விஸ்வரூப பட விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்க இருக்கிறது.
தீர்ப்பு எப்படி இருக்கும்?
சில கண்டிஷன்களுடன் படம் வெளியிட அனுமதி அளிப்பார்கள் என்பதே என்னுடைய கணிப்பு. அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
நாம் என்ன செய்ய வேண்டும்????
1. சகோஸ்.. தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் தயவுசெய்து உணர்ச்சிவசப் படாதீர்கள்.
2. என்றும் இல்லாத அதிசயமாய் 24 இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். இதற்காக கமலுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். நன்றி கமல். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
சோ, இந்த கூட்டமைப்பினர் எடுக்கும் அடுத்த கட்ட ஜனநாயக ரீதியான போராட்டத்திற்காக பொறுத்திருங்கள்.
3. தனி மனிதர்களாக எந்த போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம்.
4. தயவுசெய்து வன்முறையில் யாரும் இறங்காதீர்கள்.
5. போராடுவது மட்டுமே நம் கடமை. வெற்றி , தோல்வி அளிப்பவன் இறைவனே என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
6. எந்த கருத்தை, எங்கு சொல்வதாக இருந்தாலும் நாகரிகமாக மட்டுமே பேசுங்கள். அப்படி பேச முடியாத அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு இருந்தால், நீங்கள் பேசவே வேண்டாம். ஒன்றும் குடி முழுகிவிடாது.
7. சாலை மறியல் கண்டிப்பாக செய்யாதீர்கள்.
8. எந்த போராட்டமாக இருந்தாலும் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். பொதுமக்களை வருத்தி நடக்கும் எந்த போராட்டத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
9. தியேட்டர் முற்றுகைப் போராட்டமோ அல்லது வேறு ஏதேனும் போராட்டம் என்றாலும் அரசின் அனுமதியுடனே நடத்துங்கள் அல்லது அரசுக்கு முன்னரே தெரிவித்துவிடுங்கள்.
10 இறுதியாக, நாம் இந்த போராட்டத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டோம் என்பதை மறவ வேண்டாம். தீர்ப்பு எப்படி இருந்தாலும் இனி ஒரு படம் இது போல் எடுக்க யோசிப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள்
மொத்தத்தில் தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் உங்கள் போராட்டம் ஜனநாயக ரீதியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே தமிழக முஸ்லிம்கள் மற்றும் நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.
Tweet |
அடடே அவங்க தீர்ப்பு சொல்றதுக்குள்ளயே நீங்க ஒரு தீர்ப்பு சொல்லிடிங்களே அண்ணே .....ம்ம்ம்ம்ம்ம்ம் அது சரி
பதிலளிநீக்குவெளியிட அனுமதிப்பார்கள் என்பதே என் கணிப்பு...
நீக்குஅதையும் மீறி, தடை தொடர்ந்தால் போனஸ்.. அவ்ளோ தான்..
மிகச் சரியான நேரத்தில் மிகவும் தேவையான பதிவு......
பதிலளிநீக்குநன்றி எங்க ஊர்க்காரரே... ஹா..ஹா..ஹா...
நீக்குநான் அரசர்குளம் தான்..
விஸ்வரூபத்தால் ..நமக்கு[இஸ்லாம்] என்ன நன்மை..என்பதை நான் இதில் குறிப்பிட்டு இருந்தேன் உங்களுக்கும் அது தெரியும் ............
பதிலளிநீக்குஉங்களுக்கு நினவூட்டுவதர்க்காக ..இதோ அந்த லிங்க் ............
http://rinakhan1990.blogspot.com/2013/01/blog-post_26.html
thanks mr.kamalhasan
பதிலளிநீக்கு"nangal onrupattom
ungalal"
siraj bai athukulla pottacha :)
அப்சல்..
நீக்குஅது தனி பதிவு.. இப்பதைக்கு சும்மா சுட்டி காட்டி இருக்கேன்..
எல்லாம் நீங்க சொன்னது தான்.. ஹா..ஹா.ஹா... சுட்டு பதிவா போட்டுட்றேன்...
ஓக்கே??
சிராஜ் சித்தரே ,
பதிலளிநீக்குபோரடிக்குதுனு சொல்லிக்கிட்டே விஷ்வரூப பதிவா போடுறிங்களே ,இப்போ மெய்யாலுமே எங்களுக்கு தான் போரடிக்குது :-))
ஏக இறைவன் என சொல்லிக்கொண்டு 24 இயக்கம் ஏனோ? ஏக இறைவனைக்காப்பாற்ற ஒரே இயக்கம் போறாதா? ஏக இறைவனால் கூட ஒன்றுப்படுத்த முடியாத 24 இயக்கங்களை ஒன்றுப்படுத்திய லோகநாயகர் ஏக இறைவனை விட ரொம்ப பெரியவர் போல :-))
மாஷா லோகநாயகர் :-))
பி.கு: உங்க அறிவுறுத்தலை எல்லாம் அரசியல்வாதி தொண்டர்களுக்கு கொடுக்கும் "அறிவுறுத்தல்" போல சரியா செயல்ப்படுத்திடுவாங்க தானே :-))
ஹா..ஹா.. இங்க நாம எழுதிற எல்லா பதிவையும் பொதுமக்கள் சட்டை செய்வதில்லை என்றால் இதுவும் வீண் பதிவு தான்.. பார்க்கிறார்கள் , பின்பற்றுகிறார்கள் என்பது உண்மை என்றால் இதுவும் தேவையான பதிவு தான்...
நீக்குமாஷா என்பது அரபி வார்த்தை.. அதை பயன்படுத்தியதற்கு நன்றி..
"மாஷா லோகநாயகர்" பாதி முஸ்லிம் ஆகிட்டீங்க.. அந்த இரண்டாம் பாதியும் கொஞ்ச நாள்ல "அல்லாஹ்" னு மாறிதும்...:) :-)
வருகைக்கு நன்றி
மிகவும் நல்ல அறிவுரையான பதிவு நம் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்கள் முகம் சுளிக்காது நடந்து கொள்வதில் நாம் கவனமாக இருப்பது மிக அவசியம்.இது தோல்வியல்ல வெற்றியின் முதல் படி.
பதிலளிநீக்குநீங்க அப்புடியே நடந்துட்டாலும்...ஒங்க யோக்கியதை உலகம் அறிஞ்சது..
நீக்கு@sunaa நாங்க அப்புடி நடக்கக் கூடாது என நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்,ஆனால் நாங்கள் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவதாய் இல்லை.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...
நீக்கு24 fundamentalist movements in Tamil Islamic society? Strange... This shows all your 'Unity'
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் இப்போ டெங்கு மட்டும் அல்ல சிக்கன்குனியாவும் தாக்கியிருக்கு .............
பதிலளிநீக்குஅரசு தகவல் .
மாஷா அல்லாஹ் நாட்டமைக்குரிய அனைத்து அம்சங்களும் தங்களிடம் குடிக் கொண்டுள்ளன
பதிலளிநீக்குதம்பி..
நீக்குவை திஸ் கொலை வெறி???? பேஸ்புக்ல பன்ற கிண்டல் பத்தாதுன்னு இங்கையும் வந்துட்டீங்களா???
இருந்தாலும்.. முதல் கமெண்டிற்கு நன்றி...
மாஷா அல்லாஹ்... அண்ணே வர வர நீங்க எழுதுற பதிவ எல்லாம் படிக்கும் போது கண்ணுல தண்ணி வருதுன்னே..!! எப்டி இப்டி எல்லாம்?? இவ்ளோ தெறமைய எங்க ஒளிச்சு வச்சு இருந்திங்க இவ்ளோ நாளா?? அல்லாஹ் உங்கள் கல்வியறிவை மென்மேலும் விசாலமாக்கி வைக்க போதுமானவன்..!!
பதிலளிநீக்குவிஸ்வரூபம் வெளியீடு இதுவரை தள்ளிப்போனதே நமக்கு கிடச்ச வெற்றிதான்..!
//இவ்ளோ தெறமைய எங்க ஒளிச்சு வச்சு இருந்திங்க இவ்ளோ நாளா?? அல்லாஹ் உங்கள் கல்வியறிவை மென்மேலும் விசாலமாக்கி வைக்க போதுமானவன்..!!//
நீக்குI Agree
நோ...நோ.. ப்ளீஸ் டோன்ட் க்ரை.. கண்ட்ரோல் யுவர்செல்ப்....
நீக்குநான் என் கடமைய தான் செய்றேன்...
சகோ.சிராஜ் !
பதிலளிநீக்குநல்ல சிந்தனை உள்ள பதிவு ...ஆனால் இதற்க்கெல்லாம் வேலை இருக்குமா என்பதை முஸ்லிம் கூட்டமைப்பு கையில் தான் உள்ளது என நினைக்கிறேன்..ஏற்கனவே தவ்ஹீத் ஜமாஅத் உச்ச நீதிமன்றம் செல்வோம் என்றிருக்கின்றனர்..! நாளை நடப்பதை இறைவனே அறிவான்..! எனக்கென்னவோ விஸ்வரூபம் பெயருக்கு பதிலாக " இது ஒரு தொடர்கதை " என்று வைக்கலாம் போல் தோன்றுகிறது..!
Lets have some blast with crackers to celebrate the justice. . . . 24 islamic society to gather? ?hope them to put effort to development in islamic society. .same as this. . .wishing them to have a success there
பதிலளிநீக்குசிராஜ் சித்தரே,
பதிலளிநீக்குமெய்யாலுமே வாக்கு சித்தர் தான் , நீங்க ஆசைப்பட்டது போலவே உயர் நீதிமன்றம் தடையை விலக்கிவிட்டது,உங்கள் கட்டளைகளுக்கும் வேலை கிடைத்துவிட்டது, எல்லாரும் போய் சந்தோஷமா படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுங்க , படிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
படம் நல்லா இல்லை,மொக்கைனு விமர்சனம் எழுதினா அதை வச்சே படம் ஓடாம செய்து உங்க லட்சியத்தை நிறைவேற்றலாம்ல :-))
ஹா..ஹா..ஹா.. வவ்வால் ஜி..
நீக்குபடத்தை ஓடவிடாமல் செய்ய நிறைய வழி இருக்கு ...
டோன்ட் வொர்ரி.. முஸ்லிம்ஸ் வில் நாட் டு தட்...
விமர்சனம்??? மலேஷியாவில் வெளியான முதல் நாளே போடலாம்னு பார்த்தேன்... பட் விட்டுட்டேன்... நான் கேள்வி பட்டத வச்சு உண்மையான விமர்சனம் போடலாம்னு பார்த்தேன்.. பட் உண்மையா சொன்னாலும் நான் காழ்புணர்வில் சொல்றேன்னு சொல்வீங்க.. அதான் போடல :-) :-)) :-)))
மலேஷியாவில் முதல் ஷோ பார்த்திட்டு வந்த என் உறவினர் சொன்னது... "அண்ணே நாம தேவை இல்லாம இந்த படத்த எதிர்த்திட்டோம், விட்டிருந்தா மன்மதன் அம்பு மாதிரி ஆகி இருக்கும்னு" சொன்னான்...
சிராஜ் சித்தரே,
நீக்கு//"அண்ணே நாம தேவை இல்லாம இந்த படத்த எதிர்த்திட்டோம், விட்டிருந்தா மன்மதன் அம்பு மாதிரி ஆகி இருக்கும்னு" சொன்னான்...//
இதைத்தானே நான் ஆரம்பத்திலே இருந்து சொல்லுறேன், யாரும் எதிர்ப்புனு சொல்லாம இருந்தால் இந்த படம் தானே மொக்கையாகி ஊத்தி இருக்கும், ஓசி விளம்பரம் செய்யுறிங்கன்னு, உங்க பதிவிலும் அதான் சொன்னேன், நீங்க தான் அப்படியே விட்டால் சரியா இருக்காதுனு என்னமோ சொன்னீங்க :-))
என்னோட கணிப்பே இது தான் , படத்துக்கு தடையே இல்லாமல் வந்திருந்தால் ஒரு வாரம் கூட ஓடியிருக்காது, 50 கோடிக்கு மேல் தயாரிப்பு செலவெனில் கண்டிப்பாக ஒரு வாரமாச்சும் ஹவுஸ் ஃபுல்லா ஓடணும், அதெல்லாம் சாத்தியமில்லாத படம், அவரும் வலைய விரிச்சார் நீங்களும் விழுந்தீங்க இதான் உண்மை.
இப்போ படம் ஓடாம நஷ்டம் வந்தால் கூட எல்லாம் எதிர்ப்பினால் தான் சொல்லிடுவார் :-))
எப்போ டிஸ்ட்ரிபியூட்டர் சொன்ன விலைக்கு வாங்கலையோ அப்பவே படம் தேறாதுனு தெரிய வேண்டாமா :-))
படத்திற்கு மீண்டும் நாளை காலை 10.30 வரை தடை..
பதிலளிநீக்குஎன்னப்பா விளையாட்றீங்களா?? எதையாவது ஒன்ன ஒழுங்கா செய்ங்கப்பா
பதிலளிநீக்குtechwar1.blogspot.com
பதிலளிநீக்கு