திங்கள், ஜனவரி 14, 2013

எதிர்க்குரல் - இஸ்லாமோபோஃபியா Vs இஸ்லாமிய பதிவர்கள்


சென்னை மக்களை சிலநாட்களுக்கு இலக்கியவியாதிக்கு ஆளாக்கும் புத்தகத்திருவிழா இனிதே தொடங்கிவிட்டது.  அனைவரும் பேராவலுடன் எதிர்பார்த்த உம்மத் குழுமத்தின்  புதிய முயற்சியான  "எதிர்க்குரல் (இஸ்லாமோஃபோபியா vs இஸ்லாமியப் பதிவர்கள்)" புத்தகமும்  திட்டமிட்டபடி இன்று வெளியாகிறது என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


                                                                
இந்த புத்தகம் பற்றிய சிறுகுறிப்பு

 முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்ல வேண்டுமென்பது இணையத்தில் ஆக்கபூர்வமாக செயலாற்றிக்கொண்டிருக்கும் முஸ்லிம் பதிவர்களின் குழுமமான உம்மத் குழுமத்தின்  நீண்ட நாளைய இலக்குகளில் ஒன்று.     ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூலானது, இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.


                                                    
வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றோம்.  128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 50 ரூபாய் மட்டுமே!

இப்புத்தகம் கிடைக்குமிடங்கள் :


கடையின் பெயர்
கடை எண்
சாஜிதா புக் சென்டர்
522
டிஸ்கவர் புக் பேலஸ்
43 & 44
பஷாரத் பப்ளிகேஷன்ஸ்
52 & 53
மக்கள் சக்தி
406
மலிவு விலை இஸ்லாமிய பதிப்பகம்
66
தமிழ்ச் சோலை பதிப்பகம்
 344 & 345
இளையான்குடி மடல்
92
சமநிலைச் சமுதாயம்
266
அறிவு நாட்றாங்காள் என்ற சொர்கத் தோழி
17


  (மேலும்  பல கடைகளில் விரைவில் கிடைக்கும்... )


குறிப்பு : இப்புத்தகத்தை வாங்க விரும்புவோர். கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இறைவன் நாடினால், உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம்.

சிராஜ்        - +91-994-158-5566   (vadaibajji@googlemail.com)
ஆஷிக்     - +91-978-954-4123   (aashiq.ahamed.14@gmail.com)

வெளிநாடுகளுக்கு : வெளிநாடுகளில் இருந்து கேட்ட சகோஸ் தங்கள் இந்திய முகவரியை அனுப்பினால், அங்கு அனுப்பி விடுகிறோம். அங்கிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். இது தான் எளிய வழி. ஏனெனில் கூரியரில் அனுப்பினால் செலவு எக்கச்சக்கமாக இருக்கும்.


36 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாஸித்...

      உங்க டார்கெட் 50 புக்.. தெரியும்ல????
      வாங்கிறீங்களோ, வாங்களையோ?? விற்கிறீங்களோ, விற்கலையோ?? அது உங்க பாடு...

      பணம் ஒரு வாரத்தில் வந்திடனும். ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      நீக்கு
  2. வாழ்த்துக்கள்...

    (எல்லா பதிவுமே உங்க ப்ளாக்ல போட்டா என் ப்ளாக்ல நான் என்னதான் போடுறது?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி விடுங்க.. என்ன இப்ப வந்திடுச்சு...
      இந்த வாரம் வடை பஜ்ஜிய மூடிட்டு குட்டிசுவர்க்கம் பிளாக தூசி தட்டிடுவோம்... ஒரு பதிவு நான் எழுதி தர்றேன்.. நீங்க 2 பதிவு போடுங்க... ஓக்கே வா??

      நீக்கு
  3. மாஷா அல்லாஹ்!

    வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ..

      உங்க டார்கெட் 10 புக்கு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      நீக்கு
  4. வாழ்த்துக்கள், இந்நூலை பெற முயற்சிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சகோ இக்பால் செல்வன்.....
      வாங்கி படியுங்கள் சகோ... உங்களுக்கு வாங்குவது சிரமம் என்றால்..
      உங்கள் இந்திய முகவரி தந்தால் நான் அனுப்பி வைக்கிறேன்.. பணத்தை என் பேங்க அக்கவுண்டிற்க்கு மாற்றிவிட்டுவிடலாம்...

      நீக்கு
    2. இக்பால் செல்வன்--- I APPRECIATE U FOR UR ATTEMPT!..WE HAVE KEEP OUR MIND OPEN TO LEARN WITHOUT EGOS! M=WE MAY BE WRONG OR RIGHT, IF WE OPEN TO LEARN NEW THINGS !WE CAN CHANGE THE WORLD WITH PEACE! tq enjoy reading if u give ur address i wish to gift u al-quran tamil or english translation.

      நீக்கு
    3. சகோ. சிராஜ். நிச்சயம் இந்திய முகவரி ஊடாக பெற முயல்கின்றேன் ... ! இல்லை என்றால் நண்பர்கள் ஊடாக மேற் சொன்ன புத்தக கடைகளில் பெறலாமா எனப் பார்க்கின்றேன். தங்கள் உதவிக்கு நன்றிகள் சகோ. கருத்து மாறுபாடு இருந்தாலும் பதிவர்களின் எழுத்து அச்சில் ஏறுவதை நான் வரவேற்கின்றேன். தொடர்க நும் பணி ! வாழ்த்துக்கள் .

      நீக்கு
    4. ரியாஸ் அஹ்மத் - தங்கள் அன்புக்கு கருத்துக்கும் மிக்க நன்றிகள். எனது வழி சற்றே வேறுபட்டது, கருத்துக்கள் முரண்பாடானவை. இருந்த போதும் வாசிப்பு வேட்கை மிக அதிகம். என்னிடம் ஏற்கனவே அல் -குரான் ஆங்கிலம், தமிழ் பிரதிகள் உண்டு. தங்கள் அன்புக்கு நன்றிகள். அல் -குரான் மட்டுமல்ல உலக சமயங்களை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம், காலத்துக்கு ஒவ்வாதவைகளை புறந்தள்ளிவிட்டால் அனைத்து நூல்களிலும் பல அரிய வரலாற்று, தத்துவ தகவல்கள் உள்ளன என்பதை நிச்சயம் ஏற்பவன் நான். நன்றிகள் !!!

      நீக்கு
  5. மாஷா அல்லாஹ்!

    வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ரினாஸ்...

      நீங்கள் கேட்ட எண்ணீகையிலான புத்தகத்தை உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்ப சொல்கிறேன். இன்ஷா அல்லாஹ்

      நீக்கு
  6. masha allah
    eruthiyil allah veatri thanthan
    vazhthukal en kolgai sagotara :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி.. இந்த கொள்கைச் சகோதராவா விட மாட்டீங்களா??

      அந்த குரூப் இந்த பக்கம் வராது.. ஒன்லி பேஸ்புக்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

      சரி உங்க டார்கெட் 10 புக்.. ஹா..ஹா..ஹா

      நீக்கு
  7. மாஷா அல்லாஹ்... புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. பேஸ்புக்கில் பார்த்த பல சகோஸ் கேட்டு இருக்காங்க... உங்கள் பேராதரவிற்க்கு நன்றி சகோஸ்...

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக

    இறைவனின் மாபெரும் கிருபையால் முஸ்லிம் பதிவர்களின் எழுத்துக்களை ஒருசேர நூல் வடிவில் கொண்டு செல்லும் இந்த பணி வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.அல்லாஹ்வின் அருளை எதிர்நோக்கி செய்யும் பணிக்கு அவன் வெற்றியயே வழங்குவான்.அதற்கு என் பிரார்த்தனை எப்போதும் உண்டு.


    இந்த புத்தக பணிக்காக பலரும் உழைத்துள்ளனர்.அவர்கள் ஒவ்வொருவருக்கும்
    அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக... ஒரு பேரிட்சை பழ அளவு நன்மை செய்தாலும்
    அதை அல்லாஹ் பல மடங்காக திருப்பி தருவான்.இதற்கு சொல்ல வேண்டுமா... :)

    ஆனால் இந்த அற்புத பணியில் நான் எதுவும் செய்யவில்லை என்பது வருத்தமே.

    இறைவன் நாடினால் இதுபோன்ற இன்னும் பல நூல்கள் வெளிவர அதில்
    எனது பங்கும் இருக்க எனது பிரார்த்தனைகளும்,

    உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்....... :)

    (முஹம்மத் ஹசனாக எனது முதல் கருத்துரை இங்குதான்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முஹம்மத் ஹசனாக எனது முதல் கருத்துரை இங்குதான்)//

      ஆமா இது சரித்திர புகழ்வாய்ந்த ப்ளாக்க்ன்னு இத சொல்றீங்களே தம்பி... :-) நீங்க மொத கமென்ட் போட்ட்டிருக்க வேண்டிய எடமே வேற... குட்டி என்ற முதல் பெயரையும் சுவர்க்கம் என்ற கடைசி பெயரையும் தாங்கியிருக்கும் உலகபுகழ்பெற்ற தளத்தில் போட்டிருக்கணும்... வரலாற்றிலும் பதிவாகியிருக்கும்! ம்மிஸ் பண்ணிட்டீக..

      நீக்கு
  10. வாழ்த்துக்கள்! சீக்கிரமே புத்தகங்கள் தீர்ந்து அடுத்த பதிப்புக்கு தயாராக பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் சகோ, வாங்க முயற்சி செய்றேண்

    பதிலளிநீக்கு
  12. நல்ல முயற்சி

    வாழ்த்துகள் !

    இறைவன் நாடினால் ! வாங்க முயற்சிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  13. சிராஜ்,

    நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்!

    //உங்க டார்கெட் 50 புக்.. தெரியும்ல????
    வாங்கிறீங்களோ, வாங்களையோ?? விற்கிறீங்களோ, விற்கலையோ?? அது உங்க பாடு...
    //

    அது என்ன மிரட்டி யாவாரம் செய்யுறிங்க :-))

    //குறிப்பு : இப்புத்தகத்தை வாங்க விரும்புவோர். கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இறைவன் நாடினால், உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறோம்.//

    இறைநாடாவிட்டால் பக்கத்து வீட்டுக்கு அனுப்பிடுவிங்களோ?

    யாரு பொத்தவம் கேட்டாங்களோ அவுங்களுக்கு தான் அனுப்பணும் :-))

    இறைநாடினால் உங்களுக்கு பணம் அனுப்புவோம்னு சொல்லிட்டால் என்னப்பண்ணுவீங்க :-))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வவ்வால் அண்ணே., உங்கள் அறிவை கண்டு புல்லரிக்கிறது...

      //அது என்ன மிரட்டி யாவாரம் செய்யுறிங்க //

      அடிச்சி கூட யாவாரம் பண்ணலாம்.
      முதல்ல சிராஜ்க்கும் இங்கே உள்ளவங்களுக்கும் உள்ள ப்ரண்ட்ஸ் ஷிப் எப்படியானது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்..

      //இறைநாடாவிட்டால் பக்கத்து வீட்டுக்கு அனுப்பிடுவிங்களோ//

      நான் ஒரு செயலை செய்ய நினைக்கிறேன். இறைவனும் நாடினால் மட்டுமே அந்த செயல் கைக்கூடும். அப்படியில்லாமல் நான் மட்டும் நினைத்து இறைவன் நாடவில்லையென்றால் அந்த செயல் நடைபெற சாத்தியமில்லை.

      வவ்வால் அண்ணே.. "இறை நாடினால் " அப்படீனு சொல்றதுக்கு இதுதான் அர்த்தம்.. எல்லாவற்றிலும் உங்கள் சுயபுரிதலை புகுத்தினால் எதையும் தலைகீழாக தான் புரிந்துக்கொள்ள வேண்டி வரும்.

      நீக்கு
    2. குலாமு அய்யா,

      என்ன கொடுமை அய்யா இது?

      அது ஒரு நகைச்சுவைக்கு சொன்னது, வர வர மக்களிடம் நகைச்சுவை உணர்வு அருகி வருகிறதே ,பேசாம எல்லாருக்கும் வலுக்கட்டாயமா நைட்ரஸ் ஆக்சைடு நுகர வச்சிடலாமா :-))

      நீக்கு
    3. அட!.. நான் சொன்னா மட்டும் அது சீரியஸா வவ்வால்லய்யா....

      அய்யோ, அய்யோ... நைட்ரஸ் ஆக்சைடை இன்னுமா நீங்க நுகரல..?

      நீக்கு
  14. மாஷா அல்லாஹ் !!!!

    வாழ்த்துக்கள் சகோ..

    அனைவரின் கனவும் நனவாக வைத்த பெருமை அல்லாஹ்வையே சாரும்..

    இன்னும் பல பல வெற்றிகள் அடைய அல்லாஹ் துணை புரிவானாக...

    பதிலளிநீக்கு
  15. அஸ்ஸலாமு அலைக்கும்!

    அல்ஹ‌ம்துலில்லாஹ் :) இதற்காக பாடுப‌ட்ட‌ அனைவரது (சிறிய, பெரிய) உழைப்புகளையும் அல்லாஹுதஆலா ஏற்றுக்கொள்வானாக!

    பதிலளிநீக்கு
  16. உங்கள் புத்தகம் வெற்றி பெற்று இன்னும் பல பதிப்புகள் காண வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  17. can we download the book please ?? obviously after paying thro' paypal ??

    பதிலளிநீக்கு
  18. அஸ்ஸலாம் அலைக்கும் ....
    ஐயா...டீ கடை ஒனரெ ...இப்ப ரொம்ப குஷியாக இருப்பீங்க அப்படிதானே ..........!!!!
    பலரின் ஆக்கங்கள் சேர்ந்த நூல் " எதிர்குரல் " நல்ல முயற்சி ...
    நூல் வாங்கினபிறகு படிச்சி கருத்திடுகிறேன் .........
    ரூபாய் 50 தண்டம் ஆகாது ,நம்புகிறேன் ....ஆவ் ஆவ் ஆவ் ...

    பதிலளிநீக்கு
  19. புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து சொன்னாதான தெரியும்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters