விஸ்வரூப பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து எங்கு சென்றாலும் இதை பற்றி தான் பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
கமல் இப்பொழுது தான் சரியான திசைக்கு வந்து இருக்கிறார்.... பேச்சுவார்த்தைக்கு தயார், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குகிறேன் என்று சொல்லி உள்ளார். இருப்பதிலே மிகச் சரியான முடிவு இது தான். காலம் தாழ்த்தி எடுத்து இருந்தாலும் சரியான முடிவு. அப்ரிசியேட் கமல்...
இதையே தான் நான் ஒரு வாரம் முன்பே என் பதிவின் கமெண்டுகளில் சொல்லி இருந்தேன். "இவர்கள் அனைவரும் உங்களை தூண்டுகிறார்கள்.. ஆனால் சிறந்த வழி "பெட்டர் கோ பார் பீஸ் டாக்""என்று...
பல களேபரங்களுக்கு பிறகு இன்று அது தான் நடந்துள்ளது.
ஓக்கே. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.
இன்று மாலை முஸ்லிம்களின் கூட்டமைப்பு தலைவர்களுடன், கமல் சார்பாக இயக்குனர் அமீர் பேச இருக்கிறார். அந்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...
இந்த நிலையில்... தமிழகத்தின் மாபெரும் இஸ்லாமிய அமைப்பான ததஜ தலைவர் பி.ஜெய்னுலாபிதீன் இந்த பேச்சு வார்த்தையை வரவேற்று இருப்பது யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது. இந்த படம் வெளிவருவதில் ததஜ வின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே, அண்ணன் பிஜே அவர்களின் அறிவிப்பை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம்.
இது குறித்து தட்ஸ் தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கை..
"சென்னை: விஸ்வரூபம் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க நடிகர் கமல் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வரூபம் தொடர்பான எந்த முடிவாக இருந்தாலும் 23 அமைப்புகளுடன் கலந்தாலோசனை செய்தே எந்த முடிவானாலும் எடுக்க வேண்டும். பிரச்சினையை வீம்பு பிடிக்காமல் சுமூகமாக தீர்ப்பதே நல்லது. 23 அமைப்புகளையும் கலந்தாலோசிக்காமல் காட்சி நீக்கம் செய்யக் கூடாது. 23 அமைப்புகள் இந்த விஷயத்தில் ஏற்றுக்கொள்ளும் காட்சி நீக்கங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்ளும். இந்த விஷயத்தில் பெயர் முக்கியமல்ல, இந்து முஸ்லிம் நல்லிணக்க குலைவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதே நமது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/news/
ஆனால்.. சில அரசியல் சித்து விளையாட்டுக்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய இயக்கமான ததமுக, அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி. சோ, அதன் மூலம் நிர்பந்தம் கொடுக்க யாரும் முனையலாம்.
இந்த சூழ்நிலையில், தமுமுக எடுக்க இருக்கும் நிலைப்பாடும் மிகுந்த முக்கியதுவம் வாய்ந்தது. ததஜ அறிவித்தது போல், 23 கூட்டமைப்பினர் எடுக்கும் முடிவிற்கு தமுமுக ஒத்துழைப்பு அளித்து பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்பதே பெரும்பாலான முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களின் எதிர்பார்ப்பு.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய தருணம் இது தான். அவரின் அறிவும், பொருமையும் நிச்சயம் அவரை சரியான முடிவையே எடுக்க சொல்லும் என்று நம்புகிறோம்.
அனைத்துக்கும் மேலாக... என்னுடைய இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு சொல்லிக் கொள்வது இது தான். நமது போராட்டம் அனைவரின் கவனத்திற்கும் சென்று விட்டது. இனி இது போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதை நிச்சயம் தவிர்ப்பார்கள். அந்த விதத்தில் இந்த போராட்டம் மாபெரும் வெற்றியே. கமலை நஷ்டம் அடைய வைப்பது நம் நோக்கம் அல்ல.... ஆகவே, இஸ்லாமிய கூட்டமைப்பினர் எடுக்கும் முடிவிற்கு விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கட்டுப்படுவோம். பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
இறுதியாக கமலை ஆதரிக்கும் நண்பர்களுக்கு சும்மா "ஐ சப்போர்ட் கமல்" னு குதிக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை. உண்மையிலே கமல சப்போர்ட் பண்றதா இருந்தா தயவுசெய்து இந்த படத்த திருட்டு விசிடில பார்க்காதீங்க. இந்த படம் தாமதம் ஆவதால் கமலுக்கு பெரிய நட்டம் வராது. தேவையான அளவு விளம்பரம் கிடைத்துவிட்டது. சோ, படம் வந்தாலும் நன்றாகவே ஓடும். ஆனால் மிகப் பெரிய பிரச்சனை திருட்டு விசிடி தான். சோ, அதை உங்களால் இயன்ற அளவு தடுத்து கமலுக்கு உதவுங்கள். அதான் உண்மையான சப்போர்ட்.
இதை ஏன் நான் சொல்றேன்னா... ஐ சப்போர்ட் கமல் னு சொன்ன ஒரு ஆளு, நேற்று என்னிடம் பேசும் போது திருட்டு விசிடி கிடைச்சா பார்ப்பேன், ஆர்வமா இருக்குன்னு சொன்னான். கேட்டதும் கடுப்பாயிடுச்சு... ஆர்வம் தாங்க முடியலையாம்... ஒரு வாரம் தள்ளி படம் பார்த்தா என்ன?? தலை வெடிச்சிடுமா??? இதுல சினிமாவ சினிமாவ பாருங்கன்னு அறிவுரை வேற சொன்னவன் அவன். அடப்பாவிங்களா?? நீங்க சினிமாவாவா பார்க்கிறீங்க?? வெறி பிடிச்சுல்ல பார்க்கிறீங்க....???
உங்க வாதப்படி...
எங்களுக்கு மதம் என்ற மதம் பிடிச்சு இருக்கு..
எங்கள் வாதப்படி உங்களுக்கு...
சினிமா என்ற மதம் பிடிச்சு இருக்கு....
ஹா..ஹா...ஹா. மொத்ததில பூரா பேருக்கும் எதாவது ஒரு மதம் பிடிச்சு தான் இருக்கு...
குறிப்பு : கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்கள்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................
Tweet |