வியாழன், செப்டம்பர் 05, 2013

மரணத் தருவாயில் ஒரு உயிர் - உதவமுடியுமா???

கடந்த 21.08.2013 தேதியிட்ட ஆனந்த விகடனில், வேலூருக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரின் மூன்று மகன்களுக்கும் இரண்டு கிட்னிகளும் செயல்இழுந்து, அதில் முதல் இருவருக்கும் பலத்த கஷ்டங்களுக்கு இடையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்து விட்டதையும். 17 வயதே ஆன கடைசி மகன் யாசின் அவர்கள் 400 டயாலிஸ்களை கடந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருப்பதையும் விளக்கி கட்டுரை வந்திருந்தது.
கட்டுரையை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் : http://vadaibajji.blogspot.in/2013/09/blog-post_5.html

அதை நானும் படித்தேன். ஆனால் அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை.. வருத்தம் மட்டும் பட்டுவிட்டு மறந்துவிட்டேன். ஆனால், அந்த கட்டுரை வந்து ஒரு வாரம் கழித்து பதிவர் ஹுஸைனம்மா அவர்கள் எங்கள் குழுமத்திற்கு பின்வரும் இரண்டு வரிகளை எழுதி அதன் கீழ் அந்த கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்து இருந்தார்கள்...

// அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்த வார விகடனில் வந்திருக்கு. ஏதாவது செய்யமுடியுமா?  பள்ளிவாசல்களின் மூலம் தர்மம் பெற்றே இதுவரை சமாளிக்கிறார்களாம்.
//

மெயில் இழை மெல்ல சூடுபிடித்தது. சுவனப்பிரியன் தான் ஒரு தொகை தருவதாக ஆரம்பித்தார். அதன்பின் ஒரு பதிவர் சகோதரி 10,000 தருவதாக கூறினார். கூறியதோடு அல்லாமல் நான் அவர்களிடம் நேரடியாகத்தான் சென்று கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.     நான் நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிட்றேன் ன்னு எவ்வளவோ சொல்லியும் அவர் நான் போயே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார். மேலும் அவர் 10,000 தருவதாக கூறியதும் சற்றே ஆர்வம் பிறந்தது. உடனே எங்கள் பேஸ்புக் குழுமத்தில் ஸ்டேடஸ் போட்டோம். எல்லா புகழும் இறைவனுக்கே. வரிசையாக சில சகோக்கள் பணம் தருவதாக அறிவித்தார்கள்.... மொத்தம் 19,000 சேர்ந்தது, அத்துடன் இஸ்லாமிய பதிவர்கள் மற்ற சகோதரர்களுடன் இணைந்து நடத்தும் எங்கள் குழுமத்தின் டிரஸ்டில் இருந்து 6,000(இது விநோதினிக்காக வசூல் செய்தது, மொத்தம் 11,000 வசூல் செய்தோம், கொடுப்பதற்குள் அவர் இறந்து விட்டார், ஆகவே வேறு யாருக்கும் கொடுக்கலாம் என்று ஹோல்ட் செய்திருந்தோம்) சேர்த்து மொத்தம் 25,000 கொடுப்பது என்று முடிவு செய்து கடந்த திங்கள் அன்று அவர்களை பார்க்க சென்னை செம்மஞ்சேரியில் இருக்கும் சுனாமி குடியிருப்புக்கு நான் மற்றும் சகோதரர் பாசில் இருவரும் சென்றோம்.


                                               (3 சகோதரர்கள் மற்றும் அவர்களின் தந்தை)

(வெள்ளை சட்டை போட்டு இருப்பவர் 2வது பையன், காபிகலர் சட்டை போட்டிருப்பவர் முதல் பையன், கீழே அமர்ந்து இருப்பவர் தான் யாஸின், சிகிச்சைக்கு காத்திருப்பவர்)

அந்த குடும்பத்தாரின் நிலையைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.10 X 10 வீட்டில் அந்த மூன்று பையன்கள் மற்றும் அவனின் பெற்றோர்கள் வசிக்கிறார்கள். மிகுந்த ஏழ்மையான சூழல். கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்த அண்ணன்கள் இருவரும் ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் யாஸினின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது சகோஸ். எனக்கு உண்மையிலே ரொம்ப பயமா இருக்கு. அந்த பையனுக்கு அரசு மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருக்கிறார்கள். கிட்னி பெறுவோர் லிஸ்டிலும் சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இடம். ஆக இவருக்கு ஆபரேஷன் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அவருக்கு ஒரு விதமான வைரஸ் தாக்கி இருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு முன் அந்த வைரஸை முற்றிலும் அழித்தால் மட்டுமே அறுவை சிகிச்சை வெற்றி பெறும். இல்லாவிட்டால் அந்த வைரஸ் புதிய கிட்னியையும் செயல் இழக்கச் செய்துவிடும். இதான் இப்ப பிரச்சனை.

இந்த வைரஸை ஒழிக்க வாரம் ஒரு ஊசி வீதம் 6 மாதங்களுக்கு தொடர்ந்து போட வேண்டும். ஒரு ஊசியின் விலை 15,000 ரூபாய். ஆறு மாதம் என்பது அதிக பட்சம். சில சமயங்களில் 3 மாதங்களில் கூட சரி ஆகலாம். எதுவும் நம் கையில் இல்லை. இந்த ஊசி போட பணம் இல்லாமல் நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். யாசின் மிகவும் ஒல்லியாகவும், வீக்காகவும் இருக்கிறார். அவரை பார்க்கும் சக்தி நிஜமாவே எங்களுக்கு இல்லை. என்னால் தொடர்ந்து அவரைப் பார்க்க முடியவில்லை. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கையில் இடை இடையில் அவர் எங்களைப் பார்த்த பார்வை... அல்லாஹ்... எப்படி சொல்றதுன்னு தெரியல.. எதாவது செய்ங்க பாய் னு சொல்ற மாதிரி இருந்துச்சு...

இறுதியாக கிளம்பும் முன்... கடந்த மார்ச் மாதம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூத்த அண்ணன்(இவர் பி.ஏ எகனாமிக்ஸ் படித்திருக்கிறார்), தனது பழைய பயோட்டேட்டாவை எடுத்து படபடப்பாக என்னிடம் கொடுத்துக் கொண்டே எதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்க பாய். என் தம்பிய நான் காப்பத்தனும்னு சொல்லைல என் ஈரக்கொலை அப்டியே மேல தூக்கிறுச்சு. எப்படி ரீஆக்ட் பண்றதுன்னே தெரியல. ஸ்தம்பிச்சிட்டோம். அதன் பின் மெல்ல சுதாரிச்சி இப்ப தான் உங்களுக்கு ஆப்பரேஷன் முடிஞ்சி இருக்கு, இப்ப எந்த ரிஸ்கும் எடுக்காதீங்க தம்பி, மறுபடியும் உங்களுக்கு பிரச்சனைன்னா டபுள் வொர்க் ஆகிடும். நீங்க ரெஸ்ட் எடுங்க, இப்பதைக்கு இந்த பணத்த வச்சி 2 வாரம் ஊசிய போடுங்க. இறைவன நம்பி இறங்குங்க, இவ்வளவு காப்பாத்தின அவன் உங்கள் தம்பியையும் காப்பாத்துவான். இன்னும் சில சகோதரர்கள் தர்றேன்னு சொல்லி இருக்காங்க, வந்ததும் அதையும் அனுப்புறோம், எல்லார்கிட்டையும் சொல்றோம். உங்களுக்கு தேவையான பணம் நிச்சயம் கிடைக்கும்னு சொல்லிட்டு விடை பெற்றோம்.

சகோதர்களே, நண்பர்களே...

உங்களால் முடிந்தால், முடிந்த அளவு இவர்களுக்கு உதவுங்கள். வாழ வேண்டிய பையன். 17 வயது தான் ஆகிறது. நமது சிறு சிறு உதவிகள் பெரும் வெள்ளமாய் அந்த குடும்பத்திற்கு உதவட்டும். இத்துடன் அவர்களின் போன் நம்பர் மற்றும் பேங்க் டீடெய்ல் இணைத்துள்ளேன்.

இஸ்லாமிய சகோஸ்...

உங்களின் 2.5 % ஜகாத் பணத்தை இவர்களுக்காக செலவழியுங்கள். ஜகாத் பெற தகுதி உடையவர்கள் லிஸ்டில் இவர்கள் நிச்சயம் வருவார்கள். இதற்கு நான் சாட்சி. உங்களிடம் இல்லாவிட்டாலும் உங்கள் ஊர் செல்வந்தர்களிடம் சொல்லி வாங்கி கொடுங்கள்... சிம்பிள் சகோஸ்... ஒரு ஊசி செலவை நான் வசூலிப்பேன் என்று உறுதி எடுத்து செய்யுங்கள்...நிச்சயம் உங்களால் முடியும்.. முடிந்த அளவு அவர்களின் சுமையை குறைக்க முயற்சிப்போம். நம்மால் இதைச் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.


இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

இறுதியாக :


2 பிள்ளைகளுக்கு ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்தாலே நம்மால் சமாளிக்க முடிவதில்லை. 3 பிள்ளைகளுக்கும் கிட்னி மாற்று சிகிச்சைக்காக அலைந்து திரிந்து போராடும் அந்த ஏழைப்பெற்றோர்களையும், இவர்களுக்கு பல விதங்களில் உதவிய அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், இவர்கள் பற்றிய செய்தியை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையையும், பண உதவி செய்த மற்றும் இறைவனிடம் வேண்டிய அனைத்து நல் உள்ளங்களையும் நினைக்கையில் மனிதம் சாகவில்லை என்பது நிரூபணமாகிறது.

இறைவா!! இவர்கள் அனைவருக்கும் உன் அருளை பரிபூரணமாக இறக்கு. மேலும் நீண்ட ஆயுளை கொடுத்து இன்னும் பலருக்கு உதவக் கூடியவர்களாக இவர்களை ஆக்கி வை. எதற்கும் சக்தியற்ற அற்பற்களாய் இருக்கிறோம் இறைவா. எங்களை கை விட்டு விடாதே. யாசினுக்கு நீண்ட ஆயுளைக்கொடு. ஆமீன்.


அட்ரஸ் :

Mr.Abdul Majeeth,
No.1293, Tsunami Kudiiruppu,
Semmanjeri, Cholinganallur, Chennai
Mobile : 80983 74060

பேங்க் டீடெய்ல்ஸ் :

K.N. Abdul Majeeth,
AC No : 800210110004315
Bank of India,

Mylapore Branch, 
Chennai.7 கருத்துகள்:

 1. //இறுதியாக கிளம்பும் முன்... கடந்த மார்ச் மாதம் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூத்த அண்ணன்(இவர் பி.ஏ எகனாமிக்ஸ் படித்திருக்கிறார்), தனது பழைய பயோட்டேட்டாவை எடுத்து படபடப்பாக என்னிடம் கொடுத்துக் கொண்டே எதாவது ஒரு வேலை வாங்கி கொடுங்க பாய். என் தம்பிய நான் காப்பத்தனும்னு சொல்லைல என் ஈரக்கொலை அப்டியே மேல தூக்கிறுச்சு.//

  யா அல்லாஹ்...!!! :'(

  //உங்களிடம் இல்லாவிட்டாலும் உங்கள் ஊர் செல்வந்தர்களிடம் சொல்லி வாங்கி கொடுங்கள்... //

  இன்ஷா அல்லாஹ், கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் சகோ. உங்கள் பணிகளுக்கு மத்தியில் நேரில் சென்று சூழ்நிலை அறிந்து வந்து பதிவிட்டமைக்கு அல்லாஹ்தஆலா மகத்தான நற்கூலியை வழங்குவானாக!

  பதிலளிநீக்கு
 2. ஆமீன்...

  அஸ்மா அக்கா...

  சிங்கப்பூரில் இருந்து ஒரு சகோதரர் தனது மகளின் ஜகாத் பணம் 50,000 தருவதாக கூறி இருக்கிறார்... அதே போல் சவுதியில் இருந்து ஒரு சகோதரர் 5000 அனுப்பி விட்டார்... ஒரு சகோதரி 1000 தருவதாக கூறி உள்ளார்... டீக்கடையில் நல்ல ரெஸ்பான்ஸ் அக்கா.. இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு லட்சம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது...

  பதிலளிநீக்கு
 3. அஸ்ஸலாமு அலைக்கும்
  எங்கலால் முடிந்ததை செய்ய நினைக்கிரேன் நான் மலேசியாவில் இருக்கோம் பேங் நம்பரில் போட்டுடலாமா அவுங்க டெலிபோன் நம்பர் இருக்கா

  பதிலளிநீக்கு
 4. பகிர்வுக்கு நன்றி சிராஜ். என்னால் ஆன உதவியை செய்ய முயற்சிக்குறேன்

  பதிலளிநீக்கு
 5. வ அலைக்கும் சலாம் பல்கீஸ்ராணி சகோ...

  அவர்கள் டெலிபோன் நம்பர் : Mobile : 80983 74060

  பேங்க் டீடெயில்ஸ் :

  K.N. Abdul Majeeth,
  AC No : 800210110004315
  Bank of India,
  Mylapore Branch,
  Chennai.

  உங்களுக்கு அனுப்புவதில் சிரமம் இருந்தால் எங்களால் உதவ முடியும்....

  பதிலளிநீக்கு
 6. நன்றி ராஜி...

  கண்டிப்பா செய்யுங்கள்... ரொம்ப பாவமா இருக்கு அவங்கள பார்க்க...

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாடுகளிலும் நம்ம கடை பேமஸ்

free counters