வியாழன், டிசம்பர் 22, 2011

நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு மாறிய பிரபல பதிவர்....


                                                               

இவ்வளவு நாளும் கிடைக்கும் சந்து பொந்து கேப்ல எல்லாம் நாத்திகம் பேசிக்கொண்டு இருந்த பிரபல பதிவர் கே.ஆர்.பி. செந்தில் அவர்கள்
டிசம்பர் 20 அன்று பதிவிட்ட ஒரு கவிதை மூலம் தான் நாத்திகவாதி அல்ல கடவுளை நம்பும் ஆத்திகவாதி என்ற உண்மையை முதல் முறையாக
உலகிற்கு தெரிவித்து உள்ளார்(நான் அறிந்த வகையில்). அவரை கடவுள் படைத்த நமது உண்மையான உலகிற்கு வரவேற்கிறேன்.

முதலில் அவரின் கவிதையை பார்த்து விடுங்கள், அதன் பின் எனது சந்தேகங்களை கேட்கிறேன்.

ஆற்றாமையாகத்தானிருக்கும்
எனக்கு..

கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..

அரசுப் பேரூந்தின் நடத்துனர்கள் 
ஏழை வயசாளிகளை 
ஒருமையில் விளிக்கும்போது
என்ன மனித நேயமென..

புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட 
பின்னும் 
முகாம்களில் தவிக்கும் 
சகோதரங்களை நினைத்து 
புத்தனும் செத்துப் போனான் என..

தெரு வண்டி வியாபாரியிடம் 
பத்து ரூபாய்க்கு கை நீட்டும் 
போலீஸ்காரன் நிலை நினைத்து 
இதுவா கடமை?  என..

கடவுளை 

இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..

ஓட்டுக்கு காசு வாங்கி 
தேர்தல் முடிந்தபின்னர் 
ஐயோகோ 
ஆட்சி சரியில்லை எனும் 
மக்களை நினைத்து 
உன் உரிமை இதுவா என..

தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..

இந்த கவிதையை படித்த உடன் தோன்றிய எனது சந்தேகங்கள்...

/* கையேந்தும் பெரியோர்களை 
சிறு பிள்ளைகளை 
பெண்களை பார்க்கும்போதெல்லாம் 
கடவுளை கொன்றுபோட..   */


பெரியவர்களையும், சிறு பிள்ளைகளையும் மற்றும் பெண்களையும் கையேந்த விட்டது கடவுளா அல்லது மனிதர்களா?
அப்படி அவர்களை ஆக்கியதற்காக மனிதர்களாகிய நாம் தான் தூக்கில் தொங்க வேண்டும். அத விட்டுட்டு கடவுளை கொல்றாராம். நீங்க(நாம) பண்ற தப்புக்கு கடவுள கொள்ளுவீர்களா? நல்லா இருக்குப்பா உங்க நியாயம்....


/*
இனம்பிரித்து வணங்கும் 
காட்டுமிராண்டிகளை நினைத்து
அறிவு வளர்ச்சி இதுவாவென..   */

படைத்து, உயிர் கொடுத்து பரிபாலிக்கும் இறைவனை இல்லை என்று கூறும் துரோகிகளை மற்றும் முட்டாள்களை விட இனம் பிரித்து வணங்கும் மக்கள் ஒரு படி மேல் தான் நண்பரே.

/*
தெரு நாய்களைப்போலத்தான் 
வாழ்கிறோம் 
ஆயினும் 
கவுரவத்துக்கு ஒன்றும் 
குறைச்சல் இல்லை..  */

உங்களோட இந்த வைர வரிகளை மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறேன். You  rocks  here.

ஆனாலும் "கடவுளை கொன்றுபோட..." என்ற வரிகள் மூலம் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு நன்றிகள்.
(உயிருடன் இருக்கும் ஒன்றைத் தான் கொள்ள முடியும்).
 இன்று போலவே என்றும் இறை நம்பிக்கையுடன் நீங்கள் வாழவும்,  மேலும் உங்கள் நாத்திக நண்பர்களையும் ஆத்திகத்தை நோக்கி அழைக்க வேண்டும் என்றும்  எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அண்ணனோட தளத்தில் உள்ள வரி "எங்கே செல்லும் இந்த பாதை". பாவம் எங்க போறதுன்னே தெரியாம சுத்திகிட்டு இருக்காரு போல. கவலை படாதீங்க நண்பா.
 
கடவுளிடம் தான்  போகும் இந்தப் பாதை....

 


20 கருத்துகள்:

  1. சலாம் சகோ ...நல்லா இருக்கீன்கால

    பதிலளிநீக்கு
  2. விவரம் அறியாத சிறுவயது பிள்ளைகள்
    வீட்டருகில் நின்றுகொன்று
    தெருவில் போவோர் வருவோரிடம்
    காசு கேட்டால்...

    பெற்றோரைக் கொன்றுவிடுவாரோ ?

    பதிலளிநீக்கு
  3. ஏன் சிராஜ் இந்தக்கொலவெறி :)))

    பரவாயில்லை எதிர்கருத்துகளும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது, அப்புறம் இனம் பிரித்து என்பது அந்தக் கவிதையில் சாதி பிரித்து என்பதாக வருவதாகும் என்றாலும் நான் அறிந்தவரை இஸ்லாமியர்களிலும் மலாய், அராபிய முஸ்லீம்கள் இந்திய முஸ்லீம்களை சமமாக பாவிப்பதில்லை,

    கடவுள் யாவருக்கும் பொதுவாக இருக்கும்போது நான் பெரியவன் நீ சிறியவன் என பிரித்து வணங்குவதும் அபத்தமே,

    அப்புறம் நான் துரோகியாகவே இருந்தாலும் நான் கவலைப்படுவது அடிமைகளை நினைத்து அல்ல..

    எல்லாம் வல்ல கடவுள் தெருவோர பிச்சைக்காரர்களையும் பணக்காரர்களாக படைத்திருக்கலாமே,

    நபிகளே அறியாமையில் இருந்து மக்களை விடுவிக்க போராடியவர்தான், ஆனால் இன்று யார் உண்மையாக இஸ்லாத்தை பின்பறுகிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சி வசமே விட்டுவிடுகிறேன்..

    பதிலளிநீக்கு
  4. நண்பர் செந்தில் அவர்களுக்கு

    ///நான் அறிந்தவரை இஸ்லாமியர்களிலும் மலாய், அராபிய முஸ்லீம்கள் இந்திய முஸ்லீம்களை சமமாக பாவிப்பதில்லை,//

    நீங்கள் அறிந்தவரை அப்படி இருக்கலாம் சரியானதை அறிந்துக் கொள்ளுங்கள் தேடலில் இறங்குங்கள்

    இஸ்லாமியர்கள் அப்படி பாவிப்பதில்லை என்பதை விட போலி இஸ்லாமியர்கள் அப்படி பாவிப்பதில்லை என்பது சரியாக இருக்கும் போலி கம்யூனிஸ்ட்கள் போலி நாத்திகவாதிகள் போல

    பதிலளிநீக்கு
  5. சலாம் சகோ.கே.ஆர்.பி.செந்தில்,
    ///எல்லாம் வல்ல கடவுள் தெருவோர பிச்சைக்காரர்களையும் பணக்காரர்களாக படைத்திருக்கலாமே,///---ஓக்கே... ரைட்டு...

    சகோ.செந்தில்....
    நாளைக்கி நீங்க தூங்கி முழிச்சு கண்ணை திறந்து பார்க்கிறீங்க...

    உலகத்திலே எல்லாருமே கோடீஸ்வரர்கள்...
    எல்லாருடைய அக்க்வுண்டிலும், பில் கேட்ஸ் அக்கவுண்டில் உள்ள அதே அளவு பணம்...
    எல்லார் வீடும் அம்பானி வீடு மாதிரியா அச்சு அசலாக அப்படியே...
    எல்லார் கிட்டேயும் துபாய் ஷேக் வச்சிருக்கும் அத்தனை காரும் அதே பிராண்டுடன் அபப்டியே வெளியே நிக்குது...
    எல்லார் வீட்டு பிரோவிலும் இங்கிலாந்து மகாராணி கிட்டே இருக்குற கோஹினூர் வைரம் உட்பட அத்தனை நகையும் ஒரே டிசைனில் ஒரே மாதிரி இருக்குது...
    முதல்வர் ஜே. கிட்டே இருக்குற அத்தனை பட்டு புடவையும் எல்லார் வீட்டிலும் இருக்குது...

    ம்ம்ம்...

    அப்புறம் அன்றைய பொழுதை பற்றி... அன்றைய ஒரே ஒருநாள் சராசரி உலக நடப்பு வாழ்க்கையை...
    அது இயங்கும் தன்மையை... சுருக்கமாக நாலே நாலுவரியில் சொல்லுங்களேன்...

    கடவுள் புத்திசாலியா / முட்டாளா என்பது விளங்கிவிடும்.

    பதிலளிநீக்கு
  6. அப்புறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்...
    இந்த வருஷம் பிளஸ்டூ ரிசட்டுல... எழுதின எல்லாரும் பாஸ் மட்டுமல்ல எல்ல்லாருமே 1200க்கு 1200..!

    எல்லாம் உங்களின் கற்பனையில் உள்ள அந்த கடவுள் செயல்..!

    இப்போ நீங்க அந்த நாலு வரியை சொல்லுங்க சகோ..!

    பதிலளிநீக்கு
  7. உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும் ரியாஸ்... இறைவனின் பேர்அருளால் நலமாக உள்ளேன்...

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி அரபுத் தமிழன் அவர்களே...

    பதிலளிநீக்கு
  9. சகோ செந்தில்,
    இந்த கட்டுரையை எதிர் கருத்து என்ற வகையில் மட்டுமே எடுத்துக்கொள்வீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருந்தது... அதனால் தான் உங்களிடம் கேட்காமலே
    இந்த கட்டுரையை பதிவிட்டேன். நீங்களும் அவ்வாறே எடுத்துகொண்டீர்கள். புரிந்துணர்விற்கு மிக்க நன்றி செந்தில்.

    ஆனால், எதிர் கருத்து எதிர் கருத்துதான். அதில் எந்த மாற்றமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  10. கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
    நான் அறிந்தவரை இஸ்லாமியர்களிலும் மலாய், அராபிய முஸ்லீம்கள் இந்திய முஸ்லீம்களை சமமாக பாவிப்பதில்லை,///
    நிச்சயமாக வர்க்க பேதங்கள் இஸ்லாமில் இல்லை. அப்படி சமமாக பார்க்காதது அறியாமையிலிருக்கும் மனிதர்களின் தவறுதானே தவிர இறைவனின் தவறலல்....

    எல்லாம் வல்ல கடவுள் தெருவோர பிச்சைக்காரர்களையும் பணக்காரர்களாக படைத்திருக்கலாமே,///
    இன்று பணக்காரர்களாக இருப்பவர்களின் நதிமூலம், ரிஷிமூலம் பற்றிப்பார்த்தால்...யாருமே பணக்காரர்களாக படைக்கப்பட்டவர்கள் அல்ல...தன் உழைப்பால், புத்திசாலித்தனத்தால் பணக்காரர்களாக உயர்ந்தவர்கள். உழைத்தால் முன்னேறலாம்...அதைவிடுத்து, கடவுளை குற்றம்சொல்வதென்பது அறிவீனம்.உழைக்காமல், கொடுக்கும் தெய்வம் கூரையை பிய்த்துகொண்டு கொடுக்கும் என்று நடுவீட்டில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்ப்பவர்களுக்காக பரிதாபப்படுவதை தவிர வேறு என்ன செய்துவிட முடியும்?

    பதிலளிநீக்கு
  11. செந்தில்,
    நீங்கள் உங்கள் பின்னூட்டத்தில் பல விஷயங்கள் பற்றி பேசி இருந்தீர்கள். ஒவ்வொன்றும் பெரிய அளவில் விவாதிக்கப் படவேண்டியவை. இருந்தாலும் பணம் என்ற ஒன்றை நான் எடுத்துக்கொள்கிறேன்.

    அனைவரும் பணக்காரராக இருப்பது நடை முறை சாத்தியம் இல்லாத ஒன்று. அப்படி இருந்தால் உலகம் இயங்கவே முடியாது. இது பற்றி சகோ ஆசிக் தனது பின்னூட்டத்தில் உதாரணங்களுடன் விளக்கி உள்ளார்(நன்றி சகோ ஆசிக்). இறைவன் அனைவருக்கும் பணத்தை சமமாக கொடுக்கவில்லை என்பது உண்மைதான். அதற்க்கு காரணம் அவ்வாறு கொடுத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும், இதை நீங்கள் கொஞ்சம் யோசித்தாலே புரிந்து கொள்ளலாம்.

    இறைவன் ஏழைகளை படைத்து இருக்கிறானே தவிர, சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் சூழலை ஒரு போதும் ஏற்படுத்தியது இல்லை. சாப்பாட்டிற்கு வழி இல்லாத பிச்சைக்காரர்களை உருவாக்கியது சட்சாத் நாம் தான், உலக மக்கள் தான். இன்றைய நிலையில் உலகில் உற்பத்தியாகும் மொத்த உணவும் 700 கோடி மக்கள் சாப்பிடக்கூடிய அளவை விட மிக அதிகமாகவே உள்ளது. ஆனால் அவை பதுக்கப்பட்டும், சரியாக பாதுகாக்கப் படாமல் வீணடிக்கப்பட்டும் அல்லது சரியாக விநியோகிக்கப்படாமலுமே வீணாகின்றன.
    இதில் யாதொன்றும் இறைவனின் தவறில்லை. அவன் தன் படைப்புகளுக்கு தேவையானதை இந்த பூமியில் உருவாக்கியே வைத்து உள்ளான். ஆகவே, இவை யாவும் மனிதனின் தவறுகளே. நிச்சயமாக இந்த அநீதி குறித்து மறுமையில்(இறுதித் தீர்ப்பு நாளில்) மனிதர்களாகிய நாம் அனைவரும் விசாரிக்கப்படுவோம். அப்பொழுது இந்த பிச்சைகாரர்கள் நம்மை பார்த்து சிரிப்பார்கள். நாம் பிச்சைக்காரர்கள் போல் அவர்கள் முன்னும், இறைவன் முன்னும் தலை குனிந்து நிற்ப்போம்.

    இப்பொழுது சொல்லுங்கள், இறுதி தீர்ப்பு நாள் என்று ஒன்று உள்ளது இந்த பிச்சைகாரர்களுக்கு சுப செய்தியா? அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்வது சுப செய்தியா?
    அப்படி ஒரு நாள் இல்லாவிட்டால், இந்த பிச்சைக்கார்களுக்கு யார் நீதி வழங்குவார்கள்? நாத்திகம் வழங்குமா? மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இல்லாவிட்டால், கடைசிவரை பாவப்பட்ட ஜென்மங்கலாகவே மரணிக்கும் இவர்களுக்கு என்னதான் நீதி?

    பதிலளிநீக்கு
  12. மேலும் செந்தில்....
    இஸ்லாத்தில் ஏழைகளுக்கு ஒரு நற்ச் செய்தி உள்ளது. சொர்க்கத்தில் ஏழைகள் தான் அதிகம் இருப்பார்கள்.
    இப்பொழுது சொல்லுங்கள்.. இறைவன் அநீதி இழைக்கவில்லை தானே????

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் நல்ல பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ. ஹைதர் அலி மற்றும் சகோ ஆசிக்...

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோதரி. இராஜராஜேஸ்வரி...

    நான் எப்பொழுதாவது தான் பதிவிடுகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் வந்து பின்னூட்டமிடுகிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோதரர் மெட்ராஸ்பவன் சிவா மூலமாக தான் உங்கள் ப்ளாக் அறிமுகம் கிடைத்தது. நீண்ட நாட்களுக்கு பதிவிட்டதுக்கு (அதுவும் டெரர்ரா :-) வாழ்த்துகள். அடிக்கடி எழுதுங்க

    //ஆனாலும் "கடவுளை கொன்றுபோட..." என்ற வரிகள் மூலம் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு நன்றிகள்.
    (உயிருடன் இருக்கும் ஒன்றைத் தான் கொள்ள முடியும்).
    இன்று போலவே என்றும் இறை நம்பிக்கையுடன் நீங்கள் வாழவும், மேலும் உங்கள் நாத்திக நண்பர்களையும் ஆத்திகத்தை நோக்கி அழைக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.//

    :-)
    :-)
    :-)

    எதிர்பதிவினூடே நக்கல் கலந்தவிதம் கலக்கல் :-)

    பதிலளிநீக்கு
  16. ஓ மை காட். என்னே உனது திருவிளையாடல். சிராஜ்..சிங்கத்த சொரண்டி பாத்துட்டீங்க. :-)

    பதிலளிநீக்கு
  17. வலைக்கும் அஸ்ஸலாம் சகோ. ஆமினா,
    முதல் வருகைக்கும் முதல் கமெண்ட்டிற்கும் நன்றி. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத முயற்சி பண்றேன்.

    பதிலளிநீக்கு
  18. எங்க சிவா, வழிய போய் வம்பிழுத்தாலும் சிங்கம் மோதவே மாட்டேங்குது.
    நல்ல, அமைதியான சிங்கம்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters