புதன், ஜனவரி 11, 2012

கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்!(எதிர்பதிவுக்கு எதிர்பதிவு)


கோவி கண்ணன் எழுதிய சவுதியில் ஓடும் பாலாறும் தேனாறும் என்ற பதிவிற்கான எதிர் பதிவை கக்கு மாணிக்கம் அவர்களின் பின்னூட்டத்துடன் ஆரம்பிக்க விரும்புகிறேன்.

/* உண்மை நிலை புரியாமல் நுனிப்புல் மேயும் சிலரின் அரை வேக்காட்டு ஆக்கங்களுக்கு பதில் சொல்ல இப்படி ஒரு பதிவு அவசியமா கண்ணன்?   */
என்று பின்னூட்டமிட்டுருந்தார் அண்ணாச்சி கக்கு மாணிக்கம் அவர்கள்.
வாங்க கக்கு மாணிக்கம்,
நீங்க வேணும்னா புல்ல அடிவரை மேஞ்சிட்டு ஒரு ஆக்கம் போடுங்களேன். நீங்க புல்ல FULL ஆ மேஞ்சீங்களா இல்லையான்னு பின்னூட்டம் வழியா விவாதிப்போம்.
உங்களுக்கு இந்த இரண்டு வரிகள் தான். நீங்க அப்பீட்டாகிக்கலாம்.

இனி, அண்ணன் கோவி கண்ணன்,
விவாசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
இல்லாத  பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட  பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.

எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக  நீங்கள் மாற்றி  இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர்  வந்து விட்டதா , உடனே  எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய   மனப்பான்மையில்   நீங்கள் கட்டுரை தீட்டியதோ  ஏனோ?????
இதற்க்கு மறுப்பு சொல்றதா இருந்தா நமது நாடு அப்படியெல்லாம் கிடையாது. விவசாயத்தில் இன்ன இன்ன மாதிரிலாம் இருக்கோம்,மணல் திருட்டு நடைபெறுவது  இல்லைவிவசாய
நிலங்கள்  வீட்டு மனைகளாக  மாறவில்லை  என்றால்  அது சரியான பதில்.


அதுவும் இல்லையா, சவுதியோட திட்டங்கள் சரி இல்லை. இப்படி இப்படி செய்து இருந்தால் இன்னும் வளமான நாட்டை உருவாக்கலாம் என்று கூறினீர்கள் என்றால் அது நியாயம். அத விட்டுட்டு வீட்டு வேலை செய்பவர்களை பற்றி பேசினால் என்ன அர்த்தம்? விவசாயத்திற்கும் வீட்டு வேலை செய்வதற்கும் என்ன சம்பந்தம்???
நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நமது நாட்டில் மட்டும் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இல்லையா? அவர்களை  அடிமை போல் நடத்துவது நடக்க வில்லையா???? அல்லது உங்களுக்கு தெரியாதா????
பதிவின் மையக் கருத்தோட விவாதிக்கப் பழகுங்கள். ஒரு இனத்தின் மீது உள்ள உங்களின் வெறுப்பை எல்லா இடங்களிலும் காட்டாதீர்கள்.
அதற்காக சவுதியில் யாரும் தவறு செய்தால் அதற்க்கு நான் வக்காலத்து வாங்குகிறேன் என்று கதை கட்டி விடாதீர்கள். யார் தவறு செய்தாலும் குற்றம் குற்றமே. யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு என்பது என் கருத்து. அது என் குடும்பத்தாராக இருந்தாலும் சரியே, ஏன் நானாக இருந்தாலும் சரியே.
கீழ்க்கண்ட வசனம் ஒரு புத்தகத்தில் உள்ளது. இது தான் உலகிலேயே எனக்கு அதிகம் பிடித்த வசனம். இது எந்த புத்தகத்தில் உள்ளது என்று கூறினால் அதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். ஆகவே புத்தகப் பெயரை நான் குறிப்பிடவில்லை .
"நீதி செலுத்துங்கள். அது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே. ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியில் இருந்து பிறழச்செய்து விடக்கூடாது."
டிஸ்கி - 1 :
இன்றைய நிலையில் சவூதி அரேபியா தன்னிறைவு அடைந்த நாடுதான். ஆனாலும் பெட்ரோலை மட்டுமே நம்பாமல் இப்பொழுதே விவாசயத்திலும் கவனம் செலுத்தும் அந்த அரசின் பார்வை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நல்ல செயல்தான், தொலைநோக்கு பார்வைதான். இதை விவாதிக்கும் பொருளாக  எடுக்காமல், பாசிடிவாக எடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.


75 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் சிராஜ் பாய்,
    தலைப்பு மட்டுமே கொஞ்சம் எதிர்மறை. பதிவு முழுவதும் ஆரோக்கியமான செய்திகளையே முன்வைக்கின்றது. ஆனால் இதை புரிந்து கொள்ளும் மனநிலையில் கோவி கண்ணன் இல்லை. ஏனெனில் அவர் எதையும் தெளிவாக நேரடியாக பார்ப்பதில்லை. தட்டையான புரிதல்களுடன் தொலைநோக்கு பார்வையின்றி இஸ்லாமாபோபியோ மனநிலையிலேயே அவர் இருக்கிறார். இஸ்லாமிய எதிர்ப்பு என்ற கண்ணாடி அணிந்தே பார்க்க பழகி விட்டதால் வந்த விளைவு தான் இது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் அச்சம் தான் என்ற பழமொழியை அவருக்கு யாரேனும் நினைவுப்படுத்தட்டும். இந்த பதிவை கூட இஸ்லாமிய கோணத்தில் மட்டும் தான் அவர் பார்க்க அதிக வாய்ப்பிருக்கிறது.

    எத்துனை அர்த்தம் பொதிந்த வரிகள். இதை மனதில் நிறுத்தினால் எவருக்கும் அநீதி செய்ய அவர் கருத்தையும் திரித்து பதிவெழுத யாருக்காவது தோன்றுமா?
    "நீதி செலுத்துங்கள். அது உங்களுக்கோ, உங்கள் உறவினர்களுக்கோ அல்லது உங்கள் பெற்றோர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே. ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியில் இருந்து பிறழச்செய்து விடக்கூடாது."

    பதிலளிநீக்கு
  2. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ ஷேக் தாவூத்,

    /* இந்த பதிவை கூட இஸ்லாமிய கோணத்தில் மட்டும் தான் அவர் பார்க்க அதிக வாய்ப்பிருக்கிறது. */

    நான் இந்த ஆக்கத்தை பொதுவாகவே எழுதி உள்ளேன். அதை அவர் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்பது அவரைப் பொறுத்தது.
    வருகைக்கும் நடுநிலையான பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  3. ஸலாம் சகோ.சிராஜ்,
    நேற்று சகோ.சுவனப்பிரியனின் கட்டுரையை 'மட்டும்' படித்துவிட்டு நான் பின்னூட்டம் இட்டிருந்தால் அதில் ஒரு வாக்கியத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..!

    ஆனால், பிரசுரம் ஆகி இருந்த இன்னொரு பின்னூட்டத்தையும் படித்ததன் விளைவு அந்த வாக்கியம்.

    நீங்கள் இந்த எதிர்பதிவில் சுட்டப்பட்டிருக்கும் அந்த பதிவரை பொறுத்த மட்டில் இது மீண்டும் ஒருமுறை விழலுக்கு இறைத்த நீர். ஆனால் உங்களிடம் இருந்து முதல் முறை. அவ்ளோதான். மேலும் அவர் விஷயத்தில் சகோ.ஷேக்தாவூத்தை வரிக்கு வரி வழி மொழிகிறேன்.

    அடுத்து....

    பதிலளிநீக்கு
  4. சிராஜ் உனக்கு ஒரு வேண்டுகோள்....
    அரைவேக்காட்டு தனமான பதிவிற்கெல்லாம் எதிர்பதிவு போட்டு உன் தகுதியை குறைத்துக்கொள்ள வேண்டாமே.....

    பதிலளிநீக்கு
  5. வர வர நீ ரொம்ப பிரபலமாகிட்டே வர்ரே..... இந்த பதிவிற்கு கூட ஒரு மைனஸ் ஓட்டு....என்னவோ போடா...

    பதிலளிநீக்கு
  6. @எதிர்பதிவாளர்...//இதில் இஸ்லாமியரையோ, இஸ்லாமையோ விமர்சனம் செய்யும் வரிகள் எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.//---வ்வாரே...வ்வா...
    இத்தனை வருஷம் கழித்து... இந்த அளவுக்காவது தெளிவு பெற்றமைக்கு வாழ்த்துகள்..!

    தொடர்ந்து இன்னும் இன்னும் அதிகம் தெளிவடைய பிரார்த்தனைகளுடன்......... :-)))))

    பதிலளிநீக்கு
  7. @ எதிர்பதிவாளருக்கு எதிர்பதிவாளர்,

    ///விழலுக்கு இறைத்த நீர்...///----இதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் சகோ..!
    உங்கள் முயற்சி வெல்லட்டும் என்ற பிரார்த்தனைகளுடன்....

    பதிலளிநீக்கு
  8. அடுத்து....

    அந்த எதிர்பதிவின் ஒரு பின்னூட்டவாதி சகோ.கக்கு மாணிக்கம் பற்றி உங்களுக்கு ஒரு கொசுவர்த்தி (பிளாஷ்பேக்) சொல்கிறேன். கேளுங்க.

    இரண்டு நாளைக்கு முன்னர் நான் எழுதிய பாகிஸ்தான் கொடி பதிவில் கடைசி பகுதி எழுதும் பொது ஏனோ இவர் நியாபகம் எனக்கு வந்தது..!

    வராமல் போகாது. அதை அப்படி எழுதிய போது பழைய கணக்கை சரியாக எண்ணி 'திருப்பிக்கொடுத்த' ஒரு மன திருப்தி..!

    அதாவது.....

    ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதாக செய்தி வந்தபோது....

    சென்னையில் ஒரு இமாம் மூன்று நாட்கள் கல்லாட்டம் இருந்துவிட்டு, நூற்றுக்கணக்கில் மக்கள் திரளட்டும் என்று வெள்ளிக்கிழமைக்காக வெயிட் பண்ணி, ஜும்மா தொழுகை முடிந்தவுடன் ஒசாமா பின் லாடனுக்கு முன்னறிவிப்பு இன்றி திடுமென காயிப் ஜனாஸா தொழுகை நடத்தி விட்டார். மக்களும் வேறு வழி இன்றி உடன்பட்டனர். காரணம் பலர் அந்த செய்தியை அப்போது நம்பவே இல்லை. பலருக்கு அதில் உடன்பாடும் இல்லை.

    இதுபோன்ற சமயங்களில், வழக்கம் போல முஸ்லிம்களும் இஸ்லாமும் தாக்கப்படுவதும் நாம் அறிந்த ஒன்றே.

    நாமும் இந்த தொழுகை செயலை 'தேவையற்ற தவறான ஒன்று' என்று கண்டனம் செய்திருக்கிறோம்.

    இந்நிலையில்,
    நம்ம சகோ.கக்கு,
    அந்த இமாமை விமர்சித்து மட்டும் பதிவு போட்டால் யாருக்கும் ஒன்றும் பிரச்சினை இல்லை.

    ஆனால், இந்த 'அடிப்புல் மேயும் பதிவர்' தன் வலைப்பூவில் என்ன எழுதினர் தெரியுமா..?

    இதற்கு பரிகாரமாக, 'இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம்களும் தங்கள் பொண்டாட்டிகள் மற்றும் புள்ளை குட்டிகளோடு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பாகிஸ்தான் ஓடுங்கடா' என்று..!?!?!?!

    பதிலளிநீக்கு
  9. (தொடர்கிறது......)

    முன்னறிவிப்பு ஏதுமின்றி திடுதிப் என்று ஒருத்தர் செய்த தவறுக்கு... எங்களை எல்லாரையும் ஏனைய்யா அநியாயமாய் பாக்கிஸ்தாணுக்கு போக சொல்கிறீர்... யப்பா... கண்ணு... மாணிக்கம் சகோ.கக்கு... இது தப்பாச்சே...

    என்று...

    நாங்கள் பலர் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க கிளிப்பிள்ளைக்கு எடுத்துச்சொல்வது மாதிரி எண்ணற்ற பின்னூட்டங்கள் இட்டு புரியவைக்க விவாதித்த பின்னர்தான்.... ஸ்ஸ்ஸ்ஸ்...அப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ.... அந்த விஷயத்தில் அவர் 'நுனிப்புல்லையே' தன் கண்ணை திறந்து அப்போதுதான் பார்த்தார்..!

    பிறகு தவறென்று உணர்ந்து அந்த வரிகளை எல்லாம் நீக்கி விட்டார்..! அதற்கும் நன்றிகளையும் தெரிவித்தோம்.

    இப்படித்தான் சகோ.சிராஜ்,

    இஸ்லாம்/முஸ்லிம்/சவூதி என்றாலே....

    எதுவும் சிந்திப்பதில்லை....
    அப்படியே வருவது...
    கூட்டத்தோடு சேர்ந்து கல்லை எடுத்து எறிவது...
    ஏனய்யா.. இது தவறான கல் ஐயா...
    இங்கே எறியப்படும் இடமும் தவறு ஐயா...
    என்று ஆதாரத்துடன் நாம் திருப்பிக்கேட்டால்,

    ஒன்று 'ஆமாம்'னு உண்மைய ஒத்துக்கணும்... இல்லை, 'இல்லை'ன்னு ஆதாரத்தோட மறுக்கனும்...

    ரெண்டுமே கிடையாது...
    ஆனால், எக்குத்தப்பாக இன்னொரு தப்பான மொக்கை கல் வேறு இடத்தில் இருந்து பறந்து வரும்..!

    போங்கைய்யா.. எனக்கு வேற உருப்படியான வேலை இருக்கிறது..!

    பதிலளிநீக்கு
  10. Assalamu alikum mega arumaiyana post bro jazhkallahu kair

    பதிலளிநீக்கு
  11. சலாம் சகோ ஆசிக்,

    /* ஆனால், இந்த 'அடிப்புல் மேயும் பதிவர்' தன் வலைப்பூவில் என்ன எழுதினர் தெரியுமா..?

    இதற்கு பரிகாரமாக, 'இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம்களும் தங்கள் பொண்டாட்டிகள் மற்றும் புள்ளை குட்டிகளோடு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பாகிஸ்தான் ஓடுங்கடா' என்று..!?!?!?! */

    கக்கு மாணிக்கத்தின் இந்த பதிவை நானும் படித்தேன் சகோ. அதற்க்கு ஒரு மிகப் பெரிய எதிர்ப்பதிவு எழுதினேன், ஆனால் வெளியிடவில்லை. எழுதிய நாள் மே 10 ம் தேதி 2011 . அது இன்றுவரை என்னுடைய draft ல் இருக்கிறது. என்ன ஒரு ஒற்றுமை. அந்த பதிவிலும் இன்று நான் இறுதியாக குறிப்பிட்ட குரான் வசனத்துடன் தான் முடித்துள்ளேன். அத இப்ப வெளியிட்டா நல்லா இருக்குமா??? உங்கள் கருத்தென்ன???

    "ஒசாமாவை எதற்காக இந்தியர்கள் எதிர்க்க வேண்டும்?" இதுதான் கட்டுரையின் தலைப்பு. அதன் கடைசி வரிகள் இதோ...

    /*
    நீதி செலுத்துங்கள், அது உங்களுக்கோ உங்கள் பெற்றோர்களுக்கோ உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே. எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள பகைமை உங்களை நீதியில் இருந்து பிறழச் செய்துவிடக் கூடாது. (அத்தியாயம் -4 வசனம்-135 )




    ஆகவே நிச்சயமாக நாங்கள் நீதி செலுத்துவோம், அது எங்களுக்கு பாதகமாக இருந்தாலும் சரியே. அநியாயத்திற்கு ஒரு போதும் துணை போக மாட்டோம். நாங்கள் நல்லவர்கள் என்று பேர் எடுப்பதர்க்காகவோ அல்லது மாற்றுமத சகோதரர்கள் மதிக்கவேண்டும் என்றோ அல்லது நாத்திக நண்பர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல.மாறாக, அதுதான் இறைவன் உலக மக்களுக்கு இட்ட கட்டளை. இறைவனுக்காக நிச்சயம் நீதி மட்டுமே செலுத்துவோம்.




    இனியும் யாரவது இஸ்லாமியர்களை நாட்டை விட்டு போகச் சொன்னால் அவர்களுக்கு என்னுடைய பதில் இது தான். இந்த நாட்டில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமைதான் இஸ்லாமியர்களுக்கும் இருக்கிறது.தியாகத்திலோ, போராட்டாத்திலோ நாங்கள் குறைந்தவர்களல்ல...எங்களை போக சொன்னால் எங்கள் துணைக்கு நீங்களும் வாங்களேன்...... */

    பதிலளிநீக்கு
  12. சகோ ஆசிக்

    /* ரெண்டுமே கிடையாது...
    ஆனால், எக்குத்தப்பாக இன்னொரு தப்பான மொக்கை கல் வேறு இடத்தில் இருந்து பறந்து வரும்..!

    போங்கைய்யா.. எனக்கு வேற உருப்படியான வேலை இருக்கிறது..! */

    உங்கள் எண்ணவோட்டத்தை என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. 25 பதிவுகள் எழுதிய எனக்கே இந்த சண்டைகள் போரடித்து விட்டது. பல பதிவுகள் எழுதிய உங்களுக்கு எப்படி இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது சகோ. முடியல..... இவ்வளது வன்மமாகவா சிலர் இருப்பார்கள்????

    பதிலளிநீக்கு
  13. /*
    வர வர நீ ரொம்ப பிரபலமாகிட்டே வர்ரே..... இந்த பதிவிற்கு கூட ஒரு மைனஸ் ஓட்டு....என்னவோ போடா...

    */

    கஜாலி நானா,
    மைனஸ் வோட்டு போட்டா சொந்த பேர்ல போடவேண்டியது தானே. ஏதோ ஒரு முஸ்லிம் பேர்ல போட்ருக்காங்க. இன்று கூட நான் கோவி கண்ணனுக்கு மைனஸ் வோட்டு போட்டேன். அதை பின்னூட்டத்தில் அவரிடமே சொல்லியும் விட்டேன். எப்பா புண்ணியவான்களா என்னப்பா பண்றீங்க????

    பதிலளிநீக்கு
  14. /*
    வர வர நீ ரொம்ப பிரபலமாகிட்டே வர்ரே..... இந்த பதிவிற்கு கூட ஒரு மைனஸ் ஓட்டு....என்னவோ போடா...

    */

    கஜாலி நானா,
    மைனஸ் வோட்டு போட்டா சொந்த பேர்ல போடவேண்டியது தானே. ஏதோ ஒரு முஸ்லிம் பேர்ல போட்ருக்காங்க. இன்று கூட நான் கோவி கண்ணனுக்கு மைனஸ் வோட்டு போட்டேன். அதை பின்னூட்டத்தில் அவரிடமே சொல்லியும் விட்டேன். எப்பா புண்ணியவான்களா என்னப்பா பண்றீங்க????

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கு நன்றி சகோ ஜாபர் கான்

    பதிலளிநீக்கு
  16. என்ன்ன்ன்ன்ன்னாஆஆஆஆஆஆஅதூஊஊஊஊஊஊஊ???????????

    மைனஸ் ஓட்டு கூட இப்போ முஸ்லிம் பேரிலே போடறாங்களா.....!?!?!?!?!?!?

    ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....ஹா...ஹா....ஹா....

    என்னால சிரிப்பை அடக்கவே முடியலை சகோ.சிராஜ்....!

    தமிழ்மண ஓட்டுப்பட்டையும் அனானி மைனஸ் ஓட்டுக்களும் வாழ்க...! வாழ்க...! வாழ்க...!

    பதிலளிநீக்கு
  17. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அருகதையற்ற ஒருவருக்காக பொன்னான நேரத்தை வீணாக்கிய பதிவு.

    ஒருமுறை, இக்பால் செல்வன் என்பவர் நபியவர்கள் படம் என்று ஒன்றை போட கடுமையான சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் இந்த கோவி கண்ணன் என்பவர் பெரிய இவர் மாதிரி வந்து, நபியவர்களின் படத்தை தாங்கியே 'the message' என்ற திரைப்படம் வந்திருக்கின்றது என்று கூறி லிங்க் கொடுத்தார். அந்த திரைப்படத்தை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். அதில் எங்கப்பா நபியவர்கள் படம் இருக்கின்றது என்று போய் பார்த்தால் இந்த சகோதரரின் முட்டாள்த்தனம் தெரிய வந்தது. அதாவது இவர் கொடுத்த அந்த புகைப்படம், ஹம்சா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை காட்சிப்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதை இந்த கோவி கண்ணன், நபியவர்களின் படம் என்று நினைத்து லிங்க் கொடுத்திருக்கின்றார். என்ன ஒரு புத்திசாலி என்று பார்த்துக்கொள்ளவும்.

    நான் இதை தெளிவாக சுட்டிகாட்டி விளக்கினேன். இப்படி விளக்கம் அளித்தவுடன் சூடு சுரனை உள்ள ஆளாக இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? விளக்கத்தை ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். செய்யவில்லை.

    அடுத்த அவர் தளத்தில் நபியர்கள் படம் குறித்து ஒரு பதிவு. அதிலும் மறுபடியும் வேறு சில லிங்க்களை கொடுத்திருந்தார். மறுபடியும் முட்டாள்த்தனம். அங்கேயே மறுபடியும் தோலுரித்தேன். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் ஒரு ரியாக்ஷனும் இல்லை.

    இப்பொழுது இந்த பின்னூட்டத்தின் முதல் வரியை மறுபடியும் படித்துக்கொள்ளுங்கள்.

    இந்த கேவல மனிதரை பற்றி பேசி என் நேரமும் வீண்.

    இருப்பினும் விளக்கம் என்ற முறையில் இந்த பதிவை ஏற்றுக்கொள்கின்றேன். அடுத்தமுறை இவரை எல்லாம் சட்டை செய்யவேண்டாம்.

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  18. சகோதரர் முஹம்மத் ஆஷிக்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    நீங்க ஒரு வோட் தான் பார்த்திருக்கின்றார்கள். முஸ்லிம் பெயரில் சுமார் ஆறு வோட் வரை மைனஸ் வோட் ஒரு பதிவிற்கு பார்த்தேன்.

    தமாசு தமாசு..

    வஸ்ஸலாம்,

    பதிலளிநீக்கு
  19. 'கோழிக்கண்'ணோடு இந்திய மண்ணை கிளறி கிளறி பார்த்து விட்டுத்தான் இந்த பால் ஒடும் சவுதி அரேபியாவில் மட்டும் 20 லட்சம் இந்தியர்கள் ஜீவனாம்சம் செய்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

    கோவி கண்ணன் நரித்தனமாக தன்னுடைய இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சிகளை தன் பதிவுகளிலும் மற்றவர்கள்
    பதிவுகளில் கருத்துக்கள் வழியாகவும் இடைச்செருகல் இடுவதில் வல்லவர் என்பது வாசகர்கள் அறிந்த உண்மை.

    கோவிக்கண்ணனுக்கு 'கழிப்பிடம் புனிதமானது' என்று அவரே பின்னூட்டங்கள் வாயிலாக தம்ப‌ட்டம் அடித்ததை யாரும் மறக்கமுடியுமா?

    கோவிக்கண்ணன் வேஷம் தானாகவே கலைந்து வெகு நாளாகிவிட்டது.

    .

    பதிலளிநீக்கு
  20. //கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்// தலைப்பே சரிஇல்லை எதிர்பதிர்வு அயிருச்சு மனே தேனே மாதிரி கழிவும், மலமும் போட்டுகப்பா

    //இந்தியாவில் உள்ள எல்லா முஸ்லிம்களும் தங்கள் பொண்டாட்டிகள் மற்றும் புள்ளை குட்டிகளோடு மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பாகிஸ்தான் ஓடுங்கடா// பதிமூன்று வயசில் காவி கயவார்களாள் குத்தப்படும் ஊசி இதற்கெல்லம் மருந்துதில்லை எய்ட்ஸ் மாதிரி, ஆப்போ ஆப்போ Reaction இப்படித்தான் வரும். தெற்கெல்லாம் ஒரே மருந்துதான் இது அவலுக்கே தெரியும்.

    பதிலளிநீக்கு
  21. கோவி கண்ணுக்கு சொல்லராது ஒண்ணே ஒண்ணு நா நல்ல பாடுவேன் எங்கே எங்கே கொஞ்சம் காதை காட்டு

    பதிலளிநீக்கு
  22. கோவிக்கண்ணன் வீட்டுக்கு பக்கத்தில் பாலாறும் தேனாறும் தான் ஓடுகிறது.
    ஏனென்றால் கோவிக்கண்ணனின் குடியிருப்பு சிங்கப்பூரில்.

    சிங்கப்பூர் மந்திரிகள் அடிக்கடி (நேற்று வரை)சவூதிஅரேபியா சென்று அந்நாட்டுடன் உறவுகளை இடைவிடாது பலப்படுத்துகிறார்கள்.

    கோவிகண்ணன் தன் நாட்டு (சிங்கப்பூர் ) அரசாங்கத்திற்கு அறிவுரை கூறி கண்ணை திறந்திருக்கலாமே!.

    சிங்கப்பூர் பத்திரிகைகள் வாயிலாக சிங்கப்பூரில் வீட்டு பணிப்பெண்கள், இந்திய, பங்களாதேசி கண்டிராக்ட் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் கொடுமை, சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார்கள் என்பதை எல்லாம் கோவிக்கண்ணன் படிக்கவில்லையா? அல்லது வசதியாக மறந்துவிட்டாரா?

    .

    பதிலளிநீக்கு
  23. என்னது சிங்கப்பூரா பார்த்துப்பா அங்கேபோயி பாகிஸ்தான் கொடியை கிது ஆட்டிராதப்பா கட்டிபண்ணீர்வானுங்கோ கொடியை

    பதிலளிநீக்கு
  24. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ ஆசிக்,

    ஏற்கனவே நடந்த விஷயங்கள் எனக்கு சரியாக தெரியாது. அதனால் தான் பதிவிட்டேன். இவர் இது போல் தொடர்ந்து செய்துகொண்டிருப்பவர் என்றால் விட்டுவிடலாம்.
    ஏனென்றால் தெரிந்துகொள்ள விரும்புவர்களுக்கு அல்லது நடுநிலையாக பேசுபவர்களுக்கு தான் பதிவிடலாம். மற்றபடி வேஸ்ட் தான்...

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ....

    பதிலளிநீக்கு
  25. வருகைக்கு நன்றி ஹஜா மச்சான்...

    பதிலளிநீக்கு
  26. சகோ பட்டு மற்றும் உண்மைகள்,
    நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் சரியான வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தலாம் என்பது என் விருப்பம். உங்கள் பின்னூட்டம் படிக்க என்னோவோ போல் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  27. சலாம் சகோ ரியாஸ்,
    வருகைக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  28. //ஆனாலும் இன்னும் கொஞ்சம் சரியான வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தலாம் என்பது என் விருப்பம்.// மன்னித்துவிடு நன்பா முயற்சி செய்கிறேன். கோ.க வந்து எனக்கென்னா மாமான்னா மச்சன்னா கொஞ்சம் பலக்க தோஷம். வடை பஜ்ஜி சாப்பிடும் போது ர்ர் விடுவேன். அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  29. கோவி கண்ணன் இடுக்கையை படித்தேன் என்பதால் , இதனையும் படித்தேன் என்பதை பதிவு செய்ய இந்த பின்னூட்டம்! ( முடிந்த அளவு மதங்கள் குறித்த (நேரிடை/ மறைமுகம்) பதிவுகளுக்கு போக கூடாது என்றுதான் நினைக்கிறேன், சில நேரங்களில் ......மாட்டிகொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  30. வருகைக்கு நன்றி சர்புதீன்,
    தலைப்பை பார்த்தவுடனே நீங்கள் முடிவு செய்து இருக்க வேண்டும். பை தி வே, இது மதம் சார்ந்த பதிவு அல்ல. ஒரு தவறான வறட்டு வாதத்திற்கு எதிரானது. எவ்வாறு இதை மதம் சார்ந்த பதிவு என்கிறீர்கள்?????
    மேலும் நேற்று கோவி கண்ணன் தளத்தில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டு இருதீர்கள் அதே கேள்வியை இங்கு ஒரு முறை கேட்கிறீர்களா, ப்ளீஸ்???? உங்களுக்கு பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  31. வருகைக்கு நன்றி பட்டு மற்றும் உண்மைகள்....

    பதிலளிநீக்கு
  32. தனிநபர் தாக்குதலால், நீங்க சொல்ல வந்த கருத்து நம்பகத் தன்மை இழக்கிறது !

    பதிலளிநீக்கு
  33. //தனிநபர் தாக்குதலால், நீங்க சொல்ல வந்த கருத்து நம்பகத் தன்மை இழக்கிறது ! //
    கபிலன் இந்த பதிவில் எங்கே தனிநபர் தாக்குதல் இருக்கிறது? பதிவின் தலைப்பு தனிநபர் தாக்குதல் என்று சொல்ல போகிறீர்களா? தெளிவாக எதிர்பதிவுக்கு எதிர்பதிவு என்று சிராஜ் பாய் குறிப்பிட்டிருக்க நீங்கள் ஏன் பதிவு குறித்தே கருத்து தெரிவிக்காமல் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முயல்கிறீர்கள்? பதிவின் மையப்பொருள் குறித்து உங்களின் கருத்தை தெரிவிக்கலாமே கபிலன்.

    பதிலளிநீக்கு
  34. எனது கேள்வி ( அதே புளித்துப்போன கேள்விதான் என்னிடமிருந்து இந்த முறையும் )- மார்க்க அறிஞர்களாக தங்களை நிலை நிறுத்தி கொண்டு , மேலுலக வாழ்கை மட்டுமே உண்மை என்று பேசி, உறுதியாய் நம்பும் அந்த அறிந்ஞர்கள் ஒருவருக்கொருவர் சலாம் சொல்லி எவ்வாளவு நாளாகியிருக்கும்? உலகின் உண்மை மார்க்கத்தை உறுதியாய் நம்பும் இவர்களே இப்படி எனில்.... மற்றவர்களிடம் ஏன் அதனை நீங்கள் எதிர்பார்க்கவேண்டும். உங்களுக்கு தெரிந்த பதில்தான் - "மனிதன் மிக பலகீனமானவன்." இதில் நரேந்திரமோடியும், புஷ் ஹும் எந்த வகையில் வித்தியாசப்படுகிறார்கள்?!

    ஒரு தனிநபர் அப்படி நடந்துகொள்வதால் , முழு மார்க்கமே தப்பு என்று எப்படி சொல்லமுடியும் என்று கேட்டீர்களானால்... இதற்கும் சேர்த்து பதில் தாருங்கள்..

    என்னை சுற்றி நடந்த பல விசயங்களை ஆழ்ந்து நோக்கியபின் தோன்றிய கேள்வி -
    தங்களது வாழ்வில் அன்றாடம் எதிர் கொள்ளும் சிறிய சிறிய பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள இஸ்லாமியர் இஸ்லாமியத்தை துணைகொண்டு தீர்த்துகொள்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்வேன், காரணம், வழிபாடு குறித்த கேள்விகளுக்குத்தான் அதிகம் ஹதீஸ் எல்லாம் ஆராயப்படுகிறது. தற்போது நானே பாதிக்கப்பட்டிருக்கும் எனது குடும்ப பிரச்சனையில் இஸ்லாமிய கண்ணோட்டம் கொண்டு தீர்க்க யாரும் முன்வரவில்லையே?

    நமது தமிழ் இஸ்லாமியர்களுக்கு முக்கிய உணவு அரிசி, வடநாட்டு இஸ்லாமியர்களுக்கு கோதுமை, பசி வரும்போது அதனை தீர்த்துக்கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருக்கலாம், பிரச்சனைகளை தீர்க்க இஸ்லாம் ஒரே வழியைத்தான் சொல்லியிருக்கிறது. அது குரான் ! ஆனால் இங்கே பசியை ( பிரச்னையை) தீர்க்க சிலர் அரிசியையும், சிலர் கோதுமையையும் நாடுகின்றனர்., அது எப்படி ? காரணம் அவர்கள் வாழ்ந்த விதம் எப்படியோ, சூழல் எப்படியோ, பண வசதி எப்படியோ, அதுவே அவர்களது பிரச்னையை எப்படி தீர்த்துகொள்ளலாம் என்பதை வரையறுக்கிறது


    அடியேன் குறிப்பிட வரும் எல்லா பிரச்சனையும் தனிநபர் சார்ந்ததே! இஸ்லாம்தான் சரி என்பர் தனது இஸ்லாமிய நடவடிக்கைகளை காட்டி தன்னை உயர்த்திகொள்வதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை., சட்டத்தை காட்டி மட்டும்தான் என்றால் , அதில் எனக்கு உடன்பாடு இல்லை, காரணம் அடியேனும் மிக பலகீனமானவன்தான்!

    பதிலளிநீக்கு
  35. //விவாசாயத்திற்கு தேவையான மண்ணோ, நீரோ மற்றும் பூலோக அமைப்போ
    இல்லாத பாலைவனமான சவுதியை சோலைவனமா மாத்த அங்கங்க மணல், தண்ணி அது இது அப்படின்னு வாங்கி விவசாயத்த பெருக்க அந்த நாட்டு அரசு முயல்கிறது, அதில் குறிப்பிட தக்க அளவு வெற்றியும் பெற்று உள்ளது. நாம பூத்துக் குலுங்கும் சோலைவனமா உள்ள நமது நாட்ட பாலைவனமா மாத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம் என்பது தான் சுவனப்பிரியனோட கட்டுரையின் சாரம்.

    எவ்வளவு நல்ல கருத்து இது? எவ்வளவு உண்மையும் கூட. இதை எவ்வளவு ஆக்கபூர்வமான விவாதத்திற்கு உரியதாக நீங்கள் மாற்றி இருக்கலாம் ? அதெல்லாம் விடுத்து சவூதி அரேபியா என்ற பெயர் வந்து விட்டதா , உடனே எதிர்த்தாக வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையில் நீங்கள் கட்டுரை தீட்டியதோ ஏனோ?????//

    இதற்கெல்லாம் பல பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே இஸ்ரேல் நெகேவ் பாலைவனத்தை சோலை வனமாக மாற்றி விட்டது.

    லஞ்ச லாவண்யங்கள் ஏதுமின்றி குஜராத்தில் மோதி அரசு திறம்பட அரசை நடத்தி வருகிறது. அதையே இந்தியாவின் மற்ற நாடுகளிலும் பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லது.

    இப்பின்னூட்டத்துக்கு இசுலாமிய பதிவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என நினைக்கிறீர்கள்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  36. சகோ.டோண்டு ராகவன்,

    சரியான ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்...

    //இப்பின்னூட்டத்துக்கு இசுலாமிய பதிவர்கள் எவ்வாறு எதிர்வினை புரிவார்கள் என நினைக்கிறீர்கள்?//---எங்களை கோவி.கண்ணன் அண்ட் கோ போல சிந்திக்காதவர்கள் அல்ல என்று உணர்த்த விரும்புகிறீர்கள். நன்றி.

    சொட்டு நீர் பாசனம் மூலம் பெரியதொரு விவாசய புரட்சி பண்ணியது இஸ்ரேல். இதை ஒருவர் சொன்னால்... அதை கேட்டுக்கொண்டு அதை எப்படி செய்தார்கள்.. நாமும் அப்படி செய்வோம் என்று செல்வதுதான் ஆக்கப்போர்வமானது அறிவுப்பூர்வமானது... அதை விடுத்து.... 'லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை கொன்ற கொலைகார இஸ்ரேலை பின்பற்றவேண்டுமா' என்று யூத எதிர்ப்பு வெறி பிடித்து புத்திகெட்டு எதிர்பதிவு போட்டால் அவரைப்பற்றி என்ன சொல்வீர்கள்..?

    //லஞ்ச லாவண்யங்கள் ஏதுமின்றி குஜராத்தில் மோதி அரசு திறம்பட அரசை நடத்தி வருகிறது. அதையே இந்தியாவின் மற்ற நாடுகளிலும் பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லது.//---இது காவிப்பிரச்சாரத்தின் வடிகட்டின பொய்..! அவர் கூட்டாளி அண்ணா ஹசாரேவே 'குஜராத் & மோடி ஊழல் நம்பர் ஒன்' என்று சொல்லி இருக்கிறார்..!

    பதிலளிநீக்கு
  37. சரி, சகோ.டோண்டு....
    ஒருவேளை நீங்கள் சொன்னது உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். 'அதை மோடி எப்படி அமுல்படுத்துகிறார்' அதை ஆராய்வோமே அன்றி, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்ற கொலைகார மோடியை இவ்விஷயத்தில் பின்பற்றுவதா,,,, என மோடியை திட்டி பதிவு போட்டுவிட்டு... லஞ்சம் எவ்வளவோ மேல்... அது இருக்கட்டும் என்று அறிவுகெட்டத்தனமாய் எதிர்பதிவு போட மாட்டோம்..!

    இதுதான் வித்தியாசம். இதை மிகச்சரியாக எடுத்துக்காட்டிய த்தங்கள் பதிவுலக அனுபவத்துக்கு ஒரு சபாஷ்..!

    இஸ்ரேலைவிட அதற்கு முன்பே உலகிலேயே நீண்ட குடிநீர் கால்வாய் போட்டு பெரிய நிலபரப்பில் லிபிய பாலை வனத்தை சோலைவனமாக மாற்றிய மும்மார் கடாபி குறித்து தெரியுமா..? (கூகுள் எர்த்தில் சென்று பாலைவனத்தின் மத்தியில் கால்வாயையும் பசுமையையும் ரசியுங்கள்)

    பதிலளிநீக்கு
  38. அஸ்ஸலாமு அலைக்கும்!சகோ சிராஜ்!

    என் ஒரு பதிவை வைத்து தொடராக நான்கு பதிவா! எப்படியோ கோவி கண்ணன் தனது தவறை சரி செய்து கொண்டால் நல்லது.

    டோண்டு ராகவனும் உதாரணத்திற்கு இஸ்ரேலை கொடுக்கிறார். இஸ்ரேல் செய்யும் சிறந்த கண்டுபிடிப்புகளை பாராட்டுவோம். அதே சமயம் பாலஸ்தீனர்களுக்கும் உலக மக்களுக்கும் அவர்கள் செய்யும் தீமையையும் படம் பிடித்து காட்டுவோம்.

    குஜராத்தின் வளர்ச்சி என்பது அந்த மக்களுக்கு போய் சேர வேண்டியது. குஜராத்தின் முதல்வiராக காமெடி நடிகர் செந்தில் அமர்ந்திருந்தாலும் இந்த வளர்ச்சியையே குஜராத் பெற்றிருக்கும்.

    பதிலளிநீக்கு
  39. பதிவு ரொம்ப மனச பாதிச்சு இருக்கு போல இருக்கு...கொஞ்சம் வேலையா இருக்கேன்...ஒரு 2 மணி நேரத்தில ரிட்டன் வர்றேன்....

    பதிலளிநீக்கு
  40. ////லஞ்ச லாவண்யங்கள் ஏதுமின்றி குஜராத்தில் மோதி அரசு திறம்பட அரசை நடத்தி வருகிறது. அதையே இந்தியாவின் மற்ற நாடுகளிலும் பின்பற்றுவது எல்லோருக்கும் நல்லது.//---இது காவிப்பிரச்சாரத்தின் வடிகட்டின பொய்..! அவர் கூட்டாளி அண்ணா ஹசாரேவே 'குஜராத் & மோடி ஊழல் நம்பர் ஒன்' என்று சொல்லி இருக்கிறார்..!//
    அண்ணா ஹசாரேவும் முதலில் மோதியை பாராட்டிவிட்டு பிறகு “குஜராத்திலும் லஞ்ச ஊழல் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்” என பம்மினார். அவ்வளவே. இல்லாவிட்டால் மத சார்பர்றவர்கள் என தங்களை அவதூறாகச் சொல்லிக் கொள்ளும் பேர்வழிகளிடம் யார் உதை வாங்குவதாம்?

    அப்படியே லஞ்ச ஊழல் இருந்தாலும் 2007-ல் காங்கிரசார் தேர்தல் பிரசாரத்தில் கூறியிருப்பார்களே. அப்படியேதும் இல்லை என்பதை மகா ஃப்ராடான ராஜ்டீப் சர்தேசாயே வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டாரே.
    //இஸ்ரேலைவிட அதற்கு முன்பே உலகிலேயே நீண்ட குடிநீர் கால்வாய் போட்டு பெரிய நிலபரப்பில் லிபிய பாலை வனத்தை சோலைவனமாக மாற்றிய மும்மார் கடாபி//

    தவறு. கடாஃபி அதை 1970-களில்தான் செய்திருக்க வேண்டும், (அவர் 1969-ல்தான் ஆட்சிக்கே வந்தார்). இஸ்ரவேலர்கள் அதற்கு முன்னாலேயே செய்து விட்டனர்.

    @சுவனப்பிரியன்
    மோதி வருவத்ற்கு முன்னால் குஜராத்திலும் ஊழல், மின்வெட்டுகள், பர்றாக்குறை பட்ஜெட் ஆகியவை கோமாளி காங்கிரஸ் முதல்வர்கள் இருந்தபோது (செந்தில் எவ்வளவோ தேவலை) இருந்தன.

    மோதியிடம் ஒரு ஊழலைக் கூட பார்க்க முடியாது கோமாளி காங்கிரசார் 2007 தேர்தலில் தவித்த தவிப்பு மறந்து விட்டதா.

    கோவி கண்ணனை குறை கூறிய நீங்களும் அதே தவற்றை செய்வது நகைப்புக்குரியது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  41. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  42. //கபிலன் கூறியது...

    தனிநபர் தாக்குதலால்// அது நான் தான் கோ. உங்களுக்கு கோவமுன்னா என்னை திட்டிரு பாஸ்

    பதிலளிநீக்கு
  43. //இஸ்ரவேலர்கள் அதற்கு முன்னாலேயே செய்து விட்டனர்.//---மொத்த பூரண கும்ப முதல் மரியாதையும் அவர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது தவறு மிஸ்டர். டோண்டு..!

    Drip irrigation has been used since ancient times when buried clay pots were filled with water, which would gradually seep into the grass.

    Modern drip irrigation began its development in Afghanistan in 1866 when researchers began experimenting with irrigation using clay pipe to create combination irrigation and drainage systems.

    In 1913, E.B. House at Colorado State University succeeded in applying water to the root zone of plants without raising the water table. Perforated pipe was introduced in Germany[2] in the 1920s .

    Usage of plastic to hold and distribute water in drip irrigation was developed in Australia by Hannis Thill.[3]

    Refinement of this idea (involving a plastic emitter) was furthered in Israelby Simcha Blass and his son Yeshayahu. The first experimental system of this type was established in 1959.

    n the early 1960s, Blass developed and patented this method and the new dripper was the first practical surface drip irrigation emitter.

    http://en.wikipedia.org/wiki/Drip_irrigation

    மக்கள் நலனுக்கான சொந்த கண்டுபிடிப்புக்கு பேட்டன்ட் போட்டு சம்பாதிப்பதே அசிங்கம். இதில் அடுத்தவர் அறிவுக்கு பேடன்ட் போட்டு அதை இந்தியாவில் நடைமுறை படுத்தி... இஸ்ரேலிய ஆதரவு அப்பாவி டோன்டுக்கள் உட்பட இஸ்ரேலிய எதிர்ப்பு இந்தியர்களிடம் இருந்தும் வரியாக ஒரு பெரும் பணத்தை பிடுங்க நினைக்கும் இஸ்ரேலுக்கு வக்காலத்தா..? பலே..! பலே..! வெளங்கிரும்..! இஸ்ரேல் போன்ற தண்ணீர் இல்லாத பாலைவனமா நம் நாடு..? இங்குள்ள வற்றாத ஜீவா நதிகளை இணைத்து பசுமை புரட்சி காண முடியாதா..?

    நம் செல்வத்தை அவனிடம் கொண்டு போய் தண்டமாக கொட்டினால்தான் உங்களுக்கு மகிழ்ச்சியா மிஸ்டர் டோண்டு...? Please, don't do..!

    பதிலளிநீக்கு
  44. ///அண்ணா ஹசாரேவும் முதலில் மோதியை பாராட்டிவிட்டு பிறகு “குஜராத்திலும் லஞ்ச ஊழல் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்” என பம்மினார்.///

    ----அப்படீன்னா.... அண்ணா ஹசாரே பொய் சொல்கிறார் என்கிறீர்களா..?

    அவர் ஊழலுக்கு எதிராக போராடுவது எல்லாம் பொய்யா...?

    "முதலில் நான் தெரியாமல் அவசரப்பட்டு சொல்லிவிட்டேன்... இப்போது குஜராத்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஆராய்ந்து பார்த்துவிட்டு சொல்கிறேன்... குஜராத் இந்தியாவின் நம்பர் ஒன் ஊழல் மாநிலம்... முதல்வர் மோடி ஓர் ஊழல்வாதி"...என்றல்லவா சொன்னார்...?

    இந்த அறிக்கையை அவர் இதுநாள் வரை மாற்றவே இல்லையே..!?

    முழுப்பூசணிக்காவை சோற்றுப்பருக்கையில் மறைக்க ஏனிந்த முயற்சி மிஸ்டர் டோண்டு..?

    please, don't do..!

    பதிலளிநீக்கு
  45. ///அப்படியே லஞ்ச ஊழல் இருந்தாலும் 2007-ல் காங்கிரசார் தேர்தல் பிரசாரத்தில் கூறியிருப்பார்களே.///---ha..ha..ha..ha..

    இவ்வளவுதான் உங்கள் அரசியல் புரிதலா மிஸ்டர் டோண்டு..?

    கான்கிரஸ்காரந்தான் ஊழல் இல்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டுமா..? அப்பேற்பட்ட ஊழலுக்கு அப்பாற்பட்டவனா காங்கிரஸ் காரன்..? தேர்தல் பிரச்சாரத்தில் ஊழலை முன்னிலை படுத்தினால்... காங்கிரசை மக்கள் கேட்க மாட்டார்களா... "நீ மட்டும் என்ன ஒழுங்கா என்று"..? ஹா..ஹா..ஹா...

    காங்கிரஸ் மீது சில நாட்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொலை செய்த கரை இல்லை...!

    எனவே மோடி ஒரு மரண வியாபாரி என்றே பிரச்சாரம் செய்தனர்..! அதுதான் முக்கியம் என்று நினைத்தனர். தோல்வியின் பயனாக குஜராத்தில் மோடியைப்போன்ர மரண வியாபாரிகள் இன்னும் அதிகம் பேர் பொது மக்கள் எனும் பெயரில் உள்ளனர் என்று கண்டுகொண்டனர்.

    தேர்தலுக்கு பிறகு, காங்கிரஸ் மோடியின் ஊழலை பற்றியும் சொல்லித்தான் இருக்கிறது...

    இதோ லிங்க்...
    http://news.outlookindia.com/items.aspx?artid=729948

    Modi Not Appointing Lokayukta to Hide Corruption: Cong

    இதைத்தான் அண்ணா ஹசாரேயும் சொன்னார்.

    பதிலளிநீக்கு
  46. //தவறு. கடாஃபி அதை 1970-களில்தான் செய்திருக்க வேண்டும், (அவர் 1969-ல்தான் ஆட்சிக்கே வந்தார்). இஸ்ரவேலர்கள் அதற்கு முன்னாலேயே செய்து விட்டனர்.//---அடடே... அப்படியா..?

    நான் என்ன சொன்னேன்...?

    உலகிலேயே மிக நீண்ட மனித செயற்கை கால்வாய் திட்டம் போட்டது கடாபி தான் என்றேன்...!

    இதை இன்னும் இஸ்ரேல் முறியடிக்க வில்லை. எப்படி முடியும்..?

    இன்னும் அவ்வளவு தூரத்துக்கு பிற நாட்டின் நிலங்களை கள்ளத்தனமாக திருடி முடிக்க வில்லை...!

    திருடிய பின்னர் தானே அது பற்றி யோசிக்கவே முடியும்..? அதுவரை இந்த சாதனையை இஸ்ரேலுக்கு முன்பே லிபியா செய்து விட்டது என்றுதான் சொல்ல முடியும்..!

    இதைப்பற்றி மேலும் அறிய லிங்க்...
    http://en.wikipedia.org/wiki/Great_Manmade_River


    The Great Man-Made River (GMR, النهر الصناعي العظيم) is a network of pipes that supplies water from the Sahara Desert in Libya, from the Nubian Sandstone Aquifer System fossil aquifer. It is the world's largest irrigation project.

    According to its website, it is the largest underground network of pipes (2820 km) (ஹலோ மிஸ்டர் டோண்டு... உங்கள், இஸ்ரேல் இம்புட்டு நீளமா...?) and aqueducts in the world. It consists of more than 1,300 wells, most more than 500 m deep, and supplies 6,500,000 m3 (இஸ்ரேல் இம்புட்டு இடத்தை திருடிருச்சா..?) of fresh water per day

    In 1953, efforts to find oil in southern Libya led to the discovery of large quantities of fresh water underground. The Great Man-made River Project (GMRP) was conceived in the late 1960s and work on the project began in 1984.

    சியோனிச இஸ்ரேல் மற்றும் பாசிச மோடி பற்றி மட்டும் வானளாவ புகழும் தங்களை போன்றவர்கள்...

    என்றைக்காவது ஒரு முறையாவது இது போன்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த நல்ல விஷயங்கள் பற்றி சொல்லி இருக்கின்றீர்களா..?

    Please, don't do...

    பதிலளிநீக்கு
  47. சகோ ஆசிக்,
    இவரு என்ன புள்ளி விபரம் தெரிஞ்சிகிறவா இங்க வந்து இருக்காரு, கேள்வி OUT OF SYLUBBAS னு சொல்லிட்டு ஒரு வரில முடிக்கிறத விட்டுட்டு. என் பதிவுல இருந்ததுக்கும் அவர் பின்னூட்டத்துக்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்கா? அப்புறம் ஏன் சகோ விளக்கங்கள்?

    பதிலளிநீக்கு
  48. இங்கிலீஷ் ல எல்லாம் விபரம் குடுத்து இருக்கீங்க. நொண்டு அவ்வளவு வொர்த் இல்ல சகோ.

    பதிலளிநீக்கு
  49. அஸ்ஸலாமு அழைக்கும் திரு கண்ணன் எழுதியதை பார்த்து மிகவும் மன வருத்தம்தான் இர்ருந்தது . இறுதியாக எந்த மதத்தையும் கூருபிடவில்லை பொதுவாக தான் சொன்னேன் என்று பொய் சொல்கிறார்

    பதிலளிநீக்கு
  50. //காங்கிரஸ் மீது சில நாட்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொலை செய்த கரை இல்லை...!//

    ஆனால் அதைவிட பல மடங்கு அதிகமாக சீக்கியர்களை சமீபத்தில் 1984-ல் சீக்கியர்களை கொன்ற கறை இன்னும் உள்ளது. அதில் ஈடுபட்டவர்களை மந்திரிகளாக்கி அவர்கள் அழகும் பார்த்தனர்.

    ஊழல் சம்பந்தமாக தேர்தலுக்கு பிறகு அரை மனதுடன் கூறப்பட்டவை அந்த குற்றச்சாட்டுகள், காங்கிரசாரின் கோமாளித்தனத்தைத்தான் இது காட்டுகிறது.

    பிறகு வந்த உள்ளாட்சி தேர்தல்களில் மோதியின் கட்சி சார்பில் முசல்மான்களும் போட்டியிட்டதை மறந்தீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  51. நான் கூறியது பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது பர்றியே. அந்த ஐடியாதான் கடாஃபி செய்ததற்கும் இன்ஸ்பிரேஷன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  52. //----அப்படீன்னா.... அண்ணா ஹசாரே பொய் சொல்கிறார் என்கிறீர்களா..? //

    ஆம், அதுவும் கோமாளித்தனமான பொய். அவர்தான் முழுபூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்.

    இல்லாவிடில் தனக்கு மதச்சார்பற்றவர்கள் என பொய்யாக தங்களை குறிப்பிட்டுக் கொள்ளும் தாசில்தார்களின் ஆதரவு கிடைக்காது என நம்பிவிட்டதே அதற்கு காரணம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  53. எனது ஒரு பதிவில் மோடி அவர்களை மரணத்தின் வியாபாரியாகவே அழைத்து, வரவேற்று, சோ பேசியதை இங்கு மீண்டும் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2008/01/38-2.html

    ”Yes, I now invite this merchant of death:

    - to corruption,
    - to terrorism,
    - to nepotism,
    - to official lethargy,
    - to bureaucratic negligence,
    - to poverty and ignorance,
    - to the doctrine of despair

    to come and address this meeting.

    இடி போன்ற முழக்கத்துடன் கைதட்டல். மோடி அவர்கள் அரங்கத்துக்கு வந்தார். ஜெயகோஷம் அரங்கத்திலும் வெளியிலும். மணி மாலை 08.20. சோ மற்றும் மோடி என்னும் இருமாமனிதர்கள் மேடையில். மோடி அவர்கள் பேச ஆரம்பித்தார்”.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  54. அய்யா டோண்டு,

    உங்களுக்கு மன நிலை ஏதும் சரி இல்லையா??? பதிவுக்கு சம்பந்தமே இல்லாம பேசிகிட்டு இருக்கீங்க?? அனைவரும் நடுநிலையில் தான் விவாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் பின்னூட்டத்தில் மட்டுறுத்தல் வைக்கவில்லை. தயவு செய்து அதை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் பேசுபவராக இருந்தால் தயவு செய்து இங்கே வர வேண்டாம். பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விசயங்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். உங்களுக்கான தளம் இதுவல்ல. 10 பின்னூட்டம் கிட்ட போட்டுடீங்க அதில ஏதாவது ஒன்னாவது பதிவு சம்பந்தமாக இருக்கிறதா????

    பதிலளிநீக்கு
  55. நீங்க யாரையாவது ப்ரொமோட் பண்ண விரும்பினா தாராளமா பண்ணுங்க... பட் உங்க தளத்தில் தனிப்பதிவா போட்டு பண்ணுங்க. எனக்கு கூடத்தான் தாலிபான ரொம்ப பிடிக்கும். அதைலாம் இங்க நான் சொல்லிகிட்டா இருக்கேன்???

    பதிலளிநீக்கு
  56. ஏன் சொல்லலைன்னா இந்த பதிவுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல. மற்றபடி உங்கள் வருகைக்கும், யாருக்குமே தெரியாம இருந்த எனக்கு எதிர்ப்பதிவு போட்டு என்ன பிரபல படுத்தியதற்கும் நன்றி... மிக்க நன்றி....

    பதிலளிநீக்கு
  57. உங்க சேவை இந்த சமூகத்திற்கு இன்னும் அதிகம் தேவை..... அடுத்த பதிவு ரெடி ஆகிகிட்டு இருக்கு... அதுக்கும் நீங்க கண்டிப்பா எதிர்ப்பதிவு போடணும்.. இந்த விளையாட்டு எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. வாங்க சண்ட போட்டு சண்ட போட்டு விளையாடுவோம். ஆனா ஒரு விஷயம், சகோ ஆசிக், சுவனப்பிரியன், ஹைதர் அலி மற்றும் நண்பர்கள் மாதிரி குரான், ஹதீஸ் அப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு நான் வர மாட்டேன். ஏன்னா எனக்கு நல்லா தெரியும் அந்த மொழி உங்களுக்கு புரியாதுன்னு.... சோ, நான் உங்க வழில தான் வருவேன்.

    பதிலளிநீக்கு
  58. அப்புறம் இன்னொரு விஷயம்...இன்று நான் சென்னை புத்தக கண்காட்சிக்கு வருவேன்... நீங்கள் சென்னையாக இருந்தால், கண்காட்சிக்கு இன்று வருவதாக இருந்தால் சொல்லுங்கள், நேரடியாக சந்தித்து, நலம் விசாரித்து பின் கட்டிபிடித்து தரையில் விழுந்து சண்டைபோடுவோம். அப்புறம் சோ கிட்ட சொல்லி சமாதானம் ஆகிக்கலாம். போன் நம்பர் என் தளத்திலே இருக்கிறது. Give me a buzz .

    பதிலளிநீக்கு
  59. சாரி கபிலன்....
    உங்கள் பின்னூட்டத்தை மறந்தே விட்டேன்.... நான் சொல்ல வேண்டியதை சகோ ஷேக் தாவூத் சொல்லிவிட்டார். அது தான் என் கருத்தும். மற்றபடி என் பதிவை பார்த்த பிறகு அது நம்பகத்தன்மை உள்ளதா??? இல்லை போலி ஆனதா என்று முடிவு செய்வது உங்கள் மனசாட்சிதான் நண்பா. அது எப்படி சொல்கிறதோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் முதலில் தன் மனசாட்சிக்குத்தான் கட்டுப்பட வேண்டும். அது சொல்வது தான் சரியாக இருக்கும்.

    வருகைக்கு நன்றி. மற்றொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  60. //இன்று நான் சென்னை புத்தக கண்காட்சிக்கு வருவேன்... நீங்கள் சென்னையாக இருந்தால், கண்காட்சிக்கு இன்று வருவதாக இருந்தால் சொல்லுங்கள், நேரடியாக சந்தித்து, நலம் விசாரித்து பின் கட்டிபிடித்து தரையில் விழுந்து சண்டைபோடுவோம். அப்புறம் சோ கிட்ட சொல்லி சமாதானம் ஆகிக்கலாம். போன் நம்பர் என் தளத்திலே இருக்கிறது.//

    அன்பின் சிராஜ் ஐயா,

    இப்போதுதான் புத்தக கண்காட்சியில் இலக்கியவாதிகள் சட்டை கிழிப்புகள் நடந்து முடிந்துள்ளன.

    http://krpsenthil.blogspot.com/2012/01/blog-post_13.html

    அதற்குள் அடுத்ததா? அலங்காநல்லூர் தோத்தது போங்க. தயவு செய்து சனிக்கிழமை மதியம் போட்டியை வைத்துக்கொள்ளவும். ஏனெனில் சனி மாலை 6.30 மணிக்கு சோவின் துக்ளக் ஆண்டுவிழா நிகழ்ச்சி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ளது. அதனால் சண்டை முடிந்து அங்கு போக சரியாக இருக்கும் என்பது எமது கோரிக்கை.

    பதிலளிநீக்கு
  61. நீங்கள் மோதிக்கொண்டதை பார்த்து கோவி கண்ணன் வீட்டுக்கு அருகில் ஓடும் பாலாறும் தேனாறும்! எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுகளை சிலர் போடலாம். அதற்கு போட்டியாக எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவும் வரலாம். அதை எல்லாம் பார்த்துவிட்டு பொறுமையாக நான் ஒரு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவு போட உத்தேசித்துள்ளேன். அதற்கு நீங்கள் எதிர்பதிவு போட்டால் அதற்கும் எதிர்பதிவு போட தயாரென இத்தர்பாரில் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  62. ஹா..ஹா...ஹா..ஹா...ஹா..ஹா...
    சிவா,
    உங்க கம்மண்ட பார்த்திட்டு நானும் கசாலி யும் விழுந்து விழுந்து சிரித்தோம்... இன்னும் சிரிப்பு அடங்கவில்லை....
    வயிறு வலிக்கிறது சிவா....
    lol

    பதிலளிநீக்கு
  63. பெரிய சண்டைய காமெடி ஆக்கிட்டீங்களே.. இது நியாயமா..... (இன்னும் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்..)

    பதிலளிநீக்கு
  64. /* எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுகளை சிலர் போடலாம். அதற்கு போட்டியாக எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவுக்கு எதிர்பதிவும் வரலாம். */
    கடைசி வரியில இன்னொரு எதிர்ப்பதிவு வந்திருக்கணும். முதல் வரியில் 4 . இரண்டாவது வரியில் 5 வரணும்.

    பதிலளிநீக்கு
  65. /* அன்பின் சிராஜ் ஐயா, */
    என்ன திடீர்னு அய்யா கொய்யான்னுகிட்டு.....

    பதிலளிநீக்கு
  66. ஐயோ சிவா.... நான் டோண்டு அய்யாவோட மோதவே இல்லையே....
    என்னோட தளத்தில் அவருக்கு பதில் மட்டும் சொல்லி உள்ளேன்... அவர் போஸ்ட் ல போய் பாருங்க நம்ம பேரே இருக்காது... அவ்வளவு ஏன்?? மைனஸ் வோட்டு கூட நான் போடல... பிளஸ் வோட்டு போடலாமான்னு யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.... அப்பதானே மறுபடியும் நம்மள எதிர்த்து பதிவு போட்டு நம்மள பேமஸ் ஆக்குவாறு...

    பதிலளிநீக்கு
  67. சலாம் சர்புதீன்,
    உங்களுக்காக நான் ஒரு பதிலை மனதில் நினைத்து இருந்தேன்... பின்னர் எதார்த்தமாக நண்பருடன் பேசுகையில் உங்கள் பற்றிய பேச்சும் வந்தது. அதன் பின்னர், உங்களிடம் நேரடியாக பேசுவது தான் முறையாக இருக்கும் என்று என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். சற்று கடினமாக நடந்து இருந்தால் என்னை மன்னிக்கவும். இறை நாடினால் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  68. /* சற்று கடினமாக நடந்து இருந்தால் */
    இதை .... "நான் உங்களிடம் சற்று கடினமாக நடந்து இருந்தால்" என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  69. கடவுள் நாடினால் , கோவை வரும் போது எனது வீட்டில் தங்குவது போல் வாருங்கள்.

    எனது மனைவி சொன்ன ஒரு வார்த்தை என்னை பற்றி! athu ippa உங்களிடம் ...

    " உனக்கு கோவமே வராதா? போப்பா ...சண்ட போட்டாத்தான்ப அப்பப்ப லைப் சுவராசியமா இருக்கும்.. சரியா வியாக்கியான பார்டிப்பா நீயி....."

    பதிலளிநீக்கு
  70. பாராட்டுக்குரிய கருத்துக்கல்.

    பதிலளிநீக்கு
  71. ஆரம்பிச்சிடாங்கயா ஆரம்பிச்சிடாங்க!



    நீ அவன அடி அவன் உன்ன அடிக்கட்டும்

    நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து ரோட்ல போறவன

    அடிங்க அப்புறம் எல்லோரும் சேர்ந்து ஒட்டு

    மொத்தமா அடிசிக்குவோம் இதெல்லாம் ஒரு பொழப்பு

    போங்கய்யா போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Sna ,

      ஆரெல்லாம் ஓடி முடிஞ்சு வத்தி ரொம்ப நாளாச்சு. இப்ப வந்து பின்னூட்டம் போட்டு இருக்கீங்க. பரவாயில்லை. பிள்ளைகளெல்லாம் நல்லாத்தான் படிசிகிட்டு இருக்காங்க நண்பரே.

      வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க.

      நீக்கு
  72. யார் விபச்சாரம் செய்தாலும் மரண தண்டை தான் தீர்வு என்பது என் கருத்து. அது என் குடும்பத்தாராக இருந்தாலும் சரியே, ஏன் நானாக இருந்தாலும் சரியே.///

    அஸ்ஸலாமு அழைக்கும், மாஷா அல்லாஹ் அருமையா பதிவு !!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters