இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, சவூதி அரேபியா ரியாத் மாநகரில் மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் பல்வேறு கிளைகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள், இரத்த தான முகாம்கள், பாதிக்கப்பட்டோருக்கு அவசர கால நிவாரண உதவிகள், கல்வி விழிப்புணர்வு முகாம்கள், மார்க்க சிறப்பு நிகழ்ச்சிகள், ஜகாத் உதவிகள், உடற்பயிற்சி முகாம், கல்வி உதவிகள் போன்றவற்றை செய்து வருகின்றது. இந்திய குடியரசின் அரசியலமைப்பு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு 62 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, ரியாத் மாநகரில், கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் மாபெரும் இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இது ரியாத் மண்டலம் நடத்தும் 16 ஆவது மெகா இரத்த தான முகாம் ஆகும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிந்ததும் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். எகிப்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாட்டினரும் ஆர்வமுடன் கலந்து கொண்டது இம்முகாமுக்கு சிறப்பு சேர்ப்பதாக அமைந்தது. தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது, TNTJ வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது. அவர்களுள் பலருக்கு பி.ஜெ. அவர்களின் தர்ஜுமா குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
முகாம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள் குறிப்பிடும் போது, "இந்திய சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் வெறுமனே கொடியேற்றிவிட்டு கலைவதும், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதையுமே பெரும்பாலோர் செய்து வருகின்றனர். தொலைக்காட்சிகளோ சினிமா நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்புவதில்தான் தத்தமது கவனத்தை செலுத்துகின்றன. இந்த நாட்களில் அனைவரும் பயன்பெறும் வகையில் TNTJ பயனுள்ள நல்ல பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றது. அதில் ஒரு பாகம் தான் இன்றைய இரத்த தான முகாம். இந்த இரத்த தான முகாம் குறித்த செய்திக்குப் பிறகாவது, நமது குடியரசு தின கொண்டாட்டங்களை மக்கள் பயனுறும் முறையில் அமைத்துக் கொள்ள அனைவரும் உறுதி பூண வேண்டும்" என தெரிவித்தார்.
நாம் அளித்த இந்த குருதிக்கொடை இந்திய விடுதலைக்கு வித்திட்ட முஸ்லிம்களையும் அவர்களது தியாகங்களையும் நினைவுபடுத்தும் விதமாக அமையட்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர். காலை 9 மணிக்கு துவங்கிய இம்முகாமில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நேரமின்மை மற்றும் இதர காரணங்களால் 270 நபர்கள் பதிவு செய்ததில், 248 நபர்களால் மட்டுமே இரத்த தானம் செய்ய முடிந்தது.
ரியாத் மண்டலத்தின் மருத்துவ அணி செயலாளர் சகோ. முஹம்மது மாஹீன், சகோ. புதுக்கோட்டை ஃபாரூக் மற்றும் அப்துர்ரஹ்மான் நவ்லக் ஆகியோரின் ஏற்பாட்டிலும், மண்டல தலைமை நிர்வாகிகளின் மேற்பார்வையிலும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக களப்பணியாற்றினர். மண்டல துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் மேற்பார்வையில், மண்டல - கிளை நிர்வாகிகளும் தமது வாகனங்கள் மூலம் கொடையாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து கொடையாளிகளை அழைத்து வருவது, அவர்களை ஒழுங்குபடுத்துவது, அவர்களுக்கு இரத்ததானத்திற்கான அடிப்படை தகவல்களை தெரிவிப்பது என அனைத்து பணிகளும் செவ்வனே செய்யப்படிருந்தன.
மண்டல பொருளாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வடிவமைத்திருந்த இரத்த தான முகாம்களுக்கான மென்பொருள் (Software) கொடையாளிகளுக்கிடையே வரவேற்பினைப் பெற்றது. கொடையாளிகள் அனைவருக்கும் சிறப்பு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவூதி நாட்டைச் சேர்ந்த இரத்த வங்கி மேற்பார்வையாளர் சகோ. அப்துல் மஜீத் TNTJ வுக்கு நன்றி கூறினார்.
2010 மற்றும் 2011 ஆண்டுகளில் வெளிநாட்டு மண்டலங்களில் ரியாத் மண்டலம் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
இச்செய்தி பிரபல நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது.
நன்றி: http://riyadhtntj.blogspot.com/2012/01/riyadthtntj-republic-blood-donation.html

நன்றி சுவனப்பிரியன்
http://suvanappiriyan.blogspot.com/2012/01/blog-post_25.htmlTweet |
சலாம்! சகொ சிராஜ்!
பதிலளிநீக்குதூங்கி எழுந்து காலையில் டீக்கடையை பார்வை யிட்டேன். குருதிக் கொடை பதிவு. வாழ்த்துக்கள். இது போன்ற பொது நல சேவைகள் இஸ்லாமிய தரப்பு செய்தால் ஊடகத் துறையால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அதனை நம் போன்ற பதிவர்கள்தான் வெளிக கொணர வேண்டும.
வருகைக்கு நன்றி சகோ சுவனப்பிரியன்,
நீக்குஇது உங்களுடைய ஆக்கம். இன்னும் பல பேரை சென்று சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நான் வெளியிட்டுள்ளேன்.
ஒரு நல்ல சேவை பற்றிய நல்ல பகிர்வு
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சென்னை பித்தன் அய்யா,
நீக்குஇது என்னுடைய ஆக்கம் அல்ல. சகோ சுவனப்பிரியனுடயது. சுதந்திர தினத்தை வெறும் சினிமா நடிகர்களை வைத்து கொண்டாடுவதை விட, இது போன்று ஆக்கப் பூர்வமாக கொண்டாடலாம் என்பதை வலியுறுத்தவே நானும் வெளியிட்டுள்ளேன், அவரின் அனுமதியுடன்.
வருகைக்கு நன்றி வாஞ்சூர் அப்பா
பதிலளிநீக்குதொடரட்டும் சேவை..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஹாஜா மச்சான்...
நீக்குமலேசியா போயிட்டீங்கன்னு கேள்வி பட்டேன்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி சகோ. பல நல்ல விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது வேதனை தான்.
என்னன்ன பண்டிகை எதற்காக கொண்டாடுறோங்குறதே பலருக்கும் தெரியாம டீவியில் காலத்தை கழிக்கிறாங்க. நாசர் அவர்களின் பேட்டி தான் ஞாபகத்துக்கு வருது :-)
ஜஸக்கல்லாஹ் ஹைர்
வருகைக்கு நன்றி சகோ ஆமினா,
நீக்குஇந்த நல்ல விஷயம் இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்றே இந்த முயற்சி.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.
பதிலளிநீக்குஊக்கப்படுத்தவும்,பாராட்டப்படவும் வேண்டிய ஒரு நல்ல செயல்.
நல்ல பதிவு,பகிர்வுக்கு நன்றி சகோ.
வருகைக்கு நன்றி சகோ ஆயிஷா
நீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇதில் ஒரு மைனஸ் வோட் பதிவாகி உள்ளது, சகோதரர் ஒருவர் தவறுதலாக அப்படி செய்து விட்டார்..
பதிலளிநீக்குஎன் சார்பாக மைனஸ் வோட்டிற்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.
நீக்குவருகைக்கு நன்றி சகோ ஆசிக் அஹமது.
ஸலாம் சகோ.
பதிலளிநீக்குகொண்டாட்டங்களுக்கு மட்டுமுள்ள விழாக்களாக ஆக்கப்பட்டுவிட்ட அரசு விழா தினங்களில் இதுபோன்ற ஆக்கப் பூர்வமாக, மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு தொண்டு செய்துவரும் TNTJ வினருக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களை அளிப்பானாக!
பகிரவேண்டிய பதிவு! சகோக்களுக்கு நன்றி :)
வலைக்கும் அஸ்ஸலாம் சகோ அஸ்மா,
நீக்குவருகைக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.
பட், தொடர்ந்து எழுதுவீங்களான்னு கேட்க கூடாது?????
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ்
இன்னும் தொடரப்பட வேண்டிய நற்செயல்
வலைக்கும் அஸ்ஸலாம் சகோ குலாம்,
நீக்குவருகைக்கு நன்றி.
இது உண்மையில் மனம் நெகிழச்செய்த சம்பவம்!
பதிலளிநீக்கு