்கு இறைவன் எல்லா நலன்களையும் கொடுக்கட்டும். பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  12. நிச்சயம் அய்யா அவர்கள் தலை சிறந்த மனிதர்...பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கு நன்றி சகோ ரியாஸ் அஹமது...

    பதிலளிநீக்கு
  14. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    உண்மையில் மனதை நேகிழவைத்த பதிவு

    சகோதரர் சென்னை பித்தன் அவர்களுக்கு என் மரியாதை கலந்த வாழ்த்துக்கள்
    பகிர்வுக்கு நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ ஹைதர் அலி,

      வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.

      நீக்கு
  15. மறுபக்கம் அறிந்தேன். நீண்ட ஆயுளும் ஆன்ம பலமும் அவருக்கும் அவரது தயாருக்கும் அருளட்டும் இறைவன் என்று பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வாறே இறைவன் அருளட்டும் சகோ அன்புமணி.

      வருகைக்கு நன்றி.

      நீக்கு
  16. பதில்கள்
    1. முற்றிலும் உண்மை.

      வருகைக்கு நன்றி சகோ புதுகை அப்துல்லா.

      நீக்கு
  17. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

    அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பதிவு..!சமீபத்தில் ஒரு போஸ்டரை பார்க்க நேர்ந்தது.!முதியோர் இல்லம் ஆரம்பித்ததை வாழ்த்தி..! ஒரு நாட்டில் முதியோர் இல்லம் பெருகுவது எப்படி பெருமையான விஷயமாக இருக்க முடியும் தெரிய வில்லை. ? சாதாரணமாக ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாக இருக்க வேண்டிய ஒரு செயல் உறவுகளின் சகிப்பு தன்மை இல்லாததால் இன்றைய காலகட்டத்தில் வியப்புக்குரிய விஷயமாகி விட்டது தான் மிக வேதனையான ஒன்று.

    பதிவுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் சகோ அஸ்மா,

      /* ஒரு நாட்டில் முதியோர் இல்லம் பெருகுவது எப்படி பெருமையான விஷயமாக இருக்க முடியும் தெரிய வில்லை. ? */

      நிச்சயம் பெருமையான விஷயம் இல்லை. குறைவதே பெருமை.
      வருகைக்கும் நல்ல கருத்திற்கும் நன்றி சகோ.

      நீக்கு
  18. ஸலாம் சகோ.சிராஜ்,

    //நாமும் நமது பெற்றோரை கடைசி வரை நல்லபடியாக பார்த்துக்கொள்ள எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.//---தங்கள் பிரார்த்தனை நிறைவேரட்டுமாக. ஆமீன்.

    தன் பெற்றோரை தன்னோடு வைத்து கவனிததுக்காட்டித்தான் என்னை என் பெற்றோர் வளர்த்து இருக்கிறார்கள்.

    அதையே நான் எனது பிள்ளைகளுக்கு செய்து காட்டியாக வேண்டும். அப்போதுதான் 'நான் முதியோர் இல்லம் போக மாட்டேன்' என்று நம்பலாம்..!

    தம் பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்பியவர்கள் அறிந்துகொள்ளட்டும்...

    நிச்சயமாக... அதே 'முதியோர் இல்லம்' எனும் இரயில் இஞ்சினில் கோர்க்கப்பட்ட... இனிமேல் கடந்து செல்ல இருக்கும் இன்னொரு பெட்டிதான், தாம் என்றும், அந்த பெட்டியை கோர்ப்பவர்கள் கடந்து போன பெட்டியின் பேரப்பிள்ளைகள் என்றும்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கதையையும் படித்துப்பாருங்கள் சகோ....
      http://www.rahimgazzali.com/2010/12/short-story-from-rahim-gazali.html

      நீக்கு
    2. உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் சகோ முஹம்மது ஆசிக்,

      /* நிச்சயமாக... அதே 'முதியோர் இல்லம்' எனும் இரயில் இஞ்சினில் கோர்க்கப்பட்ட... இனிமேல் கடந்து செல்ல இருக்கும் இன்னொரு பெட்டிதான், தாம் என்றும், அந்த பெட்டியை கோர்ப்பவர்கள் கடந்து போன பெட்டியின் பேரப்பிள்ளைகள் என்றும்..! */
      உண்மையிலும் உண்மை. வழிமொழிகிறேன்.

      வருகைக்கும் நல்ல கருத்திற்கும் நன்றி சகோ.

      நீக்கு
  19. படிச்சுட்டு அப்படியே ஆடிப்போயிட்டேன்!!

    சென்னைப்பித்தன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்!
    மதிப்பிற்குரிய வலைப் பதிவர் சென்னை பித்தன் அவர்களைப் பெருமைப் படுத்தி ஒரு பதிவைத் தந்த தங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. இந்த கதையையும் படித்துப்பாருங்கள்....
    http://www.rahimgazzali.com/2010/12/short-story-from-rahim-gazali.html

    பதிலளிநீக்கு
  22. திரு சென்னை பித்தன் என் நீண்ட நாள் நண்பர் என்பதில் பெருமை அடைகிறேன் .
    Child is the Father of Man என்று ஒரு அர்த்தத்தில் கூறினார் ஆங்கில கவிஞர் வில்லியம் வோர்ட்ச்மித் .. அதையே சிறிது மாற்றி இவ்வாறு கூறினால் திரு சென்னை பித்தனுக்கு பொருந்தும் " தாய்க்கு தாயனவர் " .அவரை பற்றி அனைவரும் அறிய பதிவுலக நண்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ... இந்த பதிவினை அனுமதி பெற்று தங்கள் தங்கள் பதிவில் பிரசுரம் செய்ய வேண்டுகிறேன் ... வாசு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ வாசு,

      அனுமதி எல்லாம் தேவை இல்லை. விரும்புவர்கள் வெளியிட்டுக் கொள்ளலாம்.

      வருகைக்கும் நல்ல கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  23. சென்னை பித்தனைப் பற்றி அறியாதவர்களுக்கு, அவரின் உண்மையான முகத்தைக் காட்டியதற்கு நன்றி நண்பர் சிராஜ் அவர்களே! திரு வாசு அவர்கள் போலவே,நானும் சென்னைப் பித்தனுடைய நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இவர்தான் உண்மையான தாயுமானவர் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ நடனசபாபதி,

      உங்கள் வருகைக்கு நன்றி. உண்மையிலே அவரின் நட்பு பெருமைக்குரிய விசயமே.

      நீக்கு
  24. இது சம்பந்தமான செய்திகளைக் கேட்கும்போது மனதில் நம் பெற்றொரிடம் நாமும் நல்லவிதத்தில் நடந்து கொள்ள வேண்டுமே எனும் பயம் வருகிறது.
    பெற்றோரைப் பேணிக்காக்கும் நல்மனதை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.

    பதிலளிநீக்கு
  25. /* பெற்றோரைப் பேணிக்காக்கும் நல்மனதை இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக.
    */


    ஆமீன்.
    வருகைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters