
செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு இறுதி வாய்ப்பு... பரவலாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி இந்த முறை அ.தி.மு.க மயிரிழையில் வெற்றியை தட்டிச் செல்லும் என்றே தெரிகிறது. (என்னோட கருத்து கணிப்பு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றது.)
இந்த வெற்றியை தனது வெற்றியாக நினைத்து செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் அகம்பாவத்தில் ஆடினால்(வழக்கம் போல்...) இதுவே அவரது கடைசி வெற்றியாக இருக்கும்.
ஆம், இந்த முறை தி.மு.க வை ஜெயலலிதா தோற்கடிக்க வில்லை, மாறாக கலைஞரே தோற்கடிக்க வைத்தார், தனது குடும்பத்தினரை வரம்புக்கு மீறி தி,மு,க வில் ஆதிக்கம் செலுத்தவிட்டதன் மூலமும், சன் தொலைக்காட்சியை வரம்புக்கு மீறி வளர விட்டதன் காரணமாகவும்.
மற்றபடி கலைஞர் ஆட்சி ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்றே சொல்லலாம். பல நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன என்பதை நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது. உடனே நண்பர்கள் மின்சாரப் பிரச்சனையையும், விலைவாசி பிரச்சனையையும் கிளப்ப வேண்டாம். அவை தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் அல்ல, மாறாக ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.
கலைஞர்ருக்கு மாற்று வேண்டும் என்று யோசித்த பெரும்பான்மை வாக்காளர்கள் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க விற்கு வாக்களித்தார்கள் என்பதே யதார்த்தம். இதை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொண்டு நல்லாட்சி தர முயல வேண்டும். அதை விடுத்து தனது பழைய பாணியையே பின்பற்றினால் இதுவே அவரது கடைசி முதலமைச்சர் வாய்ப்பாக இருக்கும். மற்றபடி முதலமைச்சர் பதவி பற்றி கனவு மட்டுமே காணலாம்.
Tweet |