வியாழன், செப்டம்பர் 13, 2012

சில ஈழப் பதிவர்களின் ஹிட்ஸ் வெறியும், பிரிவினை வாதமும்....

முக்கிய முன் அறிவிப்பு: இப்பதிவானது பதிவுலகில் சைக்கோ போல் சுற்றி திரியும் ஹிட்ஸ் வெறியர்களுக்காக மட்டுமே..  என்னையும் மீறி தவறுதலாக எங்கேனும் ஒட்டுமொத்த ஈழப்பதிவர்களை குறைகூறும்படியான வார்த்தைகள் அமைந்தால் சுட்டிக்காட்டுங்கள். அவ்வார்த்தைகள்/வசனங்கள் உடனே நீக்கப்படும்! (ஈழ பதிவர்கள்னு பொதுவா சொல்லக்கூடாதாம், இஸ்லாமிய வெறியர்கள் கட்டளை இட்டுள்ளார்கள், இந்த முறை மட்டும் கட்டுப்பட்றேன்னு சொல்லி இருக்கேன்)

சில நாட்களாக  எந்த வித சச்சரவுகளும் (பதிவர் சந்திப்பு குழுவிற்கும் மூத்த பதிவர்களுக்கும் இடையேயான கருத்துவேறுபாடு தவிர்த்து) அல்லாமல் அமைதியாகவே இருந்துவந்தது. இது இந்த ஹிட்ஸ் வெறியர்களுக்கு பொறுக்கவில்லை போலும்! . சில நாட்களுக்கு முன் நிரூபன் இஸ்லாமியர்களை தாக்கி ஒரு பதிவு போட, அவர்கள் இயக்கிவரும் வானொலியை பிரபலப்படுத்த இத்தகைய  விளம்பரம் தேவைப்படுகிறது போலும்  என  கண்டுக்கொள்ளாமல் விட்டாச்சு. அவர்களின் நோக்கம் அப்போதும் புரியவில்லை! வெறும் ஹிட்ஸ், விளம்பரம் என்ற அளவிலேயே பார்க்கப்பட்டது! அதன் பின்னும் ஐடியாமணி பதிவு போட  ஹிட்ஸ்  என்ற கண்ணோட்டத்திலேயே  அதையும் நினைத்தேன்! ஆனால்  இன்றைய பதிவில் தான் தெரிந்தது இவர்களின்  நோக்கம் என்னவென்று!
//அல்லாவுக்காகச் செய்யப்படும் கொலைகள் பற்றிக் கேள்வி கேட்டால், அவர்கள் இந்துக் கடவுள்களுக்காகச் செய்யப்படும் கொலைகள் பற்றித்தானே ப்பேசோணும்! அப்பத்தானே நாமும் எம் பக்க தவறுகளைத் திருத்த முடியும்!//

அட்ரா...அட்ரா...அட்ரா... இந்து-முஸ்லீம் பிரிவினை ஒன்று மட்டுமே இவர்களின் நோக்கம் என்று  இந்த பதிவில் இருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது.,..   நாம் அல்லாஹ்வை தாக்கினால் இவர்கள் இந்து கடவுளை தாக்கக்கூடும்... அப்ப தான் பதிலுக்கு  மத்த பதிவர்களும் இஸ்லாமியர்களை தாக்குவாங்க... பதிவுலகில் மதக்கலவரம் வரட்டும்..  அமைதி குலையட்டும். ஆளாளுக்கு தனித்தனியா பிரிஞ்சு போகட்டும்... நாம ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கலாம்... சூடேத்திவிடலாம்... இதான் இவர்களின் நோக்கம்.. உங்க வாயாலேயே தெரியப்படுத்தியதற்கு நன்றிங்க!

ஏன் சார்.... இப்படி இரு பிரிவினர்களுக்கிடையே  பிரச்சனையை உண்டு பண்ணுவதால்  எதாவது பத்து பைசாவுக்கு ப்ரோஜனம் இருக்கா சொல்லுங்க?? இல்ல பிரான்ஸ்ல மால் கட்ட போறீங்களா? 

ஹிட்ஸ் வாங்குறதுக்கு 1000 வழி இருக்குங்க... ஏன் இந்த கேவலமான வழிய தேர்ந்தெடுக்கிறீங்க....???

எங்கனாலயும்....
 "பிரபாகரன் சிறந்தவறா.. ராஜபக்சே சிறந்தவரா???"
 "பிரபாகரன் சிறந்தவரா??? முல்லா உமர் சிறந்தவறா" னு பதிவு போட முடியும்.... பட் பெரும்பான்மை ஈழ மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்த விரும்பவில்லை... நேத்து பேசினதே மனசு இன்னும் ரணமா இருக்கு...

இந்த பதிவ ரொம்பா சூடா எழுதி இருக்க முடியும் சகோஸ்.... இந்த சண்டை போரடிக்குது எனக்கு.... How long???? hi..hi..hi..hi....

டிஸ்கி-1 : எனக்கு இன்னும் பசுமையா நியாபகம் இருக்கு.. கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஈழ பதிவர்களுக்கும் இஸ்லாமியரகளுக்கும் சண்டை வந்தது.. அதன் பின் சில மாதங்கள் கழித்து ஈழ பதிவர்களுக்கும், தமிழக பதிவர்களுக்கும் சண்டை வந்தது...அப்ப நானும், ஆசிக்கும்(மனிதாபிமானி) பிரிவினைவாதத்தை ஆதரிக்க முடியாதுன்னு பதிவு போட்டோம்... அப்பொழுது நாங்கள் நினைத்து இருந்தால் இப்ப நீங்க பிடிக்க நினைக்கிற மீன ஈசியா பிடிச்சு இருப்போம்... நீங்கள் இப்படி நடந்துகொண்ட பிறகும் அந்த முடிவிற்காக நாங்கள் பெருமையே கொள்கிறோம்... ஏனெனில் எங்கள் செயல்களுக்கான கூலியை இறைவனிடமே எதிர்பார்க்கிறோம்..மனிதர்களிடம் அல்ல....

டிஸ்கி-2 : காலைல ஒரு SMS .. நான் நேத்து ரிஷியோட தளத்தில போட்ட கமெண்ட்ட Q பிராஞ்ச்க்கு அனுப்பிட்டாங்களாம்...வருண்னு ஒருத்தர் மும்பைல இருந்து மெஸேஜ் பண்ணி இருந்தார்... டைம் வேஸ்ட் பண்ணாதிங்க சார்... நம்ம பேர் 6 வருஷத்துக்கு முன்னாடியே அந்த லிஸ்ட்ல வந்திடுச்சு வேறு காரணங்களுக்காக....அய்யோ..அய்யோ......54 கருத்துகள்:

 1. // நம்ம பேர் 6 வருஷத்துக்கு முன்னாடியே அந்த லிஸ்ட்ல வந்திடுச்சு வேறு காரணங்களுக்காக....அய்யோ..அய்யோ......//

  அஹ்ஹூ அஹ்ஹூ!!!

  :-))))))))

  பதிலளிநீக்கு
 2. @ஆமினா

  ஏன் இருமல்??? இப்ப என்ன ஆகி போச்சுன்னு இருமுறீங்க???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் அவங்க ரொம்ப நாள்-ஆ இப்டித்தான் இருமிக்கிட்டு கெடக்குராங்க

   நீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. பதிவுலகில் பிரிவினை தூண்டும் *சில* ஈழப்பதிவர்களூக்கு என் வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், கண்டனத்துக்கும் நன்றி.... அடிக்கடி இந்த ஏரியா பக்கம் வாங்க..படி கடை இனி அடுத்து டிசம்பரில் தான் திறக்கப்படும்...

   நீக்கு
 5. பதில்கள்
  1. மீ த்ரீ.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   நீக்கு
 6. ஹா ஹா சகோ சிராஜு உங்களுக்கு புரியவில்லை அவர்களை பொறுத்தவரை முருகனை திட்டினால் கோபம் வராது, ஆனால் பிரபாகரனை திட்டுங்கள் கோபம் வரும் எனென்றால் பிரபாகரன் அவர்களை பொறுத்தவரை முருகனுக்கு மேல்.

  பிரபாகரனை திட்டுவதிலிருந்து உங்களை திசைதிருப்பி அதே சமயத்தில் பொதுவான மாற்றுமத சகோதரர்களிடம் பிரிவினை உருவாக்குவது தான் அவர்களின் ஒரு கல்லில் டூ மேங்கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // பிரபாகரனை திட்டுவதிலிருந்து உங்களை திசைதிருப்பி //

   அவுக திருப்புனா..நான் திசை திரும்பிடுவமா??? அப்படியே திரும்பினாலும் நீங்க விட்ருவீங்களா..நேர் வழிக்கு திருப்பிட மாட்டீங்க....

   // அவர்களின் ஒரு கல்லில் டூ மேங்கோ//

   அதெல்லாம் ஒரு மாங்கா கூட அடிக்க முடியாது....

   வருகைக்கு நன்றி சகோ... அடுத்து டிசம்பர்ல, வந்திடுங்க....அச்ச்ச்ச்ச்ச்ச்.....

   நீக்கு
 7. //இந்து-முஸ்லீம் பிரிவினை ஒன்று மட்டுமே இவர்களின் நோக்கம் என்று இந்த பதிவில் இருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது//
  //ஹிட்ஸ் வாங்குறதுக்கு 1000 வழி இருக்குங்க... ஏன் இந்த கேவலமான வழிய தேர்ந்தெடுக்கிறீங்க....???//
  ஐய் இப்படித்தான் கழுவுகிறார்களா வயிற்றை. நல்ல மந்தி மாதிரியே ஓசிக்கிறாங்கையா. துப்பு கெட்டவனுங்கா இப்படி தான் செய்வானுங்க, இது பேசமா ராஜ்பச்சே போய் அய்க்கும் நெய்கும்மாகிலம்மல்லா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி தான் தன்னத்தானே அல்லக்கைன்னு கூப்பிட்டுக்கிற ஒருத்தர் பதிவுலகில் மது பற்றி சண்டை வந்த போது, இஸ்லாமிய சகோதரிகள் கலந்துக்க கூடாதுன்னு மதவாதிகள் நினைக்கிறாங்க அத தடுக்கத்தான் இப்படி பதிவு போட்றாங்கன்னு அள்ளி விட்டார்...

   கடைசில அந்த நிகழ்ச்சியில் இரண்டு சகோதரிகள் கலந்து அவங்க மூக்க உடைச்சாங்க...

   நீக்கு
 8. சலாம் சகோ.சிராஜ் ...

  உலகம் முழுக்க இவர்களின் வழி ஒரே போல் தான் உள்ளது ..."சும்மா இருக்குறவன் தலைல கொட்டிட்டு , பதிலுக்கு அவன் கொட்ட வந்தா போதும் ...சார்..சார் இவன் என்ன கொட்ட வர்ரான்"...டவுசர் பசங்க...

  இந்துத்துவ தீவிரவாதிகள் இதேதான் செய்கிறார்கள்... எனது ஊரான தென்காசியில் RSS அலுவலகம் உள்ளே தானே குண்டுவைத்து விட்டு கலவரத்தை தூண்ட நினைத்த வீரர்கள் (!!!)...இன்னும் லிஸ்ட் இருக்கு ...தற்போது அது தேவை இல்லை..

  தற்போது இஸ்லாத்தை பற்றி தரக் குறைவாக ஒரு படத்தை எடுத்து விட்டு...இப்போது லிபியாவில் குண்டு மழை பொழிய போர்க்கப்பல்களை அனுப்பி இருக்கிறது அமெரிக்கா...இப்படி செய்தல் இப்படி நடக்கும் என்று குழந்தைக்கும் தெரியும் எனும் போது ஒரு இஸ்ரேலை சேர்ந்த யூதன் எடுத்த திரைப்படத்தை எவ்வளவோ தடை செய்ய கோரியும் படத்தை தடை செய்ய மனம் இல்லாமல் போருக்கு தயார் ஆகிறது என்றால் இவர்களின் திட்டமிட்ட சதி உலகுக்கு தெரிகிறது...எல்லோருக்குமே டவுசர் சிந்தனை தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணே...

   உங்க வருகைக்கு நன்றி... சீக்கிரமே தளம் ஆரபிச்சு அதகளம் பண்ணுங்க...மக்கு பின்னூட்டம் தான் பிடிக்கும்..நீங்க போஸ்ட் போடுங்க, மெயில் ஐடிக்கு லிங்க அனுப்புங்க.. நான் வந்திட்றேன்... டீல் ஓக்கேயா???

   நீக்கு
 9. அந்தப் பதிவை வாசிச்சேன், இந்தப் பதிவை வாசிச்சேன்...னு எழுதிருக்கீங்க. அம்புட்டு வெட்டியாவா இருக்கீங்க பாஸ்?

  சாயம் வெளுத்துப்போனதுகளையெல்லாம் படிச்சு டைமை வேஸ்ட் பண்ணாதீங்க. காலம் பொன் போன்றது!! :-))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ஹுஸைனம்மா...

   // காலம் பொன் போன்றது!! :-)))))) //

   இன்ஷா அல்லாஹ்... இனி பதிவு போட்ற ஐடியா இல்லை.. கடுப்பா இருக்கு..ஒரே விஷயத்த திருப்பி திருப்பி பேசிகிட்டு...

   நீக்கு
 10. அவனுக இயக்கம் தான் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம், அவனுக ஸ்கிரின்ஷாட்டை கியூ பிராஞ்சுக்கு அனுப்பினா அவ்வளவு தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Q பிரான்ச் போலிஸ்காக வெயிட்டிங்ல இருக்கேன்.. அப்டி மட்டும் வந்தாங்க கொள்ளப் பேரு உள்ற போவானுக.. வரட்டும், வந்த பிறகு தான் இருக்கு நிறைய பேருக்கு வேட்டு....

   நீக்கு
 11. ////சில நாட்களுக்கு முன் நிரூபன் இஸ்லாமியர்களை தாக்கி ஒரு பதிவு போட, அவர்கள் இயக்கிவரும் வானொலியை பிரபலப்படுத்த இத்தகைய விளம்பரம் தேவைப்படுகிறது போலும் என கண்டுக்கொள்ளாமல் விட்டாச்சு. அவர்களின் நோக்கம் அப்போதும் புரியவில்லை! வெறும் ஹிட்ஸ், விளம்பரம் என்ற அளவிலேயே பார்க்கப்பட்டது! அதன் பின்னும் ஐடியாமணி பதிவு போட ஹிட்ஸ் என்ற கண்ணோட்டத்திலேயே அதையும் நினைத்தேன்! ////

  இப்பூடியெல்லாம் பதிவு போட்டார்களா நானும் அதையெல்லாம் படிக்கவோயில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யார் படிச்சா சகோ?? நானும் படிக்கல.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

   நீக்கு
 12. இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி எதை சாதிக்கபோகிறீர்கள் சிராஜ்?
  இவர்கள் எல்லாம் தெரிந்துஇருந்தும் தெரியாதது போல்நடிப்பவர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி எதை சாதிக்கபோகிறீர்கள் சிராஜ்? //

   இந்த பதிவுக்கான உண்மையான காரணத்த சொன்னா என்ன கொன்னே புடுவீங்க...
   ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன் சகோ...இனி டீக்கடையில் கருத்து கேட்ட பின்பே பதிவெழுதுவேன்...

   நீக்கு
 13. //அந்தப் பதிவை வாசிச்சேன், இந்தப் பதிவை வாசிச்சேன்...னு எழுதிருக்கீங்க. அம்புட்டு வெட்டியாவா இருக்கீங்க பாஸ்?

  சாயம் வெளுத்துப்போனதுகளையெல்லாம் படிச்சு டைமை வேஸ்ட் பண்ணாதீங்க. காலம் பொன் போன்றது!! :-))))))//

  வழி மொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் வழிமொழிகிறேன்..

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணே...

   நீக்கு
 14. பதிவுலகில் எழுத எவ்வளவோ இருக்கு .. ஒருவர் மாறி ஒருவர் எதிர்ப்பதிவு போட்டுக் கொண்டே இருந்தால் இருவருக்கும் டைம் வேஸ்ட்.. அதுவும் எதிர்ப்பதிவு போடுகின்ற டாப்பிக் பயனில்லாத ஒன்றாகும் ... !!!

  இஸ்லாமிய வகாபிய பதிவர்கள் - ஈழ தமிழ் புலி ஆதரவுப் பதிவர்கள் சற்றே நிதானத்துக்கு திரும்ப வேண்டும் என ..

  இடியப்ப பூச்சாண்டிக் கடவுளிடம் பிரார்த்தனை செய்துக் கொள்கின்றேன் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்பால் செல்வன் சாரே எப்படி உங்களால் நாக்கை சுழற்றி பேச முடிகிறது?

   அவர்கள் பதிவுக்கு சென்று எங்கள் நபியை சிறுமைப்படுத்தியும் அவர்களின் பிரபாகரனை உயர்த்தியும் கருத்துச்சொல்லி அவர்களை குஷிப்படுத்துகிறீர்கள் இங்கே வந்து நிதானத்துக்கு திரும்பவேண்டும் என நாட்டாமை பண்றிங்க..

   உங்களின் இரட்டைவேடம் எப்பவோ வெளுத்துப்போச்சு நண்பரே!!

   //அதுவும் எதிர்ப்பதிவு போடுகின்ற டாப்பிக் பயனில்லாத ஒன்றாகும் ... !!!//

   ஓஹோ மற்றவர்கள் போடுவது மற்றும் ரொம்ப பயனுள்ளதோ?

   நீக்கு
  2. வெறும் பிரபாகரனை வைத்து பதிவு எழுதினால் அதற்கு இணையாக எம்மால் கருத்து போட முடியும் சகோ... !!! இதில் இரட்டை வேடமும் இல்லை ஒன்றும் இல்லை .. நீங்கள் இல்லாத மத சண்டையை பதிவுலகில் ஏற்றிவிட நினைப்பது போல இருக்கு .. இதனை யார் முதலில் ஆரம்பித்தார்கள் என எமக்குத் தெரியும் .. !!!

   முகம்மது என்ற ஒரு மனிதருக்காக வாழும் காலத்தையும் வருங்காலத்தையும் இழந்து வருகின்றது இந்த உலகம். நேற்று லிபியாவில் நடந்ததைப் பாருங்கள் .. முதலில் குறைகள் உங்களிடம் உள்ளன. அவற்றை திருத்திவிட முயன்றால் நல்லது .. இல்லை என்றால் இந்த எதிர்ப்பதிவுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்..

   இந்த பதிவில் எதாவது பயன் இருக்கா சொல்லுங்கள் ... என்னத்த சொல்ல.. நடத்தி முடியுங்கள் .. உங்கள் தலையில் நீங்களே மண்வாரி போட்டுக் கொள்கின்றீர்கள் .. ஆனால் கெட்ட பெயர் அனைத்து முஸ்லிம்களுக்கும் என்பது தான் எனது வருத்தமே ... ! என்னவோ பண்ணிட்டு போங்க ..

   ஏற்கனவே மாத்தியோசி மணியிடம் சொல்லிவிட்டேன் இதேக் கருத்துக்களை. வேறு நல்ல விடயங்களை எழுதும் படி ... பார்க்கலாம் என்ன நடக்கின்றது என ...

   நீக்கு
  3. // நபியை சிறுமைப்படுத்தியும்// முகம்மதுவை யாம் சிறுமைப்படுத்தவில்லை சகோ. எப்படி பிரபாகரன் கொலைக்காரனோ, அதே போன்று தான் முகம்மது உட்பட பல வரலாற்று மனிதர்களையும் யாம் பார்க்கின்றோம். ராஜ ராஜ சோழன் கூட அதில் அடக்கமே... !!! நீங்கள் நபியாக ஏற்றுக் கொள்வதால், அவர் குறித்து யாம் ஆய்வு செய்யவோ, கருத்து சொல்லவோ என எதிர்ப்பார்ப்பது சரியான முறையல்ல சகோ. !!! நாங்கள் முகமது குறித்த தகவல்களை புதிதாக புகுத்தவில்லை. உங்கள் ஹதித்கள் தான் அப்படி கூறுகின்றன.. இல்லையா ஆமாவா ? அவ்வளவு தானுங்கோ ... !!!

   நீக்கு
  4. சகோ இக்பால் செல்வன் மற்றும் ரியாஸ்...

   இப்பொழுதுதான் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்கிறேன்... ஒரு தூக்கம் தூங்கி எழுந்து பிரஷ்ஷா வந்து பதில் சொல்றேன்...அது வரை எதிர் கோஷ்டி மாத்தி மாத்தி பதிவா போட்டு புலம்பிகிட்டு இருப்பாங்க...அத படிச்சு பார்த்து டைம் பாஸ் பண்ணிகிட்டு இருங்க..

   இன்று எனது அடுத்த பதிவான "பிரபாகரனா?? ராஜபக்சேவா??" என்ற தலைப்பில் எழுதலாம்னு இருந்தேன்... இந்த ஆட்டம் ரொம்ப போரிங்கா இருக்கு...ரியலி..பிலிவ் மீ.. சோ வேணாம்னு முடிவு பண்ணிட்டேன்....

   நீக்கு
  5. சகோ இக்பால் செல்வன்...

   // இஸ்லாமிய வகாபிய பதிவர்கள் //

   சும்மா...சும்மா வகாபிய பதிவர்கள், வகாபியிசம் என்று புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை...இனி இஸ்லாத்தில் உங்கள் கூற்றுபடி வகாபியர்களின் கையே ஓங்கும்...இதை யாரும் தடுத்துவிட முடியாது...பெரும்பான்மை முஸ்லிம்களே இவர்களை அடக்க வழி தெரியாது விழி பிதுங்கி நிற்கிறார்கள்..நீங்கள் எல்லா தூசு சகோ... அவர்களின் அசுர வெற்றிக்கு காரணம் அவர்களின் போராட்ட குணமும், ஆழ்ந்த இஸ்லாமிய அறிவும், எதற்க்கும் அஞ்சாமல் களப்பணி ஆற்றும் பாங்கும் ஆகும்.... இனி அவர்களின் வீழ்ச்சி அவர்களால் ஏற்படுத்திக்கொண்டாலே ஒழிய வெளி ஆட்களால் அறவே முடியாது என்பதே எதார்த்தம்.. அவர்கள் தங்கள் வேர்களை நீங்கள் நினைத்ததை விட ஆழமாகவே ஊன்றிவிட்டார்கள்....

   நீக்கு
  6. // இந்த பதிவில் எதாவது பயன் இருக்கா சொல்லுங்கள் ... என்னத்த சொல்ல.. நடத்தி முடியுங்கள் .. உங்கள் தலையில் நீங்களே மண்வாரி போட்டுக் கொள்கின்றீர்கள் .. //

   நீங்க நடுநிலையா இருக்கேனு சொல்றீங்க... மத்தவங்க நீங்க நடுநிலையா இல்லைனு சொல்றாங்க..அது அவங்க பார்வை நான் ஒன்றும் சொல்ல முடியாது... நான் உங்களை நடுநிலையாளராகவே எண்ணிக்கொள்கிறேன்...
   நீங்கள் சொல்லுங்கள்....இது எதிர்கருத்தா?? இல்லை வம்பை நான் ஆரம்பித்தேனா??? நான் யாரிடமாவது வலிய வம்பு செய்தேன் என்ரு உங்களால் சொல்ல முடியுமா?? இதுவரையும் சொல்ல முடியாது, இனியும் சொல்ல முடியாது , இன்ஷா அல்லாஹ்.. ஏன்னா எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் அது போன்றது...ஒரு போதும் நாங்கள் தாக்குதலை ஆரம்பிக்க மாட்டோம்.. நாங்கன்னு சொல்ல மாட்டேன்..அடுத்தவருக்காக நான் பேச முடியாது.. நான் ஆரம்பிக்க மாட்டேன்....

   தரம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....இங்கு உள்ள பின்னூட்டங்களையும் மாற்று கருத்துள்ளவர்களின் பின்னூட்டங்களையும் உற்று நோக்குங்கள், தரம் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்...

   நீக்கு
 15. ஹுசைனம்மா சொல்வது போல்,இவ்வாறான பதிவெல்லாம் படிப்பதும் கருத்துச்சொல்வதும் டைம் வேஸ்ட்தான் இருந்தாலும் மனசு கேட்கவில்லை!!

  மனியின் பதிவுக்கான பின்னூட்டத்தை பேஸ்புக்கில் போட்டைன் அதை இங்கேயும் தருகிறேன்..


  //உலகம் முழுக்க இஸ்லாமிய பயங்கரவதிகள் செய்யும் கொடுமைகள் பற்றி நாம் படம் போட்டு கேள்வி எழுப்பும் போது, ஒரு அறிவுள்ள, படித்த முஸ்லிம் என்ன செய்வான் என்றால் “ தோ பாருங்க! அவங்க ஒருசில பேர் செய்யும் தப்புக்காக, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அப்படிப் பார்ப்பது தவறு” என்ற ரீதியில் தான் விளக்கம் தருவார்கள்!//

  இந்த ஒரு விடயத்துக்கு மட்டும் எனக்குத்தெரிந்தவரை நான் பதில் சொல்ல விரும்புகிறேன்..உங்கள் நண்பர்கள் இந்த பதிலையும் என்னைய் கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை என்று..

  இங்கே இஸ்லாத்தின் பெயரில் நடைபெறும் தீவிரவாதத்தை சரி என்பதோ அவற்றுக்கு நியாயம் பேசுவதோ எனது நோக்கமல்ல!!

  எங்களுக்கும் நீங்கள் சொன்னது போல் தர்க்கரீதியாக அழகாக பதில் சொல்ல ஆசைதான் ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை அதற்கான சில காரணங்களை இங்கே தருகிறேன் இதற்கு உங்களின் நேர்மையான கருத்தையும் எதிர்பார்க்கிறேன்...

  #எதிர்கருத்து சொல்ல வருபவர்களின் கருத்துக்களை நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து மட்டம்தட்டிவிடுகிறீர்கள் அதன் பிறகு அவர் சொல்ல வரும் விடயமே அங்கு செல்லாக்காசாகி விடுகிறது! பிறகு பின்னூட்டத்தின் திசைமாறி நியாயமாக கருத்துச்சொல்லி புரியவைக்க வந்தவரும் வேறு திசைக்கு மாற்றப்படுகிறார்.. உங்கள் பதிவுக்கு ஆரம்பத்தில் கருத்துச்சொல்ல வந்த இஸ்லாமிய பதிவர்கள் யாரும் இப்போது வருவதில்லையே ஏன்?

  #எனக்குத்தெரிந்து நீங்கள் எந்த பதிலையோ விளக்கத்தையோ எதிர்பார்த்து பதிவிடுவதில்லை! உங்களின் நோக்கம் ஒன்றேயொன்று கேவலப்படுத்த வேண்டும்.. ஆத்திரமூட்ட வேண்டும், சீண்டவேண்டும், உங்கள் எழுத்துக்களே அதற்கு சாட்சி! இவ்வாறான பதிவுகளை படிப்பவர்களுக்கு வெறுப்பே ஏற்படுகிறது பின்பு எங்கே அமைதியாக பதில் சொல்வது பொறுமையுள்ளவர்கள் வில்கிச்செல்கிறார்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள் கெட்ட வார்த்தையில் திட்டிவிடுகிறார்கள்.. (இதைப்பிடித்துக்கொண்டு போகிற இடமெல்லாம் இஸ்லாமிய பதிவர்கள் கெட்டவார்த்தை பேசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்)

  பதிலளிநீக்கு
 16. தொடர்ச்சி,,,,#மிக அநாகரீகமான பின்னூட்டங்கள் - வாயத்தொறந்தாலே கழிசடைகள், பண்ணிகள், கீழ்த்தரமானவர்கள் இன்னும் பல பல!! இந்தப்பதிவின் பின்னூட்டங்களில் கூட கானலாம்.. நபியின் மனைவிகளைக்கூட நீங்கள் விட்டுவைக்கவில்லை.. இப்படியெல்லாம் பேசிவிட்டு இஸ்லாமியர்கள் மட்டும்தான் கெட்டவார்த்தை பேசுகிறார்கள் என்று சொல்ல எப்படி உங்களால் முடிகிறது! எங்கள் நபி உங்கள் பார்வையில் எப்படிவேனா இருந்துட்டு போகட்டும் ஆனால் அவர் எங்களுக்கு உத்தமர்தான் எங்களுக்கு கண்மனிதான்.. அவரின் சொற்கள் எங்களுக்கு வேதவாக்குத்தான் இதை உங்களால் மட்டுமல்ல யாராலயும் மாற்றமுடியாது! இப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் கீழ்த்தரமாக விமர்சிக்கும் போது அங்கேவந்து பொறுமையாக கருத்துச்சொல்ல எவரும் விரும்பமாட்டார்.. இதற்கு மாற்றாக நீங்கள் உயர்வாக மதிக்கும் ஒருவரையோ அல்லது கூட்டத்தையோ கேவலப்படுத்த தயாராகிவிடுகிறார்கள்.. அதற்கு அவர்க்ளின் ஓரே தெரிவு பிரபாகரனும் விடுதலைப்புலிகளுமே..(இதன் போது அவர்கள் ஈழப்போராட்டத்தின் பின்னனி அதன் நியாயங்களை அலசுவதில்லை அவர்களின் பார்வை அது ஒரு தீவிரவாத இயக்கம் என்பதுவே!! எப்படி உங்கள் பார்வையில் இஸ்லாமிய தீவிரவாதம் பார்க்க படுகிறதோ அது போல!!) இதன் போதுதான் நீங்கள் பதில் கேள்வி எழுப்புகிறீர்கள்.. நாங்கள் மதக்கொள்கைகளையும் தீவிரவாதத்தையும் சாடினால் நீங்கள் ஏன் எங்கள் போராட்டத்தையும் தலைவரையும் சாடுகிறீர்கள் என! இதுதான் உங்கள் பதிவின் உள்ளடக்கமும்.. உங்களின் இது போன்ற பதிவுகளுக்கான எனது கடைசி பின்னூட்டமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோ ரியாஸ்....

   /// மிக அநாகரீகமான பின்னூட்டங்கள் - வாயத்தொறந்தாலே கழிசடைகள், பண்ணிகள், கீழ்த்தரமானவர்கள் இன்னும் பல பல!! //

   ஒரு மனிதனின் தரம்,அவன் வளர்க்கப்பட்ட விதம், அவன் தோழமைகளின் தரம் அனைத்தும் அவனின் பேச்சு மற்றும் எழுத்தில் தெரிந்துவிடும். நமது நண்பர்களின் தரம் பதிவுலகம் அறியாதது அல்ல... எவர் அநாகரிகமான பேச்சையும், எழுத்தையும் விட வில்லையோ அவர்கள் கல்வியிச் சிறந்த சான்றோர்களிடம் ஒரு புழுவாகவே பார்க்கப்படுவார்கள்... அவர்களின் அதே தரத்தில் இருக்கும் நபர்கள் வேண்டுமென்றால் அதே தரத்துடன் பேசி மகிழ்ந்து கொள்ளலாம்..... பின்னூட்ட தரம் இல்லாத கேள்விகளை குப்பை கூடைக்கு அனுப்புங்கள்...அதுவும் சொல்லிவிட்டு அனுப்புங்கள், தரம் தானே மீட்டெடுக்கப்படும்....

   நீக்கு
 17. ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,

  இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.

  என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,

  தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.

  ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

  பதிலளிநீக்கு
 18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 19. அந்த பதிவுகளுக்கு இலவச விளம்பரம் கொடுத்திருக்கீங்க போல..........

  பதிலளிநீக்கு
 20. ஸ்யப்பா.............முடியல (உங்கள் பதிவில் 1000-மாவது கமெண்ட் நாந்தான் ஹா..ஹா..ஹா...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்கும் 1000 பின்னுட்டம் வந்துடுச்சா...?? குட்..குட்...

   உன்னது 1000 மாவது பின்னுட்டமா அமைஞ்சது மகிழ்ச்சியே... நீ மட்டும் சொல்லாவிட்டால் நான் இந்த பதிவுலகிற்க்கே வந்திருக்க மாட்டேன்....

   வந்தும் ஒன்னும் சாதிக்கலைங்கிறது வேற விஷயம்....

   நீக்கு
 21. பதில்கள்
  1. வருகைக்கு நன்றி மச்சான்...

   ரொம்ப சூடு வேணாம்னு கொஞ்சம் ஆறவச்சு தான் பறிமாரி இருக்கேன் ....

   நீக்கு
 22. சலாம் சகோ
  இவர்களை இப்படியே விட்டுவிடுவோம் இவர்களுக்கு இஸ்லாமோபோபியா பிடித்துள்ளது கூடியசீக்கிரம் கிறுக்கும் பிடித்தும்விடும் அவர்களின் பதிவுகளின் தலைப்பையும் பதிவையும் பிண்ணூட்டங்களையும் பார்த்தால் நியாயமாக சிந்திக்க்கூடிய அறிவுள்ளவர்கள் காரிஉமிழ்ந்துவிடுவார்கள் அதனால் பொறுமை காப்போம் நமக்கும் தொப்புள்கொடி உறவினர்களான இந்துக்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் நினைக்கும் இவர்களின் சூழ்ச்சியில் சிக்கிவிடவேண்டாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் அஸ்ஸலாம்....

   //கூடியசீக்கிரம் கிறுக்கும் பிடித்தும்விடும்//

   என்னது இனி தான் பிடிக்கணுமா???? அது பிடிச்சு மாமாங்கம் ஆச்சு... இங்க யார் என்ன எழுதினாலும் பிரிவினையும் வராது, ஒற்றுமையும் வராது.. அனைவரும் காகிதப் புலிகளே.....

   நீக்கு
 23. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

  இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

  தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

  அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

  please visit: www.tamilnaththam.blogspot.com

  பதிலளிநீக்கு
 24. //எப்படி பிரபாகரன் கொலைக்காரனோ, அதே போன்று தான் முகம்மது உட்பட பல வரலாற்று மனிதர்களையும் யாம் பார்க்கின்றோம். ராஜ ராஜ சோழன் கூட அதில் அடக்கமே... !!! நீங்கள் நபியாக ஏற்றுக் கொள்வதால், அவர் குறித்து யாம் ஆய்வு செய்யவோ, கருத்து சொல்லவோ என எதிர்ப்பார்ப்பது சரியான முறையல்ல சகோ. !!! நாங்கள் முகமது குறித்த தகவல்களை புதிதாக புகுத்தவில்லை. உங்கள் ஹதித்கள் தான் அப்படி கூறுகின்றன.. இல்லையா ஆமாவா ? அவ்வளவு தானுங்கோ ... !!!//

  இக்பால் செல்வன் சரியாகச் சொல்லியிருக்கிறார். முகமது நபியைப் பற்றி அவர் வாழ்ந்த சமகால வாழ்வியல் அறநெறிகளை வைத்துதான் மதிப்பிடமுடியும். இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக கூறப்பட்ட போதனைகளும், செயல் வடிவங்களும் இப்பொழுதும் பொருந்தும் என்ற முஸ்லீம்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

  பதிலளிநீக்கு
 25. வாங்க சகோ சந்தானம்.....

  // எப்படி பிரபாகரன் கொலைக்காரனோ, //

  இந்த கருத்தை ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி...

  // இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக கூறப்பட்ட போதனைகளும், செயல் வடிவங்களும் இப்பொழுதும் பொருந்தும் என்ற முஸ்லீம்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.//

  பொருந்தாதுதுன்னு நினைக்ப்பதால் தான் நீங்க சந்தானமா இருக்கீங்க.. பொருந்தும்னு நினைக்கிறதால தான் நான் சிராஜுதீனா இருக்கேன்...

  ஓக்கே..ஜோக் அபார்ட்ஸ்... இஸ்லாத்தைவிட சிறந்த நன்னெரியோ, சட்டதிட்டங்களோ உள்ள வேறு எந்த சித்தாந்தத்தையும், நாட்டுச் சட்டங்களையும் உங்களால் ஒரு போதும் காட்ட முடியாது சகோ... இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன்... மேற்கொண்டு விவாதிப்பதென்றால்... குரானின் ஒரு 20 பக்கங்களையாவது படித்துவிட்டு வந்து அது தொடர்பில் விவாதியுங்கள்....ஆக்கப்பூர்வமான விவாதத்திற்க்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்...

  இதையே எனது ஈழ நண்பர்களுக்கும் கூறிக் கொள்கிறேன்... சும்மா மேலோட்டமா கேள்வி பட்டதை வைத்து கதை விடாமல் குரானின் 20 பக்கங்களையாவது தொடர்ச்சியாக படித்து அதில் உங்கள் கருத்து வேறுபாடுகளுடன் வாருங்கள்... ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்... இல்லாட்டி ஆள விடுங்க... கடுப்பா இருக்கு...

  பதிலளிநீக்கு
 26. அஸ்ஸலாமு அலைக்கும்
  அன்பின் அண்ணன் சிராஜ்,
  பதிவுலகில் சில சைக்கோக்கள் சுற்றித் திரிந்து கொண்டு அவ்வப்போது பொது வெளியில் எதையாவது கழிந்து வைப்பதும், அதற்கு சிங் சாங் அடிக்க சில விசித்திர ஜந்துக்கள் கொமென்ட் அடித்தும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகளை எல்லாம் கால் பைசாக்கு கூட மதிக்க கூடாது. அலட்சியம் செய்து பாருங்களேன். இந்த இலட்சணத்தில் இதுகள் மதக் கலவரத்தை தூண்ட முயற்சி வேறு செய்கிறது. ஆனால் ஒன்றையும் செய்து கிழிக்க முடியாது அவர்களால்.

  இங்கே புதிய நாட்டாமை ஒருவர் பழைய சொம்பை தூக்கி கொண்டு வந்திருக்கிறார். இந்த சொம்பை ஏற்கெனவே கோவியார் கண்ணன் நிறைய தடவை பயன்படுத்தி பின்னர் முகத்திரையை கிழித்தவுடன் இப்போது தன்னுடைய ஒரிஜினல் முகமான காவி கண்ணனாக மாறி பதிவுகளில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறார். எனவே இக்குபாலு செல்வன்னு நல்ல சொம்பாக தூக்கி கொண்டு வரவும். நாட்டமை கெட்டப்பு சகிக்கலை ஒய்.

  பதிலளிநீக்கு
 27. சிராஜ் அண்ணே உங்க அழைப்பை நம்ம இக்பால் செல்வன் ஏற்று ஆக்க பூர்வ விவாவதத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அவர் தான் குர்ஆன் - ஹடித் (எல்லாம் ஆங்கில இணையதள உபயம் தான்) சும்மா இஷ்டத்துக்கு கதை கதையா அடிச்சு விடுவார். எனவே இக்பால் செல்வன் வருவதாக இருந்தால் குர்ஆனை முதலில் விமர்சிக்கட்டும். அதற்கு பதில் தருவோம். பின்னர் ஹதீசுக்கு பதில் தருவோம். ஆனால் அவர் வர தயாரா? (இவரை இவ்வாறு நாத்திக வேடம் கட்ட வைத்த கிறிஸ்தவ மிசனரிகளே இஸ்லாமியர்களிடம் விவாதம் என்றால் தலை தெறிக்க ஓடுகின்றனர். ஆதாரம் வேண்டுமானால் சென்னைக்கு வாங்க இக்பால் செல்வன். இரண்டு பேரும் சேர்ந்து போய் பாதிரிகளை விவாதத்திற்கு அழைக்கலாம்)

  பதிலளிநீக்கு
 28. சிராஜ் படித்து விட்டேன்...!

  (நான் கமெண்ட் போடுவதற்கு காரணம் எவனாவது அனானி Or மைனஸ் ஓட்டு போட்டுட்டாங்கன்னா நான்னு நீங்க நினைச்சிரக் கூடாதில்லையா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என்ன... "மை ஃபாதர் இஸ் நாட் இன் த... குதிர்" ங்கிற மாதிரி..!?!?!?

   நீக்கு
  2. பாய்..!நான் தமிழ்மணம் ஓட்டு அதிகமா போடுவதில்லை...!சில நண்பர்களுக்கு மட்டும் நினைச்சா போடுவேன் இதுல மைனஸ் போட்டா மட்டும் எல்லாரும் படிக்காம போயிடுவீங்களா...? என்ன....? கீழ என் ஐ.பி பேரு எல்லாம் தெரியுது அதான்......!ஹஹா!

   நீக்கு
 29. ஸலாம் சகோ.சிராஜ்,

  ///ஹிட்ஸ் வாங்குறதுக்கு 1000 வழி இருக்குங்க... ஏன் இந்த கேவலமான வழிய தேர்ந்தெடுக்கிறீங்க....???///

  இதிலே... கொடுமை என்னன்னா... இந்த கேவலத்தை பத்தியும் அவர்களுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய ஒரு கட்டாய துர்பாக்கிய நிலை நமக்கு வந்துவிட்டதே என்றுதான் கவலையா இருக்கு சகோ.சிராஜ்..!

  உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி..!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters