வியாழன், ஜனவரி 31, 2013

இஸ்லாமிய அமைப்புகள் என்ன செய்ய வேண்டும்????



                                                           
                                                               

விஸ்வரூப பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து எங்கு சென்றாலும் இதை பற்றி தான் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கமல் இப்பொழுது தான் சரியான திசைக்கு வந்து இருக்கிறார்.... பேச்சுவார்த்தைக்கு தயார், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குகிறேன் என்று சொல்லி உள்ளார்.  இருப்பதிலே மிகச் சரியான முடிவு இது தான். காலம் தாழ்த்தி எடுத்து இருந்தாலும் சரியான முடிவு. அப்ரிசியேட் கமல்...

இதையே தான் நான் ஒரு வாரம் முன்பே என் பதிவின் கமெண்டுகளில் சொல்லி இருந்தேன். "இவர்கள் அனைவரும் உங்களை தூண்டுகிறார்கள்.. ஆனால் சிறந்த வழி "பெட்டர் கோ பார் பீஸ் டாக்""என்று...
பல களேபரங்களுக்கு பிறகு இன்று அது தான் நடந்துள்ளது.

ஓக்கே. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.

இன்று மாலை முஸ்லிம்களின் கூட்டமைப்பு தலைவர்களுடன், கமல் சார்பாக இயக்குனர் அமீர் பேச இருக்கிறார். அந்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

இந்த நிலையில்... தமிழகத்தின் மாபெரும் இஸ்லாமிய அமைப்பான ததஜ தலைவர் பி.ஜெய்னுலாபிதீன் இந்த பேச்சு வார்த்தையை வரவேற்று இருப்பது யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது.  இந்த படம் வெளிவருவதில் ததஜ வின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே, அண்ணன் பிஜே அவர்களின் அறிவிப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.

                                                      


இது குறித்து தட்ஸ் தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கை..

"சென்னை: விஸ்வரூபம் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க நடிகர் கமல் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். பிரச்சினையை வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளும். இந்த விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/31/tamilnadu-tamil-nadu-tauheed-jamaat-puts-new-168913.html  "

ஆனால்.. சில அரசியல் சித்து விளையாட்டுக்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய இயக்கமான ததமுக, அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி. சோ, அதன் மூலம் நிர்பந்தம் கொடுக்க யாரும் முனையலாம்.

இந்த சூழ்நிலையில், தமுமுக எடுக்க இருக்கும் நிலைப்பாடும் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது. ததஜ அறிவித்தது போல், 23 கூட்டமைப்பினர் எடுக்கும் முடிவிற்கு தமுமுக ஒத்துழைப்பு அளித்து பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதே பெரும்பாலான முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களின் எதிர்பார்ப்பு.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய தருணம் இது தான். அவரின் அறிவும், பொருமையும்  நிச்சயம் அவரை சரியான முடிவையே எடுக்க சொல்லும் என்று நம்புகிறோம்.

                                                             

அனைத்துக்கும் மேலாக... என்னுடைய இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு சொல்லிக் கொள்வது இது தான். நமது போராட்டம் அனைவரின் கவனத்திற்கும் சென்று விட்டது. இனி இது போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதை நிச்சயம் தவிர்ப்பார்கள். அந்த விதத்தில் இந்த போராட்டம் மாபெரும் வெற்றியே. கமலை நஷ்டம் அடைய வைப்பது நம் நோக்கம் அல்ல.... ஆகவே, இஸ்லாமிய கூட்டமைப்பினர் எடுக்கும் முடிவிற்கு விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கட்டுப்படுவோம். பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
  
 இறுதியாக கமலை ஆதரிக்கும் நண்பர்களுக்கு சும்மா "ஐ சப்போர்ட் கமல்" னு குதிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை. உண்மையிலே கமல சப்போர்ட் பண்றதா இருந்தா தயவுசெய்து இந்த படத்த திருட்டு விசிடில பார்க்காதீங்க. இந்த படம் தாமதம் ஆவதால் கமலுக்கு பெரிய நட்டம் வராது. தேவையான அளவு விளம்பரம் கிடைத்துவிட்டது. சோ, படம் வந்தாலும் நன்றாகவே ஓடும். ஆனால் மிகப் பெரிய பிரச்சனை திருட்டு விசிடி தான். சோ, அதை உங்களால் இயன்ற அளவு தடுத்து கமலுக்கு உதவுங்கள். அதான் உண்மையான சப்போர்ட்.

இதை ஏன் நான் சொல்றேன்னா... ஐ சப்போர்ட் கமல் னு சொன்ன ஒரு ஆளு, நேற்று என்னிடம் பேசும் போது திருட்டு விசிடி கிடைச்சா பார்ப்பேன், ஆர்வமா இருக்குன்னு சொன்னான். கேட்டதும் கடுப்பாயிடுச்சு... ஆர்வம் தாங்க முடியலையாம்... ஒரு வாரம் தள்ளி படம் பார்த்தா என்ன?? தலை வெடிச்சிடுமா??? இதுல சினிமாவ சினிமாவ பாருங்கன்னு அறிவுரை வேற சொன்னவன் அவன். அடப்பாவிங்களா?? நீங்க சினிமாவாவா பார்க்கிறீங்க?? வெறி பிடிச்சுல்ல பார்க்கிறீங்க....???

உங்க வாதப்படி...

எங்களுக்கு மதம் என்ற மதம் பிடிச்சு இருக்கு..

எங்கள் வாதப்படி உங்களுக்கு...

சினிமா என்ற மதம் பிடிச்சு இருக்கு....

ஹா..ஹா...ஹா. மொத்ததில பூரா பேருக்கும் எதாவது ஒரு மதம் பிடிச்சு தான் இருக்கு...

குறிப்பு : கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்கள்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................




33 கருத்துகள்:

  1. ஸலாம் சகோ.சிராஜ்,
    நல்ல இடுகை. தெளிவான கருத்துக்கள்.

    ஆக, இந்த பிரச்சினைக்கு மூல காரணமே கமல்தான். இன்று அவர் இஸ்லாமிய இயக்கத்தினருடன் சுமுகமாக இதை முடித்து வைக்க நாடினாலும், 'வேறு ஒரு இடத்தில்' அதிக விலை கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்..!

    அன்றே இதை பைசா செலவு இல்லாமல்... அவரே எப்போதோ இதை சுமுகமாக தீர்த்து இருந்திருக்கலாம், நம் மீது நல்லெண்ணம் மட்டும் இருந்திருந்தால்..!

    அன்று அவர் சொன்னவற்ற மறக்க முடியுமா..?

    கருத்து சுதந்திரம், கலை ஆர்வம், சமய நல்லிணக்கம், இஸ்லாமிய சகோதர பாசம் மண்ணாங்கட்டி மட்டை எல்லாம் மறந்து போய் ஈகோ தொலைந்து போய், இன்று வந்த இந்த சரியான எடிட்டிங் ஞானோதயம் அப்போதே கமலுக்கு வந்திருந்தால், எப்போதோ படம் ரிலீஸ் ஆகி இருந்திருக்கும்.

    நல்ல மரம் இல்லை என்றாலும்... ஒருவகையில் கமலுக்கு போதிமரம் ஜெ. எனவே, கமலின் மனமாற்றத்தை வரவேற்கும் நாம், அதற்கு உதவி செய்யும் நாம், அதற்கு காரணமான முதல்வர் ஜெ வுக்கும் நன்றி சொல்வோம்..! என்னமோ, சிலர் சிலரின் கையில் நறுக் என்று குட்டு பட்டால்தான் திருந்துவார்கள். நாம் அன்பாக சொன்னால் எல்லாம் புரியாது. மண்டையில் ஏறாது.

    அப்புறம், இனி ஒருமுறை ச்சீப் பப்ளிசிட்டி எதிர்பார்த்து எதிர்பார்த்து அதற்காகவே ஏதாவது ஒரு குழப்பத்தை ரிலீசுக்கு முன்னர் பரப்பி விட்டு தனது கடைச்சரக்கை விற்கும் நாலாந்தர வியாபாரியாக இல்லாமல், இனியாவது ஒரு பொறுப்புள்ள திரைப்பட கலைஞனாக ஆக முயற்சியாவது செய்யட்டும் கமல். அதுவே நாம் இனி அவரிடம் விரும்புவது..!

    பதிலளிநீக்கு
  2. விஜய நாம் 1000 கிண்டல் பண்ணாலும்..

    துப்பாக்கி பட சர்ச்சையில் ரொம்ப விவேகமா நடந்துகிட்டாங்க முருகதாஸ் மற்றும் சந்திரசேகர்...

    வருகைக்கும்.. அருமையான அலசலுக்கும் நன்றி சகோ சிட்டிசன்...

    பிரியா இருக்கைல கால் பண்ணுங்க... இன்னும் அதே நம்பர் தானா??

    பதிலளிநீக்கு
  3. எங்களுக்கு மதம் என்ற மதம் பிடிச்சு இருக்கு..

    Super

    பதிலளிநீக்கு
  4. good advice bro...!
    eppo yaaru thirttu vcd parkura...?
    eppo eallorum mobile'il parthuranka.....!
    Nam onrum panna mudiyathu!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்சல்..

      திருட்டு டிவிடினா எல்லா திருட்டு வழிகளும்னு அர்த்தம்...

      நீக்கு
  5. கமல் படத்தில் ஓமர் கோவையில் தங்கி இருந்தார்ன்னு சொல்லி இருக்காரு . அதற்க்கு கண்டனம் சொல்லியாச்சி ..............
    கோவை தியேட்டரில் 2 பொட்ரோல் குண்டுகள் கைப்பற்ற பட்டிருக்குன்னு அம்மா சொல்றாங்க என்ன பண்றது .......
    சிந்திக்கவே மாட்டீங்களா ...........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு சூழ்நிலை சொல்றேன்...

      நேற்று என் மனைவி மளிகை கடை சென்று இருக்கையில், அங்குள்ளவர்கள் பேசி இருக்கிறார்கள்...

      கடை பையன்-1 : "ஏன் படத்துக்கு எதிர்ப்பாம்???"
      பையன் -2 : "முஸ்லிம்கள தீவிரவாதியா காட்றாங்களாம், அதான் எதிர்க்கிறாங்க"
      பையன் -1 : "அவங்க தீவிரவாதி தானே?"

      ஹா..ஹா.... எப்படி பொது புத்திய உருவாக்கி வச்சு இருக்கீங்க பார்த்தீங்களா???
      உங்கள் அனைவரின் நேர்மைக்கும் நன்றி....

      ஊடகங்களும், சினிமாவும் எப்படி மக்கள் மனதில் வன்மத்தை விதைத்திருக்கிறது பார்த்தீங்களா??? இப்ப சொல்லுங்க உங்களோட எத்தனை முஸ்லிம்ஸ் பிரண்டு, எத்தனை பேரு கழுத்தை அல்லாஹ் அக்பர் சொல்லி அறுத்தது பார்த்து இருக்கீங்க???

      நீக்கு
    2. எங்கெங்கோ நடக்கிற காட்டி..... இங்கு உள்ளவர்கள் மனதை மாற்றி வைத்து இருக்கிறீர்கள்..

      ஆப்கான் முஸ்லிமை பற்றி படம் எடுத்தால் உங்களுக்கு என்ன என்று கேட்கும் அறிவிலிகளே...

      அந்த மளிக கடைக்காரன் சொன்னது "ஆப்கன் முஸ்லிம்கள் தீவிரவாதி தானே?" என்று அல்ல.... "முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் தானே" என்பது தான்... நடுநிலையாளர்கலே பாமரனுக்கு ஆப்கன் முஸ்லிம் மற்றும் இந்திய முஸ்லிம் கு வித்தியாசம் பார்க்க தெரியல.... அவன் முஸ்லிம்னு தான் பார்க்கிறான்...

      உங்களால் இதை மாற்ற முடியுமா??? வந்துட்டாங்க வியாக்கியானம் பேச...

      நீக்கு
    3. இல்லைங்க.. இஸ்லாமில் தீவிரவாதியே இல்லீங்க.. எல்லாம் அமெரிக்க சதி, யூத சதி, கோவையில் கிடைச்ச குண்டு கூட யூத சதி தான். எனக்குத் தெரியும். இஸ்லாமில் தீவிரவாதியே இல்லீங்க.. பொய், நம்ப மாட்டேன், அடக்கிறாங்க, குஜராத், அயோத்தி, மோடி, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், தீவிரவாதி இல்லீங்க, டேய் ! பாரதிராஜா உன் பெண்டாட்டி அப்புடி, டேய் கமல் உன் பெண் இப்புடி.. இல்லீங்க தீவிரவாதியே இல்லீங்க .. ரொம்ப குழம்பிட்டோங்க. எங்கடா என் சிக்கன் பிரியாணி ..! கட் சாட். டேக் ஓக்கே. நெக்ஸ்ட் ஸ்கிரிப்ட் ரெடி .. அவ்வ்வ்வ்

      நீக்கு
  6. ஆஹா.. நாஙக் பெட்ரோல் குண்டு வைங்கன்னு சொன்ன மாதிரி பேசுறீங்க??

    நீங்க சிந்திக்க மாட்டீங்களா???

    ஒரு படம், அதில் பிரசச்னை... ஒரு பிரிவினர் போராட்றாங்க.. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை???

    விருமாண்டிக்கு படத்துக்கு எதிர்ப்பு வரைல நாங்க இது மாதிரி கருத்து தெரிவிச்சமா?? ஐ சப்போர்ட் கமலஹாசன்னு குதிச்சமா?? இது அவங்களுக்கும் கமலுக்குமான பிரச்சனைனு ஒதுங்கி தானே இருந்தோம்???

    ஏன் இவ்ளோ வன்மம் அஞ்சா சிங்கம்???? முஸ்லிம்கள் என்றாலே எதிர்த்துத் தான் ஆக வேண்டுமா??? உங்கள் மனசாட்சி அதான் சொல்கிறதா???

    பதிலளிநீக்கு
  7. உங்களின் கருத்துக்கள் எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்று தான்...

    முஸ்லிம்கள் போராடக்கூடாது....

    அரசிடம் சென்று முறையிட்டு தடை வாங்கி இருக்கிறார்கள்.. இதில் எந்த சட்ட மீறலும் இல்லை.. இதற்கு ஏன் உங்களுக்கு இவ்வள்வு கோபம்..

    பதிலளிநீக்கு
  8. நான் சிந்திக்கவே மாட்டீர்களா என்று சொல்லி இருக்கிறேனே அதன் அர்த்தம் கூட புரியவில்லையா ..........?
    கோவையில் திரைஅரங்கில் 2 பெட்ரோல் குண்டு இருந்ததாக அம்மா சொல்வதை இங்கே மூளை உபயோகபடுத்தும் யாரும் நம்ப மாட்டார்கள் .
    இதில் ஒளிந்திருக்கும் நுனரசியலை புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு பயிற்சி கிடையாது . சிந்திக்கிற வேலையை யாரிடமோ ஒப்படைத்தால் இப்படிதான் . உங்களை எப்படி காட்ட வேண்டும் என்று அம்மையார் நினைத்தார்களோ அப்படி நீங்களே வகையாக சிக்கி கொண்டீர்கள் . குனிந்து கீழே பாருங்கள் நீங்கள் உட்கார்ந்துருப்பது ஆப்பு மேல .

    சண்டை அம்மாவிற்கும் கமலுக்கும் தான் உங்கள் பீஜே எல்லாம் கணக்கில் இல்லை நீ கூவுற மாதிரி கூவு நான் தடை விதிக்கிறேன் டீல் தான் இது . அவரை நம்பி போனதற்கு பெயர் கெட்டது கெட்டதுதான் .
    இப்போது தான் பொது புத்தியில் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று புரிய வைத்திருக்கிறீர்கள் விஸ்வரூபம் போல் 100 படம் வந்திருந்தாலும் செய்யமுடியாத அளப்பரிய வேலையை நீங்கள் நம்பிய தலைவர்கள் செய்துவிட்டார்கள் . இதை தான் மோடியின் தோழி அம்மாவும் விரும்பினார்கள்.

    போங்க பாஸ் அந்த ஆப்பை பிடுங்கி தூர போட்டுவிட்டு சமுதாயத்திற்கு நல்ல தலைவர்களை தேடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்டியா??? இருக்கட்டும்..அம்மா அரசியல் செய்வதாகவே இருக்கட்டும்..

      எங்கள் தலைவர்கள் ஒரு நல்ல விஷயத்திற்காகவே போராடினார்கள்... அது வரை எங்களுக்கு மகிழ்ச்சியே... இங்கு சாமானியர் யாரும் ரொம்ப் கவலைலாம் படல.. பதிவுலகம் பத்திரிகை உலகில் இருப்பவர்கள் தான் அவங்க அவங்க பரபரப்புக்கு இத ஊதிகிட்டே இருக்காங்க..

      விவசாயம் பண்ற சாமானியனுக்கு இது குறித்து எந்த அக்கரையும் இல்லை... ஒரு வாரம் கழிச்சு இதன் சுவடே தெரியாது...

      //இப்போது தான் பொது புத்தியில் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று புரிய வைத்திருக்கிறீர்கள் // ஹி..ஹி..நினைச்சிகிட்டே இருக்க வேண்டியது தான்...

      // நீ கூவுற மாதிரி கூவு நான் தடை விதிக்கிறேன் டீல் தான் இது //

      அப்ப இதெல்லாம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?? அப்ப ஐ சப்போர்ட் கமல் னு சொன்னவங்களுக்கும் அல்வா தானா???

      நீக்கு
    2. ///விவசாயம் பண்ற சாமானியனுக்கு இது குறித்து எந்த அக்கரையும் இல்லை... ஒரு வாரம் கழிச்சு இதன் சுவடே தெரியாது.../////

      ஆமா ஆமா ஒட்டல ஒட்டல அத நான் பார்க்கல பார்க்கல ..........

      நீக்கு
  9. ///விருமாண்டிக்கு படத்துக்கு எதிர்ப்பு வரைல//

    விருமாண்டி படம் ஷூட்டிங் நடக்கும் போதும் அம்மையார்தான் முதல்வர் . கிருஷ்ணசாமியை விட்டு எதிர்க்க வைத்தவர் படபிடிப்பிற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று சொன்னவர் .
    வேறு வழி இல்லாமல் ஸ்டூடியோவில் செட்டு போட்டு எடுத்தார்கள் . பழைய பகையடா பேராண்டி பழைய பகையடா ......
    //நடுநிலையாளர்கலே பாமரனுக்கு ஆப்கன் முஸ்லிம் மற்றும் இந்திய முஸ்லிம் கு வித்தியாசம் பார்க்க தெரியல.... அவன் முஸ்லிம்னு தான் பார்க்கிறான்.////
    இங்கே அப்துல்லாக்களுக்கும் சிராஜிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் யாரும் இல்லை .
    இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை அவர்களை போன்றவர்கள் வாழ்ந்துகாட்டி புரிய வைக்கிறார்கள் .
    உங்களை போன்று சிலர் சத்தம் போட்டு சண்டைக்கு கூப்பிட்டு நிருபிக்க பார்க்கிறீர்கள்.
    மனிதனையும் மத நம்பிக்கையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இந்தியனுக்கு அதிகம் . இல்லை என்றால் இது எப்போதோ பாக்கிஸ்தானை விட கேவலமான நிலைமைக்கு போயி இருக்கும் ........... தாவூத் பிறப்பால் இந்தியன் பாக்கிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கிறான் . அவனை இந்தியன் என்று பாக்கிஸ்தான் வெறுக்க வில்லை . எங்கே இந்த 23 அமைப்பும் சேர்ந்து ஒரு அறிக்கை குடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் தாவூதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று .
    முன்ன மாதிரி எல்லாம் இப்போ இல்லை பாஸ் எல்லா பய புள்ளைகளும் படிக்க ஆரம்பிச்சிட்டாங்க . பிள்ளை பிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எங்கே இந்த 23 அமைப்பும் சேர்ந்து ஒரு அறிக்கை குடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் தாவூதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று . //

      அறிக்கை கொடுத்தா நீங்க என்ன செய்வீங்க பாஸ்??? சொல்லுங்க.. வேலிடா இருந்தா அறிக்கை கொடுக்க வைக்கிறோம்...

      நீக்கு
    2. தமாஷ் பண்ணாதிங்க அஞ்சா சிங்கம். !!!
      //
      எங்கே இந்த 23 அமைப்பும் சேர்ந்து ஒரு அறிக்கை குடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் தாவூதை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று //

      அதெப்படி சொல்லுவாங்க, மொதல்ல இவங்க எல்லாம் முஸ்லிம், அப்புறம்தான் இந்தியன். ஒரு முஸ்லிம் எப்படி இன்னொரு முஸ்லிம காட்டி கொடுப்பார், அவன் தீவிரவாதியாவே இருந்தாலும் !!

      நீக்கு
    3. //அதெப்படி சொல்லுவாங்க, மொதல்ல இவங்க எல்லாம் முஸ்லிம், அப்புறம்தான் இந்தியன். ஒரு முஸ்லிம் எப்படி இன்னொரு முஸ்லிம காட்டி கொடுப்பார், அவன் தீவிரவாதியாவே இருந்தாலும் !!//

      அன்ஜாசிங்கம் காமெடி பன்றாருன்னு நீங்க செம காமெடி பண்றீங்க ! தாவூத் இப்ராகிமை வைத்து நீங்க என்னதான் பண்ணுவீங்க..பாருங்க இறந்து போன பால் தாக்கரே வே தாவூத் இப்ராகிமை கூப்பிட்டு விருந்து வைத்து அனுப்பி இருக்கிறார்..அப்ப அவங்களுக்கு நடுவுல உள்ள டீலிங்கை புரிஞ்சிக்கணும்...சும்மா எசப்பாட்டு பாடக்கூடாது.! :-))

      நீக்கு
    4. நாகூர் மீரான்.
      நீங்க என்ன சவுதியில் அரபி வீட்டில டிரைவராவா வேலை செய்யிறீங்க.
      உங்க மகனின் போட்டோ சூப்பர். பேரு என்ன?

      நீக்கு
    5. //நாகூர் மீரான்.
      நீங்க என்ன சவுதியில் அரபி வீட்டில டிரைவராவா வேலை செய்யிறீங்க. //

      ஏன்..நான் ஏதும் டிரைவிங் டிப்ஸ் தந்தனா..? துபாயில் டிரைவர் வேலை வாய்ப்புன்னு பதிவு போட்டனா..!! அதுமட்டுமல்லாமல் எந்த டிரைவரு இப்படி கமெண்ட் போட்டுக்கிட்டு இருப்பாரு..?? :-))

      நீக்கு
    6. கசாப் தூக்கில் போடப்பட்ட போது பல கண்டன குரல்கள் எழுந்தன (எனக்கு தெரிந்த விதி விலக்காக ஆதரவு தெரிவித்தவர் காஜா மைதீன். )
      ஆனால் இந்திய எல்லையில் இராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது இஸ்லாமியர்கள் மௌனம் சாதிப்பது ஏன்

      நீக்கு
    7. //ஏன்..நான் ஏதும் டிரைவிங் டிப்ஸ் தந்தனா..? துபாயில் டிரைவர் வேலை வாய்ப்புன்னு பதிவு போட்டனா..!! அதுமட்டுமல்லாமல் எந்த டிரைவரு இப்படி கமெண்ட் போட்டுக்கிட்டு இருப்பாரு..?? :-))

      // பாஸ். நீங்க யாரையோ அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு நீங்கள் அவமானப்பட்டதை
      கவனிக்கத்தவறீட்டீங்க. உங்களை ஓர் விடயத்தில் மிக மிக கேவலப்படுத்தியுள்ளேன்.
      உங்களுக்கு அது புரியவில்லை. அண்ணன் பிஜே இடம் கேளுங்கள் . விளக்குவார்.
      உங்களை கேவலப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன்.

      நீக்கு
    8. என்னை கேவலப்படுத்தி உள்ளீர்களா..? ஹி ..ஹி..மன்னிக்கவும் தங்கள் அளவுக்கு புரிந்து கொள்ளும் சக்தி என்னிடம் இல்லை என்று நினைக்கிறேன்..! ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ..எங்களை தவறாக சித்தரித்து கேவலப்படுத்த வேண்டும் என்று நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படத்தை முஸ்லிம்கள் மனது வைத்தால்தான் இங்கு திரை இட முடியும் என்ற நிலை வந்திருக்கிறது..அதற்க்கு முஸ்லிம்களின் பெருந்தன்மையை நம்பித்தான் கமலும் உள்ளார்..இதில் யாரை யார் கேவலப்படுத்தியது என்று பார்த்தீர்களா...???? மைக்கு கிடைத்தால் வெறும் வீச்சு மட்டும்தான் திரை உலகினரால் விடமுடியும்..ஸ்தம்பிக்க வைத்தது யார்..? தமிழகம் தவிரவும் மற்ற இடங்களிலும் தடைக்கு காரணம் யார்.?

      " இவர்கள் தீயென்று புரிகிறதா..? "

      நீக்கு
    9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  10. ஒருவன் தலித் என்று தெரிந்த பிறகு தான், சாதியப் பார்வைக்கு ஆளாகிறான்; ஆனால் முஸ்லிம் முதல் பார்வையிலேயே மன தீண்டாமைக்கு ஆளாக்கப்படுகிறான்.

    என் மீதான வெறுப்புப் பார்வைக்கு எனது புற அடையாளங்களையே தீவிரவாதி என சித்தரித்து தொடர்ச்சியாக பொது புத்திக்கு கல்வெட்டாய் பதிய வைத்த சினிமாவை கேள்வி கேட்கவும், அதற்கு எதிராக என் அடிப்படை உரிமையை நிலைநாட்டவும் எனக்கு மனிதன் என்ற முறையில் கூட உரிமையில்லையா?

    முஸ்லிம்களின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் நுனிப்புல் மேய்வதைப் போல மேய்ந்து விட்டு, " ஆமா.. இவனுங்களுக்கு வேற வேலயே இல்ல" என்று அலட்சியப்படுத்துபவனுக்கு தெரியுமா? என் சமூகத்தின் வலியும் வேதனையும்.

    இது வெறும் சினிமாவுக்கான போராட்டம் மட்டுமல்ல; ஒரு சமூக புறக்கணிப்பின் ஆழத்திலிருந்து பீறிட்டு எழும் மக்களின் சக்தி. இது என் மண். என் மண்ணிலேயே நான், என்னுடைய காலங்காலமாக பின்பற்றி வந்த புற அடையாளங்களோடு தனிமைப் படுத்தப்படுகிறேன். இது ஏன்? எப்படி விதைக்கப்பட்டது? என ஆராயும் போது, அதற்கு மிகப்பெரிய காரணமாக தெரிவது சினிமா.

    புத்தகம் கூட பாரிய விளைவுகளை உடனடியாக சிந்தனை ரீதியாக ஆக்கிரமித்து விடாது. புத்தகத்தை ஒரே நேரத்தில் ஊரில் உள்ள அனைத்து நூலகங்களிலும் ஒரே நேரத்தில் படிப்பது கிடையாது. புத்தகத்தின் தாக்கத்தை விட சினிமாவின் வீச்சு அதிகம். சினிமா ஒரே நேரத்தில் 500 தியேட்டர்களில் ஒவ்வொன்றிலும் சுமார் 300 மக்களை கட்டிப் போட்டாற்போல சிந்தனையில் காட்சி அறையப்படுகிறது.
    அதனால் சினிமா ஊடகத்தின் தாக்கம் சமூகத்தில் பல அடுக்குகளில் அலைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்த வல்லமைக்கொண்டது.

    நேற்று வரை என் உரிமைக்கும் சமூக அங்கீகாரத்திற்கும் வழிபாட்டு உரிமைக்கும் புற மத அடையாளத்திற்கும் பங்கமில்லாமல் வாழ்ந்து, இந்நாட்டில் சம உரிமைக்கும் சமத்துவத்திற்கு என் மார்க்கம் மூலம் மக்களை வென்று எடுத்து உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்த என்னைப் பார்த்து, நீ தீவிரவாதி என்றால் இது யாருடைய சூழ்ச்சி?

    "தவித்து அழும் பிள்ளை தாயைக் கண்டவுடன் தாவி அணைத்துக்கொள்ளுமே" அப்படி தமிழர்களை அணைத்துக்கொண்டது இஸ்லாம்- என்றார் அண்ணாதுரை.

    ஆமாம் என் முன்னோர்கள் தாவி அணைத்துக் கொண்டார்கள். அண்ணன் தம்பியாக மாமன் மச்சானாக முஸ்லிம்களும் இந்துக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பது வெறும் வாய் பேச்சு அல்ல. அண்ணன் இந்துவாக இருக்க, தம்பி முஸ்லிமானான். மாமன் இந்துவாக இருக்க மச்சான் முஸ்லிமானான். இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இருக்கும் ரத்த பந்தத்தையும் பாசப்பிணைப்பையும் சொல்கிறது.

    தமிழ் நாட்டில் ஒரு இனம் சுய அடையாளத்தைக் காக்க போராடுகிறது . மத அடையாளங்களோடு தவறாக சித்தரிக்கப்படும் தங்களை காத்துக் கொள்ள வீதிக்கு வந்து உரக்க கத்துகிறது. காதில் வாங்காமல் போனாலும் பரவாயில்லை; கொச்சைப் படுத்தாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்கு மாலிக் என்ற பதிவர் பதில் ஒன்று போட்டிருக்கின்றார். (நீங்கள் படித்திருக்க மாட்டர்கள் என்று நினைக்கின்றேன்) பகிர்கின்றேன்.
    http://vilambi.blogspot.com/2013/01/blog-post.html

    சிராஜ் எனும் பதிவர் கவனிக்க:

    பாரதிராஜா மன்னிப்புக் கேட்டால், பிஜேயும் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாக பிஜே "பெருந்தன்மையுடன்" சொல்லியிருப்பதாக சொல்லியுள்ளீர்கள். நன்று. நீங்கள் பிஜேயை ஒரு சிறந்த மார்க்க அறிஞர் என்று சொன்னதற்காக, உங்களை பிஜே பானியிலேயே உங்கள் வீட்டுப் பெண்களை நான் விமர்சிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நான் பின்வருமாறு கூறுகிறேன்: நீங்கள் உங்களது கருத்திற்கு, அதாவது "பிஜே ஒரு சிறந்த மார்க்க அறிஞர்" என்று நீங்கள் சொன்ன கருத்திற்கு மன்னிப்புக்கேட்டால், நானும் மன்னிப்புக் கேட்பேன். இப்படி சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் பெருந்தன்மையானவனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அறிவு கொழுந்துகளே !!.. பாரதிராஜா என்பவர் படத்தை எதிர்ப்பதால் நீங்கள் தீவிரவாதி என்று ஒதுக்கொள்கிரீகளா ? என முழு முஸ்லிம்களையும் தீவிரவாதியாக தாக்கி பேசினார்..! அதுக்கு தான் பிஜே..தினமலரை அவனுடைய குடும்பத்தையே தாக்கி அசிங்கமாக பேசினீர்களே..அப்படி என்றால் நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்களா..? என்று..!!

      இங்கு மாலிக் என்பவர் சிராஜை பேச என்ன வேண்டி கிடக்கிறது..சிராஜ் மாலிக்கை பற்றி எதுவும் பேசினாரா..? அப்போதுதானே பேச முடியும்..! தவிர சிராஜ் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்..

      இப்படி ஒரு சொத்தை வாதத்தை ஒரு சொத்தையால்தான் வைக்க முடியும்..அதையும் காப்பி பேஸ்ட் பண்ணி இருக்கிறீரே..!!!! உங்களை நாம் என்னனு சொல்ல..!!! :-)))

      நீக்கு
    2. நான் அந்த பதிவை படிக்கவில்லை.. தெரியபடுத்தியமைக்கு நன்றி Ethecalist.

      நாகூர் மீரான்...

      தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதை நிரூபிக்கிறீர்கள்... நன்றி...பிளாக் பக்கமே வரல.. இப்ப தான் எட்டி பார்க்கிறேன்.. நீஙக்ளே பதில் கொடுத்துவிட்டீர்கள்...

      நீக்கு
  12. // நீங்கள் பிஜேயை ஒரு சிறந்த மார்க்க அறிஞர் என்று சொன்னதற்காக, உங்களை பிஜே பானியிலேயே உங்கள் வீட்டுப் பெண்களை நான் விமர்சிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பிறகு நான் பின்வருமாறு கூறுகிறேன்: //

    மாலிக் பாய் உங்களுக்கு ரெஸ்ட் தேவை படுதுன்னு நினைக்கிறேன்...

    அண்ணன் பிஜேவை மார்க்க அறிஞர்னு சொன்னா நீங்க எப்படி என்னை திட்ட முடியும்...??? பாரதிராஜாவின் கேள்விக்கு லாஜிகலா ஒரு கேள்வி கேட்டார்... அந்த கேள்விக்கு எந்த கொம்பனும் பதில் சொல்ல முடியாது.. என்ன, கொஞ்சம் வார்தையை அதிகமா விட்டுட்டார்.. அதால அந்த பாயிண்ட விட்டுட்டு அவர் வார்தைய பிடிச்சிகிட்டாங்க...

    சரி விடுங்க நான் நிதானமா அந்த கேள்விய கேட்கிறேன்.. லாஜிகலா பதில் சொல்லுங்க.

    தீவிரவாதிகள் பற்றிய படத்தை எதிர்த்து நீங்களும் தீவிரவாதிகள் என்று காட்டிக்கொள்ளாதீர்கள்... இது தான் பாரதிராஜா சொன்னது...

    தீவிரவாதிகளை பற்றிய படத்தை எதிர்ப்பவன் தீவிரவாதி என்றால்.. குமுதத்தில் வந்த நடிகையின் கதையை... அவளின் அந்தரங்கங்களை எழுதியதை நீங்கள் எதிர்த்தீர்களே?? அப்ப நீங்க விபச்சாரம் செய்பவர் என்று எடுத்துக்கொள்ளலாமா??

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இதான் அண்ணே பிஜே கேட்டது.. நடுநிலையாளர்கள் அனைவரும் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்... பாரதிராஜா சொன்னதை வைத்து பார்த்தால் பீஜே கேட்டதும் செம கேள்வி தானே?? பாரதி ராஜா பதில் தருவாரா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபாஷ்... சகோ.சிராஜ்...பதிலடி இப்படிதான் அமைய வேண்டும்..! இனி இதுபோன்ற கேள்விகளை கேட்பதற்கு தயங்குவார்கள்..!!!

      தவிர மாலிக் என்பவர் ஷியா கொள்கை ! ..அதன் பித்அத்களை பிஜே துவம்சம் செய்வதால் அவர் மேல் காழ்ப்புணர்வு ..! இதில் ஆச்சர்யம் இல்லைதானே.! ஆனால் கொஸ்டின் பண்ணும்போது பார்த்து பண்ண வேண்டும்..இனி விளங்கி கொள்வார் என்று நம்புவோம்...ஹி.ஹி..!

      நீக்கு
    2. திம்புக்டுவில் சுபி வரலாற்று சின்னங்கள் உடைக்கப்பட்டத்துக்கு பிச்சேவின் கருத்து என்ன ..

      நீக்கு
  13. இஸ்லாமிய கூட்டமைப்பினர் வேண்டுகோளுக்கு இணங்க, சர்ச்சைக்குரிய ஏழு காட்சிகளை நீக்கியும் சில இடங்களில் ஒலிக்குறிப்பை மியூட் பண்ணியும் படத்தை எடிட் பண்ணி வெளியிட கமல் நல்ல மனதுடன் தாமதமாக எனினும் இப்போதாவது ஒப்புதல் தந்தது குறித்து இக்பால் செல்வன்கள் பலத்த அதிருப்தியில் கடும் கோபத்தில் நிலை இழந்து தவிப்பது அவர்களின் எழுத்துக்களில் இருந்து நன்கு புலனாகிறது..!

    என்ன செய்ய..? சில சமயம் முஸ்லிம்கள் சார்பாகவும் இதுபோல நீதி வெல்லும்..! தங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters