திங்கள், ஜனவரி 07, 2013

அரசு பொருட்காட்சியா??? கொள்ளையர்களின் கூடாரமா???

ஜனவரி மாதம் என்றாலே சென்னைவாசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!!! குதூகலம் தான்!!!! காரணம், ஒவ்வொரு வருடமும் இந்த மாதம் நடைபெறும் புத்தக கண்காட்சி மற்றும் பொருட்காட்சி... ஒன்று அறிவுக்கு தீனி போடும் மற்றொன்று நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களின் குழந்தைகளை மகிழ்விக்கும்.

இந்த வருடமும் இந்த வழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால்...ஆனால்...ஆனால்...

நேற்று ஞாயிற்றுகிழமை... மண்ணடிக்கு புர்கா வாங்கலாம் என்று குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்புகையில், பொருட்காட்சி கண்ணில் பட்டது... பார்த்ததும் நேராக மெரினா பீச் சென்றுவிட்டு வீடு திரும்பும் திட்டத்தை கை விட்டு, காரை பொருட்காட்சி திடலுக்குள் செலுத்தினேன். கார் பார்க்கிங்கோ, என்ட்ரன்ஸ் பீஸ்ஸோ எதுவும் வாங்கவில்லை... (வேலை முழுமையடையாததால் நுழைவுக்கட்டணம் வசூலிக்கவில்லை என்பது அப்போது எனக்கு தெரியாது) அரசு நடத்தும்  பொருட்காட்சியாச்சே அதனால் தான் இந்த சலுகை, நம் பர்ஸ்க்கும் பாதுகாப்பு என்ற மனநிம்மதியோடு உள்ளே நுழைந்தேன்... உள்ளே சென்றதும் தான் தெரிந்தது என் எண்ணம் எவ்வளவு தவறானது என்று.... வச்சாய்ங்க பாருங்க ஆப்பு...

ஒவ்வொரு ரைட்டிற்கும்(இராட்டிணம்) ஒரு நபருக்கு  கூசாமல் 40 ரூபாய் வாங்குகிறார்கள். பத்து ரைடில் ஏறினால் 400 ரூபாய் வந்துவிடும்... அம்மாடி!!!!!!   இவர்களுக்கு தனியார் நடத்தும் தீம் பார்க் எவ்வளவோ பரவாயில்லை...அங்கு 400 ரூபாய் நுழைவுகட்டணத்திலே  அவன் வைத்திருக்கும் 50க்கும் மேற்பட்ட ரைட்ஸில் இலவசமாக பயணிக்கலாம்... ஆனால் இங்கே அரசு சார்பில் நடக்கும் பொருட்காட்சியில் ஒவ்வொன்றுக்கும் ஒரு நபரிடம் 40 வசூலித்தால்........... 10 ரைடிலே 400 ரூபாய் போய் விடும்....அடேங்கப்பா அதிகாரப்பூர்வ கொள்ளை அல்லவா நடந்து கொண்டு இருக்கிறது????? 

அதன் பின் சாப்பாடு பக்கம் பார்வை செல்ல, அங்கேனும் நியாயமாக வியாபாரம் நடக்கும் என நினைத்தால் என் எண்ணத்திற்கு 144 தடா...  ஆம் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு போன உணர்வு... சாதாரணமாக வெளியே 10 ரூபாய்க்கு விற்கும் பாம்பே அப்பளம் இங்கே 30 ரூபாய்! 8 ரூபாய்க்கு வெளியே விற்கும் கரும்பு ஜூஸ் 20 ரூபாய்...   இது போல் தான் அனைத்து உணவுப்பொருட்களும் 3 மடங்கு  அதிகமாக மக்களிடம் வசூலிக்கிறார்கள்...

அய்யா கணவான்களே... அரசு நடத்தும் பொருட்காட்சி, குறைந்த செலவில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று தான் அங்கு மக்கள் வருகிறார்கள்... இப்படி பகல் கொள்ளை அடிக்கிறார்களே??
இது எந்த அதிகாரிக்கும் தெரியாதா??  அல்லது தெரிந்தே அனுமதிக்கிறீர்களா கமிஷன் வந்தால் போதும் என்று???

இந்த பணமெல்லாம் அரசுக்கு செல்லும் என்றாலும் ஓரளவுக்கு திருப்தியடையலாம். ஆனால் நடத்துவது மட்டுமே அரசு... ஸ்டால்களும் , ரைட்களும் கான்ட்ராக்ட் மூலம் நடத்தப்படுகிறது என்றே தெரிகிறது!  நம்மிடம் அடிக்கும் கொள்ளை லாபம் முழுக்க முழுக்க  கான்ட்ராக்டர்கள் வசமே போகிறது...  போன வருடம் 14 லட்சம் மக்கள் போனதாகவும், இந்த வருடம் 20 லட்சம் மக்கள் வர வாய்ப்புண்டு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.  இனி வரும் நாட்களில் ஒரு நபருக்கு 15 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும் நுழைவுகட்டணம் மட்டுமே அரசுக்கு சேரும்!  மற்றபடி ஒவ்வொரு ரைடுக்கும், உணவுக்கும் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் பணம் அனைத்தும் காண்டிராக்டர்கள் மடியிலே தான் விழும். கணக்கிட்டுக்கொள்ளுங்கள் அப்ப 20 லட்சம் பேருக்கு  எவ்வளவு கொள்ளை அடிப்பார்கள் என்று ,

தல சுத்துதுடா சாமி.........

இதைவிட, பேசாமல் அரசே பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணத்தை அதிக படுத்தி... ஒவ்வொரு கடைக்கும் இவ்வளவுக்கு தான் விற்க வேண்டும் என்று விலை நிர்ணயித்துவிடலாம்...

ஓரளவு நல்ல சம்பளம் வாங்கும் எனக்கே செலவழிக்க மனசு தயங்கியது என்றால்.. ஏழை, எளியவர்கள் நிலை???????


பொருட்காட்சிக்கு வரும் அனைவரும் கோடிகளில் புரல்பவர்கள் அல்ல... நடுத்தர மக்களும் , ஏழை மக்களுமே அதிகம்!  ஏன் இப்படி பொதுமக்களை முட்டாளாக்க வேண்டும்? பொருட்காட்சி என்ற பெயருக்கு பதிலாக தமிழக அரசியின் அதிகாரபூர்வ கொள்ளையடிக்கும் காட்சி என பெயரை வைக்கலாம்!

தமிழக  அரசு ஏழை, எளிய மக்கள் மீது இரக்கம் கொண்டு,  முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் விலை நிர்ணயித்து நடத்தினால் மட்டுமே இது பொருட்காட்சியாக இருக்கும். இல்லையேல் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் மக்களின் பணத்தை காண்டிராட்கடர்கள் அநியாயமாய் திருட அரசே பாதையை  ஏற்படுத்திக் கொடுத்ததாகிவிடும்!

கவனிக்குமா அரசு?????????

குறிப்பு : பொருட்காட்சி மொத்தம் 2 1/2 மாதங்கள் நடைபெறும்...  ஒரு சில கடைகளே இப்பொழுது இருக்கின்றன. மற்ற அரங்குகளுக்கு இப்பொழுது தான் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. சோ, இப்ப யாரும் போகாதீங்க. ஜனவரி கடைசியில் போங்க. அப்பொழுது தான் எல்லா கடைகளும் வந்து இருக்கும்.


24 கருத்துகள்:

 1. சிராஜ்,


  என்னமோ போங்க ,உங்க பதிவை படிச்ச ஒரு ஃபீலிங்க்ஸே வரலை...ஹி...ஹி...பொருட்காட்சிக்கு போறவங்க "மது அருந்திவிட்டு" போகாதீங்கன்னு ஒரு வரி விட்டுப்போச்சு :-))

  #காண்ட்ராக்ட் விட்டுட்டாங்களே அந்த பணம் அரசுக்கு வருமானம் தானே, எனவே விலையைப்பற்றி கேட்க முடியாது.

  #// ஒரு சில கடைகளே இப்பொழுது இருக்கின்றன. மற்ற அரங்குகளுக்கு இப்பொழுது தான் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. சோ, இப்ப யாரும் போகாதீங்க. ஜனவரி கடைசியில் போங்க. அப்பொழுது தான் எல்லா கடைகளும் வந்து இருக்கும்.
  //


  என்னாது, கொள்ளை அடிக்குறாங்கன்னு சொல்லிட்டு இப்படியும் சொல்லுறிங்க, சொல்லுறத பார்த்தா இப்போ கொஞ்சம் கொள்ளைக்காரங்க தான் வந்திருக்காங்க, எல்லாரும் வந்த பிறகு போயி மாட்டிக்கோங்கன்னு சொல்லுறாமாரி இருக்கே ....அவ்வ்வ் :-))

  #//பொருட்காட்சிக்கு வரும் அனைவரும் கோடிகளில் புரல்பவர்கள் அல்ல... நடுத்தர மக்களும் , ஏழை மக்களுமே அதிகம்!//

  நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசுன்னு நினைக்கிறேன், தமிழ்நாட்டில் ஏழைகளே இல்லை , 3 மணிநேரம் டிடிஎச் இல் படம் பார்க்க 1000 ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கும் செல்வந்தர்கள் கொண்ட மாநிலம் ,தமிழ்நாடு, :-))

  செல்வசெழிப்போடு இருக்கும் தமிழ்நாட்டில் ஏழைகள் இருப்பதாக சொல்லி தமிழ்நாட்டை கேவலப்படுத்தியதை மானாவாரியாக கண்டிக்கிறேன்!!!

  # மண்ணடியில சைக்கிள் ஓட்டுறதே சர்க்கஸ் செய்யிறாப்போல இருக்கும், நீங்க காரையே ஓட்டிட்டு வந்திருக்கிங்க பெரிய திறமைசாலி தான் :-))

  ஹி...ஹி அங்க ஒரு கடையில் தந்தூரி சிக்கன் மலிவா கிடைக்கும்னு போறதுண்டு :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ வவ்வால்....

   //என்னமோ போங்க ,உங்க பதிவை படிச்ச ஒரு ஃபீலிங்க்ஸே வரலை.. //

   ஆனா.. எனக்கு உங்க பின்னூட்டம் படிச்ச பீலிங் கிடைச்சிடுச்சு.... ஹா.ஹா..ஹா

   // பொருட்காட்சிக்கு போறவங்க "மது அருந்திவிட்டு" போகாதீங்கன்னு ஒரு வரி விட்டுப்போச்சு :-)) //

   அது டீபால்ட் தானே?? ஒவ்வொரு தடவையும் சொல்லணுமா என்ன?? :) :-))

   //காண்ட்ராக்ட் விட்டுட்டாங்களே அந்த பணம் அரசுக்கு வருமானம் தானே, எனவே விலையைப்பற்றி கேட்க முடியாது.//

   விவரம் தெரிஞ்சவங்களே இப்படி சொல்லலாமா??? அரசுக்கு அவனுக எவ்வளவு கொடுத்து இருக்க போறாங்க?? அந்த பணத்த ஒரே நாள்ல எடுத்திடுவானுக. அரசு நடத்தும் ஒரு பொருட்காட்சில விலை குறைவா பார்த்துக்கிறதும் அரசின் கடமை இல்லையா??? கெட்ட பெயர் அரசுக்கு தானே வரும்???

   தொடர்கிறேன்...

   நீக்கு
  2. // காண்ட்ராக்ட் விட்டுட்டாங்களே அந்த பணம் அரசுக்கு வருமானம் தானே, எனவே விலையைப்பற்றி கேட்க முடியாது. //

   அதான் இல்லை.. கொள்ளை அடிக்கிறவன்லாம் முதல் நாளே ஆஜர் ஆகிட்டானுக.... இனி வர இருப்பது அரசு அமைக்கும் அரங்குகளும், விற்பனை கடைகளும் தான்.. விற்பனை கடை விலை பற்றி அக்கரை இல்லை..அது பிடித்தால் வாங்குவார்கள் இல்லாவிட்டால் விட்டுவிடுவார்கள்..ஆனால் உணவும், இராட்டிணங்களும் அத்தியாவசியம் அல்லவா?? பிள்ளைகளை ஏமாற்ற முடியாதே??

   நீக்கு
  3. //
   # மண்ணடியில சைக்கிள் ஓட்டுறதே சர்க்கஸ் செய்யிறாப்போல இருக்கும், நீங்க காரையே ஓட்டிட்டு வந்திருக்கிங்க பெரிய திறமைசாலி தான் :-))//

   அத ஏன் கேட்கிறீங்க..?? அங்கப்பநாயக்கன் தெருல கார்ல போகைல எதிர்த்தாப்ல ஒரு கார் வந்திடுச்சு.... என் கார் அதில் போகாது.. வெளில இருக்கன் ஒருத்தன் போகும்னு அடம் பிடிச்சு அலுச்சாட்டியம் பண்ணிட்டான்... இனி மண்ணடிக்கு கார்ல போறதே இல்லைனு முடிவு பண்ணிட்டேன்...

   அது சரி... பொஸ்தக கண்காட்சிக்கு வருவீங்களா???? சந்திப்பமா?????

   நீக்கு
 2. சலாம் சகோ,

  //அங்கு 400 ரூபாய் நுழைவுகட்டணத்திலே அவன் வைத்திருக்கும் 50க்கும் மேற்பட்ட ரைட்ஸில் இலவசமாக பயணிக்கலாம்... //

  சரியா சொன்னிங்க.....

  சரி உங்களுக்கு எவளோ செலவாச்சுன்னு சொல்லவே இல்லையே .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம்,

   நமக்கு ஒரு 500 ரூபாயோட போயிடுச்சு... பட் எல்லாருக்கும் சாத்தியம் இல்லைல?? அதான் கடுப்புல போஸ்ட் போட்டேன்... நல்லா நொட்ரானுக....

   நீக்கு
 3. ஞாயிற்று கிழமைகள்ள வெளியில போனோமா, ஒரு டீயை சாப்டோமா, ரொம்ப பசியா இருந்தா ஒரு வடை, பஜ்ஜிய சாப்டோமா அப்படின்னு திருச்சி (திரும்பி) வந்துடனும், அத உட்டுபுட்டு டெல்லி அப்பளம்லாம் உங்கள யார் சாப்புட சொன்னது. :) ஹா ஹா

  அரசாங்கம் கவனிக்குமா?

  ஜலீலாக்கா கடைக்கு போகாமா மன்னடிக்கு புர்கா வாங்க போனதை வன்ன்ன்ன்ன்மையாக கண்ணடிகிறேன் (ஸ்பெல்லிங் கரீட்டு தான்) :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஜலீலாக்கா கடைக்கு போகாமா மன்னடிக்கு புர்கா வாங்க போனதை வன்ன்ன்ன்ன்மையாக கண்ணடிகிறேன் (ஸ்பெல்லிங் கரீட்டு தான்) :)
   //

   அதானே... நானும் மிகமிகமிகமிக வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையா கண்டிச்சுக்குடுதேன்!!! இதனை தட்டிகேட்க பானு டீக்கடைக்கு வரும் படி கேட்டுக்கொள்கிறேன் ...


   இப்பவே ஜலிலாக்காக்கு மெயில் அடிக்கிறேன்! :-)

   (காலைல இருந்து எப்படிடா மடக்கலாம்னு யோசிச்சுட்டிருந்த எனக்கு வழியை காமிச்சு கொடுத்ததுக்கு நன்றி சகோ அபுநிஹான்!!)

   நீக்கு
  2. சலாம் சகோ ஹாஜா...

   அரசாங்கம் கவனிக்கணும்னு தான் பதிவு போட்டு இருக்கேன்.. பார்ப்போம்..

   இனி போக மாட்டேனே.... டென்ஷன் ஏத்துறானுக...

   நீக்கு
  3. ////ஜலீலாக்கா கடைக்கு போகாமா மன்னடிக்கு புர்கா வாங்க போனதை வன்ன்ன்ன்ன்மையாக கண்ணடிகிறேன் (ஸ்பெல்லிங் கரீட்டு தான்) :)
   //

   ஆஹா.. அதான் கோபத்தில ஜலீலா அக்கா இன்னும் ஓட்டு போடலையா??? ஹா..ஹா.. ஹா... அக்கா உங்க கடை எங்க இருக்கு????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
  4. // இதனை தட்டிகேட்க பானு டீக்கடைக்கு வரும் படி கேட்டுக்கொள்கிறேன் ... //

   பானுவா?? யார் அது??

   நீக்கு
 4. ஹா..ஹா...அரசு பொருட்காட்சிக்கு சென்று பர்ஸ் காலியாகிடுச்சா...

  உங்கள் கோரிக்கை சம்பந்தப்பட்டவர்களை சென்றடையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி பதிவுலக வஹ்ஹாபிகளின் தலைவர் அவர்களே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
 5. ///தெரிந்தே அனுமதிக்கிறீர்களா கமிஷன் வந்தால் போதும் என்று???///------------இதான் மேட்டர் என்று புரிந்து விட்டாதல்லவா..?
  அப்புறம் என்னத்துக்கு பதிவு..?

  விழுப்புரம்-தஞ்சை அகல ரயில் பாதை போடும்போது கேன்சல் ஆன மூனு சென்னை-தஞ்சை ரயிலுக்கு பதிலா சுமார் நூறு ஆம்னி பஸ்ஸுக்கு பர்மிட் தருவதற்கு பதிலா அரசே பஸ் விட்டிருக்கலாம். சரி... ஓகே. காரணம் புரிஞ்சிருக்கும்.

  இப்போ... தஞ்சை-சென்னை அகல் ரயில் பாதை முடிஞ்சுருச்சு..! அந்த நூறு ஆம்னிகளும் கேன்சல் ஆகி இருக்கணுமே..? இல்லை.

  அந்த மூணு ரயிலையும் அப்புறம், இன்னும் புதுசா விடபோறதா சொன்ன மேலும் மூனு எக்ஸ்பிரஸ் ரயில் எல்லாம் விட்டிருக்கணுமே..? விடலை..! ஹி...ஹி....ஹி..... சரி... ஓகே. காரணம் புரிஞ்சிருக்கும்.

  அடப்போங்க சகோ.சிராஜ்..! ஏதோ புது பாரின் ரிட்டர்ன் மாதிரி புலம்பறீங்க..! தங்கள் மீது சலாம் உண்டாகட்டுமாக..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட.. நமக்கு எல்லாம் தான் புரியுது?? அதுக்காக பதிவெழுதாம இருக்க முடியுமா???
   மக்கள் பணி செய்வது நம் வேலை...

   நீக்கு
 6. நம்ம சகோ.சிராஜ் ஐம்பது வருசமா மண்ணுக்கடில தம்கட்டி யாகம் பண்ணிட்டு நேத்துதான் வெளில் வந்துருக்கார் போல :-)) அதுவும் பாருங்க மறுபடியும் மண்ணடி போயிருக்காரு...இப்பெல்லாம் திருடனுங்க கன்னத்துல மரு வச்சிக்கிட்டு, கழுத்துல கர்சிப் கட்டிக்கிட்டு, கட்டம் போட்ட லுங்கி உடுதிருப்பாங்கன்னு நெனச்சிட்டீங்களா..?? கவர்ன்மெண்ட்ல டெண்டர் எடுக்குறாங்க..! காலேஜ் ,ஸ்கூல் வச்சிருக்காங்க..! கட்சியெல்லாம் ஆரம்பிசிருக்குறாங்கபா.. !!! அப்ப கடை வச்சிருக்க மாட்டாங்களா..???

  தவிர நீங்க அங்க போயிதான் ஸ்நேக்ஸ், ஜூஸ் எல்லாம் சாப்புடுவீன்களோ..? நாங்கெல்லாம் யாரு ...வீட்ல இருந்தே சொம்புல தண்ணி கொண்டு போயிருவோமே..! (அட குடிக்கிறதுக்கு தாம்பா :-))

  பட்டாசு வெடிக்க முடியாதப்போ வேடிக்க பார்க்குறதுதான் ஜீனியஸ் !!! :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாஸ்தவமான பேச்சு...
   பொதுவா நான் பிளானோட தான் போவேன்.. தண்ணீர் , ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கிகிட்டு....

   ஆனா பாருங்க இராட்டிணத்த வெளில இருந்து தூக்கிகிட்டு போக முடியாது.. அதான் கொஞ்சம் செலவழிக்கிற மாதிரி ஆயிடுச்சு... ஹி.ஹி...ஹி

   வருகைக்கும், நக்கலுக்கும் நன்றி சகோ... உங்களைலாம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு?? பிளாக் ஆரம்பிக்கிறது என்ன ஆச்சு?? எனி ஹெல்ப்???

   நீக்கு
 7. மற்ற இடங்களில் கொள்ளை என்றால் மக்கள் சகிக்கலாம் அரசு பொருட்காட்சியிலுமா ? நடுத்தர மக்கள் எங்கு தான் செல்வது யோசிப்பார்களா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதாங்க என் வருத்தமே... சாப்பிங் மால்ல கொள்ளை அடிக்கிறானுக.. அது ஓக்கே... தெரிஞ்சே தான் போறோம்.. பட் இங்க?? அரசு நடத்துவது, மலிவா இருக்கும்ணு தான் நிறைய பேர் போவாங்க.. அங்கயும் கொள்ளை அடிச்சா?? என்ன தான் பண்ண முடியும்....

   வருகைக்கு நன்றி...

   நீக்கு
 8. ஆமினா... அப்போ இது உங்க பதிவு இல்லையா...?:)....அடிக்கடி உங்க பதிவுகளை இங்க பார்த்த எஃபக்ட்டு

  பொருட்காட்சின்னாலே கொஞ்சம் செலவு கையைக் கடிக்கும் என்பது உண்மைதா..... ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விலை ஒப்பீடுகளைப் பார்த்தால் ரொம்ப மோசமால்ல இருக்கு... என்னை மாதிரி ராட்டினம் ஏறினால் தலை சுத்தும் நிலை ஏற்படுறவங்க இது மாதிரி பொருட்காட்சிகளுக்குப் போகலாம்.

  //அக்கா உங்க கடை எங்க இருக்கு????? /// சென்னையிலேருந்து கேரளாவுக்கு டூர் போகத் தெரியுது.... அதே சென்னையில இருக்கிற உங்க கடை அட்ரஸ் தெரிய்லாம்க்கா...... உங்க ப்ளாக்கில் அவ்ளவு பெரிய பேனர் வச்சும் சிலர் மண்ணடிக்கு போறாங்க...அது எப்படி போகலாம்னு கேளுங்கக்கா........

  பானுவா?? யார் அது??= என்னாச்சு..என்னாச்ச்சு...
  என்னாச்சு..என்னாச்ச்சு... = middle oblangataவில் கல்லடி படுவது
  பானுவா?? யார் அது?? = அடிக்கடி middle oblangataவில் குட்டு வாங்குவது. ஆகையினால் இனிமேல் சிராஜைக் குட்டுபவர்கள் அவர்து உச்சந்தலையில் குட்டும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆமினா... அப்போ இது உங்க பதிவு இல்லையா...?:)..//

   உவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே...... இந்த மாதிரி மொக்க பதிவுலாம் நமக்கு எழுத வராது பானு!!! :-)

   //மாதிரி ராட்டினம் ஏறினால் தலை சுத்தும் நிலை ஏற்படுறவங்க இது மாதிரி பொருட்காட்சிகளுக்குப் போகலாம்.//
   சிராஜ் மாதிரி பர்ஸ் வெளீயே எடுக்க அழுகும் ஆட்களும் போகலாம் ( பேமிலியோட போயியும் 500 தான் செலவாச்சாம்.... பாவம் மிஸஸ் சிராஜ் மற்றும் குழந்தைகள்)

   //அதே சென்னையில இருக்கிற உங்க கடை அட்ரஸ் தெரிய்லாம்க்கா.//
   அதானே....ட்ரிபிள்கேன்ல இருக்குற சென்னை ப்ளாசா போறதுக்கு ரூட்லாம் கேட்டிருக்கேன்... அட்ரஸ் தெரியலையாம்ல.... நல்லா கேளுங்க ஜலீலா அக்கா!! விடாதீங்க :-) நீங்க போடுற போடுக்கு ஹுசைனம்மா சமையல் பதிவு போட்ட மாதிரி சிராஜ் இந்த வாரம் உங்க கடைக்கு வரணும்... :-)

   நீக்கு
 9. ஆமா புர்கா என்றாலே அதுவும் சென்னை என்றால் எங்க கடை ஞாபகம் தானே வரனும
  அது எப்படி மண்ணடிக்கு போவீங்க
  http://samaiyalattakaasam.blogspot.com/p/blog-page_7685.html

  எத்தனை தடவை தொண்டை கிழிய கத்தி அழைத்து இருக்கேன்

  என்ன கடை அட்ரஸ் தெரியாதா? (கிருஷ்ணாம்பேட்டையில் தான் முன்பு இருந்தேன், என் கோபத்த கிளறிடாதீங்க ஓ கரில் தானே வந்தீஙகளா? இனி மெரினா பீச் பக்கம் வராமலா போய்ட போறீங்க
  அடுத்த முறை ஒரு வழி பண்ணிடலாம்.)

  ரொம்ப நாள் கழித்து ஃபீரியானதும் இந்த டீக்கடை பக்கம் வந்து போகலாம் என்று நினைத்தேன் இனி ஓட்டு கிடையாது

  இனி ஸ்பென்ஷர் ப்ளாசாவ மறந்தாலும் மறக்கலாம்

  சென்னை ப்ளாசாவ இனி நீங்க மறக்ககூடாது

  http://www.chennaiplazaik.com/2013/01/flower-type-hijab-with-stone.html

  இதுல தான் அப்டேட் பண்ணிட்டு இருக்கேன்


  கவனிக்க
  ஆமினா மெயில் பண்ணதால் ஆமினாவ திட்டிட்டேன்
  வாப்பஸ் வாங்கிக்கிறே ஆமினா

  ஐயம் ஜாரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கவனிக்க
   ஆமினா மெயில் பண்ணதால் ஆமினாவ திட்டிட்டேன்
   வாப்பஸ் வாங்கிக்கிறே ஆமினா

   ஐயம் ஜாரி//

   ஹி..ஹி..ஹி... இப்ப சிராஜ் வாங்கிய திட்டு பாக்கையில நான் வாங்கிய திட்டெல்லாம் பெரிசா தெரியல அக்கா... என்னமோ ரெக்க கட்டி பறக்குற மாதிரி இருக்கு! இன்னும் அதிகமா எதிர்பார்க்குறேன் :-)

   //ரொம்ப நாள் கழித்து ஃபீரியானதும் இந்த டீக்கடை பக்கம் வந்து போகலாம் என்று நினைத்தேன் இனி ஓட்டு கிடையாது//
   நான் போட்ட 2 போஸ்ட்டை தவிர உருப்படியா இங்கே ஒன்னும் இல்ல... நீங்க டைம் வேஸ்ட் பண்ணாதீங்க... :-)

   நீக்கு
  2. //இனி ஓட்டு கிடையாது//---------எனக்கு இந்த நியாயமான டீலிங் ரொம்பவே பிடிச்சு இருக்கு, சகோ.ஜமீலா கமால்..! :-))

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters