சனி, டிசம்பர் 31, 2011

ஈழப் பதிவர்கள் vs இஸ்லாமியர்கள்= தீர்வுதான் என்ன?


குற்றமானவர்கள் என நிருபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கும் ஒரு இனமா முஸ்லிம்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்காது தவறு செய்தவர்களை பல்லாக்கில் வைத்து சுமக்கும் அளவிற்கு இருக்கின்றார்கள்.////

இன்று காலை நண்பர் சந்ரு எழுதிய பதிவின் ஒரு வரிதான் இது.....

நண்பரே....சமீபத்தில் நண்பர் கந்தசாமி என்பவர் எழுதிய ஒரு பதிவில் அபுசனா என்ற இஸ்லாமிய நண்பர் அசிங்கமாக பின்னூட்டமிட்டிருந்தார் என்று ஒரு தனிப்பதிவே போட்டிருந்தார். அந்த பதிவில் இன்று உங்களால் குற்றம் சாட்டப்படும்/ குழு மனப்பான்மை உடைய இஸ்லாமிய பதிவர்கள் அத்தனை பேரும் அபுசனாவை கண்டித்துத்தான் பின்னூட்டமிட்டுருந்தார்கள். யாரும் அபுசனாவின் செயலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. பின்னர், அபுசனாவே அங்கு வந்து நான் அப்படி பின்னூட்டமிட்டிருந்தது தவறுதான் என்று மன்னிப்புக்கேட்டபின் கந்தசாமி அந்த பதிவையே நீக்கிவிட்டார். தேவை ஏற்பட்டால் அவரிடமே சென்று கேட்டுக்கொள்ளுங்கள். யாருக்கும் பல்லாக்கு தூக்க வேண்டிய அவசியமோ, நிர்பந்தமோ இஸ்லாமிய பதிவர்களுக்கில்லை என்பதற்கு அந்த பதிவே சாட்சி.

நான் உங்களிடம் வருகிறேன்.....
வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் தவறு செய்து விட்டால்,  அதை தனி மனித தவறாகவே பார்க்கும் சிலர் இஸ்லாமியர்கள் தவறு செய்தால் மட்டும் அதை மதக்கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். அந்தப்பார்வையே முதலில் தவறு....

நீங்கள் எழுதிய விபச்சாரம் சம்பந்தப்பட்ட பதிவால்தான் இத்தனை எதிர்விளைவுகளும்....
வீடு புகுந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்திருந்தால் அது ஒரு சாராரின் தவறு...ஆனால், விரும்பியே போகிறார்கள் என்றால் தவறு இரு சாரார் மீது தான்.இதற்கு ஏன் மதச்சாயம்? ஒரு சிலரின் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறை கூறுவதென்பது தவறுதானே....

இஸ்லாமியர்களை பற்றி துவேஷத்துடன் இன்று சிலர் எழுதிவருவதால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் இஸ்லாமிய துவேஷம் மிக்கவர்கள் என்று எப்படி சொல்லமுடியும்?
இன்று இந்தியாவில்  லஞ்சம் ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளில் அதிகமானோர் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே....அதற்காக பெரும்பானமை சமூகத்தை திருடர்கள் சமூகம் என்றா ஒட்டுமொத்தமாக குறை சொல்லிட முடியும்?

அனைத்து சமூகத்திலும் ஒரு குறிப்பிட்ட சிலர் அயோக்கியர்களாக இருப்பதுண்டு. அந்த குறிப்பிட்ட சிலர் மூலமாக மதத்தை பார்க்காதீர்கள் என்று சொல்கிறேன்.
விபச்சாரம் எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கதுதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. வறுமையில் இருப்பவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள். வளமாக இருப்பவர்கள் அங்கு போகிறார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.

உங்கள் பார்வையில் படுமாறு ஒரு சில இஸ்லாமியர்கள் போயிருக்கலாம்....ஆனால், உங்கள் பார்வையில் படாமல் வளமாக இருக்கிற எத்தனையோ ஈழத்தமிழர்களும் போயிருக்கலாமே? அதற்காக ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்ல முடியுமா? அல்லது சில ஈழத்தமிழ் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதால் அனைத்து ஈழப்பெண்களும் விபச்சாரிகள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்லிவிடுவீர்களா?

வறுமையும் ஏழ்மையும் எல்லா சமூகத்தினரிடமும் உண்டு. அதற்கான தீர்வு விபச்சாரம் அல்லவே....விபச்சாரம் செய்யும் பெண்களை அழைத்து அவர்களிடம் பேசி, வேறு ஏதாவது மாற்றுத்தொழிலை முன் வையுங்கள். தனி மனித தவறுகளுக்கு எந்த ஒரு மதத்தையும் முன்வைத்து விவாதிக்காதீர்கள்.

ஒரு சிலரின் தவறுகளுக்காக, ஒட்டு மொத்தமாக இஸ்லாமியர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்கள், கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள், மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்றெல்லாம் தலைப்பிட்டு பதிவு எழுதுவதை நிறுத்துங்கள். இப்போது நான் கூட இந்தப்பதிவிற்க்கு, ஒரு சில ஈழப்பெண்கள் விபச்சாரம் செய்தார்கள் என்பதற்காக விபச்சாரிகளாக மாறிவரும் ஈழப்பெண்கள்  என்றும்,  ஒழுக்க கெட்ட ஈழத்தமிழ் பெண்கள் என்றும் தலைப்பிட்டு ஹிட்ஸ் வாங்கியிருக்க முடியும். அப்படி செய்வதென்பது ஒட்டுமொத்த ஈழ தமிழர்களுக்குமே இழுக்கு. ஒரு சிலர் செய்தது ஒரு சிலரோடு போகட்டும். அதற்கு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சேர்க்க உங்களைப்போல் எனக்கு மனம் வரவில்லை.





19 கருத்துகள்:

  1. உங்கள் கருத்து நியாயமானதும், சரியானதும் ஆகும், ஏனென்றால் தனிமனித தவறுகளுக்கு ஒரு சமுதாயம், இனம், மதம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்க்க முடியாது. எனவே ஒட்டு மொத்தமாக இஸ்லாமியரை இழிவாக பேசுவது கண்டனத்துக்கு உரியது...

    பதிலளிநீக்கு
  2. தூங்குபவர்களை எழுப்பி விடலாம்.தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்,

    இந்த பின்னூட்டம் மூலமாக அனைத்து முஸ்லிம் பதிவர்களையும் ஒன்று கேட்டுக்கொள்கின்றேன். தயவுக்கூர்ந்து இந்த பிரச்னையை இத்தோடு விட்டுவிடுவோம். இவர்களுடைய தராதரம் என்னவென்று தெரிந்து விலகிக்கொண்டோம். அதனை பொதுவிலும் தெளிவாக வைத்துவிட்டோம். உண்மையை அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் இரு தரப்பு கருத்துக்களையும் பார்த்து முடிவு செய்துக்கொள்ளட்டும். இதுபோதும்.

    நீங்கள் நன்மையிலும், இறையட்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளுங்கள். பாவத்திலும், வரம்பு மீறுதளிலும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டாம். அல்லாஹ்வை அஞ்சுங்கள், அவன் கடுமையாக தண்டிப்பவன் - குர்ஆன்.

    இந்த இறைவசனத்தின்படியே இதுவரை செயல்பட்டிருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ், இனியும் நாம் அவ்வண்ணமே செயல்படும்வரை, நம் ஒற்றுமை குறையபோவதில்லை.

    ஆகையால் இந்த பிரச்னையை இனி விலகி வைத்துவிட்டு, அவரவர் வழமையான வேளைகளில் கவனம் செலுத்துவோம்.

    சகோதரர் நிரூபன் அவர்களுக்கு சென்ற பதிவில் சில விளக்கங்களை அளிக்க வேண்டி உள்ளது. இன்ஷா அல்லாஹ், இங்கே புயல் பிரச்சனைகள் முடிந்த பிறகு அவருக்கு (மார்க்கம் சார்ந்த உள்ளிட்ட) கேள்விகலுக்கு விடை அளிக்கின்றேன்.

    வஸ்ஸலாம்...

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும்!

    அழகிய முறையில் அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு முடிவு ஆஷிக். தயவு செய்து இதையே தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஸலாம் சகோ.சிராஜ்,
    மீண்டும் ஒரு மிகவும் அருமையான விளக்கம். நன்றி. ஆனால், இது இவர்களுக்கு தரப்படும் கடைசி விளக்கமாக இருக்கட்டும் சகோ..!

    பதிலளிநீக்கு
  7. Assalamu alikum bro!
    Pothum ethodu nerutikolvom!!!
    Megavum thevaiyana pathivu!!!

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாம் அலைக்கும்...
    சிராஜ் பாய் .
    உங்க கடைப்பக்கம் வருவது இதுதான் முதல் முறை .
    ஐட்டங்கள் (பதிவுகளே சொன்னேன்) விலை நியாயமாகவும் ,
    கொஞ்சம் காரம் தூக்கலாகவும், பேஷ் ! பேஷ் !! நன்னா இருக்கு !!!
    இத இதத்தான் GENTLE MEN பதிவுன்னு சொல்றது... உள்ளத்தில் நோயுள்ளவர்கள் சிந்திக்கவேண்டிய, அருமையான பதிவு ...
    மண்டையில் கொஞ்சம் மசாலா இருக்கு??!! , இணையம் ,வலைப்பூ
    இருக்கிறதுனாலே எதை வேண்டுமானாலும் முன்பின் யோசனையில்லாமல்,சமூக சீர்திருத்தவவாதி என்கிற நினைப்பில
    பதிவிடும் பதிவர்கள் யோசிக்கவேண்டிய வடை பஜ்ஜி இது (அதாங்க இந்த பதிவு) மற்றும் சகோ ஆஷிக் அஹமது பாய் சொல்வதையும் கேட்டு நடப்போம்..
    உங்க கடையிலே நல்லா வியாபாரம் ஆகணும்னு துவா செய்கிறேன் ...
    நல்ல பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிராஜ் பாய் ...

    பதிலளிநீக்கு
  9. Assalamu alaikum,
    Good points.Explained in an eloquent way...

    Now its time for them to re-evaluate their claims

    பதிலளிநீக்கு
  10. எனக்கு இந்த பிரச்சினைகள் எதுவுமே தெரியாது.சம்மந்தப்பட்ட பதிவுகளின் இணைப்புக்களை தாருங்கள். படிக்கிறேன். ஆனால் ஒரு விடயம் எந்த இஸ்லாமியராவது தங்களை தமிழராகவா அடையாளப்படுத்துகின்றனர்? இல்லையே. தம்மை முஸ்லிம் என்று தனித்துவமாக அடையாளப்படுத்தும்போது முஸ்லிம் என்றுதானே ஏனையவர்கள் விழிப்பார்கள்

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் நண்பா,
    நல்லதோர் பதிவு,
    தங்களிடம் கடந்த பதிவில் நான் எழுதிய பதில்களுக்கான கருத்துரையினை எதிர்பார்த்திருந்தேன். பரவாயில்லை!

    இப்போது நீங்கள் பதிவிட்டிருப்பது இரு தரப்பினருக்கும் தெளிவான புரிதலைக் கொடுக்கும் என நினைக்கிறேன்.

    ஆனால்...//


    VANJOOR said...
    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    *******
    ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
    //

    இப்படி ஓர் நண்பர்...எழுதிக் கொண்டு திரிகிறாரே? அதற்கு என்னய்யா தீர்வு?

    ஆதாரங்களை அவர் முன்வைக்காது சிலரின் பதிவுகளை மாத்திரம் காப்பி பேஸ்ட் பண்ணி எழுதிக் கொண்டு திரிகிறாரே!
    நீங்கள் இதற்கு என்ன கூறப் போகிறீங்க?

    பதிலளிநீக்கு
  12. assalaamu alaikumசெம பசிக்கு இந்த ஒரு பஜ்ஜி போதும். . .suppar நடுநிலை சிந்தனை கொண்டவர்கள் புரிந்து கொள்வதே நமக்கு போதும்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கு மிக்க நன்றி KRP செந்தில் அவர்களே .... இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று ஒதுங்கி நின்றே அனைவரும் கவனித்து வந்தனர். அந்த சூழ்நிலையில் முதல் ஆளாய் கருத்து தெரிவித்த உங்கள் தைரியத்தை மனம் திறந்து பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. செந்தில் போலவே கருத்திட்ட, சகோ பராரி அவர்களுக்கும், அந்நியன் அவர்களுக்கும் நன்றி. விஷயத்தை முழுதுமாக தெரிந்து கொள்ள நீங்கள் லிங்க் கேட்டு இருந்தீர்கள். பின்வரும் தளங்களை பார்வை இடுங்கள் அத்தோடு எனது இதற்க்கு முந்தய இரண்டு பதிவுகளையும் பாருங்கள்.
    http://shanthru.blogspot.com/2011/12/blog-post_14.html
    http://valaiyukam.blogspot.com/2011/12/blog-post_21.html
    http://www.tamilaathi.com/
    http://www.thamilnattu.com/
    http://www.pinnoottavaathi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  15. அதே போல் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோ நிரூபனுக்கும் நன்றிகள் பல. நான் கேட்க நினைத்த பல கேள்விகளை சகோ ஆசிக் கேட்டிருக்கிறார். எனவே மீண்டும் ஒரு முறை நான் கேட்க விரும்பவில்லை.

    பதிலளிநீக்கு
  16. பெரும்பாலானா நண்பர்கள் இந்த பிரச்சனையை இந்த அளவில் முடித்துக்கொள்ளுமாறு கேட்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விவாதிக்க எனக்கும் விருப்பம் இல்லை. ஆகவே இத்துடன் இது சம்பந்தமான எனது பதிவுகளை நிறுத்திக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. கடந்த சில நாட்களாக நான் தொடர்ந்து இன்டர்நெட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை. ஆகவே தான் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை. அதற்காக அனைவரும் என்னை மன்னிக்கவும். எனது நெருங்கிய நண்பன் ரஹீம் கஸாலியிடம், ஆபாசம் மற்றும் அருவருப்பு இல்லாமல் இருக்கும் அனைத்து பின்னூட்டங்களையும் அனுமதிக்கும் படி கூறி இருந்தேன். அவனும் அவ்வாறே செய்தான். கஸாலிக்கும் எனது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. ASSALAMU ALAIKUM,
    இஸ்லாமிய எதிர்ப்பு கட்டுரைக்கு உங்களின் பதில் சரியான மூக்குடைப்பு..ஒரு சிலரின் தவறுகளை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் தவறாக காட்டுவதுதான் இவர்களின் குணமே...இவர்கள் தான் அறிவிருந்தும் மூடர்கள்(அதை சரியாக சிந்திக்கவைகாததால்)....

    www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters