வியாழன், ஜனவரி 10, 2013

36-வது சென்னை புத்தகக் கண்காட்சி - உங்கள் நேரம் மற்றும் எனர்ஜியை மிச்சபடுத்த பயனுள்ள டிப்ஸ்


சென்னை மக்கள் குறிப்பாக படிப்பாளிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த 36  வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை ஜனவரி 11ம் தேதி துவங்க உள்ளது.  நாளை தொடங்கி 23ம் தேதி வரை 13 நாட்களுக்கு இந்த புத்தக கண்காட்சி நடைபெறும்.  கடந்த வருடம் கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் நடைப்பெற்ற இந்த கண்காட்சியானது அப்பகுதியில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும் என்பதால் இவ்வருடம் நந்தனம்  ஒய்எம்சிஏ மைதானத்தில்  நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் பொங்கல் விடுமுறையும் ஆரம்பித்து விட்டதால்   நிச்சயம் மக்கள் கூட்டம் அலைமோதும்.                                                              

ஒவ்வொரு வருடமும் நான் சென்னையில் இருக்கும் பொழுதெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த வகையில் நான் கற்றுக்கொண்ட சில விசயங்களை, அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவக்கூடும் நண்பர்களே...

1 . கடைசி 2 நாட்களிலும் செல்லாதீர்கள், பெரும்பாலான புத்தகங்கள் விற்று முடிந்து இருக்கும். அதே போல் முதல் 2 நாட்களிலும் செல்லாதீர்கள் நிறைய புத்தங்கள் மற்றும் கடைகள் வந்தே இருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

2 . முடிந்த அளவு வார நாட்களில் செல்லுங்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும்.

3 . விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும், வார நாட்களில் மதியம் 2 மணிக்கு துவங்கும். முடிந்த அளவு வீட்டில் மதிய உணவை முடித்து விட்டு சரியாக 2 மணிக்கு அங்கே இருங்கள்.

4 . குறைந்த பட்சம் 2 முறையாவது செல்லுங்கள்.

5 . ஒரு முறை செல்பவர் என்றால், தயவு செய்து வெளியில் நடக்கும் கருத்தரங்கில் அமர்ந்து உங்கள் நேரத்தை செலவிட வேண்டாம். நேராக கண்காட்சிக்குள் சென்று விடுங்கள்.

6 . சிறு குழந்தைகளை கூட்டிச் செல்லாதீர்கள். அப்படிச் சென்றால் உங்கள் கவனம் கன்னாபின்னாவென்று சிதறும்.

7 . உள்ளே சென்றால் கண்காட்சி முடியும் வரை வெளியில் வராதீர்கள்.

8 . ஏதாவது ஒரு முனையில் இருந்து தொடங்குங்கள். நடுவிலிருந்து தொடங்காதீர்கள், அது நீங்கள் நடக்கும் தூரத்தை அதிகப்படுத்தும்.

9 . பணமாக எடுத்துச் செல்லுங்கள்(நிறைய எடுத்துச் செல்லுங்கள்). கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தலாம் என்று யோசனையை புறம் தள்ளுங்கள். ஏனெனில் அனைத்து கடைகளிலும் அந்த வசதி இருக்காது. மாறாக அனைத்து கடைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு இடத்தில் ஒருவர் இருப்பார். அங்கும் கூட்டம் அதிகம் இருக்கும். அதற்காக நீங்கள் இங்கும் அங்கும் நடக்க வேறு வேண்டும். எனவே பணமாக எடுத்துச் செல்வது புத்திசாலித் தனம்.

10 . மறக்காமல் ஒரு நோட்டு மற்றும் பேனா எடுத்துச் செல்லுங்கள். இந்த புத்தகம் வேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பம் இருக்கும் புத்தகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகம், விற்பனை செய்யும் கடையின் பெயர், அதன் விலை மற்றும் கடையின் எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கலாம் என்று முடிவு செய்தால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும். மேலும் இது போல் 5 புத்தக விபரங்களை நியாபகம் செய்தால் முதலாவது மறந்து விடும். எனவே எழுதுவது சாலச் சிறந்தது.

                                                
11 . முடிந்த அளவு, வாங்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி உடன் எடுத்துச் செல்லுங்கள்.

12 . தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும்.

13 . நிறைய எழுத்தாளர்களை அங்கு நீங்கள் காணலாம். அவர்களுடன் ஒரு 5 நிமிடங்களை செலவு செய்யுங்கள். நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக ஞானி அங்கேயே  இருப்பார்.

14 . முடிந்த அளவு toilet பயன்படுத்தாதீர்கள். ரொம்ப கேவலமாக இருக்கும் பராமரிப்பு.

15. தண்ணி அடித்துவிட்டு தயவு செய்து செல்லாதீர்கள்.

நிறைய புத்தகங்களை வாங்குவோம், நிறைய வாசிப்போம் , நிறைய அறிவை வளர்த்துக்கொள்வோம்... அடுத்த சில நாட்களில் இலக்கிய பதிவா எழுதி எல்லோரையும் கொல்வோம்....  எவ்வளவு காலம் தான்
இலக்கியவாதிகளே நம்மல கொல்றது....??? நாமும் பழி தீர்ப்போம்...


டிஸ்கி : இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் எழுதிய பதிவுகளின் தொகுப்பு "எதிர்க்குரல்" என்ற பெயரில் ஜனவரி 14 முதல் விற்பனைக்கு வருகிறது. "சாஜிதா புக் சென்டர்" மற்றும் வேறு கடைகளிலும் கிடைக்கும். அனைவரும் வாங்கிப் படிக்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.  128 பக்கங்கள். விலை ரூபாய் 50 மட்டுமே. 
                                                                                                                                       

         
இந்த புத்தகம் பற்றி மேலும் அறிய :

வெளிவருகின்றது முஸ்லிம் பதிவர்களின் புத்தகம்...

                                                
                                                 


17 கருத்துகள்:

 1. நிறைய புத்தகங்களை வாங்குவோம், நிறைய வாசிப்போம் , நிறைய அறிவை வளர்த்துக்கொள்வோம்... அடுத்த சில நாட்களில் இலக்கிய பதிவா எழுதி எல்லோரையும் கொல்வோம்.... எவ்வளவு காலம் தான்
  இலக்கியவாதிகளே நம்மல கொல்றது....??? நாமும் பழி தீர்ப்போம்...
  //தங்களின் டீ ஆத்துதல் நன்றாக இருந்தது...
  மனசு விட்டு சிரித்தேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்கள் சிரிக்கணும்.. அதான் நம்ம நோக்கம்.... ஹி..ஹ்

   நீக்கு
 2. நல்ல யோசனைகள்.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !!!

  வந்தால் இதையே ஃபாலோ பண்றோம்..

  வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு எந்த யோசனையும் சொல்லலியே...:)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளியூரில் இருந்து வருபவர்கள் பஸ்ஸிலோ, ட்ரைனிலோ வந்து சரியாக 2 மணிக்கு புத்தக கண்காட்சி நடைபெறும் இடத்திற்க்கு வந்து அதன் பின் சொன்ன டிப்ஸை பாலோ பண்ணிக்கங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
 3. அணைவரும் பயன் பெரும் வகையில் அமைந்துள்ளது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி சகோ... எல்லாரும் பயன்பெற வேண்டும் என்பதே என் நோக்கமும்...

   நீக்கு
 4. சலாம் சகோ.சிராஜ் அவர்களே..!

  சினிமாதான் பொங்கல் ரிலீஸ்னா, 11 தேதி தொடங்குற புஸ்தக கண்காட்சில 14 தேதி தான் " எதிர்குரல் " ரிலீஸ் பண்றீங்க..!

  அப்பறம் யாருப்பா...அங்க..! எதிர்குரல் ப்ரீ ஆன்லைன் பீடிஎப் கிடைக்குமான்னு..!!!

  (சகோ.உங்கள்ட கேட்காம நான் கடை திறக்கமாட்டேன்..அதனால என்னோட தொந்தரவு உங்களுக்கு கண்டிப்பா உண்டு..நைட்டு இரண்டு மணிக்குநாலும் டவுட்டு கேப்பேன் ..செல்'ல ஆப் பண்ணிறாதீங்க..!!! :-)) )

  நன்றி !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் நாகூர் மீரான்...

   என்னாது?? எதிர்க்குரல் பிடிஎப் லயா?? நோ சான்ஸ்... பிடிஎப் என்கிட்ட இருக்கு..பட் யாருக்கும் சேர் செய்ய மாட்டேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

   // நைட்டு இரண்டு மணிக்குநாலும் டவுட்டு கேப்பேன் ..செல்'ல ஆப் பண்ணிறாதீங்க. // 24/7 செல்லில் அவய்லபிள் நான்.. சோ கால் மி அட் எனி டைம்.....பீல் பிரி..

   நீக்கு
 5. சிராஜ்,

  //11 . முடிந்த அளவு, வாங்க வேண்டிய புத்தகங்களின் பெயர்களை எழுதி உடன் எடுத்துச் செல்லுங்கள்.//

  நீங்க சொன்னாப்போலவே எழுதிடலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை, வாங்குறதுக்கு பணத்த மட்டும் நீங்க கொடுத்தாப்போதும் ...பணம் மட்டும் போதும் :-))

  //15. தண்ணி அடித்துவிட்டு தயவு செய்து செல்லாதீர்கள்.//

  ரொம்ப முக்கியமான கருத்து ....எல்லாம் நோட் செய்துடுங்க ...

  இப்ப அதை விட முக்கியமான கருத்து ....

  //12 . தண்ணீர் கொண்டு செல்லுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும்.//

  ஹி...ஹி உள்ளப்போய் தண்ணி அடிக்க சொல்லுறார்,எனவே எல்லாம் தண்ணிய ,சரியான மிக்சிங்கில் பாட்டிலில் ஊத்தி எடுத்து வரவும் , ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு இதையே ஃபாலோவ் செய்திடலாம் ..நன்றி சகோ :-))

  சீக்கிரம் புத்தக சந்தைக்கு போயிட்டு விலை நிலவரம் எல்லாம் சொல்லுங்க ,அதுக்கு அப்புறமா போலாமான்னு ஒரு முடிவெடுக்க வசதியா இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சீக்கிரம் புத்தக சந்தைக்கு போயிட்டு விலை நிலவரம் எல்லாம் சொல்லுங்க ,அதுக்கு அப்புறமா போலாமான்னு ஒரு முடிவெடுக்க வசதியா இருக்கும்.//

   முகர்ந்து பார்த்த மல்லிகை பூவுக்கெல்லாம் காசு கொடுப்பீங்க போல.!! வேடிக்கை பார்க்குரதுக்கெல்லாம் காசு கொடுக்க தேவை இல்லை பிரதர்..! இட் இஸ் ப்ரீ ..........என்ஜாய் !!!

   நீக்கு
  2. வவ்வால்...

   // நீங்க சொன்னாப்போலவே எழுதிடலாம் ஒன்னும் பிரச்சினை இல்லை, வாங்குறதுக்கு பணத்த மட்டும் நீங்க கொடுத்தாப்போதும் ...பணம் மட்டும் போதும் :-))
   //

   எதிர்க்குரல் (இஸ்லாமோபோஃபியா Vs இஸ்லாமிய பதிவர்கள்) புக் உங்களுக்கு நான் ஸ்பான்ஸர் பண்றேன்...

   // ஹி...ஹி உள்ளப்போய் தண்ணி அடிக்க சொல்லுறார்,எனவே எல்லாம் தண்ணிய ,சரியான மிக்சிங்கில் பாட்டிலில் ஊத்தி எடுத்து வரவும் , ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கு இதையே ஃபாலோவ் செய்திடலாம் ..நன்றி சகோ :-)) //

   இத கொள்ள பேரு ரொம்ப வருஷமா பாலோ பண்றாங்க.... இது உங்களுக்கு சிரிப்பா தெரியலாம்.. உங்கள் நட்பு வட்டாரம் அது போல்... ஆனால் குடி ஒரு மிகப்பெரிய சமூக அவலம் என்பதையாவது ஏற்றுக்கொள்வீர்களா???

   வருகைக்கு நன்றி...

   நீக்கு
 6. /15. தண்ணி அடித்துவிட்டு தயவு செய்து செல்லாதீர்கள். /// :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :)

   பின்ன எழுத்தாளர்கள்ல பாதி பேருக்கு மேல தண்ணி வண்டியதான் இருக்காங்க... தண்ணி அடிக்கிறவங்க சமூகத்த பத்தி பேசுறது வெட்கக் கேடு...

   நீக்கு
 7. //. அடுத்த சில நாட்களில் இலக்கிய பதிவா எழுதி எல்லோரையும் கொல்வோம்.... எவ்வளவு காலம் தான்
  இலக்கியவாதிகளே நம்மல கொல்றது....??? நாமும் பழி தீர்ப்போம்...// நீங்க இவ்வ்வளவு நாளா எங்கள எல்லாம் கொலையா கொல்றது பத்தாதா? இனிமேல் தானா?? ஹிஹிஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 8. // நீங்க இவ்வ்வளவு நாளா எங்கள எல்லாம் கொலையா கொல்றது பத்தாதா? இனிமேல் தானா?? //

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... பப்ளிக்.. பப்ளிக்..

  பதிலளிநீக்கு
 9. நல்ல உபயோகமான டிப்ஸ்கள்.நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
 10. சலாம் சகோ ,
  இன்று வலைச்சரத்தில் உங்களை பற்றி குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம்.நேரம் இருந்தால் வந்து பாருங்கள்
  http://blogintamil.blogspot.com/2013/01/2520.html

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters