புதன், ஜனவரி 04, 2012

ஊழல் செய்யும் ஜூனியர் ஹஸாரேக்கள்...

                                                                                                                                
2011 ஆம் ஆண்டு போராட்டங்களுக்கான ஆண்டு. உலக அளவில் பல அரசுகளை ஆட்டம் காணச் செய்த போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவும் இதற்க்கு விதி விலக்கல்ல. அவற்றுள் அன்னா ஹஸாரே நடாத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இப்போராட்டத்தில் கூட்டம்  கூட்டமாக பொது மக்களும், எதிர் கட்சிகளும், இளைஞர்கள்  மற்றும் பொது நல விரும்பிகள் கலந்து கொண்டனர்.
இவர்களுள் IT , BPO மற்றும் தனியார் கம்பெனிகளில் பணி புரியும் இளைஞர்களின் பங்கு குறுப்பிடத்தக்கது. ஈமெயில், Facebook , Twitter , Utube , SMS மற்றும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் மிகப் பெரிய அளவில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர்.
ஆனால் இவர்களின் நேர்மை குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்கள் வெளி வேஷம் போடும் போலிகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஏன் அவ்வாறு தோன்றுகிறது. இதோ காரணங்கள்...
IT , BPO மற்றும் இதர தனியார் நிறுவங்களில் பணி புரிவோரில் பெரும்பாலானவர்களுக்கு  இலட்சங்களில் தான் வருடச் சம்பளம். இவர்களின் சம்பளம் BASIC , HRA , LTA , மெடிக்கல் allowance , போனஸ் என்று பல வகையாக பிரிக்கப் பட்டிருக்கும்.
HRA - House Rent Allowance
LTA - Leave  Travel Allowance
இந்திய அரசின் வருமான வரி விதிப்படி ஒரு வருடத்திற்கு 1 ,80 ,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டும். பெண்கள் என்றால் 1 ,90 ,௦௦௦ ரூபாய். இது தவிர மேலும் சில வரி விலக்குகள் உள்ளன.
 
உதாரணம் - 1 : வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் வாடகைப் பணத்திற்கு (அதிக பட்சம் HRA ல் குறிப்பிடப் பட்ட தொகை) வருமான வரி கட்ட வேண்டியது இல்லை. இதற்க்கு வாடகை செலுத்தியதர்க்கான ரசீதை அரசுக்கு காண்பிக்க வேண்டும்.
 
உதாரணம் - 2  : வருடத்திற்கு 15 ,000  ரூபாய்க்கு மெடிக்கல் பில்களை காட்டி வரி விலக்கு பெறலாம்.
உதாரணம் - 3   : LTA . இதன்படி வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன்(தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகள்) எங்காவது வெளி ஊர் சென்றிருந்தால் அதற்க்கான இரயில் டிக்கெட் அல்லது விமான டிக்கெட் அல்லது வாடகை வாகன பில்லை காட்டி 24,௦௦௦ ருபாய் அல்லது 36 ,௦௦௦ க்கு வரி விலக்கு பெறலாம்.
இவை தவிர இன்னும் சில வழிகள் உள்ளன. நாம் இவை மூன்றை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
                                                 
நமது ஜூனியர் ஹஷாரேக்கள் இந்த இடங்களில் விளையாடுவார்கள் பாருங்கள் விளையாட்டு. அப்பப்பா.... அதை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை சகோ.
ஒருவர் சொந்த வீட்டில் இருப்பார், ஆனால் வாடகை வீட்டில் இருப்பது போல் காட்டி, இவரே ஒரு போலி  ரஷீத் தயாரித்து HRA பணத்திற்கு வரி விலக்கு பெற்றுவிடுவார். அல்லது வாடகை வீட்டில் இருப்பார், அதற்க்கு வாடகையாக 3 ஆயிரம் மட்டுமே கொடுப்பார், ஆனால் அவரின் HRA 12 ,000 ரூபாயாக இருக்கும். எனவே தலைவர் இதுக்கும் ஒரு போலி பில் கொடுத்து 144000 ரூபாய்க்கு (12000 X 12 ) வரி விலக்கு பெற்றுவிடுவார்.
அடுத்தது LTA , அந்த வருடம் குடும்பத்துடன் எந்த ஊருக்கும்  பயணம் செய்து இருக்க மாட்டார் அல்லது கொடைக்கானல் ஊட்டி போன்ற சுற்றுலா தளங்களுக்கு மட்டுமே சென்று இருப்பார். ஆனால் மும்பை, டெல்லி, சிம்லா மற்றும் காஷ்மீர் போனது போல் போலி பில் கொடுத்து (அப்பொழுதுதானே நிறைய பில் வரும்) வரி விலக்கு பெற்று விடுவார்.
போலி LTA பில் கொடுக்கவென்றே ஒவ்வொரு IT மற்றும் BPO உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கும் வெளியே போலி travel ஏஜெண்டுகள் காத்துக் கிடப்பார்கள்.
அடுத்தது மெடிக்கல் பில், தலைவர்களிடம் 6000  ரூபாய்க்கான பில்கள் தான் இருக்கும், மீதி 9000 ரூபாய்க்கு ஏதாவது ஒரு மெடிக்கல் கடையில் கொஞ்சம் பணம்(லஞ்சம்) கொடுத்து போலி பில் வாங்கி வரி விலக்கு பெற்றுவிடுவார்கள்.
நான் அவதானித்த வகையில் 95 % பேர் இப்படிதான் செய்கிறார்கள். இந்த 95 % த்தில் 95 % பேர் அன்னா ஹஸாரே யின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மிகக் கடுமையாக ஆதரிக்கிறார்கள். எப்பொழுதும் அதைப் பற்றியே பேசுகிறார்கள். எவ்வளவு பெரிய முரண் இது? எவ்வளவு பெரிய மோசடி இது?
ஐயா ஜூனியர் ஹஷாரேக்களே, நீங்க பண்றதும் ஊழல் தான். இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ற அளவில் ஆயிரங்களில் அரசை ஏமாற்றுகிறீர்கள். அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப கொள்ளை அடிக்கிறார்கள். நீங்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தயவு செய்து நீங்கள் உத்தமர்கள் போன்று பேசும் பேச்சை நிறுத்துங்கள். நீங்களும் பிராடுகள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இல்லை... இல்லை... நான் உண்மையிலே ஊழலை எதிர்க்கிறேன்னு சொன்னீங்கன்னா. நடந்து முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்ற அடிப்படையில், இனி வரும் காலங்களில் போலி ஆவணங்கள் கொடுக்காமல், எந்த சூழ்நிலையிலும் இலஞ்சம் கொடுக்காமல், எந்த சூழ்நிலையிலும் சட்டத்தை மதித்து நடக்க உறுதி எடுக்க முடியுமா? அப்படி எடுத்தாலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதில் உறுதியாக  இருக்க முடியுமா?
2011 - 2012 க்கான வருமான வரி சான்றுகள் கொடுக்கும் நேரம் வந்து விட்டது. சரியான ஆதாரங்களை மட்டும் வழங்குங்கள். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். உங்களை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன். அப்படி இல்லை என்றால், உத்தமர்கள் பேசும் உங்கள் வாய்ச் சவுடால்களை நிறுத்துங்கள். பாவம் ஊழலுக்கு எதிராக உண்மையாக பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கு கெட்ட பெயர் வராமலாவது இருக்கும்.
போங்கயா நீங்களும்.... உங்க நேர்மையும்... உங்க ஊழலுக்கு எதிரான போராட்டமும்....

டிஸ்கி : நான் ஊழலுக்கு எதிராக போராடும் உண்மையாளர்களை உளமார பாராட்டுகிறேன். இந்த கட்டுரை போலிகளுக்கு மட்டுமே.


53 கருத்துகள்:

  1. சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    ******1.
    புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2.
    மன்னிப்போம் மறக்கமாட்டோம்.

    புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
    ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?……..
    **********
    …….



    2. *******
    ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
    ********

    .

    பதிலளிநீக்கு
  2. டிஸ்கி : நான் ஊழலுக்கு எதிராக போராடும் உண்மையாளர்களை உளமார பாராட்டுகிறேன். இந்த கட்டுரை போலிகளுக்கு மட்டுமே.////

    இந்த டிஸ்கியை போட்டு தப்புச்சிட்டே நீ

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஸலாம் சகோ.சிராஜ்,

    உண்மையை உறைக்கும்படி உரக்க சொல்லியுள்ளீர்கள்..! சாட்டையடி பதிவு..! வாழ்த்துகள்..!

    HRA, LTA... உதாணத்துக்கு இந்த இரண்டை மட்டும் எடுத்துள்ளீர்கள்.

    மேலும், அலுவலக வாகனத்தை சொந்த வேலைக்கு பயன்படுத்துவது... அலுவலக STATIONARY ITEMS, SCRIBBLING PADS களை எடுத்துவந்து தன் குழந்தைகளின் பள்ளி கல்லூரி தேவைக்கு கொடுப்பது...

    தன் கணினியின் 60GB HARD DISK ஐ கழட்டி எடுத்துப்போய் கம்பெனி PC யில் போட்டுவிட்டு அதில் உள்ள 500GB HARD DISK ஐ தன் PC யில் போட்டுக்கொள்வது...

    இவர்களையும், செய்திகளில் ஊழல் செய்யும் ஊடகங்களையும் எல்லாம் எதிர்க்காமல் இவைகளோடு அரசியல் வாதிகளை மட்டும் எதிர்க்க கூட்டணி போட்டுக்கொண்ட அண்ணா ஹசாரேயின் சந்தர்ப்பவாதமும் ஒருவகையில் ஊழல்தானே..?

    டிஸ்கி : நான் ஊழலுக்கு எதிராக போராடும் உண்மையாளர்களை மட்டும் உளமார பாராட்டுகிறேன். அண்ணா ஹசாரேவை அல்ல.

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் சிராஜ்,

    அல்ஹம்துலில்லாஹ். அசத்தலான அருமையான பதிவு.

    பதிவில் சொல்லப்பட்டுள்ளது போல பலரை நான் பார்த்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்பாக நான் இவற்றிற்கு துணையும் போய் உள்ளேன். இறைவன் என்னை மன்னிப்பானாக...

    போனவை போகட்டும். இனியேனும் நாம் இவற்றை கவனத்தில் கொண்டு சீரிய முறையில் பணியாற்றி நாடு முன்னேற வழிவகுப்போம்...

    வஸ்ஸலாம்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  6. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் சிராஜ் பாய்,
    நறுக்கென்ற கேள்விகள். இந்த பதிவு அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறோம் ஊழலை எதிர்க்கிறோம் என்று சொல்லி "ஐஅம் அண்ணா ஹசாரே" குல்லாவை மாட்டி ஷோ காண்பிக்கின்ற நபர்களுக்கு கண்டிப்பாக சுருக்கென்று குத்தியிருக்கும். "சாரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்" என்ற ஒரு பழமொழி உண்டு. இதை இந்த புண்ணியவான்கள் படித்து உணர்ந்து கொண்டு நேர்மையாக நடந்தால் நன்று. தன்னளவில் நேர்மையாக நடக்காமல் பிறரை அதன் படி நடக்க சொல்ல இவர்களுக்கு தார்மீக உரிமை கிடையாது.

    பதிலளிநீக்கு
  7. தற்போது காந்தி வேடம் தரித்து ஊடகத்தில் வலம் வரும் அண்ணா ஹசாரே என்ன உத்தமரா? அவருடைய பிறந்த நாள் கொண்டாட்ட கணக்குகளின் வரவு செலவு என்ன? ஹசாரே கோரும் லோக்பாலில் என்ஜிஓக்களின் நிலைமை என்ன? இவர் ஊழலுக்காக காங்கிரசை மட்டும் தான் எதிர்க்கிறார். பாஜகவை எதிர்த்து குரல் கொடுக்கவே இல்லை. பாஜகவின் பிதாமகன்கள் எல்லாம் ஊழலற்ற உத்தமர்களா? ஊழல் குற்றச்சாட்டில் எடியூரப்பா சிறைக் கொட்டடியில் இருப்பதை அறியாதவரா ஹசாரே? எனவே டிஸ்கியில் நெத்தியடி ஆஷிக் போட்டிருப்பது போன்று ஊழலுக்கு எதிரானவர்களை அதற்கு எதிராக போராடுபவர்களை நானும் ஆதரிக்கிறேன். கண்டிப்பாக அண்ணா ஹசாரேவை ஆதரிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  8. அருமையான யோசிக்க வேண்டிய கருத்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. ஹி ஹி...நீங்க அன்னா ஹசாரேவை இழித்து பேசுவதற்கு காரணம் ஊரறிந்த விஷயம் ! அவர் ஆர் எஸ் எஸ் காரரோன்னு ஒரு சந்தேகம் ! மற்றபடி என்ன இருக்கு !

    அப்போ ஐ டில வேலை செய்றவங்க ஊழலுக்கு எதிரா போராடக் கூடாதா ?

    பதிலளிநீக்கு
  10. சகோதரர் கபிலன் அவர்கள் எப்பொழுதுமே பதிவை முழுவதுமாக படிப்பதில்லை என்று நினைக்கின்றேன்
    //நான் ஊழலுக்கு எதிராக போராடும் உண்மையாளர்களை உளமார பாராட்டுகிறேன்.//
    இதில் ஐ டி யில் வேலை பார்பவர்களும் அடங்கும் என்பதே பதிவாளரின் கருத்து

    //இந்த கட்டுரை போலிகளுக்கு மட்டுமே.//
    சகோதரர் கபிலன் போன்றவர்களுக்காக முன் எச்சரிக்கையாக சொன்னதாக நினைக்கின்றேன்

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. சகோ ரஃபீக்,

    இக்கட்டுரையில் உள்ள அம்சங்கள் முழுக்க முழுக்க சரி. அப்படிப்பட்ட ஐடி நண்பர்கள் போராடக் கூடாதான்னு தான் கேட்கிறேன் !

    நீங்கள் என்னை போலி என்று சொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை !

    "நான் ஊழலுக்கு எதிராக போராடும் உண்மையாளர்களை உளமார பாராட்டுகிறேன்"

    இந்தக் கட்டுரையாளருக்கு தெரிந்த நாலு உண்மையானவர்களை தெரிவிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மை லார்ட்!

    பதிலளிநீக்கு
  12. சகோ உங்களை நேரில் பர்ர்த்து பேசி பழகி அறிவை வளர்த்துக்கனும் .....கலக்கல் பதிவு

    பதிலளிநீக்கு
  13. ஐயா கபிலன்

    **ஹி ஹி...நீங்க அன்னா ஹசாரேவை இழித்து பேசுவதற்கு காரணம் ஊரறிந்த விஷயம் ! அவர் ஆர் எஸ் எஸ் காரரோன்னு ஒரு சந்தேகம் ! மற்றபடி என்ன இருக்கு!**

    இது என்ன லூசுத்தனமா இருக்கு. பதிவுல ஹசாரே பத்தி விமர்சனமே இல்லையே.

    **அப்படிப்பட்ட ஐடி நண்பர்கள் போராடக் கூடாதான்னு தான் கேட்கிறேன் !**

    ஏன் போராடணும்னு நான் கேட்குறேன். ஐயா, போராடுரதுக்கு முன்னாடி அட்லீஸ்ட் மனதால இனி நாம அப்படி இருக்க கூடாதுன்னு திருந்தி பின்பு போராட வந்திருந்தா அந்த ஆட்கள நான் பாராட்டுறேன்.

    சின்ன கேள்வி, விபச்சாரம் செய்பவன் விபச்சாரத்துக்கு எதிரா போராடுறது சரியா தவறா? அவனுக்கு போராடுற தகுதி இருக்கா இல்லையா? தண்ணி அடிச்சு தன்னையும் வீட்டையும் கெடுத்துக்குறவன் தண்ணிக்கு எதிரா போராடுரதுல ஏதாவது லாஜிக் இருக்காயா? அவனுக்கு போராடுற தகுதி இருக்காயா?

    கொஞ்சம் பதில் சொல்லுங்கோ ஐயா

    பதிலளிநீக்கு
  14. ஐயா கபிலன்

    எனக்கு இதுக்கு மட்டும் ஆமா இல்லேன்னு ஒரு பதில் சொல்லிடுங்க. மேட்டர் பினிஷ் ஆகிடும்

    விபச்சாரம் செய்பவன் விபச்சாரத்துக்கு எதிரா போராடுறது சரியா தவறா?

    பதிலளிநீக்கு
  15. "இது என்ன லூசுத்தனமா இருக்கு. பதிவுல ஹசாரே பத்தி விமர்சனமே இல்லையே. "

    "ஊழல் செய்யும் ஜூனியர் ஹசாரேக்கள்"
    என்பதன் பொருள் என்ன ?

    நீங்கள் ஒரு ஜூனியர் ஹிட்லர், ஒரு ஜூனியர் கோட்சே அல்லது ஒரு ஜூனியர் பின்லேடன் என்று விமர்சித்தால் அதன் பொருள் என்ன ?

    ஒரு நல்ல விஷயத்துக்காக ஊரே ஒண்ணு சேர்ந்து போராடுறாங்க. அதுக்காக ஆணியே பிடுங்கலன்னா கூட பரவாயில்லை...அப்படி வெளியில் வந்து போராடுபவர்களை எதுக்கு கொச்சைப் படுத்துறீங்க..!

    பதிலளிநீக்கு
  16. ஐயா கபிலன்,

    இந்த திசை திருப்புற வேலையே வேணாம். கேட்ட கேள்விக்கு பதில் இருந்தா சொல்லுங்க. சும்மா நேரத்த கடத்தாதிங்க. ஹசாரே பத்தி விமர்சனமே இல்லாத பதிவுல வந்து எதையாவது உலருறது. கேள்வி கேட்டா பதில் மட்டும் சொல்ல வக்கில்ல

    விபச்சாரம் செய்பவன் விபச்சாரத்துக்கு எதிரா போராடுறது சரியா தவறா?

    அடுத்து இதற்கு மட்டும் தான் பதில் வரணும். முடிஞ்சா சொல்லுங்க இல்ல ஆள விடுங்க ராசா

    பதிலளிநீக்கு
  17. கபிலன் அண்ணா
    எனக்கு ஹசாரே மீதெல்லாம் நம்பிக்கையே இல்லை. இதை தான் எனது பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறேன். ஆனால் எதியிஸ்ட் உங்களிடம் வைத்த கேள்வி ஒன்று அப்படியே இருக்கிறது. அதாகப்பட்டது விபச்சாரம் செய்பவன் விபச்சாரத்தை எதிர்த்து போராட முடியுமா? அப்படி ஒருவன் போராடினால் அவனை மக்கள் என்னவென்று அழைப்பார்கள்? அந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் கபிலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  18. விபச்சாரத்தில் ஈடுபடுபவர் தன்னுடைய வாழ்வாதாரமான விபச்சாரத்தை எதிர்த்து எதற்கு போராடணும்?
    அந்த மாதிரி எங்கேயாவது நடந்ததுண்டா ?

    ஆனால் இவங்க போராடுறாங்கன்னா...மடியில் கனமில்லை என்று தான் அர்த்தம்.

    சரியான சட்டம் இருந்தால் இந்த இருவருக்கும் ஆப்பு இருக்கும் என்று தெரிந்து தானே போராடுறாங்க !

    பதிலளிநீக்கு
  19. கபிலன், ஆம் இல்லை என்று ஒரு பதிலை அந்த கேள்விக்கு முதலில் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  20. அந்தக் கேள்வி எழ வாய்ப்பே இல்லாத போது, அதற்கு ஆம், இல்லை என்று எப்படி பதில் சொல்வது ! அதற்கான விளக்கத்தைத் தான் சார் சொல்லி இருக்கேன் !

    பதிலளிநீக்கு
  21. அருமையான பதிவு சகோ
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  22. பதில் சொல்லாததற்கு தேங்க்ஸ் கபிலன்

    பதிலளிநீக்கு
  23. சகோ கபிலன், அன்னா ஹஸாரே பற்றி எனக்கோர் கருத்துண்டு. ஆனால் இந்த கட்டுரையின் மையப் புள்ளி ஹஸாரே அல்ல. அவருக்கு சப்போர்ட் செய்யும் IT , BPO மற்றும் தனியார் நிறுவங்களில் பணிபுரிவர்கள் பற்றித்தான். காலம் அனுமதித்தால் ஹஸாரே பற்றியும் ஒரு பதிவை இடுகிறேன், அப்பொழுது வந்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்

    இந்த பதிவை பொறுத்தவரை ஹஸாரே வை ஆதரிப்பவர்களை மட்டும் பற்றி பேசுங்கள் ப்ளீஸ்..

    பதிலளிநீக்கு
  24. வருகைக்கும் அருமையான விவாதத்திற்கும் நன்றி சகோ முஹம்மது ரபீக், ஷேக் தாவுத், athiest . தொடர்ந்து வருகை தாருங்கள்.

    பதிலளிநீக்கு
  25. வருகைக்கு நன்றி சையது இப்ராம்ஷா அவர்களே...

    பதிலளிநீக்கு
  26. /* சகோ உங்களை நேரில் பர்ர்த்து பேசி பழகி */
    இறைவன் நாடினால் நிச்சயம் சிந்திப்போம் சகோ ரியாஸ் அஹமது. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வருகைக்கு நன்றி வாஞ்சூர் அப்பா மற்றும் ரஹீம் கஸாலி.

    பதிலளிநீக்கு
  28. #இல்லை... இல்லை... நான் உண்மையிலே ஊழலை எதிர்க்கிறேன்னு சொன்னீங்கன்னா. நடந்து முடிந்தவை முடிந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்ற அடிப்படையில், இனி வரும் காலங்களில் போலி ஆவணங்கள் கொடுக்காமல், எந்த சூழ்நிலையிலும் இலஞ்சம் கொடுக்காமல், எந்த சூழ்நிலையிலும் சட்டத்தை மதித்து நடக்க உறுதி எடுக்க முடியுமா? #

    இப்படி நடந்தால் எப்படி இருக்கும்...!நினைத்து பார்க்கவே இனிக்கிறதே....

    பதிலளிநீக்கு
  29. அஸ்ஸலாம் அலைக்கும் சகோஸ் ........
    தோஸ்த் சிராஜ் அவர்களின் பதிவ நான் ஏற்றுக்கொள்ளவில்லை காரனத்த பின்னால சொல்லிருக்கிறேன் அதுக்கு முன்னால அரபு தேசங்களின் மேட்டருங்கள கொஞ்சம் நினைவு படுத்திக்கொள்ளலாமா ........
    தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே ........
    சரியாக இன்றுடன் ஒரு வருஷத்துக்கு முன்னாடி துனிசியாவில்
    ஒரு நடை பாதை வியாபாரி ஊழல் அரசாங்கத்தை எதிர்த்து தன்னைத்தானே
    மாய்த்துக்கொண்டார் . இந்த ஒரு சாதாரமான விஷயம் பூதகரமாகி, புரட்சிக்கு வித்திட்டது. புரட்சி தீ ஏனைய அரபு நாடுகளான எமன், லிபியா, ஓமன், எகிப்த, பஹ்ரேன், மற்றும் கொஞ்சமாக குவைத் ஆகிய நாடுகளில் பரவிவிட்டது ..
    இந்த ஒரு வருடத்தில் மக்களின் புரட்சியின் பயனாக லிபியா, எகிப்த, துனிசியா ஆகிய நாடுகளில் ஊழல் அரசாங்கம் ஒழிந்து மக்களுக்காக , மக்களின் அரசாங்கம் மலர்ந்தது.. இங்கெல்லாம் போராட்டக்காரர்களின்,
    பின்புலத்தை மக்கள் பார்கவில்லை ,அவர்களின் ஒரே குறிக்கோள் ஊழல் அரசாங்கத்தை ஒழிக்கவேண்டும் என்பதே...
    சரி இப்ப நாம பாய்ன்ட்டுக்கு வருவோம் (தோஸ்த் சிராஜ் மற்றும் அவருக்காக வக்காலத்துக்கு வாங்கும் சகோஸ் கவனிக்கவும்)
    நம்ப நாட்டுல பூனைக்கு(ஊழலுக்கு) யார் மணி கட்டனும் என்று பேசிப்பேசியே நாட்களை கடத்துறாங்கள ஒழிய, யாரும் தில்லாக முன்வருவதில்லை நம்ம
    அன்னா ஹசாரே தவிர....இவருக்கு முன்னாடியே பிஜேபி கவர்மெண்டுல
    கம்யுனிஸ்ட் காரங்க லோக்- பால் மசோதாவ கொண்டு வந்தாங்க ஆனா MP + பொது மக்கள் போதிய ஆதரவை கொடுக்கல....மசோதா அம்பேல் ஆயிடுச்சி ..
    ஒன்னேமுக்கால் லட்சம் கோடி ருபாய் 2G ஸ்பெக்ட்ரம் ஏலத்துல ஊழல் நடந்ததுனாலேயும் இன்னும் பல நல்ல விஷயங்களுக்காகவும் நம்ம ஹீரோ அன்னா ஹசாரே போராட்டம் ,உண்ணாவிரதம், புரட்சி னு சொல்லிட்டு இருக்கார்..
    நம்ம ஹசாரே அண்ணாச்சிக்கு பக்கா ரூட் போட்டு கொடுத்ததே
    உம்மனாமுஞ்சி, உத்தம புத்திரன் , PM தான் காரணம் இவரு மட்டும்
    வாய திறந்து அதட்டலோட " இன்னாங்கடா " னு மந்திரிகளைப் பார்த்து கேட்டிருந்தா, அன்னா ஹசாரே சீன்ல வந்திருப்பாரா ??
    என்ன நோக்கத்துக்காக போராட்டம் செய்றாங்க ??!!
    முதல்ல நோக்கத்தை பாருங்க ... ஆட்களை பார்காதீங்க
    தலைய பாருங்க ..வாலை பார்காதீங்க ...
    உபகாரம் செய்யலேனாலும், உபத்திரம் கொடுக்காதீங்க.....
    போராட்டத்த கொச்சை படுத்தவேண்டாமே ப்ளீஸ்....
    இந்த ஜூனியர் அன்னா ஹசாறேங்க தான் நேரிடையாகவும், இணையத்துல
    மேட்டரை என்லார்சு செய்தும் மக்களுக்கு தெரியப்படுத்தி கொண்டு இருக்கீறாங்க.. .....அதாவது பேட்டை பேமானி , கேப்மாறி, கேடி கபாலி,
    பிளேடு பக்கிரி அல்ல என்பதை தெரிஞ்சுக்கோங்கோ
    கடைசியாக ஒன்னு சொல்லி முடிசிக்கீறேன் ....
    ஈசா (அலை) சொன்ன பேமசான ஒரு வாக்கியம்.....
    " யாரு ஒரு பாவமும் செய்யாமல் இருக்கிறார்களோ ,
    அவர்கள் கல் எரியட்டும் " (விபச்சாரம் செய்த பெண்ணை தண்டிப்பதற்கு)
    டிஸ்கி: யப்பா !! நா கல்லு எரியமாட்டேன்பா

    பதிலளிநீக்கு
  30. FYI: ரிஷஷன் வரும்போது தெருவில் நின்றதும் இதே IT/BPO ஆட்கள்தான். அப்போது "என்ன ஆட்டம் போட்டீங்கடா?" என்று கொக்கரித்த கோமான்கள் இருந்த பூமியில்தான் நாமும் இருந்தோம்....

    பதிலளிநீக்கு
  31. சும்மா இருந்தால் 'இந்த பசங்களுக்கு பார், ஷாப்பிங் மால் போகவே நேரம் சரியா இருக்கு' என்று நக்கல் அடிப்பதும், போராட்டத்தில் கலந்து கொண்டால் 'இவனுங்க சும்மா ஷோ காட்டுறானுங்க' என்பதும்...அருமை. ஆனால் அனைத்தையுமே சொல்ல கணினி தேவைப்படுகிறது. அதுவே IT/BPO துறையினருக்கு கிடைத்த வெற்றிதான். அயல்நாட்டவர் தரும் சம்பளத்தை அப்படியே எந்த முதலாளி நமக்கு தந்திருக்கிறார்?

    பதிலளிநீக்கு
  32. தவறுகளை செய்தவன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றால் ஒரு போராட்டம் கூட நடத்த முடியாது.

    பதிலளிநீக்கு
  33. வருங்கால புரட்சிகள் கணினி வாயிலாக வரவிருப்பதை தவிர்க்க இயலாது. உதாரணம் லிபியா.

    பதிலளிநீக்கு
  34. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தேசபக்தி இயக்கம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி. சங்பரிவாரின் ஒரு பிரிவான ஸ்ரீராம் சேனா இயக்கத்தை சேர்ந்த ஆறு நபர்கள் பாகிஸ்தான் கொடியை கர்நாடக மாநிலத்தில் ஜனவரி ஒன்றாம் தேதியன்று ஏற்றியிருக்கின்றனர். ஆனால் திருட்டுத்தனமாக இந்த காரியத்தை செய்து விட்டு ஓடிப்போயிருக்கின்றனர். இக்கொடியேற்றம் காரணமாக பந்த் , பஸ் மீது கல்வீச்சு என்று பல வன்முறைகள் அங்கே அரங்கேறியிருக்கின்றன. பாகிஸ்தான் கொடியை ஏற்றியது முஸ்லிம்கள் என்று பழியை சுமத்தி விடலாம் என்று கனவு கண்டிருக்கின்றனர் சங்பரிவார்கள். ஆனால் அவர்களின் நினைப்பில் மண் அள்ளிப்போடும் விதமாக கர்நாடக காவல் துறை உண்மையான குற்றவாளிகள் ஸ்ரீராம் சேனாவை சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  35. ஏற்கெனவே காந்திய சுட்டுக் கொள்ள வந்த விநாயக் நாதுராம் கோட்சே என்ற இந்துத்துவ தீவிரவாதி பிறப்புறுப்பில் முஸ்லிம்களை போன்று சுன்னத் செய்து கொண்டும் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும் வந்து காந்தியை சுட்டுக் கொன்றான். காந்தியை கொன்றது முஸ்லிம்கள் தான் என்ற பழியை போட்டு மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்த தமது அரசியல் ஆசான்கள் மூலம் சதி செய்திருந்தான். ஆனால் அது முறியடிக்கப்பட்டது. பின்னர் வெடிகுண்டு வைக்கிற இடங்களில் உருது பிரசுரங்களையும், இஸ்லாமிய அடையாளங்களையும் போட்டு அதை செய்தது முஸ்லிம்கள் தான் என்று பழியை போட முயற்சி செய்தி அதில் வெற்றியும் பெற்றனர் சங்பரிவார்கள். ஆனால் ஹேமந்த் கர்கரே அவர்கள் இது குறித்து புலன்விசாரனை செய்து குண்டு வெடிப்பை நடத்தியது சங்பரிவார்கள். அதில் முக்கிய புள்ளிகள் பிரக்யா சிங் என்ற சாமியாரினியும் இன்ன பிற சங்க்பரிவர்களும் என்ற உண்மையை கண்டறிந்தார். அந்த பழியில் இருந்தும் முஸ்லிம் சமூகம் மீண்டது. இப்போது பாகிஸ்தான் கொடியை ஏற்றி அதை முஸ்லிம்கள் மேல் போட்டு கலவரம் செய்து பெரும்பான்மை ஹிந்துக்களின் மனதில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்ட சங்பரிவார்களின் தற்போதைய திட்டம் தவிடு பொடியாகி விட்டது. இன்னும் எத்தனை எத்தனை சதிச்செயல்களில் ஈடுபட சங்கபரிவார் திட்டங்கள் வைத்திருக்கிறதோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  36. புரட்சிகள் என்பது வெறுமனே மக்களின் கோப தாபங்களை அடிப்படையாக மட்டும் வைத்து வருவதில்லை. ஒரு நாட்டின் பூகோள தன்மைகளும் மற்றும் ஜனநாயக தன்மைகளும் புரட்சியின் காரணிகளாக அமைந்திருக்கும். அந்த வகையில் பார்த்தால் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்டது போன்ற புரட்சி இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இல்லையென்றே சொல்லலாம். ஏனெனில் புரட்சி ஏற்பட்ட அரபு நாடுகளை நாம் கவனத்தில் கொண்டால் சர்வாதிகாரமும், மக்களாட்சி என்ற பெயரில் எதேச்சதிகாரமும் கோலோச்சிக் கொண்டிருந்த தேசங்கள் அவை. மக்களுக்கான பேச்சுரிமைகளும் கருத்துரிமைகளும் ஒடுக்கப்பட்ட நிலையில் தமது கோபத்தை மக்கள் வீதிகளில் இறங்கி வெளிக்காட்டினார்கள். ஆனால் நம் நாட்டில் அத்தகைய நிலைகள் இல்லை. மேலும் தம்முடைய கோபங்களை பேச்சிலோ அல்லது எழுத்துக்களிலோ கொட்டி தீர்த்து விடுகின்ற நிலையிலான சுதந்திரம் இங்கேயிருக்கிறது. (பதிவுலகம் கூட சிலருக்கு தமது கோப தாபங்களை வெளிப்படுத்தும் தளமாக தான் இருக்கிறது.) மேலும் தமக்கு பிடிக்காத ஆட்சியை ஐந்து ஆண்டுகளில் மாற்றி விட கூடிய அதிகாரத்தை மக்கள் பெற்றிருப்பதால் புரட்சி என்பது நம் நாட்டை பொறுத்த வரை ஏற்படக் கூடிய சூழல் இல்லை.

    பதிலளிநீக்கு
  37. அடுத்ததாக சகோ நாசர் சுட்டிக் காட்டியது போன்று எவர் போராடினாலும் போய் போராட வேண்டும். அவரின் பின்னணியை ஆய்ந்தறிதல் கூடாது என்பது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல. இது சுயசிந்தனையை மழுங்க செய்யக்கூடிய வாதம். இவர் எதற்காக போராட்டத்தை முன்னெடுக்கிறார்? , போராட்டத்தில் இரட்டை நிலையை எடுக்கிறாரா?, இந்த போராட்டத்தினால் சமூகத்தில் நன்மை பயக்குமா? போன்ற பற்பல கேள்விகளை முன்வைத்தே மக்கள் சுயசிந்தனையுடன் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் கட்சித்தலைவர் அறிவித்து விட்டாரே என்று போராட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கும் பொது மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். நாட்டிலும் சமூகத்திலும் போலியான தலைவர்கள் உருவானதற்கு காரணமே எத்தகைய ஆய்வும் இல்லாமல் போராட்டம் என்றவுடன் சில மக்கள் போய் கலந்து கொள்வது தான். எனவே பகுத்தறிவை கொண்டு சிந்தித்து செயல்படுதலில் தான் மக்களின் நலன் அடங்கியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  38. சகோ கபிலன்
    // அப்படிப்பட்ட ஐடி நண்பர்கள் போராடக் கூடாதான்னு தான் கேட்கிறேன் !//
    ஐ டி நண்பர்கள் போராட கூடாது என்று பதிவாளர் சொல்லாத நிலையில் இப்படி பட்ட கேள்வியே எதோ உள்நோக்கத்துடன் எழுப்பபட்டதகவே கருதலாம்

    //நீங்கள் என்னை போலி என்று சொல்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை ! //
    தவறான புரிதல்
    மேலே உங்களால் எழுப்பட்ட கேள்வி போல அதாவது பதிவாளர் போலிகளுக்கு மட்டுமே என்று சொன்ன பிறகும் --அப்போ ஐ டில வேலை செய்றவங்க ஊழலுக்கு எதிரா போராடக் கூடாதா ?-- இதுபோன்று குதர்க்கமாக கேட்கப்படும் என்று முன் எச்சரிக்கையாக ///இந்த கட்டுரை போலிகளுக்கு மட்டுமே./// என்று பதிவாளர் சொன்னதை தங்களுக்காக சொல்லப்பட்டதாக சொன்னேனே தவிர தங்களை பற்றி முழுமையாகக அறியாத நிலையில் கபிலன் ஒரு போலி என்று என்னால் எப்படி சொல்லமுடியும்

    பதிலளிநீக்கு
  39. ஜனாப். ஷேக தாவுத் அவர்களே .......
    இந்தியாவில் மக்கள் புரட்சி வரவே வராது என்றோ அல்லது வரவே இல்லை என்றோ நம் நாட்டின் கடந்த கால வரலாற்றை அறியாமல் சொல்றீங்க என்றே நான் எண்ணுகிறேன்.....
    இந்தியாவில் ஆயுதம் ஏந்தாமல் மக்கள் செய்த மகத்தான புரட்சி, ஜெய பிரகாஷ் நாராயன் அவர்களின் காலத்திலேயே (இந்திரா காந்தி, எமெர்ஜென்சி நினைவிருக்கா) வந்துவிட்டது மற்றும் நம் நாட்டில் ராணுவ புரட்சியோ(பாகிஸ்தான்) அல்லது ஆயுதமேந்திய மக்கள் புரட்சியோ(லிபியா,தென் சூடான்) வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு
    இதற்கு நீங்களும் உடன்பட்டு இருக்கிறிர்கள்... சரி நான் கூறிப்பிடுவது
    JP அவர்கள் முன்னின்று நடத்திய மக்கள் புரட்சியை போல இன்றைக்கு நமக்கு
    தேவை, இன்றைய காலத்தின் தேவையும் கூட.....அதத்தான் அன்னா ஹசாரே
    போன்றவர்கள் செய்கிறார்கள் மேலும் அவர் எந்த கட்சியையும் சாராதவர் ,
    இங்கே BJP இன் சப்போர்ட் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாலிசி தான்
    காரணம், மதசாயம் தேவை இல்லாத ஒன்று .....
    அவரோடிப்பவர்கள் சில பேர்கள் போலிகள், வேண்டாம் என்று சொன்னால் ,
    உலகத்தில் எங்குமே போராட்டம், புரட்சி நடக்கவே நடக்காது மற்றும்
    போராட்டத்த ஆதரிக்கிறேன் , வரவேற்கிறேன் ஆனால் அன்னா ஹசாறேவின் தலைமையில் அல்ல என்று சொன்னால் வேற யார் தலைமை தாங்குவது ???
    சொல்லுங்களேன் ......
    கடைசியாக முன்று பேர்கள் இருகிறாங்க 1 தோழர்கள் 2 .முஸ்லிம்கள் 3 .பிராமின்கள்...
    1 .தோழர்கள் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு 7 அரை தோஷம் ஆகாது ...
    ( இவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே ...என் ஆசை )
    2 . முஸ்லிம்கள் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு தீவிரவாதி என்கிற
    நினைப்பு (நினைப்புதான் மண் அள்ளிப்போடும் ....பாவம் தெரியாது )
    3 . பிராமின்கள் என்றாலே மெஜாரிட்டி மக்களுக்கு ஆகாது ...தேசமே
    ஆரியமாயை ஆகிவிடும் அப்புறம் குலக்கல்வி, குலத்தொழில் மீண்டும்
    பரிணாமம் ஊயிர் பெறும் ஆகையால் இவர்களும் வேண்டாம்... ஒருவேளை நீங்களே தலைமை தாங்கினாலும் ,
    இப்படிதான் ஆகும் என்பதை கொஞ்சம் பிராக்டிகலாக யோசித்து பாருங்க விடை கிடைக்கும் ..... ஆகையால் இப்போதிருக்கும் தலைமையே நல்லது
    என்றே நினைக்கிறேன் ...

    பதிலளிநீக்கு
  40. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் நாசர்,
    நீங்கள் குறிப்பிடும் எமர்ஜென்சிக்கு எதிரான மக்களின் மனநிலை கூட தேர்தலில் தான் எதிரொலித்தது. அதாவது அதே இந்திரா காந்தி அரசாங்கமும் உடன்பட்டு சேர்ந்து நடத்திய தேர்தலின் வழியாக தான். அதை தான் எனது முந்தைய பின்னூட்டத்திலும் பிடிக்காத அரசாக இருந்தால் மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ஐந்து ஒரு வருடங்களுக்கு ஒரு முறை நம் ஜனநாயகம் மக்களுக்கு வழங்கியிருக்கிறது என்று கூறினேன். (இந்த தேர்தல் முறையை இந்திரா காந்தி முடக்கி வைக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது. அப்படி முடக்கி வைத்திருந்தால் தன் வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் ஆட்சி பீடத்தில் அவர் இருந்திருக்கலாம். ஆனால் தேர்தலை முடக்கி வைக்க இயலாத வண்ணம் இந்த நாட்டின் சட்ட திட்டங்கள் இருக்கின்றன எனபதும் நாம் கவனிக்கத்தக்கது).

    பதிலளிநீக்கு
  41. அன்றைக்கு ஜேபியிடம் ஒரு ஜனநாயக தன்மை இருந்தது. அவர் பின்னால் மக்களும் , மற்ற கட்சிகளும் அணி திரள அது வழிவகுத்தது. ஆனால் அண்ணா ஹசாரே இத்தகைய எந்தவொரு உறுதியான நிலையிலும் இல்லாதவர். ஆர்.எஸ்.எஸ் சின் கைப்பாவையாக அவர் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை ஒதுக்கி தள்ளிவிட முடியாது. ஏனெனில் தற்போதைய "சர்சங்சலக்" மோகன் பகவத்தின் ஹசாரே தொடர்பான செய்தியை படித்த யாரும் அதை உதாசீனப்படுத்த முடியாது. மேலும் ஜேபியார் தன் தலைமையில் ஜனநாயக தன்மையற்ற இந்திராவை எதிர்த்தார். இந்திராவுக்கு மாற்றை மக்களிடம் முன்வைத்தார். ஆனால் ஹசாரேவால் எந்தவொரு மாற்றையும் முன்வைக்க முடியவில்லை. மாறாக காங்கிரசை மட்டுமே எதிர்ப்பேன் என்கிறார். அதற்கான மாற்றை அவரால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. ஆனால் அவருடைய செயல்களினூடாக அவர் பாஜகவுக்கு மறைமுக ஆதரவை கொடுப்பது அப்பட்டமாக தெரிகிறது. எனவே ஹசாரே தலைமையிலான கார்ப்பரேட் குழுவை நம்புவது என்பது ஆபத்தானது. ஊழலை விட கொடூரமானது மதவாதம். அதை எதிர்க்காமல் இன்றும் மதவெறியர்களோடு கைகோர்த்து போராட்டங்களை தொடர்பவர் ஹசாரே. எனவே அவர் தலைமையிலான போராட்டத்தை நாம் நம்பவுமில்லை. அதை ஆதரிக்க போவதுமில்லை.

    பதிலளிநீக்கு
  42. காம்ரேடுகளின் அனைத்து கொள்கையிலும் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் இன்றைய நிலையில் சிறந்த அரசியல்வாதிகளாக தெரிபவர்கள் அவர்களே. எனவே காம்ரேடுகள் இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதை ஆதரிக்க நான் தயார். அவர்களை ஆட்சி பீடத்திலும் அமர்த்த வேண்டும் என்பது தான் என் எண்ணம் (சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை மாதிரி). ஆனால் நம் ஊடகங்கள் ஒரு போதும் காம்ரேடுகளின் போராட்டங்களை கண்டுகொள்ளாது. ஹசாரேவுக்கு முன்னரே லோக்பால் பில்லை கொண்டு வந்த காம்ரேடுகளை கண்டுகொள்ளாத ஊடகங்கள் தனிமனிதர் ஹசாரேவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதின் மர்மம் என்ன? ஹசாரேவை பின்னாலிருந்து இயக்குகின்ற சூத்திரதாரிகள் யார் யார் என்பதும் கூடிய விரைவில் வெளிவராமல் போய்விடாது.

    பதிலளிநீக்கு
  43. ஒரு வேளை ஹசாரே குழு மற்றும் ஊடகங்கள் முன்னெடுப்பில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவுமானால் (காங்கிரஸ் தோல்வியை தழுவினால் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும். பாஜக , காங்கிரசை விட்டால் வேறு மாற்று இன்று வரை தேசிய அளவில் இல்லை என்பது தான் நிதர்சனம்) அதை ஹசாரே குழுவும் பல ஊடகங்களும் மிகப் பெரும் மக்கள் புரட்சி என்றே வர்ணிக்கும். அதாவது 2011 - ல் ஜெயலலிதா பெற்ற வெற்றியை தினமணியும், தினமலரும் இன்ன பிற ஊடகங்களும் தமிழக மக்கள் புரட்சி என்று கூறுவதை போல. ஆனால் இது தானா நாம் எதிர்பார்க்கும் புரட்சி?

    பதிலளிநீக்கு
  44. அட..இது நல்ல கோணமாக இருக்கிறதே!ஆம்.. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. முதலில் தன் சுய ஒழுங்கை அவர்கள் கடைபிடிக்கட்டும்.பின்னர் அடுத்தவர் முதுகைச் சொறியலாம்..!!

    பதிலளிநீக்கு
  45. சலாம் சகோ ஷேக் தாவுத்,
    உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். காங்கிரஸ் மற்றும் பிஜேபி க்கு காம்ரேட்கள் எவ்வளவோ மேல்.

    பதிலளிநீக்கு
  46. வருகைக்கு நன்றி சகோ சுரேகா,
    IT , BPO மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் செய்யும் வரி ஏய்ப்பை கணக்கிட்டால் தலை சுற்றிவிடும் சகோ. காலம் அனுமதித்தால் அது பற்றி ஒரு பதிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  47. வருகைக்கு நன்றி ஊடகன்,

    காலையிலே அந்த பதிவை படித்து பின்னூட்டமும் இட்டு விட்டேன். தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  48. சிவா,

    நம்புவீர்களோ மாட்டீர்களோ? இந்த பதிவை எழுதும் பொழுதே உங்களுடைய காட்டமான பின்னூட்டம் வரும் என்று எதிர்பார்த்தேன். வந்தே விட்டது. ஏன்னா உங்க செக்டார(Sector ) டச் பண்ணி இருக்கேன்ல.

    பதிலளிநீக்கு
  49. /* தவறுகளை செய்தவன் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றால் ஒரு போராட்டம் கூட நடத்த முடியாது. */

    அப்படி நான் சொல்ல வரவில்லை சிவா. ஊழலை செய்து கொண்டே ஊழலுக்கு எதிராக போராடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

    அதில் எந்த நியாயமும் இல்லை. புரிதலுக்காக ஒரு உதாரணம். நம்ம ராஜா வெளில வந்த உடனே அன்னா ஹஸாரே வை ஆதரித்தால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?

    பதிலளிநீக்கு
  50. /* சும்மா இருந்தால் 'இந்த பசங்களுக்கு பார், ஷாப்பிங் மால் போகவே நேரம் சரியா இருக்கு' என்று நக்கல் அடிப்பதும், போராட்டத்தில் கலந்து கொண்டால் 'இவனுங்க சும்மா ஷோ காட்டுறானுங்க' என்பதும்...அருமை */

    நான் அப்படி சொல்லவே இல்லையே. வேறு யாரோ சொல்வதற்கு நான் பொறுப்பேற்க முடியாது சிவா. என்னுடைய கேள்வி, நம்ம பசங்க போலி பில் காட்றாங்களா இல்லையா? அது ஊழலா இல்லையா? என்பதுதான். சிறிய அளவில் ஊழல் செய்யலாம் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் எந்த தொகைக்கு மேல் போனால் போராடலாம்? இந்திய அரசின் விதிகள் படி இதற்க்கு ஏதேனும் வரைமுறை உள்ளதா?

    பதிலளிநீக்கு
  51. சகோ நாசர்,

    உங்கள் கருத்தில் நான் உடன்பட வில்லை. பிரதமரையே கேள்வி கேட்க விரும்பும் ஹஸாரே. NGO க்களை கேள்வி கேட்க விரும்பாதது ஏன்? அதன் பின்னணி அறிய நீங்கள் முற்ப்பட வேண்டும் சகோ. ஊழலுக்கு எதிராக போராடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த போராட்டத்தில் நேர்மையும் முக்கியம். சகோ ஷேக் தாவூத் அவர்களின் கருத்துக்களோடு நான் ஒத்துப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  52. அஸ்ஸலாம் அலைக்கும்
    ஜனாப். ஷேக தாவூத் அவர்களே ,
    நாம் பயணிக்கும் பாதையின் திசைகள் வெவ்வேறாக இருந்தாலும்
    நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது அதாவது என் பதில்#39 மற்றும் உங்க பதில்#42 இருந்து பார்த்தால் புரியும்..நமக்கு BJP & CONGRESS வேண்டாம்
    இந்த நேரத்தில் தோழர்களின் பங்கு மிகவும் தேவை ஆனால் ஊடகங்கள்
    அவ்வாறு செய்ய முற்படமாட்டார்கள்..மக்கள் ஒருமித்த பொதுக்கருத்துடன்
    போராட்டத்த முன்னெடுத்து விட்டால், ஊடகங்களினால் அணை போட முடியாது... சரி NGO நிலை என்னன்னு கேக்கிறீங்க, இந்த லோக்- பால் மசோதா
    இறுதிவடிவம் அல்ல, முதலில் மசோதா நிறைவேறட்டும் அதன் பிறகு போகப்போக NGO காரர்களையும் சேர்த்துக்கொள்ளலாமே .....
    இனி ஒருபோதும் RSS எடுபிடிகள் ஆட்சிக்கட்டிலில் அமரமுடியாது
    பயப்பட தேவையில்லை....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters