வெள்ளி, டிசம்பர் 21, 2012

இன்று சத்தியமா உலகம் அழியாது.. ஏன்னா?? ஏன்னா?? ஏன்னா???தெருவுல நடக்க முடியல.....
ஒரு கடைக்கு போக முடியல.....

காலைல இட்லி வாங்கலாம்னு ஹோட்டலுக்கு போனேன்(காலை சாப்பாடு எங்க வீட்ல கிடைக்குது??? )...

 தெரிந்த நண்பர் தான் சமையல் மாஸ்டராக இருக்கிறார்....  அவர் கேட்டார் "பாய்... இன்னைக்கு ஏதும் ஹாட் நியூஸ் இருக்கா???"

நான்.. "இல்லையே அண்ணன்.. வழக்கம் போல் தான் இருக்கு" என்றேன்.

அதுக்கு அவர்  "இல்ல..இன்னைக்கு உலகம் அழியப்போகுதாமே????" அப்டின்னார்.....


பாமரர்களில் இருந்து, படித்தவர்கள் வரை அனைவரும் இன்று உலகம் அழியப்போகுதாமே??? நிஜமா சார்????

யாரோ மாயன் இன மக்கள் உருவாக்கிய காலண்டர்ல 2012 க்கு மேல இல்லையாமே??

ஆச்சா...பூச்சானு ஒரே அலப்பரையா தான் இருக்கு....

ஆனா பாருங்க சகோதர, சகோதரிகளே!!!!

இன்று சாமி சத்தியமா உலகம் அழியாது...  ஏன்னா..ஏன்னா..ஏன்னா...?????
அதே தான்.. நான் என்ன பெருசா சொல்லிட போறேன்... ???

இஸ்லாமிய நம்பிக்கைப் படி இன்று உலகம் அழியாது.. அழியவே அழியாது...


 
 ( இது மாயன் காலண்டர் இல்ல.. எங்க ஊரில் விசியோகிக்க              
இருக்கும் 2013 காலண்டர்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....)
                                                                 


உலக அழிவின் முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.
 
1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

 
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.

இதில் 10 விசயங்கள் சொல்லப்பட்டாலும், நான் அனைத்தையும் பற்றி பேசப்போவது இல்லை.. ஒரே ஒரு விசயம்...  5 வது பாயிண்ட்... 


5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

ஈஸா (அலை) என்பது கிறிஸ்தவர்களின் கடவுளான ஏசுநாதரை  குறிக்கும். 
ஏசுநாதரை குறித்த இஸ்லாமிய நம்பிக்கையை சுருக்கமாக 4 பாயிண்டுகளில் பார்த்து விடுவோம்.

1. முஸ்ஸிம்களைப் பொறுத்த அளவில் அவர் கடவுள் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போல் இறைவனின் தூதுவர். முந்தைய கால மக்களுக்காக வந்தவர்.

2. அவர் சிலுவையில் அறையப்படவில்லை. அதே போல் சாகவும் இல்லை. சிலுவை  பிரச்சனையின் போது எதிரிகளிடையே குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் சிலுவையில் அறைந்தது ஏசுவை அல்ல. ஈஸா (அலை) அவர்கள் கடவுளிடத்தில் உயிருடன் உயர்த்தப்பட்டார்கள். 

3. உலக இறுதி நாளின் போது கடைசி 40 நாட்கள் அவர் வருவார். இந்த உலகை ஆள்வார். முஸ்லிம்கள் அனைவரும் அவரின் பின் அணி வகுப்பார்கள். அவரை கொண்டாடுவார்கள்.

4. தஜ்ஜால் என்ற கொடுங்கோலன் சர்வ வல்லமையுடன் இருப்பான். அவன் முஸ்லிம்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் இருப்பான். அவனை ஈஸா அலை அழிப்பார்கள். அத்துடன் உலகம் அழிக்கப்படும்.

இது குறித்த ஒரு நபி மொழியை பாருங்கள்.....

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல
்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார். அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும். 
 
இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி)

'வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும், மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்' (திருக்குர்ஆன் 04:159) 

என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

தன்னைப்போன்ற ஒரு நபியை போட்டியாக என்னாமல், தனக்குப் பின் உலகம் அழியும் போது வருவார், இஸ்லாமியர்களை தஜ்ஜாலிடம் இருந்து காப்பார் என்று இயேசுவை எவ்வளவு உயர்த்தி சொல்லி இருக்கிறார் முஹம்மது நபி ஸல் அவர்கள்????   அவரும், அவர் போதித்த இஸ்லாமும் உண்மையானது என்பதற்க்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி இல்லையா சகோஸ்??? நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் நிறையவே அத்தாட்சிகள் உண்டு. சிந்திப்பீர்களா சகோஸ்?????

தஜ்ஜால் என்ற கொடுங்கோலனும்,ஈஸா நபியும் இந்த உலகத்திற்க்கு இன்னும் வர வில்லை. இதற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சாட்சி, கிருத்தவ சகோதரர்களும் சாட்சி.

ஆகவே சகோஸ்... இன்று சத்தியமா உலகம் அழியாது.. அழியவே அழியாது.....

டிஸ்கி : இது ஒரு இஸ்லாமிய பதிவல்ல... இஸ்லாமிய நம்பிக்கையைச் சொல்லி முட்டாள்களின் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு பதிவு.... ஹி..ஹி..ஹி..ஹி......


30 கருத்துகள்:

 1. //////இது ஒரு இஸ்லாமிய பதிவல்ல... இஸ்லாமிய நம்பிக்கையைச் சொல்லி முட்டாள்களின் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு பதிவு.... ஹி..ஹி..ஹி..ஹி.....////

  புரிய வேண்டியவர்களுக்கு புரியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது யாருன்னே புரியவேண்டியவங்க?? ஏதும் உள்குத்தா??

   அதெல்லாம் எல்லாருக்கும் புரியும்... சிம்பிள் தமிழ்ல தானே இருக்கு....
   ஹீ..ஹி..ஹி.ஹி

   நீக்கு
 2. நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிசி...

  அப்பறமா கருத்து சொல்றேன் :-)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ஹூம்.. உங்க பிஸி பத்தி தெரியாதா????

   // அப்பறமா கருத்து சொல்றேன் :-))) //

   அத சொன்னா என்ன?? சொல்லாட்டி என்ன???

   நீக்கு
  2. //அத சொன்னா என்ன?? சொல்லாட்டி என்ன??? //

   அப்ப கமென்ட் பாக்ஸ் மூடி வைய்யும் ஒய்!!

   முக்கிய குறிப்பு: என் கமென்ட்டோட வேல்யூ உங்களுக்கு தெரியாது !!! :-)))

   நீக்கு
 3. ம்ம்ம் அது சரி ....................................................இட்லி வாங்க போன இடத்துல ..பஞ்சாயத்தா ???????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம எங்க போனாலும் பஞ்சாயத்து தான் சகோ....

   ஐநா சபைக்கு போனாலும் பஞ்சாயத்து தான்....

   நீக்கு
 4. ஒரு வழியா மாயன் காலண்டருக்காக ப்ளாக் ஐ தூசி தட்டி எடுத்துட்டிங்க...
  என்னடா.. கொஞ்ச நாளா அமைதிப் பூங்காவா இருக்கேன்னு நேத்து தான் நினச்சேன்..
  ரெடியாயிட்டீங்க.. :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நாளா பதிவு போடணும்னு நினைச்சேன்.. நேரம் கிடைக்கல.. அதான் இன்னைக்கு திடீர்னு தூசி தட்டினேன்.. மறுபடியும் 3 மாசம் ஆகும் அடுத்த பதிவுக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

   வருகைக்கு நன்றி...

   நீக்கு
 5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  உண்மையில் இது குறித்தான பேச்சுக்களை கேட்டாலே சிரிப்பு தான் வருது..இதை சில படித்தவர்களும் நம்புறது தான் வியப்பா இருக்கு..

  ///தன்னைப்போன்ற ஒரு நபியை போட்டியாக என்னாமல், தனக்குப் பின் உலகம் அழியும் போது வருவார், இஸ்லாமியர்களை தஜ்ஜாலிடம் இருந்து காப்பார் என்று இயேசுவை எவ்வளவு உயர்த்தி சொல்லி இருக்கிறார் முஹம்மது நபி ஸல் அவர்கள்???? அவரும், அவர் போதித்த இஸ்லாமும் உண்மையானது என்பதற்க்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி இல்லையா சகோஸ்??? நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் நிறையவே அத்தாட்சிகள் உண்டு. சிந்திப்பீர்களா சகோஸ்?????///

  மாஷா அல்லாஹ்...ரெம்ப நாள் கழிச்சு உங்களுக்கே உரிய பாணியில் அருமையான விளக்கம்..

  ///இது ஒரு இஸ்லாமிய பதிவல்ல... இஸ்லாமிய நம்பிக்கையைச் சொல்லி முட்டாள்களின் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு பதிவு.... ஹி..ஹி..ஹி..ஹி......///

  :) :)


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் சகோ..

   // உண்மையில் இது குறித்தான பேச்சுக்களை கேட்டாலே சிரிப்பு தான் வருது..இதை சில படித்தவர்களும் நம்புறது தான் வியப்பா இருக்கு.. // பின்ன.. இது ஒரு பெரிய விஷயம்னு போற இடம்லாம் பேசிகிட்டு இருக்காங்க.. கடுப்பா இருக்கு...

   வருகைக்கு நன்றிலாம் சொல்ல முடியாது.. சாரி....

   நீக்கு
 6. Masha allah..blog gai thoosi thathi poothalum orupadiyana padivu thaan poothu irukeega. ithu sambathamana adika padivu neeraiya per poothalum araitha mavaiye neega araikamal rathina surukama padivu poothathuku nandri..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்ல.. நானும் பார்த்தேன்...
   நிறைய பதிவுகள் எழுதி இருந்தாங்க...

   சோ, இத வித்தியாசமான கோணத்தில் அணுகலாம்னு தான் இந்த பதிவு..

   என் தளத்தில் உங்கள் முதல் கமெண்டுன்னு நினைக்கிறேன்... சரியா???

   நீக்கு
 7. சிராஜ், ஆமினா...நீங்க ரெண்டு பேரும் நண்பர்களா...எதிரிகளா.....ஹி..ஹி... சண்டை சூப்பர்....கீப் இட் அப்... :))) இருந்தாலும் சிராஜ்.... ஆமினாக்கிட்ட பொல்லாப்பு வச்சுக்காதீங்க.... அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கான பதிவராக்கும் :))....

  2013 காலண்டரை ப்ரிண்ட் எடுத்து வச்சுக்காலாம்னு நினைத்தேன்.... செய்யலாமா?எப்படி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சண்டை சூப்பர்....கீப் இட் அப்... :))) //

   அடக்கொடுமையே...

   //அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கான பதிவராக்கும் :))....//

   என் போட்டோவ பாத்துட்டீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-))

   //ஆமினாக்கிட்ட பொல்லாப்பு வச்சுக்காதீங்க.... //

   சிராஜ்... நோட் திஸ் பாய்ன்ட்!! எதாவது வம்பு பண்ணா இஸ்லாமியப்பெண்மணிகள் எல்லாரும் கூடிடுவாங்க!!! ஜாக்ரத!!!! :-))))

   நீக்கு
  2. தொழுகைக்கு செல்கிறேன்.. வந்து பதில் அளிக்கிறேன்.. இன்ஷா அல்லாஹ்...

   நீக்கு
 8. ஸலாம் சகோ.சிராஜ்....
  நீ.........................ண்ட நாட்களுக்கு பிறகு டீக்கடையை திறந்து தரமான காலத்துக்கு உடனடி அவசியமான வடை பஜ்ஜி டீ வியாபாரம் செய்துள்ளீர்கள்..! நன்றி சகோ..!

  அப்புறம்....

  //இது ஒரு இஸ்லாமிய பதிவல்ல... இஸ்லாமிய நம்பிக்கையைச் சொல்லி முட்டாள்களின் மூட நம்பிக்கையை ஒழிக்கும் ஒரு பதிவு.... ஹி..ஹி..ஹி..ஹி...... //

  -----------ம்ம்ம்..... 'புரிந்துணர்வோடு ஒத்துழைப்பு தொடரும்' என்று நம்புகிறேன்..! ஹி...ஹி...ஹி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ அலைக்கும் சலாம் சகோ சிட்டிசன்...


   ஹ..ஹா..ஹா.. நானும் ஒத்துழைப்பு தொடரும் என்று தான் நினைக்கிறேன்....
   இணையத்தில் இருக்கும் கொஞ்ச நேரத்திலும் நம்ம பிளாக் பக்கம் வந்ததற்க்கு நன்றி சகோ..

   நீக்கு
 9. அஸ்ஸலாமு அலைக்கும்............

  தன்னைப்போன்ற ஒரு நபியை போட்டியாக என்னாமல், தனக்குப் பின் உலகம் அழியும் போது வருவார், இஸ்லாமியர்களை தஜ்ஜாலிடம் இருந்து காப்பார் என்று இயேசுவை எவ்வளவு உயர்த்தி சொல்லி இருக்கிறார் முஹம்மது நபி ஸல் அவர்கள்???? அவரும், அவர் போதித்த இஸ்லாமும் உண்மையானது என்பதற்க்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி இல்லையா சகோஸ்??? நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் நிறையவே அத்தாட்சிகள் உண்டு. சிந்திப்பீர்களா சகோஸ்?????

  தஜ்ஜால் என்ற கொடுங்கோலனும்,ஈஸா நபியும் இந்த உலகத்திற்க்கு இன்னும் வர வில்லை. இதற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் சாட்சி, கிருத்தவ சகோதரர்களும் சாட்சி.
  /// சரியா சொல்லிருக்கீங்க. மக்கள் உண்மையை உணர்ந்தா சரி தான்.......

  நம்ம எங்க போனாலும் பஞ்சாயத்து தான் சகோ.... //// அது தான் தமிழ்நாடு அறிந்த விஷயமாச்சே..... தூசி தட்டி எடுத்தாலும் உருப்படியான செய்தி...... விழிப்புனர்வான பகிர்வுக்கு நன்றி சகோ.........

  பதிலளிநீக்கு
 10. இதுவான்னே உங்க டக் .... நல்ல இருக்கு உங்க டாக் ... ஹி ஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரியாஸ்..

   இப்பவாவது பதிவு போட்டத நினைச்சு சந்தோஷப்படுங்க... நம்ம சுறுசுறுப்பு உலகமெல்லாம் தெரிஞ்சு போச்சே?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

   வருகைக்கு நன்றி சொல்லணுமா ரியாஸ்... வேணாம்.. ரொம்ப மொக்கையா தெரியும்

   நீக்கு
 11. /////அது யாருன்னே புரியவேண்டியவங்க?? ஏதும் உள்குத்தா??/////

  /////-----------ம்ம்ம்..... 'புரிந்துணர்வோடு ஒத்துழைப்பு தொடரும்' என்று நம்புகிறேன்..! ஹி...ஹி...ஹி..../////

  இப்ப புரிஞ்சு இருக்கணுமே :)))

  பதிலளிநீக்கு
 12. //எங்க ஊரில் விசியோகிக்க //

  //சிம்பிஸ் தமிழ்ல தானே//

  ஹா..ஹா..ஹா...

  இவுக தமிழ் வாத்தியார் பைய்யனாம்...

  தமிழுக்கு வந்த சோதனைய பாரேன் :-))))

  பதிலளிநீக்கு
 13. உங்கள் பிளாக்கை தூசு தட்ட வைத்த மாயனுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. /// உலக இறுதி நாளின் போது கடைசி 40 நாட்கள் அவர் வருவார்.///

  இந்த செய்தி தவறானது! சரி பார்கவும்.

  பதிலளிநீக்கு
 15. ஆஹா...நீண்ட நாட்களுக்குப் பிறகு டீக்கடையை திறந்தாச்சா....சுடச்சுட பஜ்ஜி கிடைக்குமா? :-)

  பதிலளிநீக்கு
 16. இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும்
  நிலவட்டுமாக அண்ணா ...

  மாஷா அல்லாஹ் சரியான நேரத்தில் மிகச் சரியான பதிவு...

  அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக....

  ---தன்னைப்போன்ற ஒரு நபியை போட்டியாக என்னாமல், தனக்குப் பின் உலகம் அழியும் போது வருவார், இஸ்லாமியர்களை தஜ்ஜாலிடம் இருந்து காப்பார் என்று இயேசுவை எவ்வளவு உயர்த்தி சொல்லி இருக்கிறார் முஹம்மது நபி ஸல் அவர்கள்???? அவரும், அவர் போதித்த இஸ்லாமும் உண்மையானது என்பதற்க்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி இல்லையா சகோஸ்??? நிச்சயமாக சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் நிறையவே அத்தாட்சிகள் உண்டு. சிந்திப்பீர்களா சகோஸ்?????---

  மாஷா அல்லாஹ் அருமை அண்ணா..

  பதிலளிநீக்கு
 17. இஸ்லாமிய நம்கைக்கையை பகிர்ந்தற்கு நன்றி

  உலக அழிய போகுது உளரிக்கிட்டு இருக்கிறார்கள் இன்னும் மெக்சிக்கோவில் விடியவில்லையாம் என்ன மரகாலண்டர் நம்பிக்கை ஹா ஹா ஹா

  இந்த நேரத்தில் பேணரை மற்றியிருக்கிறீர்கள் அது என்னங்க ஒரு வடை அடுத்தவரின் மண்டையை குறி வைத்து அடித்தும் உடையமால் கிடக்கிறது... உண்மையில் உங்கள் டீக்கடை வடை ஸ்ராங்குத்தான் .... ஹா ஹா

  பதிலளிநீக்கு
 18. சலாம் சகோ.சிராஜ் !

  மாயன் புண்ணியத்தால கடைய திறந்து கல்லா கட்டுறீங்க.! இனி உங்களுக்கு அடுத்த வாய்ப்பு 5079 ஆண்டுதான் !! ஒய் என்றால் அப்பொழுதுதான் உலகம் அழியும் என்று நாஸ்டர்டாம் சொல்லி இருக்கிறார் !!!

  ஆனா பாருங்க ! நாஸ்டர்டாம் 2010 ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் உலகப்போர் நடைபெறும் என்றும் அது 2014 ஆண்டு வரை நீடிக்கும் என்றும் சொல்லி இருக்கிறாராம்..அப்படி ஒன்று நடக்கவே இல்லை(!!!) உலகத்திற்கு முடிவு இருந்தாலும் இப்படி பீதியை கிளப்புவோருக்கு முடிவு இல்லை என்றே சொல்ல வேண்டும்.

  என்ன சகோ..5079 ஆண்டு பதிவுக்கு தயாரா ??

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters