வியாழன், டிசம்பர் 29, 2011

பதிவுலகின் ஒரே நேர்மையாளர் நிரூபனுக்கு ஒரு கடிதம்...



நலமா நிரூபன்?

நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். நமக்குள் கருத்து மோதல் தானே, மற்றபடி என்ன வாய்க்கால் சண்டையா? ஆகவே நாம் அனைவரும் நலமாகவே இருக்க வேண்டும்.

உங்களுக்கும் எனக்கும் பெரிய பரிட்சயம் இல்லை. அதனால் என்னிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்து நீங்கள் சிறிது ஆச்சரியம் அடையக்கூடும். சில சந்தேகங்கள் சகோ.

சகோ என்று கூப்பிடலாம் தானே? போலித்தனமாக இல்லை, உண்மையாகவே. போலித்தனமாக யாரையும் எனக்கு விழிக்கத்தெரியாது நிரூ.

சகோ சவுந்தர் அவர்களுடன்  நீங்கள் சண்டையிட்ட ஒரு பதிவில், தவறான கருத்துள்ள பதிவிற்கு நான் பின்னூட்டமிடமாட்டேன்.
மாறாக, அவர்களுக்கு தனியாக மெயில் செய்வேன் என்பதுபோல்
கூறியிருந்தீர்கள்.  அதை படித்தவுடன் நீங்கள் மிகச்சிறந்த பண்பாளர் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.

நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ?, உங்களுக்கென்று ஒரு இடத்தை என் மனதில் கொடுத்திருந்தேன்.

ஆனால் பவுடர் அண்ணே மிக கொச்சையாக ஆபாசமாக பதிவிட்ட ஒரு பதிவிற்கு
   
வணக்கம் மச்சி மணி,,
 என்னா ஒரு வேகம்?
 இருங்க படிச்சிட்டு வாரேன்.
  
என்று முதல் பின்னூட்டமும்,அதை தொடர்ந்து

    உனக்கு எம்புட்டுத் தில் மச்சி!

    செமையா கலாய்ச்சிருக்காய்.

என்று இரண்டாவது பின்னூட்டமும் போட்டிருந்தீர். அது உங்கள் பார்வையில் ஒரு கண்ணியமான பதிவா? தரமான பதிவர் என்று பலராலும் அறியப்பட்ட உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை
ஒருவேளை மற்றவர்கள் தவறான முறையில் பதிவு எழுதினால் மட்டும்தான் மெயிலில் சொல்வீர்கள் போல.....அதே தவறை உங்கள் நண்பர் செய்தால் ஆதரிப்பீர்களோ? இது எந்த விதத்தில் நியாயம்?

அந்த பதிவில் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு உடன்பாடு இருந்திருக்கும். ஆனால்,
அதை எழுதிய முறையில் சில ஆபாசமும், அருவருப்பும் இருந்ததே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது கண்டுகொள்ளவில்லையா?

இவ்வளவு தானா நிரூபன் நீங்கள்?

இந்த இரண்டு முகங்களில் எது  நிருபனின் உண்மையான முகம்?

மேலும் ஒரு சந்தேகம்?,
அந்த பின்னூட்டத்திலேயே

உனக்கு எம்புட்டு தில் மச்சி....என்று
இன்னொன்றையும் சொல்லியிருந்தீர்கள்.

ஃபிரான்சில் படுத்துக்கொண்டு இஸ்லாத்தை திட்டி எழுத என்ன தில் வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.
சவுதியில் இருந்துகொண்டு இஸ்லாத்தை தாக்கி பவுடர் அண்ணே எழுதியிருந்தா அது தில்லு.....அல்லது இலங்கையில், அதுவும் கொழும்பில் இருந்து ஏதாவது ஒரு பத்திரிகையில் ராஜபக்‌ஷேவை எதிர்த்து எழுதியிருந்தா அது தில்லு.

அதை விடுத்து, ஃபிரான்சில் உட்கார்ந்துகொண்டு தனது றஜீவன் என்ற ஒரிஜினல் பெயரிலோ அல்லது ஒரிஜினல் முகத்தையோ காட்டாமல் பவுடர் பூசிக்கொண்டு போலி பெயரில் அநாகரீகமாக கெட்டவார்த்தையில் எழுத என்ன தில் வேண்டும் நிரூ....

இந்த இரு சந்தேகங்களையும் கொஞ்சம்புரிய வைத்தால் நன்று....

தேவை ஏற்பட்டால் மீண்டும் சந்திப்போம்....இறைவன் நாடினால்.


38 கருத்துகள்:

  1. ஸலாம் சகோதரர்,

    நிரூபனின் மற்றொரு முகம் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது என்ற என்னுடைய கருத்துக்கு வலையுகம் தளத்தில் சகோதரர் நிரூபன் பின்வருமாறு தெரிவிக்கின்றார்.

    //முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றிய பதிவுகள், ஈழ மக்களின் அவலங்கள் தொடர்பான பதிவுகள், ராஜீவ் கொலை தூக்குத் தண்டனை தொடர்பான பதிவுகள் மற்றும் செங்கொடி தீக்குளிப்பு விவகாரங்கள் இதில் ஏதாவது ஒன்றில் தாங்கள் பங்களிப்பு நல்கியிருந்தால்....நானும் இந்த பவுடர் ஸ்டாரின் கருத்தினைக் கண்டித்திருக்க முடியும்//

    ஆஹா...என்னவொரு விளக்கம். ஒருவர் எப்படி நடந்துக்கொள்ள கூடாதென்பதற்கு உதாரணம் நிரூபனின் மேற்கண்ட கமெண்ட்.

    நிரூபனின் குற்றச்சாட்டுக்கு என்னுடைய பதில்

    //திரும்ப உங்கள் முகத்தை நன்றாக காட்டியதற்கு நன்றி. ஒருவேளை நீங்கள் மேலே கூறியவற்றில் ஒன்றிலாவது என் பங்களிப்பை காட்டினால் உங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வீர்கள்? செய்தவற்றை சொல்லிக்காட்டுவது மிகுந்த சங்கடமாக இருந்தாலும் நீங்கள் இங்கே பொதுவில் கேட்டுவிட்டதால் சொல்கின்றேன். இதோ ராஜபக்சே குறித்து நான் எழுதிய கடிதம் தருமி அவர்களின் தளத்தில் வெளியான ஆதாரம்.

    http://dharumi.blogspot.com/2011/04/497.html

    தமிழக மீனவர்கள் படுகொலை, ராஜீவ் கொலை வழக்கு etc என்று பிரச்சனைகள் வரும்போது பொதுவிலும் சரி, மறைமுகமாகவும் சரி...என்னால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்திருக்கின்ரேன். உங்களிடம் அதனையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை சகோதரர். நான் பதில் சொல்ல வேண்டியது இறைவனுக்கு மட்டுமே.

    இவ்வளவு கேவலமாகவும் மனிதர்கள் இருப்பார்கள் என்று மறுபடியும் நிரூபித்ததற்கு நன்றி...//

    இந்த பிரச்சனையில் நிரூபன் போன்றவர்களை நன்கு அடையாளம் கண்டுக்கொண்டோம். விலகியும் விட்டோம். அல்ஹம்துலில்லாஹ்

    வஸ்ஸலாம்,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    பதிலளிநீக்கு
  2. சகோ நலமா ..நான் நலம் வாழ்த்துக்கள் நல்ல பதிவு உங்களின் எல்லா பதிவுகளையும் படித்திருந்தேன் முன்பு இப்போ நிறையா மிஸ் பண்ணுறேன் ....

    பதிலளிநீக்கு
  3. பிரச்சனையை சுமூகமாக முடிக்க உண்மையாகவே விரும்பும் (இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட) சகோதரர்கள் கவனிப்பார்களா....நேர்மையுடன் செயல்பட முன்வருவார்களா?

    முதலில் ஆரம்பித்தது நீங்கள் தான். அதாவது, உங்கள் அணியில் உள்ள மணி சகோதரர் தான். அவருடைய இஸ்லாமிய துவேஷ பதிவு வந்திருக்கவில்லை என்றால் எங்களுடைய பதிவுகளும் வந்திருக்காது. As simple as that...

    பிரச்சனையை முடிக்க விரும்பும் உண்மையாளர்கள், மணி அவர்களின் பிரச்சனையை ஆரம்பித்து வைத்த பதிவு குறித்து தயவுக்கூர்ந்து ஒரு முடிவு எடுத்து விட்டு பிறகு பேசுமாறு தாழ்மையுடன் கேட்குக்கொள்கின்றேன். ஏனென்றால் அந்த பதிவு வந்திருக்கவில்லை என்றால் இந்த அளவு பிரச்சனைகளே வந்திருக்காது.

    பிரச்சனை எங்கிருந்து ஆரம்பித்தது என்று அறிந்து, உண்மையை உரக்க சொல்லி, தீர்வு காண முன்வருவது தான் அறிவார்ந்த செயல்.

    ஆகையால் அந்த பதிவிற்கு ஆதவரிளித்து வோட்டு போட்டோர், கமெண்ட் போட்டோர் இது குறித்து ஒரு முடிவு எடுத்து விட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்து கொள்ள முன்வருமாறு அழைக்கின்றேன்.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    பதிலளிநீக்கு
  4. ஸலாம்

    சகோ நிரூபன் சொல்லட்ட்டும் ...
    பிரச்சனை தொடக்கியது யார் என்பதை விட பிரசசனையாக்கியது யார் என்று

    :)

    பதிலளிநீக்கு
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...பொறுமையுடன் அழகிய முறையில் கேள்வி கேட்டுள்ளீர்கள்.பதில் வருமா என்று பொறுத்திருந்து பார்போம்.இறைவன் நாடினால்.

    பதிலளிநீக்கு
  6. ஃபிரான்சில் படுத்துக்கொண்டு இஸ்லாத்தை திட்டி எழுத என்ன தில் வேண்டும் என்று எனக்கு புரியவில்லை.சவுதியில் இருந்துகொண்டு இஸ்லாத்தை தாக்கி பவுடர் அண்ணே எழுதியிருந்தா அது தில்லு///

    +1

    பதிலளிநீக்கு
  7. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பின் சகோதரர் நிரூபன்,
    சமூகத்தின் பொதுவான விடயங்கள் குறித்து நீங்கள் (அதாவது முஸ்லிம்கள்) கருத்து தெரிவித்திருந்தால் நான் பவுடர் மணியை கண்டித்திருப்பேன் என்று சொன்னீர்கள். அதற்கு ஆஷிக் அஹமத் ஆதாரத்துடன் ஒரு பதிவை எடுத்துக் காட்டியும் விட்டார். ஆனால் அதை குறித்து வாய் திறக்க நிரூபன் மறுப்பதேன்? நாங்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் என்று ஆஷிக் நிருபித்த பின்னரும் நீங்கள் சொல்லியவண்ணம் பவுடர் மணியை கண்டித்தீர்களா நிரூபன்? இந்த விடயத்திலேயே உங்களின் முகம் அம்பலப்பட்டு தொங்குகிறதே?

    பதிலளிநீக்கு
  8. இன்னும் எவ்வளவு காலம் இஸ்லாமிய சொந்தங்களே என்று கூறிக் கொண்டே மலையளவு வன்மத்தை நெஞ்சில் அடைத்து வைத்திருக்க போகிறீர்கள்? இணையத்தில் நீங்கள் ஆபாசத்தை பரப்புவது குறித்து உங்களின் தோஸ்த் பவுடர் மணியே வாக்குமூலம் கொடுத்து விட்டாரே. நாற்று வயல் குருப்பினர் இதற்கு என்ன பதிலை சொல்ல போகிறீர்கள்?.

    சகோதரர் சிராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஒருக்காலும் விடுதலைப் புலி ஆதரவாளர்களிடமிருந்து நேர்மையை எதிர்பார்க்காதீர்கள். அத்தகைய நேர்மையை அவர்களின் அரசியல் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவுமில்லை. அவர்கள் பிறரை பார்த்து கற்றுக் கொள்ள கூடியவர்களுமில்லை.

    பதிலளிநீக்கு
  9. என்னமோ நடக்குது......மர்மமா இருக்குது...

    பதிலளிநீக்கு
  10. சகோதரர் சிராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். ஒருக்காலும் விடுதலைப் புலி ஆதரவாளர்களிடமிருந்து நேர்மையை எதிர்பார்க்காதீர்கள். அத்தகைய நேர்மையை அவர்களின் அரசியல் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவுமில்லை. அவர்கள் பிறரை பார்த்து கற்றுக் கொள்ள கூடியவர்களுமில்லை.///
    ஒசாமா பின்லேடனிடம் இருந்து கற்றிருக்க வேண்டும் ஆனால் தவறி விட்டார்கள்...

    நல்லவேளை பெண் ஒழுக்கம் பற்றி உங்களை பார்த்து கற்காமல் விட்டுவிட்டார்கள்...!

    பதிலளிநீக்கு
  11. அன்பிற்குரிய சிராஜ், என்னிடம் நேர்மையினை எதிர்பார்த்து நீங்கள் ஒரு பதிவினை இடவேண்டுமா? நான் என்ன நேர்மையின் சிகரமா ஐயா?

    இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிராக நான் பதிவு எழுத வேண்டும் என்றால் என் தளத்தில் எழுதியிருப்பேன், பவுடர் ஸ்டாரின் தளத்திற்குப் போய் அப் பதிவினூடாக உங்களுக்கு எதிரானவனாக நான் என்னைக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை!

    தயவு செய்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தில் பிரச்சாரம் செய்வதனை முதலில் நிறுத்துங்கள்!

    முதலில் மணியின் பதிவில் பின்னூட்டம் எழுதியமைக்கான காரணத்தினைச் சொல்லுகிறேன்.

    ஒருவர் ஓர் சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை எழுதுவதனை அல்லது ஓர் சமூகத்திலிருந்து தனக்குப் பிடிக்காத விடயங்களை எதிர்த்து எழுதுகையில் நாம் என்ன கேட்போம்? உனக்கு என்னா ஒரு தில்லு!
    இதனைத் தான் அங்கே கேட்டிருக்கிறேன். உனக்கு என்ன தில் இருந்தால் இப்படி ஓர் பதிவினை வேகமாக எழுதியிருப்பாய்...

    இதன் மூலம் என்னை உங்களுக்கு எதிரானவனாக நீங்கள் காட்டிக் கொள்ள வேண்டாம்,

    ஓர் சிறிய உதாரணம் ஈழத்தினைச் சேர்ந்த பாயிக் முஹமட் என்ற நண்பருக்கும் (பதிவர்) எனக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் வரும். முரண்படுவோம், அடுத்த பதிவுகளில் நாம் போய் சிரித்து பேசிக் கொள்வோம். ஆனால் அவரோ நானோ மதம் தொடர்பான கருத்துக்களை இதுவரை இறுக வெளிப்படுத்தியதில்லை! முதலில் இந்தப் பிரச்சினையினை உருவாக்கியது யார் என்று நோக்குவோம்!

    பதிலளிநீக்கு
  12. முஸ்லிம்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றார்கள் எனும் தொனிப் பட ஈழத்துச் சகோதரன் சந்துரு யோகராஜா ஓர் பதிவினை எழுதினார். அப் பதிவின் பின்னூட்டத்தில் போய் உங்களோடு இப்போது முரண்பட்டுக் கொண்டிருக்கும் பவுடர் ஸ்டார் அவர்கள் தான் முதன் முதலாக அப் பதிவினைக் கண்டித்துப் பின்னூட்டம் எழுதியதுடன், இனத்துவேசத்தினை உருவாக்கும் நோக்கில் இப்படி ஓர் பதிவினை எழுதியது தவறு என்று குறித்த பதிவருக்குச் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாது, தமிழ்மணத்திற்கும் அப் பதிவினை நீக்கக் கோரி மடல் அனுப்பினார். பின்னர் அப் பதிவினை நாற்று குழுமத்தில் பகிர்ந்து அனைவரிடமும் மைனஸ் ஓட்டும் குத்துமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு சாட்சி ஆமினா அக்கா மற்றும் சகோ ஆஷிக்!

    இதன் பின்னர் பிரச்சினையை யார் தொடங்கினார்கள் தெரியுமா? சகோதரன் ஹைதர் அலி அவர்கள். ஈழத்துச் சகோதரனே எங்களை எப்போது புரிந்து கொள்வாய் என்று பிரதேசவாதத்தினைத் தூண்டும் வகையில் ஓர் பதிவினை எழுதினார். இப் பதிவு தொடர்பில் நாற்று குழுமத்தில் விவாதித்தார்கள். அங்கே விவாதிக்கையில் தான் மதம் தொடர்பான இறுக்கமான க்ருத்துக்களை இஸ்லாமிய உறவுகள் தம்மை நாற்று குழும உறுப்பினர்களிலிருந்தும் பிரித்து தனித்துவமான இனமாக கருதி முன் வைத்தார்கள். இது மணிக்கு பிடிக்கவில்லை! ஹைதர் அலியின் பதிவு தொடர்பில் பிரதேசவாதம் தொடர்பாக பேச வேண்டிய நேரத்தில் மதம் தொடர்பாகவும், குர் ஆன் தொடர்பாகவும் ஏன் பேச வேண்டும்? இதனால் தான் பவுடர் மதவெறியர்கள் என மேற்கோளிட்டு பதிவினை எழுதினார். இந்த விவாதத்தில் நான் கலந்து கொள்ளவுமில்லை! விவாதம் இடம் பெற்ற சமயம் நத்தார் பண்டிகை என்பதால் எனக்கு வேலையில் பிசியாக இருந்தேன். இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் ஆமினா அக்காவுடனும், ஆஷிக்குடனும் பேசியிருக்கிறேன்.

    மதம் பற்றிய கருத்துக்களை இறுக்கமாக கொண்டு, மதம் பரப்பும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட சகோதர்களுடன் தான் மணி மோதப் போனான். ஆனால் அவனது அடுத்த பதிவினை ஒட்டு மொத்த இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் எதிராக திசை திருப்பியது உங்களுடன் இங்கே துணையிருக்கும் ஒரு சில பதிவர்கள்.

    பதிலளிநீக்கு
  13. நண்பா, உங்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன், என்னுடைய ப்ளாக்கில் இஸ்லாமியச் சொந்தங்கள் ஏன் சிறிய சிறிய விடய்ங்களையெல்லாம் பெரிதுபடுத்துகிறார்கள். தாழ்வு மனப்பான்மையா என்று விவாதம் வைத்திருந்தேன். அந்த விவாதத்திற்கு கூட தொடர்பேதும் இல்லாது மதம் சம்பந்தமான கருத்துக்களை யார் முன் வைத்தது? நான் உளவியல் ரீதியில் தானே கருத்துக்களைக் கேட்டேன்.

    வலைப் பதிவு என்பது எல்லோரினதும் விருப்பு வெறுப்புக்களை எழுதுவதற்கான இடமும், நீங்களும் ஹசாலி அண்ணரும் தான் பொது விடயங்களை எழுதுகின்றீர்கள். ஏனைய இஸ்லாமியச் சொந்தங்களும் மதம் தொடர்பான பதிவுகளை எழுதி ஏனைய பதிவர்களுக்கு வெறுப்பினைக் கூட்டுவதனை விடுத்து உங்களைப் போல பொதுவான கருத்துக்கள் நிறைந்த பதிவுகளை எழுதலாமே நண்பா? நண்பா, நான் எத்தனையோ அரசியல் பதிவுகள் எழுதியிருப்பேன், தமிழ்நாடு தொடர்பான பதிவுகளை எழுதியிருப்பேன், ஏன் ஹசாலி அண்ணர், நீங்கள் கூட அரசியல் மற்றும் பொதுப் பதிவுகளை எழுதியிருப்பார்கள். ஆனால் ஒரு சில நண்பர்கள் மாத்திரம் அப் பதிவுகளுக்கு வருகை தராது மதம் தொடர்பான தீவிரமான பதிவுகளை எழுதுவது ஏன்? இது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் பவுடர் எழுதிய முதல் பதிவினை லூஸில விட்டிருந்தால், மதத்தினைப் பவுடர் அவ்மதித்து விட்டான் என ஒருமித்து எல்லோரும் குரலெழுப்பாது கண்டுக்காம விட்டிருந்தால் பவுடர் அடுத்த பதிவு எழுதியிருப்பானா? சொல்லுங்கள்! இது யார் மேல் தவறு?

    இன்னோர் கேள்வி, என் விவாதமேடையில் மதம் தொடர்பாகவோ, அல்லது மதம் பரப்புவது தொடர்பாகவோ லிங் கொடுக்க வேணாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் பல அன்பர்கள் பதிவினைக் கூடப் புரியாது குர் ஆன் பற்றியும் மறை நூல்கள் பற்றியும் பேசி லிங் கொடுத்திருக்கிறார்களே?

    போகிற போக்கில் எல்லா இடமும் குர் ஆனைப் போட்டு காரணம் ஏதும் இல்லாது இதனைப் பின்பற்றுங்கள், அழையுங்கள் தொலைபேசியில் என்று வலையில் ஓர் விவாத மேடைப் பதிவில் சொல்லி விட்டுச் சென்றால் யாருக்கு நண்பா கோபம் வராது? சொல்லுங்கள்!

    குர் ஆன் என்ன சீப் ஆன புஸ்த்தகமா? இப்படி மதம் தொடர்பான பதிவுகள் எழுதும் எல்லா நண்பர்களும் செய்கையில் குர் ஆனின் மதிப்பு உயருமா? தாழ்வுறுமா? சொல்லுங்கள்! இதனை உங்களைப் போன்ற நண்பர்கள் கண்டு கொள்ளாதிருப்பது தவறில்லையா?

    பதிலளிநீக்கு
  14. நண்பா ஓர் எளிய உதாரணம் முன் வைக்கின்றேன்,
    நாம் இந்துக்கள், ஆனாலும் நான் இதுவரை இந்துக்கள் தொடர்பான பதிவுகள் எழுதியதுமில்லை! எனக்கு இந்துமதம் தொடர்பில் பற்றும் இல்லை! ஆனால் சோதிடப் பதிவுகளை எழுதும் ஆர்,கே சதீஷ்குமாரும், ஆன்மீகப் பதிவுகள் எழுதும் ராஜராஜேஸ்வரியும் உங்கள் வலைக்கு வந்து இந்து மதத்தினைப் பின்பற்ற அழையுங்கள் எனக் கேட்டால் யாருக்கு நண்பா கோபம் வராது? நீங்கள் சிரித்துக் கொண்டிருப்பீர்களா? இப்படியான பதிவினைப் பார்த்து? அவர்கள் அப்படிக் கேட்பதில்லை. ஆனால் வலைப் பதிவுகளில் ஒரு சில இஸ்லாமிய அன்புச் சொந்தங்கள் மாத்திரம் இப்படி நடப்பது ஏனையோருக்கு எரிச்சலூட்டும் என நினைத்துப்பார்த்தார்களா? சொல்லுங்கள் நண்பா!

    இப்போது என் விளக்கங்கள் உங்களுக்கு திருப்தியளித்திருக்கும் என நினைக்கிறேன்!

    நான் கருத்து மோதல்களை கருத்துக்களாகவே எடுத்துக் கொள்வேன். தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளும் பக்குவம், பண்பு எனக்கு இல்லை. ஆகவே கவலை வேணாம்! அதே போல ஏனைய நண்பர்களும் பரஸ்பர புரிந்துணர்வுகளுடன் இருக்கும் பட்சத்தில் இந்த மோதல்கள் யாவும் நிறைவிற்கு வரும் என நினைக்கிறேன்.

    நாற்று வலைப் பதிவில் இடம் பெற்ற விவாதத்தில் தான் இஸ்லாமியச் சொந்தங்கள் சிலரின் மதவெறி தொடர்பான கருத்துக்களுக்கு எதிரான மோதலை விடுதலைப் புலி ஆதரவாளர்கள் சிலர் இஸ்லாத்தை எதிர்பாதாக காட்ட முனைந்தார்கள்! அறிவீலித்தனமாக புலிகளையும் இதற்குள் இழுத்து வைத்து மோதல் செய்வதனை குறிப்பிட்ட நபர்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  15. VANJOOR சொன்னது… 7
    சுட்டியை சொடுக்கி படியுங்கள்

    *******
    ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********

    //

    அண்ணே நிறுத்துங்கண்ணே..புலிகளே எல்லாவற்றையும் மறந்து மன்னிப்பும் கேட்டு இஸ்லாமியச் சொந்தங்களை தம்மோடு 2002 இல் வாழ வருமாறு கேட்டு விட்டார்கள். இந்தக் குரோதங்களுக்குப் பழிவாங்கல்களை இஸ்லாமியச் சொந்தங்களும் அளவு கணக்கின்றி கிழக்குமாகாணத்திலும், மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகள் மீதும் அகட்டி விட்டார்கள். காலையில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்,. இப்போது இடம் பெறும் மதவெறி தொடர்பான மோதல்களுக்குள் எப்படியாவது புலிகளைத் திணிக்கலாம் என்று பார்க்கிறீங்க. இஸ்லாமியச் சகோதர் ரியாஸ் கூட இரு நாட்களுக்கு முன்னர் சகோதரன் ஹைதர் அலியின் பதிவில் இஸ்லாமியர்கள் புலிகள் பிரச்சினை எப்போதே பரஸ்பர தீர்வு காணப்பட்டு புரிதலுக்கு உளாக்கப்பட்டு விட்டதாக சொல்லி விட்டார்கள்..

    நீங்க சொந்தமாக ஓர் பதிவு எழுதியிருந்தாலும் பரவாயில்லை. அதுவும் இதில வாற சேர் பொன் இராமநாதன் பற்றிய கருத்து என்னுடைய விவாதமேடையிலிருந்து சுட்டது. ஹே...ஹே...அப்புறமா ஏனைய பதிவுகள் தமிழரங்கம் இராயகரனின் வலையிலிருந்து சுட்டவை. அப்புறமா இப்போ ஈழத்தில் இஸ்லாமியச் சொந்தங்களும் தமிழர்களும் எப்படி வாழ்கிறார்கள் என்று அறிந்து விட்டு உங்கள் சுய மூளையில் ஏதாவது எழுதுங்கள். இதற்கு மேல் பழையதை கிளற வேண்டாம், பிரச்சினையை திசை திருப்பவும் வேண்டாம்,

    வடக்கிலிருந்து இஸ்லாமியச் சொந்தங்கள் வெளியேற்றப்பட்டது அற்ப அல்லது சிறு காரணங்களுக்காக, ஆனால் அதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியச் சொந்தங்கள் பழிவாங்கியது.....வேணாம் மிகுதி சொல்லி இப் பதிவினை திசை திருப்ப விரும்பலை! புரிந்து கொள்ளுங்கள்! கொஞ்சமாவது உங்களின் 110 கிராம் மூளையினை பயன்படுத்தி யோசியுங்கள்!

    பதிலளிநீக்கு
  16. அண்ணே, இன்னோர் விடயம், நான் விவாத மேடை வைத்ததற்கும்,சகோ முஹமட் ஆஷிக்கின் பதிவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. யாரையாவது தாக்கி எழுதுவது என்றால் நான் நேரடியாகவே எழுதி விட்டு போய் விடுவேன், அவ் விவாத மேடையினூடாக மதம் தொடர்பில் ஒன்று கூடுவதும், தாழ்வு மனப்பான்மை தொடர்பிலும் தான் கருத்துக்களை வைத்திருந்தேன். ஆனால் அப் பதிவினைப் புரிந்து கொள்ளாது ஆஷிக்கின் பதிவிற்கு நான் எதிர்ப் பதிவு எழுதியதாக புரளி கிளப்பியதோடு ஈ தமிழியன்ஸ் என்று ஈழத் தமிழர்களை இழிநிலைப்படுத்தி ஏன் முஹமட் ஆஷிக் பதிவு எழுத வேண்டும்? சொல்லுங்கள் நண்பா?

    பதிலளிநீக்கு
  17. பி.ஏ.ஷேக் தாவூத் கூறியது...
    இன்னும் எவ்வளவு காலம் இஸ்லாமிய சொந்தங்களே என்று கூறிக் கொண்டே மலையளவு வன்மத்தை நெஞ்சில் அடைத்து வைத்திருக்க போகிறீர்கள்? இணையத்தில் நீங்கள் ஆபாசத்தை பரப்புவது குறித்து உங்களின் தோஸ்த் பவுடர் மணியே வாக்குமூலம் கொடுத்து விட்டாரே. நாற்று வயல் குருப்பினர் இதற்கு என்ன பதிலை சொல்ல போகிறீர்கள்?.//


    அண்ணே, சும்மா போங்கண்ணே, காமெடி பண்ணிக்கிட்டு, இணையம் தாஹீர் என்று ஓர் அன்பர் ஆபாசமா எழுதவதை விடவுமா நாம ஆபாசமா எழுதுகிறோம்? காமெடி பண்ணுறீங்க. யார் யார் ஆபாசம் பரப்புறாங்க என்று அறிந்து விட்டு வாங்கண்ணே. பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  18. பி.ஏ.ஷேக் தாவூத் கூறியது...
    இன்னும் எவ்வளவு காலம் இஸ்லாமிய சொந்தங்களே என்று கூறிக் கொண்டே மலையளவு வன்மத்தை நெஞ்சில் அடைத்து வைத்திருக்க போகிறீர்கள்? இணையத்தில் நீங்கள் ஆபாசத்தை பரப்புவது குறித்து உங்களின் தோஸ்த் பவுடர் மணியே வாக்குமூலம் கொடுத்து விட்டாரே. நாற்று வயல் குருப்பினர் இதற்கு என்ன பதிலை சொல்ல போகிறீர்கள்?.//


    அண்ணே, சும்மா போங்கண்ணே, காமெடி பண்ணிக்கிட்டு, இணையம் தாஹீர் என்று ஓர் அன்பர் ஆபாசமா எழுதவதை விடவுமா நாம ஆபாசமா எழுதுகிறோம்? காமெடி பண்ணுறீங்க. யார் யார் ஆபாசம் பரப்புறாங்க என்று அறிந்து விட்டு வாங்கண்ணே. பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  19. சலாம் சகோ.சிராஜ்,
    நறுக் கேள்விகள்...
    இந்த பதிவில் தலைப்பும்... நீங்கள் போட்டிருக்கும் படம் இந்த இரண்டு மட்டுமே கூட போதும்..! வேறு ஏதும் எழுதி இருக்க வேண்டிய தேவை இல்லை.

    மிஸ்டர் நிரூபனின் மேலே உள்ள இன்றைய எழுத்துக்களையும்... இதற்கு முனனால் அவர் பவுடர் பதிவில் எழுதிய கமெண்ட்ஸ், நாற்று முகநூல் குழும அப்டேட்ஸ், அவரின் பதிவில் கக்கிய விஷம், அங்கெ போடப்பட்ட பயங்கரவாத கமெண்ட்ஸ்கள் அத்தனைக்கும் அவரின் ஆதரவு... அப்பப்பா....

    பேசாமல், இனி மிஸ்டர்.நிரூபன் இந்த படத்தை அவரின் ப்ரோஃபைல் படமாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இதற்கு நீங்கள் ஏதும் காபி ரைட் கோர மாட்டீர்கள் அல்லவா சகோ.சிராஜ்..?

    பதிலளிநீக்கு
  20. நீங்க சொந்தமாக ஓர் பதிவு எழுதியிருந்தாலும் பரவாயில்லை. ///

    அதுக்கு மூளை வேணுமே ..

    வாப்பாக்கு வயசு தான் கூடிவிட்டுதே ஒழிய மதப்புத்தி விட்டுப்போகவில்லை..
    ஈழத்தில இப்போ ஒற்றுமையாய் இருக்கும் தமிழ் முஸ்லீம்களையும் பிரித்து வைக்கவேண்டும் என்ற வக்கிர புத்தி..

    வாப்பா உங்களை அல்லா பார்த்துக்கொள்வார்

    பதிலளிநீக்கு
  21. பேசாமல், இனி மிஸ்டர்.நிரூபன் இந்த படத்தை அவரின் ப்ரோஃபைல் படமாக தேர்வு செய்து கொள்ளலாம். ///

    ஒரு கோமாளியின் புரொபைல் போட்டோவை எடுத்து உங்களுக்கு மாட்டுங்கள் ... கனகச்சிதமாக இருக்கு..

    இந்த பிரச்சனை எழுப்பிதே தாங்கள் தான்.. இப்பொழுது ஒட்டுமொத்த வலையுலக முஸ்லீம்களையும் கோர்த்துவிட்டிருக்கிறியள்... அவமானப்படப்போவதென்னமோ நீங்க தான்.

    பதிலளிநீக்கு
  22. சகோதரர் நிரூபன்,

    சலாம்,

    பின்னூட்டம் நம்பர் ஒன்:

    //ஒருவர் ஓர் சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை எழுதுவதனை அல்லது ஓர் சமூகத்திலிருந்து தனக்குப் பிடிக்காத விடயங்களை எதிர்த்து எழுதுகையில் நாம் என்ன கேட்போம்? உனக்கு என்னா ஒரு தில்லு! இதனைத் தான் அங்கே கேட்டிருக்கிறேன். உனக்கு என்ன தில் இருந்தால் இப்படி ஓர் பதிவினை வேகமாக எழுதியிருப்பாய்...///

    ச்சே...இப்படியும் மனிதர்களா? எப்படி சகோதரர் உங்களால் இப்படி பேச முடியுது? மனிதாபிமானமே இல்லையா? அப்படியே நீங்க சொல்வதை ஒரு வாதத்திற்கு எடுத்து கொண்டாலும், ஒருவர் அத்தோடு நிறுத்தி கொண்டிருக்க மாட்டார். அந்த கண்ணியமல்லாத வந்த பதிவில் உள்ள கருத்துக்களை சுட்டி காட்டி விமர்சித்திருப்பார். அப்புறம் "செமையா கலாய்ச்சிருக்காய்" என்று கூறி புளங்காகிதம் அடைந்திருக்க மாட்டார்.

    அப்புறம் ஒரு முக்கிய விசயம், பதிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் தரவில்லை. அது என்னவென்று உங்களுக்கு நினைவு படுத்துகின்றேன்.

    //அது உங்கள் பார்வையில் ஒரு கண்ணியமான பதிவா? தரமான பதிவர் என்று பலராலும் அறியப்பட்ட உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை
    ஒருவேளை மற்றவர்கள் தவறான முறையில் பதிவு எழுதினால் மட்டும்தான் மெயிலில் சொல்வீர்கள் போல.....அதே தவறை உங்கள் நண்பர் செய்தால் ஆதரிப்பீர்களோ? இது எந்த விதத்தில் நியாயம்? அந்த பதிவில் உங்களுக்கு கண்டிப்பாக உங்களுக்கு உடன்பாடு இருந்திருக்கும். ஆனால்,
    அதை எழுதிய முறையில் சில ஆபாசமும், அருவருப்பும் இருந்ததே அதை நீங்கள் கவனிக்கவில்லையா? அல்லது கண்டுகொள்ளவில்லையா?//

    ??????????????????

    இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைப்பின் அடுத்தடுத்த பின்னூட்டங்களுக்கு பதில் கூறுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  23. நிரூபன் பின்னூட்டம் நம்பர் டூ:

    //முஸ்லிம்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றார்கள் எனும் தொனிப் பட ஈழத்துச் சகோதரன் சந்துரு யோகராஜா ஓர் பதிவினை எழுதினார். அப் பதிவின் பின்னூட்டத்தில் போய் உங்களோடு இப்போது முரண்பட்டுக் கொண்டிருக்கும் பவுடர் ஸ்டார் அவர்கள் தான் முதன் முதலாக அப் பதிவினைக் கண்டித்துப் பின்னூட்டம் எழுதியதுடன், இனத்துவேசத்தினை உருவாக்கும் நோக்கில் இப்படி ஓர் பதிவினை எழுதியது தவறு என்று குறித்த பதிவருக்குச் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாது, தமிழ்மணத்திற்கும் அப் பதிவினை நீக்கக் கோரி மடல் அனுப்பினார். பின்னர் அப் பதிவினை நாற்று குழுமத்தில் பகிர்ந்து அனைவரிடமும் மைனஸ் ஓட்டும் குத்துமாறு கேட்டுக் கொண்டார்//

    மிக்க நன்றி சகோதரர். ஆனால் பாருங்கள், இன்னும் சகோதரர் சந்துரு பதிவு முழுக்க அவர் பயன்படுத்திய "முஸ்லிம்" என்ற வார்த்தை அப்படியே தான் இருக்கின்றது. இந்து தமிழர்கள் இப்படி செய்திருந்தால், இரண்டு இந்துக்கள் அங்கே இப்படி செய்தார்கள் அப்படி செய்தார்கள் என்றுதான் எழுதி இருப்பாரோ?

    //இதன் பின்னர் பிரச்சினையை யார் தொடங்கினார்கள் தெரியுமா? சகோதரன் ஹைதர் அலி அவர்கள். ஈழத்துச் சகோதரனே எங்களை எப்போது புரிந்து கொள்வாய் என்று பிரதேசவாதத்தினைத் தூண்டும் வகையில் ஓர் பதிவினை எழுதினார்.//

    இது என்ன அநியாயம்? அவர் சந்துரு என்ற தனி நபரிடம் வருத்தப்பட்டே அந்த பதிவு எழுதினார். பதிவு முழுக்க சந்துருவை குறித்தே அந்த பதிவு இருக்கின்றது. போராடும் போது முஸ்லிம்களாக தெரியாதவர்கள், தவறு செய்யும் போது மட்டும் முஸ்லிம்களாக தெரிவது ஏன் என்று சகோதரர் சந்துருவிடம் அவர் கேட்டதில் என்ன தவறு இருக்கின்றது? புலிகளால் நடத்தப்பட்ட கொடூரங்கள் ஆறாத வடுவாக மனதில் இருந்தும், போராடும் எங்களை பார்த்து அப்படி சொன்னது ஏன் என்று அவர் சந்துருவிடம் கேட்டதில் என்ன தவறு இருக்கின்றது?

    இதனை பிரேதேசவாதத்தினை தூண்டும் வகையாக நீங்கள் கருதினால் அது யார் மீது குற்றம்? பின்னூட்டங்களில் சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு ஹைதர் கொடுத்துள்ள பதில்களையாவது பார்த்தீர்களா இல்லையா?

    அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, ஏதேனும் காரணம் கூற வேண்டுமென்பதற்காக உளறிக்கொட்ட வேண்டாம் பிரதர்...

    //மதம் பற்றிய கருத்துக்களை இறுக்கமாக கொண்டு, மதம் பரப்பும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட சகோதர்களுடன் தான் மணி மோதப் போனான்.//

    அடடா....

    சின்ன ஒரு கேள்வி...மணி அவர்களின் "புதிய மதம் உருவாக்குவது எப்படி?" என்ற உங்கள் முகத்திரையை கிழித்த பதிவு, இஸ்லாமிய மார்க்கத்தையே கேலி செய்த ஒரு அப்பட்டமான பதிவு. இது குறித்த உங்கள் கருத்து என்னவோ? ஒரு மார்க்கத்தையே கேலி செய்த பதிவு குறித்து உங்க விளக்கம் என்னவோ?

    அதுமட்டும் இல்லாமல் அந்த பதிவு கண்டிக்கத்தக்க பதிவு என்பது நீங்களே ஒப்புக்கொண்ட விசயம் தான். எப்படி என்றால் //இதில் ஏதாவது ஒன்றில் தாங்கள் பங்களிப்பு நல்கியிருந்தால்....நானும் இந்த பவுடர் ஸ்டாரின் கருத்தினைக் கண்டித்திருக்க முடியும்// - இப்படி.. ஆகா நான் என் பங்களிப்பை காட்டி இருந்தால் நீங்கள் மணியை கண்டித்திருப்பீர்கள். நான் பங்களிப்பு நல்கியத்தை காட்டியும் விட்டேன். நீங்க தான் இன்னும் அந்த பதிவிற்காக உங்கள் வாக்குறுதிப்படி சகோதரர் மணியை கண்டிக்கவில்லை.

    அந்த பதிவு கொண்டு வந்த வினை தான் எல்லாம். ஆனால் அதிலும் நான் சொன்னது போன்று ஒரு நல்லது உள்ளது. உங்களை எல்லாம் அறிந்துக்கொண்டு விலகினோம் அல்லவா....அதுவே இறைவனின் மகத்தான கிருபை....

    இன்ஷா அல்லாஹ், தோலுரிப்புகள் தொடரும்...

    பதிலளிநீக்கு
  24. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பின் சகோதர சகோதரிகளே,
    ஏதாவது சொல்லி ஒப்பேத்தி விடலாம் என்ற நினைப்பில் பக்கம் பக்கமாய் பின்னூட்டமிட்டிருக்கும் சகோதரர் நிருபன் ஒரு விடயத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விடு விட்டார். ஏனெனில் அதற்கான எந்த ஒரு சால்சாப்பும் அவரிடத்தில் இல்லை. எனவே அதை தொடாமலே சென்று விட்டார். அது முஸ்லிம் பதிவர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்ற குற்றச்சாட்டும் அது குறித்த ஆஷிக் அகமதின் ஆதாரத்துடன் தோலுரித்தலையும் கண்டும் காணாமலே சென்று விட்டார் நிரூபன்.

    பதிலளிநீக்கு
  25. நிற்க நான் வைத்த குற்றச்சாட்டான இணையத்தை அதிகம் ஆபாச களமாக்கியது வெளிநாட்டில் வசிக்கும் ஈழ தமிழர்கள் தான் என்ற குற்றச்சாட்டு குறித்து பேச வந்த நிரூபன், நான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்த செய்திகள் வரும்போதெல்லாம் அவரை அவர் குடும்பத்தை அதிகமதிகம் ஆபாசமாக தட்ஸ்தமிழ் என்னும் செய்தி இணையதளத்தில் கருத்திட்டு அவர் செய்த உதவிகளை மறந்து அவரை தாறுமாறாக ஏசியவர்கள் பெரும்பாலான புலம்பெயர் ஈழ தமிழர்கள் தான் என்பதை கண்டுகொள்ளவில்லையே. இதற்கு அவரிடம் பதில் இல்லையா? ஆனால் யாரோ தாகிர் ஜாகிர் என்று கதையடிக்கிறார். எவ்வளவு அப்பட்டமான திசைதிருப்பல்கள். புலிகளின் ஆதரவாளராச்சே. பின்னர் திசைதிருப்ப தான் நிரூபனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  26. புலிகளின் தவறுகள் குறித்து பேசவந்தவர் அது போன மாசம் என்று வடிவேல் பாணியில் பதில் சொல்லுவது அப்பட்டமான அநீதியாகும். இன்றுவரை புலிகளின் தவறுகளை யாரும் சுட்டிக்காட்ட கூட விடாதவர்கள் தான் இந்த புலிப்பினாமி கூட்டத்தினர். இன்றைய யாழ்ப்பான நகர சபையில் கூட புலிகள் குறித்து அவர்களின் அரசியல் தவறுகள் குறித்து விமர்சித்த முஸ்லிம் கவுன்சிலரை தாறுமாறாக ஏசி அவமானபடுத்தி இருக்கிறார்கள் இந்த புலிப்பினாமிகள். பின்னர் எப்படி இவர்கள் திருந்தி விட்டனர் என்று சர்டிபிகேட் கொடுக்கிறார் நிரூபன்?

    பதிலளிநீக்கு
  27. இலங்கையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை (சிங்கள - தமிழர்கள்- முஸ்லிம்கள் தரப்பு) எல்லாம் கூடாது.முஸ்லிம் தரப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தான் புலியாதரவு கூட்டம் இன்னும் உறுமிக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் புலிகள் முஸ்லிம்களை அரவணைத்து நடக்க சம்மதித்தார்கள் என்று புது கதை விடுகிறார் நிரூபன். முஸ்லிம் இன படுகொலைகளுக்கு சிறு வருத்தம் கூட தெரிவிக்காதவர்கள் புலிகள். முஸ்லிம்களிடம் பிடுங்கிய காணிகளை எல்லாம் இன்னும் முஸ்லிம் மக்களிடம் கையளிக்கவில்லை என்பது தான் உண்மை. எனவே புது புது கதையை விடுவதை நிரூபன் நிறுத்தி கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
  28. அவருடைய ஒவ்வொரு கதைகளையும் இன்ஷா அல்லாஹ் உண்மையை கொண்டு முறியடிப்போம். இன்னும் இவர்களின் அரசியல் ஆசான்கள் கட்டவிழ்த்து விட்ட அனைத்து பொய்களையும் உண்மை வரலாற்றை கொண்டு நடுநிலை மக்களுக்கு தெரிய வைப்போம். அதுவரை ஆடுங்கள் நிரூபன்.

    பதிலளிநீக்கு
  29. இலங்கையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை (சிங்கள - தமிழர்கள்- முஸ்லிம்கள் தரப்பு) எல்லாம் கூடாது.முஸ்லிம் தரப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தான் புலியாதரவு கூட்டம் இன்னும் உறுமிக் கொண்டிருக்கிறது. இந்த லட்சணத்தில் புலிகள் முஸ்லிம்களை அரவணைத்து நடக்க சம்மதித்தார்கள் என்று புது கதை விடுகிறார் நிரூபன். முஸ்லிம் இன படுகொலைகளுக்கு சிறு வருத்தம் கூட தெரிவிக்காதவர்கள் புலிகள். முஸ்லிம்களிடம் பிடுங்கிய காணிகளை எல்லாம் இன்னும் முஸ்லிம் மக்களிடம் கையளிக்கவில்லை என்பது தான் உண்மை. எனவே புது புது கதையை விடுவதை நிரூபன் நிறுத்தி கொள்ளட்டும்.
    //

    உமக்கு இலங்கையில் என்ன நடக்குது என்றே தெரியாதா?

    இப்போது தானே இலங்கையில் புலிகளே இல்லை! அப்புறமா என்னய்யா முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து வைத்திருக்கிறார்கள் என்று கதை வேறு..

    பதிலளிநீக்கு
  30. நிரூபன் சொன்னது :
    இப்போது தானே இலங்கையில் புலிகளே இல்லை! அப்புறமா என்னய்யா முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து வைத்திருக்கிறார்கள் என்று கதை வேறு.. ...
    நான் கேட்பது :
    ஆமாம்.... இலங்கையில் இப்போது ஆயுதம் தரித்த புலிகள் இல்லை ஆனால் முன்பு முஸ்லிம்களிடமிருந்து
    அபகரித்த காணிகள் புலிகளின் ஆதரவாளர்களிடம் தானே இப்போதும் இருக்கிறது !! நியாயப்படி பார்த்தால்
    அக் காணிகள் முஸ்லிம்களுக்கு தானே சொந்தம் !! ஏன் இதுவரை திருப்பி கொடுக்கவில்லை ???
    நிரூபன் சொன்னது :
    உமக்கு இலங்கையில் என்ன நடக்குது என்றே தெரியாதா?
    நான் கேட்பது :
    நேற்று யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் புலிகளினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படத் இழப்புகளை பற்றி பேசினார் அந்த உரையையும் இடைமறித்த புலிசார்பு உறுப்பினர்கள், இந்த உரை இனரீதியான பாகுபாட்டுடன் புலிகளை குற்றஞ்சாட்டுவதாக அமைந்துள்ளது என்று உரையை இடைமறித்து குழப்பினர் , இந்தப் பிரேரணையை எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர் மு.றெமிடியஸ் கூச்சலிட்டார்.
    புலிகள் கௌரமானவர்கள் அவர்களைக் குற்றம் சொல்வதற்கு இங்கு நாம் யாரையும் விடமாட்டோம் என சபையில் எதிரணி உறுப்பினர் விந்தன் தெரிவித்தார்.
    விந்தன் முஸ்லிம் நாய்களை யாழ்ப்பாணத்திற்கு விட்டது தவறு. அரசின் எலும்புத் துண்டுக்காக சபையில் கௌரவமான புலிகளைப் பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு யாரடா இவ்வளவு துணிவு தந்தது? என்று தெரிவித்துள்ளார்.
    நண்பரே நிரூபன் பார்த்தீர்களா !! புலிகள் கௌரவமானவர்களா ?? எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்களா ??
    முஸ்லிம்கள் என்றால் கேவலமா ??!! நீங்கள் எப்படியோ ,அவர்களும் (முஸ்லிம்கள்) அப்படித்தான்
    ஆஹா நல்ல காமெடி !! கடந்த காலங்களில் இவர்கள் , போட்டி ஆயுத குழுக்களையும் , மிதவாத அரசியல்வாதிகளையும்
    (திரு. அமிர்தலிங்கம்) , தன்னை சார்ந்து இருக்கிற ஒரே மொழி பேசும் முஸ்லிம்களையும், எவ்வாறு நடத்தினார்கள் என்பதை
    தாங்கள் மறந்துவிட்டு இருக்கலாம் ஆனால் உலகம் மறக்காது என்பதை நினைவில் கொள்க ....
    இந்தியாவில் இருப்பதை விட , சின்னஞ்சிறிய யாழ் நாட்டினிலே சாதி வெறி அதிகமாக இருக்கிறபடியால், நிம்மதி இருக்காது .
    இதை சொல்வதன் காரணம் , நானும் உங்களில் இருந்து தூய மார்க்கத்தின்பால் வந்தவன் தான் ஆகவே அதைப்பற்றி
    மிக நன்றாகவே எமக்கு தெரியும் ......ஓகே பிறகு சந்திப்போம் ... சிந்திப்போம்

    பதிலளிநீக்கு
  31. நிரூபன் பின்னூட்டம் நம்பர் த்ரீ:

    //நண்பா, உங்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன், என்னுடைய ப்ளாக்கில் இஸ்லாமியச் சொந்தங்கள் ஏன் சிறிய சிறிய விடய்ங்களையெல்லாம் பெரிதுபடுத்துகிறார்கள். தாழ்வு மனப்பான்மையா என்று விவாதம் வைத்திருந்தேன். அந்த விவாதத்திற்கு கூட தொடர்பேதும் இல்லாது மதம் சம்பந்தமான கருத்துக்களை யார் முன் வைத்தது? நான் உளவியல் ரீதியில் தானே கருத்துக்களைக் கேட்டேன்.//

    அது சரி. இஸ்லாமிய சொந்தங்களுக்கு தாழ்வு மனப்பான்மையா என்று ஒரு தாழ்வுமனப்பான்மையில் நீங்கள் எழுதிய நகைச்சுவை பதிவிற்கு சீரியசான பதில் எதையாவது எதிர்பார்த்தீர்களா?

    //வலைப் பதிவு என்பது எல்லோரினதும் விருப்பு வெறுப்புக்களை எழுதுவதற்கான இடமும், நீங்களும் ஹசாலி அண்ணரும் தான் பொது விடயங்களை எழுதுகின்றீர்கள். ஏனைய இஸ்லாமியச் சொந்தங்களும் மதம் தொடர்பான பதிவுகளை எழுதி ஏனைய பதிவர்களுக்கு வெறுப்பினைக் கூட்டுவதனை விடுத்து உங்களைப் போல பொதுவான கருத்துக்கள் நிறைந்த பதிவுகளை எழுதலாமே நண்பா? நண்பா, நான் எத்தனையோ அரசியல் பதிவுகள் எழுதியிருப்பேன், தமிழ்நாடு தொடர்பான பதிவுகளை எழுதியிருப்பேன், ஏன் ஹசாலி அண்ணர், நீங்கள் கூட அரசியல் மற்றும் பொதுப் பதிவுகளை எழுதியிருப்பார்கள். //

    ஒருசிலரை தவிர்த்து ஏனைய முஸ்லிம் பதிவர்கள் மார்க்கம் சமூகம் என்று பலதரப்பட்ட விசயங்களை எழுதுபவர்கள் தான். அபாண்டபான குற்றச்சாட்டு. ஆதரங்களுடன் நீங்கள் சொல்வது தவறு என்று நிரூபித்தால் மறுபடியும் உங்கள் முகத்தை எங்கே கொண்டு வைத்து கொள்வீர்கள்?

    //ஆனால் பவுடர் எழுதிய முதல் பதிவினை லூஸில விட்டிருந்தால், மதத்தினைப் பவுடர் அவ்மதித்து விட்டான் என ஒருமித்து எல்லோரும் குரலெழுப்பாது கண்டுக்காம விட்டிருந்தால் பவுடர் அடுத்த பதிவு எழுதியிருப்பானா? சொல்லுங்கள்! இது யார் மேல் தவறு?//

    இது என்ன கேள்வி. உங்கள் மீது தான் தவறு. நல்லா இருக்குப்பா உங்க நியாயம். அதாகப்பட்டது, முதல்முறை எழுதுனா கண்டுக்காம போய்விட வேண்டும். அப்படியா? இது என்ன லாஜிக்?

    //இன்னோர் கேள்வி, என் விவாதமேடையில் மதம் தொடர்பாகவோ, அல்லது மதம் பரப்புவது தொடர்பாகவோ லிங் கொடுக்க வேணாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் பல அன்பர்கள் பதிவினைக் கூடப் புரியாது குர் ஆன் பற்றியும் மறை நூல்கள் பற்றியும் பேசி லிங் கொடுத்திருக்கிறார்களே?//

    உங்கள் பதிவை நான் பார்க்கவில்லை. எனினும், நீங்கள் சொல்வதை உண்மையென்று இப்போதைக்கு நான் நம்பியதாக வைத்துக்கொண்டால் அவர்கள் செய்தது தவறுதான். ஆனால் ஒரு விஷயம், இஸ்லாம், முஸ்லிம்கள் குறித்து பேசிய பதிவேன்றால் குரான் ஹதீஸ் இல்லாமல் பேச முடியாது. அதனை நினைவில் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  32. நிரூபன் பின்னூட்டம் நம்பர் 4:

    //நாம் இந்துக்கள், ஆனாலும் நான் இதுவரை இந்துக்கள் தொடர்பான பதிவுகள் எழுதியதுமில்லை! எனக்கு இந்துமதம் தொடர்பில் பற்றும் இல்லை! ஆனால் சோதிடப் பதிவுகளை எழுதும் ஆர்,கே சதீஷ்குமாரும், ஆன்மீகப் பதிவுகள் எழுதும் ராஜராஜேஸ்வரியும் உங்கள் வலைக்கு வந்து இந்து மதத்தினைப் பின்பற்ற அழையுங்கள் எனக் கேட்டால் யாருக்கு நண்பா கோபம் வராது?//

    தாராளமாக அழைக்கலாம். தவறேதும் இல்லை. ஏற்கனவே சில இந்து சகோதரர்கள் அப்படி செய்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் கொள்கையில் உண்மை இருந்தால் அதனை ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

    // ஆனால் வலைப் பதிவுகளில் ஒரு சில இஸ்லாமிய அன்புச் சொந்தங்கள் மாத்திரம் இப்படி நடப்பது ஏனையோருக்கு எரிச்சலூட்டும் என நினைத்துப்பார்த்தார்களா? சொல்லுங்கள் நண்பா!//

    சகோதரர் நிரூபன், தயவுக்கூர்ந்து ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். தங்கள் மார்க்கத்தை எடுத்து சொல்வது (பிரச்சாரம் செய்வது) சட்ட குற்றமில்லை. இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறியை அடுத்தவருக்கு எடுத்து சொல்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை. உங்களுக்கு ஒரு குரான் வசனமேனும் தெளிவாக தெரிந்தால் அதனை அடுத்தவருக்கு சொல்லுங்கள் என்பது நபிமொழி. பல முஸ்லிம்கள் இறைப்பணியை மேற்கொள்ளாமல் இருக்காலம். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர், இறைப்பணி மேற்க்கொள்பவர்களை "நீங்கள் அப்படி செய்யாதீர்கள்" என்று சொல்ல மாட்டார்கள்/ சொல்லவும் முடியாது.

    அதேநேரம் எடுத்து சொல்வது மட்டுமே எங்கள் கடமை. ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம். அதுபோல் ஒருவரை இதுக்குறித்து வற்புறுத்துவது/திணிப்பது ஆகியவையும் தடை செய்யப்பட்டவை ஆகும். உங்களிடம் யாரேனும் இஸ்லாத்தை திணிக்க முயற்சித்தால் அவர்களிடம் தெளிவாக கூறுங்கள் "நீங்கள் குரானுக்கு எதிராக செயல்படுகிண்றீர்கள்" என்று.

    //இப்போது என் விளக்கங்கள் உங்களுக்கு திருப்தியளித்திருக்கும் என நினைக்கிறேன்!//

    இல்லவே இல்லை. பதிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வரவே இல்லை. அதனை தவிர்த்து உங்கள் ஆதங்கத்தை தான் வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். அதில் தவறில்லை. ஆனால் பதிவில் கேட்ட கேள்விகளுக்கு பதில் தராமல் இப்படி படிப்பவர் நேரத்தை வீணாக்குவது, "முழுவதுமாக படித்தால் பதிவில் கேட்ட கேள்விக்கு விடை கொடுத்திருப்பார் நிரூபன்" என்று நினைத்து படித்தவர்களுக்கு செய்யும் துரோகமல்லவா?

    //அறிவீலித்தனமாக புலிகளையும் இதற்குள் இழுத்து வைத்து மோதல் செய்வதனை குறிப்பிட்ட நபர்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.//

    சூப்பரா சொன்னீங்க. உங்க தரப்புல இருந்து பல எதிர்பதிவுகள் வந்ததே, அவைக்கேல்லாம் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக மைனஸ் வோட் குத்தவில்லை. அப்படி மைனஸ் வோட் விழுந்திருந்தால், அது வாசகர்களின் தனிப்பட்ட முடிவே ஆகும். ஆனால் சகோதரர் மணி அவர்களின் ஒரு பதிவுக்கு ஒட்டுமொத்தமாக மைனஸ் வோட் விழுந்ததற்கு காரணம், இந்த விடுதலை புலி அது இதுவென்று பாச்சா காட்டியதற்காகத்தான்.

    பதிலளிநீக்கு
  33. நிரூபன் பின்னூட்டம் நம்பர் 5:

    வாஞ்சூர் அவர்களுக்கு நீங்கள் தந்துள்ள பதில் சற்றே திருப்தி அளிக்கின்றது. அதாவது மறப்போம் மன்னிப்போம் என்ற மையக்கருத்து, ஈழ முஸ்லிம் தமிழர்கள் மறந்து மன்னித்திருந்தால் சந்தோசம் தான். அதே நேரம் உங்களைப்போன்றவர்கள் பாடுபட வேண்டிய முக்கிய விசயம் என்னவென்றால், முஸ்லிம் தமிழர்கள் இன்றளவும் அடக்கப்படுகின்றார்கள் என்பது தான். இதற்கு செய்திகளை என்னால் உதாரணம் காட்ட முடியும். இது குறித்து உங்களைப்போன்றவர்கள் போராட முன்வந்து சமுதாய ஏற்றத்தாழ்வுகளை களைய முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. நிரூபன் பின்னூட்டம் நம்பர் 6:

    //ஆனால் அப் பதிவினைப் புரிந்து கொள்ளாது ஆஷிக்கின் பதிவிற்கு நான் எதிர்ப் பதிவு எழுதியதாக புரளி கிளப்பியதோடு ஈ தமிழியன்ஸ் என்று ஈழத் தமிழர்களை இழிநிலைப்படுத்தி ஏன் முஹமட் ஆஷிக் பதிவு எழுத வேண்டும்? //

    இப்படித்தான் தெளிவா அறிந்துக்கொண்டே அடுத்தவரை முட்டாளாக்க வேண்டும். அய்யா அந்த பதிவு ஈழத்தமிழர்களுக்கு எதிரானதா? நெஞ்சுரம் மிக்க ஈழத் தமிழர்களின் வீரத்தை வீணாக்கி கொண்டு வலையுலகில் கும்மி அடித்துக்கொண்டிருக்கும் ஒரு சிலரை பற்றிய பதிவு அது. முஹம்மது ஆஷிக் தான் தெளிவா சொல்லிருக்காரே..அப்புறமும் ஏன் இப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டு?

    பதில் சொல்ல முயற்சியாவது செய்யுங்கள். எங்கள் நேரத்தை இப்படி பதில் என்ற பெயரில் வீணாக்காதீர்கள். அப்புறம் என் சமூக பனப்பான்மை குறித்து நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கு நான் கொடுத்த பதிலுக்கு நீங்கள் இன்னும் நேர்மையாலராய் நடக்கவில்லை. நினைவுபடுத்துகின்ரேன்.

    நன்றி...

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  35. //உமக்கு இலங்கையில் என்ன நடக்குது என்றே தெரியாதா?
    இப்போது தானே இலங்கையில் புலிகளே இல்லை! அப்புறமா என்னய்யா முஸ்லிம்களின் காணிகளை அபகரித்து வைத்திருக்கிறார்கள் என்று கதை வேறு..//
    சகோதரர் நிரூபன் , இதற்கு உங்களுக்கு நாசர் அவர்கள் சரியான பதிலை தந்திருக்கிறார். இன்றுவரை புலிகளினால் அவர்கள் ஆதரவாளர்களினால் களவாடப்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், நிலங்கள், உடைமைகள் இன்றுவரை முஸ்லிம் மக்களிடம் கையளிக்கவில்லை.

    மேலும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் முஸ்லிம் இனசுத்திகரிப்பு செய்த போது முஸ்லிம்களிடம் செலவுக்கு சில நூறு ரூபாய்களே கொண்டு செல்ல அனுமதித்தனர். முஸ்லிம் மக்களின் வீடுகள் ,வியாபார ஸ்தலங்கள் மற்றும் நிலங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும் முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த நகைகள் (கையில், காதில் மூக்கில், கழுத்தில் அணிந்திருந்த சிறு சிறு நகைகள் உட்பட) அனைத்துமே பயங்கரவாத விடுதலைப்புலிகளினால் கொள்ளையடிக்கப்பட்டனவே. அவற்றை எல்லாம் விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள் நிரூபன்? அத்தனையையும் திரும்ப கொடுத்து விட்டார்களா? எனவே நிரூபன் உங்களின் பொய் இங்கே வேகாது.

    பதிலளிநீக்கு
  36. அப்பா வாஞ்சூர் எழுதும் தொடர் அடிப்படையில்லாதது என்று அடுத்தவொரு பொய்யை புனைகின்றார் நிரூபன். எது பொய் நிரூபன்? இஷா தொழுகைக்காக இறைவன் முன்னிலையில் பயபக்தியுடன் பள்ளிவாசலில் அணிவகுத்து நின்ற காத்தான்குடி முஸ்லிம்களை பள்ளிவாசலுக்குள் புகுந்து துப்பாக்கிகளால் சுட்டு சாய்த்த சம்பவம் பொய்யா? அதில் நான்கில் ஒரு தொகையினர் ஒன்றுமறியாத பாலகர்கள் (கிட்டத்தட்ட முப்பது குழந்தைகள்) என்பது பொய்யா? இல்லை முஸ்லிம்களே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மாண்டு போயினர் என்று கதையடிக்க போகிறீர்களா நிரூபன்? இதில் எது பொய்? விளக்கமாக சொல்லுங்களேன் நிரூபன்.

    ஹஜ் என்னும் புனித பயணம் மேற்கொண்டு விட்ட தாயகம் திரும்பி வந்தவர்களை (அறுபதுக்கும் மேற்பட்டவர்களை) வரும் வழியிலேயே வெட்டி படுகொலை செய்தார்களே விடுதலைப்புலி பயங்கரவாதிகள். இதுவும் பொய்யா நிரூபன்? முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்படவேயில்லை என்று அடுத்த கதையை தயார் செய்ய போகிறீர்களா? வாஞ்சூர் அப்பாவின் தொடர் இன்ஷா அல்லாஹ் இன்னும் வீரியமாக வரும். விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கட்டி வைத்திருக்கும் பொய் பிம்பங்களை உடைத்து சுக்கு நூறாக்கும்.

    பதிலளிநீக்கு
  37. வழமையாக செய்வது போன்றே இதிலேயும் பாதியை மட்டும் நிரூபன் எடுத்து ஒப்பேத்த முயன்றிருக்கிறார். முத்தரப்பு பேச்சுவார்த்தையை இன்றுவரை விடுதலைப்புலி ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை என்பது தான் உண்மை. முஸ்லிம்களாவது வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அதனால் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் வெறுப்பை கக்குகிறார்கள். ஆனால் இந்தியாவில் இருந்து வேலையினிமித்தம் இலங்கையில் குடியேறிய மலையக தமிழர்களை எவ்வாறு நடத்தினர் இவர்கள் என்பது எமக்கு தெரியாதா? இன்று மொழியால் நாம் ஒன்றுபட்டவர்கள் என்று தமிழ்நாட்டை , தமிழகத்தை சேர்ந்தவர்களை தமக்கு சாதகமாக திசை திருப்ப வாய்ச்சவடால் விடும் இவர்கள் நம் நெருங்கிய சொந்தங்களான மலையாக தமிழர்களை என்ன பாடு படுத்தினார்கள்? இவர்களின் தலைமையை ஏற்காமல எதற்காக தமக்கு ஒரு அரசியல் தலைமையை மலையக தமிழர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்? விளக்குவாரா நிரூபன்?

    பதிலளிநீக்கு
  38. ////இதன் பின்னர் பிரச்சினையை யார் தொடங்கினார்கள் தெரியுமா? சகோதரன் ஹைதர் அலி அவர்கள். ஈழத்துச் சகோதரனே எங்களை எப்போது புரிந்து கொள்வாய் என்று பிரதேசவாதத்தினைத் தூண்டும் வகையில் ஓர் பதிவினை எழுதினார்.//
    //

    தம்பி நிரூ
    நலமா? கிருஸ்துமஸ் கொண்டாட்டம் நல்லபடியாக முடிந்திருக்கும் என நினைக்கிறேன். நீங்கள் கிருஸ்துமஸ் தினத்தால் பிசியாக இருப்பதாக சொல்லியிருந்தீர்கள். அதனால் தான் தவறா மறதில சொல்லிட்டீங்கன்னு நெனைக்கிறேன். சின்ன நினைவூட்டல் மட்டுமே

    நாற்று குழுமத்தில் விவாதம் நடந்தது சகோ ஹைதர் அலியின் பதிவுக்காக அல்ல. சகோ சிட்டிசன் பதிவினை நாற்றில் நான் பதிவிட்ட போது விவாதம் தொடங்கியது.(கவனிக்க- சகோ சந்துருவின் பதிவுக்கு தீர்வு என்ன? என முன்பே தலைப்பிட்டேன்). அதுவும் விவாதம் பதிவுக்கானதல்ல. சகோ கந்தசாமி "இஸ்லாமியர் என அடையாளபடுத்துவது சரியே" என்ற தொனிபட கூறியதற்கு நாங்கள் அப்படி செய்வது தவறு என வாதிட்டோம். கடைசிவரையில் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் வரவில்லை. அடுத்தநாளே அழிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என நீங்கள் கேட்ட போது தான் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் விவாதத்தை மதவெறி என்றும் மத தீவிரவாதம் என்றும் பெயர் சூட்டினார்கள். சில தரக்குறைவான வார்த்தைகள் வெளிப்படவே நான் வெளிய்யேறி விட்டேன். சகோ ஆஷிக்கும் முற்றுபுள்ளி வைத்து முடித்தார். உங்கள் பதிவின் கீழ் எங்களுக்கு மதவெறீயர் பட்டம் கட்டிய பிறகு மட்டுமே அடுத்ததாக ஐடியா சகோவிடம் இருந்து அப்படியான பதிவு வந்தது. ஆக எங்களீடம் இருந்து அப்படியொரு பதிவு வரவில்லை என்றால் ஐடியாவும் அப்படியான பதிவு எழுதியிருக்க மாட்டார் என நியாயப்படுத்துவது எனக்கு என்னமோ சரியா படல தம்பி :-)

    (விடுமுறை கழித்து இன்று தான் வலைபக்கம் வருகிறேன்.பிரச்சனை முடிந்திருக்கும் என நினைக்கிறேன். மீண்டும் எழுப்பியதாக நினைக்கவேண்டாம். சில விஷயங்கள் நிரூவுக்கு நினைவுப்படுத்தவே இந்த பின்னூட்டம். மற்றபடி உங்கள் மேல் எந்த தனிபட்ட விரோதமும் அக்காவிற்கு இல்லை)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters